Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயமானது எனவும் பாடசாலை வருகைக்கான புள்ளிகள் பரீட்சை பெறுபேறுகளுடன் எதிர்காலத்தில் சேர்க்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி மாற்றத்தின் கீழ், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு கூட மாணவர்கள் வருகைக்காக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புள்ளிகளைப் பெற வேண்டும். அதன்படி, எதிர்காலத்தில் மாணவர்கள் வருகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இது அனைத்து தரங்களுக்கும் பொருந்தும் என்றார்.

1,500க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஒரு மண்டபத்தில் கூட்டி சொற்பொழிவு செய்வதன் மூலம் கல்வி என்பது அடையக்கூடிய ஒன்று அல்ல என்றும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் உட்பட ஆரம்ப வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு இவ்வாறான கற்பித்தல் முறைகளை பிரயோகிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்பாட்டில் தேவையான உதவியைப் பெறுவது தவறல்ல, ஆனால் அது வணிக அடிப்படையிலான தொழிலாக உருவானது விரும்பத்தக்க சூழ்நிலை அல்ல. பெற்றோர்கள் கஷ்டப்பட்டு தங்கள் குழந்தைகளை டியூஷன் வகுப்புகளுக்கு அனுப்பினால் பாடசாலைகள் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை, தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சவால்களுக்கு முகங்கொடுத்து சிரமங்களை எதிர்நோக்கும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்விக்காக பெரும் தொகையை ஒதுக்க வேண்டிய இக்கட்டான நிலையை உடனடியாக தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

வணிகமயமாக்கப்பட்ட டியூஷன் வகுப்புகளால் இலவசக் கல்வியின் நோக்கம் மறைந்து வருவதாகவும் இவ்வாறானதொரு நிலைமை வேறெந்த நாட்டிலும் காணப்படவில்லை எனவும், இந்த நாட்டில் ஆரம்பகால கல்வி தொடர்பாக தற்போதுள்ள கருத்துக்கள் மற்றும் அளவுகோல்கள் முற்றாக மாற்றப்பட வேண்டிய மட்டத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

https://thinakkural.lk/article/276424

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சைக்காக அதிகாலை 5.30/6 மணி தொடக்கம் 7 மணி வரை இணைய வழி மூலமும் tuition வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த  மாணவர்கள் வேளைக்கு எழும்பி பாடசாலைக்கு போக ஆயத்தம் செய்தபின் இணையவழி வகுப்பில் கலந்து கொள்வார்கள்..

இரவு பாடங்கள் முடித்து நேரம் பிந்தி படுக்கவும் வேண்டும். பிறகு இந்த இணையவழி வகுப்பிற்காக அதிகாலையில் எழும்பவும் வேண்டும்.  ஏன் இந்த போட்டியோ தெரியவில்லை. 

மேற்குலகில் வாழும் எம்மவர்களும் இதற்குச் சளைத்தவர்களில் இல்லை.. பாடசாலைக்கு 80% கட்டாய வரவு இங்கே இருந்தாலும் கூட இங்கே உள்ள ஆண்டு 6ல் வரும் selective schools பரீட்சை நெருங்கும் சமயத்தில் இல்லாத வருத்தமெல்லாம் வந்து பாடசாலைகளுக்கு போகாமல் வீட்டில் இருந்து படிப்பார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலவசக் கல்வி.. 150000 பேரில் 50000 பேருக்கு தான் உயர்கல்வி வாய்ப்பை வழங்கும் என்றால்..  மிகுதி 100,000 பேர் வாய்ப்பை பெற்றும் வாய்பார்க்கும் நிலைமையை உருவாக்கி இருக்கென்றால்.. அந்த இலவசக் கல்வி போட்டிக் கல்வியாக மாற்றமடைந்து.. தனியார் உயர்கல்விக்கான வாய்ப்பை கூட்டி இருக்கென்றால்.. அது டியூசன்கள் வந்ததன் விளைவல்ல.. தவறான இலவசக் கல்விக் கொள்கைகளின் விளைவு. அரசாங்கங்களின் தவறான கல்விக் கொள்கைகளின் விளைவு. 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, P.S.பிரபா said:

கற்கை நன்றே, கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே.

