Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 12/11/2023 at 01:00, பையன்26 said:

நாம் இந்த‌ திரியில் விவாதிப்ப‌து ப‌ல‌ஸ்தின‌ பிர‌ச்ச‌னை ப‌ற்றி ஆட்டுக்கை மாட்டை தொட‌ர்ந்து க‌ல‌ந்து அடிக்கிற‌து தானே உங்க‌ள் வேலை அதை திற‌ம் ப‌ட‌ செய்யிறீங்க‌ள்🙈................

விளக்கம் இல்லாவிட்டால்  இப்படித்தான் பதில்கள்வரும் பையா!
கடந்து செல்வதே மேல்!

  • Replies 1.5k
  • Views 158.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவின் போர் செல்போன்களிலும் இடம்பெறுகின்றது

Published By: RAJEEBAN    13 NOV, 2023 | 04:17 PM

image

நியுயோர்க் டைம்ஸ்

By Yousur Al-Hlou

தமிழில் - ரஜீவன்

முற்றுகையிடப்பட்டுள்ள காசாவில் சிக்குண்டுள்ள பாலஸ்தீனியர்களில்   செல்போன்களை வைத்துள்ளவர்கள் காசா யுத்தத்தை பதிவு செய்து வெளியிடுகின்றனர் – அவர்கள் ஆங்கில புலமை கொண்டவர்களாக உள்ளனர்- இன்ஸ்டகிராமில் பலரால் பின்தொடரப்படுபவர்களாக அவர்கள் காணப்படுகின்றனர்.

இஸ்ரேலும் எகிப்தும் பத்திரிகையாளர்கள் காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுத்து அவர்களை தடுத்து வருகின்ற நிலையில்,  பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் குண்டுவீச்சினால் ஏற்பட்டுள்ள பேரழிவை  தரைதாக்குதல் கதைகளை பதிவு செய்கின்றனர், பகிர்ந்துகொள்கின்றனர்.

அவர்களின் பதிவுகள் யதார்த்தத்தை  உண்மையை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு வெளிப்படையாக தெரிவிப்பவையாக காணப்படுகின்றன-

மையநீரோட்ட ஊடகங்கள் அவை வெளியிட முடியாத அளவிற்கு பயங்கரமானவை என கருதக்கூடும்.

அவர்கள் தாங்கள் பதிவு செய்யும் யுத்தத்தின் நடுவில் வாழ்கின்றனர்,குண்டுவீச்சிலிருந்து உயிர்பிழைக்கின்றனர் ,உணவு குடிநீரை பங்கீட்டு முறையில் பெற்றுக்கொள்கின்றனர் மருத்துவமனையில் தஞ்சமடைகின்றனர்.

அவர்கள் நடுநிலையான பார்வையாளர்கள் இல்லை அவர்களின் உணர்ச்சிவசப்பட்ட பதிவுகளில் அவர்கள் தங்களை அவ்வாறு காண்பிக்க முயலவில்லை.

சிலர் அவர்கள் காசாவை தனது பிடியில் வைத்திருக்கும் ஹமாசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்பவர்கள் என தெரிவிக்கின்றனர்.

ஹமாசின் ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலிற்கு பதிலடியாக தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்த பின்னர் இதுவரை பத்தாயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் - பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இவர்களில் 4500 பேர் சிறுவர்கள் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என ஐநாவின் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதுவரையில் 33 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.

எனினும் பாலஸ்தீனியர்கள் யுத்தத்தின் ஈவிரக்கமற்ற தன்மையை தொடர்ந்தும் பதிவு செய்கின்றனர்-அவர்களை மில்லியன் கணக்கான மக்கள் சமூக ஊடகங்களில் பின்தொடர்கின்றனர்.

மொட்டாஸ் அசைசா

motaza1.jpg

ஒக்டோபர் ஏழாம் திகதி மொட்டாஸ் அசைசா  4 மணியளவில் உறங்கச்சென்றார்

இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அவர் குண்டுவெடிப்புகளின் சத்தத்தை கேட்டு கண்விழித்தார்,தனது வீட்டின் கூரைக்கு சென்று என்னவென்று பார்த்தார் அவரது வீட்டின் மேலாக ரொக்கட்கள் சென்றதை பார்த்தார்.

