Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

🤣 

பிகு

மொத்தமாக ஒட்டு மொத்த சாப்பாட்டையே தடை செய்து மாணவர்களை பட்டினி போட்டால்…நாய், புறா, நரி, சிங்கம் எதுவும் வராது🤣

ஆனால் பேய்கள் வருமே? 😂

  • Replies 161
  • Views 11.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

அட, நான் வடமராட்சிக்காரன் எண்டெல்லே நிணைச்சன்.

உது மேற்கோள். 

ஜி வடமராட்சித்தான்.

4 hours ago, விசுகு said:

ஏன் ல சப்பலில் 60வீதம் என்பதை குறிப்பிடாததை இட்டு கண்டனங்களை தெரிவிக்கிறேன்.😂

புங்குடுதீவில், வேலணையில், கரம்பொனில் 100% எண்டும் எழுதேல்லத்தானே?

லா சப்பல் அந்த வகையில் வரும் 🤣. (மிச்ச 40% லீசில் விட்டிருக்கு).

  • கருத்துக்கள உறவுகள்

என் புள்ள இங்க படிச்சா டெய்லி மாட்டிறைச்சியும் சோறும் வேணுமெண்டு கட்டிகுடுத்து விட்டிருப்பன்., பள்ளிக்குடத்தில ஏதும் கதைச்சா கோட்டில மனித உரிமை மீறல் கேஸ் போட்டிருப்பன்.. 

என் உணவு என் உரிமை..

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

என் புள்ள இங்க படிச்சா டெய்லி மாட்டிறைச்சியும் சோறும் வேணுமெண்டு கட்டிகுடுத்து விட்டிருப்பன்., பள்ளிக்குடத்தில ஏதும் கதைச்சா கோட்டில மனித உரிமை மீறல் கேஸ் போட்டிருப்பன்.. 

என் உணவு என் உரிமை..

அதில்ல பிரச்சினை ஓணாண்டியார்.

உங்கள் பிள்ளைக்கு, எலும்புகளை எங்க கொண்டு போய் போடவேணும் எண்டு சொல்லியும் விடுவியள்.

அதை சொல்லாமல் விட்டால், திண்டுபோட்டு, எலும்புகளை வெளியால எறி எண்டு சொல்லி அனுப்பினால், என்ன செய்வதாம்.

இங்கே, பள்ளிக்கூடமொன்றில் பார்க்கிங் பிரச்சனை. நேரத்தோட உள்ளே வந்து இடம் பிடிக்க தாய், தகப்பன் அடிபிடி. இவ்வளவுக்கும், இரண்டு நிமிச drop off. ஆனால், பார்க்கிங் பிரச்சனையால், அரைமணி, முக்கால் மணி முன்னாலே வந்து, இடம் பிடித்துக் கொண்டு இருந்தார்கள்.

பாடசாலை சொல்லிச், சொல்லிப் பார்த்தது. 

கடைசியில், பிள்ளைகளை கூப்பிட்டு, காரை அரைமைலுக்கு அப்பால்நிறுத்தி, பாடசாலைக்கு நடந்து வந்தால், ஸ்டிக்கர் வழக்கப்படும் என்றார்கள்.

அவ்வளவு தான். அன்று முதல், கார்பார்க்கில் காத்து வாங்கியது.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

லா சப்பல் அந்த வகையில் வரும் 🤣. (மிச்ச 40% லீசில் விட்டிருக்கு).

தகவல் விரல் நுனியில் 🤣

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

அதை சொல்லாமல் விட்டால், திண்டுபோட்டு, எலும்புகளை வெளியால எறி எண்டு சொல்லி அனுப்பினால், என்ன செய்வதாம்.

மச்சம் கொண்டு வர வேண்டாம் என்ற அறிவிப்புக்கு பதில் பிள்ளைகள் எலும்பை எறிய வேண்டாம் என்ற அறிவிப்பை கொடுத்திருக்க வேணும்.

தொடர்ந்தும் எறிந்தால்? மச்சம் கொண்டு வந்தால் கொடுக்கப்போகும் தண்டனையை, எலும்பை எறிவோருக்கு மட்டும் கொடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

பாடசாலை சொல்லிச், சொல்லிப் பார்த்தது. 

