Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று ஆரம்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று ஆரம்பம்!

thilleepan-150923-seithy.jpg

தமிழ் மக்களின் விடிவுக்காக உண்ணா நோன்பிருந்து, தன்னுயிரை தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவு நாட்கள் இன்று ஆரம்பமாகவுள்ளது, தமிழர் தேசமெங்கும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட வளகத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முதலாம் நாள் நிகழ்வு இன்று நண்பகல் 12 .30 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.
 

https://akkinikkunchu.com/?p=255795

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவு தினம் யாழ். பல்கலைக்கழகத்தில்

Published By: VISHNU

15 SEP, 2023 | 11:35 AM
image
 

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவு தினம், வெள்ளிக்கிழமை (15) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட வளாகத்தில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நினைவேந்தல் இடம்பெறவுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தியாகதீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி சாவைத் தழுவிக் கொண்டார்.

https://www.virakesari.lk/article/164620

  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு!

Published By: VISHNU

15 SEP, 2023 | 11:42 AM
image
 

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலானது நள்ளிரவு 12 மணியளவில், நல்லூருக்கு அருகாமையில் உள்ள தியாக தீபத்தின் நினைவேந்தல் தூபியடியில் நடைபெற்றது.

IMG-20230915-WA0029.jpg

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

IMG-20230915-WA0026.jpg

ஊர்திப் பவனியானது அம்பாறையில் இருந்து ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த நினைவேந்தல் ஊர்தியானது தியாக தீபத்தின் தூபியடியில் இருந்து அம்பாறை நோக்கி புறப்படுகிறது.

 

IMG-20230915-WA0024.jpg

IMG-20230915-WA0019.jpg

IMG-20230915-WA0025.jpg

IMG-20230915-WA0007.jpg

IMG-20230915-WA0004.jpg

IMG-20230915-WA0006.jpg

IMG-20230915-WA0005.jpg

https://www.virakesari.lk/article/164622

  • கருத்துக்கள உறவுகள்

தியாகதீபம் திலீபனுக்கு கிளிநொச்சியில் நினைவேந்தல்

15 SEP, 2023 | 03:50 PM
image

( எம்.நியூட்டன்)

தியாகதீபம் திலீபனுக்கு கிளிநொச்சியில் நினைவேந்தல் நடைபெற்றது. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

ஊர்காவற் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

என்ற ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபனின் 36வது ஆண்டு நினைவேந்தலின் முதல்நாள் நிகழ்வு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், இன்று வெள்ளிக்கிழமை (15) நடைபெற்றது.

அக்கராயன் அம்பலப்பெருமாள் சந்தியில் அமைந்துள்ள, அக்கிராச மன்னனின் உருவச்சிலை முன்றலில், கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள்  உறுப்பினர் சுந்தரமூர்த்தி தயாபரன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் மதகுருமார், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பிரதேச சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், அக்கராயன், கந்தபுரம் பிரதேச சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

anjali-2.jpg

anjali-3.jpg

anjali-4.jpg

https://www.virakesari.lk/article/164654

  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவு தினம் ஆரம்பம்

Published By: VISHNU

15 SEP, 2023 | 05:00 PM
image
 

தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல் வெள்ளிக்கிழமை (15) விசுவமடு தேராவில் புதிய நிலா விளையாட்டு மைதானத்தில் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகியது. 

 

FB_IMG_1694764324788.jpg

தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பை ஆரம்பித்த நேரமான காலை 9.45 மணிக்கு மாவீரரின் பெற்றோரினால் பொதுச் சுடரேற்றலுடன் ஆரம்பமானது.

FB_IMG_1694764327703.jpg

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முல்லைத்தீவு மாவட்ட சமூக செயற்பாட்டாளர்களும் பொது மக்களும்  அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

FB_IMG_1694764331156.jpg

FB_IMG_1694764347122.jpg

FB_IMG_1694764362018.jpg

FB_IMG_1694764351049.jpg

FB_IMG_1694764358940.jpg

IMG-20230915-WA0041.jpg

https://www.virakesari.lk/article/164663

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் நினைவு ஊர்தியின் நல்லூர் நோக்கிய பவனி : நேற்று அம்பாறையில் மக்கள் அஞ்சலி! 

