Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெத்தியடி

Featured Replies

உண்மையில் சோமபானம் என்பது ஒருவகை மதுவையே குறிக்கின்றது. தேவர்கள் பற்றிய பல கதைகளிலேயே இந்திரலோகத்தில் தேவர்கள் சோமபானமருந்தி மயங்கிக் கிடந்தார்கள் போன்ற வாக்கியங்கள் வந்திருக்கின்றன. இனியபானமருந்தி எவரும் மயங்கியதாக நான் அறியவில்லை.

  • Replies 59
  • Views 10k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த திரியை(குத்துவிளக்கேற்றி) ஆரம்பித்து வைத்த மதனராசவுக்கு வாழ்த்துக்கள்.

உண்மையில் சோமபானம் என்பது ஒருவகை மதுவையே குறிக்கின்றது. தேவர்கள் பற்றிய பல கதைகளிலேயே இந்திரலோகத்தில் தேவர்கள் சோமபானமருந்தி மயங்கிக் கிடந்தார்கள் போன்ற வாக்கியங்கள் வந்திருக்கின்றன. இனியபானமருந்தி எவரும் மயங்கியதாக நான் அறியவில்லை.

ம்! -ஒரு போத்தல் நல்ல தூய தேனை குடித்து பாருங்கள். பதனீர் குடித்து பாருங்கள் (பதனீரை கள் தானே என்று சொல்லி விடாதீர்கள். புளிக்க வைத்தால் தான் கள்)

நிச்சயமாக! இந்த பக்கத்தில் உள்ளதை விட இன்னும் நிறைய வார்த்தைகள் உள்ளது. தமிழ் ஒரு பழம்பெரும் மொழி என்பதை எவனும் மறுக்க முடியாது. சொற்களை கொடுப்பதும் எடுப்பதும் ஒரு பழம்பெரும் மொழியில் இயற்கை தான்.

என் தாய் மொழியை, காட்டுமிராண்டி மொழி என்பவனே காட்டுமிராண்டி. நீசமொழி என்பவனே நீசன்.

Edited by vettri-vel

கதிரவேற்பிள்ளையின் அகராதியிலும் சோமபானம் என்பதற்கு மது என்றுதான் அர்த்தம் இருக்கிறது.

googleஇல் "சோமபானம்" என்ற வார்த்தையை தேடுகின்ற போது அனைவரும் "மது" என்ற அர்த்தத்திலேயே சோமபானத்தை உபயோகித்திருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

சோமபானம் என்ற பெயர் வருவதற்கு காரணம் எதுவாக இருப்பினும், அந்தச் சொல் மதுவையே குறிக்கிறது என்றுதான் நானும் நினைக்கிறேன்

இனி வரும் காலங்களில் வரும் அகராதிகளில் தண்ணி (அடிப்பது) என்பதற்கு பட்டை சாராயம் என்று ஒரு அர்த்தம் கொடுக்க வேண்டி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. :lol:

பேச்சு வழக்கில் திரிபடையும் (slang) சொற்களையும், மரபு வழக்காக வரும் (colloquial) சொற்களையும் அகராதிகள் இணைப்பது வழக்கம். அதனால் அதுவே ஒரு சொல்லின் மூலக்கருத்து என்று ஆகிவிடாது.

Edited by vettri-vel

  • 3 weeks later...

நண்பர் வெற்றிவேலன்

அவர்கள் அற்புதமாக பதில்கள் கொடுத்தார்.

லண்டனில் புத்தகம் இன்றி முயன்று பல கூறினார்.

தமிழ் மற்றும் சமஸ்க்ருதத்திலும் நிறைந்த புலமை உடைய துக்ளக் ஆசிரியர் சோ வால்மீகீ இராமாயணம் கொண்டு விளக்கியுள்ளதைத் தருகிறேன்.

துவேஷம் தொடர்கிறது !

"ராமன் குடிகாரன் என்று வால்மீகி தனது ராமாயணத்தில் எழுதியிருக்கிறார்' – இது தமிழக முதல்வரின், ஹிந்து மத துவேஷப் பேச்சுக்களின் சமீபத்திய வெளியீடு.

ராமன் குடிகாரன் என்று வால்மீகி ராமாயணத்தில் எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை – என்பதை அவருக்கு யார் சுட்டிக்காட்டினார்களோ, தெரியாது; டெலிவிஷன் சேனல்களினால் பதிவு செய்யப்பட்டு, ஒளிபரப்பப்பட்டு விட்ட இந்த அட்டூழியமான பேச்சை, கொஞ்சம் மாற்றி, பத்திரிகைகளுக்கு அனுப்பினார். அதில், "ராமர் சோமபானம் என்ற மதுபானம் அருந்துகிறவர் என்று வால்மீகி எழுதியிருக்கிறார்' என்று மட்டுமே முதல்வர் கூறியதாக, அவருடைய

பேச்சு "திருத்தி' அமைக்கப்பட்டது.

இந்த திருத்தமும், பிதற்றலே. வால்மீகி ராமாயணத்தில், எந்த இடத்திலும் ராமர் ஸோமபானம் அருந்துகிறவர் என்று எழுதப்படவில்லை.

ஸோமபானமும் அருந்தவில்லை !

ஸோமபானம் என்பது போதை ஏற்றுவது அல்ல. "ஸுரா பானம்' என்பதுதான் அப்படிப்பட்ட பானம்; இதுவே "பானம்' என்றும் இலக்கியங்களில் குறிப்பிடப்படுவதுண்டு.