அதுவரை எந்த எச்சரிக்கையும் வெளியாகவில்லை வழமையாக யுத்தத்தை அறிவிக்கும் துப்பாக்கி பிரயோகங்கள் அன்று இல்லை

ஆனால் இந்த யுத்தம் அவர் உறக்கத்திலிருந்தவேளை  ஆரம்பித்தது.

காசா இஸ்ரேலை பிரிக்கும் எல்லையை கடந்து சென்ற ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிய படையினரையும் சமூகங்களையும் தாக்கினர்.240 பொதுமக்கள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர் 1400 பேர் கொல்லப்பட்டனர் 

அதில் அதிகளவு இஸ்ரேலிய இராணுவத்தினரும் உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஹமாசிற்கு எதிரான முழுமையான யுத்தத்தை ஆரம்பித்தது- அசைசாவும் இரண்டு மில்லியன் மக்களும் காசாவில் குண்டுவீ;ச்சிற்குள் சிக்குப்படும் நிலையை ஏற்படுத்தியது.

பல வருட மோதல்களிற்கு பின்னர் வெடிமருந்து கிடங்காக மாறியிருந்தது காசாவில் அவர்கள் சிக்குண்டனர்.

ஏற்கனவே நான்கு யுத்தங்களை சந்தித்த அசைசா தனது கமராவை எடுத்துக்கொண்டு தன் கண்முன்னால் புதிதாக அவிழ்ந்த உலகிற்குள் நுழைந்தார்.

ஆயுதமேந்திய பாலஸ்தீனியர்கள் கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய படையினருடன் இஸ்ரேலிய ஜீப்பில் அசைசாவை கடந்துசென்றனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் சீருடையில் காணப்பட்டனர் - இஸ்ரேலிய படையினரை பொதுமக்கள் முன்னிலையில் பாலஸ்தீனியர்கள் நிறுத்தியவேளை அவர்கள் கண்களில் அச்சம் தென்பட்டது என்கின்றார் அசைசா.

அவர் அதனை பதிவு செய்தார் -அந்த வீடியோவை தனது இன்ஸ்டகிராமில் பதிவு செய்தார் – அவரை 25000 பேர் இன்ஸ்டகிராமில் பின்தொடர்கின்றனர்.

நான் அந்த சம்பவத்தை உள்வாங்குவது எப்படி என தெரியாத நிலையிலிருந்தேன் என தெரிவிக்கும் அவர் அந்த ஜீப் எங்களுக்கு பேரழிவை கொண்டு வரப்போகின்றது என நான் அந்த நிமிடம் கருதவில்லை என்கின்றார்.

அசாசா காசா பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழிபெயர்ப்பில் பட்டம்பெற்றவர்- புகைப்படத்துறை குறித்து மிகுந்த ஆர்வம் கொண்டவர்.காசாவின் அழகையும் பயங்கரத்தையும் பதிவு செய்து அவர் தன்னை பட்டை தீட்டிக்கொண்டார்.

ஆனால் காசா யுத்தம் சமூக ஊடக காலத்தின் யுத்த செய்தியாளராக அவரை மாற்றியிருந்தது.

தற்போது அவரை 13 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.

அவர் இஸ்ரேலின் விமானக்குண்டு வீச்சினை தனது தலைமுறையை போல பதிவு செய்துவருகின்றார்.கண்முன் நடப்பதை அப்படியே பதிவு செய்து அப்படியே தரவேற்றுகின்றார் அவருக்கு ஆங்கில மொழியாற்றல் உள்ளதால் பலர் அவரை பின்தொடர்கின்றனர்.

நான் ஏனையவர்களை போலவே பதிவிடுகின்றேன் பிரபலங்கள் செய்வது போல நானும் எனது நாளாந்த வாழ்க்கையிலிருந்து பதிவிடுகின்றேன் என்கின்றார் அவர்.

