Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன்: மூக்குத்தி போட்டதால் விமான நிலைய வேலையை இழந்த இந்து பெண்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன்: மூக்குத்தி போட்டதால் விமான நிலைய வேலையை இழந்த இந்து பெண்!!செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 18, 2007

லண்டன்:

மூக்குத்தி போட்டுக் கொண்டு வேலைக்கு வந்ததால், விமான நிலைய வேலையிலிருந்து இந்துப் பெண் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார்.

வட மேற்கு லண்டனில் உள்ள ஸ்டேன்மோர் பகுதியில் வசித்து வருபவர் அம்ரித் லால்ஜி (43). இந்தப் பெண்மணி, லண்டன் ஹூத்ரூ விமான நிலையத்தில் உள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விஐபிக்கள் பிரிவின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார்.

இந்துப் பெண்கள் மூக்குத்தி அணிவது சாதாரணமான விஷயம். அதுபோலவே அம்ரித்தும் மூக்குத்தி அணிந்திருந்தார். ஆனால் மூக்குத்தியுடன் வேலைக்கு வரக் கூடாது என அவரை வேலையில் நியமித்த யூரெஸ்ட் நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால் அதை ஏற்க மறுத்து விட்டார் அம்ரித். இந்து மத சம்பிரதாயப்படி பெண்கள் மூக்குத்தி அணிய வேண்டும். எனவே நான் மூக்குத்தியை அகற்ற மாட்டேன் என்று கூறி விட்டார் அம்ரித்.

ஆரம்பத்தில் இதை அந்த நிறுவனம் விட்டு விட்டது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் மூக்குத்தி அணிந்தபடியே வேலை பார்த்து வந்தார் அம்ரித். அவரது மூக்குத்தி குறித்து எந்தப் புகாரும் வாடிக்கையாளர்களிடமிருந்து வரவில்லை என்பதால் யூரெஸ்ட் நிறுவனமும் பிரச்சினையை விட்டு விட்டது.

இந்த நிலையில் கடந்த மாதம், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன அதிகாரி ஒருவர், அம்ரித் மூக்குத்தியுடன் பணி புரிவதற்கு ஆட்சேபனை தெரிவித்து யூரெஸ்ட் நிறுவனத்திடம் புகார் கொடுத்தார். இதைடுத்து யூரெஸ்ட் நிறுவனம் நடவடிக்கையில் இறங்கியது.

ஒன்று மூக்குத்தியை விட்டு விட வேண்டும் அல்லது வேலையில் நீடிக்க முடியாது என்று அது அம்ரித்திடம் தெரிவித்தது. ஆனால் தனது மூக்குத்தியை எடுக்க முடியாது என்று அம்ரித் உறுதியாக தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த வாரம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி அம்ரித்தை வேலையை விட்டு நீக்கி விட்டது யூரெஸ்ட்.

இந்த நடவடிக்கையில் அம்ரித் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த நடவடிக்கை என்னை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்கிறேன். நான் சார்ந்த இந்து மதத்தின் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நான் மூக்குத்தி அணிந்தேன்.

நான் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கவில்லை. எனது மத நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்த்தேன். ஆனால் இதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு நிர்வாகம் இருப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்றார் அம்ரித்.

அம்ரித் லால்ஜிக்கு ஆதரவாக இங்கிலாந்து இந்து கவுன்சில் களம் இறங்கியுள்ளது. இந்து திருமண சம்பிரதாயப்படி கல்யாணமான பெண்கள் மூக்குத்தி அணிவது ஒரு வழக்கமாகும். எப்படி கிறிஸ்தவர்கள் திருமணத்தின்போது மோதிரங்களை மாற்றிக் கொள்கிறார்களோ, அது போலத்தான் இந்து சமூகத்தில் மூக்குத்தி அணியும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.

கிறிஸ்தவர்கள் திருமண மோதிரங்களை அணிந்து கொள்வதில் யூரெஸ்ட் நிறுவனத்திற்கு நம்பிக்கை இருக்கும்போது, அதை மதிக்கும்போது, மூக்குத்தி அணிவதை மட்டும் அது எதிர்ப்பது நியாயமற்றது என்று கோபமாக கேட்டார்.

இந்த விவகாரம் குறித்து யூரெஸ்ட் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், நிறுவன விதிமுறைப்படி, பணி நேரத்தின்போது திருமணமான பெண்கள், சிறிய அளவிலான மோதிரம், தோடு போன்றவற்றை மட்டுமே அணியலாம். உடலைத் துளைத்து அணியப்படும் பிற நகைகளுக்கு அனுமதி கிடையாது என்பதை பலமுறை அம்ரித் லால்ஜிக்கு எடுத்துக் கூறினோம்.

இதுபோன்று அணியப்படும் நகைகளால் பாக்டீரியாக்கள் பரவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும் எங்களது நிறுவனம் உணவு விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் ஒன்று. இப்படிப்பட்ட நகைகளை அணிந்து கொண்டு வேலை பார்த்தால், உணவில் பாக்டீரியாக்கள் பரவி பெரும் பிரச்சினையாகி விடும்.

