Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழா

adminOctober 22, 2023
391716879_24093983836883260_418506681197

மன்னாரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து கொள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும், மாவட்ட செயலக ஊடக அலுவலருக்கும் அனுமதி வழங்கப் படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இவ் வருடத்திற்கான தேசிய மீலாதுன் நபி விழா இம்முறை மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் முசலி தேசிய பாடசாலையில் வன்னி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில்  ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

இவ்விடையம் தொடர்பாக மன்னார் மற்றும் முசலியில் காதர் மஸ்தான் தலைமையில் பல்வேறு கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டது. எனினும்  நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தேசிய மீலாதுன் நபி விழா ஏற்பாடுகள் குறித்து மன்னார் மாவட்டத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்காமல் கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை 9.30 மணியளவில்   ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து கொள்ள சென்ற  பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் ,மாவட்ட செயலக ஊடக அலுவலருக்கும் அனுமதி வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

-ஒரு மதத்தை பிரதிபலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் பிராந்திய ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப் படாமை குறித்தும் குறிப்பாக குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளரான  காதர் மஸ்தானின் செயல்பாடுகள் குறித்தும் ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ள தோடு,  காதர் மஸ்தானின் கட்சி  சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அரசியல் நிகழ்வு போல் குறித்த  தேசிய மீலாதுன் நபி விழா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம் பெறுவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
 

spacer.png

https://globaltamilnews.net/2023/196380/

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதும், ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமை வழங்குவதும் தற்போதைய அரசின் கொள்கையாகும் - ஜனாதிபதி ரணில் 

22 OCT, 2023 | 05:19 PM
image

அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதும், ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமை வழங்குவதும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் பலஸ்தீன மக்களை பலிகடா ஆக்குவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அந்த பிரதேசங்களில் மோதல்களை தடுத்து அமைதியை நிலைநாட்ட ஐ.நா. பொதுச் செயலாளரின் வேலைத்திட்டத்துக்கு முழு ஆதரவு வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மன்னார், முசலி தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் இன்று (22) முற்பகல் இடம்பெற்ற தேசிய மீலாதுன் நபி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

National_Meelad_-Un_Nabi_Celebration__3_

சமய கலாசார அலுவல்கள் அமைச்சும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முஸ்லிம் மத மற்றும் கலாசார பிரமுகர்கள் அன்புடன் வரவேற்றனர்.

தேசிய மீலாதுன் நபி கொண்டாட்டத்தின் சிறப்புரையை அஷ்ஷெய்க் பி. நிஹாமத்துல்லாஹ் மௌலவி ஆற்றினார்.

தேசிய மீலாதுன் நபி கொண்டாட்டம் 2023க்கான நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் அட்டையும் வெளியிடப்பட்டதுடன், தபால்மா அதிபர் ருவன் சத்குமாரவினால் ஜனாதிபதிக்கு முதல் முத்திரை மற்றும் முதல் நாள் அட்டை வழங்கப்பட்டது.

National_Meelad_-Un_Nabi_Celebration__6_

தேசிய மீலாதுன் நபி கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட விசேட நினைவுச் சின்னம் மற்றும் "மன்னார் மாவட்ட வரலாறு" புத்தகமும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

நபிநாயகத்தின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட வடிவமைப்புப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கிவைத்தார்.

மேலும், பள்ளிவாசல்களில் நீண்ட காலம் பணியாற்றிய மௌலவிகளுக்கு கௌரவ விருதுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பிரதேசத்துக்கு அளப்பரிய சேவையாற்றிய பேராசிரியர் மர்ஹூம் ஹிஸ்புல்லாஹ்வுக்கு நினைவுப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

புத்தளம் பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவருக்கும் புத்தளம் மாவட்ட ஜம் இதுல் உலமா அமைப்பின் தலைவருக்கும் நினைவு பரிசுகள் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டது.

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் சார்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, ஜனாதிபதி உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது:

National_Meelad_-Un_Nabi_Celebration__8_

இன்று நாம் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை கொண்டாடுகிறோம். மன்னார் மாவட்டத்தில் நான் கலந்துகொண்ட இரண்டாவது சமய விழா இதுவாகும். சில மாதங்களுக்கு முன் மடு தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டோம்.