ஸோம என்பது ஒரு கொடி – ஸோமலதை; அதன் ரஸம் ஸோம ரஸம்; இது தேவர்களுக்கு உரியதாகவும், அமிர்தத்திற்கு ஒப்பானதாகவும் குறிப்பிடப்படுகிறது. இது யாகங்களில் முக்கிய இடம் பெறுகிறது. இது போதை தருகிற விஷயம் அல்ல.

ஆகையால் ஸோமபானம் அருந்துவது என்பது சடங்குகளுடன் கூடிய, புனிதமுடைய ரஸத்தை அருந்துவதே தவிர – போதை ஏற்றிக்கொள்கிற விஷயம் அல்ல. ஸுராபானம் என்பதுதான், குடி; போதை பானம்.

ஆனால், மேலே கூறியுள்ளபடி, "ராமர் ஸோமபானம் அருந்தினார்' என்று கூட, வால்மீகி தனது இராமாயணத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

அதாவது "ராமன் குடிகாரன் என்று வால்மீகி கூறியிருக்கிறார்' என்ற முதல்வரின் பேச்சும் பிதற்றல்; "ராமர் ஸோமபானம் என்கிற மதுபானம் அருந்துகிறவர்' என்று வால்மீகி எழுதியிருப்பதாக, முதல்வர் கூறியிருப்பதும் அபத்தம்.

சரி, ஏன் இப்படி முதல்வர், தப்பும் தவறுமாக பேசியிருக்கிறார்? "பட்டாபிஷேகத்திற்கு வஸிஷ்டர் குறித்த தினம் மட்டமான தினமாகி விட்டது, ஏன்?' என்றும்; "ஸீதை மீது ராமர் மரவுரியை கட்டாயமாகத் திணித்தார்' என்றும் ஏற்கெனவே கலைஞர் கூறியது நினைவுக்கு வருகிறது. அந்தத் தவறுகளை அப்போதே நாம் சுட்டிக்காட்டினோம். ராமாயணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தாலே, பிதற்றியே தீருவது என்று, அவருக்கு என்ன வைராக்கியமோ தெரியவில்லை – இப்போது மீண்டும் அந்த வேலையைச் செய்திருக்கிறார்.

இருந்தாலும் கூட, முதல்வர் ஆயிற்றே! அதனால், அவருடைய பதவியை நினைத்தாவது – அவர் ஏன் இப்படி பேசியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள, கொஞ்சமாவது நாம் முனைய வேண்டாமா?

"மது' என்றால் "குடி'தானா ?

திரைப்பட காமெடி சீன்களில், காமெடியன் ஆஃப்ரிக்காவிலிருந்து வந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டு, "கெக்கே... புக்கே... மக்ர டொக்கே... ஜிக்ல மக்கோ...

திங்கன கும்பாரே... அஜாகினி பஜோகினி...' என்று ஏதாவது பேசுவார்; அவர் பக்கத்தில் இருப்பவர், இந்த உளறலுக்கு ஒரு அர்த்தம் சொல்வார். அந்த மாதிரி, முதல்வரின் பேச்சுக்கு, நாம் ஒரு பொருள் காண்போம்.

ராமாயணத்திலிருந்து, ராமர் "மது' உண்டதாக தெரிய வருகிறது என்று யாரோ முதல்வரிடம் சொல்ல, அதை வைத்துக் கொண்டு, "ஆஹா! மது! மதுபானம்! சாராயம்!' என்று அவர் முடிவுகட்டி விட்டார் போலிருக்கிறது. ஸம்ஸ்க்ருதத்தில் மது என்றால் "போதை தருகிற பானமே' என்பதல்ல பொருள். கள், சாராயம், இவற்றின் அயல்நாட்டு வகைகள் போன்றவற்றை அருந்துவது, தமிழில் மது அருந்துவது என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் ஸம்ஸ்க்ருதத்தில் "மது' என்பதற்கு, பல அர்த்தங்கள் உண்டு. "மது உண்ணும் வண்டு' என்கிறோமே, அந்த "மது'தான், ஸம்ஸ்க்ருத "மது'; அதாவது மலர்களிலிருந்து பெறப்படுவது; தேன். இதைத் தவிர, சுவையுள்ள தித்திப்பு ருசியுள்ள பழரஸங்களும் "மது' என்று குறிப்பிடப்படுகின்றன.

"மதுர' (மதுரம்) என்றால் சுவையுள்ளது, இனிமையானது. நல்ல இசையை "அந்த சங்கீதம் கேட்பதற்கே மதுரமாக இருந்தது' என்று கூறுவது இதனால்தான். பூஜைகள் செய்யும்போது, "மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி' – "மதுபர்க்கம் சமர்ப்பிக்கிறேன்' என்று கூறப்படுகிறது. மதுபர்க்கம் என்பது தேன், பால், வெண்ணெய், தயிர் போன்றவை கலந்தது. "மதுபானம்' என்பதற்கு ஸம்ஸ்க்ருத அகராதி "சுவையுள்ள பழரஸங்கள்' என்று பொருள் கூறுகிறது.

ஆகையால் மது என்றால், உடனே கள், சாராய வகையைச் சார்ந்தது மட்டுமே என்ற எண்ணம் தவறானது. தமிழிலேயே கூட அகராதிகள், "மது' என்பதற்கு பல

அர்த்தங்களைக் கூறுகின்றன. மகரந்தம், தேன், அமிர்தம் போன்றவற்றுடன் "கள்' என்பதும், தமிழ் "மது'விற்கு ஒரு அர்த்தம். ஸம்ஸ்க்ருதத்திலும், தமிழிலும் மது என்ற சொல்லிற்கு உள்ள நல்ல அர்த்தங்களை கொள்ள முடியாது என்ற வைராக்கியத்துடன், "கள்' என்ற அர்த்தத்தைத்தான் எடுத்துக்கொள்வேன் என்று சொன்னால், அதில் வறட்டுப்பிடிவாதம் இருக்குமே தவிர, விஷயஞானம் இருக்காது.

