Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

☹️

US official accused IDF of sexually abusing Palestinian women, general says

By 103FM    Published: MARCH 24, 2024 13:07 Updated: MARCH 24, 2024 15:14 Women mourn Palestinians killed in Israeli strikes, amid the ongoing conflict between Israel and Hamas, at Al-Aqsa hospital in Deir Al-Balah in the central Gaza Strip, March 21, 2024.  (photo credit: REUTERS/Ramadan Abed) Women mourn Palestinians killed in Israeli strikes, amid the ongoing conflict between Israel and Hamas, at Al-Aqsa hospital in Deir Al-Balah in the central Gaza Strip, March 21, 2024.  (photo credit: REUTERS/Ramadan Abed)

IDF Brig.-Gen. (res.) Amir Avivi: A US State Department official claimed that Israel "systematically" sexually abuses Palestinian women.

 

IDF Brig.-Gen. (res.) Amir Avivi met with the holder of the Israeli-Palestinian portfolio at the US State Department, who accused Israel of "systematically" sexually abusing Palestinian woman, the general explained in an interview on 103FM.

 

Recounting his meeting, he explained, "It was a meeting that shook me. We sat there, talked about the situation, and suddenly she accused Israel of systematically sexually abusing Palestinian women."

Avivi described his reaction.

 

"This is absolutely disconnected from reality. But without hesitation, she said, 'The UN presented evidence to the Israeli government.' I told her, 'Does it make sense that this phenomenon would exist and the media would never have reported on it?' I wanted there to be greater awareness... about what is really happening in the US State Department. In the end, I left there with the feeling that they simply don't talk to us and don't pass on any information."

  Advertisement
Is it the official US position that IDF soldiers rape Palestinian women?

"When we meet with a State Department official holding the Israeli-Palestinian portfolio, every word she utters, as far as I'm concerned, is an official US position. Ultimately, she is a government official. When she says, for example, 'You did not provide evidence that Hamas is stealing humanitarian aid and you are starving the population,' what is she talking about? The IDF spokesperson shows [proof] every other day that Hamas is stealing food. 

  IDF troops operate in the Gaza Strip. March 23, 2024.  (credit: IDF SPOKESPERSON'S UNIT) IDF troops operate in the Gaza Strip. March 23, 2024. (credit: IDF SPOKESPERSON'S UNIT)

"You're saying, guys, wake up and sit with these officials because they have a significant influence on what happens at the decision-maker level, and you will work to bridge the gaps.

"We will continue to meet with them, as we did with European Union officials, where many of the people we met said, 'This is the first time we're meeting an Israeli representative,' even though it isn't an official delegation. But we don't have a big Foreign Ministry and not a lot of officials working abroad."

https://m.jpost.com/israel-hamas-war/article-793420

  • 2 weeks later...
  • Replies 1.5k
  • Views 157.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காஸாவுக்கு எல்லைகள் ஊடான விநியோகங்களை தற்காலிகமாக அனுமதிக்கிறது இஸ்ரேல்

Published By: SETHU   05 APR, 2024 | 12:13 PM

image
 

தனது எல்லைகளுக்கு ஊடாக காஸாவுக்கு உதவிப்பொருட்கள் விநியோகத்தை தற்காலிகமாக இஸ்ரேல் அனுமதிக்கவுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.

இதன்படி, காஸாவின் வடபகுதியிலுள்ள எரீஸ் கடவையை ஒக்டோபர் 7 ஆம் திகதியின் பின்னர் முதல் தடவையாக இஸ்ரேல் திறக்கவுள்ளது.

அத்துடன், காஸாவின் வடபகுதியிலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் தூரத்திலுள்ள இஸ்ரேலிய நகரான அஷ்தோத்திலுள்ள துறைமுகத்துக்கு ஊடாக விநியோகங்களை மேற்கொள்ளவும் இஸ்ரேல் அனுமதித்துள்ளதாகவும்,  ஜோர்தானிலிருந்து வரும் உதவிகளை அதிகரிப்பதற்கு அனுமதித்துள்ளதாகவும் இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காஸா விடயத்தில் தனது கொள்கையில் கடும் மாற்றம் ஏற்படலாம் என  அமெரிக்க எச்சரித்த சில மணித்தியாலங்களில் இஸ்ரேல் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

https://www.virakesari.lk/article/180497

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவின் 12 வயது மருத்துவ உதவியாளர் : மருத்துவமனையில் இடம்பெயர்ந்து தஞ்சமடைந்த சிறுவனின் மனிதாபிமான செயல் !

Published By: RAJEEBAN   05 APR, 2024 | 01:02 PM

image

இஸ்ரேல் மேற்கொண்டுள்ள  தாக்குதல்கள்  காரணமாக இடம்பெயர்ந்து  மருத்துவமனையில் தஞ்சமடைந்த 12 வயது சிறுவன் அந்த மருத்துவமனையில் தற்போது மருத்துவ உதவியாளராக பணிபுரிகின்றான் என அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

zakaria_2.jpg

12 வயது ஜகாரியாஸ் சர்சாக்  காசாவின் அல்அக்சா மருத்துவமனையில் மருத்துவ தொண்டராக பணியாற்றுகின்றான்.

காசாவில் காயமடைபவர்கள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக இந்த மருத்துவமனையின் மருத்துவர்களிற்கு உதவியாளர்கள் தேவைப்படுகின்றனர்.

நான் மருத்துவர்களிடமிருந்து அனைத்தையும் கற்றுக்கொண்டேன் மனப்பாடம் செய்துகொண்டேன் என சேர்செக் தெரிவிக்கின்றான்.

நான் கனுலாசை பொருத்துவேன் ஐஎவ திரவங்களை பொருத்துவேன் அகற்றுவேன் ஊசிகளையும் கையாள்வேன் என அந்த சிறுவன் தெரிவிக்கின்றான்.

மருத்துவ குழுக்களிடம் ஸ்கான் அறிக்கைகளை கொண்டு சென்று கொடுத்தல் தாதிமார்களிற்கு மருந்துகள் மருத்துவ உபகரணங்களை வழங்குதல் போன்றவற்றில் அவன் ஈடுபடுகின்றான். என அல்அக்ஷா மருத்துவமனையின் இயக்குநர் இயாட் அபு ஜஹெர் தெரிவிக்கின்றார்.

அல்அக்ஷா மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் தொடர்ச்சியாக 170 நாட்களிற்கு மேல் பணியாற்றிவருகின்றனர். காசாவின் உயிரிழப்புகள் காயங்கள் காரணமாக அவர்கள் அதிகளவு சுமையை சுமக்கவேண்டியுள்ளது என அவர் தெரிவிக்கின்றார்.

இந்த சிறுவன் இடம்பெயர்ந்த நிலையில் எங்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான் அவன் மருத்துவமனையில் மருத்துவர்கள் தாதிமார் தொடர்ச்சியாக 24 மணிநேரம் பணியாற்றுவதை பார்த்தான் என அல்அக்ஷா மருத்துவமனையின் இயக்குநர் தெரிவிக்கின்றார்.

வெளிப்படையாக தெரிவிப்பதென்றால் இந்த குழந்தை மிகவும் உயர்குணம் படைத்தது என அவர் தெரிவிக்கின்றார்.

ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல் காரணமாக 364 மருத்துவ  பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா பள்ளத்தாக்கின் மருத்துவமனைகளை இஸ்ரேல் தொடர்ந்தும் இலக்குவைத்து வருகின்றது.

நான் வளர்ந்ததும் மருத்துவனாவேன் என்கின்றான் 12 வயது ஜகாரியாஸ் சர்சாக்  யுத்தம முடிந்ததும் என நம்பிக்கை வெளியிடும் அவன் நாங்கள் சிறுவர்கள் குறித்து அச்சமடைந்துள்ளோம் அவர்கள் அச்சத்தினால் நடுங்குவதை பார்ப்பது மனக்கவலையை அளிக்கின்றது எனவும் குறிப்பிடுகின்றான்.

கடவுள் அருள்புரிந்தால் நாங்கள் விரைவில் வீடு திரும்பலாம் என அவன் தெரிவிக்கின்றான்.

நீங்கள் ஒரு நாயகன் என 12 வயது சிறுவனின் கரங்களை பிடித்து  அல்அக்ஷா மருத்துவமனையின் இயக்குநர் தெரிவிப்பதை அல்ஜசீராவின் வீடியோவில் காணமுடிகின்றது.

நீங்கள் ஆற்றுகின்ற தொண்டர் பணியை உலகின் சில நாடுகள் புரிவதில்லை என அந்த சிறுவனிடம் தெரிவிக்கும் அவர் அந்த சிறுவனை கட்டியணைத்து நெற்றியில் முத்தமிடுகின்றார்.

zakaria_1.jpg

இதேவேளை இந்த சிறுவன் குறித்து ஏபிசி நியுஸ் விபரங்களை வெளியிட்டுள்ளது அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

நான் வழமையாக எனது சகோதரர்களுடன் விளையாடுவேன் அல்லது பள்ளிப்பாடங்களை படிப்பேன் என தெரிவிக்கும் 12வயது ஜகாரியா சர்சாக் எனக்கு தற்போது அதற்கான சந்தர்ப்பம் இல்லை என்கின்றான் அதற்கு பதில் அவன் காசா பள்ளத்தாக்கின் மருத்துவமனையின் ஒரு அவசரசேவை பிரிவிலிருந்து மற்றுமொரு அவசரசேவை பிரிவி;ற்கு ஒடிக்கொண்டிருக்கி;ன்றான்.

இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காயமடைந்தவர்களை காப்பாற்றவும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கவும் அவன் அம்புலன்ஸ் பணியாளர்களுடன் இணைந்து  தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளிற்கு விரைகின்றான்.

யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள காசாவின் நம்பமுடியாத இளம் மருத்து தொண்டரான ஜகாரியா சர்சாக் ஒக்டோர் ஏழாம் திகதிக்கு பின்னர் தான் நாளாந்தம் சந்திக்கும் அனுபவங்கள் தனது வயதுக்கு சற்று அதிகமானவை என தெரிவித்தான்.

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிற்குள் நுழைந்து மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலிய இராணுவம் தொடர்ச்சியாக மேற்கொண்ட ஏவுகணை மற்றும் தரை தாக்குதல் காரணமாக ஜகாரியாவின் தாயகம் தலைகீழாக புரட்டிப்போட்டது.

இஸ்ரேலின் இந்த தாக்குதல் தற்போது 32000 உயிர்களை பலியெடுத்துள்ளதுஇஎன ஹமாசின் மருத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.74000 பேர் இந்த தாக்குதல் காரணமாக காயமடைந்துள்ளனர்.

தனது உதவியை ஏனைய அம்புலன்ஸ் பணியாளர்கள் வரவேற்கின்றனர் என அவர் தெரிவிக்கின்றார்.

இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகளவானவர்கள் ஜகாரியாவின் வயதை உடையவர்கள் அல்லது குறைவான வயதினர்.

அதிகரிக்கும் மந்தபோசனை மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக 13000 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

காசா சிறுவர்களிற்கான பிரேதப்பெட்டி போல மாறிவிட்டது என யுனிசெவ் அதிகாரியொருவர் கடந்த வாரம் தெரிவித்தார்.

தியாகிகளின் உடல்களை நாங்கள் பொறுப்பேற்போம் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வோம் மீண்டும் காயமடைந்தவர்கள் உயிரிழந்தவர்களை கொண்டு செல்வதற்காக அந்த இடத்திற்கு செல்வோம் என்கின்றான் ஜகாரியா.

ஒருநாள் ஜகாரியா டெய்ர் அல் பலாவில் உள்ள அக்அக்ஸா மருத்துவமனையின் அவசரசிகிச்சை பிரிவிற்குள் கையுறைகளை அணிந்தவாறு  சென்றான் மருத்துவர்களிடம் உரையாடினான்இ அம்புலன்ஸில் தேவையான பொருட்களை வைத்திருப்பது குறித்து ஆராய்ந்தான் அதன் பின்னர் பான்டேஜ்கள் உட்பட தேவையான பொருட்களுடன் வந்த அவன் அவற்றை அம்புலன்சில் வைத்தான்.

தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்ததும்  அவன் அம்புலன்சில் முன் ஆசனத்தில் அமர்ந்து தாக்குதல் இடம்பெற்ற இடத்திற்கு விரைந்தான்.

மீண்டும் மருத்துவமனைக்கு வந்துசேர்ந்தவேளை அவன் ஸ்டிரெச்சரில் இருந்து காயமடைந்தவரை அகற்ற உதவினான்.காயமடைந்தவரை உடனடியாக மருத்துவர்களிடம் கொண்டுசென்றான்.

நான் சிறிது அச்சமடைகின்றேன் காயமடைந்த எவரையாவது பார்க்கும்போது இதயம் கனக்கின்றது என அவன் தெரிவித்தான்.

ஏனையவர்களிற்கு உதவுவது யுத்தத்தினால் தனது குடும்பம் இடம்பெயர்ந்த வேதனையை சமாளிக்க உதவுகின்றது என அவன் தெரிவித்தான்.

தனது வீட்டிற்கு வெளியே டாங்கியொன்று காணப்பட்டதாகவும்  இதனை தொடர்ந்து தனது குடும்பத்தினர் அங்கிருந்து தப்பியோடி அல்அக்சா மருத்துவமனையில்தஞ்சமடைந்ததாகவும்  ஜகாரியா தெரிவித்தான்.

நான் மருத்துவர்களுடன் பழகத்தொடங்கினேன் என தான் மருத்துவ தொண்டராக மாறியது குறித்து அவன் தெரிவித்தான்.

https://www.virakesari.lk/article/180500

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கு காசாவில் இருந்து ஒரு பிரிகேட்டை தவிர அனைவரும் விலகி செல்கிறார்கள். ஈரானுடனான போருக்கு தயார் படுத்தலுக்காக இருக்கலாம் என கருதுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஃபாவில் இராணுவ நடவடிக்கைக்கு இஸ்ரேல் தயாராகுகிறது

Published By: SETHU

08 APR, 2024 | 01:20 PM
image

காஸாவின் தென்பிராந்திய நகரான ரஃபாவில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு இஸ்ரேலிய படையினர் தயாராகின்றனர் என அந்நாட்டுத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 

காஸாவின் ஏனைய பிராந்தியங்களிலிருந்து இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான மக்கள்  தென்பிராந்திய நகரான ரஃபாவில் தங்கியியுள்ளனர்.

காஸா தென் பகுதியில் இஸ்ரேலியப் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் பேச்சாளர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார். 

எனினும், பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் இது தொட்ரபாக கூறுகையில், ரஃபா உட்பட எதிர்கால நடவடிக்கைகளுக்குத் தயாராகுவற்காக கான் யூனிஸ் நகரிலிருந்து படையினர் வெளியேறியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/180704

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது வீடு எங்கே? ; கான் யூனிசிற்கு மீண்டும் திரும்பிய பாலஸ்தீனியர்கள் அதிர்ச்சி - முற்றாக அழிக்கப்பட்டுள்ள வீடுகள்

Published By: RAJEEBAN

09 APR, 2024 | 12:39 PM
image
 

காசாவின் கான்யூனிசிற்கு மீண்டும் திரும்பிச்சென்றுள்ள மக்கள் முன்னர் தங்கள் வீடுகள் காணப்பட்ட பகுதியில் தற்போது இடிபாடுகள் காணப்படுவது குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.

அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதால் என்னால் எனது வீட்டை கண்டுபிடிக்கமுடியவில்லை மாக்டி அபு சாஹ்ரூர் என்பவர் தெரிவித்துள்ளார்.

எனது வீடு எங்கே எனது இடம்எங்கே என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது முதல்பெயர் ஹனான் என தெரிவித்த பெண்ணொருவர் எனது வலியை வேதனையை வர்ணிப்பதற்கு வார்த்தைகள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

எங்களின் நினைவுகள் எங்களின் சிறுவயது எங்களின் குடும்பங்கள் என அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன என அவர் கலங்கிய குரலில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வீட்டின் சிதைவுகளில் இருந்து மீட்ட பொருட்களுடன் காணப்பட்டார் என சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

ஒருமாதகால சண்டைக்கு பின்னர் இஸ்ரேலிய படையினர் கான்யூனிஸ் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளன.

https://www.virakesari.lk/article/180805

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசா விவகாரத்தில் இஸ்ரேலிய பிரதமர் தவறிழைக்கின்றார் - பைடன்

Published By: RAJEEBAN   10 APR, 2024 | 10:50 AM

image

காசா விவகாரத்தை கையாள்வதில் இஸ்ரேலிய பிரதமர் தவறிழைக்கின்றார் என தான் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

அவர் தவறுசெய்கின்றார் என நான் கருதுகின்றேன் அவரது அணுகுமுறையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என பைடன் தெரிவித்துள்ளார்.

காசாவிற்குள் மருந்துகள் உணவுப்பொருட்கள் முழுமையாக செல்வதற்கான அனுமதி அவசியம் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலையில் மனிதாபிமான அமைப்புகளின் வாகனங்கள் தாக்கப்பட்டமை  மூர்க்கத்தனமான விடயம் என பைடன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலியர்கள் யுத்த நிறுத்தத்தை அறிவிக்கவேண்டும் அடுத்த ஆறுமுதல் எட்டு மாதங்களிற்கு  அனைத்து விதமான மனிதாபிமான பொருட்களையும் அனுமதிக்கவேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என பைடன் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/180876

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் புதல்வர்கள் பலி

Published By: RAJEEBAN   10 APR, 2024 | 09:52 PM

image
 

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் தனது மூன்று புதல்வர்களும் பேரனும் கொல்லப்பட்டுள்ளதை ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே உறுதிசெய்துள்ளார்.

இஸ்ரேலிய இராணுவம் தங்கள் குடும்பத்தவர்களை கொலை செய்கின்றது என்பதற்காக ஹமாஸ் தலைவர்கள் பின்வாங்கமாட்டார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் இது  யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைகளிற்கான ஹமாசின் வேண்டுகோள்களை பாதிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

தனது குடும்பத்தின் மீதான தாக்குதல் இஸ்ரேலின் தோல்வியை வெளிப்படுத்துகின்றது என தெரிவித்துள்ள ஹமாஸின் தலைவர் எனது பிள்ளைகளின் இரத்தம் பாலஸ்தீன மக்களின் பிள்ளைகளை விட பெறுமதியானது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

hamas_leader_sons.jpg

காசா நகரில் உள்ள கடற்கரையோர அகதி முகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலின் போதே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாஸ் தலைவரின் மகன் ஒருவர் பெப்ரவரி மாதம் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அவர் தனது குடும்பத்தவர்களை இழந்திருந்தார்.

இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்த நிலையில் டோஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட ஹமாஸ் தலைவர் சென்றவேளை அவருக்கு அவரின் புதல்வர்கள் கொல்லப்பட்டமை  குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/180937

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர்

Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM

image
 

சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார்.

காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார்.

16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார்.

gaza_hos_37.jpg

போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்

ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார்.

எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது 

இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார்.

எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/181212

  • கருத்துக்கள உறவுகள்

பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு

படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம்

gayanApril 20, 2024
10_1.jpg

காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது.

காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன.

காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது.

எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது.

ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது.

‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார்.

இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது.

‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார்.

ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

 

https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/

  • கருத்துக்கள உறவுகள்

காசாவின் நாசர் மருத்துவமனைக்குள் 50 உடல்கள் மீட்பு

Published By: Rajeeban

22 Apr, 2024 | 10:36 AM
image

இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்ட 50க்கும் அதிகமானவர்களின்  உடல்களை நாசர் மருத்துவ கட்டிட தொகுதியில் மீட்டுள்ளதாக சுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட 50க்கும் அதிகமானவர்களின்  உடல்களை மீட்டுள்ளதாக சுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

gaza_mass_graves.jpg

நாசர் மருத்துவமனையின்கொல்லைப்புறத்தில் இந்த உடல்களை மீட்டுள்ளதாக  சிவில் பாதுகாப்பு அமைப்பு ஏஎவ்பிக்கு தெரிவித்துள்ளது.

நாசர் மருத்துவ கட்டிட தொகுதிக்குள் இஸ்ரேலிய படையினர் புதைத்த புதைகுழிகள் காணப்படுகின்றன நேற்று 50க்கும் மேற்பட்ட தியாகிகளின் உடல்களை பார்த்து அதிர்ச்சியடைந்தோம் என சிவில் பாதுகாப்பு முகவர் அமைப்பின் பேச்சாளர் மஹ்மூட் பாசல் தெரிவித்துள்ளார்.

தேடுதல் நடவடிக்கையில் நாங்கள் தொடர்ந்தும் ஈடுபடுகின்றோம் கொல்லப்பட்ட தியாகிகளின் எண்ணிக்கையை அறிவதற்காக அனைத்து புதைகுழிகளும் தோண்டப்படுவதற்காக காத்திருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி மாத நடுப்பகுதியில் இந்த மருத்துவமனையில் கடும் மோதல்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
 

https://www.virakesari.lk/article/181628

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதல் - பதவியை இராஜினாமா செய்தார் இஸ்ரேலின் இராணுவ புலனாய்வு பிரிவின் தலைவர்

Published By: RAJEEBAN   22 APR, 2024 | 03:53 PM

image
 

ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிற்குள் நுழைந்து மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலின் இராணுவ புலனாய்வு பிரிவின் தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஹமாஸ் தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதை கண்டுபிடிக்க தவறியமை உட்பட தவறுகளிற்கு பொறுப்பேற்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக இஸ்ரேலின் இராணுவ புலனாய்வு பிரிவின் தலைவர் மேஜர் ஜெனெரல் அகாரொன் ஹலிவா தெரிவித்துள்ளார்.

எங்களிற்கு வழங்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றும்  அளவிற்கு எங்களின் புலனாய்வு பிரிவு செயற்படவில்லை என்பதை தனது இராஜினாமா கடிதத்தில் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஒக்டோபர் ஏழாம் திகதி சம்பவங்களிற்கு பொறுப்பேற்று பதவி விலகிய இஸ்ரேலின்  முதலாவது உயர் அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிய இராணுவமும் புலனாய்வு பிரிவினரும் பல முன்னெச்சரிக்கைகளை தவறவிட்டனர் என தெரிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/181674

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் காசா: இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதாயின் கருப்பையிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை

Published By: RAJEEBAN   23 APR, 2024 | 09:10 AM

image
 

இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட தாயின் கருப்பையிலிருந்து  குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் காசாவில் இடம்பெற்றுள்ளது.

சபிரீன் என்ற பெண்ணின் கருப்பையிலிருந்து குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

அந்த இளம்தாய் ஏழு மாதங்களாக பிள்ளையை தன் வயிற்றில் சுமந்துள்ளார் – கடும் மோதல்கள் அச்சங்களிற்கு மத்தியில்.

யுத்தம் முடிவடையும் வரை தங்கள் குடும்பத்தின் அதிஸ்டம் நீடிக்கும் என அவர் எதிர்பார்த்தார்.

எனினும்  ஏப்பிரல் 20 திகதி நள்ளிரவிற்கு முன்னர் இடம்பெற்ற பாரியவெடிப்பினால் ஏற்பட்ட சத்தங்கள் தீ பரவலிற்கு மத்தியில் அவர் எதிர்பார்த்த அதிஸ்டம் காணாமல்போனது.

சப்ரீனும் கணவரும் அவரின் மூன்றுவயது மகள் மலாக்கும் உறங்கிக்கொண்டிருந்த ரபா வீட்டின் மீது இஸ்ரேலிய படையினர் குண்டொன்றை வீசினர்.

gaza_baby1.jpg

சபிரீன் கடும் காயங்களிற்குள்ளானார் அவரது கணவர் கொல்லப்பட்டார் எனினும் மீட்பு பணியாளர்கள் அந்த வீட்டை நெருங்கிய வேளை சிசு தாயின் வயிற்றில் இன்னமும் உயிருடன் இருந்தது.

மீட்பு பணியாளர்கள் சப்ரீனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு சிசேரியன் மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.

சப்ரீனை காப்பாற்ற முடியவில்லை ஆனால் குழந்தையை உயிர்ப்பிப்பதற்காக மருத்துவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர் சுவாசத்தை தூண்டுவதற்காக அவளின் நெஞ்சில் மெதுவாக தட்டினார்கள் அவளது நுரையீரலிற்குள் காற்றை செலுத்தினர்.

அவள் மிகக்கடுமையான சுவாசக்கோளாறின் மத்தியில் பிறந்திரு;கின்றாள் என தெரிவிக்கின்றார் ரபாவின் எமிராட்டி மருத்துவமனையின் நியோநட்டல் அவசர பிரிவின் தலைவர் மருத்துவர் முகமட் சலாமா.

எனினும் 1.45 கிலோ உடைய அந்த குழந்தை தான் பிறந்தவேளை எதிர்கொண்ட சோதனைகளில் இருந்து மீண்டுள்ளாள்.

தியாகி சப்ரீன் அல்ஹானியின் குழந்தை  என்ற வாசகத்தை ஒரு சிறிய டேப்பில்  எழுதிய மருத்துவர்கள் அதனை அவளது உடலில் ஒட்டினார்கள் பின்னர் அவள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டாள்.

அவளது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது என தெரிவிக்க முடியும் என்கின்றார் மருத்துவர் சலாமா.

ஆனால் நிலைமை இன்னமும்  ஆபத்தானதாக காணப்படுகின்றது உரிய மாதத்திற்கு முன்னர் பிறந்த குழந்தை என்பதால் சுவாசக்கோளாறு நோய் அறிகுறி காணப்படுகின்றது இந்த நாட்களில் குழந்தை தாயின் வயிற்றில் இருந்திருக்கவேண்டு;ம் ஆனால் அதற்கான அவளின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவிக்கின்றார்.

மேலும் சில மாதங்களிற்கு குழந்தையை மருத்துவமனையிலேயே வைத்திருக்கவேண்டியிருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.அதன்பின்னர் அவளை மருத்துவமனையிலிருந்து அனுப்புவது குறித்து சிந்திப்போம் இங்கு பெரும் துயரம் இடம்பெற்றுள்ளது இந்த குழந்தை உயிர்பிழைத்தாலும் அநாதையே என வைத்தியர் சலாமா தெரிவிக்கின்றார்.

அந்த குழந்தைக்கு பெயரிடுவதற்கு பெற்றோர்கள் எவரும் இல்லை கொல்லப்பட்ட அவளது மூன்று வயது சகோதரி ரூஹ் என பெயரிட விரும்பினால் எனினும் அவளது தாயின் நினைவாக சப்ரீன் என அழைக்கின்றனர்.

https://www.virakesari.lk/article/181738

  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் பாரிய மனித புதைகுழிகள் இரண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, nunavilan said:

காசாவில் பாரிய மனித புதைகுழிகள் இரண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழரின் புதைகுழி.....காஸா பலஸ்தீனியர்களின் புதை குழி.

  • கருத்துக்கள உறவுகள்

ரபா மீது இஸ்ரேல் விரைவில் படை நடவடிக்கைக்கு திட்டம்

பொது மக்களை வெளியேற்ற கூடாரங்கள் அமைப்பு

maheshApril 25, 2024
16-2-4.jpg

காசாவில் பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமாக இருக்கும் ரபா மீது இஸ்ரேல் இராணுவம் ‘மிக விரைவில்’ படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதோடு அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவதற்கான திட்டத்தையும் அது முன்னெடுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

எதிர்வரும் வாரங்களில் ரபாவில் இருந்து வெளியேற்றப்படும் பலஸ்தீன பொதுமக்களுக்காக ஆயிரக்கணக்கான கூடாரங்களை இஸ்ரேல் வாங்கி இருப்பதாக இஸ்ரேலிய வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த அரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவரும் போர் காரணமாக எகிப்து எல்லையை ஒட்டி இருக்கும் ரபாவில் தஞ்சமடைந்துள்ள பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது.