இந்த நிகழ்வை பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்தமைக்கு மத கலாசார அலுவல்கள் அமைச்சுக்கும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிகழ்வுடன் இங்கு புதிய பாடசாலை கட்டடம் திறப்பு, வீட்டுத்திட்டம் போன்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 

National_Meelad_-Un_Nabi_Celebration__7_

மன்னார் மாவட்டத்துக்கு இந்த அபிவிருத்தி தேவை. இந்தப் பகுதி போரால் பாதிக்கப்பட்ட பகுதி. எனவே, இந்தப் பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றுவதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றோம்.

குறிப்பாக, மன்னார் மாவட்டத்தில் வீதிகள் அமைப்பது தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடி வருகின்றோம். அமைச்சர் பாராளுமன்றத்திலும் அதை ஞாபகப்படுத்துகிறார்.

குறிப்பாக, இப்பிரதேசத்தில் வீடுகளை நிர்மாணிப்பது போன்று கல்வியும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

மன்னார் நகரில் கல்வி நன்றாக உள்ளது. ஆனால் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள கல்வியில் திருப்தியடைய முடியாது.

அத்துடன், இப்பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தி குறித்தும் திட்டமிட்டுள்ளோம். இந்தியாவுக்கும் மன்னாருக்கும் இடையில் கடல் போக்குவரத்து சேவையை ஏற்படுத்துவதற்கான பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனை காங்கேசன்துறையில் ஆரம்பித்தோம்; அடுத்து தலைமன்னாரில் ஆரம்பிக்கப்படும். அதேநேரம் இந்தியாவும் இலங்கையும் இணைந்து மின்சார அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளன. அது இந்த மன்னார் ஊடாகவும் நடக்கிறது என்பதை நான் கூற விரும்புகிறேன்.

National_Meelad_-Un_Nabi_Celebration__2_

இது வெறும் ஆரம்பம்தான். இதன் மூலம் எதிர்காலத்தில் மன்னார் அபிவிருத்தி அடையும். குறிப்பாக இந்த பகுதியில் பசுமை பொருளாதாரம் மற்றும் பசுமை ஆற்றலுக்கு அதிக சாத்தியம் உள்ளது. இங்கு கிடைக்கும் சூரிய சக்தியை கொண்டு இப்பகுதியை மேம்படுத்த முடியும். புத்தளத்திலிருந்து மன்னார் வரை யாழ். குடாநாட்டின் ஊடாக முல்லைத்தீவு வரை அந்த வாய்ப்புள்ளது. இதை மையமாக வைத்து புனரினை ஆக்குவோம் என்றும் நம்புகிறோம்.

மேலும் மன்னாரை சுற்றுலா மையமாக மாற்ற நாங்கள் விரும்புகிறோம். அதேநேரம் மீன்பிடி தொழில் வளர்ச்சி அடையும்போது மன்னாருக்கு புதிய பொருளாதாரம் கிடைக்கும்.

இன்று நாம் இங்கு நபிகள் நாயகத்தை நினைவுகூருவோம். நபிகள் நாயகம் அவர்கள் கூறிய அதே கோட்பாடுதான் இன்று இலங்கையில் உள்ளது. எனவே இந்த விழாவை தேசிய விழாவாக கருதுகிறோம். அனைத்து மதங்களையும் சமமாக நடத்துவதே எங்கள் கொள்கை.

மேலும் அனைவருக்கும் சம உரிமை வழங்குவதே எங்கள் நோக்கம். இங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு சில பிரச்சினைகள் உள்ளன. அரசும் அவற்றை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்பதை இங்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நான் திவாலான நாட்டைக் கைப்பற்றினேன். அந்த திவால் நிலையில் இருந்து இன்னும் மீண்டு வருகிறோம். எனவே, அந்த பணியை முறையாக மேற்கொள்ளவுள்ளோம்.

