Jump to content

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

இம்முறை  நடக்காது. வேணுமானால் வகை தொகையின்றி பலஸ்தீனிய மக்களை கொன்று  குவிக்கலாம்.
 

இங்கு பிரச்சினை என்னவென்றால் இஸ்ரேவேல் ராணுவம் இஸ்ரேலிய பொது மக்களை பாதுகாக்கிறது. பொதுமக்கள் ராணுவத்தை பாதுகாக்கவில்லை.

அங்கு அப்படி இல்லை. பொதுமக்கள்தான் ஹமாஸ் பயங்கரவாதிகளை பாது காக்கிறார்கள். ஒவ்வொரு வீடுகளிலும் பயங்கரவாதிகளும், அவர்களின் பதுங்கு குழிகளும் காணப்படுகின்றது.  எனவே நீங்கள் சொல்லுவது போல நடந்தாலும் ஆச்சரியப்படுவதட்கில்லை. 

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் தலைவர்களுக்கு நாள் குறித்தது இஸ்ரேல் - சர்வதேச அளவில் தேடி கொலை செய்ய திட்டம்

Published By: RAJEEBAN   05 DEC, 2023 | 03:38 PM

image
 

காசாவில் நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் சர்வதேச அளவில் ஹமாஸ் தலைவர்களை கொலை செய்வதற்கு இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

காசாவிற்கு வெளியே கத்தார் துருக்கி லெபனானில் வசிக்கின்ற ஹமாஸ் அமைப்பின் சிரேஸ்ட தலைவர்களை படுகொலை செய்வதற்கான அனுமதியை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உத்தரவிட்டுள்ளார்

அமெரிக்காவின் வோல்ஸ்ரீட் ஜேர்னல் இதனை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பல வருடங்களாக ஹமாஸின் முக்கிய தலைவர்களை கொலை செய்து வருகின்றது அதனை மேலும் விரிவுபடுத்தவுள்ளது.

கத்தார் ரஸ்யா துருக்கி ஈரான் போன்ற நாடுகள் ஹமாஸ் தலைவர்களுக்கு அடைக்கலம் வழங்கியுள்ளன,

கடந்த காலங்களில் பெய்ரூட் லெபானில் இஸ்ரேல் பலரை கொலை செய்திருந்தது.

ஹமாசின் தலைவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடு;க்குமாறு 22 ம் திகதி இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் ஹமாஸ் தலைவர்கள் நீண்டகாலம் உயிர்வாழப்போவதில்லை என்ற அடிப்படையில் கருத்து தெரிவித்திருந்தார்.

அவர்கள் மரணத்திற்காக குறிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு எதிரான போராட்டம் உலகளாவியது காசாவில் உள்ளவர்களுக்கும் விமானங்களில் பயணிக்கும் பயங்கரவாதிகளுக்கும் எதிரானது எனவும் அவர் குறிப்பிட்டார் 

ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலிற்கு பின்னர் சில இஸ்ரேலிய அதிகாரிகள் ஹமாஸ் தலைவர் காலித் மெசாலையும் வெளிநாட்டில் வசிக்கின்ற தலைவர்களையும் கொலை செய்வதற்கான உடனடி அனுமதியை கோரினார்கள் என விடயங்களை நன்கு அறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

hamaz_leaders.jpg

எனினும் துருக்கி கத்தாரில் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் அது பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளை பாதித்திருக்கும்.

இதேவேளை இஸ்ரேலின் இந்த திட்டம் பிழையான ஆலோசனைகளை அடிப்படையாக கொண்டது என இஸ்ரேலின் மொசாட்டின் முன்னாள் தலைவர்  எவ்ரெய்ம் ஹலேவி தெரிவித்துள்ளார்.

ஹமாசை சர்வதேச அளவில் தேடிக்கண்டுபிடித்து அதன் தலைவர்கள் அனைவரையும்  அழிக்க முயல்வது பழிவாங்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டது மூலோபாய நோக்கங்களை அடிப்படையாக கொண்டது இல்லை நம்பமுடியாதது என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/171027

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிய படையினர் காசாவின் தெற்கு நகரத்துக்குள் பிரவேசித்துள்ளார்!

03-2.jpg

இஸ்ரேலிய தரைப்படைகள், மூன்று நாட்கள் நடத்திய கடுமையான தாக்குதலை தொடர்ந்து காசாவின் தெற்கு பகுதிக்குள் பிரவேசித்துள்ளன.

தெற்கு நகரமான கான் யூனிஸின் வடக்கில் தரைவழி நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவ வானொலி செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த நடவடிக்கையின்போது, ஹமாஸ் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஒரு வார கால போர்நிறுத்தம் கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்ததில் இருந்து, காசா மீது இஸ்ரேல் தாக்குதல்களை தொடங்கியுள்ளது.

போர் நிறுத்த காலத்தில் 240 பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு ஈடாக காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 110 பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்தது.

போரின் ஆரம்ப கட்டங்களில் காசாவின் வடக்கு பகுதியிலுள்ள மக்கள் இடம்பெயர்ந்து தஞ்சமடைந்துள்ள தெற்கு நகரான கான் யூனிஸில் ஹமாஸ் உறுப்பினர்கள் பதுங்கியிருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையிலேயே, குறித்த தரைவழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/283417

Link to comment
Share on other sites

25 minutes ago, ஏராளன் said:

போர் நிறுத்த காலத்தில் 240 பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு ஈடாக காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 110 பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்தது.

https://www.aljazeera.com/amp/news/2023/11/28/arrests
 

அதற்கு இணையாக பலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைகள்: ஐ.நா. தலைவர் கவலை

தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. காசாவின் வடக்குப் பகுதியில் மூர்க்கத்தனமான வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் வடக்கு காசாவில் இருந்து வெளியேறினர்.

ஏழு நாள் போர் நிறுத்தத்திற்குப் பிறகு காசா மீது மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. தற்போது தெற்கு காசா பகுதிகளிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இதனால் வீடுகளை இழந்து பாலஸ்தீன மக்கள் எங்கே செல்வது என தெரியாமல் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

காசா மக்கள் தொகையில் 18.7 இலட்சம் பேர் அவர்களுடைய வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தடைபட்டுள்ளது. இந்த நிலையில் முக்கியமான வழித்தடம் துண்டிக்கப்பட்டதால் தொலைத்தொடர்பு வசதிகள் அனைத்தும் செயலிழந்துள்ளது.

காசாவில் “ஒரு மனிதாபிமான பேரழிவை” தடுக்க ஐ.நா. பாதுகாப்பு பேரவை அதன் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

அரபு நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் இரண்டு மாதங்களாக காசாவில் இஸ்ரேல் நடத்தும் போரை முடிவுக்கு கொண்டுவர போர் நிறுத்தம் தீர்மானத்தை அமுல்படுத்தும் வகையில் அழுத்தம் கொடுத்த வருகின்றன.

போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்ததாக தெரிவித்து டிசம்பர் 1 ஆம் திகதி முதல் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஐக்கிய நாடுகளில் அதிகாரமிக்க அமைப்பான பாதுகாப்பு பேரவை போரை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும் என பாலஸ்தீன நாட்டிற்கான ஐ.நா. தூதர் வலியுறுத்தியுள்ளார்.

