Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரதவாதம் என்ற பெயரில் கஸாவில் இனப்படுகொலையே இடம்பெறுகிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
21 OCT, 2023 | 11:00 AM
image

(எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இலங்கையில் இருந்து காஸாவில் போர் நிறுத்தத்தை கோருவது ஆச்சரியமாக இருக்கின்றது பயங்காரதவாதம் என்ற பெயரில் இனப் படுகொலைகளே அங்கு நடக்கின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (20)  நடைபெற்ற இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

நாங்கள் யூதர்களுக்கு அவர்களின் நாட்டை கொடுக்க வேண்டும். அவர்கள் சமாதானமாக வாழ வேண்டும். அதேபோன்று பலஸ்தீனத்திற்கும் அநீதி ஏற்பட்டுள்ளது. அங்கே விட்டுக்கொடுப்பு ஏற்பட்டிருந்தது.

 இந்த விட்டுக்கொடுப்பில் பலஸ்தீன மக்கள் அதிகமாக அதனை செய்ததை மறுக்க முடியாது. யூதர்களின் நாடு அந்த உடன்படிக்கைகளுக்கு இணங்கி நடந்திருக்க வேண்டும். அவர்களுக்கு சொந்தமான நாடு கிடைக்கும் போது, அந்த நாட்டை சரியான முறையில் நடத்தக் கூடிய முறையிலேயே அது அமைய வேண்டும்.

நாங்கள் பிழையை பிழையென்று நேர்மையாக கூற வேண்டும். அதற்கும் மேலாக சென்றுவிட்டது. பயங்கரவாதம் என்ற பெயரில் இனப் படுகொலைகளே நடக்கின்றன. மக்களின் உணவு, மருத்துவம், நீர் வசதிகள் மறுக்கப்படுவதன் நோக்கம் என்ன? 

அந்த மக்கள் தொகையை அழிக்கும் செயற்பாடே நடக்கின்றன. அங்குள்ள மக்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். மக்களை குறிப்பிட்ட இடத்திற்கு புகலிடம் தேடி செல்லுமாறு கூறும் போது அவர்கள் அவ்வாறு செல்லும் போது அவர்கள் நோக்கி தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

எவ்வாறாயினும் பிரச்சினைகளுக்கான அடிப்படைக் காரணங்கள் உள்ளன. அவற்றை கண்டறிய வேண்டும். எதிர்கால பலஸ்தீன நாட்டை அழிப்பதாகவே அமையும். 15 வருடங்களுக்கு முன்னர் இப்போது காஸாவில் நடப்பதை போன்று இலங்கையில் நடந்தது. 

வடக்கு கிழக்கில் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப் பட்டதுடன் அவற்றின் மீது குண்டுகள் வீசப்பட்டன. வைத்தியசாலைகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. அதேபோன்று 15 வருடங்களின் பின்னர் இப்போது நடக்கும் போது அதன் தவறுகளை புரிகின்றனர். இப்போது போர் நிறுத்தம் தொடர்பில் கதைக்கின்றனர். இது தொடர்பில் நாம் ஆச்சரியமடைகின்றோம்.

தமிழ் மக்கள் எந்த தரப்பினரை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாங்கள் இஸ்ரேல் என்ற அரசுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்கள் சமாதானமாக வாழ வேண்டும். 

அதேபோன்றே இலங்கையிலும் சிங்கள மக்களும் சமாதானமாக இருக்க வேண்டும்.  இதனால் இந்த பாராளுமன்றத்தில் இருப்பவர்கள் மத்திய கிழக்கில் உள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து தமக்கென பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/167415

  • Replies 61
  • Views 3.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் இலங்கையின் இந படுகொலைகளுக்கு நீங்களும் உங்கள் பரம்பரையும் ஒரு காரணம் என்பதை மறந்து விடாதீர்கள். இப்போது பிராயச்சித்தம் தேடுவதில் பயனில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் சிறீதரன், சுமந்திரன், சம்பந்தர், சாணக்கியன், இதர தமிழ் அரசியல் வாதிகள் நிலைப்பாட்டை யாராவது கூறுங்கள் பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

large.836D7252-8608-4A56-975E-8CA33CD76390.jpeg.450c91bf317c6496ab9a5217972b114c.jpeg

ஆமா…..

முள்ளிவாய்க்கால் பற்றி ஹக்கீம், அதாவுல்லா, ஹிஸ்புல்லா, அலவி மெளலானா, ரிசாத், பெளசி நிலைப்பாடு என்ன?

2 hours ago, நியாயம் said:

இந்த விடயத்தில் சிறீதரன், சுமந்திரன், சம்பந்தர், சாணக்கியன், இதர தமிழ் அரசியல் வாதிகள் நிலைப்பாட்டை யாராவது கூறுங்கள் பார்க்கலாம். 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

தாய் நாட்டு பிரச்சனைகனை தீர்க்க முடியாதவர்கள் காசாவரை போய் விட்டினம்.ரொம்ப முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, யாயினி said:

தாய் நாட்டு பிரச்சனைகனை தீர்க்க முடியாதவர்கள் காசாவரை போய் விட்டினம்.ரொம்ப முக்கியம்.

சரியாக சொன்னீர்கள். அரசியலில் இதெல்லாம் சகஜம் கண்டியளோ. 

8 hours ago, goshan_che said:

large.836D7252-8608-4A56-975E-8CA33CD76390.jpeg.450c91bf317c6496ab9a5217972b114c.jpeg

ஆமா…..

முள்ளிவாய்க்கால் பற்றி ஹக்கீம், அதாவுல்லா, ஹிஸ்புல்லா, அலவி மெளலானா, ரிசாத், பெளசி நிலைப்பாடு என்ன?

கோசேன், இவர்கள் இப்படி பேசா விடடாள் அந்த கடடார், சவுதி, ஈரான் காரன் நாட்டுக்குள் இவனுக்களை விட மாடடான். அங்கிருந்து பணமும் இவர்களுக்கு கிடைக்காது. இந்த பக்கம் காத்தான் குடிக்கும் போக முடியாது. அங்குள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் மண்டையில் போட்டுவிடுவார்கள். மத்தபடி இதெல்லாம் கூலிக்கு மாரடிக்கிற கூடடம்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

large.836D7252-8608-4A56-975E-8CA33CD76390.jpeg.450c91bf317c6496ab9a5217972b114c.jpeg

ஆமா…..

முள்ளிவாய்க்கால் பற்றி ஹக்கீம், அதாவுல்லா, ஹிஸ்புல்லா, அலவி மெளலானா, ரிசாத், பெளசி நிலைப்பாடு என்ன?

பாலஸ்தீனம்-இஸ்ரேல் பிணக்கை இலங்கை முஸ்லீம்களுடன் கோர்த்து தமது நிலைப்பாட்டை எடுக்கும் அளவுக்கு உங்களைப்போல் சிறீதரன், சுமந்திரன், இதர தமிழ் அரசியல்வாதிகள் அதிமேதாவிகள் இல்லை என நினைக்கின்றேன். 