ஆனால் அவரது வீடியோக்கள் முற்றிலும் வித்தியாசமானவை. ஓக்டோபர் 9 ம் திகதி குண்டுவீச்சிலிருந்து தப்பியவுடன் அவர் கதறியழுதார்.

அது எனக்குள்ளே இருந்த எதனையே அசைத்துவிட்டது நான் கடும் அதிர்ச்சியடைந்தேன் இரண்டு மணிநேரம் அழுதேன் என அவர் குறிப்பிட்டார்.

motaza2.jpg

ஒக்டோபர் 11ம் திகதி அவர் குண்டுவீச்சில் தனது நெருங்கிய நண்பரை இழந்தார்-அதன் பின்னர் அவரது குடும்ப உறவுகள் கொல்லப்பட்டனர்.

ஒக்டோபர் 22 ம் திகதி அவர் கொல்லப்பட்ட குழந்தைகள் சிறுவர்களின் சடலங்களுடன் காணப்பட்டார்.23 ம் திகதிஇடிபாடுகளிற்கு மேலாக நடந்துசென்ற அவர் நாங்கள் இன்னமும் உயிருடன் இருக்கின்றோம் என தெரிவித்தார்.

ஆரம்பத்தி;ல்  என்ன செய்கின்றேன் என்பதோ என்ன செய்யப்போகின்றேன் என்பதோ தெரியாத நிலையில் நான் காணப்பட்டேன் என தெரிவிக்கும் அவர் நான் நடக்கும் விடயங்களை பதிவிட்டு நாங்கள் இங்கே இருக்கின்றோம் என தெரிவிக்க விரும்பினேன் என குறிப்பிட்டார்.

அவரது சமூக ஊடக செயற்பாடுகளும் பிரபலமும் அவருக்கு நெருக்கடிகளை உருவாக்கியுள்ளன,அவர் தான் சந்தித்த அனுபவங்களால் களைப்படைந்துள்ளார்,  பணியில் கவனம் செலுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றார், தனது பாதுகாப்பு குறித்து அச்சமடைந்துள்ளார்

அவர் தனது சகாக்கள்  இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதை பார்த்துள்ளார். விமானகுண்டுவீச்சில் அவர்களின் வீடுகள் எப்படி நொருங்கின தரைமட்டமாகின என்பதை நேரில் பார்த்துள்ளார். நான் எனது நண்பர்களை இடிபாடுகளிற்குள் இருந்து இழுத்தெடுத்தேன் என அவர் தெரிவிக்கின்றார்.

நேற்று நான் எனது வீட்டில் ஒரு கால் கட்டிலும் ஒரு கால் தரையிலுமாக உறங்கினேன் , நான் அங்கேயே இருக்கவேண்டுமா வெளியேறவேண்டுமா என்பது தெரியாத நிலையிலிருந்தேன், எனது தாயார் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார் என அவர் பதிவிட்டுள்ளார்.

நான் தற்போது காசாவில் இல்லை என அவர் நவம்பர் நான்காம் திகதி பதிவில் தெரிவித்தார். இஸ்ரேலிய துருப்பினரின் பிடியில் தனது வீடு உள்ளதால் மீண்டும் திரும்பி செல்வது ஆபத்தானது என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் யுத்தம் குறித்த தகவல்களை வெளியிடுவதாக தன்னை சமூக ஊடகங்களில் பதிவு செய்பவர்களிற்கு தெரிவித்துள்ள அவர் அதேவேளை தனக்குள்ள மட்டுப்பாடுகளையும் தெரிவித்துள்ளார்.

