Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
17 minutes ago, Cruso said:

அவர்கள் தங்களை தமிழர்களாக அடையாள படுத்தாத வரைக்கும் பிரச்சினை தீரப்போவதில்லை. வடக்கு கிழக்கு இணைப்புக்கு அவர்கள் தயாராக இல்லை. தமிழ் தலைமைகள் அவர்களுடன் பேசாமல் இல்லை. பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லோரும் ஒரு உடன்பாட்டுக்கு வருவதாக இருந்தால் ஏற்றுக்கொள்வதில் பிரச்சினை இல்லை. கல்முனையில் ஒரு தமிழ்  உப பிரதேச செயலகத்தையே செயட்படுத்த விடாமல் பதினைந்து வருடங்களுக்கு மேல் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தமிழர் பிரதேசங்கள் இன்று முஸ்லீம் பிரதேசங்களாக மாற்றி விடடார்கள். ஆனாலும் தமிழ் தலைமைகள் இன்னும் அவர்களுடன் நல்லிணக்கத்தையே விரும்பினாலும் அதட்கு அவர்கள் தயாரில்லை. இப்படி இருப்பதால் அவர்களுக்கு அதிக நன்மை கிடப்பதாக கருதுகிறார்கள். எமக்கு சிங்களவர்களுடன் பேசி எதாவது கிடைத்தாலே ஒழிய மற்றப்படி ஒன்றுமில்லை. 

இன்னுமொன்று,

தமிழரைக் கொன்று குவித்ததிற்கு இவங்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.  

இல்லாட்டில்செஞ்ச நாசகாரியங்களை நாளாந்தம் எழுதி அடுத்த தலைமுறைக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும்.😜

Edited by நன்னிச் சோழன்
  • Replies 61
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

island

@நியாயம் கோஷானின் இந்த கேள்விக்கான நேர்மையான பதிலை வழங்குவதே உங்கள் ஆதங்கத்திற்கான பதிலாக இருக்கும். பாலஸ்தீனிய பிரச்சனை அந்த மக்களின் பிரச்சனை. அதையும் இலங்கையில் தமிழ், முஸ்லீம் மக்களுக்கும் இட

நிழலி

இந்த என் பதிலை, உங்களுக்கானது என்று ஏன் கருதினீர்கள் என விளங்கவில்லை. முஸ்லிம் மக்களுக்கு தனி அலகு வேண்டும் என்ற சரியான நிலைப்பாட்டில் இருக்கும் உங்களை நினைத்து அதை எழுதவில்லை. தாயகத்தில் முஸ்லிம

நிழலி

நான் 2007 வரைக்கும் அங்குதான் இருந்தேன். அத்துடன் மாற்று அரசியல் பத்திரிகை சரிநிகரில்  எழுதுகின்றவனாகவும் இருந்தேன் என்பதையும் தெரிவித்துக் கொண்டு.... இன்று மலையக தமிழ் மக்கள் கூட, தம் இன அடையாள

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, நிழலி said:

உண்மை.

முஸ்லிம் ஊர்காவல்படை எனும் அரச இராணுவ பிரிவு செய்த (சிங்கள அரசின் இராணுவப் பிரிவு)  அட்டூழியங்களை முஸ்லிம் பொது மக்கள் தான் செய்தனர் என தம் வசதிக்கு ஏற்ப சிந்திக்கின்றனர்.

இன்று இலங்கையில் தமிழர்களுக்கு முஸ்லிம்களுடனான பிரச்சினை அரசியல் ரீதியிலான பிரச்சினை. அதை பாலஸ்தீனர்களின் மீதான படுகொலையை ஏற்பதனூடாக தம் மனசை சந்தைப்படுத்த முடியும் என எவராவது நினைத்தால் அதன் காரணம் பச்சை இனவாதமே.

இப்போது விடுதலை புலிகள் அமைப்பு முன்பு போலவே தலைவர் தலைமையில் இயங்கினால் அவர்களின் நிலைப்பாடு நிச்சயம் இஸ்ரேலின் அரச பயங்கரவாதத்தை ஆதரிக்காது. அதேசமயம் இஸ்லாமிய தீவிரவாதிகளையும் ஆதரிக்க மாட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
31 minutes ago, நன்னிச் சோழன் said:

ஐயனே, மட்டு-அம்பாறையில் எண்ணற்ற தடவைகளிலும் திருமலையிில் (1989!?) ஆகக்குறைந்தது ஒரு தடவையும் நடந்துள்ளது.

ஒட்டு மொத்த இனத்திற்கும் வஞ்சம் தேவையில்லை என்பதை ஏற்கிறேன். எனக்கும் விருப்பமில்லைத்தான். எனது இஸ்லாமியத் தமிழர் மாவீரர் பட்டியலில் புலிகளின் சுவரொட்டி ஒன்றை மீள் வெளியீடு செய்துள்ளேன்... பார்க்காதவர்கள் அதைச் சென்று பாருங்கள்... மன்னாரில் எடுத்த படிமம் என்று நினைக்கிறேன்.

எதுயெப்படி ஆயினும், என்றேனும் ஒரு முல்லாதன்னும் மன்னிப்புக் கேட்டதுண்டா? இல்லை. மாறாக ஏன் உன்னினம் இதை இழைத்ததென்று எந்த சோனாவைக் கேட்டாலும் ஒன்று நடக்கவில்லை என்று உருட்டுவாங்கள், இல்லை எம்மைத் தூற்றுவாங்கள்.

மேலும், முஸ்லிம்கள்/சிங்களவர் எம்மவரை உயிருடன் எரித்தபோதெல்லாம் (முஸ்லிம்களால் செய்யப்பட்ட பலதை ஆவணப்படுத்தியுள்ளேன்) என்றேனும் ஒரு முல்லாதானும் இலங்கையில் இருந்து எதிர்த்து குரல் கொடுத்ததுண்டா? அறவேயில்லை... மாறாக நாம் செத்த போதும் எம்மை முல்லாக்கள் கொன்ற போதும் ஆடிப்பாடியே மகிழ்ந்தார்கள், ஏனைய சோனகர்கள்... தமிழரை ஜிகாத்தும், ஊ., முஸ்லிம் காடையர், முஸ்லிம் பொதுமக்கள் கொன்ற போது பிற முஸ்லிம்கள் அதை ஆதரித்தார்கள் அல்லது வாய்மூடி இருந்தார்கள். அதுவும் பாரிய பிழைதான். ஆரும் கண்டித்ததில்லை!

மற்றது Cruso சொன்ன மாதிரி ஒவ்வொரு ஆண்டும் அவங்கள் தான் காவடி துக்கிறாங்கள். நாங்களில்லை. எப்பவும் வெறுப்பை உமிழ்வது அவங்களே!