குடிப்பழக்கத்திற்கு, ராமர் கண்டனம் !

இன்னமும் சொல்லப்போனால், போதை தருகிற பானங்களை அருந்துவதை ராமர் வெறுத்தார் என்பது வால்மீகி ராமாயணத்தில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. வாலி வதத்திற்குப் பிறகு, ஸுக்ரீவன், தான் ராமருக்கு அளித்த வாக்குறுதியை மறந்து, கேளிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்; இப்படி யுத்த முஸ்தீபுகள் செய்யப்படாமல், இருப்பதைப் பார்த்த ராமர் கோபம் அடைகிறார். ஸுக்ரீவன் கேளிக்கைகளிலும், போதை பானங்கள் அருந்துவதிலும் நேரம் கழித்துக் கொண்டிருப்பதை சாடி, அவர் லக்ஷ்மணனிடம் பேசுகிறார்.

அந்த இடத்தில் ராமர் கண்டிக்கிற பழக்கம் "பானம் அருந்துவது'; "பானமேவோபஸேவதே' – "பானம் அருந்துவதிலேயே குறியாக இருக்கிறான்' என்று ராமர் கூறுகிறார். அந்தப் பழக்கத்தைக் கண்டிக்கிறார். ஆனால், குடிப் பழக்கத்தை, "மது அருந்துவது என்றோ, ஸோமபானம் அருந்துவது' என்றோ சொல்லவில்லை;

லக்ஷ்மணன் சுக்ரீவனை சந்திக்கச் செல்கிறான்; முதலில் தாரை (வாலியின் மனைவியாக இருந்தவள்; பின்னர் சுக்ரீவனோடு இணைந்தவள்) வந்து வரவேற்கிறாள். "பானம் அருந்தியதால் லஜ்ஜை விலகியவளாக' என்று அவள் வர்ணிக்கப்படுகிறாள். "பானயோகாச்ச நிவ்ருத்தலஜ்ஜா' என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது; "மது

அருந்தியதால் வெட்கத்தை விட்டாள்' என்றோ, "ஸோமபானம் அருந்தியதால் லஜ்ஜையை விட்டாள்' என்றோ, சொல்லப்படவில்லை. <

ராமர் சுக்ரீவனுக்கு விடுத்த எச்சரிக்கையையும், அவர் கூறியதையும் தாரையிடம் எடுத்துரைக்கிற லக்ஷ்மணன், "வாழ்வில் நலம் பெறவும், தர்ம நெறிப்படி நடக்கவும் விரும்புகிறவர்களுக்கு இம்மாதிரி குடிப்பது தகாது; அறம் பொருள் இன்பம்

மூன்றையும் குடி அழிக்க வல்லது' என்கிறான். அதாவது ராமரும், அவர் சொல்படி பேசிய லக்ஷ்மணனும் குடியை நிந்தித்தனர். இந்த இடத்திலும் குடிப்பழக்கம் "மது அருந்துவது' என்று குறிப்பிடப்படவில்லை. "பானம்' என்றுதான் கூறப்படுகிறது.

மீண்டும், ஸுக்ரீவனை சந்திக்கிறபோது, பசுவதை செய்பவன், திருடன், விரதத்தை மீறுபவன், ஆகியோருக்கு இணையாக குடிப்பவனைப் பேசுகிறான் லக்ஷ்மணன். அப்போதும் "மது, ஸோமபானம்' என்றெல்லாம் சொல்லவில்லை. "கோக்னே சைவ ஸுராபேச சௌரே பக்னவ்ரதே ததா' – என்று சொல்லி, குடிப் பழக்கத்தை "ஸுராபே' – ஸுராபானம் அருந்துவது, என்றுதான் லக்ஷ்மணன் கூறுகிறான்.

ராமரும், லக்ஷ்மணனும், குடிப்பழக்கத்தை இவ்வாறு கண்டனம் செய்திருக்க, ராமர் குடிகாரர் என்றோ, குடிப்பழக்கம் உடையவர் என்றோ கருத வால்மீகி ராமாயணத்தில் இடமே இல்லை.

மீண்டும் ஒருமுறை கவனத்தில் கொள்வது தகும் என்பதால், "ஸோமபானம் என்பது போதை தருகிற பானம் அல்ல' என்பதையும், அதையும் ராமர் அருந்தியதாக வால்மீகி கூறவில்லை என்பதையும் நினைவுபடுத்திக் கொள்வோம்.

நேருஜி – தவறான விலாசம் !

"நேரு சொன்னார், சொன்னார்...' என்று மீண்டும் மீண்டும் முதல்வர் பேசி வருகிறார். மேலைநாட்டு விமர்சனங்களை அப்படியே ஏற்ற நேருஜியின் கருத்துகளைப் படித்து, ஹிந்து மதம் பற்றி தெளிவுபெற முடியாது. பார்லிமென்டின் நடைமுறைகள், சோஷலிஸ நம்பிக்கைகள் போன்ற விஷயங்கள் பற்றி

