Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் – நாடாளுமன்றில் சரத் வீரசேகர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தை காப்பாற்ற புதிய விவகாரங்களை பேசும் வீரசேகர!- அநுர குற்றச்சாட்டு

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் – நாடாளுமன்றில் சரத் வீரசேகர

குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதவான் அனுமதி வழங்கியமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இன்று நாடாளுமன்றில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

குருந்தூர் விகாரைக்கு சென்ற விகாராதிபதியை, அரசியல்வாதிகளுடன் வருகைத் தந்திருந்த சில காடையர்கள் தகாத வார்தைகளால் பேசி, அங்கிருந்து வெளியேற்றியமையானது பௌத்தர்களின் மனங்களை புன்படுத்தும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளால் இனங்களுக்கிடையில் மோதல் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது என்றும்
அப்படி நேர்ந்தால், அந்த கும்பலும் அவர்களை அங்கு அழைத்துவந்த அரசியல்வாதிகளும், முல்லைத்தீவு நீதிபதியுமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவருக்கு உரிய சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சும், நீதி சேவைகள் ஆணைக்குழுவும் இதுதொடர்பாக கவனம் செலுத்தி, அவரை அங்கிருந்து இடம்மாற்றி வேறு ஒருவரை நீதிபதியாக நியமிக்க வேண்டும் எனவும் சரத் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

https://athavannews.com/2023/1346319

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் கருத்துக்கு யாராவது சிங்களவர்கள் எதிர்க்கருத்து வைக்கிறார்களா என பார்த்தால் இல்லை என்றே சொல்லாம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

இவரின் கருத்துக்கு யாராவது சிங்களவர்கள் எதிர்க்கருத்து வைக்கிறார்களா என பார்த்தால் இல்லை என்றே சொல்லாம்.

அங்கு உள்ளதே ஒரு இனவாத கும்பல். அவர்களிடம் இருந்து எப்படி நன்மையானதை எதிர்பார்க்கலாம். சட்டியில் உள்ளதுதான் அகப்பையில் வரும். ஸ்ரீலங்காவிலிருந்து எதாவது நன்மை வருமோ?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

இவரின் கருத்துக்கு யாராவது சிங்களவர்கள் எதிர்க்கருத்து வைக்கிறார்களா என பார்த்தால் இல்லை என்றே சொல்லாம்.

இல்லை கருத்துச்சொன்னவர் ஒரு இனவாதம் கலந்த மனநோயாளி என்பதை உணர்ந்து வைத்துள்ளதால். இந்த மனநோயாளிக்கு ஒன்னொரு மனநோயாளியாற்தான் கருத்து எழுத முடியும். அவர்களும் ஒரு இன, மத கலவரத்தை வலிந்து ஏற்படுத்தி அரசியல் செய்ய இவர்களை பயன்டுத்துகிறார்கள். கனடா பிரதமருக்கு இங்கு இனப்படுகொலை நடக்கவில்லை என்று கண்டித்துக்கொண்டு, இனக்கலவரம் வெடிக்கும் என எச்சரிப்பவரையும், தூண்டி இழுப்பவரையும் வேறு எப்படி அழைக்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி; பௌத்த சிங்களவர்களின் பொறுமை கோழைத்தனமல்ல - சரத் வீரசேகர

23 AUG, 2023 | 11:29 AM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) 

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி. இவ்வாறானவரால் எவ்வாறு சரியான முறையில் செயற்பட முடியும். ஆகவே முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு பிறிதொரு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்பதை நீதியமைச்சிடம் வலியுறுத்துகிறேன். குருந்தூர் மலையில் கை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கு எல்லையுண்டு. அதை கோழைத்தனம் என்று கருத வேண்டாம் என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (22)  இடம்பெற்ற சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

தொல்பொருள் விவகாரம் நாட்டின் தற்போதைய பிரதான தேசிய பிரச்சினையாக உள்ளது. தொல்பொருள் எமது உரிமை. அத்துடன் தொல்பொருள் எமது தேசிய அடையாளம். அந்த வகையான தேசிய அடையாளத்தை அழிக்க முயற்சிப்பது தேசத்துரோகச் செயற்பாடாகும்.