பிள்ளைகளை மெண்டல் ஆக்கும் அளவுக்கு அல்லது ஏனைய புறக்கிருத்தியங்களை முற்றாக புறக்கணித்து படி படி என சாவடிக்க தேவையில்லை….ஆனால் எந்த secondary school ற்கு போகிறோம், எந்த யூனிவர்சிட்டி போகிறோம் என்பது 20-30 வயதில் கிடைக்கப்போகும் வாய்புக்களில் பெரும் தாக்கம் செலுத்துகிறது. ஆகவே இந்த வயதில் கொஞ்சம் சைக்கிளை ஊண்டி உழக்கலாம்.

முதுகில் பாரம் குறைவாக இருக்கும் போது மேட்டில் ஏறிவிட்டால், பின்னர் பாரங்கள் முதுகில் ஏறிய பின்னும் சமதரையில் சைக்கிளை ஓட்டுவது இலகுவாக இருக்கும்.

முதுகையும் சைக்கிளையும் முறிக்கும் அளவுக்கு அல்ல.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, nedukkalapoovan said:

இலவசக் கல்வி.. 150000 பேரில் 50000 பேருக்கு தான் உயர்கல்வி வாய்ப்பை வழங்கும் என்றால்..  மிகுதி 100,000 பேர் வாய்ப்பை பெற்றும் வாய்பார்க்கும் நிலைமையை உருவாக்கி இருக்கென்றால்.. அந்த இலவசக் கல்வி போட்டிக் கல்வியாக மாற்றமடைந்து.. தனியார் உயர்கல்விக்கான வாய்ப்பை கூட்டி இருக்கென்றால்.. அது டியூசன்கள் வந்ததன் விளைவல்ல.. தவறான இலவசக் கல்விக் கொள்கைகளின் விளைவு. அரசாங்கங்களின் தவறான கல்விக் கொள்கைகளின் விளைவு. 

மிக சரியான கருத்து.

குறிப்பாக 60/70 தொடங்கி 2010 கள் வரை ஆங்கில கல்வி அதள பாதாளத்தில் வீழ்ந்தது. 

அதே போல் இந்த காலப்பகுதியில் பாரம்பரியமான துறைகள் மட்டுமே படிப்பு, தொழில் என்பதாகவே இருந்தது.

இப்படியான கொள்கை, திட்டமிடல் பிழைகளால் இந்தியாவை விட கற்றவர் அளவு அதிகமாக இருந்தும், தொழில் நுட்ப புரட்சி, அவுட்சோர்சின் அலை என்பன இலங்கையை பைபாஸ் பண்ணி போய்விட்டன.

பெங்களூருவும், ஹைதரபாத்தும், சென்னையும், செய்வதை பார்த்து கொப்பி அடிப்போம் என்று கூட யோசிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பள்ளிக்கூட வகுப்பிலை இவ்வளவுதான் சொல்லித்தருவன்..... மிச்சத்தை நான் நடத்துற ரியூசன் சென்ரருக்கு வாங்கோ ரெஸ்ற் பேப்பருக்கு ஏத்தமாதிரி சொல்லித்தாறன் எண்ட வாத்திமார் எக்கச்சக்கம்....

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/10/2023 at 01:24, P.S.பிரபா said:

மேற்குலகில் வாழும் எம்மவர்களும் இதற்குச் சளைத்தவர்களில் இல்லை..

மிகச் சரியாக சொன்னீர்கள்.

பள்ளிக்கூட வகுப்பிலை இவ்வளவுதான் சொல்லித்தருவன்..... மிச்சத்தை நான் நடத்துற ரியூசன் சென்ரருக்கு வாங்கோ ரெஸ்ற் பேப்பருக்கு ஏத்தமாதிரி சொல்லித்தாறன் எண்ட வாத்திமார் எக்கச்சக்கம்...]

நானும் கேள்விபட்டேன்.
ரியூசன்  இப்படி பணம் சம்பாதிக்கும் தொழிலாக பரவிவருவதாக. ரியூசனுக்கு அனுப்புபவர்களும் ரியூசனின் நோக்கமே என்ன என்று தெரியம கண்மூடிதனமாக அனுப்புவதாக.

  • Sad 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.