Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாக்குதலுக்குள்ளான காவலர்: `வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உள்நுழைவு அனுமதிச்சீட்டு வேண்டும்!’ - சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் சாலையிலுள்ள தனியார் தொழிற்சாலையில் வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இந்த நிலையில், தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் ஒன்று கூடினர். அதில் பலர் மது அருந்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், அந்தக் கூட்டத்தில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். தகவலறிந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவலர்கள் நேரில் சென்று மோதலைத் தடுக்க முயன்றனர்.

 
 
 
கைதுசெய்யப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள்
 
கைதுசெய்யப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள்

அப்போது வடமாநிலத் தொழிலாளர்கள் காவலர் ரகுபதியை கல், கட்டையைக்கொண்டு சரமாரியாகத் தாக்கினர். அவரின் இரு சக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கினர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த கூடுதல் காவல்துறை அதிகாரிகள், கூட்டத்தைக் கட்டுப்படுத்தி காயமடைந்த ரகுபதியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்யும் பணி நடந்துவருகிறது. மேலும், ரகுபதி மீது தாக்குதல் நடத்தியதாக ஐந்து வடமாநிலத் தொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

 

அதில், "சென்னை அம்பத்தூரில் வடமாநிலத் தொழிலாளர்களிடையே ஆயுதபூஜை அன்று மதுபோதையில் ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற தமிழ்நாடு காவலர்களை வடமாநிலத்தவர் கட்டையாலும் கற்களாலும் கடுமையாகத் தாக்கும் காணொளி பெரும் அதிர்ச்சியையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. கடந்தகாலத்தில் உலகின் இரண்டாவது தலைச்சிறந்த காவல்துறை என்ற பெயர்பெற்ற தமிழ்நாடு காவல்துறை இன்றைக்கு வடமாநிலத் தொழிலாளர்களால் விரட்டி விரட்டித் தாக்கப்படும் அளவுக்குத் தரம் குறைந்துபோயிருப்பது வெட்கக்கேடானது.

பேட்டியளிக்கும் சீமான்
 
பேட்டியளிக்கும் சீமான் தே.தீட்ஷித்

2022-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் இதே போன்று வடமாநில இளைஞர்கள் காவல் ஆய்வாளர் உட்பட ஏழு தமிழக காவல்துறையினரைக் கடுமையாகத் தாக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்கு கட்டுக்கடங்காத வன்முறையில் ஈடுபட்டபோதே அதை நான் கடுமையாகக் கண்டித்திருந்தேன். அப்போதே தமிழ்நாடு அரசு உரிய கடுமையான நடவடிக்கைகள் எடுத்திருந்தால் தற்போது அம்பத்தூரில் காவலர் ரகுபதி அவர்கள் வடமாநிலத் தொழிலாளர்களால் தாக்கப்பட்டு, ஆவடி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்குப் பரிதாபகரமான நிலை ஏற்பட்டிருக்காது.

 

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவரின் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அவற்றைத் தடுத்து நிறுத்தாமல், கைகட்டி வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு அரசின் அலட்சியப் போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பு தேடி தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவரின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்துவருகிறது. சென்னை, திருச்சி, மதுரை, திருப்பூர் போன்ற பெருநகரங்களில் அதிகரிக்கத் தொடங்கிய வடமாநிலத்தவரின் ஆதிக்கம் தற்போது தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களிலும் கட்டுக்கடங்காமல் அதிகரித்துவருகிறது.

வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் கொட்டகை
 
வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் கொட்டகை

இதன் காரணமாக மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதோடு, பொருளாதாரமும் பெருமளவு பறிபோகிறது. மேலும், அவ்வாறு வேலைக்கு வரும் வடமாநிலத்தவர்கள் அடுத்த சில மாதங்களிலேயே குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, இருப்பிடச் சான்று உள்ளிட்டவை பெற்று நிரந்தரமாக தமிழ்நாட்டில் குடியேறும் நிகழ்வும் அதிகரித்துவருகிறது. இதனால் தமிழர்கள் தங்கள் அதிகாரத்தை இழந்து ஏதிலிகளாக மாறும் நிலமாக தமிழ்நாடு மெல்ல மெல்ல மாறிவருகிறது.

 

அதுமட்டுமின்றி கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கொடுங்குற்றச் செயல்களில் வடமாநிலத்தவர்கள் ஈடுபடுவதும், கும்பல் மனப்பான்மையில் பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்தும் நிகழ்வுகளும் அண்மைக்காலமாக அதிகரித்துவருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் பொதுமக்கள் பெரும் அச்சத்துடனேயே வாழும் கொடுஞ்சூழலே நிலவுகிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, நாளுக்கு நாள் அதிகரித்த அத்தகைய குற்றச்செயல்களைத் தடுக்கத் தவறிய தமிழ்நாடு அரசின் அலட்சியப் போக்கே, தற்போது காவல்துறையினரையே கண்மூடித்தனமாகத் தாக்கும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைய முக்கியக் காரணமாகும்.