அரபு நாடுகளை சேர்ந்த 57 உறுப்பினர்கள் சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சர் தலைமையில் அமெரிக்க அதிபர்களை சந்திக்க இருக்கின்றனர். அப்போது போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த இருக்கின்றனர்.

வேகமாக சீர்குலைந்து வரும் மனிதாபிமான அமைப்பு இப்போது முற்றிலும் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது. முகாம்கள் அல்லது உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமானவை இல்லாத பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது பொது ஒழங்கை சீர்குலைக்கும் என ஐக்கிய நாடுகள் தலைவர்கள் எச்சரித்துள்ளார்.

https://thinakkural.lk/article/283912

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைகள்: ஐ.நா. தலைவர் கவலை

தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. காசாவின் வடக்குப் பகுதியில் மூர்க்கத்தனமான வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் வடக்கு காசாவில் இருந்து வெளியேறினர்.

ஏழு நாள் போர் நிறுத்தத்திற்குப் பிறகு காசா மீது மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. தற்போது தெற்கு காசா பகுதிகளிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இதனால் வீடுகளை இழந்து பாலஸ்தீன மக்கள் எங்கே செல்வது என தெரியாமல் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

காசா மக்கள் தொகையில் 18.7 இலட்சம் பேர் அவர்களுடைய வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தடைபட்டுள்ளது. இந்த நிலையில் முக்கியமான வழித்தடம் துண்டிக்கப்பட்டதால் தொலைத்தொடர்பு வசதிகள் அனைத்தும் செயலிழந்துள்ளது.

காசாவில் “ஒரு மனிதாபிமான பேரழிவை” தடுக்க ஐ.நா. பாதுகாப்பு பேரவை அதன் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

அரபு நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் இரண்டு மாதங்களாக காசாவில் இஸ்ரேல் நடத்தும் போரை முடிவுக்கு கொண்டுவர போர் நிறுத்தம் தீர்மானத்தை அமுல்படுத்தும் வகையில் அழுத்தம் கொடுத்த வருகின்றன.

போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்ததாக தெரிவித்து டிசம்பர் 1 ஆம் திகதி முதல் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஐக்கிய நாடுகளில் அதிகாரமிக்க அமைப்பான பாதுகாப்பு பேரவை போரை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும் என பாலஸ்தீன நாட்டிற்கான ஐ.நா. தூதர் வலியுறுத்தியுள்ளார்.

அரபு நாடுகளை சேர்ந்த 57 உறுப்பினர்கள் சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சர் தலைமையில் அமெரிக்க அதிபர்களை சந்திக்க இருக்கின்றனர். அப்போது போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த இருக்கின்றனர்.

வேகமாக சீர்குலைந்து வரும் மனிதாபிமான அமைப்பு இப்போது முற்றிலும் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது. முகாம்கள் அல்லது உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமானவை இல்லாத பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது பொது ஒழங்கை சீர்குலைக்கும் என ஐக்கிய நாடுகள் தலைவர்கள் எச்சரித்துள்ளார்.

https://thinakkural.lk/article/283912

குறைந்த பட்ச்சம் கடத்தி சென்ற இஸ்ரேலிய மக்களை விடுதலை செய்தாலாவது எதையாவது எதிர்பார்க்கலாம். அப்படி இவர்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளை சமாளிக்க முடியாவிடடாள் அங்கு போய் பேசுவதில் ஒரு சத வீதமான பிரயோசனமும் இருக்க போவதில்லை.

அவர்களது சுரங்கபாதைகள் எல்லாம் கடல் நீரில் மூழ்குவதால் அவர்கள் தப்புவதட்கும் சந்தர்ப்பம் இல்லை. அவர்களை காப்பாற்றுவதும் இவர்களது ஒரு நோக்கமாக இருக்கலாம். 

Link to comment
Share on other sites

 

சுதந்திர பாலஸ்தீனத்தை ஏற்றுக்கொள்ளுமாறும், பொது மக்கள் கொலையினை நிறுத்துமாறும் வலியுறுத்தி கொழும்பில் போராட்டம் 

 
image
 

சுதந்திர பாலஸ்தீனத்தை ஏற்றுக்கொள்ளுமாறும், அப்பாவி பொதுமக்களை கொலை செய்வதை நிறுத்துமாறும் வலியுறுத்தி, சுதந்திரத்துக்கான பெண் இயக்கத்தினரால் கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்துக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை (07) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)

IMG_2358.jpg

IMG_2395.jpg

IMG_2389.jpg

IMG_2380.jpg

IMG_2369.jpg

IMG_2361.jpg

 

https://www.virakesari.lk/article/171199

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

 

சுதந்திர பாலஸ்தீனத்தை ஏற்றுக்கொள்ளுமாறும், பொது மக்கள் கொலையினை நிறுத்துமாறும் வலியுறுத்தி கொழும்பில் போராட்டம் 

 
image
 

சுதந்திர பாலஸ்தீனத்தை ஏற்றுக்கொள்ளுமாறும், அப்பாவி பொதுமக்களை கொலை செய்வதை நிறுத்துமாறும் வலியுறுத்தி, சுதந்திரத்துக்கான பெண் இயக்கத்தினரால் கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்துக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை (07) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)

IMG_2358.jpg

IMG_2395.jpg

IMG_2389.jpg

IMG_2380.jpg

IMG_2369.jpg

IMG_2361.jpg

 

https://www.virakesari.lk/article/171199

 

 

 

தமிழர்களுக்கும் விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமான நிலையம் அளவு நிலத்தில் 1.8 மில். மக்களை அனுப்ப திட்டம்

sachinthaDecember 8, 2023

 

wld03-1.jpg

தெற்கு காசாவில் உள்ள சிறு நகரான அல் மவாசியின் ஒரு பகுதியை பாதுகாப்பான இடம் என்று அறிவித்திருக்கும் இஸ்ரேல் பலஸ்தீனர்களை அங்கு செல்லும்படி கூறியுள்ளது.

வடக்கு காசாவை அடுத்து தெற்கு மீது இஸ்ரேல் சராமாரி குண்டு வீசிவரும் நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த பாதுகாப்பு பகுதி போரினால் வெளியேற்றப்பட்டுள்ள 1.8 மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனர்களுக்கு இடவசதி அளிக்கப் போதுமானதா? என்று கேள்வி எழுந்துள்ளது.

பழங்குடி மக்களின் கரையோர நகரான அல் மவாசி சுமார் 1 கி.மீ. அகலம் மற்றும் 14 கி.மீ. நீளமான குறுகலான மற்றும் சிறிய நிலப்பகுதியாகும்.

