Jump to content

ஒரு புலப்பெயர்ச்சி அலை? நிலாந்தன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

ஐஸே நேற்று 138 பஸ்ஸில் போகும்போது திம்பிரிகஸ்யாயா சந்தியில் எனக்கு இப்படி சீட் கொடுக்க வேண்டி ஏற்பட்டது வா 😁_

🙏 சாது…சாது…🤣

இதே 138 இல்தான் ஒரு முறை யாழ்பாணத்தில் இருந்து வந்த என் ஒன்றுவிட்ட மாமா ஒருவரை நுகேகொட கூட்டிப்போனேன். பிக்கு வர எழும்ப வேணும் என்று அவருக்கு தெரியாது (அப்போ யாழ்பாணத்தில் ஏது பிக்கு).

கடுப்பான பிக்கு ஆளை குடை கம்பியால் குத்தி எழுப்ப சொல்ல - இவர் மாட்டன் எண்ட, ஒரே கச்சால்🤣.

ஒரு மாதிரி நான் தலையிட்டு, பிக்குவிடம் சமாவ கேட்டு விசயத்தை சுமூகமா முடித்தேன். இல்லாட்டில் பஸ்சே கூடி எம்மை மொத்தி இருக்கும்.

ஒரு பதின்ம வயதினனாக அந்த நாட்டில் வாழ விரும்பவில்லை என்ற முடிவுக்கு வர இப்படி பல சம்பவங்கள் வழிகோலின.

 

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டம் கூட்டமாக வெளியேறுவது எதிர்காலத்திலும் சாத்தியபடுமா என்று தெரியவில்லை.அவுஸ்ரோலியாவை விடுங்கோ ஐரோப்பாவிலேயே வெளிநாட்டவர் குடியேற்றத்திற்கு ஆதரவாக இருந்த தலைவர்கள் இப்போது எதிர் நிலைமைகள் எடுக்கின்றனராம்.

On 25/9/2023 at 16:34, பாலபத்ர ஓணாண்டி said:

ஊரில் உள்ள தமிழ்மக்களுக்கு பொருளாதார மேம்பாட்டுக்கு உதவி ஊரில் புதிய தொழில்களை உருவாக்க ஊக்குவித்து அங்கு வாழும் மக்களை புலம்பெயர ஊக்குவிக்காமல் அங்கேயே தன்னிறைவுடன் வாழும் வகையில் ஈழத்தமிழர்களின் எண்ணிக்கையை ஊரில் அதிகரிக்கும் வலையில் அமையவேண்டும்.

உங்களுடைய இந்த கருத்தை ஆதரிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பென்சன் எடுத்தாப்பிறகு சொந்த ஊரில் தான் வாழ்க்கை.... மேற்குலக பொய் வாழ்க்கை பொல்லாதது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2023 at 15:34, பாலபத்ர ஓணாண்டி said:

வேண்டுமானால் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்தேசியவாதிகள் அடுத்த தலைமுறைக்கு வரலாறையும் மொழியையும் கடத்தும் வகையில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இருக்கும் அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து உலகளாவிய புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான தமிழ் தேசிய கட்டமைப்பு ஒன்றை உருவாக்கலாம்... எதிர்கால தமிழ் தேசிய அரசியல் என்பது அந்தந்த நாடுகளில் கலாசாரத்துடனும் மொழியுடனும் இணைந்து எமது புலம்பெயர்ந்த தலைமுறைக்கு எமது மொழியையும் வரலாற்றையும் கடத்துவதாக ஊரில் உள்ள தமிழ்மக்களுக்கு பொருளாதார மேம்பாட்டுக்கு உதவி ஊரில் புதிய தொழில்களை உருவாக்க ஊக்குவித்து அங்கு வாழும் மக்களை புலம்பெயர ஊக்குவிக்காமல் அங்கேயே தன்னிறைவுடன் வாழும் வகையில் ஈழத்தமிழர்களின் எண்ணிக்கையை ஊரில் அதிகரிக்கும் வலையில் அமையவேண்டும்... 

தற்போதைய நிலமையில் ஊரில் இருக்கும் உண்மையான தமிழ் தேசிய வாதிகள் என்றால் தங்கள் அண்ணன் தம்பி சகோதரங்களை இயன்றவரை ஊரில் தொழில் செய்ய ஊக்குவித்து வெளிநாட்டுக்கு அனுப்பாமல் தவிர்க்கலாம் வெளிநாட்டில் இருக்கும் தமிழ்தேசிய வாதிகள் என்றால் முடிந்தால் ஊரில் வந்து செட்டில் ஆகுங்கள் இல்லை என்றால் நீங்கள்தான் ஊருக்கு வரமாட்டீர்கள் ஆகக்குறைந்தது உங்கள் உறவுகளை வெளிநாட்டுக்கு எடுக்காமலாவது இருங்கள்.. அந்த காசை அவர்கள் சொந்த தொழில் தொடங்க அல்லது சொத்துக்களில் முதலிட உதுவுங்கள்.. அதுதான் நாம் பேசும் தமிழ்தேசிய அரசியலுக்கு தற்போதைய நிலைமையில் செய்யக்கூடிய ஆகக்கூடிய விசுவாசமான செயல்..