 இந்த ஆவணத்திற்கு தகவல் திரட்டியதிலிருந்து என் மனம் முழுவெறிப்பிற்கு மாறிவிட்டது... 1990 சூன் - செப்டெம்பர் வரை பெரும்பாலான நாட்களில் தமிழனை கொன்றிருக்கிறான் சோனா 😡😡 (இது இலக்கிய வழக்குச் சொல்). நான் கூட ஆங்கொன்று ஈங்கொன்று என்று தான் நினைத்திருந்தேன், அந்நாள் வரை. ஆனால் மெய்யுண்மை தலைகீழாக உள்ளது!

இங்கே வழமையாக நான் எழுதுவது போல் உங்களுக்கு எதிர்வினையாற்றவில்லை என பலர் குறைபட்டுக்கொண்டார்கள்.

ஆனால் உங்களின் முன்னைய முஸ்லிம் மாவீரகள் பற்றிய ஆவணத்தை வாசித்தவன், கருத்தும் இட்டவன் என்றவகையிலும், உங்களின் அண்மைய ஆவணத்தேடல் உங்களை உண்மையை கண்டு சினம் கொள்ள வைத்துள்ளது என்பதை விளங்கி கொண்டதும் நான் விலகி இருக்க காரணங்களில் ஒன்று.

இந்த கொடுமைகளை கண்டும், கேட்டும், அனுபவித்தும் வந்தவன் என்ற வகையில் இப்படி ஒரு மனநிலையில்தான் 90-95 வரை கூட நானும் இருந்தேன். ஆனால் காலப்போக்கில் - யார் செய்தது அதிகம் என சர்ச்சைபடுவது பலனற்றது, சமனற்றதாயினும் வினையும் எதிர்வினையும் நடந்தேறி விட்டது என்பதை உணர்ந்து, இனி அடுத்த வழி என்ன என்பதை சிந்திக்க தலைப்பட்டேன்.

நிற்க,

என்னை, ஐலண்டை இன்னும் பலரை போல் சிந்திக்க தலைப்படும் ஆட்கள் முஸ்லிம் சமூகத்தில் மிக மிக அரிது என்பதை முற்றிலும் ஏற்கிறேன். தமது பக்கம் தவறே இல்லை (90 இல் வன்முறையை தொடங்கியது அவர்களே - புலிகள் எதிர்வினைதான் ஆற்றினர்). 

அதே போல - யாழில் நியாயத்தை கதைக்க கிடைக்கும் இடம் நமக்கு ஜப்னா முஸ்லீமிலோ, மடவளை டொட் கொம்மிலோ கிடைக்காது என்பதை நாம் முழுவதும் ஏற்று கொள்கிறேன்.

அதே போல் வரலாற்றை எடுத்துரைக்கும், இந்த வாதங்களை முன்வைக்கும் நீங்கள், குருசோ, வல்லவன் போன்றோரின் கருத்தும் தேவை - இல்லை என்றால் தமிழன் அடித்தான், முஸ்லிம் அடிவாங்கினான் என கதையை எழுதி முடித்து விடுவார்கள்.

ஆனால் தொடர்ந்து இதையே பேசாமல் - அவர்களின் குறைகளோடு அவர்களுடன் டீல் பண்ணியே ஆக வேண்டும்.

இதனால்தான் முஸ்லிம்களுடன் சேர்ந்து நாம் பெறும் எந்த நிர்வாக அலகும் பின்னாளில் இதை விட பெரிய சிக்கலை தரும் என்பதை உணர்ந்து - அவர்களை “போனவரைக்கும் இலாபம்” என்ற அடிப்படையில் ஒரு தனி அலகை கொடுக்க நாம் இப்போதே உடன்பட வேண்டும் என்கிறேன்.

இது இனவாத அணுகுமுறை அல்ல -ஒரு குமுகாயமாக அவர்கள் அணுகுமுறை பற்றிய என் கற்றறிவு, பட்டறிவின் வழி வந்த தெளிவு.

நிற்க,

சிங்களவனை விட முஸ்லிம் எமக்கு அநியாயம் செய்யவில்லை. ஆனால் அவர்கள் மீது பாயாத சுடு சொற்கள் இவர்கள் மீது பாய்வது உண்மை. அது தேவையில்லாதது.

Edited by goshan_che
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, island said:

@நியாயம்

கோஷானின் இந்த கேள்விக்கான நேர்மையான பதிலை வழங்குவதே உங்கள் ஆதங்கத்திற்கான பதிலாக இருக்கும். பாலஸ்தீனிய பிரச்சனை அந்த மக்களின் பிரச்சனை. அதையும் இலங்கையில் தமிழ், முஸ்லீம் மக்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை.  

தமிழ் - முஸ்லீம் மக்களிடையே இடையே தூவப்பட்ட இன்றும் இரு பகுதியினராலும் கக்கப்படுகின்ற வெறுப்பை பிரச்சாரங்களை நிறுத்தி ஒரு நல்லுறவை ஏற்படுத்துவதே  ஒரே மொழியை பேசும் இரு பகுதி மக்களுக்கும் நல்லது.  அதை விடுத்து பாலஸ்தீன பிரச்சனையில் ஒருமித்த கருத்து ஏற்படுத்துவதல்ல. பக்கத்தில் இருக்கும் அரபு நாடுகளே தத்தமது நாடுகளின்  அரசியல் பொருளாதார நலன்களை பாதுகாத்துக் கொண்டு இரண்டாம் பட்சமாகவே பலஸ்தீன பிரச்சனையை அணுகுகின்றன.   இந்த நிலையில் நாம் அந்த பிரச்சனையில் சிக்கி எமக்குள் மேலும் வெறுப்புணர்வை வளர்ககாமல் இருக்க வேண்டும்.  விரும்பியோ விரும்பாமலோ ஒரே மண்ணில் சேர்ந்து நல்லுறவுடன் வாழவேண்டிய நிலையில் உள்ள மக்கள் நாம் என்பதை மனதில் வையுங்கள். 

ஏட்டுக்கு போட்டியாக இரண்டு பக்கமும் தவறுகள் இழைக்கப்பட்டன. 

ஆனால் ஒற்றுமையாக செல்வதறான முயற்சிகள், சமரசங்கள் தொடர்ச்சியாக நடந்தன. 

தமிழ்நெட் இணையத்தளம் இப்போதும் பழைய பதிவுகளை காண்பிக்கின்றது. அங்கு பாருங்கள். எத்தனை செய்திகள் என. 

தமிழ் முஸ்லீம் தரப்பிடையே ஒரு சமரசம் ஒற்றுமை ஏற்படாதது இரண்டு இனங்களுக்குமே மிகப்பெரிய பின்னடைவு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, நியாயம் said:

இப்போது விடுதலை புலிகள் அமைப்பு முன்பு போலவே தலைவர் தலைமையில் இயங்கினால் அவர்களின் நிலைப்பாடு நிச்சயம் இஸ்ரேலின் அரச பயங்கரவாதத்தை ஆதரிக்காது. அதேசமயம் இஸ்லாமிய தீவிரவாதிகளையும் ஆதரிக்க மாட்டார்கள். 

