Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களனி மக்களோடு வந்து புலம்பெயர் தமிழர்களை விரட்ட நேரிடும்! பகிரங்க எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 1 மணி நேரம் முன்

இது சிங்கள பௌத்த நாடே, இங்கே தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் தான் வடக்கு, கிழக்கிற்கு செல்வதாகவும், அங்கே விகாரைகள் மற்றும் பிக்குகள் மீது கை வைக்க முயன்றால் அங்குள்ளவர்களின் தலைகளுடனேயே களனிக்கு திரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதே வேளை புலம்பெயர் தமிழர்களுக்கு இங்குள்ள சொத்துக்களை விற்கவோ, குத்தகைக்கு வழங்கவோ கூடாது என்று ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுப்பதாகவும், அவ்வாறு வழங்க முயன்றால் களனி மக்களோடு வந்து விரட்ட நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்.

https://tamilwin.com/article/warning-to-tamil-diaspora-sri-lanka-paper-news-1691989081

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு எதிரான மேர்வின் சில்வாவின் கருத்து – நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஊடகங்களில் சீற்றம்

Published By: RAJEEBAN

14 AUG, 2023 | 06:50 AM
image
 
தமிழர்களுக்கு எதிராக மேர்வின் சில்வா தெரிவித்துள்ள கருத்திற்கு கண்டனங்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் அமைச்சர் உரையாற்றும் வீடியோ  ஊடகமொன்றின் செய்தியில் வெளியாகியுள்ளது.

விகாரைகள் மீது கைவைத்தால் வடக்கு கிழக்கில் உள்ளவர்களின் தலைகளை களனிக்கு கொண்டுவருவேன் என அதில் மேர்வின் சில்வா தெரிவிப்பதை காணமுடிகின்றது.

மேர்வின் சில்வாவின் இந்த கருத்திற்காக அவருக்கு எதிராக ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாதா என சமூக ஊடக பயனாளர் ஒருவர் கேள்வி  எழுப்பியுள்ளார்.

அரசாங்கம் நகைச்சுவை கலைஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றது, தேசிய கீதத்தை தவறாக பாடியவர்களை விமர்சிக்கின்றது, இங்கு முன்னாள் அமைச்சர் தமிழர்களின் தலைகளை துண்டிப்பேன் என வெளிப்படையாக தெரிவிக்கின்றார். இவருக்கு எதிராக நடவடிக்கை இல்லையா என மற்றுமொரு சமூக ஊடக பயனாளர் பதிவிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/162292

  • கருத்துக்கள உறவுகள்

வீரசேகர…மேர்வின்…

இராஜபட்சக்கள் முதலில் செல்லபிராணிகளை குலைக்க விட்டு…ஆழம் பார்க்கிறார்கள்….

இவற்றுக்கு கல்லெறி விழாவிடின் தாமே குரைக்க தொடங்குவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

வீரசேகர…மேர்வின்…

இராஜபட்சக்கள் முதலில் செல்லபிராணிகளை குலைக்க விட்டு…ஆழம் பார்க்கிறார்கள்….

இவற்றுக்கு கல்லெறி விழாவிடின் தாமே குரைக்க தொடங்குவார்கள்.

படித்தவர்கள் நாட்டை விட்டோட, படிக்காதவர்கள் தலையேற்க தயாராகும் அழகு 🥰😩

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் தலை பற்றி பேசும் மேர்வினுக்கு தலையில் சுகமில்லை என்பது நாடறிந்த சங்கதி - தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்

Published By: DIGITAL DESK 3

14 AUG, 2023 | 04:08 PM
image
 
தமிழரின் தலையை கொய்து வருவேன் என கொக்கரிக்கும் மேர்வின் சில்வாவுக்கு தலையில் சுகமில்லை என்பது நாடறிந்த சங்கதி. கூடவே ராஜபக்ஷ குடும்பத்தை திருடர்கள், தரகு பணம் பெற்றவர்கள் என்கிறார். அந்த குடும்பத்துடனேயே  மேர்வின் சில்வா குடும்பம் நடத்தினார் என்பதும் நாடறிந்த சங்கதி. ஒருவேளை அத்தகைய திருட்டு தரகு பணம் பெரும் பிரச்சினையால், ராஜபக்ஷர்களுடன் நடத்திய குடும்பம் பிரிந்ததோ என்ற கேள்வியும் எப்போதும் இந்நாட்டு மக்கள் மனங்களில் இருக்கும் சங்கதி.

