Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்திரயான் 3 vs லூனா 25: நிலவின் தென் துருவத்தை முதலில் தொடப் போவது இந்தியாவா? ரஷ்யாவா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவின் சந்திராயன் 3 VS ரஷ்யாவின் லூனா-25: நிலாவை முதலில் தொடப்போவது யார் ?

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

நிலவின் தென்துருவத்தை நோக்கி இரண்டு விண்கலங்கள் சென்று கொண்டிருக்கின்றன

கட்டுரை தகவல்
  • எழுதியவர், கிறிஸ் பரனியுக்
  • பதவி, பிபிசிக்காக
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

தற்போது ஒரு குட்டி விண்வெளி பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. ஆம். இதற்கு முன்பு எந்த விண்கலமும் வெற்றிகரமாக சென்றடையாத, நிலவின் தென்துருவத்தை நோக்கி இரண்டு விண்கலன்கள் சென்று கொண்டிருக்கின்றன. ஒன்று- இந்தியாவின் விண்கலம், மற்றொன்று ரஷ்யாவின் விண்கலம்.

நிலாவில் உள்ள பயனுள்ள தாதுக்கள் மற்றும் பனியினை தேடும் போட்டியில் தான் இந்தியா மற்றும் ரஷ்ய விண்கலங்கள் ஈடுபட்டுள்ளன.

விண்கலங்கள் புறப்பட்ட நேரத்தை கருத்தில் கொண்டால், இரண்டு விண்கலங்களும் ஒரே நேரத்தில் தான் அவர்களின் இலக்குகளான நிலவை அடைய வேண்டும். இதனை யாரும் திட்டமிடவில்லை. விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு எதிர்பாராத திருப்பாக அமைந்துள்ளது.

 

யார் முதலில் செல்வார்கள் ?

யார் முதலில் செல்வார்கள் ?
 
படக்குறிப்பு,

சுமார் 50 ஆணடுகளுக்கு மேலாக சந்திரனில் மனிதர்களை தரையிறக்கிய ஒரே நாடாக அமெரிக்க உள்ளது.

பல தசாப்தங்களாக, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் அங்கு நடக்கும் விஷயங்களைப் பற்றிய நம் வாசிப்பு, 1960 களில் நடந்த உண்மையான விண்வெளி பந்தயத்தில் இருந்து தொடங்குகிறது. அந்த பந்தயத்தில், அமெரிக்காவும், சோவியத் யூனியனும் சந்திரனில் முதலில் யார் ஒரு மனிதனை அனுப்புகிறார்கள் என போட்டியிட்டன.

பூமியின் சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோளை செலுத்தி, விண்வெளியில் மனிதனை அனுப்பி, ஆளில்லா விண்கலத்தை நிலவில் தரையிறக்கிய முதல் நாடு சோவியத் யூனியன் என்றாலும், விண்வெளி வீரர்களை அப்பல்லோ 11 விண்கலம் மூலம் சந்திரனுக்கு ஏற்றிச் சென்ற முதல் நாடு என்ற பெருமையை அமெரிக்கா கொண்டுள்ளது.

இந்த சாகசம் உலகெங்கும் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. அதற்கு பிறகு, அடுத்த அடுத்த ஆண்டுகளில் மேலும் சில குழுக்களாக அப்பல்லோ விண்கலத்தில் அமெரிக்கா தனது பயணத்தை தொடர்ந்தது. அது, 1972 வரை நடந்தது. சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக, சந்திரனில் மனிதர்களை தரையிறக்கிய ஒரே நாடாக அமெரிக்கா உள்ளது.

சந்திரனின் மேற்பரப்பை ஆராய்வதற்கான இந்திய லேண்டர்(lander), சந்திரயான் 3, ஜுலை 14 ஆம் தேதி பூமியில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. பூமியை ஒரு சில முறை சுற்றி வந்த பிறகு, தரையிறங்குவதற்கான தயாரிப்பில் சந்திரனைச் சுற்றி பல வாரங்கள் செலவழிக்கும். வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி அன்று, சந்திர மேற்பரப்பைத் தொட உள்ளது சந்திராயன்-3.

