Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, goshan_che said:

👆🏼👍

அழுதால்தான் அன்னையும் பால் தருவாள். மேற்கு நம்மை உதாசீனப்படுதாமல் நடக்க, நாம் சீனாவிடம் போய்விடுவோம் என்ற பயமாவது தேவை.

இல்லாவிடில் குருதீஸ் மக்கள் போல கிள்ளுகீரைதான் (இதை தவிர்க்கும் இன்னொரு வழி மேற்கில் தமிழ் டயஸ்போரா அதிகாரமையத்கை நெருங்குவது).

ஆகவே நாம் சீனாவை நெருங்குவது போல் போக்கு காட்டவாவது வேணும்.

இதை விக்கி, கூட்டமைப்பு செத்தாலும் செய்ய மாட்டார்கள். டிசைன் அப்படி.

ஆகவே இதை செய்ய வேண்டியவர்கள் - ஏலவே மேற்கு/இந்திய எதிர் நிலைப்பாட்டில் இருக்கும் கஜன் அணியினர்தான்.

அப்படி போடுங்க அரிவாளை!

1980 முதல் இந்தி டெல்லியை நம்பி கந்தறுந்தது போதும்.

இனி புது வழி தான் சரி வரும்!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Nathamuni said:

அப்படி போடுங்க அரிவாளை!

1980 முதல் இந்தி டெல்லியை நம்பி கந்தறுந்தது போதும்.

இனி புது வழி தான் சரி வரும்!!

இந்த அரிவாளை எப்பவோ போட்டாச்சு🤣.

ஆனால் ஒட்டு மொத்தமாக இந்தியாவை நாம் புறம்தள்ள விரும்பினாலும் முடியாது. ஏன் என்றால், 

நமக்கு தேவைப்படும் மேற்குக்கு எம்மை விட இந்தியா தேவை.

சீனாவோ ரஸ்யாவோ எம்மை ஒரு போதும் ஆதரிக்க போவதில்லை. ஆனால் நம்மில் ஒரு பகுதி அவர்களை நெருங்குவது, மறு பகுதி நம்மை உதாசீனப்படுத்துவதை குறைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
32 minutes ago, goshan_che said:

சீனாவோ ரஸ்யாவோ எம்மை ஒரு போதும் ஆதரிக்க போவதில்லை. ஆனால் நம்மில் ஒரு பகுதி அவர்களை நெருங்குவது, மறு பகுதி நம்மை உதாசீனப்படுத்துவதை குறைக்கும்.

கடைசியில் அண்ணரும் எங்கட நிலைப்பாட்டுக்கு சமீபமாக வரவேண்டி வந்திட்டுது. இந்த மாற்றம்.. தாயக அரசியல் கல்வி சமூக ஆர்வலர்களிடமும் வர வேண்டும். 

ஹிந்தியா மேற்குலகம் என்று ஒற்றையடி பாதையில் அல்லது சரணாகதி அரசியல் என்ற இன்னொரு ஒற்றையடிப் பாதையில் பயணித்து எதையுமே சாதிக்க முடியாது.

இயல்பாகக் கிடைக்க வேண்டிய பதவிகளுக்கும்.. வெற்றிட நிரப்பல்களுக்கும் தாடிக்காரக் குத்தியனின் வாயைப் பார்த்துக் கொண்டிருக்கிற அங்கலாய் நிலை தான் ஊரில் வளர்ந்திருக்கே தவிர.. வேறு எந்த மாற்றமும் உருப்படியாக இல்லை.

எனவே தமிழர்களின் உள்ளூர் அரசியல்.. சர்வதேச.. பிராந்திய தேவைகளுக்கு ஏற்ப ஒரு புள்ளியில் இணையக் கூடிய சக்திகளின் உதவியோடு வெவ்வேறு பாதைகளில் பயணிக்க வேண்டியது கட்டாயம். அதில் சீன.. ரஷ்சிய மற்றும் இலத்தீன் அமெரிக்க.. மற்றும் மத்திய கிழக்கு உறவுகள் தொடர்பில் தனிக்கவனம் செலுத்துவது மிக மிக அவசியம். 

சர்வதேச ராஜீக உறவுகள் தொடர்பில்.. புலிகள் மேற்குலகையும் ஜப்பானையும் நம்பி இருந்த அளவுக்கு மற்றைய உலக நாடுகளோடு தொடர்புகளை.. தமது நிலைப்பாட்டு விளக்கங்களை.. தேவைகளை பகிர்ந்து கொள்ளாததும்.. அவர்களின் பேரழிவுக்கும்.. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் மெளனக்கப்பட வேண்டிய சூழலுக்கும் கொண்டு வந்து நிறுத்தியது.