1 hour ago, நியாயம் said:

பாலஸ்தீனம்-இஸ்ரேல் பிணக்கை இலங்கை முஸ்லீம்களுடன் கோர்த்து தமது நிலைப்பாட்டை எடுக்கும் அளவுக்கு உங்களைப்போல் சிறீதரன், சுமந்திரன், இதர தமிழ் அரசியல்வாதிகள் அதிமேதாவிகள் இல்லை என நினைக்கின்றேன். 

உண்மை.

முஸ்லிம் ஊர்காவல்படை எனும் அரச இராணுவ பிரிவு செய்த (சிங்கள அரசின் இராணுவப் பிரிவு)  அட்டூழியங்களை முஸ்லிம் பொது மக்கள் தான் செய்தனர் என தம் வசதிக்கு ஏற்ப சிந்திக்கின்றனர்.

இன்று இலங்கையில் தமிழர்களுக்கு முஸ்லிம்களுடனான பிரச்சினை அரசியல் ரீதியிலான பிரச்சினை. அதை பாலஸ்தீனர்களின் மீதான படுகொலையை ஏற்பதனூடாக தம் மனசை சந்தைப்படுத்த முடியும் என எவராவது நினைத்தால் அதன் காரணம் பச்சை இனவாதமே.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நியாயம் said:

இந்த விடயத்தில் சிறீதரன், சுமந்திரன், சம்பந்தர், சாணக்கியன், இதர தமிழ் அரசியல் வாதிகள் நிலைப்பாட்டை யாராவது கூறுங்கள் பார்க்கலாம். 

12 hours ago, goshan_che said:

large.836D7252-8608-4A56-975E-8CA33CD76390.jpeg.450c91bf317c6496ab9a5217972b114c.jpeg

ஆமா…..

முள்ளிவாய்க்கால் பற்றி ஹக்கீம், அதாவுல்லா, ஹிஸ்புல்லா, அலவி மெளலானா, ரிசாத், பெளசி நிலைப்பாடு என்ன?

@நியாயம்

கோஷானின் இந்த கேள்விக்கான நேர்மையான பதிலை வழங்குவதே உங்கள் ஆதங்கத்திற்கான பதிலாக இருக்கும். பாலஸ்தீனிய பிரச்சனை அந்த மக்களின் பிரச்சனை. அதையும் இலங்கையில் தமிழ், முஸ்லீம் மக்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை.  

தமிழ் - முஸ்லீம் மக்களிடையே இடையே தூவப்பட்ட இன்றும் இரு பகுதியினராலும் கக்கப்படுகின்ற வெறுப்பை பிரச்சாரங்களை நிறுத்தி ஒரு நல்லுறவை ஏற்படுத்துவதே  ஒரே மொழியை பேசும் இரு பகுதி மக்களுக்கும் நல்லது.  அதை விடுத்து பாலஸ்தீன பிரச்சனையில் ஒருமித்த கருத்து ஏற்படுத்துவதல்ல. பக்கத்தில் இருக்கும் அரபு நாடுகளே தத்தமது நாடுகளின்  அரசியல் பொருளாதார நலன்களை பாதுகாத்துக் கொண்டு இரண்டாம் பட்சமாகவே பலஸ்தீன பிரச்சனையை அணுகுகின்றன.   இந்த நிலையில் நாம் அந்த பிரச்சனையில் சிக்கி எமக்குள் மேலும் வெறுப்புணர்வை வளர்ககாமல் இருக்க வேண்டும்.  விரும்பியோ விரும்பாமலோ ஒரே மண்ணில் சேர்ந்து நல்லுறவுடன் வாழவேண்டிய நிலையில் உள்ள மக்கள் நாம் என்பதை மனதில் வையுங்கள். 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி, குருசோ சரியாகச் சொன்னீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நியாயம் said:

பாலஸ்தீனம்-இஸ்ரேல் பிணக்கை இலங்கை முஸ்லீம்களுடன் கோர்த்து தமது நிலைப்பாட்டை எடுக்கும் அளவுக்கு உங்களைப்போல் சிறீதரன், சுமந்திரன், இதர தமிழ் அரசியல்வாதிகள் அதிமேதாவிகள் இல்லை என நினைக்கின்றேன். 

6 hours ago, நிழலி said:

உண்மை.

முஸ்லிம் ஊர்காவல்படை எனும் அரச இராணுவ பிரிவு செய்த (சிங்கள அரசின் இராணுவப் பிரிவு)  அட்டூழியங்களை முஸ்லிம் பொது மக்கள் தான் செய்தனர் என தம் வசதிக்கு ஏற்ப சிந்திக்கின்றனர்.

இன்று இலங்கையில் தமிழர்களுக்கு முஸ்லிம்களுடனான பிரச்சினை அரசியல் ரீதியிலான பிரச்சினை. அதை பாலஸ்தீனர்களின் மீதான படுகொலையை ஏற்பதனூடாக தம் மனசை சந்தைப்படுத்த முடியும் என எவராவது நினைத்தால் அதன் காரணம் பச்சை இனவாதமே.

நீங்கள் இருவரும் ஏன் இப்படி பைத்தியக்காரத்தனமாக நான் சொல்லியதை விளங்கி கொள்கிறீர்களோ தெரியவில்லை.

நான் இந்த பதிவிலோ, வேறு எந்த பதிவிலுமோ பலஸ்தீன் இஸ்ரேல் பிரச்சனைக்கும் இலங்கை முஸ்லீம்களுக்கும் தமிழருக்கும் இடையான உறவுக்கும் எந்த தொடர்பும் இருப்பதாக கூறவில்லை.

அதே போல் மேலே நிழலி கூறியிருப்பது போல் முஸ்லிம் ஊர்காவல் படை செய்ததை நான் ஒரு நாளும் முஸ்லிம் மக்கள் தலையில் கட்டுயவனும் இல்லை.

மாறாக கிழக்கில் ஊர்காவல் படையும், ஜிகாத்தும் தமிழர் மீது செய்த அட்டூழியத்துக்கு எதிர்வினையாக யாழில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியதும், காத்தான்குடி படுகொலையை செய்ததும் மன்னிக்க முடியாத தவறுகள் என்பதை யாழில் பல தடவைகள் எழுதியுள்ளேன் (இப்போ ஹமாஸ் செய்ததுக்கு ஒட்டுமொத்த காஸாவாசிகளை இஸ்ரேல் அடிப்பதும், அப்போ கிழக்கில் ஜிகாத் செய்தமைக்கு வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லீம்களை புலிகள் தண்டித்தமைக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை - இரண்டுமே எவரோ செய்தமைக்கு ஒட்டு மொத்த இனத்தை பழிவாங்கும் summary punishmentதான்).

ஆகவே இலங்கை முஸ்லிம் தமிழ் பிணக்கு பற்றி நான் எப்போதும் அறம் சார்ந்தே எழுதி வருகிறேன். இதில் யாரும் எனக்கு பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

நிற்க,

மனித பேரவலம் என்பதும் இனப்படுகொலை என்பதும் எங்கு நடந்தாலும் அது ஒன்றேதான்.