இதற்கிடையில், ரஷ்ய லேண்டரான, லூனா -25, கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி மாஸ்கோ நேரப்படி அதிகாலை 2 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இது சந்திரனுக்கு மிகவும் விரைவான நேரடியான பாதையில் செல்வதால், 10 நாட்களுக்குள் மேற்பரப்பை அடைய முடியும்.

தென் துருவத்தை குறிவைக்கும் இரண்டு நாடுகள்

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தை ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் அதிகாரிகள் மறைக்கவில்லை.

ஆனால், லூனா -25-யின் பயணம் அதை விட சற்று அதிக நேரம் ஆகலாம், அதாவது சந்திரயான் -3 முதலில் நிலவை சென்றடையும். இறுதியில், மெதுவாகவும், நிதானமாகவும் சென்ற இந்திய விண்கலம்தான் இந்த பந்தயத்தில் வெல்லும்.

இரு நாடுகளின் இந்த முயற்சி, விண்வெளி ஆராய்ச்சி தளத்தில் புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்தை பிரதிபலிக்கின்றன. சமீபத்தில் நமக்கு அருகில் உள்ள விண்வெளியில் கணிசமான பனிப் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், விஞ்ஞானிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஏனெனில் எதிர்காலத்தில் நிலவின் தளத்தில் ராக்கெட் எரிபொருளை உருவாக்க தண்ணீரில் உள்ள ஹைட்ரஜனைப் பிரித்தெடுக்க முடியும். கூடுதலாக, உரிய பதப்படுத்துதலுக்குப் பிறகு அந்த தண்ணீரைக் குடிக்கலாம்..

லூனா-25 மற்றும் சந்திரயான்-3 இடையேயான போட்டி சந்திரன் தொடர்பான ஆய்வுகளின் ஒரு புதிய சகாப்தத்தை உள்ளடக்கியது, இதில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் சந்திரனை குறிவைத்துள்ளன.

பலருக்கு இது நட்புரீதியான போட்டி. ஆனால், இன்னும் மனித ஆய்வின் புதிய அத்தியாயம் ஆபத்தில் உள்ளது. தனி நபர் தரையிறங்குதல் மற்றும் ஒரு குழுவினர் தரையிறங்குவதற்கு எடுக்கப்படும் சிறிய முயற்சிகள், வரவிருக்கும் தசாப்தங்கள் மற்றும் நூற்றாண்டுகளில் சூரிய குடும்பத்தை வெல்வதில் மாபெரும் பாய்ச்சலுக்கு வழிவகுக்கும். யார் முதலில் அங்கு செல்கிறார் என்பது உண்மையிலேயே முக்கியமானது.

 
பந்தயத்தில் வெற்றி பெற்ற ரஷ்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

லூனா-25 யின் ஏவுதல் பல முறை தாமதமானது - இது முதலில் 2021 இல் திட்டமிடப்பட்டது. இந்தியாவின் விண்கலம் ஏற்கனவே சந்திரனை சுற்றி வருவதால், இந்தியா இப்போட்டியில் கொஞ்சம் முன் சென்றுவிட்டது

பந்தயத்தில் வெற்றி பெற்ற ரஷ்யா

லூனா-25 மற்றும் சந்திரயான்-3 பயணங்களின் நேரத்தைக் குறிப்பிடுகையில், "இது எல்லாவற்றையும் விட தற்செயல் நிகழ்வாக மாறியது" என்கிறார் அமெரிக்க வான் மற்றும் விண்வெளிப் படையின் வான் பல்கலைக்கழகத்தின் உத்தி மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளின் பேராசிரியர் வெண்டி விட்மேன் கோப். மேலும் பேசிய அவர், இது ஒரு சுவாரஸ்யமான தற்செயல் நிகழ்வு என்றார்.