தெரிந்துகொள்ள, நேருவின் கருத்துகளும் உதவும். ஆன்மீகம் பற்றியோ, தெய்வ நம்பிக்கை பற்றியோ தெரிந்துகொள்ள வேண்டுமானால், அனந்தராம தீக்ஷிதர், கிருபானந்த வாரியர், புலவர் கீரன் போன்றவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும்; அல்லது தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள், கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள் ஆகியோரை அணுக வேண்டும். முதல்வர் விலாசம் தெரியாமல், நேருவிடம் போனது அவருடைய தவறு. உதாரணமாக – ரம்ஜான் நோன்பு பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் – முதல்வரிடம் போனால், அந்த நோன்பு பற்றிய அடிப்படை நம்பிக்கைகள் பற்றி விவரம் இல்லாவிட்டாலும் – "குல்லாய் அணிவது, கஞ்சி குடிப்பது' என்ற விவரங்களாவது தெரியவரும். ஆனால் விநாயகர் சதுர்த்தி பற்றி கேட்டால், "கொழுக்கட்டையை வாயில் திணிப்பேன்' – என்பார். கிருத்திகை விரதம் பற்றி அவரிடம் கேட்பதில் என்ன பயன் இருக்கும்? "அன்று நான் நிறைய சாப்பிடுவேன்' என்று அவரே சொல்லியிருக்கிறார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அதற்கு மேல் அவருக்குத் தெரியாது.

ஆகையால் விலாசம் தவறி அவரிடம் போய் இந்த மாதிரி விஷயங்கள் பற்றி கேட்டால், அது நம் தவறு. இவ்விஷயத்தில், நேருஜி சமாச்சாரமும் அப்படித்தான். இருந்தாலும், அவர் மனித நாகரிகத்தை மதித்தவர் என்பதால், "கொழுக்கட்டை திணிப்பேன்' என்றெல்லாம் சொல்லாமல், "எனக்கு அது பற்றியெல்லாம் நம்பிக்கையும் இல்லை; தெரியவும் தெரியாது' என்று சொல்லியிருப்பார்.

இதையெல்லாம், முதல்வரின் கவனத்திற்காக நாம் சொல்லவில்லை. கலைஞர் "ராமன் குடிகாரன்... ஸோம பானம் அருந்தும் பழக்கமுடையவர்' என்றெல்லாம் பேசியதற்கு மறுதினமே, திரு. சரத்குமார், திரு.குருமூர்த்தி ஆகியோர் என்னிடம் இதுபற்றி அபிப்ராயம் கேட்டபோது, வால்மீகி ராமாயணத்தில் உள்ள மேற்கண்ட விவரங்களை எல்லாம், நான் அவர்களிடம் விரிவாக எடுத்துச் சொன்னேன். அவர்களைப் போல நம்பிக்கை கொண்டவர்களிடம் கூறினால், ஓரளவாவது உண்மைகள் பலரிடையே பரவும்; கலைஞர் போல துவேஷ மனம் கொண்டவர்களின் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்று என்ன பயன்? துவேஷத்தில் மூழ்கியிருக்கிற அவரால், உண்மையை கேட்கவோ, பார்க்கவோ, பேசவோ முடியாமற் போய்விட்டது என்பதை நாம் உணர்கிறோம். ஆனால், வாசகர்களில் யாராவது, முதல்வரின் பேச்சைப் பற்றிய செய்தியைப் படித்து, சற்று மனம் குழம்பியிருந்தால், அவர்கள் "தெளிவுபெற வேண்டும்' என்கிற எண்ணத்தில்தான், இவ்வளவு விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

அரசியல் சட்டம் !

"ராமர் பற்றி பேசக்கூடாது என்று அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா?' என்று ரொம்ப புத்திசாலித்தனமாக முதல்வர் கேட்டிருக்கிறார். "ஹிந்து மதம் நீங்கலாக மற்ற மதத்தவர்கள் வழிபடுகிற தெய்வங்கள் பற்றியோ, இறைத் தூதர்கள் பற்றியோ எதுவும் பேசக் கூடாது' என்று அரசியல் சட்டம் கூறுகிறதா? அப்போது அவை பற்றியெல்லாம், யாராவது தாறுமாறாகப் பேசினால், அதில் தவறு இல்லை என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டுமா? அதுதான் முதல்வரின் வாதமா? அதை விடுவோம்.

"அரசு மேற்கொள்ளும் திட்டம் பற்றி யாரும் எதுவும் பேசினால் அது சதி' என்று

அரசியல் சட்டம் சொல்கிறதா? இல்லையே! பின் ஏன், சேது சமுத்திர திட்டம் பற்றி பேசுகிறவர்கள் செய்வது சதி என்று முதல்வர் சாடுகிறார்? சில ஆண்டுகளுக்கு முன்பு "என்னை கருணாநிதி' என்று குறிப்பிடுகிறார்களே? தமிழக அரசியல் அவ்வளவு தாழ்ந்துவிட்டது!' என்று முதல்வர் வேதனைப்பட்டாரே? ஏன்? அரசியல் சட்டத்தில் "கருணாநிதியை, கருணாநிதி என்று சொல்லக் கூடாது' என்று கூறப்பட்டிருக்கிறதா? சமீபத்தில், "என் குடும்பத்தினர் பற்றி விமர்சனம் செய்கிறார்களே' என்று வருத்தப்பட்டாரே – "கருணாநிதி குடும்பத்தினர் அரசியலுக்கு வந்தாலும், அவர்களை பற்றி யாரும் எதுவும் பேசக்கூடாது' என்று அரசியல் சட்டம் கூறுகிறதா?

அரசியல் சட்டம், எல்லா மதத்தினருக்கும் இடர்பாடு, குறுக்கீடு இன்றி தங்கள் நம்பிக்கையைத் தொடர்கிற உரிமையைத் தந்திருக்கிறது; வழிபாட்டு உரிமை உறுதியாக்கப்பட்டிருக்கிறது. அதை மதிக்காமல் ஒரு ஆட்சியாளர் பேசுவது அரசியல் சட்டத்திற்கு விரோதமானதே!

கிரிமினல் குற்றம் !

