Jump to content

ஜனாதிபதி ரணிலுக்கு கூட்டணி அரசியல் தொடர்பாக தெளிவில்லை : நாமல் ராஜபக்ஷ

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக ஆட்சி மாற்றம் இடம்பெறக்கூடாது – நாமல்

ஜனாதிபதி ரணிலுக்கு கூட்டணி அரசியல் தொடர்பாக தெளிவில்லை : நாமல் ராஜபக்ஷ

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கூட்டணி அரசியல் தொடர்பாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவாத் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கூட்டணி அரசாங்கமொன்றில், ஏதேனும் முக்கியமான தீர்மானமொன்று எடுக்க வேண்டுமாக இருந்தால் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசிக்கப்படும்.

ஆனால், கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கலந்தாலோசிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கட்சியின் செயலாளர் உள்ளிட்ட பலரால் முன்வைக்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் எந்தவித முரண்பாடும் கிடையாது.
எனினும், பதவிகள் மாற்றமடைவதால் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மட்டுமன்றி சஜித் பிரேமதாஸ, சரத்பொன்சேகா, அநுரகுமார திஸாநாயக்கவையும் அன்று நாம் அழைத்தோம். இவர்கள் யாரும் வரவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டும்தான் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதற்கான கௌரவத்தை நாம் அவருக்கு கொடுக்க வேண்டும்.

ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டணி அரசியல் தொடர்பாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தின்போதும் இரண்டு தலைவர்களும் வெவ்வேறாக செயற்பட்ட காரணத்தினால்தான் நாடு வீழ்ச்சியடைந்தது.

இவ்வாறு தற்போது இடம்பெற்றுவிடக்கூடாது என்பதற்காகத் தான், பேசித் தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1355667

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாவின் காலத்தில் பூனை போல அமைதியாகவிருந்தவர்கள் தற்போது நாய்போல குரைக்கின்றனர் - லான்சா

Published By: RAJEEBAN

26 OCT, 2023 | 04:38 PM

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்த வேளை பூனைகள் போல நடந்துகொண்ட நாமல்ராஜபக்சவும்  சாகரகாரியவசமும் தற்போது நாய்கள் போல குரைக்கின்றனர் என பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லான்ச தெரிவித்துள்ளார்.

சமீபத்தைய அமைச்சரவை மாற்றம் குறித்து நாமல்ராஜபக்சவும் சாகரகாரியவசமும் கடும் கருத்துக்களை வெளியிட்டுள்ளமை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் நிமால்லான்ச இதனை தெரிவித்துள்ளார்.

அமைச்;சரவை மாற்றங்களை ஜனாதிபதி உரிய முறையில் மேற்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ள நிமால் லான்ச நாமலும் சாகரவும் அதனை எதிர்த்தால் அவர்கள் தங்களுக்கு மூளைகோளாறா என பரிசோதிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக பொய் தெரிவிப்பதை விட சாகர காரியவசம் பதவியை இராஜினாமா செய்துவிட்டு இவ்வாறான கருத்துக்களை வெளியிடவேண்டும் அவருக்கு இதற்கான துணிச்சல் உள்ளதா என நான் சந்தேகிக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையை கோட்டபாய ராஜபக்ச நான்கு தடவை மாற்றியவேளை நாமல் அமைதியாகயிருந்தார்  ஆனால் ரணில்விக்கிரமசிங்க ஒருமுறை அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்டவுடன் நாமல் தனது வழமையான சண்டியன் பாணியில் பேசுகின்றார் எனவும் நிமால் லான்ச  தெரிவித்துள்ளார்.

கோட்டாவின் காலத்தில் பூனை போல அமைதியாகவிருந்தவர்கள் தற்போது நாய்போல குரைக்கின்றனர் - லான்சா | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மட்டுமன்றி சஜித் பிரேமதாஸ, சரத்பொன்சேகா, அநுரகுமார திஸாநாயக்கவையும் அன்று நாம் அழைத்தோம். இவர்கள் யாரும் வரவில்லை.

நீங்கள் யார் அழைக்க? அடுத்த ஜனாதிபதி தேர்தலில் 46% வாக்காளர் அனுரவுக்கு பின்னால் என்கிறது எக்கானமி நெக்ஸ்ட் கருத்து கணிப்பு.

ரணிலை விட்டால் உங்களுக்கு வேறு கதி இல்லை. அனுர வந்தா முழு வண்டவாளமும் தண்டவாளம் ஏறி விட வாய்புண்டு. ரணில் போல் டீல் போடுவாரா என்பது சந்தேகமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

நீங்கள் யார் அழைக்க? அடுத்த ஜனாதிபதி தேர்தலில் 46% வாக்காளர் அனுரவுக்கு பின்னால் என்கிறது எக்கானமி நெக்ஸ்ட் கருத்து கணிப்பு.