ஆனால் நாம் இனப்படுகொலைக்கு உள்ளான இனம். அதை ஏனைய இனங்கள் ஏற்க வேண்டும். கண்டிக்க வேண்டும். அதற்கான நீதியை நாம் பெற துணை நிற்க வேண்டும். குறிப்பாக எம்மோடு நீரையும், நிலத்தையும், மொழியையும், சில கலாச்சார கூறுகளையும் பகிரும், இனியும் பகிர போகும் இனம் இதை ஏற்க வேண்டும். என நாம் எதிர்பார்ப்பது மிக நியாயமானது.

ஆனால் நடந்தது என்ன? ஒவ்வொரு ஜெனிவா கூட்டத்தொடரிலும் இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் எமக்கான நீதியை மறுக்க, மறுதலிக்கவே துணை போனார்கள்.

அடுத்து வந்த தேர்தல்களில் இலங்கை சோனகர் - சமூகமாக இவர்களையே தொடர்ந்தும் தமது பிரதிநிதிகளாக தெரிந்தார்கள்.

உங்களால் இலங்கையில் தமிழருக்கு நடந்தது இனவழிப்பு, போர்குற்றம் எனச்  சொல்லும் ஒரு முஸ்லிம் பாஉ வை காட்ட முடியுமா? இல்லை.

இதன் அர்த்தம் என்ன, எமக்கு அநீதி எதுவும் நடக்கவில்லை அல்லது அப்படி நடந்தே இருந்தாலும் அதை பற்றி நாம் அலட்டி கொள்ள தேவையிலை, எமக்கு உதவும் என்றால் அதை மறுதலிக்கவும் செய்யலாம் என்பதே முஸ்லிம் அரசியல்வாதிகளின் மட்டும் அல்ல, இலங்கை முஸ்லிம் மக்களில் பெரும்பாலோனோரின் நிலையாக இருக்கிறது. இதை அவர்கள் அற வழியாக அன்றி, தம் இன நலன் சார்ந்தே முடிவு செய்கிறார்கள் என்பது திண்ணம்.

இப்படி இருக்கும் போது….

நாம் பலஸ்தீனத்திலோ…திபெத்திலோ…உகிரிலோ….உக்ரேனிலோ…என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்றோ…அல்லது அது சுயநலமானதாக அன்றி…அறம் சார்ந்து இருக்க வேண்டும் என்றோ எதிர்பார்க்கும் அடிப்படை தகுதி கூட எவருக்கும் இல்லை.

எம்மை பொறுத்தவரை நாம் இலங்கையை மனித உரிமை விடயத்தில் நெருக்கி அதன் மூலம் ஒரு நியாயமான தீர்வை பெற முயல்கிறோம். இதில் சர்வதேச மட்டத்தில் எமக்கு சார்பாக கொஞ்சமேனும் இருப்பவை மேற்கு நாடுகள். அவை முற்றாக இஸ்ரேலின் பின்னால் நிற்கிறன.

அத்தோடு உண்மையில் பஸ்தீன விடயத்தில் எமது குரலுக்கு ஒரு மதிப்பும் சர்வதேச மட்டத்தில் இல்லை.

இந்த நிலையில், அறம் சார்ந்த நிலை எடுக்கிறோம் என நாம் ஏன் மேற்கை பகைக்க வேண்டும்? அதுவும் எமது அழிவின் பின் மகிந்தவை ஆதரித்து அவருக்கான “கவரை” வழங்கிய பலஸ்தீனத்துக்காக?

ஆகவே இதில் நம் தலைவர்கள் எடுக்க கூடிய ஆக சிறந்த நிலைப்பாடு வாயை மூடி கொண்டு இருப்பதே.

கஜன் (அவர் பரம்பரையே) மற்றும் சுவாஜி லிங்கம் தமிழர்களை ஓட்டை படகில் துடுப்பும் இல்லாமல் ஏற்றி விடுவதில் வல்லவர்கள். இங்கேயும் அதையே செய்கிறார்.

ஏனைய அரசியல்வாதிகள் ஏதோ தம்மை சர்வதேச பிரமுகர்களாக கருதி கோமாளித்தனம் பண்ணாமல் வாயை மூடி கொண்டு இருந்தாலே போதும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

@நியாயம்

கோஷானின் இந்த கேள்விக்கான நேர்மையான பதிலை வழங்குவதே உங்கள் ஆதங்கத்திற்கான பதிலாக இருக்கும். பாலஸ்தீனிய பிரச்சனை அந்த மக்களின் பிரச்சனை. அதையும் இலங்கையில் தமிழ், முஸ்லீம் மக்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை.  

தமிழ் - முஸ்லீம் மக்களிடையே இடையே தூவப்பட்ட இன்றும் இரு பகுதியினராலும் கக்கப்படுகின்ற வெறுப்பை பிரச்சாரங்களை நிறுத்தி ஒரு நல்லுறவை ஏற்படுத்துவதே  ஒரே மொழியை பேசும் இரு பகுதி மக்களுக்கும் நல்லது.  அதை விடுத்து பாலஸ்தீன பிரச்சனையில் ஒருமித்த கருத்து ஏற்படுத்துவதல்ல. பக்கத்தில் இருக்கும் அரபு நாடுகளே தத்தமது நாடுகளின்  அரசியல் பொருளாதார நலன்களை பாதுகாத்துக் கொண்டு இரண்டாம் பட்சமாகவே பலஸ்தீன பிரச்சனையை அணுகுகின்றன.   இந்த நிலையில் நாம் அந்த பிரச்சனையில் சிக்கி எமக்குள் மேலும் வெறுப்புணர்வை வளர்ககாமல் இருக்க வேண்டும்.  விரும்பியோ விரும்பாமலோ ஒரே மண்ணில் சேர்ந்து நல்லுறவுடன் வாழவேண்டிய நிலையில் உள்ள மக்கள் நாம் என்பதை மனதில் வையுங்கள். 

உண்மையில் நியாயம் பாவம். யார் அறம் சார்ந்து எழுதுபவர்கள், யார் வெறுப்பின்பால் பட்டு எழுதுபவர்கள் என்ற தெளிகூட இல்லாமல் தடுமாறுகிறார். அல்லது மத/இன அபிமானம் அவர் கண்ணை மறைக்கிறது.

மேலே இலங்கை முஸ்லிம்களுக்கு நிகழ்ந்த summary punishment பற்றி எழுதியுள்ளேன். புலிகள் தாம் செய்தது தவறு என ஒத்து கொண்ட பின்பும் கூட, அவர்களை யாழை விட்டு வெளியேற்றிய ஒவ்வொரு வருட நினைவுநாளிலும் யாழில் வந்து “அவர்கள் கோட்டை ஆமிக்கு துப்பு கொடுத்தார்கள், சாவகச்சேரியில் வாள் மீடகப்பட்டது, வேலணையில் வாக்கி மீட்கப்பட்டது” என வெளியேற்றியமைக்கு சப்பை காரணம் சொல்லும் ஆட்கள்தான் இப்போ காஸா, காஸா என வாயிலும் வைத்திலும் அடித்து அழுகிறார்கள்🤣.