இங்கு எஞ்சியுள்ள ஹமாஸ் படைப் பிரிவுகளுக்கு எதிராக படை நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பது தொடர்பில் இஸ்ரேல் தொடர்ந்து கூறி வருகிறது. எனினும் அவ்வாறான படை நடவடிக்கை பெரும் அழிவை ஏற்படுத்தும் என்று இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா உட்பட உலக நாடுகள் கவலை வெளியிட்டு வருகின்றன.

இங்குள்ள அகதிகள் எகிப்தின் சினாய் பகுதிக்குள் ஊடுருவுவதற்கு அனுமதிப்பதில்லை என்று எகிப்து குறிப்பிட்டிருக்கும் நிலையில் இந்த மக்கள் எங்கு செல்வார்கள் என்ற கவலையும் அதிகரித்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து அமெரிக்காவுடன் பல வாரங்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின், ரபாவில் இருந்து வெளியேற்றப்படும் பலஸ்தீனர்களுக்காக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு 40,000 கூடாரங்களை வாங்கியுள்ளது. இதில் ஒவ்வொன்றிலும் 10 தொடக்கம் 12 பேர் வரை தங்க முடியுமாக உள்ளது என்று இஸ்ரேலிய அரச தரப்பு தெரிவித்துள்ளது.

ரபாவில் இருந்து சுமார் 5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கான் யூனிஸ் நகரில் வெள்ளை நிறத்திலான சதுர வடிவ கூடாரங்கள் வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் பரவியுள்ளது.

இந்த கூடாரம் அமைக்கப்பட்ட நிலம் ஏப்ரல் 7 ஆம் திகதியன்று வெற்றி நிலமாகக் காணப்படுவது செய்மதி நிறுவனமான மக்சார் எடுத்த படங்கள் காட்டுகின்றன. இது தொடர்பில் கருத்துக் கூற இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு மறுத்ததாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் போர் கால அமைச்சரவை எதிர்வரும் இரண்டு வாரங்களில் கூடி பொதுமக்களை வெளியேற்றுவதற்கான ஒப்புதல் அளிக்க திட்டமிட்டிருப்பதாக இஸ்ரேலிய அரச வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. ரபா படை நடவடிக்கையின் முதல் கட்டமாக பொதுமக்களை வெளியேற்றுவதற்கு ஒரு மாதம் எடுத்துக் கொள்ளும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பில் நெதன்யாகு அலுவலகம் உடன் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவுடனான பிரச்சினைக்கு மத்தியில் பல வாரங்கள் பிற்போடப்பட்ட ரபா நடவடிக்கை ‘மிக விரைவில்’ இடம்பெறும் என்று இஸ்ரேலிய அரச தரப்பை மேற்கோள் காட்டி இஸ்ரேலில் அதிகம் விற்பனையாகும் ஹயோம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் ஏனைய செய்திப் பத்திரிகைகளும் இதனையொத்த செய்தியை வெளியிட்டுள்ளன.

ரபா மீதான படை நடவடிக்கை ஒன்றுக்கான சமிக்ஞையை இஸ்ரேல் இராணுவம் அண்மைக் காலத்தில் வெளியிட்டு வருகிறது. ‘வடக்கில் ஹமாஸ் கடுமையாக தாக்கப்பட்டது. காசா பகுதியின் மத்தியிலும் அது தீவிரமாக தாக்கப்பட்டது. ரபாவிலும் கூட விரைவில் கடுமையாக தாக்கப்படும்’ என்று காசாவில் செயற்படும் 162 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் இட்சிக் கோஹன், இஸ்ரேலின் அரச தொலைக்காட்சி ஒன்றுக்கு கடந்த செவ்வாயன்று குறிப்பிட்டிருந்தார்.

ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களும் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளன. தெற்கு ரபா நகரில் வீடு ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் மூன்று குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டு மேலும் நால்வர் காயமடைந்ததாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

ஏற்கனவே இடம்பெயர்ந்து ரபாவை அடைந்திருக்கும் பலஸ்தீனர்கள் மற்றொரு வெளியேற்றம் கடுமையானதான அமையும் என்று அஞ்சுகின்றனர்.

பாடசாலை ஒன்றில் தனது குடும்பத்துடன் தற்காலிக முகாமில் இருக்கும் 30 வயதான அயா என்பவர், பெரும் ஆபத்து பற்றி அஞ்சுவதாக தெரிவித்துள்ளார். துறைமுகப் பகுதியான அல் மவாசியில் இருந்து அண்மையில் இந்த முகாமுக்கு வந்த சில குடும்பங்கள் வசிக்கும் கூடாரங்களுக்கு அருகில் ஷெல் குண்டுகள் விழுந்ததை அடுத்து அவை தீப்பற்றிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

‘ரபாவில் இருந்து வெளியேறுவது தொடர்பில் நாம் முடிவு ஒன்றை எடுக்க வேண்டி உள்ளது. ஏனென்றால் ஆக்கிரமிப்பு திடீரென்று இடம்பெறக் கூடும் என்பதோடு நாம் தப்பிப்பதற்கு நேரம் இருக்காது என்று நானும் எனது தாயும் அஞ்சுகிறோம்’ என்று அந்தப் பெண் குறிப்பிட்டார். ‘நாம் எங்கு போவது?’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

காசாவில் 201 ஆவது நாளாகவும் நேற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருந்தன. அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்கள் 200 ஆவது நாளை எட்டிய நிலையில் ஹமாஸ் ஆயுதப் பிரிவு பேச்சாளர் அபூ உபைதா கடந்த செவ்வாயன்று (23) வெளியிட்ட உரை ஒன்றில், ‘இந்த போரில் இஸ்ரேல் அவமானத்தையும் தோல்வியையும் மாத்திரமே சந்தித்துள்ளது’ என்றார்.

இதேவேளை இஸ்ரேலிய படை வாபஸ் பெற்ற கான் யூனிஸ் நகரின் நாசர் மருத்துவமனை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழி ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை தற்போது 300ஐ தாண்டியுள்ளது.

இந்த புதைகுழி தொடர்பில் அமெரிக்கா கவனத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் விபரத்தை தரும்படி இஸ்ரேல் அரசை அமெரிக்க அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

காசா போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பதற்றம் தீவிரம் அடைந்திருப்பதோடு வடக்கு ஹெப்ரூனில் நேற்றுக் காலை இஸ்ரேலிய படையினால் 20 வயது யுவதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டதை அடுத்தே இந்தப் பெண் சுடப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

தலையில் சுடப்பட்ட அந்தப் பெண்ணின் உடலை தமது பிடியில் வைத்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

https://www.thinakaran.lk/2024/04/25/world/56718/ரபா-மீது-இஸ்ரேல்-விரைவில/

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2024 at 12:12, nunavilan said:

காசாவில் பாரிய மனித புதைகுழிகள் இரண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்தாவது முள்ளிவாய்க்காலில் புதை குழிகளும் தோண்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

படையெடுப்பை நெருக்கும் இஸ்ரேல் ரபா நகரின் மீது சரமாரித் தாக்குதல்

எகிப்து உயர்மட்ட தூதுக்குழு இஸ்ரேல் விரைவு

gayanApril 27, 2024
09_4.jpg

தெற்கு காசாவின் ரபா மீதான படையெடுப்புக்கான திட்டத்தை இஸ்ரேல் விரைவுபடுத்தி வரும் நிலையில் அந்த நகர் மீது தொடர்ச்சியாக செல் மற்றும் வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

தனது நாட்டு எல்லையில் அமைந்திருக்கும் ரபா மீதான படை நடவடிக்கை பேரழிவை ஏற்படுத்தும் என்று அஞ்சும் எகிப்து புதிய போர் நிறுத்த முயற்சியாக உயர் பட்ட தூதுக்குழு ஒன்றை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது.

காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா மீதான படையெடுப்புக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் வலுத்திருந்தபோதும் அங்கு தரைவழி நடவடிக்கைக்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.

இதற்கான சமிக்ஞையாகவே அங்கு தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. ரபா நகர கடற்கரையில் வேலை செய்துகொண்டிருந்த மீனவர் ஒருவர், இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் ஒருவர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

காசா கடற்பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகளை செயற்படுத்தி வரும் இஸ்ரேலினால் அங்குள்ள மீனவர்கள் தொடர்ந்து தொந்தரவுக்கு முகம்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ‘நட்சரிட் இடைவழியில்’ செயற்படும் இஸ்ரேலிய படைகளை இலக்கு வைத்து பலஸ்தீன போராளிகள் கடந்த வியாழனன்று (25) மோட்டார் மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக போர் கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ரபா மீதான படை நடவடிக்கைக்கு இஸ்ரேலிய படையினர் வெளிப்படையாக தயாராகி வரும் நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ரபா படையெடுப்பு தொடர்பில் சந்தேகங்கள் வலுத்து வரும் நிலையில் இஸ்ரேல் இரு மேலதிக படைப்பிரிவுகளை அழைத்திருப்பதோடு, ரபாவுக்கு அருகில் கான் யூனிஸ் நகரில் பாரிய அளவில் வரிசையாக கூடாரங்கள் அமைக்கப்பட்டிருப்பது செய்மதி படங்கள் காட்டுகின்றன.