இதில் சம் சும் மாவை கும்பல் செய்த துரோகம்.. என்பது சிறிய பங்களிப்புத் தான். அங்காலே.. கருணாநிதியும் திமுக செய்த துரோகமும்.. ஹிந்தியா செய்த துரோகமும் மன்னிக்கப்படக் கூடியவை அல்ல. 

Edited by nedukkalapoovan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nedukkalapoovan said:

எனவே தமிழர்களின் உள்ளூர் அரசியல்.. சர்வதேச.. பிராந்திய தேவைகளுக்கு ஏற்ப ஒரு புள்ளியில் இணையக் கூடிய சக்திகளின் உதவியோடு வெவ்வேறு பாதைகளில் பயணிக்க வேண்டியது கட்டாயம். அதில் சீன.. ரஷ்சிய மற்றும் இலத்தீன் அமெரிக்க.. மற்றும் மத்திய கிழக்கு உறவுகள் தொடர்பில் தனிக்கவனம் செலுத்துவது மிக மிக அவசியம். 

இங்கு கருத்துக்களைப் பகிர்ந்தவர்கள் பலரும் சீனாவோடு ஒரு தொடர்பை தமிழர்கள் வைத்தீரக்க வேண்டும் கருத்தை ஆதரிக்கிறார்கள். ஆனால் நம் அரசியல்வாதிகள் இந்த விடயத்தை சாதகமாக சிந்திப்பார்களா?

மிக விரைவில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் சீனப் பிரதிநிதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் பேவதாக செய்திகள் வருவது நல்லதல்ல. குறிப்பாக யாழ்பல்கலைக்கழக சமூகமும் மீனவ சங்கங்களும் என்று செய்திகள் வருகின்றன. மீனவ சமூகம் எதிர்ப்புத் தெரிவிப்பது கடலட்டை வளர்ப்ப சம்பந்தமானது என்பதில் நியாயமானதாக இருக்கலாம் . ஆனால் யாழ்பல்கலைக்கழக சமூகம் ராஜதந்திர ரீதியில் இதனை அணுக வேண்டும். மென்மைப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். அவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்துவது நல்லது

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/11/2023 at 22:16, ஈழப்பிரியன் said:

அமெரிக்காவும், இந்தியாவும் தன்னை ஏமாற்றி விட்டது சம்பந்தன் வெளிப்படையாக கூறினார் என மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான நிக்சன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தன் கண்ணை மூடுறதுக்குள்ளை எல்லா உண்மைகளையும் ஒரு பத்திரிகை நிருபர்கள் மாநாட்டை கூட்டி  வெளியிலை சொல்லீட்டு போனால் போற வழிக்கு புண்ணியமாய் போகும்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, nedukkalapoovan said:

கடைசியில் அண்ணரும் எங்கட நிலைப்பாட்டுக்கு சமீபமாக வரவேண்டி வந்திட்டுது. இந்த மாற்றம்.. தாயக அரசியல் கல்வி சமூக ஆர்வலர்களிடமும் வர வேண்டும். 

கடைசியில் அல்ல - என்றுமே என் நிலைப்பாடு இதுவாகவே இருந்தது.

விடுதலை புலிகள் கூட தனியே நோர்வேயோடு மட்டும் பேசாமால் நேரடியாக அமேரிக்காவில் பலம் உள்ள தரப்புகள், குடும்பங்களை அணுகி இருக்கலாம் எனவும், சீனாவை இந்தியாவுக்காக முற்றாக உதாசீனம் செய்தது இந்தியா எம்மை கிள்ளுகீரையாக நடத்துவதை இலகுவாக்கியது எனவும் பத்து வருடம் முதலே யாழில் எழுதி இருக்கிறேன்.

நீங்கள் எழுதிய மிச்சத்தில் மாறுபாடில்லை.

1 hour ago, புலவர் said:

இங்கு கருத்துக்களைப் பகிர்ந்தவர்கள் பலரும் சீனாவோடு ஒரு தொடர்பை தமிழர்கள் வைத்தீரக்க வேண்டும் கருத்தை ஆதரிக்கிறார்கள். ஆனால் நம் அரசியல்வாதிகள் இந்த விடயத்தை சாதகமாக சிந்திப்பார்களா?