எல்லாவற்றையும் மிஞ்சிய உலக மகா கேலிகூத்து என்னெவென்றால் உலகத்துக்கு அஹிம்சையை போதித்த போதி சத்துவர் பெயரில் இவர் தமிழர்களின் தலையை வெட்டுவாராம். இவரை போன்றவர்களிடமிருந்து பெளத்தை  போதிசத்துவர்தான் மீண்டும் பிறந்து வந்து காப்பாற்ற  வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  

இதுபற்றி மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

முன்னையை ராஜபக்ச ஆட்சி காலத்தில், ஊடகவியலாளர்களின் கால்களை உடைப்பேன் என்றும் இவர் சொன்னார். அப்புறம் அரச ரூபவாஹிணி கூட்டுத்தாபனத்துக்கு சென்று தன் தலையையே உடைத்துக்கொண்டு வந்தார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு சிங்கள மக்களாலேயே அரசியலில் இருந்து விரட்டப்பட்டார்.

நாட்டில், விகாரைகளையோ, கோவில்களையோ, பள்ளிகளையோ, தேவாலயங்களையோ கட்டுவிப்பதில்,  பூஜைகளை செய்வதில் இடைஞ்சல்கள் ஏற்பட்டால்,  அதை சட்டப்படி அணுக வேண்டும். அந்த சட்டமும் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.

தமிழர் தலைகளை கொய்து வருவேன் என்ற இப்படி தலை வெட்டும் காலம் எல்லாம் இப்போது மலையேறி விட்டது. இவரை பாரதூரமானவராக எடுக்க தேவையில்லை. ஆனால், இவரது கருத்து, பாரதூரமானது. நாட்டில் இன மத குரோதத்தை உருவாக்கும் கருத்து. இவருக்கு எதிராக சட்டம் பாய வேண்டும். அரசில் இருக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் இதுபற்றி தங்கள் தலைவர்களான ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் புகார் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/162350

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

படித்தவர்கள் நாட்டை விட்டோட, படிக்காதவர்கள் தலையேற்க தயாராகும் அழகு 🥰😩

ஆக்ஸ்போர்ட் வரை வந்து படித்த பண்டாவும், முதலியும் நடந்து கொண்ட அழகையும் நினைத்துப்பார்க்கிறேன்.

படிப்பு இருக்கோ இல்லையோ சிங்கள இனத்தில் அறுதி பெரும்பான்மைக்கு மண்டையில் இனவாத நஞ்சு ஊறியே உள்ளது.

மனோ சொல்வது போல் மேர்வினுக்கு மட்டும் இல்லை இனத்தில் பெரும்பான்மைக்கே மண்டையில் சுகம் இல்லை.

ஹிட்லர் காலத்து ஜெர்மானியர்கள் போல.

எவனாவது வந்து முறையாக செவுலில் போடுமட்டும் திருந்தாது இந்த கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

எவனாவது வந்து முறையாக செவுலில் போடுமட்டும் திருந்தாது இந்த கூட்டம்.