கடைசியில், பிள்ளைகளை கூப்பிட்டு, காரை அரைமைலுக்கு அப்பால்நிறுத்தி, பாடசாலைக்கு நடந்து வந்தால், ஸ்டிக்கர் வழக்கப்படும் என்றார்கள்.

அவ்வளவு தான். அன்று முதல், கார்பார்க்கில் காத்து வாங்கியது.  

எலும்பை எறியாத பிள்ளைக்கு ஸ்டிக்கர் கொடுக்கலாம். அல்லது எலும்பை எறியும் பிள்ளைக்கு தண்டனை கொடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

எலும்பை எறியாத பிள்ளைக்கு ஸ்டிக்கர் கொடுக்கலாம். அல்லது எலும்பை எறியும் பிள்ளைக்கு தண்டனை கொடுக்கலாம்.

Brent இல்லை, வேலணை 🙄

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

எலும்பை எறியாத பிள்ளைக்கு ஸ்டிக்கர் கொடுக்கலாம். அல்லது எலும்பை எறியும் பிள்ளைக்கு தண்டனை கொடுக்கலாம்.

ஒரு சிறிய உதாரணம்

அண்மையில் ஊரில் உள்ள பொதுத்கிணறுகளை சுத்தம் செய்து தருமாறு ஒரு கோரிக்கை ஊரில் உள்ளவர்களால் எமது ஒன்றியத்திடம் கேட்கப்பட்டது. கிணறுகளை போய் பார்த்தால் கல்லும் முள்ளும் கழிவுப் பொருட்கள் என்று அத்தனையும் போட்டு அந்த மக்களே மூடுவிழா நடாத்தி இருக்கிறார்கள்.

இப்ப இறைப்பமா அப்படியே விடுவமா??😭

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

Brent இல்லை, வேலணை 🙄

ஏன் வேலணையில் என்ன கொரில்லாக்களா வசிக்கிறார்கள்?

இன்றைக்கு மாணவரை திருத்தினால்தான் நாளைக்காவது Brent போல வேலணையும் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

ஒரு சிறிய உதாரணம்

அண்மையில் ஊரில் உள்ள பொதுத்கிணறுகளை சுத்தம் செய்து தருமாறு ஒரு கோரிக்கை ஊரில் உள்ளவர்களால் எமது ஒன்றியத்திடம் கேட்கப்பட்டது. கிணறுகளை போய் பார்த்தால் கல்லும் முள்ளும் கழிவுப் பொருட்கள் என்று அத்தனையும் போட்டு அந்த மக்களே மூடுவிழா நடாத்தி இருக்கிறார்கள்.

இப்ப இறைப்பமா அப்படியே விடுவமா??😭

அப்படியே விட்டுட்டு, பக்கத்தில, ஆழ் குழாய்க்கிணறு அடியுங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

ஒரு சிறிய உதாரணம்

அண்மையில் ஊரில் உள்ள பொதுத்கிணறுகளை சுத்தம் செய்து தருமாறு ஒரு கோரிக்கை ஊரில் உள்ளவர்களால் எமது ஒன்றியத்திடம் கேட்கப்பட்டது. கிணறுகளை போய் பார்த்தால் கல்லும் முள்ளும் கழிவுப் பொருட்கள் என்று அத்தனையும் போட்டு அந்த மக்களே மூடுவிழா நடாத்தி இருக்கிறார்கள்.

இப்ப இறைப்பமா அப்படியே விடுவமா??😭

கேட்டவர்கள் ஊர் மீது கரிசனை உள்ளோராகவே இருக்கும் - அவர்கள் மூலம் விழிப்பூட்டி, இனி நடந்தால் இறைக்க மாட்டோம் என மிரட்டி, கிணறை இறைத்து, ஒரு கழிவு தொட்டியும் கட்டி கொடுங்கள்.

Carrot and stick 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

சில பழக்கவழக்கங்களை அடியோடு மாற்றுவது மிகவும் கடினமாக உள்ளது. அப்படியானதுதான் இதுவும். 