இது ஒருபுறமிருக்க – முதல்வர் தொடர்ந்து ஹிந்து மத நம்பிக்கைகளை கொண்டவர்கள் மனம் புண்படுகிறபடியும், ஹிந்து மத தெய்வங்களை இகழ்ந்தும் பேசி வருவது – அரசியல் சட்டம் கூறுகிற மதச்சார்பின்மைக்கு விரோதமானது மட்டுமல்ல; இந்திய தண்டனைச் சட்டம் (இந்தியன் பீனல் கோட்) பிரிவுகள் 295ஏ, 298 ஆகியவற்றின்படி கிரிமினல் குற்றம். இந்த குற்றத்திற்கு, அந்த இருபிரிவுகளில், தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இச்சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவதற்காக, "யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை' என்று முதல்வர் கூறலாம்.

ஆனால், மனம் புண்படுகிறது என்று ஹிந்துக்களில் பலர், மேடைகளிலும், பத்திரிகைகளுக்கு எழுதும் கடிதங்களிலும் மீண்டும் மீண்டும் கூறிய பிறகும், இதுபற்றி ஒரு வழக்கு வந்த பிறகும், முதல்வர் இப்படி தொடர்ந்து பேசுவதால், "மனதை புண்படுத்துகிற நோக்கம்' அவருக்கு இருப்பது, தெளிவாகிறது.

இப்படி சட்டப்படி கிரிமினல் குற்றமாகிற ஒரு செயலை மீண்டும் மீண்டும் செய்து வருகிறவர், ஆட்சியில் எப்படி தொடரலாம்? ஒரு மதத்தினர் தொழும் தெய்வங்களை நான் இகழ்ந்தே தீருவேன் என்று செயல்படுகிறவர் – மதச்சார்பின்மையின்படி ஆட்சி நடத்துபவரும் அல்ல; அப்படிப்பட்டவர் பதவியில் தொடர்வது, அரசியல் சட்டத்திற்குப் பெருமையும் அல்ல.

(நன்றி: துக்ளக் )

நன்றி:http://idlyvadai.blogspot.com

Edited by devapriya

***

வால்மீகீ இராமயணத்தில் உள்ளது என்ன என்பதை விளக்குகிறார். ஒன்றுக்கும் உதவா பயனற்ற சாடல் எதற்கு. நீங்கள் வால்மீகீ இராமயணம் தெரிந்து வடமொழியும் தெரிந்து இருந்தால் அவர் கூறிய்தை விமர்சியுங்கள்.

வால்மீகி ராமாயணம் கூறுவது என்ன ? – சோ

"ஜூனியர் விகடன்' பத்திரிகை 30.9.2007 தேதியிட்ட இதழில், ராமாயணம் பற்றி அக்னிஹோத்ரம் ஸ்ரீராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் கூறியுள்ள, சில கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

ஸ்ரீ தாத்தாச்சாரியார், வயதில் மட்டுமல்ல, அறிவிலும் மிகப் பெரியவர்; ஸம்ஸ்க்ருத புலமை மிகுந்தவர்; வேதங்களை அறிந்தவர்; ஹிந்து மத சித்தாந்தங்களை நன்கு கற்றவர். இந்தத் தகுதிகள் எதுவுமில்லாத நான், அவருடன் மாறுபடுகிற கருத்துக்களைச் சொல்வது என்பது – நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் தவிர்க்க முடியாததாகவும் இருக்கிறது. அவர் கூறியுள்ளவையும், அவற்றுக்கு என் மறுப்பும் இங்கே இடம்பெற்றுள்ளன.

ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ...போர் முடிந்து ராமர் திரும்புகையில், அவர் கட்டிய அணையைப் பயன்படுத்தவில்லை. அவற்றை அழித்து விட்டதாகவும், வால்மீகி ராமாயணத்தில் வருகிறது...

மறுப்பு : வால்மீகி ராமாயணத்தில் எந்த ஒரு இடத்திலும், ராமர் தான் கட்டிய அணையை தானே அழித்துவிட்டதாகக் கூறப்படவில்லை. மாறாக,

இலங்கையிலிருந்து விபீஷணன் அளித்த புஷ்பக விமானத்தில் திரும்புகையில், வானில் பறந்தவாறே, பூமியில் தாங்கள் வசித்த பஞ்சவடி, பரத்வாஜரை சந்தித்த இடம்... போன்ற பலவற்றை ராமர் ஸீதைக்குச் சுட்டிக்காட்டுகிறார். அப்போது, தான் (வானரர்கள் உதவியுடன்) கட்டிய அணையைச் சுட்டிக்காட்டி, "அதோ! அதுதான் நான் கட்டிய அணை! உனக்காக, ஸமுத்திரத்தின் மீது நான் நிர்மாணித்தது இது' – என்று கூறுகிறார்.

அதாவது, ராமர் அயோத்தி திரும்பிய போதும், அந்த அணை அப்படியேதான்

இருந்தது. அவராலோ, வேறு யாராலோ அழிக்கப்படவில்லை.

அதுமட்டுமல்ல. "இந்த மாபெரும் கடலின் கரையில்தான், அணை கட்டுவதற்கு முன் மஹாதேவன் எனக்கு அருள்புரிந்தான். இது "ஸேதுபந்தம்' என்று பெயர் பெற்று,மூவுலகிலும் வணங்கப்படும். இந்த இடம் புனிதமானதாகவும், பாவங்களை அழிக்க வல்லதாகவும் கருதப்படும்' – என்று ராமர், ஸீதையிடம் சொன்னார்.

ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ..."ராமர் பாலம்' என்று சொல்வதே தவறு. "ராமர் அணை' என்று வேண்டுமானால் சொல்லலாம்... "சேது' என்ற சொல்லுக்கு "கடந்து செல்வது' என்று பொருள். ராமர் கடலைக் கடந்து சென்ற நிகழ்வுக்குப் பெயர்தான் சேது. இது ஒரு வினைச்சொல். பெயர்ச்சொல் அல்ல...

மறுப்பு : ஸம்ஸ்க்ருத அகராதிகளில் "ஸேது' ஒரு பெயர்ச்சொல்லாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது; அவ்வாறே அதற்குப் பொருளும் கூறப்பட்டிருக்கிறது.

"ஸேது' என்பதற்கு "அணை' என்ற பொருள்; மற்றும் "பாலம்' என்கிற பொருள்; மேலும் சில அர்த்தங்கள் – அகராதிகளில் கூறப்பட்டுள்ளன. ஆனால் "கடப்பது' என்ற அர்த்தம் கூறப்படவில்லை.

தவிர, வால்மீகி ராமாயணத்தில் "ஸேது:' (ஸேதுஹு என்று படிக்க வேண்டும்) என்று வருகிறது. வினைச்சொல் "ஸேது:' என்று வராது. ஆகையால் "ஸேது' ஒரு பெயர்ச்சொல்லே. (ஸாம வேதத்தில், அது எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை சரிபார்த்துக் கூற என்னால் முடியவில்லை.)

ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ...மணல் மற்றும் கற்களைப் போட்டு, அணை போன்ற தடுப்புகளை ஏற்படுத்தி, அதில் ஒவ்வொரு தரப்பாக வானர சேனை தாண்டித் தாண்டி இலங்கைக்குச் சென்றதாக, வால்மீகி ராமாயணத்தில் சொல்லியிருப்பதைத்தான்

"சேது பாலம்' என கதைகட்டி எழுப்பிவிட்டார்கள் சிலர்....

மறுப்பு : வால்மீகி ராமாயணத்தில் "தடுப்புகள்' ஏற்படுத்தப்பட்டன என்றோ, அவற்றை வானர சேனை தாண்டித் தாண்டி சென்றன என்றோ கூறப்படவில்லை.

அணை – பாலம் கட்டப்பட்டதையும், கடலை, வானர சேனை கடந்ததையும் வால்மீகி ராமாயணம் இவ்வாறு வர்ணிக்கிறது :

"பல்லாயிரக்கணக்கான வானரர்கள், பாறைகளைப் பெயர்த்து, மரங்களைப் பிடுங்கி, கடற்கரைக்கு கொண்டு வந்தனர். (மரங்களின் பெயர்களும் தரப்பட்டிருக்கின்றன). பெரிய பாறைகள் கொண்டு வரப்பட்டன... பாறைகளை சமுத்திரத்தில் போட்டு, (அவை நேராக இருக்க) கயிறுகள் பயன்படுத்தப்பட்டன... (ஒவ்வொரு தினமும் எவ்வளவு தூரம் பாலம் கட்டப்பட்டது என்பது விளக்கப்படுகிறது)... இவ்வாறு, வானத்தில் தெரிகின்ற நக்ஷத்திர மண்டலம் போல், அந்த சமுத்திரத்தின் நடுவே

காட்சியளித்த, அந்த உன்னதமான பாலத்தை (அணையை), நளன் கட்டினான். வானத்திலிருந்து சித்தர்களும், ரிஷிகளும் இந்த அதிசயத்தைப் பார்வையிட்டனர். பத்து யோஜனை அகலமும், நூறு யோஜனை நீளமும் உடைய அந்தப் பாலத்தைக் கண்டு தேவர்களும், கந்தர்வர்களும் பிரமித்தனர். நன்கு கட்டப்பட்ட, மிகச் சிறப்பான, ஸ்திரமான அந்த அணை, வகிடு எடுக்கப்பட்ட ஒரு பெண்மணியின் கேசம் போல காட்சியளித்தது...!

இவ்வாறு, வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிற அணையை, அல்லது பாலத்தை "மண்ணையும் கல்லையும் போட்டு, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டது' என்று கூறுவது வால்மீகி ராமாயணத்திற்கு புறம்பானது.

வால்மீகி ராமாயணத்தில் மேலும் "...ஸுக்ரீவனுடன், ராமர் வானர ஸேனைக்கு தலைமை வகித்து முன் சென்றார் (ஹனுமார் அவரைத் தாங்கிச் செல்ல வேண்டுமென்று ஸுக்ரீவன் கேட்டுக் கொண்டான்) சில வானரர்கள், பாலத்தின் நடுவில் நடந்தனர்;

சிலர் பாலத்தின் இருபுறங்களில் நடந்தனர்; சிலர் தண்ணீரிலியே கூட நீந்தினர்... கடலின் மறு கரையிலிருந்து, நளன் கட்டிய பாலத்தின் மூலம் இலங்கையை அடைந்த வானர ஸேனைகள் அங்கே முகாமிட ஸுக்ரீவன் ஆணையிட்டான்...'

இவ்வாறு வால்மீகி கூறியுள்ளபோது, ஏதோ மணல் "திட்டுகளை தாண்டித் தாண்டி' மறு கரை அடையப்பட்டது என்று சொல்வதும், வால்மீகி ராமாயணத்திற்கு புறம்பானதே.

ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ...ராமர் தெய்வமா இல்லையா என்ற கேள்வியும் இப்போது சூடாக எழுந்துள்ளது. ராமரே சொல்லிவிட்டார். ராவண வதம் முடிந்த பிறகு தேவர்கள் எல்லாம் ராமரை ஸ்தோத்திரம் பண்ணுகிறார்கள். அப்போது அவர்களிடம் ராமர் சொல்கிறார் : "ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசராத்மஜம்' – அதாவது "நான் தெய்வமெல்லாம் கிடையாது. நான் தசரதன் என்னும் அப்பாவுக்குப் பிறந்த மனிதன்தான். என்னைப் போற்றாதீர்கள்' என ராமர் தன் உரையில் சொல்வதாக, வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது....