2005 அல்லது 06ல் ஒரு அமெரிக்க தூதுவர். அவர் புலிகளுக்கும், தமிழர்களுக்கும், வன்முறை வேண்டாம் என்று புத்திமதி வழங்கிக்கொண்டிருந்தார். அவரை லண்டன் தமிழ் கார்டியன் 'travelling preacher' என்று நக்கல் அடித்து எழுதியது,அதுக்கும் பதில் எழுதி இருந்தார். அவரது பதிலுக்கு, அமெரிக்க தூதரகத்தில் பதவி வகித்து, இப்போது வேறு ஊரில் இருக்கிறேன் என்று ஒருவர் வெள்ளையர் பெயரில் பதில் சொல்லி இருந்தார். தமிழர் பயங்கரவாதம் இருக்கும் வரை, சிங்களத்தின் இனவாதம் வெளியே தெரியாது. அது தெரியவரும் போது, உலகின் மனசாட்சி அதிர்வுறும். அப்போது, சிங்களத்தின் தலையில் ஓங்கி ஒரு குட்டு விழும். விழும் போது, சிங்களம் கையறு நிலையில் இருக்கும். 

அந்த நிலை நெருங்குகிறதா?  

பி.கு: இந்த மேர்வின், ரணிலுக்கு பிள்ளை இல்லை, அவரால் பெற முடியாது, வேண்டுமானால், உதவ ரெடி என்று சொன்னவர், நினைவு இருக்கிறதா? 😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

2005 அல்லது 06ல் ஒரு அமெரிக்க தூதுவர். அவர் புலிகளுக்கும், தமிழர்களுக்கும், வன்முறை வேண்டாம் என்று புத்திமதி வழங்கிக்கொண்டிருந்தார். அவரை லண்டன் தமிழ் கார்டியன் 'travelling preacher' என்று நக்கல் அடித்து எழுதியது,அதுக்கும் பதில் எழுதி இருந்தார். அவரது பதிலுக்கு, அமெரிக்க தூதரகத்தில் பதவி வகித்து, இப்போது வேறு ஊரில் இருக்கிறேன் என்று ஒருவர் வெள்ளையர் பெயரில் பதில் சொல்லி இருந்தார். தமிழர் பயங்கரவாதம் இருக்கும் வரை, சிங்களத்தின் இனவாதம் வெளியே தெரியாது. அது தெரியவரும் போது, உலகின் மனசாட்சி அதிர்வுறும். அப்போது, சிங்களத்தின் தலையில் ஓங்கி ஒரு குட்டு விழும். விழும் போது, சிங்களம் கையறு நிலையில் இருக்கும். 

அந்த நிலை நெருங்குகிறதா?  

றொபேர்ட் பிளேக்?

உலகின் மனவுறுதி அதிரும் என நான் நினைக்கவில்லை. நம்மை போல சாமானியர்கள்தான் இதை எல்லாம் பார்த்து அதிர்ச்சி அடைவது.

நாடுகளை பொறுத்த மட்டில்  எல்லாமுமே “லாப நட்ட கணக்குத்தான்”.

பேர்க் காபரை ஜப்பான் தாக்கியிராவிட்டால் - யூதருக்கு ஐரோப்பாவில் நடந்த கொடுமை அமெரிக்க மனத்தை உசுப்பியிராது.

நாசி ஜேர்மனியிம் வீழ்ந்திராது. இன்றும் ஐரோப்பிய கண்டம் எங்கும் நாஜியம் நிலைபெற்றிருக்க கூடும்.

அப்படி ஏதாவது ஒரு புவிசார் சிக்கலில் இலங்கை தோற்கும் அணியிலும் நாம் வெல்லும் அணியிலும் இருக்கும் நிலையில் மட்டும்தான் சிங்களவரிடம் இருந்து ஒரு நியாயமான, பறிக்க முடியாத தீர்வை நாம் அடைய முடியும் என்பது என் கருத்து. 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் திருந்தாது என்பதற்கு எத்தனை பேர் உதாரணமாக இருக்குறார்கள் பார்தீர்களா மண்ட பிசகின கூட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

வாயால் கெட்ட மேர்வின் 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nunavilan said:

வாயால் கெட்ட மேர்வின் 

நியமாய்…நியமாய்🤣

ஊடகவியலாளரை மேர்வின் திட்டியதுக்கு எதிர்வினை இது என  நினைக்கிறேன்.