மூக்குத்தி அணியாமல் வேலைக்கு வர வேண்டும் என்று அவரிடம் கூறினோம். அவர் ஏற்கவில்லை. இதனால்தான் வேலையிலிருந்து நீக்கினோம் என்றார் அவர்.

பேசாமல், யூரெஸ்ட் நிறுவனத்தினரை இந்தியாவுக்கு ஒரு மாதம் இன்டர்ன்ஷிப் கொடுத்து அழைத்து வந்து, மூக்குத்தி அணிந்த நமது நாட்டு இல்லத்தரசிகள் எப்படி பாக்டீரியா பரவலின்றி சமைக்கிறார்கள், வாழ்கிறார்கள் என்பதை கற்றுக் கொடுக்கலாம்.

செய்திகள் இங்கே.....

http://thatstamil.oneindia.in/news/2007/09...-nose-stud.html

கறுப்பி அக்கா, இந்த செய்தி மூலம் இப்ப என்ன சொல்ல வாறீங்கள்? :rolleyes:

நான் அண்மையில் லண்டன் விமானநிலையத்துக்கு வந்தபோது அங்கு எடுபிடி வேலை செய்பவர்கள், அதாவது வழிகாட்டுபவர்கள், இமிகிரேசனுக்கு போகமுன் நிற்பவர்கள் எல்லாரும் இந்திய பெண்கள். அவேக்கு 30 - 60 வயதினுள் இருக்கும் என்று நினைக்கின்றேன். விமானநிலையத்தில் பெருவாரியாக இவர்களைக் கண்டதும் நான் இந்தியாவுக்கு மாறி வந்துவிட்டேனோ என்று பயந்துவிட்டேன். ;)

அட பாவிகளாஅ?

அப்படியாயின் மூக்குத்தி குத்தியவர்களில் பக்டீரியா இருக்குதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப வெள்ளைத்தோல்க்காரரும் மூக்குத்தி போடத்தொடங்கீட்டினம் தானே :)

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் சொன்ன பக்ரீரியாக் காரணம் தொடர்பாக விளக்கம் போதாது. ஆனால் பொதுவாக உணவு உற்பத்தி செய்யும் இடங்கள்.. பொதி செய்யும் இடங்கள்.. உணவு பரிமாறும் இடங்களில் மூக்குத்தி போன்ற சிறிய ஆபரணங்கள் அணிவது தவிர்க்கப்பட வேண்டும் என்று கோருவது வழமை. காரணம்.. அவை அணித்திருப்பவருக்குத் தெரியாமலே கழன்று உணவோடு கலந்துவிட சந்தர்ப்பம் உள்ளதால். அதன் போதும் நுண்கிருமிகள் தாக்கம் உணவின் மூலம் பரவ வாய்ப்புண்டுதான். ஆனால் அதற்கான சந்தர்ப்பத்தைத் தடுக்க வழிமுறைகள் உள்ளன.

இது திட்டமிட்ட புறக்கணிப்பு என்றே நினைக்கிறேன். வெள்ளையருக்கு தங்கள் நாகரிகத்தை பிறர் பின்பற்றுவதில் பிரச்சனை இல்லை. ஆனால் தங்களை விட பிறர்.. நாகரிகமாக வாழுதல் பிடிக்காது. வெளிப்படையாச் சொல்லிக் கொண்டாலும் நாங்கள் பல் கலாச்சார நாகரிகக் கட்டமைப்பை விரும்பிறம்.. மதிக்கிறம் என்று.. ஆனால் அதில் உண்மையில்ல.

உ+ம்: வருடம் தோறும் நம்மவர்கள் கோவில் வீதி உலா வருவார்கள். நானும் சில ஊர்வலங்களுக்கு விடுப்புப் பார்க்கப் போயிருக்கிறன். வெள்ளையளை.. மருந்துக்கும் காணக் கிடைக்கேல்ல. அப்படி... இருக்கு.. நிலை...!

இன்னொரு தடவை ஒரு வெள்ளையர் குடும்பத்தை சந்தித்துப் பேசினேன். அவர்கள் தங்கள் வீட்டை விற்றுவிட்டுப் போகப்போவதாகச் சொன்னார்கள். காரணம் கேட்டேன். அயலவர்களின் சத்தம் தாங்க முடியவில்லை என்று. அயலவர்கள் வேறு யாருமல்ல.. நம்மவர்கள் தான். அதுவும் 6 மாதத்துக்கு முன்னர் ஜேர்மனியில் இருந்து குடிபெயர்ந்தவர்கள்.