ஹமாஸ் அமைப்பை ஒழிப்பதற்கும் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 133 பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் ரபா மீதான படை நடவடிக்கை அவசியம் என்று இஸ்ரேல் கூறி வருகிறது.

எனினும் காசா விளிம்பில் உள்ள ரபா நகர் இடம்பெயர்ந்த மக்களின் கடைசி அடைக்கலமாக இருப்பதோடு அங்கிருந்து அவர்கள் எங்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். அவர்களை வெளியேற்றவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டபோதும் அது நடைமுறை சாத்தியமற்றது என்று ஐ.நா. அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் வடக்கில் காசா நகரில் உள்ள அல் ஷபா குடும்பத்திற்கு சொந்தமான வீட்டின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று நடத்திய தாக்குதலை அடுத்து ஒரு குழந்தை மற்றும் பெண் ஒருவர் உட்பட மூவரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் காசா நகரில் இயங்கும் கடைசி மருத்துவமனையான அல் அஹ்லி அரபு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இஸ்ரேல் இராணுவம் நடத்திய பாரிய சுற்றிவளைப்பில் அங்குள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனை அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரபா மீதான இஸ்ரேலின் படை நடவடிக்கை பேரழிவையும் பிராந்தியத்தில் ஸ்திரமற்ற நிலையையும் ஏற்படுத்தும் என்று எச்சரித்திருக்கும் எகிப்து, உயர்மட்ட தூதுக்குழு ஒன்றை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது.

இழுபறி நீடிக்கும் காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் புதிய முயற்சியாக எகிப்து உளவுப் பிரிவு தலைவர் அப்பாஸ் கமால் தலைமையிலான குழு ஒன்றே இஸ்ரேல் விரைந்துள்ளது.

இதில் ஹமாஸ் பிடியில் இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் வடக்கு காசாவில் இருந்து வெளியேறிய கணிசமான எண்ணிக்கையான பலஸ்தீனர்கள் தமது வீடுகளுக்கு திரும்ப அனுமதிப்பது தொடர்பிலேயே பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவிருப்பதாக எகிப்து அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

எனினும் முழுமையான போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய படை வாபஸ் பெறும் தமது நிபந்தனையில் இருந்து பின்வாங்கப்போதில்லை என்று ஹமாஸ் கூறி வருவதோடு அந்த நிபந்தனைகளை இஸ்ரேல் மறுத்து வருகிறது. ஹமாஸ் முழுமையாக தோற்கடிக்கப்படுவது மற்றும் அதன்பின் காசாவில் பாதுகாப்பு நிலைப்படுத்தப்படும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் கூறுகிறது.

ரபாவையொட்டி இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில், எகிப்துடனான காசா எல்லையில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்படுவதற்கு அதிருப்தியை வெளியிடவும் இஸ்ரேல் சென்றிருக்கு எகிப்து தூதுக் குழுவினர் திட்டமிட்டிருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.

ரபாவில் உள்ள பலஸ்தீனர்கள் எல்லை கடந்து எகிப்துக்குள் வர அனுமதிக்கப்போதில்லை என்று எகிப்து ஏற்கனவே உறுதியாக குறிப்பிட்டுள்ளது.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு எகிப்துடன் கட்டார் மற்றும் அமெரிக்கா மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. எனினும் ரபா மீதான படையெடுப்பு இந்த பேச்சுவார்த்தையை முறிக்கும் என்று ஹமாஸ் அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

‘ரபாவில் இஸ்ரேல் எதிர்பார்த்ததை அடையாது’ என்று மூத்த ஹமாஸ் அதிகாரியான காசி ஹமாத் தெரிவித்தார். ஏழு மாத போரில் ஹமாஸை ஒழிப்பது அல்லது பணயக்கைதிகளை விடுவிப்பது ஆகிய எந்த இலக்கையும் இஸ்ரேல் அடையவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

காசா போர் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவு குழுக்களுக்கு இடையில் மோதலை தூண்டி இருக்கும் சூழலில் அது பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் இடம்பெற்று வரும் நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பு நேற்று நடத்திய தாக்குதலில் பொதுமகன் ஒருவன் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.

கபர் சுபா மலைப் பகுதியில் ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகளை பயன்படுத்தி மேற்கொண்ட சிக்கலான அதிரடி தாக்குதலில் இரு இஸ்ரேலிய வாகனங்களை அழித்ததாக ஹிஸ்புல்லா குறிப்பிட்டது.

இது தொடர்பில் இஸ்ரேல் நேரடியாக பதில் அளிக்கவில்லை.

தெற்கு லெபனானில் ஷெபா கிராமத்தைச் சூழ ஹிஸ்புல்லா இலக்குகளை இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்கியதாக அது குறிப்பிட்டது. இதில் பல வீடுகளும் சேதமடைந்திருப்பதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா மோதல்களில் லெபனானில் குறைந்தது 380 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு இதில் 252 ஹிஸ்புல்லா போராளிகளும் அடங்குவதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்தின் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

இந்தக் காலப்பகுதியில் 11 இஸ்ரேலிய படையினர் மற்றும் ஒன்பது பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லைகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.thinakaran.lk/2024/04/27/world/56907/படையெடுப்பை-நெருக்கும்-இ/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமான உதவி விநியோகத்திற்காக படையினரை காசாவிற்கு அனுப்பலாமா? ஆராய்கின்றது பிரிட்டன்

28 APR, 2024 | 12:22 PM
image
 

மனிதாபிமான உதவிகளை வழங்கும் வாகனத்தொடரணிகளின் பாதுகாப்பிற்காக காசாவிற்கு தனது படையினரை அனுப்புவது குறித்து பிரிட்டன் ஆராய்ந்து வருகின்றது என  பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா உருவாக்கிவரும் பாரிய தற்காலிக இறங்குதுறை ஊடாக செல்லவுள்ள மனிதாபிமான உதவிகளிற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தனது படையினரை பயன்படுத்துவது குறித்து பிரிட்டன் ஆராய்ந்து வருகின்றது.

இந்த இறங்குதுறையை அமைக்கும் பணிகள் அடுத்த மாதமளவில் கிழக்கு மத்தியதரைகடலில் பூர்த்தியாகவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ள அமெரிக்க படையினர் கடலில் இருந்து தரைப்பகுதியில்காலடி எடுத்துவைக்க மாட்டார்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வேறு ஒருநாடு மிகவும் சவாலான பகுதிகளில் சர்ச்சைக்குரிய அரசியல் நடவடிக்கையான மனிதாபிமான உதவி விநியோகத்தை முன்னெடுக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.

இந்நிலையிலேயே இது குறித்து பிரிட்டனின் உள்துறை அமைச்சு ஆராய்கின்றது என தெரிவித்துள்ள விடயமறிந்த வட்டாரங்கள் இந்த விடயத்தில் சவால்கள் காரணமாக பிரிட்டன் இந்த திட்டத்தை கைவிடலாம் எனவும்தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/182140

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் ஒரே இரவில் நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 20 பேர் பலி!

04-7.jpg

ராஃபா மற்றும் காசா நகரங்களில் ஒரே இரவில் நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் அடங்குவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்காக ஹமாஸ் அதிகாரிகள் கெய்ரோவிற்குச் செல்ல உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களில் இதுவரை 34 ஆயிரத்து 454 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

https://thinakkural.lk/article/300514

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Hamas வெளியிட்ட Hostages Video; நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய இஸ்ரேல் மக்கள் - ஏன்?

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் 6 மாதங்களைக் கடந்து நடந்துவரும் நிலையில், பணயக்கைதிகள் இருவர் பேசுவது போன்ற வீடியோவை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. 

அதில், அவர்கள் குண்டுவீச்சுக்கு மத்தியில் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறுவதைக் காண முடிகிறது.

இது ஒருபுறமிருக்க, ஹமாஸிடம் உள்ள பணயக்கைதிகளை மீட்க இஸ்ரேல் அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு எதிராக இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காஸா போர் நிறுத்தம் : இஸ்ரேலின் புதிய முன்மொழிவுகளை ஹமாஸ் ஆராய்கிறது

Published By: DIGITAL DESK 7   29 APR, 2024 | 03:31 PM

image

(சேது)

காஸா போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரி­மாற்றம் தொடர்­பான தமது முன்­மொ­ழி­வு­க­ளுக்கு இஸ்­ரேலின் பதில் முன்மொழிவு அறிக்கை தமக்கு கிடைத்­துள்­ள­தா­கவும், இதை தாம் ஆராய்ந்­து ­வ­ரு­வ­தா­கவும் ஹமாஸ் இயக்கம்   தெரி­வித்­துள்­ளது.