பிகு

@நிழலி இது உங்களுக்கு. 1.8 பில்லியன் கணக்குக்கு பின், பயந்துட்டீங்களா குமாரு? நியாம்தான்.

# நாமார்க்கும்🤣

  • கருத்துக்கள உறவுகள்+
7 hours ago, நிழலி said:

உண்மை.

முஸ்லிம் ஊர்காவல்படை எனும் அரச இராணுவ பிரிவு செய்த (சிங்கள அரசின் இராணுவப் பிரிவு)  அட்டூழியங்களை முஸ்லிம் பொது மக்கள் தான் செய்தனர் என தம் வசதிக்கு ஏற்ப சிந்திக்கின்றனர்.

மன்னிக்க வேண்டும். மெய்யுண்மை (factually) சாராக பிழையான கருத்து. 

ஊர்காவல் படை சரி... அப்ப சில முஸ்லிம் ஊர்களின் பொதுமக்களே ஒன்று சேர்ந்து தமிழரை அடிச்சு கொளுத்தி விரட்டினரே... அதெல்லாம் கணக்கில்லையா ஐயனே.... 

வரலாற்றை அறியுங்கள். தாம் அறியாததை விட அதிகமானது வரலாறு.

இன்றுவரை எமக்கெதிராகவெனில் ஊரே சேர்ந்த போராட்டத்தில் ஈடுபடும். 2014இல் ஐநா. சிங்கள அரசிற்கு எதிராக கொணர்ந்த தீர்மானத்திற்கு எதிராக புத்தளத்தான்கள் 14000 பேர் வரை திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்... அதில் அவர்கள் கூவிய முழக்கங்களை தேடி வாசித்துப் பாருங்கள்.

வரலாற்றை இப்படியே எழுதிச் செல்லலாம். அது நீளமானது, தொடர்கிறது.

Edited by நன்னிச் சோழன்
கூடுதல் பற்றியம் சேர்ப்பு

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

உண்மை.

முஸ்லிம் ஊர்காவல்படை எனும் அரச இராணுவ பிரிவு செய்த (சிங்கள அரசின் இராணுவப் பிரிவு)  அட்டூழியங்களை முஸ்லிம் பொது மக்கள் தான் செய்தனர் என தம் வசதிக்கு ஏற்ப சிந்திக்கின்றனர்.

இன்று இலங்கையில் தமிழர்களுக்கு முஸ்லிம்களுடனான பிரச்சினை அரசியல் ரீதியிலான பிரச்சினை. அதை பாலஸ்தீனர்களின் மீதான படுகொலையை ஏற்பதனூடாக தம் மனசை சந்தைப்படுத்த முடியும் என எவராவது நினைத்தால் அதன் காரணம் பச்சை இனவாதமே.

முஸ்லீம் ஊர்காவல் படை என்பது இராணுவ படை இல்லை. முஸ்லீம் கிராம பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட்து. இங்குள்ளவர்களுக்குத்தான் அது யாரென்று தெரியும். எனவே அது முஸ்லீம் மக்கள் படைதான். இங்குள்ள மக்களாகிய நாம் முஸ்லீம் மக்கள் தமிழர்களை கொலை செய்தார்கள் என்பதை நூற்றுக்கு நூறு வீதம் சொல்லுவோம்.

அதட்காக பாலஸ்தீனத்தில் நடப்பதுதான் ஒப்பிட்டு யாரும் சந்தோஷப்படுவார்கள் என்று நினைக்கவில்லை. ஹமாஸ், ஜிஹாத் , ISiS போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் அழிக்கப்படவேண்டும் என்பதில் மாற்று கருது இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Cruso said:

உண்மை

அத்துடன் அவ்வாறான ஒரு படையை கோரியவர்களும் இசுலாமிய மக்களே. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:
7 hours ago, நிழலி said:

முஸ்லிம் ஊர்காவல்படை எனும் அரச இராணுவ பிரிவு செய்த (சிங்கள அரசின் இராணுவப் பிரிவு)  அட்டூழியங்களை முஸ்லிம் பொது மக்கள் தான் செய்தனர் என தம் வசதிக்கு ஏற்ப சிந்திக்கின்றனர்.

முஸ்லீம் ஊர்காவல்படைவேறு முஸ்லீம்கள் வேறு அல்ல, அவர்களை பொறுத்தவரை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் என்ன கொள்கையை அவர்கள் கொண்டிருந்தாலும், என்ன செயலை செய்தாலும் தங்களுக்குள்ளேயே ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும், அவன் இஸ்லாமியனாக இருந்தால் போதும் அவர்கள் செய்வதை கண்னைமூடிக்கொண்டு நியாயப்படுத்துவார்கள், சக இனத்துக்கு அவர்கள் செய்தது தவறு என்று ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.  தங்களில் இருந்து அவர்களை வேறுபடுத்தி ஒருபோதும் பார்க்கமாட்டார்கள்.

அப்புறம் எப்படி ஊர்காவல்படைவேறு முஸ்லீம்கள் வேறு?

யாழில் இருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றியது தவறென்று சொல்லகூடிய புலிகள் பகுதியில் வாழ்ந்த புலிகள் ஆதரவு  தமிழர்களில் ஒரு பகுதியினரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால் தமிழர்களுக்கு முஸ்லீம் ஆயுதகுழு  இழைத்தது தவறு என்று சொல்லும் ஒரேயொரு முஸ்லீமை கூட நீங்கள் காண்பிக்கவே முடியாது.

தனது மதக்காரன் எது செய்தாலும் பொருத்தமில்லாத  முன்னுக்கு பின் முரண்பாடான, பதில் எதுவும் சொல்லமுடியாத விஷயங்கள் என்றாலும் அதனை சரியென்று சொல்வார்கள். அதற்கு ஆயிரம் உதாரணங்கள் உண்டு

இலங்கை இந்தியாவில் தமது வீட்டு பெண்களை உயர்கல்வி எல்லாம் கற்றுக்கொள்ள அனுப்பும் இஸ்லாமியர்கள்தான் இஸ்லாமியர்கள்தான் ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்கூடம் பக்கமே போககூடாது என்று தலீபான்கள் போடப்படும் கண்மூடிதனமான கட்டுப்பாட்டை ஆதரிப்பார்கள்.

இந்தியாவில் சினிமா நடிகை தொடக்கம் சூப்பர் சிங்கர்  மேற்கத்தைய இசையை இசைக்கும் இசையமைப்பாளர்கள்வரை முஸ்லீம்கள் இருப்பார்கள், ஆனால் இதெல்லாம் பண்ணிக்கொண்டே ஆப்கான் தொடக்கம் சவுதிவரை அதற்கு விதிக்கப்படும் தடைகளை சூப்பர் இன்ஷா அல்லாஹ் என்று சொல்வார்கள்.