லூனா-25 யின் ஏவுதல் பல முறை தாமதமானது - இது முதலில் 2021 இல் திட்டமிடப்பட்டது. இந்தியாவின் விண்கலம் ஏற்கனவே சந்திரனை சுற்றி வருவதால், இந்தியா இப்போட்டியில் கொஞ்சம் முன் சென்றுவிட்டது.

ரஷ்யா நேரடியான வழியில் சென்றாலும் கூட, முதலில் நிலவிற்கு செல்வதற்கு சில அழுத்தங்களை உணரலாம். சந்திரயான் -3 லூனா -25 ஐ விட இரு மடங்கு கனமானது மற்றும் மிகவும் குறைவான சக்திவாய்ந்த ராக்கெட்டைப் பயன்படுத்தி ஏவப்பட்டது.

அதாவது சந்திரனை நோக்கிச் செல்வதற்கு முன்பு பூமியைச் சுற்றி பெரிய நீள்வட்ட சுற்றுப்பாதைகளை எடுத்து வேகத்தை உருவாக்க வேண்டும். எதிர்பாராத செயலிழப்புகள் முயற்சியை பின்னுக்குத் தள்ளலாம் அல்லது அந்த முயற்சியை முற்றிலுமாக முறியடிக்கலாம். விண்கலன்கள் அங்கு செல்லும் வரை, அது எப்படிப் போகிறது என்று இரு நாடுகளுக்குமே தெரியாது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து பொருளாதாரத் தடைகளால் நாட்டின் விண்வெளித் திட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால், விண்வெளியில் அதன் தொடர்ச்சியான திறன்களை நிரூபிக்க ரஷ்யா முயற்சித்து வருகிறது.

"அவர்களின் விண்வெளித் தொழில் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளது," என்கிறார் விட்மேன் கோப். ஆனால், ரஷ்யாவைப் பொறுத்தவரை இது சந்திரனை நோக்கிய பந்தயம் அல்ல என்று இங்கிலாந்தில் உள்ள குயின் மார்கரெட் பல்கலைக்கழகத்தில் விண்வெளித் துறையைப் படிக்கும் ஸ்டெபானியா பலாடினி கூறுகிறார்.

ஏனெனில் முன்னாள் சோவியத் யூனியன் 50 ஆண்டுகளாக நிலவில் பல லேண்டர்களையும் ரோவர்களையும் வைப்பதில் வெற்றி பெற்றதுள்ளது. அந்த வகையில், ரஷ்யர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே பந்தயத்தில் வெற்றி பெற்றுவிட்டனர், அதற்கு மரியாதை செலுத்தும் வகையில், லூனா-25 என்ற பெயர், 1976 ஆம் ஆண்டு ரஷ்யாவின் கடைசி நிலவுப் பயணமான லூனா 24-ஐ நினைவுபடுத்துகிறது.

எல்லாம் திட்டமிட்டபடி நடக்குமா?

எல்லாம் திட்டமிட்டபடி நடக்குமா ?

பட மூலாதாரம்,ALAMY

 
படக்குறிப்பு,

இந்தியா இதற்கு முன் சந்திரனின் தென் துருவத்திற்கு ஒரு விண்கலத்தை அதன் நிலவின் தாக்க ஆய்வு மூலம் அனுப்பியது. இது நவம்பர் 2008-ல் ஒரு முகடு மீது மோதியது

சோவியத் லூனா 1 விண்வெளி ஆய்வில் முதல் விண்கலமாகக் கருதப்படுகிறது. இது சந்திரனின் மீது மோதும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பார்வையாளர்கள் முடிவு செய்தனர், ஆனால் அதற்குப் பதிலாக அதன் மேற்பரப்பில் இருந்து 3,725 மைல்கள் (5,995 கிமீ) கடந்து சென்றது.

ஆனால், திட்டமிட்டபடி சந்திரயான்-3 விண்கலத்தைத் தொட்டால், சந்திரனில் "மென்மையான தரையிறக்கத்தை" அடைவதில் "உண்மையில் இந்தியா வெற்றிபெறுவது இதுவே முதல் முறையாகும்" என்கிறார் பலாடினி.