ஹமாஸ் அர­சியல் பிரிவின் பிரதித் தலைவர் கலீல் அல்-­ஹேயா சனிக்கிழமை (27) விடுத்த அறிக்­கை­யொன்றில், 'ஹமாஸ் இயக்­கத்தின் நிலைப்­பாடு தொடர்பில் எகிப்து மற்றும் கட்டார் மத்­தி­யஸ்­தர்­க­ளுக்கு ஏப்ரல் 13 ஆம் திகதி அனுப்­பிய முன்­மொ­ழி­வுக்கு ஸியோ­னிச ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­களின் உத்­தி­யோ­க­பூர்வ பதில் முன்­மொ­ழிவு இன்று இந்த இயக்­கத்­துக்கு கிடைத்­துள்­ளது. இந்த முன்­மொ­ழிவை ஹமாஸ் ஆரா­ய­வுள்­ளது. அதன் பின்னர் அது தனது பதிலை கைய­ளிக்கும்' எனத் தெரி­வித்­துள்ளார்.  

காஸா போர்­நி­றுத்தம் தொடர்­பான புதிய சுற்று பேச்­சு­வார்த்­தை­க­ளுக்­காக எகிப்­திய மத்­தி­யஸ்­தர்கள் வெள்­ளிக்­கி­ழமை இஸ்­ரேலை சென்­ற­டைந்த நிலையில், இஸ்­ரேலின் பதில் யோச­னைகள் ஹமா­ஸுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளன.

எகிப்­திய மற்றும் இஸ்­ரே­லிய பிர­தி­நி­தி­களின் நோக்­கு­களின் இடை­வெ­ளியை குறைப்­பதில் அவ­தா­னிக்­கத்­தக்க முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது என எகிப்­திய புல­னாய்வுச் சேவை­யுடன் தொடர்­புள்­ள­தாகக் கூறப்­படும் அல் கஹேரா அலை­வ­ரிசை தெரி­வித்­துள்­ளது.  

காஸாவின் ரஃபா நகரம் மீது சனிக்கிழமை இரவும் இஸ்­ரேலின் வான் தாக்­குதல் தொடர்ந்த நிலையில் போர் நிறுத்தம் தொடர்­பான புதிய எதிர்­பார்ப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன.

ஒக்­டோபர் 7 ஆம் திகதி முதல் காஸாவில் 34,388 பேர் கொல்­லப்­பட்­டுள்­ளனர் எனவும் 77,437 பேர் காய­ம­டைந்­துள்­ள­னர் எனவும் காஸா சுகா­­தார அமைச்சு  நேற்று தெரி­வித்­துள்­ளது.

ஒக்­டோபர் 7 ஆம் திகதி இஸ்­ரேலில் ஹமாஸ் நடத்­திய தாக்­கு­தல்­களில் சுமார் 1,200 பேர் கொல்­லப்­பட்ட பின்னர், கடத்­தப்­பட்ட 250 பேரில் இன்னும் 129 பேர் காஸாவில் உள்­ள­தாக இஸ்ரேல் நம்­பு­கி­றது.

கடந்த நவம்பர் மாதம் போர் நிறுத்த காலப்­ப­கு­தியில் 81 இஸ்­ரே­லி­யர்­களும் 24 வெளி­நாட்­ட­வர்­களும் விடு­விக்­கப்­பட்­ட­துடன், இஸ்­ரே­லிய சிறை­க­ளி­லி­ருந்து 71 பெண்கள், 169 சிறார்கள் உட்­பட  240 பலஸ்­தீ­னர்கள்  விடு­விக்­கப்­பட்­டனர்.

மேற்குக் கரையில்.......................................

இதே­வேளை, பலஸ்­தீ­னத்தின் மேற்குக் கரை பிராந்­தி­யத்­தி­லுள்ள ஜெனின் நக­ருக்கு அருகில், பலஸ்­தீ­னர்கள் இருவர் இஸ்­ரே­லிய படை­யி­னரால் நேற்று சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்­ளனர்.  இரா­ணுவ காவ­லரண் ஒன்றின்மீது தாக்­குதல் நடத்தியவர்களே கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

லெபனானின் தென் பகுதியில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அங்கத்த­வர்கள் இருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர் என ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது. 

https://www.virakesari.lk/article/182239

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசா யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னரே இஸ்ரேலிய படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் - அமெரிக்கா

30 APR, 2024 | 12:35 PM
image

சிஎன்என்

காசா யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னரே இஸ்ரேலிய இராணுவத்தின் ஐந்து படைப்பிரிவினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் உறுதி செய்துள்ளது.

எனினும் இதில் ஒரு படைப்பிரிவிற்கான  உதவிகளை குறைப்பதா இல்லையா என அமெரிக்கா இன்னமும் தீர்மானிக்கவில்லை என சிஎன்என் தெரிவித்துள்ளது.

ஏனைய நான்கு படைப்பிரிவுகளும் இந்த தவறுகளை திருத்திக்கொண்டுள்ளன என அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நெட்சா யெகுடா படைப்பிரிவிற்கான  உதவிகளை நிறுத்துவதா இல்லையா என்பதை அமெரிக்கா இன்னமும் தீர்மானிக்கவில்லை.

2022 இல் முதிய பாலஸ்தீனியர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு இந்த படைப்பிரிவே காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நாங்கள் இஸ்ரேலிய படையினருடன் தொடர்ந்தும் கலந்தாலோசனைகளில் ஈடுபட்டுள்ளோம், அவர்கள் குறிப்பிட்ட படைப்பிரிவு குறித்து மேலதிக தகவல்களை தந்துள்ளனர் என இராஜாங்க திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து சம்பவங்களும் ஒக்டோர் 7 ம் திகதிக்கு முன்னர் இடம்பெற்றவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/182315

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'அந்த பயங்கரத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை' - பிபிசி காஸா செய்தியாளரின் நேரடி அனுபவம்

பிபிசி செய்தியாளரின் அனுபவங்கள்
படக்குறிப்பு,அட்னான், பல வாரங்கள் தனது குடும்பத்தை பிரிந்து வாழ்ந்தார். கட்டுரை தகவல்
  • எழுதியவர், அட்னான் அல்-புர்ஷ்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

எச்சரிக்கை - இந்த அறிக்கையில் உள்ள புகைப்படங்களும் விளக்கங்களும் சில வாசகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

ஏறக்குறைய மூன்று மாதங்களாக, அட்னான் அல்-புர்ஷ் காஸாவிலிருந்து போரைப் பற்றிய செய்திகளை அளித்துக் கொண்டிருந்தார். கூடாரத்தில் வாழ்ந்து, ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு, தனது மனைவியையும் ஐந்து குழந்தைகளையும் பாதுகாப்பாக வைத்திருக்கவும் அவர் போராடியிருக்கிறார்.

பிபிசி அரபு நிருபர்கள், போரைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்கும் போது தாங்கள் எதிர்கொண்ட திகிலூட்டும் தருணங்களைப் பகிர்ந்துள்ளனர்.

காஸாவில் ஒரு செய்தியாளராக வேலை பார்த்த போது தான் எதிர்கொண்டதை பிபிசியிடம் பகிர்ந்துகொள்கிறார் அட்னான் அல்-புர்ஷ்.

 

'குடும்பத்துடன் தெருவில் உறங்கினோம்'

பிபிசி செய்தியாளரின் அனுபவங்கள்
படக்குறிப்பு,அட்னான் மற்றும் அவரது குடும்பத்தினர் வாடகைக்கு எடுக்க முடிவு செய்திருந்த குடியிருப்பில் வெடிகுண்டு வீசப்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், தெருவில் உறங்கினர்

குடும்பத்துடன் அனைவரும் சாலையில் தூங்கிய தருணம் தான், கடந்த ஆறு மாதங்களில் மிகவும் மோசமான தருணங்களில் ஒன்று. தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் தெருவில் கடும் குளிரில் என் மனைவி மற்றும் குழந்தைகளின் முகத்தைப் பார்த்துக்கொண்டு நிராதரவாக நின்றேன்.

எனது 19 வயது இரட்டைப் பிள்ளைகளான ஜக்கியா மற்றும் படூல் அவர்களின் 14 வயது சகோதரி யும்னாவுடன் நடைபாதையில் தூங்கினர்.

எனது எட்டு வயது மகன் முகமது மற்றும் ஐந்து வயது இளைய மகள் ரஸான் அவர்களின் தாய் ஜைனப் உடன் உறங்கினர்.

பாலத்தீன ரெட் கிரசண்ட் சொசைட்டியின் (செஞ்சிலுவைச் சங்கம்) தலைமையகத்திற்கு வெளியே நாங்கள் ஓய்வெடுக்க முயன்ற போது, இரவு முழுவதும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. ட்ரோன்கள் மேலே பறந்து கொண்டிருந்தன.

நாங்கள் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுக்க ஏற்பாடு செய்திருந்தோம், ஆனால் கட்டிடத்தின் மீது குண்டு வீசப் போவதாக இஸ்ரேலிய ராணுவம் எச்சரித்ததாக வீட்டு உரிமையாளர் அன்றே எங்களிடம் கூறினார்.

நான் அப்போதும் வேலை செய்து கொண்டிருந்தேன், ஆனால் எனது குடும்பத்தினர் தங்கள் உடைமைகளுடன் அங்கிருந்து வெளியேறினர்.

பிபிசி செய்தியாளரின் அனுபவங்கள்
படக்குறிப்பு,பிபிசி குழுவானது கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை அருகே கூடாரத்தில் இருந்து வேலை செய்தது.

'குடும்பத்தைக் காப்பாற்ற முடியாத குற்றவுணர்ச்சி'

நாங்கள் அனைவரும் செஞ்சிலுவை தலைமையகத்தில் சந்தித்தோம், அங்கு ஏற்கனவே இடம்பெயர்ந்த மக்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.