நம்மவர்களின் காட்டுக் கூச்சல்.. வெப்பத்தை இழக்க விடாது தடுக்கக் கூடிய சுவர்களையும் தாண்டி.. வருகிறதென்றால்.. பார்த்துக் கொள்ளுங்களேன். அவர்களிலும் பிழை கூற முடியாது. கிராமங்களில் இருந்து வந்துள்ள எம்மவர்கள்.. காட்டுக் கூச்சல் போடுவது வழமை. காரணம்.. கிராமங்களில் சனத்தொகை அடர்த்தி குறைவு. வீடுகளும் தொலைவுக்கு தொலைவு. அதனால் அவர்கள் அப்படிப் பழகிவிட்டார்கள். ஆனால் வாழும் சூழலுக்கு ஏற்ப தங்களை மீள் தயார்ப்படுத்தலில் அவர்களுக்கு அக்கறையே இல்லை என்பது வேதனைக்குரியது.

இப்படியான, எம்மவர்களின் பொதுவான மனிதப் பண்பை இழந்த செயற்பாடுகளால்.. வெள்ளையர்கள் எம்மை விட்டு விலகிப் போகச் செய்கிறோம். இவையே.. பின்னர் அவர்கள் மேலாதிக்கம் செய்யும் இடங்களில்.. ஆசியர்கள் மற்றும் பிற இனத்தவர்களுக்கு எதிராகச் செயற்படத் தூண்டுகிறது. இதற்கு ஒரு வகையில் புலம்பெயர்ந்துள்ள... இந்தியர்களும்.. இலங்கையர்களும் ஒரு காரணம். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னொரு தடவை ஒரு வெள்ளையர் குடும்பத்தை சந்தித்துப் பேசினேன். அவர்கள் தங்கள் வீட்டை விற்றுவிட்டுப் போகப்போவதாகச் சொன்னார்கள். காரணம் கேட்டேன். அயலவர்களின் சத்தம் தாங்க முடியவில்லை என்று. அயலவர்கள் வேறு யாருமல்ல.. நம்மவர்கள் தான். அதுவும் 6 மாதத்துக்கு முன்னர் ஜேர்மனியில் இருந்து குடிபெயர்ந்தவர்கள்.

நம்மவர்களின் காட்டுக் கூச்சல்.. வெப்பத்தை இழக்க விடாது தடுக்கக் கூடிய சுவர்களையும் தாண்டி.. வருகிறதென்றால்.. பார்த்துக் கொள்ளுங்களேன். அவர்களிலும் பிழை கூற முடியாது. கிராமங்களில் இருந்து வந்துள்ள எம்மவர்கள்.. காட்டுக் கூச்சல் போடுவது வழமை. காரணம்.. கிராமங்களில் சனத்தொகை அடர்த்தி குறைவு. வீடுகளும் தொலைவுக்கு தொலைவு. அதனால் அவர்கள் அப்படிப் பழகிவிட்டார்கள். ஆனால் வாழும் சூழலுக்கு ஏற்ப தங்களை மீள் தயார்ப்படுத்தலில் அவர்களுக்கு அக்கறையே இல்லை என்பது வேதனைக்குரியது.

எங்கடை சரக்குக்கறி,வறட்டல்கறி மற்றது தூள்,சம்பல் வகையள் எல்லாம் வேணும் ஆனால் எங்கடை சனத்தின்ரை சத்தம் மட்டும் சரிவரூதில்லை :angry: :angry: :angry: என்ன இருந்தாலும் நெடுக்குசாமி நீங்கள் ஜேர்மன் பீப்பிளின்ரை விசயத்தை அப்புடியே அமுக்கியிருக்கோணும் :D ஏனெண்டால் அவையள் இஞ்சை பதினைஞ்சுஇருபது வருசமெண்டு இருந்தும் திருந்தேல்லையெண்டால் :D இதுக்குப்பிறகு--------- :lol: இப்ப என்ன சொல்ல வாறியள் ஜேர்மனியிலை இருந்து வந்து இங்லிசு மீடியத்திலை படிச்சாலும் திருந்தேலாது எண்டு சொல்லுறியளோ :lol: மற்றது ஜேர்மனியிலை இருந்து வந்த உடன் பிறப்புகளுக்கு டாக்குத்தர் எஞ்சினியர் எண்டுதான் இருப்பினம் வேறை வேலையெண்டால் ஓ......நோ......... B)

"தற்ஸ்ரமில்" இணையத்தளத்தின் சோடிக்கப்பட்ட அல்லது அலங்காரம் செய்யப்பட்ட செய்திகளை நம்பி தவறான கருத்துநிலைப்பாடுகள் எடுப்பதை தவிர்ப்பதே நல்லது என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு நிறுவனங்களிலும் அவற்றுக்கான சில விதிமுறைகள், நிபந்தனைகள் இருக்கின்றன. தற்ஸ்ரமில் போன்ற இணையத்தளங்கள் இதை மதத் துவேச நோக்கில் அணுகவே முற்படுகிறார்கள். தனிமனித சுதந்திரம் என்ற வகையில் இவற்றை அணுகலாம். தவிரவும் இந்த விதிமுறை அந்தப் பெண் வேலையில் இணைந்த பின்னர் கொண்டுவரப்பட்டதா அல்லது அதற்கு முதலே இருக்கிறதா என்பதையும் அறிவது நல்லது.