ஐஎஸ் இயக்கம் கண்மூடிதனமான படுகொலைகளை செய்தால் இஸ்லாத்துக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை என்பார்கள், அது அமெரிக்க யூத சதி என்று சொல்வார்கள், எங்கே கண்மூடிதனமாக ஐஎஸ் இயக்கத்தை திட்டி பாருங்கள் , வரிசையில் வந்து உங்களை சகட்டுமேனிக்கு வசைபாடுவார்கள்.

7 hours ago, நிழலி said:

இன்று இலங்கையில் தமிழர்களுக்கு முஸ்லிம்களுடனான பிரச்சினை அரசியல் ரீதியிலான பிரச்சினை. அதை பாலஸ்தீனர்களின் மீதான படுகொலையை ஏற்பதனூடாக தம் மனசை சந்தைப்படுத்த முடியும் என எவராவது நினைத்தால் அதன் காரணம் பச்சை இனவாதமே.

தமிழர்களுக்கு முஸ்லீம்களுடன் அரசியல் பிரச்சனை இருக்கலாம், சிங்களவர்களுக்கு தமிழர்களுடன் அரசியல் பிரச்சனை இருக்கலாம், சிங்களவர்களுக்கு முஸ்லீம்களுடன் அரசியல் பிரச்சனை இருக்கலாம்.

ஆனால் முஸ்லீம்களுக்கு அனைவருடனும் இருப்பது ஒரேயொரு பிரச்சனை , அது அரசியல் பிரச்சனை அல்ல, மத பிரச்சனை.

அரசியல் பிரச்சனைகள்கூட ஒருகாலம் தீர்த்து வைக்கப்படலாம், ஆனால் மதவாதம் ஒருபோதும் தீர்க்கப்பட முடியாத ஒன்று. 

இனவாதம்தான் இஸ்லாமியர்களுக்கும் சக இனங்களுக்கும் இடையில் நடக்கிறது என்று இன்னும் நாங்கள் நம்பினால் இத்தனை தசாப்த கால  பிணக்கில் நாம் எதுவுமே கற்றுக்கொள்ளவில்லை என்பதே அர்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நிலத்தில், அடுத்தடுத்த ஊர்களில் கூடிவாழ்ந்த  தமிழ் முஸ்லீம் மக்களுக்கு இடையில்  திட்டமிட்டு பிரிவினைவாத கருத்துக்கள் தூவப்பட்டு ஒருவரை ஒருவர் சந்தேக கண்ணுடன் பார்ககும் நிலை  அன்றைய ஶ்ரீலங்கா அரசினால் ஏற்படுத்தப்பட்டது.  பொதுவாக அரச உளவாளிகளுக்கு தெரியும் இவ்வாறான பிரித்தாளும் விதைகளை சற்று தூவினால் போதும் ஏனையவற்றை இரு பகுதியிலும் உள்ள கடும் தேசியவாதிகள் மேற்கொண்டு அவர்களின் வேலையை சுலபமாக்குவர் என்பது. அவர்கள் எதிர்பார்த்தது போல்  அதுவே நடந்தது.

சந்தேக பார்வையோடு தொடங்கிய இந்த பிரச்சனை ஒருவருக்கொருவர் எதிரிகள் என்ற நிலையை அடைய,  தமிழ்,  முஸ்லீம் மக்களிடையே இருந்த கடும்போக்கு வாதிகள் தமது பங்களிப்பை செவ்வனே வழங்கினர். 

ஆனால் அன்று நடந்த கசப்பான நிகழ்வுகள் அல்ல  இப்போது முக்கியம்.   நாங்கள் அவர்களை குற்றம் சொன்னால் அவர்களுக்கு எங்களை குற்றம் சொல்லவும் ஆயிரம் காரணிகளை நாமே ஏற்படுத்தியுள்ளோம் என்பதே ஜதார்த்தம். ஆளையாள் குற்றம் சாட்டிக்கொண்டே காலத்தைக் கடத்தி  மக்களை மேலும் வெறுப்பு அரசியலுக்குள் தள்ளி  நாசமாக்கலாம். அது அயோக்கியத்தனமானது. 

ஆகவே  தற்போதைய நிலையில்,  ஒரே நிலத்தில், அடுத்தடுத்த ஊர்களில்  ஒருவரின் அன்றாடத் தேவைகளைக்கூட மற்றையவர்கள்  பூர்ததி செய்ய வேண்டி உள்ள பொருளாதார நிலையில் வாழும் இரு பகுதிமக்களும் நல்லுறவைக் கட்டி எழுப்பவேண்டியது  காலத்தின் தேவை. அதை விடுத்து முஸ்லீம் மக்களுக்கு எதிராகவோ தமிழ் மக்களுக்கு எதிராகவோ விஷமத்தனமான செய்திகளை  பரப்புபவர்கள் ஒன்றில்  மக்கள் நலனில் அக்கறை அற்ற சுயநலமிகளாக இருக்கவேண்டும்  அல்லது அறிவு பூர்வமாக சிந்திக்காது உணர்ச்சித் தேசியவாதத்தில் மயங்கி கிடக்கும் அறிவிலிகளாக இருக்க வேண்டும் 

ஆகவே ஒட்டு மொத்த  முஸ்லீம் மக்களுக்கு எதிரான விஷமத்தனமான வெறுப்பு பேச்சுக்களை   பேசுவது பொறுப்பற்ற செயல்.  அதே நிலையை முஸ்லீம் மக்களில் உள்ள அறிவு பூர்வமாக சித்திக்கும் தரப்புகளும் எடுக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, island said:

தமிழர்கள் அல்ல இதை தூக்கி பிடிப்பவர்கள். அவர்கள் தமிழர்களுக்கு செய்த அநியாயங்களை, கொலைகளை வருடா வருடம் கொண்டாடுபவர்களும் தமிழர்கள் அல்ல.

சில இயக்கங்கள் அவர்களுக்கு அநியாயம் செய்தது உண்மைதான். ஆனால் அதட்காக வருடா வருடம் இப்போது கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. இப்போதும் வருடா வருடம் அவர்கள்தான் புதுப்பித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இதில் நீங்கள் எழுதி விடடாள் சரியாக வரப்போவதில்லை. முடியுமென்றால் இஸ்லாமியர்களின் இனவாத இணையதளங்களில் போய் இப்படி எழுதி பாருங்கள். அப்போது உங்களுக்கு புரியும். இங்குள்ளவர்களுக்குத்தான் கள நிலவரம் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, நன்னிச் சோழன் said:

அப்ப சில முஸ்லிம் ஊர்களின் பொதுமக்களே ஒன்று சேர்ந்து தமிழரை அடிச்சு கொளுத்தி விரட்டினரே... அதெல்லாம் கணக்கில்லையா ஐயனே.... 