இறைத்துவிட்டு தண்ணீர் எடுக்கும் வாளி போகுமளவு இடைவெளி வைத்துவிட்டு மீதி இடத்தை net போட்டு மூடிவிடுங்கள். குறைந்தபட்சம் சில குப்பைகள் போடுவதை தடுக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

சுத்தம்தான் பிரச்சனை என்றால் மாணவர்களுக்குப் பாடசாலையிலேயே அதற்குரிய அறிவூட்டல் செய்யப்பட வேண்டும். குப்பையைக் கண்டபடி வீசுதல் கூடாது என்பது கலாச்சாரத்துடன் இணைக்கப்பட வேண்டிய வாழ்க்கை முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கம். நல்ல பழக்கவழக்கத்தினைப் படிப்பிற்பதற்குப் பதிலாக மச்சம் சாப்பிட்டால் சுத்தமில்லை என்று கூறுவது முக்கிய பிரச்சனையை மூடிமறைப்பதற்கு ஒப்பான செயல். 

மச்சம் உண்பது மனித இனத்தின் இயற்கையான வழக்கம் மட்டுமல்ல ஆதித் தமிழரின் வழக்கமும் கூட.

சுத்தம் என்பதை மாணவர்களுக்கு மட்டுமல்ல கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடக்கம் பாடசாலை ஊழியர் வரை முறையாகப் பின்பற்றவேண்டியதையும் கூறவேண்டும் அப்பொழுதுதான் சில பிரச்சனைகளை தவிர்க்கலாம். 

தனி கூறியபடி அங்கே உள்ள பாடசலைகளில் இதுவொரு பிரச்சனை, அதுமட்டுமல்ல கழிப்பறைகளின் சுத்தம் கூட பிரச்சனையாக உள்ளது. இப்படிப் பல பிரச்சனைகளுக்கு இடையில் குழப்பங்களை ஏற்படுத்தவும் சில செய்திகளை மிகைப்படுத்திக் கூறலாம். ஏனெனில் பாடசாலையில் போடப்பட்ட அறிக்கை பற்றிய படம் கூட இணைக்கப்பட்ட செய்தியில் இல்லை(photo கூட எடுக்காமல் விட்டிருப்பார்கள் என்பதை நம்ப இயலவில்லை). தனியே மாமிச உணவுகளை தவிர்க்குமாறு என்ற ரீதியில் போட்டுவிட்டு ஏதும் குழப்பங்களை எதிர்பார்க்கிறார்கள் எனத் தோன்றுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

கேட்டவர்கள் ஊர் மீது கரிசனை உள்ளோராகவே இருக்கும் - அவர்கள் மூலம் விழிப்பூட்டி, இனி நடந்தால் இறைக்க மாட்டோம் என மிரட்டி, கிணறை இறைத்து, ஒரு கழிவு தொட்டியும் கட்டி கொடுங்கள்.

Carrot and stick 

ஆம்

15 பொதுத்கிணறுகளை சுத்தம் செய்தாச்சு. இதே நிபந்தனைகளுடன். 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

சுத்தம் என்பதை மாணவர்களுக்கு மட்டுமல்ல கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடக்கம் பாடசாலை ஊழியர் வரை முறையாகப் பின்பற்றவேண்டியதையும் கூறவேண்டும் அப்பொழுதுதான் சில பிரச்சனைகளை தவிர்க்கலாம். 

தனி கூறியபடி அங்கே உள்ள பாடசலைகளில் இதுவொரு பிரச்சனை, அதுமட்டுமல்ல கழிப்பறைகளின் சுத்தம் கூட பிரச்சனையாக உள்ளது. இப்படிப் பல பிரச்சனைகளுக்கு இடையில் குழப்பங்களை ஏற்படுத்தவும் சில செய்திகளை மிகைப்படுத்திக் கூறலாம். ஏனெனில் பாடசாலையில் போடப்பட்ட அறிக்கை பற்றிய படம் கூட இணைக்கப்பட்ட செய்தியில் இல்லை(photo கூட எடுக்காமல் விட்டிருப்பார்கள் என்பதை நம்ப இயலவில்லை). தனியே மாமிச உணவுகளை தவிர்க்குமாறு என்ற ரீதியில் போட்டுவிட்டு ஏதும் குழப்பங்களை எதிர்பார்க்கிறார்கள் எனத் தோன்றுகிறது. 

23-650b44778fd17.png

மூலச் செய்தியில் இந்தப் படம்👆 இருக்கிறது. அப்ப இனி என்ன காரணங்களைச் சொல்லலாம் என "அமசடக்கி"கள் (நீங்கள் அல்ல!) பிளான் போடலாம்.