குருந்தூர் மலையில் பொங்கல் பொங்கும் இந்து மத வழிபாட்டில் ஈடுபட முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். தொல்பொருள் கட்டளைச்சட்டத்துக்கு எதிராகவே முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி செயற்படுகிறார். தொல்பொருள் கட்டளைசட்டத்தில் பௌத்தர்களின் மனங்களை பாதிக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க கூடாது. அவ்வாறான செயற்பாடுகள் தண்டனைக்குரிய குற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான தெளிவான கட்டளைச்சட்டங்கள் காணப்படுகின்றன நிலையில் நீதிபதி தவறான கட்டளைகளை பிறப்பித்துள்ளமை பாரிய பிரச்சினைக்குரியதாக உள்ளது. கடந்த 18 ஆம் திகதி குருந்தூர் மலைக்கு தமிழ் அரசியல்வாதிகளுடன் வருகை தந்த குண்டர்கள் அப்பகுதியில் இருந்த குருந்தூர் மலையின் விகாராதிபதி சாந்த போதி  தேரரை தகாத வார்த்தைகளால் தூற்றி,வெளியேற்றியது முறையற்றது. இவ்வாறான செயற்பாடுகளினால் பௌத்தர்களின் மனம் பாதிக்கப்படாதா ?

நாங்கள் பொறுமையாக இருக்கிறோம், அந்த பொறுமையை கோழைத்தனம் என்று கருத கூடாது என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்கிறோம். தூர நோக்கமற்ற வகையில் பிறப்பிக்கப்படும் கட்டளைகளினால் இனவாத முரண்பாடுகள் தோற்றம் பெறும். அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் அதற்கு  பொறுப்பான நீதிபதி, தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புக்கூற வேண்டும்.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி என்று குறிப்பிடப்படுகிறது. நீதிபதியின் மனைவி  இந்த நீதிபதி ஒரு மனநோயாளி ஆகவே அவரை தான் மனநோய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக அவர் முல்லைத்தீவு பொலிஸாருக்கு குறிப்பிட்டுள்ளார். ஆகவே நீதிபதி மனநோயாளி என்றால் அவர் குணமடைய நாங்களும் உதவி  புரிவோம்.

மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் எவ்வாறு நீதிபதியாக செயற்பட முடியும் என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது. இவர் பௌத்தர்களுக்கு இடமளிக்கமாட்டார் ஆனால் பொங்கல் பொங்குவதற்கு இடமளிப்பார். சரியான தீர்மானத்தை இந்த நீதிபதியால் எடுக்க முடியாது. ஏனெனில் அவர் ஒரு மனநோயாளி ஆகவே முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு பிறிதொரு நீதிபதி ஒருவரை நியமிக்குமாறு நீதிமைச்சரிடமும், நீதிச் சேவை ஆணைக்குழுவிடமும் வலியுறுத்துகிறேன்.

இனவாத கொள்கையற்ற தமிழ் நீதிபதிகள் பலர் நாட்டில் உள்ளார்கள். ஆகவே அவர்களை முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டும். யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தின் நீதிபதி  இளஞ்செழியனின் உயிரை சிங்கள பௌத்த பொலிஸார் பாதுகாத்தார். சரத் ஹேமசந்திர தனது உயிரை கொடுத்து நீதிபதி இளஞ்செழியனை பாதுகாத்தார். நீதிபதி இளஞ்செழியன்  அந்த பொலிஸாரின் பிள்ளைகளின் கல்வி செலவுகளை முழுமையாக பொறுப்பேற்று அவர்களுக்கு இன்றும் உதவி செய்கிறார்.

எம்மத்தியில் இனவாதம், மதவாதம் கிடையாது. இல்லாத முரண்பாடுகளை தோற்றுவிக்க வேண்டாம் என்பதை தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்டுக் கொள்கிறேன். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் விடுதலை புலிகள் அமைப்பை போசித்தார். இறுதியில் புலிகள் அவரையே படுகொலை செய்தார்கள். அமிர்தலிங்கத்தின் மனைவி மற்றும் இரு பிள்ளைகளை சிங்கள பௌத்த பாதுகாவலர்களே பாதுகாத்தார்கள்.

சிங்கள இனத்துக்கு எதிராக செயற்படுபவர்களை கடுமையாக விமர்சிப்பவர்களை சிங்கள பௌத்தர்களே பாதுகாத்துள்ளார்கள். இவ்வாறான இனம் உலகில் எங்கும் இருக்காது. சிங்களவர்களுக்கும், பௌத்த மரபுரிமைகளுக்கும் எதிராக செயற்படும்  தமிழ் அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்கு சிங்கள பௌத்தர்களே உள்ளார்கள். நாட்டின் நல்லிணக்கம் என்பதொன்று இல்லையென்றால் எவ்வாறு இவர்களால் இருக்க முடியும்.

குருந்தூர் மலையில் கை வைப்பதை அடிப்படைவாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு. தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். எனது உரைக்கு பின்னர் எனக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் செயற்படுவதை விடுத்து உண்மையான பிரச்சினைக்கு தீர்வு காண பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/162983

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

சிங்கள இனத்துக்கு எதிராக செயற்படுபவர்களை கடுமையாக விமர்சிப்பவர்களை சிங்கள பௌத்தர்களே பாதுகாத்துள்ளார்கள். இவ்வாறான இனம் உலகில் எங்கும் இருக்காது.