உதாரணமாக Mc Donalds இல் நான் வேலை செய்திருக்கிறேன். அங்கு தாடி வைத்திருக்கக்கூடாது. அடக்கடவுளே... ஆட்டுத் தாடி கூட வைக்கவிடமாட்டார்கள். :D அது அவர்களின் நிறுவன விதிமுறைகளில் உண்டு. நான் வேலைசெய்த Mc Donalds இல் துருக்கியர்கள் அதிகம். அதேபோல் பாக்கிஸ்தானியர் முக்கிய பொறுப்பில் இருந்தார். அனைவரும் விதிமுறைகளுக்குட்பட்டே செயற்பட்டார்கள். குறிப்பாக இஸ்லாமியர்கள் தாடி எடுப்பது குறைவு என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அனைவரும் விதிமுறைகளுக்கு உட்பட்டே நடந்துகொள்கிறார்கள். நீளமாக தலைமுடி வளர்த்திருப்பவர்கள் குறிப்பாக பெண்கள் அதற்குரிய தொப்பிகளை அணிந்தே வேலை செய்வார்கள். மற்றது நகைகள் அணிந்திருப்பதும் கூடாது. குறிப்பாக மோதிரம். இப்படி ஒவ்வொரு நிறுவனத்துக்கும் குறிப்பா உணவு சம்மந்தப்பட்ட நிறுவனங்களில் இப்படியான விதிமுறைகள் உள்ளன.

இந்த செய்தி பக்க சார்பாக எழுதப்பட்டிருக்கு போல எனக்கு தோன்றுகின்றது..

முன்பு ஒரு செய்தி படித்திருக்கின்றேன் கார்ரேஸ்க்கு போன சிங் தலப்பாகை கழட்டி தலைக்கவசம் அணிய மாட்டன் என்று அடம்பிடித்த வழக்கு அது. அதற்கும் அவரது மத நம்பிக்கை காரணம் காட்டப்பட்டது. ஆனால் நீதிமன்றம் அவரை தலைக்கவசம் அணிந்து தான் கார்ரேஸ்போகவேண்டும் என்று தீர்பளித்தது. அது பாது காப்பு விதிமுறையை கருத்தில் கொண்டு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இதுவும் பக்டீரியா, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற காரணங்களை நிறுவனம் முன்வைத்தால் வேலைக்கு வரும்போது மூக்குத்தியை கழட்டி வைத்துவிட்டு வேலை முடிந்ததும் அணியலாம் தானே. அடம்பிடிச்சா வேலையை விட்டு தூக்குவதில் நியாயம் இருக்கின்றது.

--------------------------------------------------------------------------------------

எங்கடை சரக்குக்கறிஇவறட்டல்கறி மற்றது தூள்இசம்பல் வகையள் எல்லாம் வேணும் ஆனால் எங்கடை சனத்தின்ரை சத்தம் மட்டும் சரிவரூதில்லை.

----------------------------------------------------------------------------

உண்மைதான் ஆனால் கறிமணத்தால் பக்கத்துவீட்டு வெள்ளை வீட்டை காலிசெய்த சம்பவமும் உண்டு.

என்னுமொரு சம்பவம் உண்டு . மேல் மாடியில் ஒரு கீழ்சாதி என்று நாட்டில் அடயாளப்படுத்தப்பட்ட குடும்பம் வசித்தது. கீழ் மாடியில் மேல்சாதி என்று அடயாளப்படுத்தப்பட்ட குடும்பம் இருந்தது. இருவரும் நாட்டில் தெரிந்தவர்கள். கீழ் மாடியில் இருந்த பெரிசு ஒன்று மேல்மாடியில் இருந்தவரை பார்த்து "நீயெல்லாம் இங்கவந்திட்டாயா? என்ன செய்யிற இங்க என்று பழைய தொழில இழுத்து சிரித்திருக்கின்றார். அதற்கு அவர் அப்பு நீ இப்ப என்ர காலுக்கு கீழ தான் இருக்கிறா. உனக்கு மேலதான் நான் இருக்கிறன் உன்ர நடப்பெல்லாத்தையும் நாட்டில வச்சிரு என்று சொல்லியிருக்கின்றார். கிழவர் அந்த இரவே தனது தம்பியார் வீட்டுக்கு போய்விட்டார். அடுத்தடுத்த நாட்களில் அவர்களின் வீட்டு சாமன்களை அப்புறப்படுத்தினார்கள். சற்று தாமதித்து கூட கிழவர் வீட்டை காலி செய்யவில்லை. இப்படியும் சம்பவம் நடந்திருக்கின்றது. (இது பிரபலமான உண்மைக்கதை முன்பு பதியப்பட்டதோ தெரியாது)

அடுத்து ஒரு தாய்.