இரண்டு லேண்டர்கள் செப்டம்பர் 2019-ல் சந்திரனின் மேற்பரப்பில் மோதியதால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. இந்தியா இதற்கு முன் 2008- ஆண்டு சந்திரனின் தென் துருவத்திற்கு ஒரு விண்கலத்தை அனுப்பி அதன் மீது மோதச் செய்து ஆயவு நடத்தியது.

தென்துருவத்தில் தரையிறங்குவது புதிதா ?

இதுவரை எந்த விண்கலமும் வெற்றிகரமாகச் சென்றதில்லை. அமெரிக்கா சார்பில் அனுப்பப்பட்டுள்ள அப்பல்லோ விண்கலன்கள் அனைத்தும் வடக்கே பூமியின் பாதைக்கு அருகில் உள்ள இடங்களுக்குச் சென்றன. அந்த தரையிறங்கும் தளங்கள் ஒப்பீட்டளவில் மென்மையான நிலப்பரப்பு மற்றும் நல்ல சூரிய ஒளியைக்கொண்டிருந்தன.

ஆனால், தென்துருவததில் நிலப்பரப்பு மிகவும் மேடு பள்ளங்கள் நிறைந்தது. மேலும், சூரியனில் இருந்து வரும் ஒளி கடுமையான கோணத்தில் வரும்.

இதுகுறித்து கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் மற்றும் கிரக அறிவியல் துறை பேராசிரியரான ஜாக் பர்ன்ஸ் பேசுகையில்,“அடிவானத்தில் சூரியனின் தாக்கம் மிகவும் குறைவாக இருக்கும். அதனால், நிழல்கள் மிக நீளமாக இருக்கும். சந்திரன் அதன் சாம்பல் மேற்பரப்பில் மிகவும் சீராக இருக்கும். எனவே, பள்ளங்கள் மற்றும் கற்பாறைகளை வேறுபடுத்துவது மிகவும் சவாலானதாக இருக்கும்” என்கிறார்.

அமெரிக்கா 2025 ஆம் ஆண்டில் தான் தனது ஆர்ட்டெமிஸ் III குழுவை சந்திரனின் தென் துருவத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. எனவே, அதற்கு முன்பா ‘ரோபோ’ லேண்டர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வது ஓரளவு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் குழுக்கள் கொண்ட விண்வெளிப் பயணம் எப்போதுமே கடினமாக இருக்கும் என்று விட்மேன் கோப் குறிப்பிடுகிறார்.

 

முன்னோக்கிச் செல்வதும், சந்திரனில் ஒரு நிலையான மற்றும் பயனுள்ள இருப்பை யாரால் அமைக்க முடிகிறது என்பது தான் உண்மையில் முக்கியமானது என்கிறார் அரிசோனா பல்கலைக்கழகத்தின் கிரக அறிவியல் பேராசிரியர் விஷ்ணு ரெட்டி. நாடுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையிலா போட்டி உள்ளதை அவர் ஏற்கவில்லை.

உண்மையில் அப்படி போட்டியாக சித்தரிப்பது ஒரு கவனச்சிதறல் என்று நான் நினைக்கிறேன். அரசியலின் அடிப்படையிலோ அல்லது ஒரு தேசத்தையோ அல்லது மற்றொன்றையோ வெல்ல முயற்சிப்பதன் மூலமாகவோ நீங்கள் நிலையான, நீண்டகால இருப்பைக் கொண்டிருக்க முடியாது," என்கிறார் விஷ்ணு ரெட்டி.