National_Meelad_-Un_Nabi_Celebration__4_

இன்றைக்கு மொராக்கோ முதல் இந்தோனேஷியா வரை ஆபிரிக்கா, ஐரோப்பா என எல்லா இடங்களிலும் நபிகளாரின் இஸ்லாமியக் கோட்பாடு பரவியுள்ளது.

நபிகளார் இந்தக் கோட்பாட்டை பிரசங்கித்த போது, எல்லா கிறிஸ்தவ யூதர்களும் அந்தப் பகுதியில் வாழ்ந்தார்கள். எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இன்று பெரிய பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக, பாலஸ்தீன விவகாரம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அதற்கு முன்னதாகவே அரசாங்கம் தனது கருத்தை தெரிவித்திருந்தது. பாராளுமன்றத்திலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

20 உணவு லொரிகள் காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கேள்விப்பட்டோம். ஆனால் இது போதுமா என்ற கேள்வி எழுகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக பாலஸ்தீன மக்கள் காஸா பகுதியில் சிக்கித் தவிக்கின்றனர். அந்த மக்களின் துயரத்தை நாங்கள் மன்னிக்கவில்லை. அந்த மக்களுக்கு தேவையான உணவுகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உணவு இஸ்ரேலில் இருந்து மட்டுமல்ல, எகிப்திலிருந்தும் வழங்கப்பட வேண்டும். மேலும் தண்ணீர் கொடுக்க வேண்டும்.

இஸ்ரேல் - ஹமாஸ் சண்டை ஒரு பிரச்சினை. ஆனால், இந்தப் போராட்டத்தில் சாதாரண பாலஸ்தீன மக்கள் பலியாகிவிடக் கூடாது. எனவே, அதனை தீர்க்க எகிப்து உள்ளிட்ட அரபு நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. மற்ற நாடுகளும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன. குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் இந்தப் பிரச்சினையைத் தீர்த்து அந்தப் பிரதேசங்களில் அமைதியை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்கு எமது பூரண ஆதரவை வழங்குவோம் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். பாலஸ்தீன அரசாங்கத்தின் தேவை இருப்பதையும் குறிப்பிட வேண்டும் என்றார், ரணில். 

மேலும், இந்த நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு அபிவிருத்திக் குழுவின் தலைவருமான காதர் மஸ்தான் கூறுகையில், 

தேசிய மெளடூனில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மன்னாருக்கு விஜயம் செய்தமை எமது மக்களுக்குக் கிடைத்த கௌரவமாகவே கருதுகின்றோம். 

National_Meelad_-Un_Nabi_Celebration__5_

யுத்தம் நிறைவடைந்த பின்னர் இப்பிரதேசம் அபிவிருத்தி அடையவில்லை. முறையான திட்டமிடல் இன்றி மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளினால் குறித்த பிரதேசத்தில் அபிவிருத்தி மற்றும் முதலீடுகளுக்காக காணிகளை கையகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உங்கள் தலைமையில் எனது மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என்பதை குறிப்பிட வேண்டும். எந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததோ அந்த நாட்டின் பொறுப்பை ஏற்று பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உழைத்தீர்கள். 

மக்களின் அவலங்களை நன்கு அறிந்த ஜனாதிபதி என்ற ரீதியில் இப்பிரதேசங்களில் மீள்குடியேற்றப் பிரச்சினைக்கு நீங்கள் தீர்வை வழங்குவீர்கள் என நம்புகின்றோம் என தெரிவித்தார். 

இன்றைய இந்த நிகழ்வில் கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர் கே. திலீபன், பௌத்த சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.எம். பைசல், மகா சங்கரத்னா தலைமையிலான சமயத் தலைவர்கள், தூதுவர்கள், பாதுகாப்புப் படைத் தலைவர்கள், பாடசாலை மாணவர்கள், பிரதேசவாசிகள் மற்றும் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/167523

  • கருத்துக்கள உறவுகள்

கடும்போக்கு இஸ்லாமிய அடிப்படைவாத முல்லாக்களின் மன்னார் பிரசன்னம்.. மிக விரைவில் மன்னார் இன்னொரு காத்தான்குடி.. ஏறாவூர் ஆகும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

மன்னார் மீதான இஸ்லாமிய அடிப்படைவாத ஜிகாத் நீண்ட காலமாகவே ஒரு கண் வைச்சிருந்தது. போராட்ட காலம் இவர்களின் மத அடிப்படைவாத ஆக்கிரமிப்புக்கு செளகரிகமாக அமையவில்லை. இப்போ.. எல்லாம் கூடி வருகிறது போலும்.