சில ஐடியாக்கள் யாழ் கள "மடை மாற்றி நிபுணர்கள் (spin doctors)" சார்பில்:

இந்த தடைக்கு உண்மையான காரணம்:

1. கட்டாக்காலி நாய், வௌவால், நரி, புறா எல்லாம் உள்ளே வராமல் தடுக்க
2. புவி வெப்பமாக மாடு விடும் மீதேன் வாயு காரணம், எனவே மாமிசங்களைக் குறைத்து புவியைக் காப்பாற்ற..
3. இதய நோய்களில் இருந்து மாணவர்களைக் காக்க (மீனை உதாசீனம் செய்யலாம்..😎)
4.....

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

சில பழக்கவழக்கங்களை அடியோடு மாற்றுவது மிகவும் கடினமாக உள்ளது. அப்படியானதுதான் இதுவும். 

இறைத்துவிட்டு தண்ணீர் எடுக்கும் வாளி போகுமளவு இடைவெளி வைத்துவிட்டு மீதி இடத்தை net போட்டு மூடிவிடுங்கள். குறைந்தபட்சம் சில குப்பைகள் போடுவதை தடுக்கலாம். 

புங்குடுதீவு மக்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு ஓர் அறிவிப்பு

புங்குடுதீவில் உள்ள குடிநீருக்கு உகந்த பொதுக் கிணறுகளை சுத்தம் செய்து பொது மக்களின்  குடிநீர் பாவனைக்கு விடும் செயற்பாடுகளை பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் செய்து வருகிறது. அதன் அடிப்படையில் முதலில் அங்கு வாழும் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க 15 நன்னீர்க்கிணறுகள் சுத்தம் செய்யப்பட்டு பொதுமக்களின் பாவனைக்கு விடப்பட்டுள்ளன.
(இதற்காக உதவி (வாட்டர்பம்)செய்த அமரர் திரு நா.இராசலிங்கம் அவர்களின் மகனுக்கு புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின்  
சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்)
 ஊரில் வசிக்கும் மக்களின் குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு அவசர நடவடிக்கையாக இது தற்போது நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் மக்கள் தமக்கருகில் தமது நன்னீர் தேவைக்கு பாவிக்க முடியாது கிடக்கும் கிணறுகளை எமக்கு அறியத்தந்தால் அவற்றையும் உடனடியாக எம்மால் முடிந்தளவு சிறப்பாக சுத்தம் செய்து உங்கள் பாவனைக்கு விட முடியும். இதற்கான முழுச் செலவையும் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பொறுப்பேற்கும். உங்களுக்கு தெரிந்த பொது கிணறு குடிநீர் அல்லது குளிக்கிற கிணறு தூர் வாரும் பணியை செய்து கொள்ள நீங்கள் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் 0772669902  MR தம்பா. 
 நன்றி
நிர்வாகம்
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

மூலச் செய்தியில் இந்தப் படம்👆 இருக்கிறது. அப்ப இனி என்ன காரணங்களைச் சொல்லலாம் என "அமசடக்கி"கள் (நீங்கள் அல்ல!) பிளான் போடலாம்

நன்றி Justin அண்ணா, நான் அந்த linkகைப் பார்க்கவில்லை.. பார்த்திருந்தால் அந்தக் கேள்வியை கேட்டிருக்கமாட்டேன். 

ஆனாலும் அவர்கள் இதனை தெளிவாக ஏன் இப்படி என்ற காரணங்களுடன் போட்டிருந்தால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.  ஆனால் எல்லோருமே சண்டைக்குத் தான் நிற்கிறார்கள் போல உள்ளது. வர வர சகிப்புத்தன்மையின்மை, தொடர்பாடலில் கவனமின்மைதான் கூடுகிறது. 

உண்மையிலேயே மதம், சாதி என்பதைக் கொண்டு பிரச்சனைகளை உருவாக்க நினைத்தால் அது தவறு. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பிரபா சிதம்பரநாதன் said:

இது சாதாரண தொடர்பாடல் பிரச்சினையாக எனக்குத் தெரியவில்லை. சில மாதங்கள் முன்பு இதே பாடசாலையில் நிகழ்ந்த மத/சாதி வாதத்தின் இரண்டாம் அத்தியாயம் என்றே நான் நினைக்கிறேன். ஆனால், இங்கே எழுதப் பட்டிருக்கும் சில கருத்துகளைப் பார்த்தால் புரிவது:

இது போன்ற "மறைமுகமாக" நகர்த்தும் மதவாத முன்னெடுப்புகளை இனங்காண முடியாமல் ஒரு தரப்பு இருக்கிறது -இது அப்பாவித் தனமாக இருக்கலாம்.