ஆனால் தமிழர் தலையை கொய்வேன் என மேர்வின் சொன்னதுக்கு ஒரு சிங்கள சுண்டுவிரல் கூட அசையுமா?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, nunavilan said:

வாயால் கெட்ட மேர்வின் 

எட்டு வருடங்களுக்கு முன்பு வெளியிட்ட காணொளி இப்பதான் எங்களுக்கு வந்து சேர்ந்திருக்கு பலநூறு கோடி ஒளிஆண்டுகள் தாண்டி.

இதுகள் இப்படிக் கதைக்காட்டில்தான் அதிசயம். எங்களின்ரை ஆக்கள் இப்போது மெளனம்.  வித்தகாணிக்கு உரிமைகோரி பத்தையள் பறியளுக்க கிடக்கும் கூட்டமும் கூத்தமைப்பும் எங்க போயிட்டு 

எங்கள் அரசியல்வாதிகள் தட்டில சோத்தைப் போட்டுத்தான் திங்கிறாஙளா அல்லது அதுக்குப் பதிலா வேறை ஏதாவதைத் திங்கிறாங்களா?

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Elugnajiru said:

எங்கள் அரசியல்வாதிகள் தட்டில சோத்தைப் போட்டுத்தான் திங்கிறாஙளா அல்லது அதுக்குப் பதிலா வேறை ஏதாவதைத் திங்கிறாங்களா?

கிரிபத்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

றொபேர்ட் பிளேக்?

Jeffrey Lunstead

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

படித்தவர்கள் நாட்டை விட்டோட, படிக்காதவர்கள் தலையேற்க தயாராகும் அழகு 🥰😩

தமிழனுக்கு உரிமை என்பதில் படித்தவர்கள் தொடக்கம் பாமரர்கள் வரைக்கும் அந்த எண்ணத்தில்தான் இருக்கிறார்கள். இப்படி படித்த (??) கலாநிதி (?) மேர்வின் சில்வாவே பேசும்போது மற்றவர்களின் எண்ணம் எப்படி இருக்கும்? என்னாதான் சிங்களவன் இனவாதம் பேசினாலும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.  

நாடு இதையும்விட அதல பாதாளத்துக்கு செல்ல முடியாது. அப்படி இருந்தாலும் இனவாதம் என்பது மிகவும் ஆழமாக ஊடுருவி இருக்கிறது.

நேற்று ஒரு பிக்கு கூறுகிறார், முன்னணி பிக்குமார் கஞ்சா அடித்து விட்டு தூங்குவதாகவும் , இவர்கள் எல்லாம் விரைவில் களத்துக்கு இறங்க வேண்டுமென்று அரை கூவல் விடுக்கிறார். நாலு பிக்கு உண்ணாவிரதம் இருந்தால் நாடு குழம்பி எல்லாமே பிரச்சினையாகி விடும். இவற்றிட்கு பின்னணியில் ராஜபக்சேக்கள் இருக்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேர்வின் சில்வாவிற்கு வைத்திய சிகிச்சை வழங்க வேண்டும் அல்லது கைதுசெய்ய வேண்டும் - சி.வி.கே.சிவஞானம்

15 AUG, 2023 | 10:26 AM
image
 
எனது பார்வையின் கீழ் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு தலையில் பழுது உள்ளது போல் தெரிகிறது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (14) ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவர் அரசியலில் இல்லாத கட்சிகள் இல்லை.  அனைத்துக் கட்சிகளிலும் இருந்து, எல்லா கட்சியினரும் அவரை துரத்தி உள்ளார்கள். தான் இருக்கின்றார் என்பதை காண்பிப்பதற்காக இவ்வாறு மடமைத்தனமான பேச்சுக்களை பேசுகின்றார்.

இவரை கணக்கெடுப்பதே மிகவும் பிழை. அவரை கவனிக்காமல் அவர்பாட்டிலேயே செல்வதற்கு விட்டுவிட வேண்டும்.

உண்மையாகவே இந்த நாட்டில் சட்டம், ஒழுங்குகள் இருக்கின்றது என்றால் பொலிஸார் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். 