இதில் வெளியேற்றப்பட்டவர்கள் அடைக்கலம் பெற வேண்டிய பகுதியாக இஸ்ரேல் அறிவித்திருப்பது அந்த நகரில் வெறிச்சோடிய, மணல் திட்டான வெறுமனே 6.5 சதுர கிலோமீற்றர் இடமாகும்.
இது லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்தின் அளவானதாகும். இந்த விமானநிலையத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 167,000 பேர் வருகை தருகின்றனர். அதன்படி ஹீத்ரூ விமானநியைத்தை விட 20 மடங்குக்கு மேற்பட்ட மக்களுக்கு இந்தப் பகுதியில் அடைக்கலம் வழங்க வேண்டி உள்ளது.
எனவே இந்தப் பகுதி பெரும் எண்ணிக்கையான இடம்பெயர்ந்த மக்களுக்கு இட வசதி அளிக்க போதுமானது அல்ல என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

“காசா ஏற்கனவே சனநெரிசல் மிக்க பகுதியாக இருக்கும் நிலையில் விமான நிலையம் ஒன்றுக்குள் சுமார் 1.8 மில்லியன் மக்களை உள்ளடக்குவது பற்றி நாம் பேசுகிறோம்” என்று ரமல்லாவை தளமாகக் கொண்ட சட்ட நிபுணர் புஷ்ரா காலிதி தெரிவித்துள்ளார்.

சன நெரிசல் மிக்க இடத்தில் வாந்திபேதி, இரைப்பைக் குடலழற்சி போன்ற நோய்கள் வேகமாகப் பரவக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இஸ்ரேலின் இந்த அறிவிப்பு பேரழிவை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைச்சின் தலைவர் டெட்ரொஸ் அதனொம் கெப்ரியேசுஸ் ஏற்கனவே எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

https://www.thinakaran.lk/2023/12/08/world/28565/விமான-நிலையம்-அளவு-நிலத்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் பெருமளவு ஆண்களை கைதுசெய்து ஆடைகளை களைந்து தடுத்துவைத்திருக்கும் இஸ்ரேலிய படையினர் - வெளியானது அதிர்ச்சி புகைப்படம்

Published By: RAJEEBAN     08 DEC, 2023 | 01:09 PM

image
 

இஸ்ரேலிய படையினர் காசாவில் பெருமளவு ஆண்களை கைதுசெய்து தடுத்துவைத்திருப்பதை காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலிய படையினர் பெருமளவு ஆண்களை கைதுசெய்து முழங்காலில் அமர்த்தியிருப்பதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில்  வாகனமொன்றில் ஏற்றப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர்.

இந்த சம்பவம் எப்போது இடம்பெற்றது என்ற விபரங்கள் வெளியாகவில்லை, எனினும் அந்த படத்தில் உள்ள சிலரை குடும்பத்தவர்கள் நண்பர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

isreal_arrests1.jpg

அந்த படத்தில் காணப்படுபவர்களில் அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் எந்த அமைப்புடனும் தொடர்பில்லாதவர்கள் என   உறவினர்கள் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா மத்திய தரை மனித உரிமை கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்ட ஒருவரின் படத்தை சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளதுடன் இஸ்ரேலிய இராணுவத்தினர் பலரை கைது செய்து துஸ்பிரயோகம் செய்தனர் என பதிவிட்டுள்ளார்.

இட்பெயர்ந்த மக்களிற்கு எதிராக இஸ்ரேலிய படையினர் கண்மூடித்தனமான கைதுகளில் ஈடுபட்டுள்ளனர், மருத்துவர்கள் கல்விமான்கள் பத்திரிiயாளர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த கேள்விகளுக்கு இஸ்ரேலிய இராணுவம் பதிலளிக்கவில்லை என சிஎன்என் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/171253

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஏராளன் said:

காசாவில் பெருமளவு ஆண்களை கைதுசெய்து ஆடைகளை களைந்து தடுத்துவைத்திருக்கும் இஸ்ரேலிய படையினர் - வெளியானது அதிர்ச்சி புகைப்படம்

Published By: RAJEEBAN     08 DEC, 2023 | 01:09 PM

image
 

இஸ்ரேலிய படையினர் காசாவில் பெருமளவு ஆண்களை கைதுசெய்து தடுத்துவைத்திருப்பதை காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலிய படையினர் பெருமளவு ஆண்களை கைதுசெய்து முழங்காலில் அமர்த்தியிருப்பதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில்  வாகனமொன்றில் ஏற்றப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர்.

இந்த சம்பவம் எப்போது இடம்பெற்றது என்ற விபரங்கள் வெளியாகவில்லை, எனினும் அந்த படத்தில் உள்ள சிலரை குடும்பத்தவர்கள் நண்பர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

isreal_arrests1.jpg

அந்த படத்தில் காணப்படுபவர்களில் அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் எந்த அமைப்புடனும் தொடர்பில்லாதவர்கள் என   உறவினர்கள் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா மத்திய தரை மனித உரிமை கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்ட ஒருவரின் படத்தை சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளதுடன் இஸ்ரேலிய இராணுவத்தினர் பலரை கைது செய்து துஸ்பிரயோகம் செய்தனர் என பதிவிட்டுள்ளார்.

இட்பெயர்ந்த மக்களிற்கு எதிராக இஸ்ரேலிய படையினர் கண்மூடித்தனமான கைதுகளில் ஈடுபட்டுள்ளனர், மருத்துவர்கள் கல்விமான்கள் பத்திரிiயாளர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த கேள்விகளுக்கு இஸ்ரேலிய இராணுவம் பதிலளிக்கவில்லை என சிஎன்என் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/171253

எங்கேயோ பார்த்த படங்கள்??

கேட்ட குரல்கள்?

இரக்கம் தான் வருகுதில்லை.😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவரையும் இழக்காத எவரையும் காசாவில் கண்டுபிடிப்பது சாத்தியமற்ற விடயம் - 120 பேரை இழந்த ஒருவர்

Published By: RAJEEBAN    07 DEC, 2023 | 12:17 PM

image
 

இஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பமான பின்னர் தனது குடும்பத்தை சேர்ந்த 120 பேரை இழந்துள்ளதாக காசாவை சேர்ந்த ஹொசாம் வைல் அபு சமல்லா அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் நான்கு யுத்தங்களை அவர் சந்தித்துள்ள போதிலும்  அவை அனைத்தையும் சேர்த்தாலும் தற்போது இடம்பெறும் விடயங்கள் அவற்றை விட மிகவும் பயங்கரமானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

படுகொலைகளின் அளவு இனச்சுத்திகரிப்பு பொதுமக்கள் பல தடவை இடம்பெயர்ந்தது போன்ற புள்ளிவிபரங்களை அடிப்படையாக வைத்து பார்த்தால் நாங்கள் நக்பாவின் எண்ணிக்கைகளை எப்போதோ கடந்துவிட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

1948 இஸ்ரேல் அராபிய யுத்தத்தின் போது இடம்பெற்ற பாரிய இடப்பெயர்வே நக்பா என அழைக்கப்படுகின்றது.

எவரையும் இழக்காத எவரையும் கண்டுபிடிப்பது சாத்தியமற்றது என்ற நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்,அனைவரும் தங்கள்குடும்பத்தவர்கள் நண்பர்கள் உறவினர்கள் பாடசாலை அல்லது அலுலகத்தை சேர்ந்த எவரையாவது இழந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/171175

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசா மக்களை எதிரியின் கரங்களை நோக்கி தள்ளவேண்டாம் - அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இஸ்ரேலிற்கு எச்சரிக்கை

Published By: RAJEEBAN     07 DEC, 2023 | 01:11 PM

image
 

காசா மக்களை எதிரியின் கரங்களிற்குள் தள்ளும் விதத்தில் இஸ்ரேல் செயற்படக்கூடாது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் எச்சரித்துள்ளார்.