இதுவும் மட்டு-அம்பாறையில் நடந்த இன வன்முறையே. இதையிட்டும்  ஒட்டு மொத்த இலங்க சோனக இனத்தை வஞ்சம் தீர்க்க தேவையில்லை என்பதே என் நிலைப்பாடு.

ஆனால்….இதுதான் facts என்பதை யாரும் மறுக்க முடியாது.

தமிழர்கள் தம் மத்தியில் இருந்து வந்த ஒரு அமைப்பான புலிகள் முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்த போது அதை ஆதரித்தார்கள் அல்லது வாய்மூடி இருந்தார்கள்.  அது பாரிய பிழைதான்.

ஆனால் 90ம் ஆண்டுக்கு முன் நடந்த சிறிய கிராம மோதல்களை தவிர, தமிழ் மக்கள் தன்னார்வமாக முஸ்லிம் குடிமனைகளுக்குள் புகுந்து அநியாயம் செய்யவில்லை.

ஆனால் ஹிகாத், ஊர்காவல் படை மட்டும் அல்ல, கிழக்கில் சில இடங்களில் இவர்களோடு சேர்ந்து முஸ்லிம் மக்களின் ஒரு பகுதியினரும் அநியாயங்களில் ஈடுபட்டது மட்டும் அல்லாமல் நிலத்தையும் சொத்துக்களையும் சூறையாடினர்.

இந்த நியாயத்தை கதைக்க - சிலரை மதவெறி தடுக்கலாம். சிலரை பயம் தடுக்கலாம். ஆனால் உண்மை இதுதான்.

52 minutes ago, island said:

ஒரே நிலத்தில், அடுத்தடுத்த ஊர்களில் கூடிவாழ்ந்த  தமிழ் முஸ்லீம் மக்களுக்கு இடையில்  திட்டமிட்டு பிரிவினைவாத கருத்துக்கள் தூவப்பட்டு ஒருவரை ஒருவர் சந்தேக கண்ணுடன் பார்ககும் நிலை  அன்றைய ஶ்ரீலங்கா அரசினால் ஏற்படுத்தப்பட்டது.  பொதுவாக அரச உளவாளிகளுக்கு தெரியும் இவ்வாறான பிரித்தாளும் விதைகளை சற்று தூவினால் போதும் ஏனையவற்றை இரு பகுதியிலும் உள்ள கடும் தேசியவாதிகள் மேற்கொண்டு அவர்களின் வேலையை சுலபமாக்குவர் என்பது. அவர்கள் எதிர்பார்த்தது போல்  அதுவே நடந்தது.

சந்தேக பார்வையோடு தொடங்கிய இந்த பிரச்சனை ஒருவருக்கொருவர் எதிரிகள் என்ற நிலையை அடைய,  தமிழ்,  முஸ்லீம் மக்களிடையே இருந்த கடும்போக்கு வாதிகள் தமது பங்களிப்பை செவ்வனே வழங்கினர். 

ஆனால் அன்று நடந்த கசப்பான நிகழ்வுகள் அல்ல  இப்போது முக்கியம்.   நாங்கள் அவர்களை குற்றம் சொன்னால் அவர்களுக்கு எங்களை குற்றம் சொல்லவும் ஆயிரம் காரணிகளை நாமே ஏற்படுத்தியுள்ளோம் என்பதே ஜதார்த்தம். ஆளையாள் குற்றம் சாட்டிக்கொண்டே காலத்தைக் கடத்தி  மக்களை மேலும் வெறுப்பு அரசியலுக்குள் தள்ளி  நாசமாக்கலாம். அது அயோக்கியத்தனமானது. 

ஆகவே  தற்போதைய நிலையில்,  ஒரே நிலத்தில், அடுத்தடுத்த ஊர்களில்  ஒருவரின் அன்றாடத் தேவைகளைக்கூட மற்றையவர்கள்  பூர்ததி செய்ய வேண்டி உள்ள பொருளாதார நிலையில் வாழும் இரு பகுதிமக்களும் நல்லுறவைக் கட்டி எழுப்பவேண்டியது  காலத்தின் தேவை. அதை விடுத்து முஸ்லீம் மக்களுக்கு எதிராகவோ தமிழ் மக்களுக்கு எதிராகவோ விஷமத்தனமான செய்திகளை  பரப்புபவர்கள் ஒன்றில்  மக்கள் நலனில் அக்கறை அற்ற சுயநலமிகளாக இருக்கவேண்டும்  அல்லது அறிவு பூர்வமாக சிந்திக்காது உணர்ச்சித் தேசியவாதத்தில் மயங்கி கிடக்கும் அறிவிலிகளாக இருக்க வேண்டும் 

ஆகவே ஒட்டு மொத்த  முஸ்லீம் மக்களுக்கு எதிரான விஷமத்தனமான வெறுப்பு பேச்சுக்களை   பேசுவது பொறுப்பற்ற செயல்.  அதே நிலையை முஸ்லீம் மக்களில் உள்ள அறிவு பூர்வமாக சித்திக்கும் தரப்புகளும் எடுக்க வேண்டும். 

முற்றிலும் உடன்படுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

@Cruso இதற்கு தீர்வாக நீங்கள் முன் மொழிவது என்ன?  பழைய கசப்புணர்வுகளை இரு பகுதியினரும் மறந்து புதிய தலைமுறையாவது நல்லுறவை கட்டியெழுப்பி  வாழ்வதா?  அல்லது  இணையங்களிலும்  சமூக ஊடகங்களிலும்  வெறுப்பு பேசுக்கள் எழுத்துக்களை எழுதி அடுத்த சந்திதிக்கும் வெறுப்பு அரசியலை கடத்தி விட்டு  நாம் கண்ணை மூடுவதா?  

எது தமிழ் மக்களுக்கு நல்லது?  

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, valavan said:

முஸ்லீம் ஊர்காவல்படைவேறு முஸ்லீம்கள் வேறு அல்ல, அவர்களை பொறுத்தவரை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் என்ன கொள்கையை அவர்கள் கொண்டிருந்தாலும், என்ன செயலை செய்தாலும் தங்களுக்குள்ளேயே ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும், அவன் இஸ்லாமியனாக இருந்தால் போதும் அவர்கள் செய்வதை கண்னைமூடிக்கொண்டு நியாயப்படுத்துவார்கள், சக இனத்துக்கு அவர்கள் செய்தது தவறு என்று ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.  தங்களில் இருந்து அவர்களை வேறுபடுத்தி ஒருபோதும் பார்க்கமாட்டார்கள்.

அப்புறம் எப்படி ஊர்காவல்படைவேறு முஸ்லீம்கள் வேறு?

யாழில் இருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றியது தவறென்று சொல்லகூடிய புலிகள் பகுதியில் வாழ்ந்த புலிகள் ஆதரவு  தமிழர்களில் ஒரு பகுதியினரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால் தமிழர்களுக்கு முஸ்லீம் ஆயுதகுழு  இழைத்தது தவறு என்று சொல்லும் ஒரேயொரு முஸ்லீமை கூட நீங்கள் காண்பிக்கவே முடியாது.