நான் சுப்பர்மான் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நான் சோர்வடைந்து விழப்போகின்றேன் போல உணர்கின்றேன் என கமராவை பார்த்தபடி அவர் தெரிவித்தார். அனைத்தையும் பதிவு செய்யவேண்டும் என்பதுதான் எனது விருப்பம் ஆனால் எனது உயிருக்கு ஆபத்தில்லாமல் அவற்றை பதிவு செய்ய விரும்புகின்றேன் என அவர் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/169207

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசா விவகாரத்தை அமெரிக்க கையாளும் விதம் குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்குள் கடும் அதிருப்தி - ஏற்றுக்கொள்கின்றார் பிளிங்கென்

Published By: RAJEEBAN     14 NOV, 2023 | 02:37 PM

image

ஹமாஸ் இஸ்ரேல் மோதலை அமெரிக்கா கையாளும் விதம் குறித்து அமெரிக்க இராஜாங்க திணைகளத்திற்குள் கடும் கருத்துவேறுபாடுகள் காணப்படுவதை அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு அனுப்பிவைத்துள்ள மின்னஞசலில் பிளிங்கென் இதனை தெரிவித்துள்ளார்.

காசா யுத்தத்தை அமெரிக்கா கையாள்வது குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்குள் மாத்திரமல்லாமல்  பைடன் நிர்வாகத்திற்குள்ளேயே கடும் அதிருப்தி காணப்படும் நிலையிலேயே  பிளிங்கென் இந்த மின்னஞ்சலை அனுப்பியுள்ளார்.

யுஎஸ்எயிட்டை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் உடனடி யுத்த நிறுத்தத்தை கோரி கடிதம் எழுதியுள்ளதாக கடந்த வாரம் சிஎன்என் செய்தி வெளியிட்டிருந்தது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் அதிருப்தி கடிதங்கள் வெளியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உங்களில் பலருக்கு இந்த ஆழ்ந்த நெருக்கடியால் ஏற்படும் துன்பம் தனிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது என்பதை நான் அறிவேன் என பிளிங்கென் தனது மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் சிறுவர்கள் குழந்தைகளின் படங்களை தினசரி பார்க்கும்போது ஏற்படும் வேதனையை நானும் அனுபவிக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/169270

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் ஹமாஸ் போரில் பலியான ஐ.நா. ஊழியர்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்தது

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இஸ்ரேல் இராணுவம் காசாவில் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா முனை பகுதி மீது இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர் குண்டு வீச்சு காரணமாக ஆயிரக்கணக்கானோர் காசாவில் உள்ள மருத்துவமனைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி உயிரிழந்த ஐ.நா. ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இது வரை நடந்த போர்களிலேயே இந்தப் போரில் தான் மிக அதிக எண்ணிக்கையிலான ஐ.நா. சபை ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா.வைச் சேர்ந்த தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/281251

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

தாயகத்தில் இருந்து மக்கள் கெஞ்சிக் கேட்டும் ஓடித்தப்பிய எவராவது இங்கே மாண்டால் விதி வலியது என்பதை ஒத்துக் கொள்ள முடியும் 😭

  • கருத்துக்கள உறவுகள்+

அப்ப கமாஸ் பயங்கரவாதத்தின் ஆர்பிஜி எல்லாம் வெறும் விசுக்கோத்துத் தான்😆

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

401844688_729964105835231_22447473587634

  • கருத்துக்கள உறவுகள்+

@goshan_che நீங்கள் கேட்டது இதைத்தான்.... 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உணவுவிடுதியில் கனடா பிரதமரை சுற்றிவளைத்த பாலஸ்தீன ஆதரவாளர்கள்

16 NOV, 2023 | 06:52 AM
image

கனடாவின் வான்குவரில்  பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பொலிஸார் பாதுகாப்பாக அழைத்துச்சென்றுள்ளனர்.

உணவுவிடுதியொன்றில் பிரதமர் காணப்பட்டவேளை அந்த பகுதியை சுமார் 250க்கும் மேற்பட்ட பாலஸ்தீன ஆதரவாளர்கள் சுற்றிவளைத்துள்ளனர்.