ரணிலை விட்டால் உங்களுக்கு வேறு கதி இல்லை. அனுர வந்தா முழு வண்டவாளமும் தண்டவாளம் ஏறி விட வாய்புண்டு. ரணில் போல் டீல் போடுவாரா என்பது சந்தேகமே.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தோற்கடிப்போம் – ரோஹித அபேகுணவர்த்தன!

ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்போவதில்லை : பொதுஜன பெரமுன தீர்மானம்!

2024 ஆம் ஆண்டுவரை மட்டும்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் அரசாங்கத்தை அமைத்திருந்தாலும், இது தற்காலிக அரசாங்கமொன்று தான். 2024 ஆம் ஆண்டுவரை மட்டும்தான் இந்த அரசாங்கம் இருக்கும்.

இதன் பின்னர் இவரைக் கொண்டுவருவோம்- அவரைக் கொண்டுவருவோம் என நாம் எந்த இடத்திலும் கூறவில்லை.

ஆனால், இந்த அரசாங்கத்தை நடுவில் உடைத்து, முட்டாள் தனமான வேலையை செய்யவும் நாம் தயாரில்லை.

ஜனாதிபதிக்கோ அமைச்சரவைக்கோ நாட்டை வழிநடத்த முடியாவிட்டால், உடனடியாக தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும்.

அல்லாவிட்டால் நாட்டில் காட்டுச் சட்டம் வந்துவிடும். மக்கள் தான் அரசாங்கத்தை தீர்மானிக்க வேண்டும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மனதில் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தான் உள்ளார்.

அரசாங்கமானது, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காக நாட்டு மக்களை துன்பத்திற்குள் தள்ளியுள்ளது.

மக்கள் மரணித்த பின்னர், ஐ.எம்.எப்.இன் கடனுதவி கிடைத்தும் பலனில்லாமல் போய்விடும்.

எனவே, அரசாங்கம் இதுதொடர்பாகவும் சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1355799

😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, goshan_che said:

நீங்கள் யார் அழைக்க? அடுத்த ஜனாதிபதி தேர்தலில் 46% வாக்காளர் அனுரவுக்கு பின்னால் என்கிறது எக்கானமி நெக்ஸ்ட் கருத்து கணிப்பு.

ரணிலை விட்டால் உங்களுக்கு வேறு கதி இல்லை. அனுர வந்தா முழு வண்டவாளமும் தண்டவாளம் ஏறி விட வாய்புண்டு. ரணில் போல் டீல் போடுவாரா என்பது சந்தேகமே.

சிவப்பு சகோதர்கள், ஆட்சியைப் பிடிப்பார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

அனுர குமாரவை ஜனாதிபதியாக்காமல் விடமாட்டார்கள் போலும்.

1 minute ago, Nathamuni said:

சிவப்பு சகோதர்கள், ஆட்சியைப் பிடிப்பார்களா?

ஆங்கிலத்தில் closing ranks என்பார்கள்.  சிங்கள ஆளும் வர்க்கம் அனுரவை வர விடுமா? சந்தேகமே.

ரணில், மொட்டு, சஜித் எல்லாரும் சேர்ந்து அனுரவை தோற்கடிக்க ஒரு பொது வேட்பாளரை நிறுத்தவும் கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அனுர குமாரவை ஜனாதிபதியாக்காமல் விடமாட்டார்கள் போலும்.

ஆங்கிலத்தில் closing ranks என்பார்கள்.  சிங்கள ஆளும் வர்க்கம் அனுரவை வர விடுமா? சந்தேகமே.

ரணில், மொட்டு, சஜித் எல்லாரும் சேர்ந்து அனுரவை தோற்கடிக்க ஒரு பொது வேட்பாளரை நிறுத்தவும் கூடும்.

சித்தார்தன், தமிழ் வேட்பாளரும் நிக்கவேணுமாம்.

ஏன் அப்படி சொல்லியிருப்பாரூ? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை ஜனாதிபதி தேர்தல் 2ம் சுற்றுக்கு போககூடும் என நினைக்கிறேன்.

உங்கள் கருத்து என்ன?

1 minute ago, Nathamuni said:

சித்தார்தன், தமிழ் வேட்பாளரும் நிக்கவேணுமாம்.

ஏன் அப்படி சொல்லியிருப்பாரூ? 🤔

இது வழமையாக பாடும் பாட்டுத்தானே. பாடகர் ஒவ்வொரு முறையும் வேறுபடுவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

அனுர குமாரவை ஜனாதிபதியாக்காமல் விடமாட்டார்கள் போலும்.