ஏனென்றால் இவர் ஒன்று வன்முறையை தூண்டுகின்றார், இரண்டாவது இன மோதலை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றார்.

இவருக்கு இனமோதலை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு  மனோநிலை பிரச்சினை என்றால் அதற்கான வைத்தியத்தை செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. 

இல்லையேல் இவரை இந்த இரண்டு குற்றத்திற்காகவும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

https://www.virakesari.lk/article/162375

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

நியமாய்…நியமாய்🤣

ஊடகவியலாளரை மேர்வின் திட்டியதுக்கு எதிர்வினை இது என  நினைக்கிறேன்.

ஆனால் தமிழர் தலையை கொய்வேன் என மேர்வின் சொன்னதுக்கு ஒரு சிங்கள சுண்டுவிரல் கூட அசையுமா?

இப்போதைக்கு சாத்தியமில்லை.
கோத்தபயவை  வெடி கொளுத்தி ஆராவாரித்த மக்கள் உள் அணியுடன் அனுப்ப்பியதை யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.
இதே இனவாத கூட்டம் எமக்கு செய்வதை சிங்கள மக்களுக்கு செய்யும் போது கட்டாயம் வாங்கி கட்டுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சிங்களவர்களின் நாடு தமிழர்களுடையதல்ல முடிந்தவர்கள் எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யலாம் - மேர்வின் சவால்

Published By: VISHNU

16 AUG, 2023 | 05:30 PM
image
 
(இராஜதுரை ஹஷான்)

கொழுந்து பறிப்பதற்காக மலையகம் வந்த தமிழர்களுக்காகவும், சோழர்களுடன் வடக்கு மற்றும் கிழக்குக்கு வந்த தமிழர்களுக்காகவும் நாட்டை பிளவுப்படுத்த இடமளிக்க முடியாது.

இது சிங்கள பௌத்த நாடு. பௌத்தர்கள் விரும்பும் இடங்களில் வாழலாம் என குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்தத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் அப்பகுதியில் வாழ்பவர்களின் தலைகளை கொய்வேன் என்று குறிப்பிட்ட கருத்தை நீக்கிக் கொள்ளமாட்டேன், முடிந்தவர்கள் எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யலாம். டயஸ்போராக்களின் நோக்கத்துக்கமைய அரசாங்கம் செயற்பட்டால் என் தலைமையில் மீண்டும் போராட்டத்தை தோற்றுவிப்பேன் எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் புதன்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை சிங்கள பௌத்த நாடு. பௌத்தர்கள் எங்கும் வாழலாம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த சிங்களவர்கள் வாழ்வதற்கும், விகாரைகள் அமைப்பதற்கும் தமிழ் அரசியல்வாதிகளிடமும், தமிழ் அதிகாரிகளிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

தென்னிந்தியாவில் இருந்து கொழுந்து பறிப்பதற்காகவே மலையகத்துக்கு தமிழர்கள் அழைத்து வரப்பட்டார்கள். மறுபுறம் சோழர்களுடன் வந்த தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழந்தார்கள்.

அரச காலத்தில் இலங்கையில் இருந்த பெண்கள் அழகில்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு சிங்கள அரசர்கள் தென்னிந்தியாவில் இருந்து தமிழ் இளவரசிகளை திருமணம் முடித்து நாட்டுக்கு அழைத்து வந்தார்கள்.

தமிழ் இளவரசிகளுக்காக சிங்கள மன்னர்கள் கோயில்களை கட்டிக் கொடுத்தார்கள். இவ்வாறான பின்னணியில் தான் தமிழர்கள் இலங்கையில் வாழ ஆரம்பித்தார்கள். பிற்பட்ட காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொன்மையான விகாரைகள் அழிக்கப்பட்டு அதன் மீது கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. ஆகவே தற்போது கோயில்களை இடிக்க வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் குறிப்பிடவில்லை.