சைனாடவுனில் இது இடம்பெற்றதாகவும் இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக 250க்கும் அதிகமான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலஸ்தீன கொடிகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் யுத்தநிறுத்தம் என கோசம் எழுப்புவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/169411

  • கருத்துக்கள உறவுகள்

401774546_730236002474708_43204333350386

402621280_730162839148691_91007270877426

402570706_730161445815497_71662987553330

spacer.png

401559059_730177165813925_44298698068273

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பணயக்கைதிகள் விடுதலை அடுத்த வாரமளவில் சாத்தியமாகலாம் - பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளவர் நம்பிக்கை

Published By: RAJEEBAN    17 NOV, 2023 | 12:43 PM

image

ஹமாஸ் தன்னிடமுள்ள பணயக்கைதிகளில் சிலரை அடுத்தவாரமளவில் விடுதலை செய்யலாம்  என பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள ஒருவர் சர்வதேச ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

லெபானின் புலனாய்வுபிரிவின் முன்னாள் தலைவர் அபாஸ்இப்ராஹிம் இதனை தெரிவித்துள்ளார்.

சில நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டால்பணயக்கைதிகள்  விடுதலை சாத்தியமாகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தன்னுடைய சில நிபந்தனைகளை வாபஸ்பெற்றால் அல்லது ஹமாசின் சில நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் பணயக்கைதிகள் விடுதலை சாத்தியமாகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்கள் மற்றும் சிறுவர்களை அந்த நாடு விடுதலை செய்தால் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை செய்யும்  என அவர் தெரிவித்துள்ளார்.

காசா மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு அனுமதியளிக்கவேண்டும் என ஹமாஸ் நிபந்தனை விதித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/169531

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஏராளன் said:

கடைசி பணய கைதி விடுவிக்கும்வரைக்கும் யுத்த நிறுத்துக்கோ வேறு நிபந்தனைக்கோ இஸ்ரேல் அடிபணியாது. இப்படி மரண அடி கொடுத்திருக்காவிடடால் இப்படியான பேச்சு வார்த்தைக்கே பயங்கரவாதிகள்  வந்திருக்க மாடடார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

402511318_731636939001281_13173524276439

403787587_731469809017994_39852765582624

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Cruso said:

கடைசி பணய கைதி விடுவிக்கும்வரைக்கும் யுத்த நிறுத்துக்கோ வேறு நிபந்தனைக்கோ இஸ்ரேல் அடிபணியாது. இப்படி மரண அடி கொடுத்திருக்காவிடடால் இப்படியான பேச்சு வார்த்தைக்கே பயங்கரவாதிகள்  வந்திருக்க மாடடார்கள்.  

ஹ‌மாஸ்சின்ட‌ ஒளிவும‌றைவில்லா அடிய‌ பாருங்கோ ஹா ஹா அழிய‌ட்டும் இஸ்ரேல் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடகாசாவில் அகதிமுகாமில் உள்ள பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் - 50க்கும் அதிகமானவர்கள் பலி

Published By: RAJEEBAN    18 NOV, 2023 | 09:03 PM

image

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் முகவர் அமைப்பு நடத்தும் அல்பகுரா பாடசாலைமீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவின் வடபகுதியில் உள்ள  ஜபாலியா அகதிமுகாமில் உள்ள பாடசாலை மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேலின் முடிவற்ற தாக்குதலில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதி மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

எங்குபார்த்தாலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் காணப்படுகின்றன காயமடைந்தவர்களை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என அல்ஜசீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

காசாவின் வடபகுதியில் இடம்பெறும் தாக்குதல் காரணமாக பல பொதுமக்கள் ஐநாவின் அகதிமுகாமில் தஞ்சமடைந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல மருத்துவ தேவைகள் உள்ள மக்கள் ஜபாலியா அகதிமுகாமில் தஞ்சமடைந்துள்ளனர் அவர்களால் அங்கு வன்முறைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கமுடியவில்லை,காசா பள்ளத்தாக்கின் தென்பகுதிக்கு செல்லுங்கள் என்ற செய்தியை இஸ்ரேலிய இராணுவம் தெரிவிக்கின்றது என அல்ஜசீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/169659