காசாவில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்கள் என செல்வதற்கான இடங்கள் மிகக்குறைவு என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இஸ்ரேலினதும் பாலஸ்தீனத்தினதும் எதிர்காலம் நியாயமான நிரந்தர சமாதானத்திலும்  இரண்டு தேசங்கள் தீர்விலும் தங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர்  தற்போதைய சூழ்நிலை அனைவருக்கும் தோல்வியாக காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பயங்கரவாதிகளிற்கு எதிரான நகரப்போர்முறையில் மிகவும் திறமையானவர் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக போரிட்டஅனுபவம் உள்ளவர். இஸ்ரேலின் உறுதியான ஆதரவாளர் அவர் நீங்கள் பொதுமக்களை எதிரிகளின் கரங்களை நோக்கி தள்ளினால் மூலோபாய தோல்வியை சந்திப்பீர்கள் என குறிப்பிட்டுள்ளார் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தைய மோதல் இடைநிறுத்தம் முடிவிற்குவந்துள்ளதை பாரிய பின்னடைவு என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/171181

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெய்ரூட் காசாவாக மாறும்… ஹிஸ்புல்லாவிற்கு எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் மீது போர் பிரகடன் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் மூர்க்கத்தனமான வகையில் தாக்குதல் நடத்தியது. இதனால் காசாவின் வடக்குப்பகுதி சீர்குலைந்துள்ளது. தற்போது தெற்கு பகுதியிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இதனால் பாலஸ்தீன மக்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் தங்குவதற்கு இடமின்றி அல்லாடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியபோது, லெபனானில் செயற்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஹமாஸ்க்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இரண்டு முனைகளில் இருந்து வரும் தாக்குதலை எதிர்கொண்டு இஸ்ரேல் காசாவை துவம்சம் செய்தது.

இதனால் ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போர் பிராந்திய போராக மாறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் எகிப்து, ஈரான் மற்றும் அரபு நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை. இருந்த போதிலும் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஹிஸ்புல்லாவிற்கு இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில் “ஹிஸ்புல்லா முழு அளவில் போரை தொடங்க முடிவு செய்தால், அதன் சொந்த கைகளால் பெய்ரூட்டை காசாவாகவும், தெற்கு லெபனானை கான் யூனிஸ் நகராகவும் மாற்றும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/284062

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'மன உறுதி உடைந்துவிட்டது, இறந்துவிடலாம் எனத் தோன்றுகிறது' - காஸாவில் பிபிசி செய்தியாளர்

காஸாவிலிருந்து பிபிசி செய்தியாளரின் பதிவு
படக்குறிப்பு,

பிபிசி அரபு செய்தியாளர் அட்னான் எல்-பர்ஷ்

51 நிமிடங்களுக்கு முன்னர்

கான் யூனிஸில் உள்ள நாசேர் மருத்துவமனை முன்பு ஜீன்ஸ் மற்றும் ஃபிளிப் ஃப்ளாப் அணிந்த இளைஞர்கள் ஏதோ இறுதி ஊர்வலம் நடப்பது போல வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர்.

தெற்கு காஸா பகுதியில் டிசம்பர் 1 முதல் இஸ்ரேல் தீவிர குண்டுவீச்சைத் தொடங்கியதில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு முன்பு மற்றுமொரு பதற்றமான இருள் சூழ்ந்த இரவு இது.

ஸ்க்ரப் உடையில் ஆண்கள் அமைதியாகக் கூடி நின்று கொண்டிருந்தார்கள். திடீரென அவசர உதவிக்கான சத்தம் வந்ததும் அங்கு ஓடுகிறார்கள்.

அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போயும், மனச்சோர்வுடனும் இருந்தனர்.

 
காஸாவிலிருந்து பிபிசி செய்தியாளரின் பதிவு
படக்குறிப்பு,

காஸா மருத்துவமனையில் தொடர்ந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

ஹாரன் ஒலித்தவாறே ஒரு கார் நுழைந்தவுடன், அதிலிருந்து ஒரு இளைஞரை ஸ்ட்ரெச்சர் படுக்கையில் இழுத்து மருத்துவமனைக்குள் வேகமாக அழைத்துச் செல்கிறார்கள்.

மற்றுமொரு புழுதி படிந்த கார் ஒன்றும் வந்தது. அதிலிருந்து நான்கு அல்லது 5 வயது மதிக்கத்தக்க குழந்தை இறங்கி நடந்து உள்ளே செல்கிறது.

அடுத்த நாள், ஆறு குழந்தைகளுக்குத் தாயான சாமா இல்வான் உதவி கேட்டு மன்றாடிக் கொண்டிருக்கிறார்.

“ஒட்டுமொத்த உலகம் மற்றும் அரபு உலகத்திற்கு நான் ஒரு செய்தியைக் கூற விரும்புகிறேன்,” என்று கத்தினார் அவர்.

“நாங்கள் அப்பாவிகள். எந்தத் தவறையும் நாங்கள் செய்யவில்லை.”

இரண்டு காலி தண்ணீர் பாட்டில்களை காற்றில் வீசியவாறே தனது 5 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் தாகத்தில் தவிக்கிறார்கள் என்று கூறினார் அவர்.

“நாங்கள் நாய்கள் மற்றும் பூனைகளைப் போல ஆகிவிட்டோம். அவற்றுக்குக்கூட செல்வதற்கு ஒரு இடம் இருக்கும். ஆனால் எங்களுக்கு அப்படியில்லை. நாங்கள் வீதிகளில் சிக்கித் தவிக்கிறோம்."

 
காஸாவிலிருந்து பிபிசி செய்தியாளரின் பதிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

காஸாவில் 15,800 மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இருந்து, இவர்களது வாழ்க்கையே சிதைந்து விட்டது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் குறைந்தது 1,200 மக்களைக் கொன்றுள்ளது, 240க்கும் மேற்பட்டவர்களை காஸாவுக்கு பணயக் கைதிகளாக அழைத்துச் சென்றுள்ளது.

அதிலிருந்து வாரக் கணக்கில் காஸாவின் வடக்குப் பகுதிக்குள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் தீவிர குண்டுவீச்சுத் தாக்குதல் நடைபெற்று வருகிறது.

ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி இதுவரை 15,800 மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகம்.

பாலத்தீன கைதிகளுக்கு மாற்றாக இஸ்ரேலிய பணயக் கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்ட ஏழு நாள் போர் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது மீண்டும் போர் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மத்திய காஸாவில் என் குடும்பம் இருக்க நான் இங்கு தனியாக கான் யூனிஸில் இருக்கிறேன்.

சில நாட்களுக்கு முன்பு வரை நல்ல சிக்னலுடன் கூடிய சாட்டிலைட் வாகனத்திற்கு இந்த இடம் மிகவும் பாதுகாப்பானதாக இருந்தது.