நானும் என் சகோதரனும் இரவு முழுவதும் அட்டைப் பெட்டிகளில் அமர்ந்து என்ன செய்வது என்று விவாதித்தோம். வடக்கு காஸாவில் இருந்த அனைவரையும் தெற்கு நோக்கிச் செல்லுமாறு இஸ்ரேலிய ராணுவம் கேட்டுக் கொண்டதால், அக்டோபர் 13 அன்று எனது குடும்பம் ஜபாலியா நகரத்தை விட்டு வெளியேறியது.

எங்களது வீடு மற்றும் பெரும்பாலான பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு வெளியேறினோம். ஆனால் இப்போது எந்த இடத்திற்கு இஸ்ரேலிய ராணுவம் செல்லச் சொன்னதோ, அதே இடத்தில் குண்டுவெடிப்பில் இருந்து நூலிழையில் தப்பித்தோம்.

இந்த நேரத்தில் எதையும் தெளிவாகச் சிந்திப்பது மிகவும் கடினம். நான் கோபமாகவும் அவமானமாகவும் உணர்ந்தேன். எனது குடும்பத்தை ஏன் என்னால் பாதுகாக்க முடியவில்லை? என்ற குற்றவுணர்ச்சி ஏற்பட்டது.

ஒருவழியாக கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில் ஒரு கூடாரத்தில் பிபிசி குழுவுடன் நான் தங்கியிருந்த போது, எனது குடும்பம் மத்திய காஸாவில் உள்ள நுசைரத்தின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறினார்கள். சில நாட்களுக்கு ஒருமுறை என் குடும்பத்தைச் சந்திக்கச் செல்வேன்.

இணையம் மற்றும் தொலைபேசி சிக்னல்கள் பலமுறை துண்டிக்கப்பட்டதால் அவர்களோடு தொடர்புகொள்வது மிகவும் கடினமாக இருந்தது. ஒருமுறை நான்கைந்து நாட்களுக்கு என் குடும்பத்துடன் பேச முடியாத நிலை இருந்தது.

 
பிபிசி செய்தியாளரின் அனுபவங்கள்
படக்குறிப்பு,அட்னான், தனது நண்பரின் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்ட நாளில் நேரலையில் அழுதார்.

‘நேரடி ஒளிபரப்பின் போது அழுதேன்’

கான் யூனிஸின் பிபிசி குழுவில் நாங்கள் ஏழு பேர் இருந்தோம். ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு தான் கிடைத்து வந்தது. சில நேரங்களில் உணவு இருந்தாலும், கழிப்பறை இல்லாததால் மீதம் இருவேளை சாப்பிட மாட்டோம்.

இதற்கிடையில், எனது நண்பரும் அல் ஜசீரா பணியகத்தின் தலைவருமான வயேல் டாடோ இந்தப் போருக்காக ஒரு பெரிய விலையைக் கொடுத்தார்.

அவரது குடும்பத்தினர் வசித்து வந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அவரது மனைவி, சிறு மகன், ஏழு வயது மகள் மற்றும் ஒரு வயது பேரன் ஆகியோர் உயிரிழந்தனர்.

பொதுமக்களின் உயிரிழப்பைக் குறைக்க ‘முடிந்தவரை எச்சரிக்கையாக’ இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. இந்தத் தாக்குதலில் , 'ஹமாஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாக' இஸ்ரேல் கூறியது.

20 வருடங்களாக எனக்கு நன்கு பரிச்சயமான எனது நண்பர் அழும் காட்சிகளைப் பார்த்தேன். அவர் மத்திய காஸாவில் தனது குழந்தைகளின் மூடிய உடல்களைத் தழுவியவாறு கண்ணீருடன் இருந்தார். அந்த நேரத்தில் நான் அவருடன் இருக்க விரும்பினேன்.

எனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாரின் மரணச் செய்திகள் எனக்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்த போது இந்தச் செய்தியும் வந்தது.

அன்று நான் நேரலையில் பேசிக் கொண்டிருக்கும்போதே அழுதேன். நான் இரவில் அடிக்கடி கண்விழிப்பேன், என் கன்னங்கள் கண்ணீரால் நனைந்திருக்கும். நண்பர் வயேல் அழுத காட்சிகள் என் மனதை விட்டு நீங்கவில்லை.

கடந்த 15 ஆண்டுகளில் காஸாவில் நடந்த பல மோதல்களை நான் செய்திகளாக விவரித்துள்ளேன் ஆனால் இந்தப் போர் வித்தியாசமானது. முன்னெப்போதும் இல்லாத அளவு தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், ஏராளமான மக்கள் இழப்புகளைச் சந்தித்துள்ளனர்.

பிபிசி செய்தியாளரின் அனுபவங்கள்
படக்குறிப்பு,இஸ்ரேல் எச்சரித்ததையடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் வடக்கு காஸாவிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது.

ரேஷன் கடைகள் மீது தாக்குதல்

அக்டோபர் 7-ஆம் தேதி காலை 6.15 மணிக்கு எழுந்தேன், என் குழந்தைகள் அலறிக் கொண்டிருந்தார்கள். நான் மேல்தளத்திற்கு சென்று பார்த்தேன், இஸ்ரேலில் இருந்து காஸா மீது ராக்கெட்டுகள் ஏவப்படுவதைக் கண்டேன்.

ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்ததாகவும், இந்த தாக்குதலில் 1,200 பேர் உயிரிழந்ததாகவும் தெரிய வந்தது. 250 இஸ்ரேலியர்கள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர், எனவே இஸ்ரேலின் பதிலடி நாங்கள் இதுவரை பார்த்திராத ஒன்றாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்.

ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, காஸாவில் இதுவரை 34,000 பேர் இறந்துள்ளனர், ஆனால் போர் தொடர்கிறது. இன்னும் மக்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது.

போர் ஆரம்பித்து இரண்டு நாட்களாகியிருந்ததால், ஜபாலியாவில் உள்ள ஒரு சந்தைக்குப் பொருட்கள் வாங்கச் சென்றேன். என்னைப் போலவே பொருட்களை வாங்க ஏராளமானோர் அங்கு கூடியிருந்தனர்.

நான் அந்த பகுதியை விட்டு வெளியேறிய பத்து நிமிடங்களில் அந்த பகுதியில் பலத்த குண்டுவெடிப்பு ஏற்பட்டது. அங்கிருந்த பெரிய ரேஷன் கடைகளும் இடிந்து நாசமாயின.

இந்த குண்டுவெடிப்பில் 69 பேர் கொல்லப்பட்டதாகவும், இந்த தாக்குதல் போர்க்குற்றமாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பிபிசியின் கேள்விகளுக்கு இஸ்ரேல் ராணுவம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

 

'எனது வீடு முற்றிலும் சேதமடைந்தது'

பிபிசி செய்தியாளரின் அனுபவங்கள்
படக்குறிப்பு,கான் யூனிஸில் இருந்த பிபிசி குழு உறுப்பினர்கள் இந்த நிலையில் தான் வாழ வேண்டியிருந்தது.

போர் முழுவதும், ஹமாஸ் தளங்களை மட்டுமே குறிவைப்பதாகவும், மேலும் ஹமாஸ் தளங்கள் பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் உள்ளன என்றும் இஸ்ரேல் கூறுகிறது. ‘ராணுவ இலக்குகள் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தின் தொடர்புடைய விதிகளின்படியே உள்ளன,’ என்றும் அது கூறியுள்ளது.

போருக்கு முன்பு, ஜபாலியா ஒரு அழகான, அமைதியான நகரமாக இருந்தது. நான் அங்குதான் பிறந்தேன், என் குடும்பத்துடன் எளிமையான, திருப்தியான வாழ்க்கையை வாழ்ந்தேன். எதிர்காலத்திற்கான திட்டங்கள் இருந்தன.

இந்த நகரத்தின் கிழக்கே எனக்கு பண்ணைகள் இருந்தன, அங்கு நான் ஆலிவ், எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு மரங்களை என் கைகளால் நட்டேன். அது மிகவும் அமைதியான இடம், மாலையில் வேலை முடிந்ததும் அங்கு அமர்ந்து தேநீர் அருந்துவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

கான் யூனிஸ் செல்ல வடக்கு காஸாவை விட்டு வெளியேற முடிவு செய்த நாள், நான் காஸா நகரில் இருந்த எனது வீட்டையும் பிபிசி அலுவலகத்தையும் விட்டு வெளியேறினேன், அது என் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும்.

ஒரு காரில் 10-க்கும் மேற்பட்ட நபர்களுடன், நானும் எனது குடும்பத்தினரும், சாமான்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டோம். ஆயிரக்கணக்கானவர்கள் தெற்கு நோக்கிய ஒரு சாலையில் நடந்தும், சில வாகனங்களிலும் சென்றுக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் தெற்கு காஸாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் இருபுறமும் குண்டுவெடிப்புகள் நடந்தன. பயணத்தை நிறுத்த வேண்டியதாயிற்று. வழியில், என் குழந்தைகள் என்னிடம் கேட்டார்கள், "நாம் எங்கே போகிறோம்? நாளைக்கு மீண்டும் வருவோமா?”