பலஸ்தீனத்தை விடுங்கள் - கடந்த கால சம்பவங்களுக்கு தமிழர் சார்பாக புலிகள் மன்னிப்பு கோரி 20 வருடம் ஆக போகிறது.

தாம் பெயரில் நடந்த அநியாயங்களுக்கு எப்போ முஸ்லிம் சமூகம் சார்பாக, சகல கட்சிகளும் அல்ல, ஒரு எம்பி யாவது மன்னிப்பு கோரப்போகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 minutes ago, goshan_che said:

சிங்களவனை விட முஸ்லிம் எமக்கு அநியாயம் செய்யவில்லை. ஆனால் அவர்கள் மீது பாயாத சுடு சொற்கள் இவர்கள் மீது பாய்வது உண்மை. அது தேவையில்லாதது

அதற்கு காரணம் எம்மை விட சிறிய இனம் என்ற தமிழ் பேரினவாத வெறியே. சிங்களவர் தம்மை பேரினவாத மனப்பான்மை கொண்டவர்கள் என்பதை  போல் நாமும் அதை ஏற்க மாட்டோம். 😂

Edited by island
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
4 minutes ago, நியாயம் said:

ஏட்டுக்கு போட்டியாக இரண்டு பக்கமும் தவறுகள் இழைக்கப்பட்டன. 

ஆனால் ஒற்றுமையாக செல்வதறான முயற்சிகள், சமரசங்கள் தொடர்ச்சியாக நடந்தன. 

தமிழ்நெட் இணையத்தளம் இப்போதும் பழைய பதிவுகளை காண்பிக்கின்றது. அங்கு பாருங்கள். எத்தனை செய்திகள் என. 

தமிழ் முஸ்லீம் தரப்பிடையே ஒரு சமரசம் ஒற்றுமை ஏற்படாதது இரண்டு இனங்களுக்குமே மிகப்பெரிய பின்னடைவு. 

சரி, அதெல்லாம் கிடக்கட்டும்.

வசன அமைப்பில் மழுப்பல் வழுவல் இல்லாமல் தெளிவாகச் சொல்லுங்கள்.

  1. 1954 இங்கினியாக்கலை படுகொலை தொடக்கம் முள்ளிவாய்க்கால் முடிவாக தமிழர் படுகொலைகள் நடந்தது இனப்படுகொலையா இல்லையா?
  2. 1990 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் தமிழர்களுக்கு மேற்கொண்ட அட்டூழியங்கள் சரியா பிழையா? மன்னிப்பு முஸ்லிம் தரப்பு கேட்க வேண்டுமா இல்லையா? 

எங்க தெளிவாகச் சொல்லுங்கோ பார்ப்போம். 

முதலடியை நீங்கள் எடுத்து வையுங்கோ பார்ப்போம்!
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, நன்னிச் சோழன் said:

நியாயத்தை கதைப்போம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Cruso said:

அவர்கள் தங்களை தமிழர்களாக அடையாள படுத்தாத வரைக்கும் பிரச்சினை தீரப்போவதில்லை.

அவர்கள் இலங்கையர்களாக அடையாளப்படுத்தினால் பிரச்சனை தீர்ந்துவிடும. என்று சிங்கள பேரினவாதி கூறுவதைப் போன்றது உங்கள் கருத்து. 

  • Thanks 1
Posted
4 hours ago, goshan_che said:

நீங்கள் இருவரும் ஏன் இப்படி பைத்தியக்காரத்தனமாக நான் சொல்லியதை விளங்கி கொள்கிறீர்களோ தெரியவில்லை.

நான் இந்த பதிவிலோ, வேறு எந்த பதிவிலுமோ பலஸ்தீன் இஸ்ரேல் பிரச்சனைக்கும் இலங்கை முஸ்லீம்களுக்கும் தமிழருக்கும் இடையான உறவுக்கும் எந்த தொடர்பும் இருப்பதாக கூறவில்லை.

இந்த என் பதிலை, உங்களுக்கானது என்று ஏன் கருதினீர்கள் என விளங்கவில்லை. முஸ்லிம் மக்களுக்கு தனி அலகு வேண்டும் என்ற சரியான நிலைப்பாட்டில் இருக்கும் உங்களை நினைத்து அதை எழுதவில்லை.

தாயகத்தில் முஸ்லிம் மக்களுடன் எமக்கிருக்கும் அரசியல் ரீதியிலான பிணக்குகளை மனதில் வைத்து , பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியும் இன்று அவர்களுக்கு நடக்கும் பேரழிவை ஆதரித்தும் கருத்தாடுகின்றவர்களுக்கான என் பதில் அது.

தம் மண்ணைப் பாதுகாக்க போராடும் உக்ரைன் மக்களின் போராட்டம் எவ்வளவு நீதியானதோ அதே அளவுக்கு பாலஸ்தீன மக்களின் போராட்டமும் நீதியானதும், அடக்குமுறைக்குள்ளாகி நிற்கும் எம்மால் ஆதரவு கொடுக்கப்பட வேண்டியதுமான போராட்டம் ஆகும்.

3 hours ago, நன்னிச் சோழன் said:

மன்னிக்க வேண்டும். மெய்யுண்மை (factually) சாராக பிழையான கருத்து. 

ஊர்காவல் படை சரி... அப்ப சில முஸ்லிம் ஊர்களின் பொதுமக்களே ஒன்று சேர்ந்து தமிழரை அடிச்சு கொளுத்தி விரட்டினரே... அதெல்லாம் கணக்கில்லையா ஐயனே.... 

வரலாற்றை அறியுங்கள். தாம் அறியாததை விட அதிகமானது வரலாறு.

இன்றுவரை எமக்கெதிராகவெனில் ஊரே சேர்ந்த போராட்டத்தில் ஈடுபடும். 2014இல் ஐநா. சிங்கள அரசிற்கு எதிராக கொணர்ந்த தீர்மானத்திற்கு எதிராக புத்தளத்தான்கள் 14000 பேர் வரை திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்... அதில் அவர்கள் கூவிய முழக்கங்களை தேடி வாசித்துப் பாருங்கள்.

வரலாற்றை இப்படியே எழுதிச் செல்லலாம். அது நீளமானது, தொடர்கிறது.