ஒரு பத்திரிக்கையாளராக இருப்பதற்கு நான் எப்போதும் பெருமையடைகிறேன். ஆனால், எனக்கான தேர்வுகள் தீர்ந்து வருகின்றன. வாழ்க்கை என்னை இறுக்கி கொண்டிருக்கிறது.

 
காஸாவிலிருந்து பிபிசி செய்தியாளரின் பதிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இஸ்ரேலிய படை மத்திய காஸா செல்லும் சாலையை முழுவதுமாக தாக்குதல் நடத்தி அடைத்துவிட்டது.

சில நாட்களுக்கு ஒரு முறையாவது எனது குடும்பத்தைப் பார்க்க மத்திய காஸா வரை என்னால் சென்று வர முடிந்தது. ஆனால் இப்போதோ இஸ்ரேலிய படை அங்கு செல்லும் ஒரு சாலையை முழுவதுமாக தாக்குதல் நடத்தி அடைத்துவிட்டது, மற்றொரு சாலையும் மிக ஆபத்தான நிலையில் இருக்கிறது.

எனது பூர்வீகம் வடக்குப் பகுதிதான். ஆனால், தெற்குப் பக்கம் பாதுகாப்பானது என்று இஸ்ரேல் ராணுவம் அறிவித்தவுடன் எனது குடும்பத்தோடு தெற்குப் பக்கம் நோக்கி சென்றுவிட்டேன்.

தற்போதோ, கான் யூனிஸ் பகுதியில் ‘ஆபத்தான தரைவழித் தாக்குதலை’ நடத்த உள்ளதாகவும், தெற்கு நோக்கி எகிப்து எல்லைப் பகுதியில் உள்ள ரஃபாவுக்கு செல்லுமாறும் எங்களை எச்சரித்துள்ளது அது.

போர் ஆரம்பித்ததில் இருந்து எனக்கும் எனது குடும்பத்திற்கும் நடந்தவற்றைத் தாண்டி, முதன்முறையாக நான் முழுமையாகத் தொடர்பு இழந்ததைப் போல் உணர்கிறேன். என்னுடைய ஒட்டுமொத்த மன உறுதியும் கட்டுப்பாடும் என்னிடமிருந்து துடைத்தெறியப் பட்டுவிட்டது.

நான் என் குடும்பத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான திட்டங்களை வைத்திருந்தேன். ஆனால் தற்போது ஒரு நிலையான முடிவெடுக்க முடியாமல் நொறுங்கிப் போயிருக்கிறேன்.

ரஃபாவுக்கு சென்று தொடர்ந்து பணியாற்றிக் கொண்டே என்னுடைய குடும்பம் நலமாக இருக்கும் என்று நான் நம்பிக் கொண்டிருப்பதா? அல்லது இந்த நிலை மோசமடைந்தால் செய்தியளிப்பதை நிறுத்திவிட்டு, அவர்களிடம் சேர்ந்தே இறந்துவிடலா என்று என் குடும்பத்திடம் செல்ல முயல்வதா?

இப்படியொரு மோசமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை யாருக்கும் ஏற்படாது என்று நான் நம்புகிறேன்.

https://www.bbc.com/tamil/articles/c517ly3rm8qo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

பெய்ரூட் காசாவாக மாறும்… ஹிஸ்புல்லாவிற்கு எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் மீது போர் பிரகடன் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் மூர்க்கத்தனமான வகையில் தாக்குதல் நடத்தியது. இதனால் காசாவின் வடக்குப்பகுதி சீர்குலைந்துள்ளது. தற்போது தெற்கு பகுதியிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இதனால் பாலஸ்தீன மக்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் தங்குவதற்கு இடமின்றி அல்லாடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியபோது, லெபனானில் செயற்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஹமாஸ்க்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இரண்டு முனைகளில் இருந்து வரும் தாக்குதலை எதிர்கொண்டு இஸ்ரேல் காசாவை துவம்சம் செய்தது.

இதனால் ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போர் பிராந்திய போராக மாறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் எகிப்து, ஈரான் மற்றும் அரபு நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை. இருந்த போதிலும் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஹிஸ்புல்லாவிற்கு இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில் “ஹிஸ்புல்லா முழு அளவில் போரை தொடங்க முடிவு செய்தால், அதன் சொந்த கைகளால் பெய்ரூட்டை காசாவாகவும், தெற்கு லெபனானை கான் யூனிஸ் நகராகவும் மாற்றும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/284062

ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் லெபனானையும் நாசமாக்க போகிறார்கள். 

Link to comment
Share on other sites

On 7/12/2023 at 20:14, Cruso said:

தமிழர்களுக்கும் விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

இது ஆட்டுக்குள் மாட்டை விடுவதாக எடுக்கலாமா???🤣

1 hour ago, Cruso said:

ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் லெபனானையும் நாசமாக்க போகிறார்கள். 

என்னாது குழந்தைகளை கொல்பவர்கள் மன்னாரில் எப்படி அழைப்பார்கள்?
இஸ்ரேலின் பாரிய தோல்வியை  உலகமே ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டது. 

such a loosers

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இது ஆட்டுக்குள் மாட்டை விடுவதாக எடுக்கலாமா???🤣

என்னாது குழந்தைகளை கொல்பவர்கள் மன்னாரில் எப்படி அழைப்பார்கள்?
இஸ்ரேலின் பாரிய தோல்வியை  உலகமே ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டது. 

such a loosers

சுதந்திர பாலஸ்தீனத்தை வலியுறுத்துவது போல சுதந்திர ஈழத்தையும் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். 

நான் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிப்பிடவில்லை, லெபனான் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிப்பிடடேன். 

அதை உலகம் ஏற்றுக்கொள்வதால் பயனில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் போரை நிறுத்த ஐ.நா. சபையில் தீர்மானம்: சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தது அமெரிக்கா

இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. காசா வடக்கு பகுதியைத் தொடர்ந்து தெற்கு பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது.

இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. முதலில் வடக்கு காசாவில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தற்போது தெற்கு காசாவிலும் தொடர்ந்து குண்டு வீசப்பட்டு வருகிறது. குறிப்பாக கான் யூனிஸ் நகரை குறிவைத்து தீவிர தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதில் பலர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் 450 க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவம் கூறும்போது, 24 மணி நேரத்தில் நிலம், கடல், வான்வழியாக காசாவில் 450-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டன என தெரிவித்தது.

காசாவில் போரை நிறுத்தும்படி இஸ்ரேலை ஐ.நா. சபை மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதை இஸ்ரேல் நிராகரித்தது. இந்த நிலையில் காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு பேரவையின் தீர்மானத்துக்கு 13 நாடுகள் ஆதரவு அளித்தன. இங்கிலாந்து பங்கேற்கவில்லை. அமெரிக்கா எதிராக வாக்களித்தது. இந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.

ஹமாஸ் அமைப்பிடம் 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இருக்கும் நிலையில், இந்த தீர்மானம் ஹமாசின் கைகளில் அதிகாரத்தை அளிக்கும் என தெரிவித்த அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரம் மூலம் தீர்மானத்தை நிராகரித்தது.