நான் வீட்டை விட்டு வெளியேறும்போது எனது புகைப்பட ஆல்பத்தை என்னுடன் எடுத்துச் செல்ல விரும்பினேன். அதில் எனது குழந்தைப் பருவம், பெற்றோர், மனைவி மற்றும் எனது நிச்சயதார்த்தப் புகைப்படமும் இருந்தது. என் தந்தைக்கு சொந்தமான புத்தகங்களை என்னுடன் கொண்டு வந்திருக்கலாம்.

எனது தந்தை அரபு மொழி ஆசிரியர். அவர் மறைவுக்குப் பிறகும் அவருடைய புத்தகங்களை நான் வைத்திருந்தேன். பின்னர் எனது வீடு முற்றாக இடிந்து கிடப்பதை எனது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் மூலம் அறிந்து கொண்டேன். எனது வயல்கள், பண்ணைகள் எரிக்கப்பட்டன.

காஸாவில் இருந்து இஸ்ரேலுக்கு கொண்டுசெல்லப்பட்ட உடல்கள்

பிபிசி செய்தியாளரின் அனுபவங்கள்
படக்குறிப்பு,அல் ஜசீரா பணியகத்தின் தலைவர் வயேல் டாடோ இரண்டு தனித்தனி வான்வழித் தாக்குதல்களில் தனது குடும்ப உறுப்பினர்களை இழந்தார்.

அந்த பயங்கரமான பயணத்திற்கு பிறகு தான், ஓர் இரவு ரெட் கிரசண்ட் தலைமையகத்திற்கு வெளியே தெருவில் உறங்கினோம். பின்னர் நான் கான் யூனிஸில் பல வாரங்கள் தொடர்ந்து வேலை செய்தேன். என் குடும்பம் அப்போது நுசைரத்தில் இருந்தது. அவர்களைப் பிரிந்து இருந்தது எனக்கு உளவியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பல நாட்கள் பல உணர்வுகளுடன் போராடினேன். பின்னர் இஸ்ரேலிய படைகள் முன்னேறி வருவதாகவும், தெற்கை மத்திய மற்றும் வடக்கு காஸாவிலிருந்து பிரிப்பதே அதன் நோக்கமாக இருப்பதாகவும் செய்திகள் வந்தன.

நானோ என் குடும்பமோ கொல்லப்படுவோம், இனி ஒருவரையொருவர் பார்க்க மாட்டோம் என்று பயந்தேன்.

முதல் முறையாக நான் தோற்றுவிட்டதாக உணர்ந்தேன். அது எந்த நாள் என்று கூட நினைவில்லை. வேலையை நிறுத்திவிட்டு என் குடும்பத்திடம் செல்ல நினைத்தேன். இறந்தால் ஒன்றாகவே இறக்க விரும்பினேன்.

இறுதியாக டிசம்பர் 11 அன்று, நான் ஒரு சக ஊழியருடன் நுசைரத்துக்குப் புறப்பட்டேன். நான் அவ்விடத்தை அடைந்ததும், என் குழந்தைகள் என்னைக் கட்டிப்பிடித்து அழுதனர். என் மகன் ரசான் என் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொண்டான்.

எப்படியோ குடும்பத்துடன் ரஃபாவை அடைந்தோம். பிபிசி குழுவும் ரஃபாவை அடைந்தது, நாங்கள் அங்கிருந்து பணியைத் தொடர்ந்தோம்.

டிசம்பர் பிற்பகுதியில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (ஐ.டி.எப்- IDF) சுமார் 80 உடல்களை காஸாவில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக நான் செய்தியில் தெரிவித்தேன்.

அவர்களில் யாரேனும் இஸ்ரேலிய பணயக்கைதிகளா என்பதை ஆய்வு செய்ய அந்த உடல்கள் காஸாவில் இருந்து இஸ்ரேலுக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டதாக ஐ.டி.எப் கூறியது.

ரஃபாவில் உள்ள ஒரு கல்லறைக்குள் ஒரு பெரிய லாரி நுழைந்தது. கொள்கலனை திறந்ததும் துர்நாற்றம் எங்கும் பரவியது.

கவசங்கள் மற்றும் முகமூடிகளை அணிந்த மக்கள் மணல் நிலத்தில் ஒரு வெகுஜன புதைகுழியைத் தோண்டி நீல பிளாஸ்டிக் கவர்களில் சுற்றப்பட்ட உடல்களின் எச்சங்களை புதைத்தனர்.

இதுபோன்ற ஒரு காட்சியை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை, அது எவ்வளவு பயங்கரமானது என்பதை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.

 
பிபிசி செய்தியாளரின் அனுபவங்கள்

பட மூலாதாரம்,ADNAN EL-BURSH

படக்குறிப்பு,போருக்கு முன்னர் அட்னானும் அவரது குடும்பத்தினரும் வாழ்ந்த வீடு தற்போது முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது

பின்னர் ஜனவரியில், பல உடல்கள் கொண்டு வரப்பட்டபோது நான் ரஃபாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து செய்தி அளித்துக் கொண்டிருந்தேன். அதில் அல் ஜசீரா பத்திரிகையில் பணியாற்றிய பத்திரிக்கையாளர் வயேலின் மூத்த மகன் ஹம்சாவின் சடலமும் இருந்தது.

ஆனால் இதைப் பற்றி வயேலுக்கு யார் தெரிவித்திருப்பார்கள்? அவருக்கு ஏற்கனவே மோசமான ஒரு துயரச் சம்பவம் நடந்துவிட்டது, இதை அவரிடம் சொல்ல முடியாது என்று தோன்றியது. எனது சக ஊழியர்களில் ஒருவர் வயேலின் நெருங்கிய உறவினர்களை அழைத்து, இந்தச் செய்தியை அவர்களுக்குத் தெரிவித்தார்.

ஹம்சாவும் அவரது வீடியோகிராபர் முஸ்தபா துரையாவும் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். அந்தக் குறிப்பிட்ட பகுதியில் அதற்கு முன் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக செய்தி அளித்துக் கொண்டிருக்கும்போதே அவரது கார் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

அவர்கள் ‘காஸாவை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளின் உறுப்பினர்கள்' என்று இஸ்ரேலிய ராணுவம் குற்றம் சாட்டுகிறது. அவர்களது குடும்பமும் அல் ஜசீராவும் இந்தக் கூற்றுகளை பொய் என்று நிராகரிக்கின்றன.

அவர்கள் இரண்டு பேரும் ஐ.டி.எஃப் வீரர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ட்ரோன்களை இயக்கியதாக ஐ.டி.எப் கூறுகிறது, ஆனால் வாஷிங்டன் போஸ்ட் விசாரணையில் ‘அவர்கள் இருவரும் அந்த நாளில் ட்ரோன் இயக்கத்தில் ஈடுபட்டதாக எந்த அறிகுறியும் இல்லை.’ என்று கூறுகிறது.

 

'இந்த உணவு எனக்கு விஷமாகத் தெரிகிறது'

பிபிசி செய்தியாளரின் அனுபவங்கள்
படக்குறிப்பு,அட்னான் மற்றும் பிபிசி குழு இறுதியாக பிப்ரவரியில் காஸாவை விட்டு வெளியேறியது.

ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (Reporters Without Borders) அமைப்பின் கருத்துப்படி, 100-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள், அவர்களில் பெரும்பாலோர் பாலத்தீனர்கள், அக்டோபர் 7 முதல் காஸாவில் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் ஐ.டி.எப், "எந்தவொரு பத்திரிகையாளரையும் நாங்கள் வேண்டுமென்றே குறிவைத்ததில்லை. ஊடகவியலாளர்கள் உட்பட எந்தவொரு பொதுமக்களுக்கும் குறைந்தபட்ச ஆபத்து மட்டுமே ஏற்படுவதை உறுதிசெய்ய நாங்கள் எல்லா முயற்சிகளையும் செய்கிறோம்'” என்று கூறுகிறது.

இறுதியாக பிபிசி குழுவின் குடும்பத்தினர் காஸாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டதாக எங்களுக்கு செய்தி வந்தது. நான்கு வாரங்களுக்குப் பிறகு, நாங்களும் எகிப்திய அதிகாரிகளின் உதவியுடன் ரஃபாவை விட்டு வெளியேற முடிந்தது.

நான் இதை எழுதும்போது, கத்தாரில் அமர்ந்திருக்கிறேன். ஆனால் ஜபாலியாவில் உள்ள மக்கள், எப்படியாவது தங்கள் விலங்குகளுக்கு தீவனம் அளிக்க புல் பறித்து அதை அரைத்துக் கொண்டிருப்பார்கள் என்று எனக்குத் தெரியும்.

அதேசமயம் இங்கே நான் ஹோட்டலில் சுத்தமான உணவுடன் அமர்ந்திருக்கிறேன். என்னால் இந்த உணவைச் சாப்பிட முடியவில்லை, இந்த உணவு முழுவதும் விஷம் நிரம்பியுள்ளது போல நான் உணர்கிறேன்.

https://www.bbc.com/tamil/articles/cglveyprz50o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஏராளன் said:

காசா யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னரே இஸ்ரேலிய படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் - அமெரிக்கா

இன்றைய பலஸ்தீன் யுத்தம் ஆரம்பிக்க முதலே..... இஸ்ரேலின் அட்டூழியம் பற்றிய காணொளிகள் யாழ்களத்தில் உள்ளன.பலஸ்தீன பிள்ளைகளை கடி நாய்களை விட்டு கடித்து குதற விடுவார்கள். இன்னும் பல காணொளிகள் உள்ளன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.