தமிழ் முஸ்லிம் மக்களின் வரலாறு 1990 இல் இருந்து அல்ல, ஆரம்பாகின்றது. அது அதற்கும் முதல் பல நூற்றாண்டுகளைக் கொண்டது. இலங்கையில், இவ் இரு இனங்களுக்கிடையிலான பிரச்சனைகளை ஆயுதத்தால் தீர்க்க நினைத்து அடிபட்டு சாகத் தொடங்கியது 90 களில் இருந்தே ஆரம்பமானது. பிரேமதாசாவின் நரித்தனத்தாலும் இந்தியாவின் ஆலோசனைகளாலும் இவ் இரு இனங்களிற்கிடையிலான பிரச்சனை ஆயுதத்தால் தீர்மானிக்கப்பட தொடங்கியது. இதற்கும் முக்கிய காரணமாக இருந்தது முரளிதரன் எனும் கருணாவே ஆகும்.

90 களிற்கு முன் இலங்கையில் எக்காலத்திலும் தமிழ் முஸ்லிம் இனக்கலவரம் நடந்தது இல்லை. தமிழ் போராட்டங்களிலும் இயக்கங்களிலும் முஸ்லிம்கள் இணைந்து போராடிய காலமும் இருந்தது.

  • Like 2
  • Thanks 3
  • Downvote 1
Posted
3 hours ago, Cruso said:

முஸ்லீம் ஊர்காவல் படை என்பது இராணுவ படை இல்லை. முஸ்லீம் கிராம பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட்து. இங்குள்ளவர்களுக்குத்தான் அது யாரென்று தெரியும். எனவே அது முஸ்லீம்

நான் 2007 வரைக்கும் அங்குதான் இருந்தேன். அத்துடன் மாற்று அரசியல் பத்திரிகை சரிநிகரில்  எழுதுகின்றவனாகவும் இருந்தேன் என்பதையும் தெரிவித்துக் கொண்டு....

1 hour ago, Cruso said:

அவர்கள் தங்களை தமிழர்களாக அடையாள படுத்தாத வரைக்கும் பிரச்சினை தீரப்போவதில்லை. வடக்கு கிழக்கு இணைப்புக்கு அவர்கள் தயாராக இல்லை. 

இன்று மலையக தமிழ் மக்கள் கூட, தம் இன அடையாளத்தை 'மலையகம்' என்ற ஒற்றைப் பதத்துக்குள் கொண்டுவர அரசியல் ரீதியிலான முயற்சிகளை காத்திரமாக முன்னெடுத்துக் கொண்டு வருகின்றனர்.

ஒரு இனம், தன்னை எப்படி அடையாளப்படுத்த வேண்டும் என்பதை வெளியார் தீர்மானிக்க முடியாது. அது தன்னை நிலை நிறுத்த எது அவசியமோ அதை தெரிவு செய்யும்.

மற்றது வடக்கு கிழக்கு இணைப்பு: இதில் முஸ்லிம்கள் மட்டுமல்ல, கிழக்கை சேர்ந்த தமிழ் மக்களில் எத்தனை வீதமானோர் இதற்கு சம்மதிப்பார்கள் என்பதே கேள்விக் குறி. சாதி வெறி பிடித்து, தமக்குள் இருக்கும் மக்களையே ஒதுக்க நினைக்கும் வடக்கு தமிழ் மக்களின் மேலாதிக்கத்தை வெறுக்க நினைப்பது முஸ்லிம்கள் மட்டுமல்ல.
 
  • Like 4
  • Thanks 1
Posted
4 hours ago, goshan_che said:

பிகு

@நிழலி இது உங்களுக்கு. 1.8 பில்லியன் கணக்குக்கு பின், பயந்துட்டீங்களா குமாரு? நியாம்தான்.

# நாமார்க்கும்🤣

கருத்துக்கு கருத்தை முன்வைக்க பழகுங்கள். ஒருவர் தன் கருத்தை யாழில் வைக்கு கருத்துக்கு பயம் காரணம் என்று பூச்சாணி காட்டுவது கருத்து வங்குரோத்து தனத்தை தவிர வேறு இல்லை. 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
3 minutes ago, goshan_che said:

நியாயத்தை கதைப்போம்🤣

🤣🤣 

25 minutes ago, goshan_che said:

இங்கே வழமையாக நான் எழுதுவது போல் உங்களுக்கு எதிர்வினையாற்றவில்லை என பலர் குறைபட்டுக்கொண்டார்கள்.

ஆனால் உங்களின் முன்னைய முஸ்லிம் மாவீரகள் பற்றிய ஆவணத்தை வாசித்தவன், கருத்தும் இட்டவன் என்றவகையிலும், உங்களின் அண்மைய ஆவணத்தேடல் உங்களை உண்மையை கண்டு சினம் கொள்ள வைத்துள்ளது என்பதை விளங்கி கொண்டதும் நான் விலகி இருக்க காரணங்களில் ஒன்று.

இந்த கொடுமைகளை கண்டும், கேட்டும், அனுபவித்தும் வந்தவன் என்ற வகையில் இப்படி ஒரு மனநிலையில்தான் 90-95 வரை கூட நானும் இருந்தேன். ஆனால் காலப்போக்கில் - யார் செய்தது அதிகம் என சர்ச்சைபடுவது பலனற்றது, சமனற்றதாயினும் வினையும் எதிர்வினையும் நடந்தேறி விட்டது என்பதை உணர்ந்து, இனி அடுத்த வழி என்ன என்பதை சிந்திக்க தலைப்பட்டேன்.

நிற்க,

என்னை, ஐலண்டை இன்னும் பலரை போல் சிந்திக்க தலைப்படும் ஆட்கள் முஸ்லிம் சமூகத்தில் மிக மிக அரிது என்பதை முற்றிலும் ஏற்கிறேன். தமது பக்கம் தவறே இல்லை (90 இல் வன்முறையை தொடங்கியது அவர்களே - புலிகள் எதிர்வினைதான் ஆற்றினர்). 

அதே போல - யாழில் நியாயத்தை கதைக்க கிடைக்கும் இடம் நமக்கு ஜப்னா முஸ்லீமிலோ, மடவளை டொட் கொம்மிலோ கிடைக்காது என்பதை நாம் முழுவதும் ஏற்று கொள்கிறேன்.

அதே போல் வரலாற்றை எடுத்துரைக்கும், இந்த வாதங்களை முன்வைக்கும் நீங்கள், குருசோ, வல்லவன் போன்றோரின் கருத்தும் தேவை - இல்லை என்றால் தமிழன் அடித்தான், முஸ்லிம் அடிவாங்கினான் என கதையை எழுதி முடித்து விடுவார்கள்.

ஆனால் தொடர்ந்து இதையே பேசாமல் - அவர்களின் குறைகளோடு அவர்களுடன் டீல் பண்ணியே ஆக வேண்டும்.

இதனால்தான் முஸ்லிம்களுடன் சேர்ந்து நாம் பெறும் எந்த நிர்வாக அலகும் பின்னாளில் இதை விட பெரிய சிக்கலை தரும் என்பதை உணர்ந்து - அவர்களை “போனவரைக்கும் இலாபம்” என்ற அடிப்படையில் ஒரு தனி அலகை கொடுக்க நாம் இப்போதே உடன்பட வேண்டும் என்கிறேன்.