கனடாவில் இரண்டு பிள்ளைகள். ஜெர்மனியில் ஒன்று. லண்டனில் ஒன்று. கணவர் இல்லை. இந்த பிள்ளைகளிடம் பந்துபோல் அடிபட்டார் அந்த தாய். யார் பார்ப்பது என்ற பிரச்சனை. கடைசியில் ஐந்து பேரும் பணத்தை பகிர்ந்து கைதடி முதியோர் இல்லத்தில் கொண்டுபோய் சேர்த்தனர். இங்க உள்ள முதியோர் இல்லத்தில் விடவில்லை காரணம் கொளரவப்பிரச்சனை. கடந்த வருடம் ஐந்து பிள்ளைகள் இருந்தும் பிறர் கொள்ளி வைக்க வன்னியில் ஒரு மூலையில் அந்த தாயின் கதை முடிந்தது. இதில கடசிப்பெடியனிடம் அந்த தாய்காக கதைத்து நல்ல வாங்கி கட்டினேன்.

நாம் நம்பிக்கை என்று அடம்பிடிக்கின்றோம். நிற வெறி என்று நிறைய பேசுகின்றோம் எமக்குள் இருக்கும் நிறைய குறைபாடுகளை பூசி மொழுகவும் பார்க்கின்றோம். நியாயமான அனுசரிப்புக்களை கூட மறுக்கின்ற தன்மையும் எங்களிடம் உண்டு. இவைகளை நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி மூக்குத்தி அணியாமல் வந்து மூக்கு மற்றும் வாய் பகுதி முகத்துக்குரிய mask அணியாமல் வேலை செய்தால்.. உணவு மாசடையாதா...??! உணவில் பிற கூறுகள் கலக்காதா...???!

நல்ல வேடிக்கையான கருத்தாடல்.

மனிதனின் மூக்குத் துவாரத்தைச் சுற்றி பிசிர்கள் என்று மயிர்கள் வளர்ந்திருக்கின்றன. உள்ளிளுக்கும் காற்றை சுத்தம் செய்ய. அந்தப் பிசிர்கள் தானாக விழுந்து முளைக்கும். நான் மூச்சை வெளியிடும் போது அவ்வாறு விழும் பிசிர்கள் வெளியில் தள்ளப்படும். நாம் வெளிச்சுவாசம் செய்யும் போது கண்ணுக்குத் தெரியாத சிறிய நீர்த்துளிகள் வெளிவரும். அவை கூட உணவில் படியும். ஆக மூக்குத்தி அணியாமல் தவிர்த்து.. மாஸ்க் போடாவிட்டால், உணவு மாசடைதல் என்ற இந்தப் பிரச்சனை தீரும் என்றில்லை. மூக்குத்தி போட்டால் என்ன விட்டால் என்ன..! மாஸ்க் போட்டால் மூக்குத்திக்குப் பிரச்சனை இல்லையே..! நிச்சயம் மாஸ்க் போட வேண்டும். இதைத்தான் health and safety தொடர்பான வகுப்பில் வேலைக்கு ஆளை எடுத்ததும் சொல்லித் தருகிறார்கள். வீடியோ மூலம் விளக்குகின்றனர்.

ஆக அந்தப் பெண்மணிக்கும் அப்படி ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டிருப்பின்.. அவர் அதைக் கழற்ற மாட்டன் என்று அடம்பிடிக்க வேண்டி எழுந்திருக்குமோ தெரியாது. அப்படி அவர் health and safety வகுப்பின் போது கேட்கப்பட்டிருந்தால்.. அங்கிருந்த மூத்த வழிகாட்டிகளிடம் அவர் மேலதிக விபரத்தைப் பெற்றிருக்கலாம். அதற்கான வாய்ப்பு உண்டு. சில வேலை வழங்குனர்கள்.. குறிப்பாக லண்டனில்.. இவை பற்றிக் கவனிக்கிறதே இல்ல. ஆனால் பிரித்தானியாவின் பிற இடங்களில் இவை முக்கியம். முதலில் குறித்த நிறுவன நடைமுறைகள் பற்றிப் படிப்பிப்பார்கள்.. வீடியோ காட்டுவார்கள்.. அதன் பின்னர் 30 அல்லது 20 கேள்விகள் அடங்கிய கேள்விக் கொத்தை தந்து.. செய்யச் சொல்வார்கள். அதில் 2 தான் தவறு விட முடியும். மிகுதி சரியென்றால் தான் வேலைக்கே எடுப்பார்கள்.