இது தொடர்பாக ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் துணை தூதர் ரொபர்ட் வுட் கூறும்போது, “நீடித்த அமைதிக்கு இருநாடுகளின் தீர்வை காண ஹமாஸ் விரும்பவில்லை. இஸ்ரேலில் ஹமாசின் தாக்குதல்களைக் கண்டிக்கத் தவறி விட்டனர், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை அங்கீகரிக்கிறோம். இராணுவ நடவடிக்கையை நிறுத்துவது ஹமாஸ் ஆட்சியை தொடர அனுமதிக்கும். இது அடுத்த போருக்கான விதைகளை மட்டுமே விதைக்கும்” எனத் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/284211

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Cruso said:

ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் லெபனானையும் நாசமாக்க போகிறார்கள். 

ஓம்

6 hours ago, Cruso said:

அதை உலகம் ஏற்றுக்கொள்வதால் பயனில்லை. 

நீங்கள் உமாபதி வீடியோ (துவாரகா புகழ் ) பார்க்கவில்லை போல் இருக்கின்றது. ஹமாஸ் குமுற குமுற அடித்ததில் இஸ்ரேலின் கதை முடிந்து விட்டது 😂
இன்ஷா அல்லாஹ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

🤣🤣🤣

 

spacer.png

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள படத்தில் சொல்லபட்டது உள்ளது உண்மை நிலை.ஆனால் குரங்கு சிங்கத்தை குமுற குமுற அடித்து அதன் கதையை முடித்துவிட்டது என்றல்லவா தமிழில் கதை சொல்கிறார்கள்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Cruso said:

சுதந்திர பாலஸ்தீனத்தை வலியுறுத்துவது போல சுதந்திர ஈழத்தையும் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். 

நான் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிப்பிடவில்லை, லெபனான் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிப்பிடடேன். 

அதை உலகம் ஏற்றுக்கொள்வதால் பயனில்லை. 

ஹமாஸ்சை உருவாக்கியதே அமெரிக்கர்கள் தானாம். ஆங்கிலேயர்கள் என்றுமே  பிரித்தாழுவதில் வல்லவர்கள். அதனால் தான்  முழு உலகையும் கையகப்படுத்தி வைத்துள்ளர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஓம்

நீங்கள் உமாபதி வீடியோ (துவாரகா புகழ் ) பார்க்கவில்லை போல் இருக்கின்றது. ஹமாஸ் குமுற குமுற அடித்ததில் இஸ்ரேலின் கதை முடிந்து விட்டது 😂
இன்ஷா அல்லாஹ்

நான் அந்த வீடியோ பார்க்கவில்லை. ஹமாஸ் குமுற குமுற என்னத்தை அடித்தார்கள்? யா அல்லாஹ். 😜

1 hour ago, குமாரசாமி said:

ஹமாஸ்சை உருவாக்கியதே அமெரிக்கர்கள் தானாம். ஆங்கிலேயர்கள் என்றுமே  பிரித்தாழுவதில் வல்லவர்கள். அதனால் தான்  முழு உலகையும் கையகப்படுத்தி வைத்துள்ளர்கள்.

அதட்கும் ஒரு வல்லமை இருக்க வேண்டும். தேவைப்படும்போது உருவாக்குவதும் தேவைப்படாத போது அகற்றி விடவும்வேண்டும். ஜப்பானியர்களின் அந்த 5 S பாடத்தை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

எப்படி இருந்தபோதும் உலகை கையகப்படுத்தி வைத்திருப்பதென்பது இலகுவானதாக இருக்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் ராணுவம் பாலத்தீனர்களை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்ததா?

பாலத்தீனியர்களை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்ததா இஸ்ரேல் ராணுவம்?
கட்டுரை தகவல்
  • எழுதியவர், பால் ஆடம்ஸ்
  • பதவி, பிபிசி செய்திகள், ஜெருசலேம்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கான் யூனிஸ் மற்றும் காஸாவின் வடக்குப் பகுதியில் சண்டை மூண்டுள்ள நிலையில், பல பாலத்தீனியர்களை இஸ்ரேல் பிடித்து வைத்துள்ளதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

பிபிசியால் சரிபார்க்கப்பட்ட இந்தக் காட்சிகளில் அவர்கள் தங்கள் உள்ளாடைகளைக் களையப்பட்டு, தரையில் மண்டியிட்டு, இஸ்ரேலிய படையினரால் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

காஸா பகுதியின் வடக்கே உள்ள பெய்ட் லாஹியாவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதில் சில ஆண்கள் விடுவிக்கப்பட்டதாக பிபிசிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட ஆண்களில் ஒருவர் நன்கு அறியப்பட்ட பாலத்தீனிய பத்திரிகையாளர் ஆவார்.

வீடியோவை பற்றிக் கேட்டதற்கு, இஸ்ரேலிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் அனைவரும் ராணுவத்தில் சேர்வதற்கான வயதுடையவர்கள் என்றும், பல வாரங்களுக்கு முன்பே பொதுமக்கள் வெளியேறியிருக்க வேண்டிய பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டவர்கள் என்றும் கூறினார்.

வீடியோவில், டஜன் கணக்கான ஆண்கள் ஒரு நடைபாதையில் வரிசையாக நிற்கிறார்கள் மற்றும் சாலை முழுவதும் சிதறிக் கிடக்கும் தங்கள் காலணிகளை கழற்றச் சொன்னதாகத் தெரிகிறது. இஸ்ரேலிய படைகளும், கவச வாகனங்களும் அவர்களின் பாதுகாப்புக்காக நிற்கின்றன.

மற்ற படங்கள் அவர்கள் ராணுவ டிரக்குகளில் கொண்டு செல்லப்படுவதைக் காட்டுகின்றன. இஸ்ரேலிய ஊடகங்களில், இந்தக் கைதிகள் சரணடைந்த ஹமாஸ் போராளிகள் என்று வர்ணிக்கப்படுகின்றன.