தனது மதக்காரன் எது செய்தாலும் பொருத்தமில்லாத  முன்னுக்கு பின் முரண்பாடான, பதில் எதுவும் சொல்லமுடியாத விஷயங்கள் என்றாலும் அதனை சரியென்று சொல்வார்கள். அதற்கு ஆயிரம் உதாரணங்கள் உண்டு

இலங்கை இந்தியாவில் தமது வீட்டு பெண்களை உயர்கல்வி எல்லாம் கற்றுக்கொள்ள அனுப்பும் இஸ்லாமியர்கள்தான் இஸ்லாமியர்கள்தான் ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்கூடம் பக்கமே போககூடாது என்று தலீபான்கள் போடப்படும் கண்மூடிதனமான கட்டுப்பாட்டை ஆதரிப்பார்கள்.

இந்தியாவில் சினிமா நடிகை தொடக்கம் சூப்பர் சிங்கர்  மேற்கத்தைய இசையை இசைக்கும் இசையமைப்பாளர்கள்வரை முஸ்லீம்கள் இருப்பார்கள், ஆனால் இதெல்லாம் பண்ணிக்கொண்டே ஆப்கான் தொடக்கம் சவுதிவரை அதற்கு விதிக்கப்படும் தடைகளை சூப்பர் இன்ஷா அல்லாஹ் என்று சொல்வார்கள்.

ஐஎஸ் இயக்கம் கண்மூடிதனமான படுகொலைகளை செய்தால் இஸ்லாத்துக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை என்பார்கள், அது அமெரிக்க யூத சதி என்று சொல்வார்கள், எங்கே கண்மூடிதனமாக ஐஎஸ் இயக்கத்தை திட்டி பாருங்கள் , வரிசையில் வந்து உங்களை சகட்டுமேனிக்கு வசைபாடுவார்கள்.

தமிழர்களுக்கு முஸ்லீம்களுடன் அரசியல் பிரச்சனை இருக்கலாம், சிங்களவர்களுக்கு தமிழர்களுடன் அரசியல் பிரச்சனை இருக்கலாம், சிங்களவர்களுக்கு முஸ்லீம்களுடன் அரசியல் பிரச்சனை இருக்கலாம்.

ஆனால் முஸ்லீம்களுக்கு அனைவருடனும் இருப்பது ஒரேயொரு பிரச்சனை , அது அரசியல் பிரச்சனை அல்ல, மத பிரச்சனை.

அரசியல் பிரச்சனைகள்கூட ஒருகாலம் தீர்த்து வைக்கப்படலாம், ஆனால் மதவாதம் ஒருபோதும் தீர்க்கப்பட முடியாத ஒன்று. 

இனவாதம்தான் இஸ்லாமியர்களுக்கும் சக இனங்களுக்கும் இடையில் நடக்கிறது என்று இன்னும் நாங்கள் நம்பினால் இத்தனை தசாப்த கால  பிணக்கில் நாம் எதுவுமே கற்றுக்கொள்ளவில்லை என்பதே அர்த்தம்.

தரமான கருத்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

இதுவும் மட்டு-அம்பாறையில் நடந்த இன வன்முறையே. இதையிட்டும்  ஒட்டு மொத்த இலங்க சோனக இனத்தை வஞ்சம் தீர்க்க தேவையில்லை என்பதே என் நிலைப்பாடு.

ஆனால்….இதுதான் facts என்பதை யாரும் மறுக்க முடியாது.

தமிழர்கள் தம் மத்தியில் இருந்து வந்த ஒரு அமைப்பான புலிகள் முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்த போது அதை ஆதரித்தார்கள் அல்லது வாய்மூடி இருந்தார்கள்.  அது பாரிய பிழைதான்.

ஆனால் 90ம் ஆண்டுக்கு முன் நடந்த சிறிய கிராம மோதல்களை தவிர, தமிழ் மக்கள் தன்னார்வமாக முஸ்லிம் குடிமனைகளுக்குள் புகுந்து அநியாயம் செய்யவில்லை.

ஆனால் ஹிகாத், ஊர்காவல் படை மட்டும் அல்ல, கிழக்கில் சில இடங்களில் இவர்களோடு சேர்ந்து முஸ்லிம் மக்களின் ஒரு பகுதியினரும் அநியாயங்களில் ஈடுபட்டது மட்டும் அல்லாமல் நிலத்தையும் சொத்துக்களையும் சூறையாடினர்.

இந்த நியாயத்தை கதைக்க - சிலரை மதவெறி தடுக்கலாம். சிலரை பயம் தடுக்கலாம். ஆனால் உண்மை இதுதான்.

முற்றிலும் உடன்படுகிறேன்.

உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கும் நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, Cruso said:

தமிழர்கள் அல்ல இதை தூக்கி பிடிப்பவர்கள். அவர்கள் தமிழர்களுக்கு செய்த அநியாயங்களை, கொலைகளை வருடா வருடம் கொண்டாடுபவர்களும் தமிழர்கள் அல்ல.

சில இயக்கங்கள் அவர்களுக்கு அநியாயம் செய்தது உண்மைதான். ஆனால் அதட்காக வருடா வருடம் இப்போது கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. இப்போதும் வருடா வருடம் அவர்கள்தான் புதுப்பித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இதில் நீங்கள் எழுதி விடடாள் சரியாக வரப்போவதில்லை. முடியுமென்றால் இஸ்லாமியர்களின் இனவாத இணையதளங்களில் போய் இப்படி எழுதி பாருங்கள். அப்போது உங்களுக்கு புரியும். இங்குள்ளவர்களுக்குத்தான் கள நிலவரம் தெரியும்.

சரியான கருத்து.

இந்த வெறுப்பிற்கு தூபமிட்டது அவங்கள் தான்... அதெல்லாம் நீங்கள் எவ்வளவு சொன்னாலும் எடுபடாது.

குறிப்பாக யாழில் இப்படி எழுதுபவர்களை அங்கே சென்று (அப்படி ஏதேனும் வலைத்தளம் இருந்தால்) அல்லது ஒரு முல்லாவோடு சென்றோ கதைத்து ஏற்கவைக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்... நடவாத காரியம்... மாறாக இவருக்கு அல்லாவின் கரிசனையே கிடைக்கும்.

எனது கோரா அனுபவத்தையும் ஒரு பிடியாகச் சேர்த்துச் சொல்கிறேன், சோனாக்கள் எந்தக் காலத்திலும் தமிழருக்குச் செய்த இப் படுகொலைகளை ஏற்க மாட்டாங்கள், மாறாக அதை எடுத்தால் எமக்கெதிரான வன்மத்தையே கக்குவாங்கள், அப்படி நடக்கவே இல்லை என்றும் உருட்டுவாங்கள். அது ஆண்டாண்டாய் தொடர்கதையாகி உள்ளது. இனியும் தொடரத்தான் போகிறது. 