ஆனால் லண்டனில் ஒழுங்காக ஆங்கிலம் பேசக் கூடத் தெரியாதவர்கள் எல்லாம் உணவு தயாரிக்கும் நிலையங்களில் முகவர்கள் மூலம் வேலைக்கு கொண்டு வரப்படுகின்றனர். அவர்களுக்கு இவ்வகைப் பயிற்சிகள் அளிக்கப்பட்டனவோ தெரியாது. அண்மையில் லண்டனில் உள்ள உணவகம் ( உணவகத்தின் பெயர் முகவரி.. தகவல் காப்பின் அடிப்படையில் தவிர்க்கப்படுகிறது) ஒன்றில் கடமை புரியும் ஒருவருக்கு TB கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த உணவகத்தில் சரியான முறையில் health and safety முறைகளைக் கையாண்டார்களா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. நீங்களே பார்க்கலாம்.. தமிழர்கள் நடத்தும் உணவகங்கள் பலவற்றின் நிலையை.

maskjb6.jpg

ஆக.. குறித்த பெண்மணிக்கு அடிப்படை விளக்கங்கள் அளிக்கப்பட்டு.. அதன் கீழ் அவர் மூக்குத்தி அணியக் கூடாது என்று கேட்கப்பட்டிருப்பின்.. அதை அவர் அணிவதைத் தவிர்க்கத்தான் வேண்டும். ஆனால் அவரின் மத அடையாளமாக கருதி.. அதை அவர் குறித்த நிர்வாகத்தின் அனுமதியோடு.. அதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்து அணிய முடியும். தாடி வளர்த்த முஸ்லீம்களுக்கு விசேட வலைபோன்ற ஒரு மாஸ்க் வழங்குவார்கள். அப்படி மூக்கை மூடிக் கட்டவும்.. ஒரு மாஸ்க் உண்டு. அது சுவாசம் பாதையூடான மாசுக் கூறுகள் உணவை வந்தடைவதைத் தடுக்கவும் பயன்படுகிறதை மேலே உள்ள படத்தில் காணலாம். மூக்குத்தி அணியாத ஆண்களும் அணிகின்றனர் அந்த மாஸ்கை. அதை இந்தப் பெண்மணியும் அணியலாம். அதனால்.. உணவு மாசடைதல் தடுக்கப்படும். ஆக மூக்குத்தியைக் கழற்றுவதுதான் உணவு மாசடைதலைத்தடுக்கும் என்ற நிலை.. சரியான நிலைப்பாடல்ல. மாறாக மாஸ்க் அணிவதுதான் பாதுகாப்பானது.

noseringssj1.jpg

மற்றும் படி மூக்குத்தி இந்துக்களால் மட்டுமன்றி இந்துக்களைப் பின்பற்றி.. வெள்ளையராலும் அணியப்படுகிறது. பலர் வேலைத்தலங்களிலும் அணிந்திருக்கின்றனர்.

Edited by nedukkalapoovan

மூக்குத்தி அணிதல் என்பது அழகியல் சார்ந்த விசயம். அதனை இந்துக்களின் மத அடையாளமாக அல்லது கலாசார அடையாளமாக காட்டுவது அவசியமில்லாத வேலை. ஆபிரிக்கர்களிடமும் மூக்குத்தி அணியும் பழக்கம் இருக்கிறது. மூக்குத்தி அணிதலை தமிழரின் பண்பாட்டு அடையாளமாகவும் கொள்ளலாம். அழகியல் சார்ந்த ஒரு விடயத்துக்கு மத ரீதியாக அர்த்தம் கற்பிப்பது இங்கு புதிதல்ல என்றாலும் சுட்டிக்காட்டவேண்டியது கடமை.

இந்து மத சம்பிரதாயப்படி பெண்கள் மூக்குத்தி அணிய வேண்டும்.

இவர்கள் ஏதோ மத சம்பிரதாயங்களை அப்படியே கடைப்பிடிப்பவர்கள் போன்றும், மூக்குத்தி அணிதல் இந்துமதத்தில் கட்டாய மதச் சடங்கு போன்றும் கொதித்தெழுகிறார்கள். என்ன சொல்வதென்றே தெரியவில்லை :lol:

அங்கங்க அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்ட நிலையில் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்காகக் குரல் கொடுக்க இவர்களுக்கு தெரியவில்லை. மூக்குத்திக்காக மூன்றாவது உலகயுத்தம் தொடங்குற முயற்சியோ :lol: இந்தியாவில் எத்தனை மக்கள் தாழ்த்தப்பட்ட நிலையில் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டு வாழ்கிறார்கள். அவர்களை இவர்களுக்குத் தெரியவில்லை. பிரித்தானியாவில் வசதியாக வேலை வாய்ப்புகளுடன் வாழ்கிறவர்களின் மூக்குத்திப் பிரச்சனையும், முக்கல் முனகல் பிரச்சனையும் தான் முக்கியமாய்ப் போய்விட்டது.