தமிழர்கள் சிங்கள பௌத்தர்களுடன் முரண்பாடு இல்லாமல் நல்லிணக்கத்துடன் வாழலாம் அதை எதிர்க்கவில்லை. ஆனால் பௌத்த மரபுரிமைகளை அழித்து இங்கு வாழ முடியாது. ஏனெனில் இது சிங்கள பௌத்த நாடு. கொழுந்து பறிப்பதற்காக மலையகம் வந்தவர்களுக்காகவும், சோழர்களுடன் வந்தவர்களுக்காகவும் நாட்டை பிளவுப்படுத்த முடியாது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்பவர்கள் விகாரைகள், மகாநாயக்கர்கள் மீது கை வைத்தால், அவர்களின் தலைகளுடன் களனிக்கு வருவேன் என்று குறிப்பிட்டதை ஒருபோதும் நீக்கிக் கொள்ளமாட்டேன். எனக்கு எதிராக எவரும் வழக்குத் தாக்கல் செய்யலாம்.

டயஸ்போராக்களின் நோக்கத்துக்கு அமைய அரசாங்கம் செயற்பட்டால் அரசாங்கத்துக்கு எதிராக நான் அரகலயவில் (போராட்டம்) ஈடுபடுவேன். பௌத்தத்தின் மீது பற்றுள்ளவர்கள் என்னுடன் இணைந்துக் கொள்ளலாம் என அழைப்பு விடுத்தார்.

https://www.virakesari.lk/article/162492

  • கருத்துக்கள உறவுகள்

சரத் வீரசேகர, கம்மன் பில., விமல் போன்றவர்களின் ஊழையில் மக்கள் கிளம்பவில்லை என இந்த கோமாளியை இறக்கி விட்டிருக்கு. இவர்கள்கைது செய்யப்பட்டு இவர்களுக்கெதிராக  நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் நாடு மனநோயாளிகளால் நிரம்பி வழிவதை தவிர்க்க முடியாது, அதை பெருகச்செய்த பெருமை அரசியலாளரையே சேரும். போகிற போக்கில் இவர்களே ஒருவரோடொருவர் பொருதிக்கொள்ளப்போகிறார்கள். ஞான சார தேரர், தூஷண பிக்கர் போன்றோர்  காத்திருக்கிறார்கள் களம் இறங்க, நிலைமை எதிர்மறையாகவும் மாறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

இலங்கை சிங்களவர்களின் நாடு தமிழர்களுடையதல்ல முடிந்தவர்கள் எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யலாம் - மேர்வின் சவால்

Published By: VISHNU

16 AUG, 2023 | 05:30 PM
image
 
(இராஜதுரை ஹஷான்)

கொழுந்து பறிப்பதற்காக மலையகம் வந்த தமிழர்களுக்காகவும், சோழர்களுடன் வடக்கு மற்றும் கிழக்குக்கு வந்த தமிழர்களுக்காகவும் நாட்டை பிளவுப்படுத்த இடமளிக்க முடியாது.

இது சிங்கள பௌத்த நாடு. பௌத்தர்கள் விரும்பும் இடங்களில் வாழலாம் என குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்தத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் அப்பகுதியில் வாழ்பவர்களின் தலைகளை கொய்வேன் என்று குறிப்பிட்ட கருத்தை நீக்கிக் கொள்ளமாட்டேன், முடிந்தவர்கள் எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யலாம். டயஸ்போராக்களின் நோக்கத்துக்கமைய அரசாங்கம் செயற்பட்டால் என் தலைமையில் மீண்டும் போராட்டத்தை தோற்றுவிப்பேன் எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் புதன்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை சிங்கள பௌத்த நாடு. பௌத்தர்கள் எங்கும் வாழலாம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த சிங்களவர்கள் வாழ்வதற்கும், விகாரைகள் அமைப்பதற்கும் தமிழ் அரசியல்வாதிகளிடமும், தமிழ் அதிகாரிகளிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

தென்னிந்தியாவில் இருந்து கொழுந்து பறிப்பதற்காகவே மலையகத்துக்கு தமிழர்கள் அழைத்து வரப்பட்டார்கள். மறுபுறம் சோழர்களுடன் வந்த தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழந்தார்கள்.