இது இனவாத அணுகுமுறை அல்ல -ஒரு குமுகாயமாக அவர்கள் அணுகுமுறை பற்றிய என் கற்றறிவு, பட்டறிவின் வழி வந்த தெளிவு.

நிற்க,

சிங்களவனை விட முஸ்லிம் எமக்கு அநியாயம் செய்யவில்லை. ஆனால் அவர்கள் மீது பாயாத சுடு சொற்கள் இவர்கள் மீது பாய்வது உண்மை. அது தேவையில்லாதது.

//இங்கே வழமையாக நான் எழுதுவது போல் உங்களுக்கு எதிர்வினையாற்றவில்லை என பலர் குறைபட்டுக்கொண்டார்கள்.//

ஐயனே, இதற்கு நான் ஏற்கனவே முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். இருப்பினும், மீண்டும்:

நான் சோனகர்களுக்கு எதிராக எழுதுவது 100 வீதம் எனது தன்னினைவில் இருந்தே என்பதை இரண்டாவது தடவையாக பறைந்துகொள்கிறேன்... என்ன செய்கிறேன் என்பது தெரிந்தே செய்கிறேன். அவங்கள் நிறுத்தி மன்னிப்புக் கேட்கும் வரை நான் ஓயமாட்டேன்.

  • பிறருக்கு: அவரது கண்டிப்பால் ஒன்றும் ஆகிடாது. நான் ஒன்றும் முஸ்லிம்கள் செய்யாததைச் சோடிச்சுச் சொல்லவில்லையே. அவங்கள் செய்ததை, எம்மவர் அறியாததை, தானே சொல்கிறேன். பொய்யில்லையே. 
     
//அதே போல - யாழில் நியாயத்தை கதைக்க கிடைக்கும் இடம் நமக்கு ஜப்னா முஸ்லீமிலோ, மடவளை டொட் கொம்மிலோ கிடைக்காது என்பதை நாம் முழுவதும் ஏற்று கொள்கிறேன்.//

அது ஐலன்ட்கு😆

//ஆனால் தொடர்ந்து இதையே பேசாமல் - அவர்களின் குறைகளோடு அவர்களுடன் டீல் பண்ணியே ஆக வேண்டும்.//

//இனி அடுத்த வழி என்ன என்பதை சிந்திக்க தலைப்பட்டேன்.//

நானும் அந்த அடுத்த வழியையே சொல்கிறேன்... தமிழர் மீதான படுகொலைகளுக்கு முஸ்லிம்கள் மன்னிப்புக் கேட்டு & தமிழர்  தரப்பும் சமாதானம் ஆகி மேற்கொண்டு "பழையன" தொடராமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும். ஆனால் சோனாக்கள் மன்னிப்புக் கேட்க மாட்டாங்கள்... அங்க தான் சிக்கலே. மன்னிப்புத்தான் நல்லிணக்கத்திற்கு முதல் படி. ஆனால் அதைச் செய்ய மாட்டாங்கள். 

தமிழரிடமிருந்து வன்வளைப்பு செய்துள்ள நிலங்களை (கோவில்கள், சுடுகாடுகள்) திரும்ப ஒப்படைத்தல் நல்லம். அல்லது வன்வளைக்கப்பட்டுள்ள தமிழ் ஊரின் இடம்பெயர்ந்த/பாதிக்கப்பட்ட மக்களோடு பேசி நல்லிணக்கத்திற்கு என்ன முடிவு சொல்கிறார்களோ அதை செய்தால் எதிர்காலம் வசந்தமாக அமையும் (நான் தென் தமிழீழத்தைச் சேர்ந்தவன் அன்று, ஆகையால் என்ன செய்ய வேண்டுமென்று தெரியாது). இல்லையென்றால் வெறுப்புத்தான் மிஞ்சும். 

//இதனால்தான் முஸ்லிம்களுடன் சேர்ந்து நாம் பெறும் எந்த நிர்வாக அலகும் பின்னாளில் இதை விட பெரிய சிக்கலை தரும் என்பதை உணர்ந்து - அவர்களை “போனவரைக்கும் இலாபம்” என்ற அடிப்படையில் ஒரு தனி அலகை கொடுக்க நாம் இப்போதே உடன்பட வேண்டும் என்கிறேன்.//

உந்த அரசியல் தந்திரங்கள் எனக்குத் தெரியாது, ஆகையால் நான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. சமாதனத்திற்கு வழி மட்டுமே எனக்குத் தெரியும்.

//சிங்களவனை விட முஸ்லிம் எமக்கு அநியாயம் செய்யவில்லை. ஆனால் அவர்கள் மீது பாயாத சுடு சொற்கள் இவர்கள் மீது பாய்வது உண்மை. அது தேவையில்லாதது.//

ஓம், நன்கறிவேன். ஆனால் ஒரே மொழியைக் கதைத்துக்கொண்டு எம்மை எதிர்த்தவங்கள். அந்தக் கோவம் எனக்கு எப்போதுமுண்டு. 

சிங்களவன்; அவன் பகை. நான் ஏசாட்டியும் திட்டாட்டியும் எமது மக்களுக்கு அவங்கள் செய்த நாசங்கள் ஓராளவுக்குத்தானும் தெரியும். ஆனால், முஸ்லிம்கள் விடையத்தில் எமது மக்களிலே பெரும்பாலானோர் என்ன நடந்தது என்பது பற்றி அறிவில்லை. அதை நாம் ஊட்ட வேண்டும்; துலக்கிக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேற்கத்திய தேசங்களில் நடைபெற்ற இன , மத முரண்பாடுகளால் நடந்த இரத்தக் களரி கொஞ்ச நஞ்சமல்ல. அந்த பழைய இரத்தகளரிக்கு வஞ்சம் தீர்க்க அவர்கள் முற்பட்டிருந்தால் இன்றும் இங்கு எம்மை போல் யுத்தமும் சண்டையும் இரத்த களரியுமாகவே இருந்திருக்கும். ஓய்யாரமாக  கணணி முன் அமர்ந்திருந்து இன வெறுப்பை தாயக அடுத்த தலைமுறைக்கு  விதைக்கும் சுயநல  சொகுஸான   வாழ்கையும் கிடைத்திருக்காது.   

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தான் பிடிச்ச முயலுக்கு மூன்றுகால் என்று நாண்டுகொண்டு நிக்கிறவங்களோடை கதைக்கேலாது பாருங்கோ. அவையள் பாதிக்கப்பட்டவங்களோடு கலந்து கதைத்தால் தான் வலி தெரியும்... 