(எதுவாய் இருந்தாலும் நடப்பைக் கதைக்க வேணும். சும்மா பம்பலுக்கு கதைக்கப்படாது.)

Edited by நன்னிச் சோழன்
added a sentence

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, island said:

@Cruso இதற்கு தீர்வாக நீங்கள் முன் மொழிவது என்ன?  பழைய கசப்புணர்வுகளை இரு பகுதியினரும் மறந்து புதிய தலைமுறையாவது நல்லுறவை கட்டியெழுப்பி  வாழ்வதா?  அல்லது  இணையங்களிலும்  சமூக ஊடகங்களிலும்  வெறுப்பு பேசுக்கள் எழுத்துக்களை எழுதி அடுத்த சந்திதிக்கும் வெறுப்பு அரசியலை கடத்தி விட்டு  நாம் கண்ணை மூடுவதா?  

எது தமிழ் மக்களுக்கு நல்லது?  

அவர்கள் தங்களை தமிழர்களாக அடையாள படுத்தாத வரைக்கும் பிரச்சினை தீரப்போவதில்லை. வடக்கு கிழக்கு இணைப்புக்கு அவர்கள் தயாராக இல்லை. தமிழ் தலைமைகள் அவர்களுடன் பேசாமல் இல்லை. பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லோரும் ஒரு உடன்பாட்டுக்கு வருவதாக இருந்தால் ஏற்றுக்கொள்வதில் பிரச்சினை இல்லை. கல்முனையில் ஒரு தமிழ்  உப பிரதேச செயலகத்தையே செயட்படுத்த விடாமல் பதினைந்து வருடங்களுக்கு மேல் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தமிழர் பிரதேசங்கள் இன்று முஸ்லீம் பிரதேசங்களாக மாற்றி விடடார்கள். ஆனாலும் தமிழ் தலைமைகள் இன்னும் அவர்களுடன் நல்லிணக்கத்தையே விரும்பினாலும் அதட்கு அவர்கள் தயாரில்லை. இப்படி இருப்பதால் அவர்களுக்கு அதிக நன்மை கிடப்பதாக கருதுகிறார்கள். எமக்கு சிங்களவர்களுடன் பேசி எதாவது கிடைத்தாலே ஒழிய மற்றப்படி ஒன்றுமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, goshan_che said:

இதுவும் மட்டு-அம்பாறையில் நடந்த இன வன்முறையே. இதையிட்டும்  ஒட்டு மொத்த இலங்க சோனக இனத்தை வஞ்சம் தீர்க்க தேவையில்லை என்பதே என் நிலைப்பாடு.

ஆனால்….இதுதான் facts என்பதை யாரும் மறுக்க முடியாது.

தமிழர்கள் தம் மத்தியில் இருந்து வந்த ஒரு அமைப்பான புலிகள் முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்த போது அதை ஆதரித்தார்கள் அல்லது வாய்மூடி இருந்தார்கள்.  அது பாரிய பிழைதான்.

ஆனால் 90ம் ஆண்டுக்கு முன் நடந்த சிறிய கிராம மோதல்களை தவிர, தமிழ் மக்கள் தன்னார்வமாக முஸ்லிம் குடிமனைகளுக்குள் புகுந்து அநியாயம் செய்யவில்லை.

ஆனால் ஹிகாத், ஊர்காவல் படை மட்டும் அல்ல, கிழக்கில் சில இடங்களில் இவர்களோடு சேர்ந்து முஸ்லிம் மக்களின் ஒரு பகுதியினரும் அநியாயங்களில் ஈடுபட்டது மட்டும் அல்லாமல் நிலத்தையும் சொத்துக்களையும் சூறையாடினர்.

இந்த நியாயத்தை கதைக்க - சிலரை மதவெறி தடுக்கலாம். சிலரை பயம் தடுக்கலாம். ஆனால் உண்மை இதுதான்.

முற்றிலும் உடன்படுகிறேன்.

ஐயனே, மட்டு-அம்பாறையில் எண்ணற்ற தடவைகளிலும் திருமலையிில் (1989!?) ஆகக்குறைந்தது ஒரு தடவையும் நடந்துள்ளது.

ஒட்டு மொத்த இனத்திற்கும் வஞ்சம் தேவையில்லை என்பதை ஏற்கிறேன். எனக்கும் விருப்பமில்லைத்தான். எனது இஸ்லாமியத் தமிழர் மாவீரர் பட்டியலில் புலிகளின் சுவரொட்டி ஒன்றை மீள் வெளியீடு செய்துள்ளேன்... பார்க்காதவர்கள் அதைச் சென்று பாருங்கள்... மன்னாரில் எடுத்த படிமம் என்று நினைக்கிறேன்.

எதுயெப்படி ஆயினும், என்றேனும் ஒரு முல்லாதன்னும் மன்னிப்புக் கேட்டதுண்டா? இல்லை. மாறாக ஏன் உன்னினம் இதை இழைத்ததென்று எந்த சோனாவைக் கேட்டாலும் ஒன்று நடக்கவில்லை என்று உருட்டுவாங்கள், இல்லை எம்மைத் தூற்றுவாங்கள்.

மேலும், முஸ்லிம்கள்/சிங்களவர் எம்மவரை உயிருடன் எரித்தபோதெல்லாம் (முஸ்லிம்களால் செய்யப்பட்ட பலதை ஆவணப்படுத்தியுள்ளேன்) என்றேனும் ஒரு முல்லாதானும் இலங்கையில் இருந்து எதிர்த்து குரல் கொடுத்ததுண்டா? அறவேயில்லை... மாறாக நாம் செத்த போதும் எம்மை முல்லாக்கள் கொன்ற போதும் ஆடிப்பாடியே மகிழ்ந்தார்கள், ஏனைய சோனகர்கள்... தமிழரை ஜிகாத்தும், ஊ., முஸ்லிம் காடையர், முஸ்லிம் பொதுமக்கள் கொன்ற போது பிற முஸ்லிம்கள் அதை ஆதரித்தார்கள் அல்லது வாய்மூடி இருந்தார்கள். அதுவும் பாரிய பிழைதான். ஆரும் கண்டித்ததில்லை!

மற்றது Cruso சொன்ன மாதிரி ஒவ்வொரு ஆண்டும் அவங்கள் தான் காவடி துக்கிறாங்கள். நாங்களில்லை. எப்பவும் வெறுப்பை உமிழ்வது அவங்களே!

 இந்த ஆவணத்திற்கு தகவல் திரட்டியதிலிருந்து என் மனம் முழுவெறிப்பிற்கு மாறிவிட்டது... 1990 சூன் - செப்டெம்பர் வரை பெரும்பாலான நாட்களில் தமிழனை கொன்றிருக்கிறான் சோனா 😡😡 (இது இலக்கிய வழக்குச் சொல்). நான் கூட ஆங்கொன்று ஈங்கொன்று என்று தான் நினைத்திருந்தேன், அந்நாள் வரை. ஆனால் மெய்யுண்மை தலைகீழாக உள்ளது!

Edited by நன்னிச் சோழன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.