இன்னொரு தரப்பினர், இதைப் "பேசாமல் விட்டு விடும்படி" கேட்டு, நூதனமான காரணங்களை இந்த நடவடிக்கைளுக்கு அடிப்படையாகவும் முன்வைக்கின்றனர் - இவர்களைத் தான் மடை மாற்றும் spin doctors என அழைக்கிறேன்.

இந்த இரு தரப்பினரும் மறந்து விடும் ஒரு விடயம், இங்கே இருக்கும் பெரும்பாலானோர் இலங்கையின் பள்ளிக் கூடங்களில் படித்து அங்கேயே வாழ்ந்த மக்கள் தான். பாடசாலைக்குள் வருகின்றன என இவர்கள் நம்பும் கட்டாக்காலி நாய்கள் ஒரு சோற்றுப் பருக்கை ஒட்டிய பேப்பர் இருந்தால் கூட வரும் என்பது இலங்கையில் பிறந்து வளர்ந்த ஒருவருக்குத் தெரியாதா? தெருவில் நிற்கும் மாடே  ஷொப்பிங் பையும் சுவரொட்டியும் சாப்பிட்டு வளரும் ஊர்கள் எங்கள் ஊர்கள்😂. மச்சம், மீன் தேடி மட்டும் தான் நாய் பூனை வருமா? யார் காதில் பூ மாலை வைக்க முயலுகினம் இந்த மடை மாற்றிகள்?  

இதைச் சொல்வதற்காக நான் "கோவிந்த கிருஷ்ண பஞ்சாபிஷேக சர்மா" என்று போலிப் பெயரில் வந்து எழுத முடியாது😎!

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

இதில் ஒரு மடை மாற்றமும் இல்லை, spin டாக்டர் வேலையும் இல்லை. பாடசாலை சைவம் மட்டுமே சாப்பிடலாம் என்று அதன் கிறித்தவ அதிபர் அறிவித்ததில் பிரச்சனை இல்லையே.

அந்த கிறித்தவ அதிபர், அங்கே நுழைய எவ்வளவு பாடுபட்டார் என்று, ஒரு கிறிஸ்தவர் தேவையில்லாமல், திசை திருப்பும் போது, அப்படி, ஒரு கிறிஸ்தவ பாடசாலையில் வேறு மதத்தவர் வர முடியுமா என்று கேட்டால், அங்க எழுதின விதி, அப்படி வேறு யாரும் வரமுடியாது என்கிறீர்கள்..

அதவும் மாத்தப்படவேண்டும், ஏற்றுகொள்ள முடியாது, அங்கே ஒரு இஸ்லாமியரும் அதிபராக வேண்டும் என்று சொல்வதே, நடுநிலைமை.

இன்னும் தெளிவாக சொல்வதானால், உங்களுக்கு என்றால், ரத்தம், அடுத்தவர்களுக்கு என்றால் தக்காளி சோஸ் அப்படித்தானே?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பழைய செய்தி தான் ஆனாலும் தொடர்புடையது

https://archives1.thinakaran.lk/2021/04/10/குற்றம்/66081/தெல்லிப்பழை-யூனியன்-கல்லூரி-மாணவர்கள்-மீது-தாக்குதல்

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியினுள் புகுந்த அமெரிக்கன் மிசனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் துவிச்சக்கரவண்டிகளை நிறுத்தும் இடம் தமக்கு சொந்தமானது எனவும் அதில் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்த வேண்டாம் எனக் கூறியுமே மாணவர்கள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக இந்தக் காணிப் பிரச்சினை நடைபெற்று, தற்போது அந்த நிலம் கல்லூரிக்கு சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இந்நிலையில், நேற்று காலை பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் அங்கு சென்ற அமெரிக்கன் மிசனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் வாகனங்களை நிறுத்தும் இடத்திற்கு செல்ல முடியாதவாறு தடிகள், சீற்றுகளை போட்டு பாதையை மறித்திருந்தனர்.