சும்மா ஸ்கோர் பார்த்துக்கொண்டு ஓய்யாரமாக கணினிக்கு முன்னாலை இருந்துகொண்டு "அறிவுரை" 🥴 சொல்றவங்களை சிரிச்சுப் போட்டுக் கடந்து போக வேண்டும்.🤪🤣

தாயக தலைமுறை கடந்த கால வரலாறு தெளிவாக அறிந்திருக்க வேண்டும். அப்ப தான் இன்னொரு முறை அவங்களை ஆரும் ஏமாற்றக் கூடாது. சும்மா தொடடதுக்கெல்லாம் தமிழன் தான் செய்தான் என்டால், நாங்கள் என்ன கேணையளோ. எதுவாய் இருந்தாலும் ஞாயத்தைக் கதைக்க வேணும்.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, நிழலி said:

90 களிற்கு முன் இலங்கையில் எக்காலத்திலும் தமிழ் முஸ்லிம் இனக்கலவரம் நடந்தது இல்லை.

ஐயா!

இந்த உண்மையையும்  உங்கள் கருத்துகளுடன்  சேர்த்துக் கொள்ளுங்கள்.

Diplomatic service officer-   Mr S  Jaishankar ( Now- Minister of External Officer)

 இவர்  முஸ்லிம் காங்கிரஸின் ஊடாக  இந்தியாவினுடைய உதவிகளை வழங்கி,  தமிழர்களின்  விடுதலை  விருப்புகளை  சிதறடிப்பதில்,  அந்தக் காலத்தில்  தீவிரமாக ஈடுபட்டு  வெற்றியும் கண்டார்.

திரு முகம்மது ஹுசைன் முகம்மது அஷ்ரப், அவர்களுடாக  தமிழர் எதிர்ப்பு  படைகளை உருவாக்கி  குறிப்பிட்ட அளவு தமிழர்  முஸ்லிம் எதிர்ப்புகளை  விதைப்பதற்கு  அத்திவாரம் இடப்பட்டது.

நாங்கள் எல்லாரும்  அறிந்தது போலவே,  மிகுதி  வடக்கில்  மாற்று இயக்கங்களின்  அடாவடித்தனமும்,  கிழக்கில்  இவர்களின்   அடாவடித்தனமும்,  அதோடு இணைந்த  மாற்றியக்கங்களின்  அடாவடியும்  நடந்தேறியது.

அது இன்று வரை,  ஏதோ ஒரு வடிவில்  தங்களது நோக்கங்களுக்காக சிலமுறைகளை உருவாக்கி  வெற்றியும் கண்டு கொண்டு இருக்கின்றார்கள்.

  Mr S  Jaishankar, இந்த ஐயா  அடிக்கடி  எங்கள் நாட்டுக்கு வந்து செல்கின்றார் , என்ன குறி வைக்கிறார் என்பதும்  எங்களுக்கு தெரியும்.

1 minute ago, MullaiNilavan said:

Diplomatic service officer-   Mr S  Jaishankar

அந்தக் காலத்தில் சிங்களப் பகுதியில் உள்ள இந்திய தூதரகத்தில்  பணியாற்றியபோது  அந்த அளப்பெரும் சாதனையை   நிகழ்த்தி முடித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
1 hour ago, நிழலி said:

தமிழ் முஸ்லிம் மக்களின் வரலாறு 1990 இல் இருந்து அல்ல, ஆரம்பாகின்றது. அது அதற்கும் முதல் பல நூற்றாண்டுகளைக் கொண்டது. இலங்கையில், இவ் இரு இனங்களுக்கிடையிலான பிரச்சனைகளை ஆயுதத்தால் தீர்க்க நினைத்து அடிபட்டு சாகத் தொடங்கியது 90 களில் இருந்தே ஆரம்பமானது. பிரேமதாசாவின் நரித்தனத்தாலும் இந்தியாவின் ஆலோசனைகளாலும் இவ் இரு இனங்களிற்கிடையிலான பிரச்சனை ஆயுதத்தால் தீர்மானிக்கப்பட தொடங்கியது. இதற்கும் முக்கிய காரணமாக இருந்தது முரளிதரன் எனும் கருணாவே ஆகும்.

90 களிற்கு முன் இலங்கையில் எக்காலத்திலும் தமிழ் முஸ்லிம் இனக்கலவரம் நடந்தது இல்லை. 

ஐயனே பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டதாகிவிடாது.

உங்கள் அறியாமையை நான் தீர்க்கிறேன். 

ஆயுதங்களால் தமிழரைத் தாக்கியது முஸ்லிம்களே, முதன் முதலில். தமிழனன்று!

பிரேமதாசாவிற்கு முன்னரே & கருணா வருமுன்னரே இந்தச் சிக்கல் ஆரம்பித்து விட்டது. 

1990 முன்னர் தமிழர்கள் மீது முஸ்லிம் காடையர்களால் அம்பாறை & மட்டக்களப்பு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பட்டியல், திகதி வாரியாக

  1. வீரமுனை (சம்மாந்துறை, மட்டக்களப்பு) - 1954, 1958
  2. கரவாகுசாய்ந்தமருது தமிழ் பிரிவு (புதிய பெயர்: கல்முனைக்குடி | கல்முனை, அம்பாறை) - 1967
  3. மீனோடைக்கட்டு (அட்டாளைச்சேனை, அம்பாறை) - 1978 மற்றும் 1985.07.12
  4. மீராவோடை (வாழைச்சேனை, மட்டக்களப்பு) - 1983
  5. ஏறாவூர் (ஏறாவூர்பற்று, மட்டக்களப்பு) - 1983 சூன் மற்றும் 1985 சூன்
  6. தியாவட்டவான் (கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை, மட்டக்களப்பு) - 1983 ஓகஸ்ட் மற்றும் 1985 
  7. ஓட்டமாவடி (மட்டக்களப்பு) - 1983 மற்றும் 1985
  8. காரைதீவு (அம்பாறை) - 1985 ஏப்ரல் 12 - 14
  9. திராய்க்கேணி (அட்டாளைச்சேனை, அம்பாறை) - 1985

முஸ்லிம் ஜிகாத் மட்டும் பங்கேற்றது:

  1. உடும்பன்குளம் (அக்கரைப்பற்று, அம்பாறை) - 1986 பெப்ரவரி 19

மிகப் பெரிய தாக்குதல் நடைபெற்றது காரைதீவிலே.... 2 நாட்கள் தொடர்ந்து எரிச்சழிச்சவங்கள்.  சுடுகலன்கள், கையெறிகுண்டுகள் எல்லாம் பாவித்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. இவற்றை தாங்கள் அறியவில்லை.

வரலாறு அறியாதோருக்காகவே இதை நான் ஆவணப்படுத்துகிறேன்... இதை வாசியுங்கள் (விரும்ப் உங்களைப் பொறுத்தது), துலங்கும். 