38 minutes ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்போவதில்லை : பொதுஜன பெரமுன தீர்மானம்!

மாடு இளைத்தாலும்... கொம்பு இளைக்கவில்லை மொமெண்ட். 🙂

Edited by தமிழ் சிறி
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

மாடு இளைத்தாலும்... கொம்பு இழைக்கவில்லை மொமெண்ட். 🙂

ஜொக்காவும் இல்லாமல் ஓடியது மறந்து விட்டதாக்கும்.

அனுர 46%, சஜித் 29%, ரணில் 17%, மொட்டு 8% என்கிறது கருத்து கணிப்பு.

நான் நினைக்கிறேன் மொட்டில் நாமலே இறங்க கூடும்.

ரணில் எப்படியாவது சஜித்தை வளைக்கப்பார்ப்பார்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஜொக்காவும் இல்லாமல் ஓடியது மறந்து விட்டதாக்கும்.

அனுர 46%, சஜித் 29%, ரணில் 17%, மொட்டு 8% என்கிறது கருத்து கணிப்பு.

நான் நினைக்கிறேன் மொட்டில் நாமலே இறங்க கூடும்.

ரணில் எப்படியாவது சஜித்தை வளைக்கப்பார்ப்பார்.

இந்தால் சரத் வீரசேகரா, மொட்டில கேக்கலாம் எண்டுதானாம் இனவாத கத்து கத்துறார். ராஜபக்சேக்கள் இப்போதைக்கு வரமாட்டினம் என நிணைக்கிறாராம்.

அமெரிக்க விசாமறுப்பு, கொதிய கிளப்பியிருக்கு.

கொஞ்ச நாளா, விமல் கப்சிப்.

அவுஸ் விசா மறுப்புக்குப் பின் கமன்பிள்ள அமைதி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

ஜொக்காவும் இல்லாமல் ஓடியது மறந்து விட்டதாக்கும்.

அனுர 46%, சஜித் 29%, ரணில் 17%, மொட்டு 8% என்கிறது கருத்து கணிப்பு.

நான் நினைக்கிறேன் மொட்டில் நாமலே இறங்க கூடும்.

ரணில் எப்படியாவது சஜித்தை வளைக்கப்பார்ப்பார்.

சஜித் பிரேமதாச - Tobacco Unmasked Tamil 

ஓ.... சஜித்துக்கு, பின்னுக்கு ரணிலா?
அதை விட... மொட்டுக்கு எட்டு வீதமா... 
எல்லா புகழும் ஜொக்கா நாயகனுக்கே.... 😂

அரகல போராட்டத்தின் போது...  
சஜித்தின் வீட்டு வாசல் வரை பிரதமர்/ ஜனாதிபதி பதவி வந்து கதவை தட்டியது.
கிடைத்ததை வைத்து... காயை நகர்த்துவோம் என்றில்லாமல்...
அமுல் பேபி சஜித்... கோத்தா போனால்தான் வருவேன் என்று அடம்  பிடித்து விட்டார். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

இவர் தேப்பன மாதிரி இல்லை.

இவர்அதுக்கு சரிப்பட்டு வரார். 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/10/2023 at 18:55, goshan_che said:

நீங்கள் யார் அழைக்க? அடுத்த ஜனாதிபதி தேர்தலில் 46% வாக்காளர் அனுரவுக்கு பின்னால் என்கிறது எக்கானமி நெக்ஸ்ட் கருத்து கணிப்பு.

ரணிலை விட்டால் உங்களுக்கு வேறு கதி இல்லை. அனுர வந்தா முழு வண்டவாளமும் தண்டவாளம் ஏறி விட வாய்புண்டு. ரணில் போல் டீல் போடுவாரா என்பது சந்தேகமே.

May be an illustration of text

அனுரவுக்கு... அமெரிக்காவின் ஆசிர்வாதமும் உள்ளது போல் தெரிகின்றது.
பிறகென்ன... ஜாம், ஜாம் என்று... ஜனாதிபதியாக முடி சூட்டு விழா தான். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

May be an illustration of text

அனுரவுக்கு... அமெரிக்காவின் ஆசிர்வாதமும் உள்ளது போல் தெரிகின்றது.
பிறகென்ன... ஜாம், ஜாம் என்று... ஜனாதிபதியாக முடி சூட்டு விழா தான். 😂

கூப்பிட்டு கதைச்சிருக்கா ஜூலி அக்கா.

இனி சகோதரயா சொல்வதை, செய்வதை பொறுத்துத்தான், “ஜாம், ஜாம்” ஆ? அல்லது “பட்டர், பட்டர்” ஆ? “மார்மைட், மார்மைட்டா” என்பது தெரியவரும்🤣

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.