எனினும், அங்கு ஆசிரியர்கள் வருகை தந்த பின்னர் மாணவர்கள் வாகனங்களை உள்ளே நிறுத்தியபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இரண்டு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Justin said:

இங்கே இருக்கும் பெரும்பாலானோர் இலங்கையின் பள்ளிக் கூடங்களில் படித்து அங்கேயே வாழ்ந்த மக்கள் தான். பாடசாலைக்குள் வருகின்றன என இவர்கள் நம்பும் கட்டாக்காலி நாய்கள் ஒரு சோற்றுப் பருக்கை ஒட்டிய பேப்பர் இருந்தால் கூட வரும் என்பது இலங்கையில் பிறந்து வளர்ந்த ஒருவருக்குத் தெரியாதா? தெருவில் நிற்கும் மாடே  ஷொப்பிங் பையும் சுவரொட்டியும் சாப்பிட்டு வளரும் ஊர்கள் எங்கள் ஊர்கள்😂

உண்மைதான். 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

பாடசாலை சைவம் மட்டுமே சாப்பிடலாம்

ஆரம்பத்தில் அசைவம் சாப்பிடலாம் என்று இருந்த பாடசாலை இப்பொழுது பாடசாலைக்குள் அசைவ உணவை தவிர்க்கவும் என்றால் அதுவும் முறையான காரணங்களை கொடுக்காமல் என்றது சரியில்லை என்றுதான் நினைக்கிறேன். 

இன்றைக்கு எங்கள் இடங்களில் நடந்துவரும் மற்றைய பிரச்சனைகளை உணர்ந்தவர்கள் என்றால் இந்த மாதிரி மதம்/ அசைவம்/சைவம் உணவு போன்ற பிரச்சனைகளை உருவாக்கமாட்டார்கள். ஒற்றுமையாக எப்படி அவற்றை தடுக்கலாம் என்றுதான் நினைப்பார்கள். 

அவ்வளவுதான். 

1 hour ago, விசுகு said:

புங்குடுதீவு மக்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு ஓர் அறிவிப்பு

புங்குடுதீவில் உள்ள குடிநீருக்கு உகந்த பொதுக் கிணறுகளை சுத்தம் செய்து பொது மக்களின்  குடிநீர் பாவனைக்கு விடும் செயற்பாடுகளை பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் செய்து வருகிறது. அதன் அடிப்படையில் முதலில் அங்கு வாழும் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க 15 நன்னீர்க்கிணறுகள் சுத்தம் செய்யப்பட்டு பொதுமக்களின் பாவனைக்கு விடப்பட்டுள்ளன.
(இதற்காக உதவி (வாட்டர்பம்)செய்த அமரர் திரு நா.இராசலிங்கம் அவர்களின் மகனுக்கு புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின்  
சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்)
 ஊரில் வசிக்கும் மக்களின் குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு அவசர நடவடிக்கையாக இது தற்போது நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் மக்கள் தமக்கருகில் தமது நன்னீர் தேவைக்கு பாவிக்க முடியாது கிடக்கும் கிணறுகளை எமக்கு அறியத்தந்தால் அவற்றையும் உடனடியாக எம்மால் முடிந்தளவு சிறப்பாக சுத்தம் செய்து உங்கள் பாவனைக்கு விட முடியும். இதற்கான முழுச் செலவையும் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பொறுப்பேற்கும். உங்களுக்கு தெரிந்த பொது கிணறு குடிநீர் அல்லது குளிக்கிற கிணறு தூர் வாரும் பணியை செய்து கொள்ள நீங்கள் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் 0772669902  MR தம்பா. 
 நன்றி
நிர்வாகம்
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்.

நல்ல விடயம் விசுகு அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

"கோவிந்த கிருஷ்ண பஞ்சாபிஷேக சர்மா"

அதுக்காக என் உண்மையான பெயரை இப்படியா பொதுவெளியில் பிரசுரிப்பீர்கள்.

நான் சென்னை நகர கோர்ட்டில் மானலாப வழக்கு போடபோகிறேன்🤣.

அது சரி spin doctors என்பதன் தமிழ் பதம்  உருட்டல் மன்னர்கள் என்பதை கவனிக்கவும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

மச்சம் கொண்டு வர வேண்டாம்

IMG-4481.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.