அதைத்தான் உலகம் பாத்து வியந்து கண்டனங்களை தெரிவிக்கிறது. அதை தாங்கிக்கொள்ள முடியாமல் எச்சரிக்கிறீர்கள். உண்மையான மனநோயாளிக்கு தான் மனநோயாளி என்று தெரியாது, மற்றவர்களை மனநோயாளி என்று சொல்லி சண்டைக்கிழுக்கும்.

5 hours ago, ஏராளன் said:

நீதிபதி இளஞ்செழியன்  அந்த பொலிஸாரின் பிள்ளைகளின் கல்வி செலவுகளை முழுமையாக பொறுப்பேற்று அவர்களுக்கு இன்றும் உதவி செய்கிறார்.

சிங்களத்துக்காக எத்தனை தமிழ் இராணுவம், போலீஸ் உயிரை துறந்தனர். அவர்களின் பிள்ளைகளை இவர்கள் தத்தெடுக்க வேண்டாம், நினைவாவது கூருகிறார்களா? 

5 hours ago, ஏராளன் said:

எம்மத்தியில் இனவாதம், மதவாதம் கிடையாது.

ஹஹ்ஹா.....அதனாற்தான் கொழும்பிலிருந்து வருகிறார்கள் சண்டைக்கு. யாரோ இளஞ்செழியனை நினைவூட்டிபோட்டார்கள் இவருக்கு. இளஞ்செழியனை நீதிபதியாக்கினால் விகாரையை தத்தெடுப்பார் என்று நினைக்கிறாரோ?  உது உப்பிடியே கத்தி கத்தி நாவறண்டு படுக்க வேண்டியதுதான், அப்போ கைது செய்யப்படலாம். 

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

நீதிபதி ஒரு மனநோயாளி

IMG-4382.jpg

  • கருத்துக்கள உறவுகள்
On 22/8/2023 at 03:53, தமிழ் சிறி said:

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் – நாடாளுமன்றில் சரத் வீரசேகர

இப்படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கையில் இருப்பதற்காக முழு இலங்கையுமே வெட்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கையில் இருப்பதற்காக முழு இலங்கையுமே வெட்கப்பட வேண்டும்.

ஏன்? சிங்களவர் தான் வெட்கப்படவேணும். தமிழர்கள், உள்ளூர மகிழ்ச்சி அடைய வேணும்.... இப்படி ஆட்கள் எமக்கு செய்யும் பேருதவி என்றும் நன்றிக்குரியது. 😁 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

ஏன்? சிங்களவர் தான் வெட்கப்படவேணும். தமிழர்கள், உள்ளூர மகிழ்ச்சி அடைய வேணும்.... இப்படி ஆட்கள் எமக்கு செய்யும் பேருதவி என்றும் நன்றிக்குரியது. 😁 🤣

நாதம் இவர்களது செய்திகள் தனியே தமிழில் இல்லாமல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியாருக்கும் சென்றடைய வேண்டும்.
நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலப்பத்திரிகைகள் வெளியிடாமல் மறைத்தாலும், அதையும் தாண்டி வெளீல போகுதே!!

https://www.colombotelegraph.com/index.php/pyromaniacs-on-the-march/

இதை எழுதியவர் சிறந்த பத்திரிகையாளர்!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சரத் வீரசேகரவின் பாராளுமன்ற உரையை கண்டித்து முல்லைத்தீவு சட்டத்தரணிகள் போராட்டத்திற்கு முஸ்தீபு

Published By: VISHNU

24 AUG, 2023 | 09:22 PM
image
 

நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்த முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர  22.08.2023 ஆம் திகதி அன்று முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும், நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையிலும் பாராளுமன்றில் ஆற்றிய உரையை கண்டித்தும், எதிர்ப்புத் தெரிவித்தும் கண்டன போராட்டம் ஒன்றினை நாளை 25.08.2023 (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்த இன்றையதினம் (24.08.2023) முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்க கூட்டத்தில்  ஏகமனதாக தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஏனைய கிளைச்சங்கங்களும் தத்தமது நீதிமன்றங்களில் குறித்த அடையாள கண்டனப் போராட்டத்தினை மேற்கொள்ளுமாறு நட்புரிமையுடன் கேட்டு கொள்வதாக முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/163125

  • கருத்துக்கள உறவுகள்

சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக சட்டத்தரணிகள் கண்டன போராட்டம்

Published By: VISHNU

25 AUG, 2023 | 11:45 AM
image
 

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டன போராட்டம் ஒன்று சட்டத்தரணிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

IMG-20230825-WA0020.jpg

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர 22.08.2023 ஆம் திகதி அன்று முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும், நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையில் பாராளுமன்றில் ஆற்றிய உரையை கண்டித்தும், எதிர்ப்புத் தெரிவித்தும் குறித்த கண்டன போராட்டம் இன்று 25.08.2023 காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டனப் போராட்டமானது இடம்பெற்றிருந்தது.