ஸ்டாலின்
 
ஸ்டாலின்

ஆகவே, தமிழ்நாடு அரசு இதற்கு மேலாவது விழித்துக்கொண்டு, தமிழ்நாட்டுக்குள் பணிக்கு வரும் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை, பணிபுரியும் நிறுவனம், காலம், தங்கும் இடம், அவர்களின் சொந்த முகவரி ஆகியவற்றைப் பதிவுசெய்யும் வகையில் உடனடியாக உள்நுழைவு அனுமதிச்சீட்டு (ILP - Inner Line Permit) முறையை நடைமுறைப்படுத்துவதற்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

 

மேலும் அம்பத்தூரில் தமிழக காவல்துறையினர்மீது தாக்குதல் நடத்திய வடமாநிலத்தவர்கள் அனைவரையும் கைதுசெய்து சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுத்தருவதோடு, அதிகரித்துவரும் வடமாநிலத்தவரின் குற்றச்செயல்களைக் கட்டுக்குள் கொண்டுவந்து தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தாக்குதலுக்குள்ளான காவலர்: `வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உள்நுழைவு அனுமதிச்சீட்டு வேண்டும்!’ - சீமான் | Seeman has requested the TNgovernment to provide Inner Line Permit to the northern workers - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோ பாத்தனான்.. கும்பலா அடிக்கிறானுவ… ஏதோ அவனுங்க ஊரில திரியிறமாதிரி கட்டையளோட திரியிறாங்கள்… சீமானுக்கு வோட் எண்ணிக்கையை கூட்டாம விடமாட்டனுவ போல.. பாவம் வாடர்ன்னா அடிப்போம் சங்ககாரரும் விடாம ஓடி ஓடி சீமானை கெட்ட ஆளா காட்ட இவனுங்க குறுக்கால வாறனுவள்🤣 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

விடிய விடிய சோதனை.. வடமாநிலத்தவர்கள் 28 பேரை கைது செய்த காவல்துறை | Ambattur Police Incident | PTT

 

  • கருத்துக்கள உறவுகள்
On 28/10/2023 at 02:07, ஏராளன் said:

விடிய விடிய சோதனை.. வடமாநிலத்தவர்கள் 28 பேரை கைது செய்த காவல்துறை | Ambattur Police Incident | PTT

 

YouTube பின்னூட்டங்களில் இவர்கள் எல்லோரும் bathroom ல் வழுக்கி விழவேண்டும் என இருக்கிறது. 

🤣

On 27/10/2023 at 11:06, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த வீடியோ பாத்தனான்.. கும்பலா அடிக்கிறானுவ… ஏதோ அவனுங்க ஊரில திரியிறமாதிரி கட்டையளோட திரியிறாங்கள்… சீமானுக்கு வோட் எண்ணிக்கையை கூட்டாம விடமாட்டனுவ போல.. பாவம் வாடர்ன்னா அடிப்போம் சங்ககாரரும் விடாம ஓடி ஓடி சீமானை கெட்ட ஆளா காட்ட இவனுங்க குறுக்கால வாறனுவள்🤣 

எல்ல இடத்திலும் நாதக எதிர் பாட்டிகளெல்லாம் கப்சிப் 🤫 கண்டியளோ...🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

`வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உள்நுழைவு அனுமதிச்சீட்டு வேண்டுமா..?' - விகடன் கருத்துக்கணிப்பு முடிவு!

`வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உள்நுழைவு அனுமதிச்சீட்டு வேண்டும்’ என்ற சீமானின் கோரிக்கை தொடர்பாக, விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

 

சென்னை அம்பத்தூரிலுள்ள தனியார் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் வடமாநிலத் தொழிலாளர்கள், அக்டோபர் 23-ம் தேதியன்று இரவு மதுபோதையில் கட்டை, இரும்புக்கம்பிகளுடன் தங்களுக்குள்ளே சண்டை போட்டுக்கொண்டனர். இதைத் தடுக்கச் சென்ற போலீஸாரையும் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கியிருக்கின்றனர்.

வடமாநிலத் தொழிலாளர்கள் - அம்பத்தூர் தொழிற்சாலை
 
வடமாநிலத் தொழிலாளர்கள் - அம்பத்தூர் தொழிற்சாலை

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்கு எதிராக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்தார்.

 

அதோடு, `தமிழகத்துக்கு வேலைக்கு வரும் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை, பணிபுரியும் நிறுவனம், காலம், தங்கும் இடம், அவர்களின் சொந்த முகவரி ஆகியவற்றைப் பதிவுசெய்யும் வகையில் உடனடியாக உள்நுழைவு அனுமதிச்சீட்டு (ILP - Inner Line Permit) முறையை நடைமுறைப்படுத்த தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும்' எனவும் சீமான் வலியுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து, சீமானின் வலியுறுத்தல் குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், `வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உள்நுழைவு அனுமதிச்சீட்டு வேண்டும் என்ற சீமானின் கோரிக்கை?' என்ற கேள்வி கொடுக்கப்பட்டு, `நியாயமானதே, தேவையில்லாதது, கருத்து இல்லை' என மூன்று விருப்பங்கள் தரப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, அதிகபட்சமாக, 62 சதவிகிதம் பேர் `வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உள்நுழைவு அனுமதிச்சீட்டு வேண்டும் என்ற சீமானின் கோரிக்கை நியாயமானதே' எனக் கருத்து தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, 35 சதவிகிதம் பேர் `சீமானின் கோரிக்கை தேவையில்லாதது' என்றும், 3 சதவிகிதம் பேர் `கருத்து இல்லை' என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
 
  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் இந்த கோரிக்கை மிக நியாயமானது.