16 SEP, 2023 | 02:32 PM
image
 

'தியாக தீபம்' திலீபனின் 36வது நினைவேந்தலை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பொத்துவில் தொடக்கம் நல்லூர் வரையான திலீபன் நினைவு ஊர்திப் பயணம் பொத்துவில் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினது இளைஞர் அணியின் அம்பாறை மாவட்டத் தலைவர் துசானந்தன் ஏற்பாட்டில் தியாகத் தீபம் திலீபன் நினைவு ஊர்தியின் யாழ்ப்பாணம், நல்லூரை நோக்கிய பயணத்தின் முதல் நாளான நேற்று ஊர்தியானது அம்பாறையின் பொத்துவில் முதல் பெரிய நீலாவணை வரையான பிரதேசங்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை (15) பவனியாக சென்றது. 

இதன்போது பொதுமக்கள் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு நேற்று அஞ்சலி செலுத்தினர். 

sihan__17_.jpeg

இந்நிலையில், நேற்று மாலை அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்பு திரௌபதை ஆலயத்தை சென்றடைந்ததன் பின்னர், மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வோடு அம்பாறை மாவட்ட நேற்றைய ஊர்திப் பவனி நிறைவடைந்தது. 

இதன்போது குறித்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன், கட்சியின் முக்கியஸ்தர் சட்டத்தரணி காண்டீபன், தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி, இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நீதி, அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவது, பௌத்த சிங்களமயமாக்கலை நிறுத்துவது போன்ற தமிழர்களின் அபிலாசைகளை முன்வைத்து 'திலீபன் வழியில் வருகின்றோம்' என்ற தொனிப்பொருளில் இந்த ஊர்திப் பவனி இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், பொத்துவில் பகுதியில் பயணத்தை ஆரம்பித்த இந்நினைவு ஊர்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களின் ஊடாகவும் பயணித்து, இறுதியில் யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவுத்தூபியை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

sxc__5_.jpg

sxc__3_.jpg

sxc__1_.jpg

sihan__18_.jpeg

sihan__13_.jpeg

https://www.virakesari.lk/article/164711

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல் முன்னெடுப்பு!

news-06-2.jpg

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் 6ஆம் நாள் நினைவேந்தல் இன்று பல்கலைக்கழக பிரதான வளாக பொதுத் தூபியில் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஆளணியினர், ஊடகவியலாளர் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/273847

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவில் தியாக தீபத்தின் திருவுருவப் படத்தினை ஏந்திய ஊர்திப் பவனி

23 SEP, 2023 | 03:38 PM
image
 

(பு.கஜிந்தன்)

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய வாகன ஊர்த்தி பவனி புங்குடுதீவில் இன்று சனிக்கிழமை (23) முன்னெடுக்கப்பட்டது.

புங்குடுதீவு குறிகட்டுவான் பகுதியில் ஆரம்பித்த மேற்படி நினைவேந்தல் ஊர்த்தியானது புங்குடுதீவில் பல பகுதிகளிற்கும் பவனியாகச் சென்றது.

இதன் போது மக்கள் தியாக தீபம்  திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

urvalam-2.jpg

urvalam-3.jpg

https://www.virakesari.lk/article/165276

  • கருத்துக்கள உறவுகள்

தியாகதீபம் திலீபனுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அஞ்சலி

24 SEP, 2023 | 01:17 PM
image
 

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று இன்று (24) அஞ்சலி செலுத்தினார். 

யாழ்ப்பாணத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்துள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மாலை வேளை யாழ்ப்பாணத்தை சேர்ந்த கலைஞர்களை யாழில் உள்ள விருந்தினர் விடுதியில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். 

சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாட்சி சந்தோஷ் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியை சேர்ந்தவர் என்பதும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சந்தோஷ் நாராயணன் பிரம்மாண்ட இசை நிகழ்வொன்றை நடத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக செப்டெம்பர் 30ஆம் திகதி சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

எனினும், திகதியில் மாற்றம் செய்யப்பட்டு, எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் மாலை 4 மணிக்கு சந்தோஷ் நாராயணன் பங்கேற்கும் 'யாழ் கானம்' இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

download__1_.jpg

download.jpg

https://www.virakesari.lk/article/165316

  • கருத்துக்கள உறவுகள்

381578546_1439188593480632_961075539075800717_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=49d041&_nc_ohc=sT_qYAUXUH8AX9bYw07&_nc_ht=scontent.flhr1-2.fna&oh=00_AfAsnfc-9mx2MWb2fEs_-N__DJV7atQke4o-AFbVgLxjYA&oe=65157EEA

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, புலவர் said:

381578546_1439188593480632_961075539075800717_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=49d041&_nc_ohc=sT_qYAUXUH8AX9bYw07&_nc_ht=scontent.flhr1-2.fna&oh=00_AfAsnfc-9mx2MWb2fEs_-N__DJV7atQke4o-AFbVgLxjYA&oe=65157EEA

நல்ல விடயம்.