அழிந்து போன தமிழ்க் கிராமங்கள் என்ற நூலை வாசித்துப் பாருங்கள்... இன்னும் தெளிவாக இவையெல்லாம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

Edited by நன்னிச் சோழன்
கூடுதல் பற்றியம் சேர்ப்பு
  • Thanks 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிழலி said:

தமிழ் முஸ்லிம் மக்களின் வரலாறு 1990 இல் இருந்து அல்ல, ஆரம்பாகின்றது. அது அதற்கும் முதல் பல நூற்றாண்டுகளைக் கொண்டது. இலங்கையில், இவ் இரு இனங்களுக்கிடையிலான பிரச்சனைகளை ஆயுதத்தால் தீர்க்க நினைத்து அடிபட்டு சாகத் தொடங்கியது 90 களில் இருந்தே ஆரம்பமானது. பிரேமதாசாவின் நரித்தனத்தாலும் இந்தியாவின் ஆலோசனைகளாலும் இவ் இரு இனங்களிற்கிடையிலான பிரச்சனை ஆயுதத்தால் தீர்மானிக்கப்பட தொடங்கியது.

மிக முக்கியமான இன்றைய நில்லையில் தேவையான கருத்து நிழலி.  

பல நூற்றாண்டாக  ஒருவரை ஒருவர பகைக்காமல் தமக்குள் இருந்த முரண்பாடுகளை தீர்தது கொண்ட இனங்கள் எப்படி திடீரென  படு மோசமாக ஆயுத வன்முறை மூலம் மோதிக்கொண்டன என்பதைச் சரிவர புரிந்து கொள்வதும்  அவ்வாறான கசப்பான சம்பவங்கள் இனியும் எழாமல்  இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதுவும் தான். இன்றைய நிலையில் இரு இனங்களுக்கும்  முக்கியம்.  

தனது இரண்டு நகரங்கள் மீது அணுகுண்டு போட்ட செயலை ஜப்பானிய மக்கள் என்றும் நினைவில் வைத்திருப்பர். ஆனால் அறிவிலிகள் போல்  வன்மம் வைக்காமல் அமெரிக்காவுடன் நல்லுறவு கொண்டாலே எம்மால் முன்னேற முடியும் என்ற அறிவு பூர்வமான அணுகுமுறை தான் ஜப்பானை மீண்டெள செய்தது.  

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, நன்னிச் சோழன் said:

ஐயனே பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டதாகிவிடாது.

உங்கள் அறியாமையை நான் தீர்க்கிறேன். 

ஆயுதங்களால் தமிழரைத் தாக்கியது முஸ்லிம்களே, முதன் முதலில். தமிழனன்று!

பிரேமதாசாவிற்கு முன்னரே & கருணா வருமுன்னரே இந்தச் சிக்கல் ஆரம்பித்து விட்டது. 

1990 முன்னர் தமிழர்கள் மீது முஸ்லிம் காடையர்களால் அம்பாறை & மட்டக்களப்பு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பட்டியல், திகதி வாரியாக

  1. வீரமுனை (சம்மாந்துறை, மட்டக்களப்பு) - 1954, 1958
  2. கரவாகுசாய்ந்தமருது தமிழ் பிரிவு (புதிய பெயர்: கல்முனைக்குடி | கல்முனை, அம்பாறை) - 1967
  3. மீனோடைக்கட்டு (அட்டாளைச்சேனை, அம்பாறை) - 1978 மற்றும் 1985.07.12
  4. மீராவோடை (வாழைச்சேனை, மட்டக்களப்பு) - 1983
  5. ஏறாவூர் (ஏறாவூர்பற்று, மட்டக்களப்பு) - 1983 சூன் மற்றும் 1985 சூன்
  6. தியாவட்டவான் (கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை, மட்டக்களப்பு) - 1983 ஓகஸ்ட் மற்றும் 1985 
  7. ஓட்டமாவடி (மட்டக்களப்பு) - 1983 மற்றும் 1985
  8. காரைதீவு (அம்பாறை) - 1985 ஏப்ரல் 12 - 14
  9. திராய்க்கேணி (அட்டாளைச்சேனை, அம்பாறை) - 1985

முஸ்லிம் ஜிகாத் மட்டும் பங்கேற்றது:

  1. உடும்பன்குளம் (அக்கரைப்பற்று, அம்பாறை) - 1986 பெப்ரவரி 19

மிகப் பெரிய தாக்குதல் நடைபெற்றது காரைதீவிலே.... 2 நாட்கள் தொடர்ந்து எரிச்சழிச்சவங்கள்.  சுடுகலன்கள், கையெறிகுண்டுகள் எல்லாம் பாவித்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. இவற்றை தாங்கள் அறியவில்லை.

வரலாறு அறியாதோருக்காகவே இதை நான் ஆவணப்படுத்துகிறேன்... இதை வாசியுங்கள் (விரும்ப் உங்களைப் பொறுத்தது), துலங்கும். 

அழிந்து போன தமிழ்க் கிராமங்கள் என்ற நூலை வாசித்துப் பாருங்கள்... இன்னும் தெளிவாக இவையெல்லாம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

தம்பி @நன்னிச்சோழன்

ஒரு காலத்தில் எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட கோரமான மனிதாபிமானம் அற்ற அனுபவங்களால் நானும் உங்களது நிலைப்பாட்டில் தான் இருந்தேன்.

ஆனால் இந்த நிலைப்பாட்டை நாம் தொடர்ந்தால் தாயகத்தில் தமிழருக்கு தீர்வும் இல்லை நாடும் இல்லை. அதனால் உங்களுக்கும் அதை நம் பரிந்துரை செய்கிறேன் அண்ணன் என்ற ரீதியில் மட்டும். நன்றி.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
2 minutes ago, விசுகு said:

தம்பி @நன்னிச்சோழன்

ஒரு காலத்தில் எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட கோரமான மனிதாபிமானம் அற்ற அனுபவங்களால் நானும் உங்களது நிலைப்பாட்டில் தான் இருந்தேன்.

ஆனால் இந்த நிலைப்பாட்டை நாம் தொடர்ந்தால் தாயகத்தில் தமிழருக்கு தீர்வும் இல்லை நாடும் இல்லை. அதனால் உங்களுக்கும் அதை நம் பரிந்துரை செய்கிறேன் அண்ணன் என்ற ரீதியில் மட்டும். நன்றி.

நன்றி ஐயனே... 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, நிழலி said:

இந்த என் பதிலை, உங்களுக்கானது என்று ஏன் கருதினீர்கள் என விளங்கவில்லை. முஸ்லிம் மக்களுக்கு தனி அலகு வேண்டும் என்ற சரியான நிலைப்பாட்டில் இருக்கும் உங்களை நினைத்து அதை எழுதவில்லை.

நான் எழுதியதை நியாயம் மேற்கோள் காட்டி எழுதியதை, நீங்கள் மேற்கோள் காட்டி எழுதியதால் அது எனக்கானது என கருதும்படி ஆயிற்று.