மிக விரைவில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் சீனப் பிரதிநிதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் பேவதாக செய்திகள் வருவது நல்லதல்ல. குறிப்பாக யாழ்பல்கலைக்கழக சமூகமும் மீனவ சங்கங்களும் என்று செய்திகள் வருகின்றன. மீனவ சமூகம் எதிர்ப்புத் தெரிவிப்பது கடலட்டை வளர்ப்ப சம்பந்தமானது என்பதில் நியாயமானதாக இருக்கலாம் . ஆனால் யாழ்பல்கலைக்கழக சமூகம் ராஜதந்திர ரீதியில் இதனை அணுக வேண்டும். மென்மைப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். அவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்துவது நல்லது

இப்போ மட்டும் அல்ல - போனதடவை வந்து யாழில் நிண்டு இந்தியாவுக்கு தூரம் கேட்ட வருகையின் போது கூட - கிட்டதட்ட ஒட்டு மொத்த கருத்தாளரும் இதையே எழுதினார்கள்.

ஆனால் சகல தமிழ் எம்பிகளும் ஒழித்து ஓடி விட்டார்கள்.

1 hour ago, புலவர் said:

அவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்துவது நல்லது

இதை புலம்பெயர் தமிழரும் முயற்சிக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
23 hours ago, goshan_che said:

விடுதலை புலிகள் கூட தனியே நோர்வேயோடு மட்டும் பேசாமால் நேரடியாக அமேரிக்காவில் பலம் உள்ள தரப்புகள், குடும்பங்களை அணுகி இருக்கலாம் எனவும், சீனாவை இந்தியாவுக்காக முற்றாக உதாசீனம் செய்தது இந்தியா எம்மை கிள்ளுகீரையாக நடத்துவதை இலகுவாக்கியது எனவும் பத்து வருடம் முதலே யாழில் எழுதி இருக்கிறேன்.

இவ்வளவு கட்டுக்கோப்பாக,பலரும் மெச்சும் வண்ணம் உள்ளக கட்டமைப்புகளை உருவாக்கி ஒரு தனி நாடு போல் வாழ்ந்து காட்டியவர்கள்!!!!!!!
ஒரு சில நாடுகள் பணிந்து வந்து இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள்.
இலங்கை என்றால் பேசு பொருளாக இவர்கள் மட்டுமே  இருந்தவர்கள்.
உள்நாட்டு வெளிநாட்டு ஆலோசனைகளுடன்  கட்டமைப்பு நிலைய முன்னெடுத்தவர்கள்.
இப்படியிருந்தும் ஏன் இவர்கள் தம்மை சுதாகரித்து அடுத்தகட்ட முடிவை எடுக்காமல் விட்டார்கள்??????

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.
  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, குமாரசாமி said:

இவ்வளவு கட்டுக்கோப்பாக,பலரும் மெச்சும் வண்ணம் உள்ளக கட்டமைப்புகளை உருவாக்கி ஒரு தனி நாடு போல் வாழ்ந்து காட்டியவர்கள்!!!!!!!
ஒரு சில நாடுகள் பணிந்து வந்து இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள்.
இலங்கை என்றால் பேசு பொருளாக இவர்கள் மட்டுமே  இருந்தவர்கள்.
உள்நாட்டு வெளிநாட்டு ஆலோசனைகளுடன்  கட்டமைப்பு நிலைய முன்னெடுத்தவர்கள்.
இப்படியிருந்தும் ஏன் இவர்கள் தம்மை சுதாகரித்து அடுத்தகட்ட முடிவை எடுக்காமல் விட்டார்கள்??????

தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, goshan_che said:

தெரியவில்லை.

உங்களுக்கு தெரியும். பதில் சொல்ல விரும்பவில்லை என நான் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
50 minutes ago, குமாரசாமி said:

உங்களுக்கு தெரியும். பதில் சொல்ல விரும்பவில்லை என நான் நினைக்கின்றேன்.

சொன்னாலும் என்ன? இதை ஏன் பிபிசி, சி என் என் நில் எழுதவில்லை எனத்தானே சொல்லப்போறியள்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, goshan_che said:

சொன்னாலும் என்ன? இதை ஏன் பிபிசி, சி என் என் நில் எழுதவில்லை எனத்தானே சொல்லப்போறியள்🤣

பற்றரி சார்ச் இறங்கி விட்டதால் விடை பெறுகின்றேன் 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

பற்றரி சார்ச் இறங்கி விட்டதால் விடை பெறுகின்றேன் 😂

🤣 சரி.

லிதியம் பட்டறி இப்படித்தான். வயசு போக, போக சார்ஜ் சட்டென்று குறைந்து விடும்.

நல்ல சார்ஜரை பாவிக்கவும்🤣.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.