இது தொடர்பாக வந்த பிபிசி செய்தி:

Heathrow worker sacked over stud

இதற்கு முன்னரும் இப்படி ஒரு நிகழ்வு சிலுவை அணிந்து சென்றதால் இன்னொருவருக்கு நடந்திருக்கிறது. அது தொடர்பாக பிபிசி செய்தி

BA drops ban on wearing crosses

வலதுகரையில் மேலும் அது தொடர்பான செய்தித் தலைப்புகள் உள்ளன. அவற்றையும் வாசித்து விபரங்கள் தெரிந்துகொள்ளலாம். :lol:

இந்து பெண் என்றா என்ன முஸ்லீம் பெண் என்றா என்ன நிர்வாகத்தின்ட ஒழுக்க நடவடிக்கையை மீறீனா தண்டிக்கபடுவார்கள். :P .............யாழில கூட நிர்வாகத்தின்ட ஒழுக்க விதிகளை மீறினா எச்சரிக்கை வழங்கபடுகிறது ;) ............அதுவோ பிரிடிஸ் ஏயார்வேஸ் அவங்க மட்டும் விடுவாங்களா நல்ல இருக்கு!! :lol:

Edited by Jamuna

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டன்: மூக்குத்தி அணிந்த இந்து பெண்ணுக்கு மீண்டும் வேலை

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 5, 2007

லண்டன்:

மூக்குத்தி அணிந்ததற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்ட இந்துப் பெண்ணுக்கு மீண்டும் இங்கிலாந்து நிறுவனம் வேலை கொடுத்துள்ளது.

லண்டனில் வசித்து வருபவர் அம்ரித் லால்ஜி. இந்துப் பெண்ணான இவர் லண்டன் விமான நிலையத்தில், யூரெஸ்ட் நிறுவனத்தின் சார்பில் வாடிக்கையாளர் விவகார ஊழியர் மற்றும் கிளீனராக பணியாற்றி வந்தார்.

3 மாதங்களுக்கு முன்பு இவர் மூக்குத்தி அணிந்து வேலை பார்த்தாக கூறி வேலையிலிருந்து நீக்கி விட்டது யூரெஸ்ட் நிறுவனம்.

மூக்குத்தி அணிவதால் பாக்டீரியாக்கள் பரவு என்று கூறிய யூரெஸ்ட் நிறுவனம், லால்ஜி தொடர்ந்து மூக்குத்தி அணிந்து வேலைக்கு வந்ததால் அவரை பணியிலிருந்து நீக்கியது.

இதற்கு இங்கிலாந்தில் உள்ள இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து மத சம்பிராதயப்படி, திருமணமான பெண்கள் மூக்குத்தி அணிவது முக்கியமானது. எனவே லால்ஜியை வேலையை விட்டு நீக்கியது தவறு என்று எதிர்ப்பு கிளம்பியது.

எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து லால்ஜியை மீண்டும் வேலைக்கு சேர்த்துள்ளது யூரெஸ்ட் நிறுவனம். இதுகுறித்து அந்த நிறுவனம் கூறுகையில், நிறுவனத்தின் விதிகள் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை முதல் லால்ஜி மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார். அவர் தொடர்ந்து மூக்குத்தி அணியலாம். அவர் சமையலறைப் பகுதியில் வேலை பார்க்கவில்லை என்பதால் அவர் மூக்குத்தி அணிய அனுமதிக்கப்படுகிறது.

சமையலறைப் பணியில் இருப்பவர்கள் மட்டுமே உடலைத் துளைக்கும் வகையிலான நகைகளை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தான் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது குறித்து லால்ஜி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மீடியாக்களின் ஆதரவால்தான் இது சாத்தியமாகியுள்ளது. எனது சங்கமும், இந்துக் கோவில்களும் எனக்கு ஆதரவாக குரல் கொடுத்தன.

கடந்த 3 மாதங்களாக நான் மிகுந்த மன வேதையில் இருந்தேன். தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளேன் என்றார் அவர்.

http://thatstamil.oneindia.in/news/2007/10...reinstated.html

கறுப்பி அக்கா இதை வாசிக்கும் போது பேபிக்கு ஞாபகதிற்கு வந்த பாடல் இது தான்!!

ஜம்மு பேபி சிட்டுவேசன் சோங்-

"இருக்குமிடத்தில் இருந்துவிட்டா எல்லாம் செளக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது"

அப்ப நான் வரட்டா!!

அப்போ பிரச்சனை தீர்ந்து விட்டது!

.............

அதுசரி நம்மவர்கள் பொட்டு வைத்துக்கொண்டு திரிவார்கள். சிலர் வைக்காமல் இருக்கவே மாட்டார்கள்.

எங்காச்சிலும் நீங்கள் வசிக்கும் நாட்டில், வேலை இடத்திலோ எங்குமோ அதற்கு தடை விதித்த அனுபவம் அல்லது சம்பவம் நடந்திருக்கா??????????????