மேலும் பேசிய அவர், “ஒவ்வொரு லேண்டர்களிலும் உள்ள அறிவியல் உபகரணங்கள் ஒப்பீட்டளவில் ஒத்ததாக இருக்கிறது. முக்கியமான சந்திரனின் பனி, தாதுக்கள் மற்றுமு் சந்திரனின் வரையறுக்கப்பட்ட வளிமண்டலம் போன்றவற்றைப் பற்றி மேலும் நன்று புரிந்து கொள்ள இந்த லேண்டர்கள் விஞ்ஞானிகளுக்கு உதவும் என நம்புகிறோம். சந்திரனின் தென் துருவத்தின் தெளிவான படத்தைப் பெறுவதும் உதவியாக இருக்கும்,”என்றார்.

லூனா-25 மற்றும் சந்திரயான்-3 ஆகியவை, சர்வதேச கூட்டமைப்பிலிருந்தும் துவங்கியுள்ள ஆரம்பகால முயற்சிகளாகும்.

https://www.bbc.com/tamil/articles/cev8ejrkd1vo

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரயான் A to Z - நாம் அறியாத அதிசய தகவல்கள்! | Dr.TV Venkateswaran

 

  • கருத்துக்கள உறவுகள்

Luna 25 இன் தொடர்புகள் Roscosmos உடன் துண்டிக்கப்ட்டது எனவும், அது சந்திரனில் மோதிவிட்டதாகவும் Roscosmos அறிவித்துள்ளதென்று ஒரு செய்தி வெளியாகிஉள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய விண்கலம் நிலவில் மோதியது

ரஷ்ய விண்கலம் நிலவில் மோதியது

நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக ரஷியா, லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10-ஆம் திகதி விண்ணில் செலுத்தியது.

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்துக்கு போட்டியாக ரஷிய விண்கலம் அனுப்பப்பட்டது. சந்திரயான்-3 விண்கலம் 23-ஆம் திகதி நிலவில் தரை இறங்க திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு முன்பாக 21-ஆம் திகதி லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க ரஷிய விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு ரஷியா அனுப்பிய லூனா-25 விண்கலம் கடந்த 17ஆம் திகதி வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. இதையடுத்து அதன் சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடைபெற்றது. அதன்படி லூனா-25 விண் கலத்தின் உயர குறைப்புகளை விஞ்ஞானிகள் செய்து வந்தனர்.

லூனா-25 விண்கலத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. நிலவில் தலையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப் பாதையில் விண்கலத்தை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இறுதிக்கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் பின்னடைவு ஏற்பட்டதால் விண்கலத்தை திட்டமிட்டபடி அடுத்த சுற்றுப்பாதைக்கு அனுப்ப முடியவில்லை.

தற்போதைய பாதையிலேயே ரஷிய விண்கலம் சுற்றி வந்தது. இந்நிலையில், ரஷியாவின் லூனா 25 விண்கலம் நிலவில் மோதியதாக ரஷியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நேற்று லூனா 25 விண்கலத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நிலவில் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது.

லூனா-25 விண்கலத்துடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த ரஷிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.

https://tamil.adaderana.lk/news.php?nid=176671

  • கருத்துக்கள உறவுகள்

இனி யு ரியுப் பக்கம் போகேலாது.

  • கருத்துக்கள உறவுகள்

அவசர அவசரமாக ரஷ்யா இதை ஏவியிருக்கும் போல தெரிகிறது. ஏற்கனவே ஓரிரு தடவைகள் பிற்போடப்பட்ட ஏவுகையை, மேலிட அழுத்தம் காரணமாக விரைவாக்கியிருப்பர் என ஊகிக்கிறேன். 

உக்ரைன் ஆக்கிரமிப்பிற்குப் பின்னான பொருளாதாரத் தடையால் தங்கள் விண்வெளித் துறைக்கு ஒரு பாதிப்பும் வரவில்லை என்று காட்ட முயன்றிருக்கிறார்கள். அதுவும் அதிகம் பிரபலப் படுத்தப் பட்ட சந்திராயன் 3 இன் வெற்றியோடு தாமும் சேர்ந்து பயன் பெறலாம் என்கிற நோக்கம் பிழைத்துப் போய் விட்டது.