எங்குமே சுத்துமாத்து நடப்பதால், இங்கே மக்களை நம்ப வைப்பது கடினம். சில ஆண்டுகளுக்கு முன்னர், £15 ஒரு மாதத்துக்கு, ஊரில் ஒரு பிள்ளை பராமரிப்புக்கு கொடுங்கள் என்று சில கோவில்களில் விளம்பரம் செய்தார்கள். கொடுத்த காசுக்கு, எந்த பிள்ளைக்கு பராமரிப்பு நடந்தது என்று விபரமோ, இருவரையும் தொடர்பு படுத்தலோ நடக்காததால், பலர் கழன்று கொண்டார்கள்.

அதுக்கும் முன்னர், கிரிஸ் என்பவர், கூகிளுக்கே சவால் விட்டு, மென்பொருள் எழுதி இருப்பதாகவும், கூகிள் தன்னிடம் அதை பெரும் தொகைக்கு வாங்கும் என்று கதை விட்டு, முதல் வேண்டும் என கேட்க, தமிழர்களும் அள்ளிக்கொடுக்க மில்லியன் கணக்கில் அடித்துக்கொண்டு ஊரில் போய் செட்டில் ஆகி விட்டார். இவரது விளம்பரங்களுக்கு ஐபிசி தான் பொறுப்பு.

நான் முன்னர் சொன்னது போலவே, பணத்தினை நம்பி யாருக்கும் கொடாமல், அவர்களை லோக்கல் வங்கிகளை நாட சொல்ல வேண்டும். வியாபார திட்டத்தினை வங்கி அலசி, மாதாமாதா தவணையை வாங்கி, வியாபாரத்தினையும் கண்காணித்து, வேண்டிய மேலதிக உதவிகளை செய்யும். இவைகளை நாம் செய்ய முடியாது.

செய்யக்கூடிய ஒன்று, அதே வங்கியில் எமது பணத்தினை சேமிப்பு கணக்கில் போட்டு, அந்த வியாபார முயல்வுக்கான கடனுதவிக்கு, guarantee ஆக எமது சேமிப்பினை வைத்துக் கொள்ள சொல்லலாம். 

இல்லாவிடில், கொடுக்கும் பணத்துடன் ஆள், agency காரர் பின்னால் நிற்பார்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/9/2023 at 21:40, தமிழ் சிறி said:

இவ்வாறு ஏற்கனவே நிலம் சிறுத்தை கொண்டுவரும் ஒரு பின்னணியில், சனத்தொகையும் சிறுத்துக்கொண்டே போனால் என்ன நடக்கும்? தமிழ் மக்கள் ஓர் அரசியல் சமூகமாக தங்களுக்குரிய அரசியல் இலக்குகளை முன்வைத்துப் போராடும் வலிமையை இழந்து விடுவார்கள் அல்லவா? இது தொடர்பாக தமிழ்த்தேசியப் பரப்பிலுள்ள அரசியல்வாதிகள்,கட்சிகள், செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்கள் இப்பொழுதே குரல் கொடுக்க தொடங்க வேண்டும்

நான் வெளிநாட்டில் இருந்துகொண்டு எனது உறவுகளை வெளிநாட்டிற்கு வராதே என என்னால் கூறமுடியாது. ஆனால் முன்பைப் போல சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு வரமுடியாது என்றதை விளங்கப்படுத்துவேன், இங்கே உள்ள பிரச்சனைகளையும் கூறலாம். அதற்கு மேல் என்னால் அவர்களை தடுக்கமுடியாது. 

அதே போல அங்கே முதலீடு செய்து, தொழில்வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்றால் அங்கே உள்ளவர்களுடன் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அனுசரித்துப் போகவேண்டும். அது எனது கொள்கைகளுக்கு சரிவராது என்பதை கடந்த சில தடவைப் பயணங்களில் நடந்த எனது தனிப்பட்ட அனுபவங்களை வைத்து உணர்ந்து கொண்டேன். ஆகையால் எல்லாவற்றையும் எல்லோரையும் அனுசரித்துப் போகக்கூடியவர்கள் அங்கே முதலிடலாம். அங்கே உள்ளவர்களுக்கு தொழில்வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தாலும் அதனை வழிநடத்தவோ, மேம்படுத்தவோ ஆர்வமில்லை. அதனைப் பற்றி கதைப்பதையும் விரும்புகிறார்கள் இல்லை. 

இந்தப் புலப்பெயர்ச்சி தடுக்கவேண்டுமானால் அங்கே உள்ளவர்களின் மனநிலை மாறவேண்டும். ஆனால் அதற்கு ஏற்றவாறு சூழலை அமைத்துத் தரக்கூடியவர்கள் அங்கே இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

எங்குமே சுத்துமாத்து நடப்பதால், இங்கே மக்களை முதல் தர நம்ப வைப்பது கடினம்.

உண்மை தான். சுவிட்சலண் மித்துஜா 🙆‍♂️

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.