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கத்தக்க முடிவு. :rolleyes:

இந்த ஒரு விடயமே போதும் யாழ் களத்தில் சில பேரின் வாதங்கள் எவ்வளவு தூரம் யதார்த்தத்தை விட்டு விலகி நிற்கிறது என்பதைக் காட்ட. :lol:

செய்தி:-

மூக்குத்தியால் வேலை இழந்த பெண்: மீண்டும் பணியில் சேர்கிறார் லண்டன்: மூக்குத்தி அணிந்ததால் வேலை இழந்த விமான நிலைய பணிப் பெண் அதே விமான நிலையத்தில் மீண்டும் பணியில் சேர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

. லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில், யூரெஸ்ட் என்ற உணவு நிறுவனத்தில் இந்தியாவைச் சேர்ந்த அம்ரித் லால்ஜி என்ற பெண் பணி புரிந்து வந்தார். அவர் மூக்குத்தி அணிந்திருந்தார். விமான நிலைய விதிமுறைப்படி மூக்குத்தி அணிவது குற்றம் என்றும், மூக்குத்தியை நீக்குமாறும் விமான நிலைய நிர்வாகம் கூறியது. "எனக்கு திருமணம் ஆனதிலிருந்து நான் மூக்குத்தி அணிந்துள்ளேன். 25 ஆண்டுகளாக அணிந்திருக்கும் மூக்குத்தியை கழற்ற மாட்டேன். கண்ணுக்குத் தெரியாத வகையில் மிகவும் சிறியதாக இருக்கும் இந்த மூக்குத்தியால் பணியில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை' என்று கூறி, அம்ரித் லால்ஜியும் பலமுறை வேண்டுகோள் விடுத்தார். இதற்கு செவி சாய்க்காத நிர்வாகத்தினர், அவரை வேலையிலிருந்து நீக்கினர். இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பணியிலிருந்து நீக்கி மூன்று மாதங்கள் ஆன நிலையில், மீண்டும் பணியில் சேருமாறு அதே நிறுவனம் லால்ஜிக்கு அழைப்பு விடுத்தது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அம்ரித் லால்ஜி, ""பத்திரிகைகள், ஊழியர் சங்கங்கள் மற்றும் நான் சார்ந்துள்ள மதக் கோவில்களிடமிருந்து எனக்குப் பேராதரவு கிடைத்ததால் எனக்கு வேலை திரும்பக் கிடைத்துள்ளது. என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்க வேண்டிய அவசியமே இல்லை. எனினும், நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி நான் பணியில் மீண்டும் சேர்கிறேன். நான் சமையல் அறைப் பணியாளர் இல்லை என்பதால் என்னை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்வதாக நிறுவனம் கூறியுள்ளது,'' என்றார்.

யூரெஸ்ட் நிறுவனம்: ""முகத்தில் எந்த துவாரமும் இருக்கக் கூடாது என்பது எங்கள் நிறுவன சமையல் அறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான விதி. அது சமையலறைக்கு மட்டுமே பொருந்தும் என்பதை விதிமுறைப் புத்தகத்தில் எழுத்துப்பூர்வமாக குறிப்பிடாததால், அனைத்து ஊழியர்களுக்கும் இது பொருந்தும் என்று தவறாகப் புரிந்து கொண்டோம். இது நியாயமில்லை என்று உணர்ந்து அவரை மீண்டும் பணியில் சேர்க்கிறோம்,'' என்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, நாடியா எவீடா என்ற பெண், கழுத்தில் சிலுவைச் சின்ன டாலர் அணிந்திருந்தார் என்ற காரணத்திற்காக பணியிலிருந்து நீக்கப்பட்டார்; பல தரப்பினரிடமிருந்தும் கிளம்பிய எதிர்ப்பு காரணமாக மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்.

-தினமலர்-

யூரெஸ்ட் நிறுவனம்: ""முகத்தில் எந்த துவாரமும் இருக்கக் கூடாது என்பது எங்கள் நிறுவன சமையல் அறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான விதி.

அது சமையலறைக்கு மட்டுமே பொருந்தும் என்பதை விதிமுறைப் புத்தகத்தில் எழுத்துப்பூர்வமாக குறிப்பிடாததால், அனைத்து ஊழியர்களுக்கும் இது பொருந்தும் என்று தவறாகப் புரிந்து கொண்டோம்.

இது நியாயமில்லை என்று உணர்ந்து அவரை மீண்டும் பணியில் சேர்க்கிறோம்,'' என்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, நாடியா எவீடா என்ற பெண், கழுத்தில் சிலுவைச் சின்ன டாலர் அணிந்திருந்தார் என்ற காரணத்திற்காக பணியிலிருந்து நீக்கப்பட்டார்; பல தரப்பினரிடமிருந்தும் கிளம்பிய எதிர்ப்பு காரணமாக மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்.

இந்த ஒரு ஓட்டையே போதும்

அவர் தரப்பு வக்கீலின் வாதங்களை முன் வைத்து வெல்வதற்கு....................

மகிழ்வாக இருக்கிறது.

வாழ்த்துகள்

மேலைத் தேச நாட்டவர்

எம்மவர் போல் போராடுவது இல்லை.

சட்டத்தில் இருக்கிறதா என்று ஏற்றுக் கொண்டு விடுவார்கள்.

எம்மவர் கில்லாடிகள்.

Edited by AJeevan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.