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பையன்26 said:

ஹ‌மாஸ்சின்ட‌ ஒளிவும‌றைவில்லா அடிய‌ பாருங்கோ ஹா ஹா அழிய‌ட்டும் இஸ்ரேல் 

இதெல்லாம் ஒரு அடியா? ஐயோ ஐயோ. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

வடகாசாவில் அகதிமுகாமில் உள்ள பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் - 50க்கும் அதிகமானவர்கள் பலி

Published By: RAJEEBAN    18 NOV, 2023 | 09:03 PM

image

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் முகவர் அமைப்பு நடத்தும் அல்பகுரா பாடசாலைமீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவின் வடபகுதியில் உள்ள  ஜபாலியா அகதிமுகாமில் உள்ள பாடசாலை மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேலின் முடிவற்ற தாக்குதலில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதி மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

எங்குபார்த்தாலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் காணப்படுகின்றன காயமடைந்தவர்களை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என அல்ஜசீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

காசாவின் வடபகுதியில் இடம்பெறும் தாக்குதல் காரணமாக பல பொதுமக்கள் ஐநாவின் அகதிமுகாமில் தஞ்சமடைந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல மருத்துவ தேவைகள் உள்ள மக்கள் ஜபாலியா அகதிமுகாமில் தஞ்சமடைந்துள்ளனர் அவர்களால் அங்கு வன்முறைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கமுடியவில்லை,காசா பள்ளத்தாக்கின் தென்பகுதிக்கு செல்லுங்கள் என்ற செய்தியை இஸ்ரேலிய இராணுவம் தெரிவிக்கின்றது என அல்ஜசீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/169659

இந்த போரை தொடக்கி வைத்த ஹமாஸ் பயங்கரவாதிகள்தான் இதட்கு ஒரு முடிவை கடட வேண்டும். அங்கு குண்டு விழுது , இங்கு குண்டு விழுது எண்டு ஒப்பாரி வைப்பதில் பயனில்லை. பணய கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவதுடன், பயங்கரவாதிகள் வைத்தியசாலைகள் , பாடசாலைகள், அகதி முகாம்களில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது சரணடைய வேண்டும். இல்லாவிட்ட்தால் நிச்சயமாக இதட்கு முடிவில்லாமல் மரணங்கள்தான் சம்பவிக்கும். அல் ஜசீரா தொலை காட்சியில் இவைகளை படம் பிடித்து காட்டுவதால் பிரச்சினையும் தீரப்போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Cruso said:

இதெல்லாம் ஒரு அடியா? ஐயோ ஐயோ. 

கடுகு சிறுசு என்றாலும் காரம் பெரிசு ஹா ஹா 

  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2023 at 15:48, விசுகு said:

தாயகத்தில் இருந்து மக்கள் கெஞ்சிக் கேட்டும் ஓடித்தப்பிய எவராவது இங்கே மாண்டால் விதி வலியது என்பதை ஒத்துக் கொள்ள முடியும் 😭

எமது மக்களை  நட்டாற்றில் விட்டு சென்றவர்கள் எக்கேடு கெட்டாலும் கவலை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

5 நாள் போர் நிறுத்த‌த்துக்கு
ஹ‌மாஸ் போராளிக‌ளும்
இன‌வ‌தா இஸ்ரேலும் உட‌ன் ப‌ட்டு இருக்கின‌ம் 🙏...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பணயக்கைதிகள் விடுதலைக்காக யுத்த நிறுத்தம் - இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் தகவல்

Published By: RAJEEBAN    19 NOV, 2023 | 11:58 AM

image

காசாவில் யுத்த நிறுத்தம் தொடர்பில் அமெரிக்கா இஸ்ரேல் ஹமாசிற்கு  இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது என வொஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

காசாவில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலைக்காக ஐந்துநாள் யுத்த நிறுத்தத்தை கடைப்பிடிப்பது தொடர்பில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது என வோசிங்டன்போஸ்ட் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/169684

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

எமது மக்களை  நட்டாற்றில் விட்டு சென்றவர்கள் எக்கேடு கெட்டாலும் கவலை இல்லை.