ஆனால், வடகிழக்கு மாநிலங்கள் போன்ற சர்ச்சைகுரிய சர்வதேச எல்லை உள்ள பகுதியில், சர்வதேச எல்லைக்கும், நாட்டின் உள்ளக கோட்டுக்கும் (inner line) இடையே செல்ல, மட்டுமே இதுவரை இந்த பெர்மிட் பயன்பாட்டில் உள்ளது.

இந்தியாவின் அரசியல்சட்டம் இந்தியருக்கு, இந்தியாவுள் பூரண நடமாடும் சுதந்திரத்தை (Freedom of movement) கொடுக்கிறது.

இன்னர் லைன் பெர்மிட் என்பது அடிப்படையில் நாட்டின் பாதுகாப்பு, சர்வதேச நில எல்லை சம்ப்னதமானது.

மஹாராஸ்டிரா, கர்னாநடகா, டெல்லி, மேற்கு வங்கம், ஆந்திரா உட்பட எந்த வடகிழக்கு இந்தியாவுக்கு வெளியே உள்ள மாநிலத்திலும் இந்த நடைமுறை இல்லை.

அதேபோல் கஸ்மீரின் இதை ஒத்த காணி வாங்கும் “விசேட அந்தஸ்தை” இந்திய பாராளுமன்று சில வருடங்கள் முன் இல்லாமல் ஆக்கியது.

ஆகவே தமிழ்நாட்டில் இந்த இன்னர் லைன் பெர்மிட்டை கொண்டு வருவதில் பின்வரும் சிக்கல்கள் உண்டு.

1. கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற தமிழ் நாட்டை போன்ற சர்வதேச கடல் எல்லை மட்டும் உடைய நாடுகள் எதுவும் இதை கோராதவிடத்து, தமிழ் நாடு மட்டும் கோருவது, எது இங்கே இன்னர் லைன் என்ற கேள்வியையும், கூடவே இது நாட்டின் எல்லை பாதுகாப்புக்கு தேவையற்ற கோரிக்கை என்பதையும் காட்டி நிற்கும்.

2. அப்போ தமிழ் நாடு அரசு இப்படி கோருவது, தனியே வேற்று மாநிலத்தவரை தடுக்க என்றே கருதப் படும். அப்போது இதஈ எதிர்த்து வழக்கு போட்டால் - உச்ச நீதிமன்றம் இந்த பெர்மிட்டை தள்ளுபடியாக்கலாம்.

ஆனால் வழக்கு போடும் மட்டும் தமிழ்நாடு அரசு முயலாலாம்.

3. உண்மையில் பாரிய பிரச்சனை தமிழ் நாட்டில் இருந்து வெளியே போய் வேலை செய்வோரின் நலன் பற்றியதே. ஏனைய மாநிலங்களும் இதையே செய்தால் டெல்லி, பம்பாய், பெங்களூர், ஹைதரபாத், இன்னும் பல வெளிமாநிலங்களில் நல்ல வேலைகளில் இருக்கும் தமிழ் நாட்டவருக்கு ஆப்பாக முடியும்.

ஆகவே இந்திய ஒருமைப்பாடு, அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு இதை செய்வது சுலபம் அல்ல.

ஆனால் தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரித்து எடுத்து விட்டால் இது மிக சாத்தியாமாகும்.

உண்மையில் இந்த வட மாநில குடிவரவு விடயத்தை தமிழ் தேசிய அரசியல் பேசுவோர் இதயசுத்தியுடன் அணுகில், அவர்கள் தனித்தமிழ் நாடு கோரிக்கையைதான் கையில் எடுக்க வேண்டும், இந்திய ஒருமைப்பாடு எனும் மொக்காட்டுகுள் இருந்து கையை காட்டாமல்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che நாம் பேசும் தமிழ் தேசியம் என்பது தமிழ் நாட்டு முதல்வர் பதவியை பிடிக்கும் அரசியல் யுக்தி மட்டுமே.   தனித்தமிழ் நாட்டு கோரிக்கை வைத்து உள்ளே  போய் களி தின்ன,  இப்போது வரும் இளித்த வாய்  புலம்பெயர் தமிழர் வருமானத்தை இழக்க நாம் என்ன அவ்வளவு இளித்தவாயரா?  சும்மா போங்க சாரு. 😂 வந்துட்டார் எம்மை உள்ள அனுப்ப ஐடியாவோடு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.