 
கைது செய்யப்பட்டவர்களின் வீடியோவில் இருந்தவர்களில் பாலஸ்தீனிய பத்திரிகையாளர், அல்-அரபி அல்-ஜதீதின் நிருபர் தியா அல்-கஹ்லூட் அடையாளம் காணப்பட்டுள்ளார். புதிய அரபு என்ற பெயரில் ஆங்கிலத்திலும் வெளியிடும் அரபு மொழி செய்தி நிறுவனம், அல்-கஹ்லூட் அவரது சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் "பிற குடிமக்களுடன்" பெய்ட் லாஹியாவில் இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்டதாகக் கூறியது. அல்-அரபி அல்-ஜதீத் வியாழன் அன்று திரு அல்-கஹ்லூத்தை "அவமானகரமான" காவலில் வைத்தது என்று விவரிக்கிறது. படையினர் ஆண்களை அவர்களது ஆடைகளை கழற்றுமாறு வற்புறுத்தியதாகவும், "அவர்கள் கைது செய்யப்பட்டவுடன், அவர்களை வெளிப்படுத்தாத இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு முன், அவர்களை ஆக்கிரமிப்புத் தேடுதல்கள் மற்றும் அவமானகரமான சிகிச்சைக்கு உட்படுத்தினர்" என்றும் அது கூறியது. இந்த வெளியீடானது "சர்வதேச சமூகம், ஊடகவியலாளர்களின் உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளை இஸ்ரேல் பிராந்தியத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் மீது நடத்தும் இந்தத் தாக்குதலைக் கண்டிக்க வேண்டும்" என்று வலியுறுத்துகிறது. அல்-கஹ்லூட்டின் சக ஊழியர், பாலஸ்தீனிய பத்திரிகையாளர் லாமிஸ் ஆண்டோனி, வெள்ளிக்கிழமை ரேடியோ 4 இன் PM நிகழ்ச்சியில், பல கைதிகள் விடுவிக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் திரு அல்-கஹ்லூட் அல்ல. விடுவிக்கப்பட்டவர்கள், அவர் இஸ்ரேலில் உள்ள ஜிகிம் இராணுவத் தளத்திற்கு மாற்றப்பட்டதாக திரு கஹ்லூட்டின் குடும்பத்தினரிடம் கூறியதாக அன்டோனி கூறினார். இந்த கூற்றை பிபிசி சரிபார்க்கவில்லை. "அவருடைய தலைவிதியைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. இந்த மனிதர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பயங்கரமானவை. நான் அதிர்ச்சியடைந்தேன்," என்று அவர் கூறினார். தனது ஊடகம் ஐ.நா வழியாக இஸ்ரேலியப் படைகளுடன் தொடர்பு கொள்கிறது. பால் பிரவுன், பீட்டர் மவாய் மற்றும் அலெக்ஸ் முர்ரே ஆகியோரின் கூடுதல் அறிக்கைகைது செய்யப்பட்டவர்களின் வீடியோவில் இருந்தவர்களில் பாலஸ்தீனிய பத்திரிகையாளர், அல்-அரபி அல்-ஜதீதின் நிருபர் தியா அல்-கஹ்லூட் அடையாளம் காணப்பட்டுள்ளார். புதிய அரபு என்ற பெயரில் ஆங்கிலத்திலும் வெளியிடும் அரபு மொழி செய்தி நிறுவனம், அல்-கஹ்லூட் அவரது சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் "பிற குடிமக்களுடன்" பெய்ட் லாஹியாவில் இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்டதாகக் கூறியது. அல்-அரபி அல்-ஜதீத் வியாழன் அன்று திரு அல்-கஹ்லூத்தை "அவமானகரமான" காவலில் வைத்தது என்று விவரிக்கிறது. படையினர் ஆண்களை அவர்களது ஆடைகளை கழற்றுமாறு வற்புறுத்தியதாகவும், "அவர்கள் கைது செய்யப்பட்டவுடன், அவர்களை வெளிப்படுத்தாத இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு முன், அவர்களை ஆக்கிரமிப்புத் தேடுதல்கள் மற்றும் அவமானகரமான சிகிச்சைக்கு உட்படுத்தினர்" என்றும் அது கூறியது. இந்த வெளியீடானது "சர்வதேச சமூகம், ஊடகவியலாளர்களின் உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளை இஸ்ரேல் பிராந்தியத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் மீது நடத்தும் இந்தத் தாக்குதலைக் கண்டிக்க வேண்டும்" என்று வலியுறுத்துகிறது. அல்-கஹ்லூட்டின் சக ஊழியர், பாலஸ்தீனிய பத்திரிகையாளர் லாமிஸ் ஆண்டோனி, வெள்ளிக்கிழமை ரேடியோ 4 இன் PM நிகழ்ச்சியில், பல கைதிகள் விடுவிக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் திரு அல்-கஹ்லூட் அல்ல. விடுவிக்கப்பட்டவர்கள், அவர் இஸ்ரேலில் உள்ள ஜிகிம் இராணுவத் தளத்திற்கு மாற்றப்பட்டதாக திரு கஹ்லூட்டின் குடும்பத்தினரிடம் கூறியதாக அன்டோனி கூறினார். இந்த கூற்றை பிபிசி சரிபார்க்கவில்லை. "அவருடைய தலைவிதியைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. இந்த மனிதர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பயங்கரமானவை. நான் அதிர்ச்சியடைந்தேன்," என்று அவர் கூறினார். தனது ஊடகம் ஐ.நா வழியாக இஸ்ரேலியப் படைகளுடன் தொடர்பு கொள்கிறது. பால் பிரவுன், பீட்டர் மவாய் மற்றும் அலெக்ஸ் முர்ரே ஆகியோரின் கூடுதல் அறிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இன்னும் பிபிசியால் சரிபார்க்கப்படாத மற்றொரு படத்தில் புல்டோசரால் தோண்டப்பட்ட பெரிய குழியாகத் தோன்றும் இடத்தில் மனிதர்கள் கண்களை மூடியபடி மண்டியிட்டுக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF), இந்தப் படங்கள் குறித்து நேரடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி வியாழன் அன்று, "இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் போராளிகள் மற்றும் ஷின் பெட் அதிகாரிகள் நூற்றுக்கணக்கான பயங்கரவாத சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து விசாரித்தனர்," என்று கூறினார்.

"அவர்களில் பலர் கடந்த 24 மணிநேரத்தில் எங்கள் படைகளுக்கு தங்களைத் தாங்களே மாற்றிக் கொண்டனர். அவர்களின் விசாரணையில் இருந்து வெளிவரும் தகவல்கள் சண்டையைத் தொடர பயன்படுத்தப்படுகிறது," எனக் கூறினார்.

கடந்த வெள்ளியன்று, இஸ்ரேலிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் எய்லோன் லெவி பிபிசியிடம், வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியா மற்றும் ஷேஜாயாவில் ஆண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். அதை அவர் "ஹமாஸ் கோட்டைகள் மற்றும் ஈர்ப்பு மையங்கள்" என்று விவரித்தார்.

"சில வாரங்களுக்கு முன்பு பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படும் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ராணுவத்தில் சேர்வதற்கான வயதை ஒத்த ஆட்களைப் பற்றி நாங்கள் பேசுகிறோம்," என்று அவர் கூறினார்.

லெவி மேலும் கூறுகையில், "உண்மையில் யார் ஹமாஸ் பயங்கரவாதி, யார் அல்ல என்பதைக் கண்டறிய" அவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.

இஸ்ரேலியப் படைகள் ஹமாஸுடன் "நெருக்கமான போரில்" ஈடுபட்ட பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் வலியுறுத்தினார். அவர்கள் "வேண்டுமென்றே பொதுமக்கள் போல் மாறுவேடமிட்டு" சிவிலியன் கட்டடங்களில் இருந்து செயல்பட்டு வந்தனர்.

வியாழன் அன்று பெய்ட் லாஹியாவில் இஸ்ரேலிய ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்த குழுவில் அவரது உறவினர்கள் 10 பேர் அங்கம் வகித்ததாகக் கூறும் நபரிடம் பிபிசி பேசியுள்ளது.

பாதுகாப்புக் கவலைகள் குறித்து அநாமதேயமாக இருக்க விரும்பும் நபர் - பிபிசி அரபியின் எதார் ஷலாபியிடம், இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைந்து மெகாஃபோன்களை பயன்படுத்தி ஆண்களை அவர்களது வீடுகள் மற்றும் ஐ.நா. நிவாரண நிறுவனம் (UNRWA) பள்ளிகளில் இருந்து ஆர்டர் செய்ததாகக் கூறினார்.