இணைப்புக்கு நன்றி புலவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகிம்சைப்போராளி தியாக தீபம் திலீபன் நினைவாக ஓர் பாடல்..

 

  • கருத்துக்கள உறவுகள்

தியாக திபம் திலீபனின் 36ஆவது நினை வேந்தலின் இறுதி நாள் நிகழ்வுகள்

Published By: VISHNU

25 SEP, 2023 | 09:58 PM
image
 

தியாக திபம் திலீபனின் 36ஆவது நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (26) உணர்வெழுச்சியுடன் இடம்பெறவுள்ளன.

தமிழ் மக்களுக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து உண்ணா நோன்பிருந்து உயர்நீத்த தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

அதன் பிரகாரம் செவ்வாய்க்கிழமை (26) காலை 7.30 மணிக்கு ஊரெழுவிலிருந்து கிட்டு பூங்கா நோக்கி ஊர்திப் பேரணி ஆரம்பமாகி தொடர்ந்து காலை 8.00 மணிக்கு கிட்டு பூங்காவிலிருந்து நல்லூர் நினைவுத்தூபி நோக்கி நடைபவனி ஆரம்பமாகும்.

அதேவேளை தியாக தீபம் உண்ணா விரதமிருந்து உயிர்நீத்த நேரமான 10.48க்கு அவர் உண்ணாவிரதமிருந்த நல்லூரின் வீதியிலும் நினைவுத்தூபியிலும் சமநேரத்தில் மாவீரர்களின் பெற்றோரால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து மலர் வணக்கம் நடைபெறும் எனவும் அதன் பிரகாரம் இந்த நினைவேந்தலில் கட்சி பேதமின்றி அனைவரும் பங்குகொண்டு தியாக தீபத்தினை நினைவேந்திடு மாறும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக நாளை காலை 7 மணி தொடக்கம் மதியம் 12 மணிவரை பருத்தித்துறை வீதி மூடப்படும். பயணம் செய்பவர்கள் மாற்றுவழிகளை பயன்படுத்தவும் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/165414

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரில் கொட்டும் மழையின் மத்தியில் தியாக தீபத்தின் நினைவேந்தல்!

Published By: VISHNU

26 SEP, 2023 | 01:39 PM
image
 

 

தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (26) கொட்டும் மழைக்கும் மத்தியில் இடம்பெற்றது.

1__17_.jpg

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், தியாக தீபத்தின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு, மூன்று மாவீரர்களின் தாயும் , நாட்டு பற்றாளரின் மனைவியுமான திருமதி வேல்முருகன் பொதுச்சுடர் ஏற்றினார். அதனை தொடர்ந்து தியாக தீபத்தின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1__14_.jpg

அதேவேளை சம நேரத்தில் நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும், நினைவிடத்திற்கு அருகில் உள்ள திலீபனின் ஆவண கண்காட்சி கூடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. 

1__16_.jpg

அத்துடன் இரண்டு தூக்கு காவடிகள் நினைவிடத்திற்கு வந்ததுடன், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நினைவிடத்திற்கு 06க்கும் மேற்பட்ட ஊர்தி பவனிகள் வந்திருந்தன.

1__11_.jpg

நினைவு சுடர் ஏற்றுவதற்கு சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பாக கடும் மழை பொழிய ஆரம்பித்த போதிலும் , மழையையும் பொருட்படுத்தாது , நினைவிடத்தில் கூடி இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர். 

1__13_.jpg

1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தியாக தீபம் திலீபன் ஐந்தம்ச கோரிக்கைகளை முன் வைத்து நல்லூர் ஆலய வீதியில் நீராகாரம் இன்றி உண்ணாவிரதம் இருந்தார்.

1__12_.jpg

அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் 12 நாட்களில் அவரது உயிர் பிரிந்தது.

1__7_.jpg

1__9_.jpg

1__8_.jpg

1__5_.jpg

1__6_.jpg

1__4_.jpg

1__1_.jpg

1__2_.jpg

https://www.virakesari.lk/article/165477

  • கருத்துக்கள உறவுகள்

Image

  • கருத்துக்கள உறவுகள்+

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.