நான் நினைக்கிறேன் இது அவர்களாக இருக்க முடியாது என்று. இவர்கள் எப்படியாவது ஓடி தப்பி  விடுவார்கள். இவர்கள் அந்தந்த நாட்டில் உள்ளவர்களை இப்படியான வேலைகளுக்கு சேர்த்து கொள்ளுவார்கள். அநேகமாக உள்ளூர் வேலையாட்களாகத்தான் இருக்க வேண்டும். இவர்கள் உரக்க எமது ஐக்கிய நாடுகள் பணியாளர்கள் என்று சொன்னாலும் எல்லோரும் உள்ளூர் பணியாளர்களே. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

பணயக்கைதிகள் விடுதலைக்காக யுத்த நிறுத்தம் - இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் தகவல்

Published By: RAJEEBAN    19 NOV, 2023 | 11:58 AM

image

காசாவில் யுத்த நிறுத்தம் தொடர்பில் அமெரிக்கா இஸ்ரேல் ஹமாசிற்கு  இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது என வொஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

காசாவில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலைக்காக ஐந்துநாள் யுத்த நிறுத்தத்தை கடைப்பிடிப்பது தொடர்பில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது என வோசிங்டன்போஸ்ட் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/169684

யுத்த நிறுத்தம் உட்பட்டு அங்குள்ள மக்களுக்கு ஒரு ஆறுதல் கிடைப்பதுடன் பணய கைதிகளை விடுவிப்பதன் மூலம் இஸ்ரேலும் தாக்குதலை குறைத்து கொள்ளலாம். இருந்தாலும் ஹமாஸ் பயக்குநகரவாதிகளின் இருப்பானது பிரச்சினைக்குரிய விடயமே. 

13 hours ago, பையன்26 said:

5 நாள் போர் நிறுத்த‌த்துக்கு
ஹ‌மாஸ் போராளிக‌ளும்
இன‌வ‌தா இஸ்ரேலும் உட‌ன் ப‌ட்டு இருக்கின‌ம் 🙏...........

இருந்தாலும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு அடி இருக்குது. இஸ்ரேலுக்கு இப்படியான ஒரு சந்தர்ப்பம் மீண்டும் கிடைக்காது. இஸ்ரேல் இதைக்காகத்தான் பல வருடங்கள் காத்திருந்தது.   பயங்கரவாதிகள் ஒரு சந்தர்ப்பத்தை ஏட்படுத்தி கொடுத்திருப்பதால் அவர்களை நிரம்மூலமாக்குவதட்கு இதுதான் தருணம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிய கொடியுடன் பயணிக்கும் கப்பல்களை தாக்கும் நடவடிக்கை ஆரம்பம் - ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு - கப்பலொன்றையும் கைப்பற்றினர்

Published By: RAJEEBAN   20 NOV, 2023 | 10:25 AM

image

செங்கடல் பகுதியில்  இஸ்ரேலின் கப்பல் ஒன்றினை கைப்பற்றியுள்ளதாக யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான ஜப்பானிலிருந்து இயங்கும் கப்பலை கைப்பற்றியுள்ளதை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய வர்த்தகர் ஒருவருக்கும் சொந்தமான கலக்ஸி லீடர் கப்பலில் 22 பேர் காணப்பட்டனர் என ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

துருக்கியிலிருந்து இந்தியாவிற்கு சென்று கொண்டிருந்த கப்பலையே ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

கப்பலை ஹைப்பற்றியுள்ளதை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர் இஸ்ரேலின் கொடியுடன் பயணிக்கும் கப்பல்களை தாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமானதை அவர்கள் அறிவித்துள்ளனா என தெரிவித்துள்ள அல்ஜசீராவின் செய்தியாளர் இஸ்ரேல் போன்ற நாடுகளிற்காக பணியாற்றவேண்டாம் என சர்வதேச மாலுமிகளை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/169734

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.