மறுப்பு : இந்த மேற்கோள் அரைகுறையாகவும், தவறாகவும் இருக்கிறது. ஸீதை அக்னி பிரவேசம் செய்கிறபோது, தேவர்கள் ராமர் முன்தோன்றி, "தெய்வங்களில் முதன்மை படைத்தவன் நீ, என்பதை நீ உணராமற் போவது எப்படி? படைப்பின் தொடக்கத்திலும், இடையிலும், முடிவிலும், இருக்கிறவனல்லவா நீ? மனிதன் போல நடந்துகொண்டு ஸீதையை அலட்சியம் செய்கிறாயே?' என்று கேட்கின்றனர்.

அதற்கு ராமர் கூறுகிற பதிலில் பாதியை மேற்கோள் காட்டி, அர்த்தம் கூறுகையில், கொஞ்சம் தானாக சேர்த்துக் கூறியிருக்கிறார் பெரியவர். அந்த ஸ்லோகம் இவ்வாறு அமைந்திருக்கிறது:

ஆத்மானம் மானுஷம் மன்யே

ராமம் தசரதாத்மஜம்/

ஸோஹம் யஸ்ச யாதஸ்ச

பகவாம்ஸ்தத் ப்ரவீதுமே//

இதன் பொருள் : தசரதனின் மகன், ராமன் என்கிற மனிதன், என்றே என்னை நான் கருதுகிறேன். மேன்மை வாய்ந்த பகவான் (பிரம்மதேவன்) நான் யார், எங்கிருந்து வந்தவன் என்பதைக் கூறுவாராக'...

அதாவது, "என்னைப் போற்றாதீர்கள்' என்றும் ராமர் கூறவில்லை; "நான் தெய்வமெல்லாம் கிடையாது' என்றும் கூறவில்லை. "நான் யார் என்பதை பிரம்மதேவன் விளக்குவாராக' – என்றுதான் சொல்கிறார். அப்போது பிரம்மதேவன், பலவித போற்றுதல்களைக் கூறுகிறார். "நீயே நாராயணன். நீயே கார்த்திகேயன். அறிவு, பலம், பொறுமை, அனைத்தும் நீயே. எல்லாவற்றின் தொடக்கமும் நீயே. முடிவும் நீயே. நீயே விஷ்ணு. நீ, மஹாவிஷ்ணு; ஸீதை, மஹா லக்ஷ்மி...' பிரம்மதேவன் கூறுகிற துதி நீண்டது; அது புகழ்பெற்ற துதி.

இவ்வாறு பிரம்மதேவன் கூறுவதை ராமர் மறுத்து, "என்னைப் போற்றாதீர்கள்' என்று கூறவில்லை. அப்படிச் சொல்வது வால்மீகி ராமாயணத்திற்கு புறம்பானது. இந்த துதிக்குப் பின்னால்தான், ஸீதையை ஏந்தி அக்னிதேவன் தோன்றினான்.

இதைத் தவிர, விஷ்ணுவே, ராமராக அவதரித்தார் என்பதும், வால்மீகி ராமாயணத்திலேயே மிக விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க ராமர் தெய்வமல்ல என்பது, வால்மீகி ராமாயணத்திற்கு புறம்பான கருத்து.

ராமாவதாரம், மனித அவதாரம். மனிதனாகவே வாழ்ந்து, தனது அவதார காலத்தை முடிப்பதே விஷ்ணுவின் நோக்கம். அதனால்தான், ராமர் "நானே தெய்வம்' என்று கூறிக்கொள்ளவில்லை.

ஒரு அரசியல் கட்சியின் தலைவர், "நான் ஒரு சாதாரண தொண்டன்' என்று சொல்லிக் கொண்டாலும், அவரை தொண்டனாக நடத்தாமல், தலைவனாகவே நடத்துகிற "பண்பு' உள்ள தேசத்தில் – "ராமர் தன்னை தெய்வம் என்று சொல்லிக் கொள்ளவில்லையே?' என்ற கேள்வி, அநாவசியமானது.

ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ...ராமர் அக்கரை போவதற்காகத்தானே கட்டினார்.

வணங்குவதற்காகவா கட்டினார்?....

மறுப்பு : இப்படி எல்லா நம்பிக்கைகளைப் பற்றியும் கேள்வி கேட்கலாம். அது ஒன்றும் பெரிய காரியமல்ல. "சாவதற்காகத்தானே ஏசுவை சிலுவையில் அரைந்தார்கள். சிலுவையைக் கும்பிடுவதற்காகவா?' என்று கேட்கலாம். ஏசு பிரானின் தெய்வீகத் தன்மையை ஏற்காதவர்கள், இப்படிப் பேசலாம்.

"நபிகள் தலையில் முடி வைத்துக் கொண்டது, வழக்கப்படியானதுதானே?

வணங்குவதற்காகவா முடி வைத்துக் கொண்டார்?' என்றும் கேட்கலாம். இறைத்தூதரான நபிகள் நாயகம் பற்றி அலட்சியமாகப் பேச வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்!

ராமர் கடலைக் கடப்பதற்கு சமுத்திரத்தில் பாலம் அமைத்த அரிய சாதனையை, தேவர்களே புகழ்ந்ததாக வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டிருக்கிறது. அந்த உணர்வை வணங்குவதற்கு மேல், பக்தியுடையவர்கள் செய்யக் கூடியது என்ன?

ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ...(ஸ்ரீராமர்) திரும்புகிறபோது, விபீஷணனுடன் புஷ்பக விமானத்தில் திரும்பினாராம். ஒருவேளை ராமர் இலங்கைக்குப் போவதற்கும், ஏதாவது விமானம் இருந்திருந்தால், இந்தப் பிரச்சனையே வந்திருக்காது....

மறுப்பு : ஏன்? ராவணன் ஸீதையை அபகரித்துச் செல்லாமல் இருந்திருந்தாலும், இந்தப் பாலம் பற்றிய பிரச்சனையே வந்திருக்காதே? அதைக் குறிப்பிட்டால், ராவணனின் தீய குணத்தை நியாயப்படுத்துவது போல இருக்கும் என்று அதுவிடப்பட்டு, அதற்குப் பதிலாக "ராமருக்கு இலங்கை செல்ல விமானம் இருந்திருந்தால்...' என்பது மட்டும் குறிப்பிடப்படுகிறதா?

"ராமரே அழிக்க முடிவு பண்ணியதை, நாம் வீண் நம்பிக்கையில் போற்றி...' என்றும் அக்னிஹோத்ரம் தாத்தாச்சார்யர், தனது கருத்துக்களின் முடிவாகக் கூறியிருக்கிறார்.

நாமும் முடிவாகச் சொல்கிறோம் ராமர், ஸேதுவை அணையை பாலத்தை அழிக்க நினைக்கவும் இல்லை, முடிவுசெய்யவும் இல்லை, முனையவும் இல்லை. அதற்கு மாறாக ஸீதையிடம் அந்த பாலத்தைக் காட்டி, அதன்மூலம் ஸமுத்திரத்தைக் கடந்ததையும் கூறி மகிழ்கிறார். அந்த இடத்தில் சமுத்திரக் கரையையும் கூட, புனிதமானது என்றும், பாவங்களை அழிக்க வல்லதாகவும் திகழும் என்றும் ராமர் கூறுகிறார். இது வால்மீகி ராமாயணத்திலேயே கூறப்பட்டிருப்பது.

ஆக, ராமர் பற்றி ஸ்ரீ தாத்தாச்சார்யர் கூறியுள்ளவை, வால்மீகி ராமாயணத்திற்கு புறம்பான கருத்துக்களே ஒழிய, அதை ஒட்டிய கருத்துக்கள் அல்ல.

(நன்றி: துக்ளக் )

நன்றி:http://idlyvadai.blogspot.com

*** நீக்கப்பட்டுள்ளது - இணையவன்

Edited by இணையவன்

எனக்கு ராமாயணமும் தேவையில்லை அதை நான் நம்பவும் இல்லை அதில் புலமை மிக்கவன் என சொல்லி எந்த ஊடகவிபச்சாரியையும் மதிக்க வேன்டியதேவையும் இல்லை அதை மற்றய கள உறவுகள் புரிவார்கள் என நினைகின்றேன்

தமிழக அரசு போற்றும் ராம பக்தி ! கடந்த காலம் கண் எதிரே தோன்றுகிறது...!

(Where the past comes alive...)

என்று தலைப்பிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஒரு போஸ்டரைவெளியிட்டிருக்கிறது. அதில், ராமரும், லக்ஷ்மணரும் நின்று கொண்டிருக்க, வானரர்கள் பெரும் கற்களைச் சுமந்து, சமுத்திரத்தில் பாலம் அமைத்துக் கொண்டிருக்கும் காட்சி ஓவியமாகக் காட்டப்பட்டுள்ளது.

தவிர,

""...ராமபிரானின் தாமரைப் பாதங்களின் ஆசிகளை, இன்னமும் இந்தத் தண்ணீர் தாங்கி நிற்கிறது;

...வானர சேனை இலங்கைக்குச் சென்று சீதையைக் காப்பாற்ற, சமுத்திரத்தைக் கடந்த இடம் இதுதான்''

– என்றும் அந்த போஸ்டரில், தமிழகச் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சொல்லி இருக்கிறது. இந்த போஸ்டர் ஒரு விளம்பரமாக, ஹரித்துவாரில் இருந்து டெல்லிக்குச் செல்லும் ஜனசதாப்தி ரயில் வண்டியில் வைக்கப்பட்டுள்ளது.

இதில், "சேது பாலம்' என்று எதுவும் இல்லையே என்ற குறை யாருக்கும் இருக்க வேண்டாம். தமிழகச் சுற்றுலாத் துறை, ராமேஸ்வரம் பற்றி வெளியிட்டுள்ள கையேட்டில் (கச்ட்ணீடடூஞுt) "சேது பாலத்தைக் கட்ட பயன்படுத்தப்பட்ட சேது பந்தனம் என்கிற மிதக்கும் கல், இங்கே பார்க்க வேண்டிய விஷயம்' என்று கூறப்பட்டுள்ளது.

ஒருபுறம், "ராமர் பாலமும் இல்லை; ராமரும் இல்லை; எல்லாம் கற்பனை' என்று முதல்வர் சொல்கிறார். மறுபுறத்தில் அவருடைய தமிழக அரசு, ராமர் வரலாற்றின் ஒரு பகுதியையும், அவர் மீதான பக்தியையும் விளம்பரப்படுத்தி வருவாய் ஈட்ட முனைகிறது.

ராமரை போற்றினால், வளம் கிட்டும் என்று பக்தர்கள் நம்புகிறார்களோ, இல்லையோ, கலைஞரின் தமிழக அரசு நம்புகிறது.

நன்றி: துக்ளக்

http://idlyvadai.blogspot.com/2007/10/blog-post_5496.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.