சிலாவத்துறை பக்கமாக.. சிங்கள பெளத்தம்.. ஆக்கிரமிக்க.. மிச்சத்தை இஸ்லாமிய மத அடிப்பைவாதம் ஆக்கிரமிக்க.. கேதீஸ்வரத்தானும்.. மடுமாதாவும்.. அகதியாக வேண்டியான். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, nedukkalapoovan said:

கடும்போக்கு இஸ்லாமிய அடிப்படைவாத முல்லாக்களின் மன்னார் பிரசன்னம்.. மிக விரைவில் மன்னார் இன்னொரு காத்தான்குடி.. ஏறாவூர் ஆகும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

மன்னார் மீதான இஸ்லாமிய அடிப்படைவாத ஜிகாத் நீண்ட காலமாகவே ஒரு கண் வைச்சிருந்தது. போராட்ட காலம் இவர்களின் மத அடிப்படைவாத ஆக்கிரமிப்புக்கு செளகரிகமாக அமையவில்லை. இப்போ.. எல்லாம் கூடி வருகிறது போலும்.

சிலாவத்துறை பக்கமாக.. சிங்கள பெளத்தம்.. ஆக்கிரமிக்க.. மிச்சத்தை இஸ்லாமிய மத அடிப்பைவாதம் ஆக்கிரமிக்க.. கேதீஸ்வரத்தானும்.. மடுமாதாவும்.. அகதியாக வேண்டியான். 

இங்கு உண்மையை எழுதினால் முஸ்லிம்களை தாக்குகிறோம் என்று சிலர் அடித்து பிடித்துக்கொண்டு ஓடி வருகிறார்கள்.

அங்குள்ள கடைகள் எல்லாம் இப்போது காத்தான்குடி முஸ்லிமாக்கள் கட்டுபாட்டில்தான் கொண்டு வந்திருக்கிறார்கள். றிசாட் எல்லோருக்கும் அங்குவீடுகளும் கட்டி கொடுத்திருக்கிறார்கள். மன்னாரிலிருந்து தலை மன்னார் வரைக்கும் போனால் எங்கும் அவர்களது வீடமைப்பும் முஸ்லிம்குடியேற்றங்களும்தான். ஒன்றுக்கு குவைத் நகர், மற்றது கட்டார் நகர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இஸ்லாமிய நாடுகள் தாராளமாக பணம் வழங்குகிறார்கள்.

புத்தளம்தொடக்கம் தலை மன்னார் வரைக்கும் முஸ்லிம்குடியேற்றங்களையும், பவுத்த விகாரைகளையும் தாராளமாக காணலாம். இருந்தாலும் சிங்கள குடியேற்றங்களை விட முஸ்லீம் குடியேற்றங்கள் தாராளமாக காணப்படுகின்றது.

ஒரு காலத்தில் அங்கு ஜிஹாத் இயக்கம் இருந்தது. ரிஸார்ட் எல்லாம் அதில் அங்கத்தவராக இருந்தவர்தான். நீங்கள் எழுதியபடி அடுத்த காத்தான்குடி மன்னார் மாவடடம்தான். 

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கேதீச்சரத்துக்கு இந்தியா பணம் கொடுத்தால் இவையள் சும்மா பார்த்து கொண்டு இருப்பினமே

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, putthan said:

திருக்கேதீச்சரத்துக்கு இந்தியா பணம் கொடுத்தால் இவையள் சும்மா பார்த்து கொண்டு இருப்பினமே

திருக்கேசீதரத்துக்கு மட்டுமில்லை. முழு இலங்கைக்கும் பணம் கொடுத்து இந்தியாதான் காப்பாற்றியது. எனவே அரபு நாடுகள் முஸ்லிம்களுக்கு மட்டும்தான் பணம் கொடுக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.