அப்பகுதியில் உள்ள பெண்களை அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்லும்படி ஐ.டி.எஃப் உத்தரவிட்டது. பின்னர் ஆண்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவில்லை என்றால் அவர்களை சுட்டுக் கொல்லப் போவதாக மிரட்டினர், என்றார்.

அந்த நபர் தனது உறவினர்கள் ஏழு பேர் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பியதாகக் கூறினார். ஆனால் இஸ்ரேலிய காவலில் இருக்கும் மூவரின் கதி என்னவென்று தனக்குத் தெரியாது என்று கூறினார்.

சமூக ஊடகங்களில் ஒரு பதிவில், பிரிட்டனுக்கான பாலத்தீனிய தூதர், "ஐ.நா. தங்குமிடத்தில் இருந்து எடுக்கப்பட்ட பொதுமக்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் தடுத்து வைத்து அகற்றும் காட்டுமிராண்டித்தனமான படங்கள்," என்று விவரித்தார்.

"இது மனிதகுலத்தின் வரலாற்றின் சில இருண்ட பத்திகளைத் தூண்டுகிறது," என்று ஹுசம் சோம்லாட் கூறினார்.

 
கைது செய்யப்பட்டவர்களின் வீடியோவில் இருந்தவர்களில் பாலஸ்தீனிய பத்திரிகையாளர், அல்-அரபி அல்-ஜதீதின் நிருபர் தியா அல்-கஹ்லூட் அடையாளம் காணப்பட்டுள்ளார். புதிய அரபு என்ற பெயரில் ஆங்கிலத்திலும் வெளியிடும் அரபு மொழி செய்தி நிறுவனம், அல்-கஹ்லூட் அவரது சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் "பிற குடிமக்களுடன்" பெய்ட் லாஹியாவில் இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்டதாகக் கூறியது. அல்-அரபி அல்-ஜதீத் வியாழன் அன்று திரு அல்-கஹ்லூத்தை "அவமானகரமான" காவலில் வைத்தது என்று விவரிக்கிறது. படையினர் ஆண்களை அவர்களது ஆடைகளை கழற்றுமாறு வற்புறுத்தியதாகவும், "அவர்கள் கைது செய்யப்பட்டவுடன், அவர்களை வெளிப்படுத்தாத இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு முன், அவர்களை ஆக்கிரமிப்புத் தேடுதல்கள் மற்றும் அவமானகரமான சிகிச்சைக்கு உட்படுத்தினர்" என்றும் அது கூறியது. இந்த வெளியீடானது "சர்வதேச சமூகம், ஊடகவியலாளர்களின் உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளை இஸ்ரேல் பிராந்தியத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் மீது நடத்தும் இந்தத் தாக்குதலைக் கண்டிக்க வேண்டும்" என்று வலியுறுத்துகிறது. அல்-கஹ்லூட்டின் சக ஊழியர், பாலஸ்தீனிய பத்திரிகையாளர் லாமிஸ் ஆண்டோனி, வெள்ளிக்கிழமை ரேடியோ 4 இன் PM நிகழ்ச்சியில், பல கைதிகள் விடுவிக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் திரு அல்-கஹ்லூட் அல்ல. விடுவிக்கப்பட்டவர்கள், அவர் இஸ்ரேலில் உள்ள ஜிகிம் இராணுவத் தளத்திற்கு மாற்றப்பட்டதாக திரு கஹ்லூட்டின் குடும்பத்தினரிடம் கூறியதாக அன்டோனி கூறினார். இந்த கூற்றை பிபிசி சரிபார்க்கவில்லை. "அவருடைய தலைவிதியைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. இந்த மனிதர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பயங்கரமானவை. நான் அதிர்ச்சியடைந்தேன்," என்று அவர் கூறினார். தனது ஊடகம் ஐ.நா வழியாக இஸ்ரேலியப் படைகளுடன் தொடர்பு கொள்கிறது. பால் பிரவுன், பீட்டர் மவாய் மற்றும் அலெக்ஸ் முர்ரே ஆகியோரின் கூடுதல் அறிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கைது செய்யப்பட்டவர்களின் வீடியோவில் இருந்தவர்களில் பாலத்தீனிய பத்திரிகையாளர், அல்-அரபி அல்-ஜதீதின் நிருபர் தியா அல்-கஹ்லூட் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புதிய அரபு என்ற பெயரில் ஆங்கிலத்திலும் வெளியிடும் அரபு மொழி செய்தி நிறுவனம், அல்-கஹ்லூட் அவரது சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் "பிற குடிமக்களுடன்" பெய்ட் லாஹியாவில் இஸ்ரேலிய படைகளால் கைது செய்யப்பட்டதாகக் கூறியது.

அல்-அரபி அல்-ஜதீத் வியாழன் அன்று அல்-கஹ்லூத்தை "அவமானகரமான" காவலில் வைத்தது என்று விவரிக்கிறது.

படையினர் ஆண்களை அவர்களது ஆடைகளைக் கழற்றுமாறு வற்புறுத்தியதாகவும், "அவர்கள் கைது செய்யப்பட்டவுடன், அவர்களை வெளிப்படுத்தாத இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கு முன், அவர்களை ஆக்கிரமிப்புத் தேடுதல்கள் மற்றும் அவமானகரமான சிகிச்சைக்கு உட்படுத்தினர்" என்றும் அது கூறியது.

இந்த வெளியீடானது "சர்வதேச சமூகம், ஊடகவியலாளர்களின் உரிமைப் பாதுகாவலர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளை இஸ்ரேல் பிராந்தியத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் மீது நடத்தும் இந்தத் தாக்குதலைக் கண்டிக்க வேண்டும்" என்று வலியுறுத்துகிறது.

அல்-கஹ்லூட்டின் சக ஊழியர், பாலத்தீனிய பத்திரிகையாளர் லாமிஸ் ஆண்டோனி, வெள்ளிக்கிழமை ரேடியோ 4இன் மாலைநேர நிகழ்ச்சியில், பல கைதிகள் விடுவிக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் அல்-கஹ்லூட் விடுவிக்கப்படவில்லை.

விடுவிக்கப்பட்டவர்கள், அவர் இஸ்ரேலில் உள்ள ஜிகிம் ராணுவத் தளத்திற்கு மாற்றப்பட்டதாக கஹ்லூட்டின் குடும்பத்தினரிடம் கூறியதாக அன்டோனி கூறினார். இந்தக் கூற்றை பிபிசி சரிபார்க்கவில்லை.

"அவர்களின் நிலைமை பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. இந்த மனிதர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பயங்கரமானவை. நான் அதிர்ச்சியடைந்தேன்," என்று அவர் கூறினார். தனது ஊடகம் ஐ.நா வழியாக இஸ்ரேலியப் படைகளுடன் தொடர்பு கொள்கிறது.

கூடுதல் செய்திகளை வழங்கியவர்கள்: பால் பிரவுன், பீட்டர் மவாய் மற்றும் அலெக்ஸ் முர்ரே

https://www.bbc.com/tamil/articles/cv2z2p28dk5o

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.