அரச காலத்தில் இலங்கையில் இருந்த பெண்கள் அழகில்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு சிங்கள அரசர்கள் தென்னிந்தியாவில் இருந்து தமிழ் இளவரசிகளை திருமணம் முடித்து நாட்டுக்கு அழைத்து வந்தார்கள்.

தமிழ் இளவரசிகளுக்காக சிங்கள மன்னர்கள் கோயில்களை கட்டிக் கொடுத்தார்கள். இவ்வாறான பின்னணியில் தான் தமிழர்கள் இலங்கையில் வாழ ஆரம்பித்தார்கள். பிற்பட்ட காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொன்மையான விகாரைகள் அழிக்கப்பட்டு அதன் மீது கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. ஆகவே தற்போது கோயில்களை இடிக்க வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் குறிப்பிடவில்லை.

தமிழர்கள் சிங்கள பௌத்தர்களுடன் முரண்பாடு இல்லாமல் நல்லிணக்கத்துடன் வாழலாம் அதை எதிர்க்கவில்லை. ஆனால் பௌத்த மரபுரிமைகளை அழித்து இங்கு வாழ முடியாது. ஏனெனில் இது சிங்கள பௌத்த நாடு. கொழுந்து பறிப்பதற்காக மலையகம் வந்தவர்களுக்காகவும், சோழர்களுடன் வந்தவர்களுக்காகவும் நாட்டை பிளவுப்படுத்த முடியாது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்பவர்கள் விகாரைகள், மகாநாயக்கர்கள் மீது கை வைத்தால், அவர்களின் தலைகளுடன் களனிக்கு வருவேன் என்று குறிப்பிட்டதை ஒருபோதும் நீக்கிக் கொள்ளமாட்டேன். எனக்கு எதிராக எவரும் வழக்குத் தாக்கல் செய்யலாம்.

டயஸ்போராக்களின் நோக்கத்துக்கு அமைய அரசாங்கம் செயற்பட்டால் அரசாங்கத்துக்கு எதிராக நான் அரகலயவில் (போராட்டம்) ஈடுபடுவேன். பௌத்தத்தின் மீது பற்றுள்ளவர்கள் என்னுடன் இணைந்துக் கொள்ளலாம் என அழைப்பு விடுத்தார்.

https://www.virakesari.lk/article/162492

பைத்தியக்காரர்களுக்கு குறைவில்லாத நாடு என்றால் அது நமது இலங்கை தேசம்தான். இவர்களுக்கு மருந்தும் இல்லை, மாற்று தெரிவுகளும் இல்லை.

வழக்கு போடடால் இங்கு என்ன நடக்கும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். எனவே இப்படியான பயித்தியங்களை அந்த போக்கிலேயே விட்டு விடுவதுதான் நல்லது. இல்லாவிட்ட்தால் தூக்கணாங்குருவி குரங்குக்கு புத்தி சொல்ல போய் நனடந்ததுதான் நமக்கும் நடக்கும்.

மனுஷனுடைய மதியீனம் அவனுடைய வழிகளை தாறுமாறாக்கும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேர்வின் சில்வாவின் இனவாத கருத்துக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு !

16 AUG, 2023 | 09:55 PM
image
 
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் விகாரைகள் மீதும் பிக்குகள் மீதும் கை வைத்தால், கை வைப்பவர்களது தலையை எடுத்து களனிக்கு கொண்டு செல்வதாக, களனியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்தார்.

அவரது இந்த கருத்திற்கு பலரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை மற்றும் ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம், மேர்வின் சில்வாவின் கருத்துக்கு எதிராக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதன்போது, இனவாத கருத்துக்களை தூண்டி வன்முறையை ஏற்படுத்துவதற்கு மேர்வின் சில்வா முயல்வதாக அவர் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/162533

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.