இப்ப இந்திய தொழில் நுட்பத்தை விட ரஷ்ய தொழில்னுட்பம் மேலானதல்ல என்ற பார்வையை ஏற்படுத்தி விட்டார்கள். சந்திராயன் 3 வெற்றிகரமாகத் தரையிறங்கினால்,  இந்தப் பார்வை இன்னும் பலம் பெறலாம்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லூனா-25 விண்கலத்தை நிலவுக்கு செலுத்த திட்டமிட்ட ரஷ்யா, மோசமான வானிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல முறை தள்ளிவைக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு தாமதமானது. அன்றைய தினம் அந்த விண்கலம் நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது.

 

"லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப்பாதையில் செலுத்த தயாரான போது அசாதாரண சூழல் ஏற்பட்டது" என்று ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் தெரிவித்துள்ளது.

"அந்த செயல்பாட்டின் போது, தானியங்கி நிலையத்தில் அசாதாரண சூழல் எழுந்தது. இதனால், திட்டமிட்டப்படி குறிப்பிட்ட அளவில் அந்த செயல்முறையை மேற்கொள்ள முடியவில்லை" என்று ரோஸ்காஸ்மோஸ் தனது அறிவிக்கையில் கூறியுள்ளது.

லூனா-25 நிலவில் மோதிவிட்டதாக ரஷ்யா தகவல்

தொழில்நுட்பக் கோளாறால் லூனா-25 விண்கலம் என்ன ஆனது என்ற எதிர்பார்ப்பு நிலவி வேளையில், இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில், லூனா-25 விண்கலத்துடனான தொடர்பு சனிக்கிழமை முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டதாக ரோஸ்காஸ்மோஸ் தெரிவித்தது.

"லூனா-25 விண்கலம் கணிக்க முடியாத சுற்றுவட்டப் பாதையில் பயணித்து, நிலவின் மேற்பரப்பில் மோதியதால் அதன் ஆயுள் முடிவுக்கு வந்துவிட்டது" என்று அதன் அறிக்கை கூறுகிறது. லூனா-25 திட்டம் தோல்வியில் முடிவடைந்தது ஏன் என்பது குறித்து சிறப்புக் குழு ஆய்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் ஆக்கிரமிப்பதற்காக போர் செய்து கொண்டே,  மேற்குலக நாடுகளால் விதிக்கப்பட்ட கடுமையான பொருளாதாரத் தடைகளையும்  தாண்டி,  ரஷ்யா விஞ்ஞானத்தில் தொழில் நுட்பத்திலும் பலசாலியாக உள்ளது என்பதை காட்டுவதற்காக 50 வருடங்களுக்கு பின்பு செய்பட்ட முயற்ச்சி தோல்வியடைந்ததால் மனித குலத்திற்கு எந்த வித பாதிப்பும் கிடையாது..

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
On 20/8/2023 at 12:07, nunavilan said:

ரஷ்ய விண்கலம் நிலவில் மோதியது

ஆராவது உக்ரேன் விவசாயியை கேட்டால் டிரக்டெரில் கட்டி இழுத்து கொண்டு வந்து கொடுப்பார்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஆராவது உக்ரேன் விவசாயியை கேட்டால் டிரக்டெரில் கட்டி இழுத்து கொண்டு வந்து கொடுப்பார்கள் 🤣

அதற்கு உக்ரேனில்  ஆட்கள் இருக்க வேணுமே??🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

அதற்கு உக்ரேனில்  ஆட்கள் இருக்க வேணுமே??🤣

யாரும் இல்லாத நாட்டை பிடிக்க ஒண்ணரை வருசமா முக்குதாம் ஒரு அணு வல்லரசு🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

யாரும் இல்லாத நாட்டை பிடிக்க ஒண்ணரை வருசமா முக்குதாம் ஒரு அணு வல்லரசு🤣.

நேட்டோ சேடம் இழுக்குதாம்🤣

50 நாடு ஆயுதம் கொடுத்தும்  அரக்க ஏலாமல் நிற்பது  ஏன்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.