IMG-20230825-WA0016.jpg

குறித்த போராட்டத்தில் கௌரவ நீதிபதிகளின் கடமையில் தலையிடாதே,  சுயாதீனமான நீதித்துறையின் செயற்பாட்டை உறுதி செய்யுங்கள், நீதித்துறையின் சுதந்திரத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தாதே, பாராளுமன்ற சிறப்புரிமையை துஷ்பிரயோகம் செய்யாதே , கௌரவ நீதிபதிகளின் கட்டளைகளுக்கு மதிப்பளி போன்ற பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

IMG-20230825-WA0017.jpg

IMG-20230825-WA0014.jpg

IMG-20230825-WA0015.jpg

IMG-20230825-WA0013.jpg

IMG-20230825-WA0009.jpg

IMG-20230825-WA0005.jpg

IMG-20230825-WA0007.jpg

IMG-20230825-WA0004.jpg

IMG-20230825-WA0003.jpg

https://www.virakesari.lk/article/163159

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டமே எமது மக்களுக்கு வாழ்க்கை ஆகி விட்டது.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்ற சுயாதீனத்துவத்தைத் திட்டமிட்டுக் கட்டுப்படுத்தும் செயல் - பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் குறித்து சட்டத்தரணிகள் கூட்டிணைவு கடும் அதிருப்தி

Published By: VISHNU

14 SEP, 2023 | 08:34 PM
image
 

(நா.தனுஜா)

நீதிபதிகளால் அவர்களுக்காகப் பேசமுடியாது என்பதை நன்கு அறிந்துகொண்டு, பாராளுமன்ற சிறப்புரிமை என்ற போர்வையின்கீழ் நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற செயற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை வெளியிடும் போக்கு நீதிமன்ற சுயாதீனத்துவத்தை அவமதிக்கும் செயலாகும் என்று சட்டத்தரணிகள் கூட்டிணைவு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

சட்டத்தரணிகள் கூட்டிணைவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரின்ஸி அர்ஸகுலரத்ன, உபுல் ஜயசூரிய, ஜயம்பதி விக்ரமரத்ன, ஜெஃப்ரி அழகரத்னம், தினால் பிலிப்ஸ் மற்றும் சாலிய பீரிஸ் ஆகியோர் கையெழுத்திட்டு வியாழக்கிழமை (14) வெளியிட்டுள்ள அறிக்கையின் ஊடாகவே மேற்கண்டவாறு அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. 

'நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள குறிப்பிட்ட சில வழக்குகளுடன் தொடர்புடைய நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற செயற்பாடுகளை அண்மையில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கோள் காண்பித்த சம்பவங்கள் குறித்து நாம் மிகுந்த கரிசனையடைகின்றோம்' என்று சட்டத்தரணிகள் கூட்டிணைவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த 8 ஆம் திகதி தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் ஹொரணை நீதிமன்ற அதிகாரி தொடர்பில் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்து, கடந்த மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவினால் முல்லைத்தீவு நீதிவான் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்து மற்றும் நீதிபதியொருவரின் பெயரைக் குறிப்பிட்டு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வெளியிட்ட கருத்து என்பனவற்றை அவ்வறிக்கையில் மேற்கோள்காண்பித்துள்ள அக்கூட்டிணைவு உறுப்பினர்கள், உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து சம்பந்தப்பட்ட நீதிபதிகளை பாராளுமன்றத்துக்கு அழைத்து கேள்வி எழுப்பவேண்டும் என விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் பற்றியும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

'இச்சம்பவங்கள் தமது கடமையை சுதந்திரமானதும், சுயாதீனமானதுமான முறையில் முன்னெடுப்பதற்கு நீதிமன்றக்கட்டமைப்பு கொண்டிருக்கும் இயலுமையைத் திட்டமிட்டவகையில் கட்டுப்படுத்தும் போக்கு மேலோங்கிவருவதையே புலப்படுத்துகின்றன. நீதிபதிகளால் அவர்களுக்காகப் பேசமுடியாது என்பதை நன்கு அறிந்துகொண்டு, பாராளுமன்ற சிறப்புரிமை என்ற போர்வையின்கீழ் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது நீதிமன்ற சுயாதீனத்துவத்தை அவமதிக்கும் செயலாகும்' என்றும் சட்டத்தரணிகள் கூட்டிணைவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கு அவசியமான நீதிக்கட்டமைப்பின் சுதந்திரத்தை வலுப்படுத்துவதற்குரிய அனைத்துத் தலையீடுகளையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்று சட்டத்தரணிகள் கூட்டிணைவு உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

https://www.virakesari.lk/article/164602

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.