அப்படி இல்லை எனில் சந்தோசம்.

விளக்கியமைக்கு நன்றி.

4 hours ago, நிழலி said:

கருத்துக்கு கருத்தை முன்வைக்க பழகுங்கள். ஒருவர் தன் கருத்தை யாழில் வைக்கு கருத்துக்கு பயம் காரணம் என்று பூச்சாணி காட்டுவது கருத்து வங்குரோத்து தனத்தை தவிர வேறு இல்லை. 

கருத்துப்பஞ்சதிலா மேலே பத்தி பத்தியாக எழுதியுள்ளேன்.

சில விடயங்கள் ஒரு கோர்வையாக நடப்பது போல் இருந்தது அதுதான் கேட்டேன். இல்லை என்றால் மகிழ்ச்சி.

34 minutes ago, விசுகு said:

தம்பி @நன்னிச்சோழன்

ஒரு காலத்தில் எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட கோரமான மனிதாபிமானம் அற்ற அனுபவங்களால் நானும் உங்களது நிலைப்பாட்டில் தான் இருந்தேன்.

ஆனால் இந்த நிலைப்பாட்டை நாம் தொடர்ந்தால் தாயகத்தில் தமிழருக்கு தீர்வும் இல்லை நாடும் இல்லை. அதனால் உங்களுக்கும் அதை நம் பரிந்துரை செய்கிறேன் அண்ணன் என்ற ரீதியில் மட்டும். நன்றி.

டிட்டோ

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, island said:

தனது இரண்டு நகரங்கள் மீது அணுகுண்டு போட்ட செயலை ஜப்பானிய மக்கள் என்றும் நினைவில் வைத்திருப்பர். ஆனால் அறிவிலிகள் போல்  வன்மம் வைக்காமல் அமெரிக்காவுடன் நல்லுறவு கொண்டாலே எம்மால் முன்னேற முடியும் என்ற அறிவு பூர்வமான அணுகுமுறை தான் ஜப்பானை மீண்டெள செய்தது.  

நீங்கள் சொன்னது உண்மை.  அதே போல்  மேற்கத்திய தேசங்களில் இன மத முரண்பாடுகள் நடைபெற்றன அதை அவர்கள் குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டு  முரண்பாடுகளை இல்லாதொழித்து சொகுசான வாழ்வு அமைத்து கொண்டனர். ஆனால் யாருடன் முரண்பாடுகள் மோதல்கள் ஏற்பட்டு முடிவுக்கு கொண்டு வந்தனர். ? நன்னிச் சோழன் சொன்ன மாதிரி தான் பிடிச்ச முயலுக்கு மூன்றுகால் என்று நாண்டுகொண்டு நிக்கிற முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்களுடன் இல்லை.  
Valavan இது பற்றி சிறப்பாக உண்மையை சொல்லியுள்ளார்.

முஸ்லீம்களுக்கு அனைவருடனும் இருப்பது ஒரேயொரு பிரச்சனை , அது அரசியல் பிரச்சனை அல்ல, மத பிரச்சனை.
அரசியல் பிரச்சனைகள்கூட ஒருகாலம் தீர்த்து வைக்கப்படலாம், ஆனால் மதவாதம் ஒருபோதும் தீர்க்கப்பட முடியாத ஒன்று.]

அமெரிக்கா ஒரு முஸ்லிம் நாடாக இருந்திருந்தால் யப்பானும் இன்று ஷரியா சட்டம் ஆட்சி செய்யும் பெண்கள் ஹிஜாப்பிற்கு எதிராக போராட்டங்கள் நடத்தி கொண்டிருக்கும்  நாடாக இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனைவரிடமும் ஒரு கேள்வி?
பலஸ்தீன மண்ணில் நடக்கும் கலவரங்கள் சொந்த மண்ணிற்கானதா? மதத்திற்கானதா? அல்லது இனத்திற்கானதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, குமாரசாமி said:

அனைவரிடமும் ஒரு கேள்வி?
பலஸ்தீன மண்ணில் நடக்கும் கலவரங்கள் சொந்த மண்ணிற்கானதா? மதத்திற்கானதா? அல்லது இனத்திற்கானதா?

சொந்த மண்ணிற்கானது. இனத்திற்கானது. ஆனால்,   ஹமாஸ் இயக்கம் அதை மதப் போராட்டமக  மாற்ற  முனைகிறது.  இந்தச் சாட்டில் பலஸ்தீன மக்களை இன அழிப்பு செய்யலாம்  என்ற ரீதியில் இஸ்ரேலும் இதை மதப்போராட்டமாக பார்ககவே விரும்புவதாகத் தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, குமாரசாமி said:

பலஸ்தீன மண்ணில் நடக்கும் கலவரங்கள் சொந்த மண்ணிற்கானதா?

இந்த சொந்த மண் என்ற கான்செப்ட் கொஞ்சம் மேலோட்டமானது. 

இலங்கை நாகர்களினதும் இயக்கர்களினதும், வேடர்களினதும் சொந்த மண் என்கிறார்கள்.

ரோமன் (இத்தாலி), வைகிங் (ஸ்கெண்டினேவியா),  சக்சன் (, ஜேர்மனி), நோர்மன் (பிரெஞ்சு) இத்தனை பேரும் - உள்ளூர்வாசிகளான கெல்டிக்/செல்டிக் மக்களிடம் இருந்து பறித்த இடம்தான் இங்கிலாந்து. இவர்கள் எல்லாரினதும் கூட்டு கலவைதன் இன்றைய ஆங்கிலேயர்.

அவுஸ்ரேலியாவில் அபர்ஜினிகள் பூர்வ குடிகள் என்கிறோம். அவர்களே இடம்பெயர்ந்து அங்கே போனவர்கள் என்கிறது அண்மைய ஆராய்சி முடிவுகள்.

இப்படி அலை அலையாக குடியேற்றமும், குடியகலலும் மீள் குடியேறறமும் நிகழ்ந்த பூமிதான் இன்றைய இஸ்ரேல்/பலஸ்தீன்.

ஆகவே இது இருவருக்குமான  சொந்த மண்.

இந்த போராட்டங்கள் அடிப்படையில் மண்ணுக்கானதே.

59 minutes ago, குமாரசாமி said:

அல்லது இனத்திற்கானதா?

குறித்த ஒரு மண்ணின் ஆளுகை இனம் சார்ந்துதானே இருக்கிறது. இன்ன இனத்தின் ஆட்புலம் இந்த மண். இல்லை அது வேறு ஒரு இனத்தின் ஆட்புலம் என்பதுதான் இலங்கை முதல் இஸ்ரேல் வரை பிரச்சனை. 

ஆகவே மண்ணுக்கானது = இனத்துக்கானது.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.