Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அற்றைத் திங்களும் அவ் வெண்நிலவும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அற்றைத் திங்களும் அவ் வெண்நிலவும்

வ.ஐ.ச.ஜெயபாலன்

இன்பம் துய்ததுடன்

முடிந்து விடுகிறதா எல்லாம்.

பிடித்த புத்தகத்தில்

இரசித்த பக்கமென

தட்டிச் செல்ல முடியவில்லையடி.

முட்டைகள் மீது

பின்காலால் மணல்மூடி

திரும்பியும் பாராத

ஆமைப் பெண்ணாய்ச் சென்றாய்.

மாயை போலாயிற்று எல்லாம்.

இன்பம் இருவரும் நாடியதுதான்.

நட்பு நான் மட்டுமே தேடியதோ ?

முதற் கண் பொழுதில்

முதுகு சில்லிட

ஒரு கணம் தரித்தாய்.

உன் இதயத்துள் இருந்து

அடி வயிறு அதிர இறங்கிய

இன்பச் சூனியம் மறைக்க

சினந்து முகம் திருப்பினாய்.

நானும் கள்வன் என்பதறியாது.

அடுத்த நாள்

ஆயிரம் ஒத்திகையோடு வந்து

மணி கேட்டேனே.

ஏழனம் தெறித்தது

உன் பார்வையில் எனினும்

கனத்த உன் முலைகளும்

இன்ப வலியில் குனித்த புருவமும்

செப்பிய காமமும்

பேசிய மொழிகளும் வேறு.

சொல்லி வைத்தாற்போல்

இருவர் கண்ணிலும்

வியர்த்தது வென்நீர்.

நெடுங் காலமாயிற்று.

நீயும் உன் முதலிரவில்

எனை நினைத்தாயா.

இரவுகள் என்னடி இரவுகள்.

கண் இமைத்தலுட் கழிந்த

இரண்டு புயல் பாம்புகளின்

மூன்று பொழுதுகள்.

முன்றாம் காலை விடிகையில்.

நம் சாதியும் சமயமும்

வேறு வேறெனக் கண்டுபிடித்தாய்.

தெரிந்ததாக தெரியேல் என்றது

நான்காம் பகல்

கருத்தரங்கு முடிந்து பிரிகையில்.

தெருவில் சிரிக்காதே

கடிதம் எழுதாதே

நண்பரோடு இதுபற்றி

கங்கை கொண்ட சோழனாய்

பெருமை பேசிவிடாதே என்றாய்

ஆண்கள் பற்றி இத்தனை தெளிவா.

அதன் பின் உனக்கு

நானும் யாரோ நீயும் யாரோ.

எப்படி முடிந்ததடி.

காலையில்

அந்தக் குண்டு வீச்சுச்

சேதி படித்தேன்.

மதியம் உனது

அகால மரணம் அறிந்ததிதில்

சிதறினேன்.

மாலை முழுவதும்

வெறுமையில் உழன்றேன்.

இரவு மனைவி தலை வலியா என

அணைந்த போது

ஒரு வழியாக தேறுதலடைந்தேன்.

சேர்ந்து இன்பத்தை(மட்டும்) அனுபவித்து விட்டு சாதி மதம் சாட்டுச்சொல்லி பிரிந்தவள்..... இறந்தபோதும் இந்தமனம் பரிதவித்திருக்கின்றது.... ஒவ்வொரு வரிகளிலும் உணர்வுகள் இளையோடியுள்ளன .....

அருமை தொடருங்கள்.....

மிகவும் நன்றாக இருந்தது ஒரு நிகழ்வை கவிதையாக சொல்லிய விதம் அதுவும் உங்கள் நடைபாணியில் மிகவும் நன்றாக இருந்தது :) ............இறுதியாக குறிபிட்ட இந்த வரிகள் கவிதையை மேலும் மெருகூட்டுகிறது என்றே சொல்லலாம்..........என்னை மிகவும் கவர்ந்த அந்த வரிகள்........இறுதியில் மனைவி தான் துணை அதை அறியாம பழைய கனவில் மூழ்கி பலர் வாழ்கையை தொலைகின்றனர் :D .........எதையுமே மனைவியுடன் பகிர்ந்து கொள்வது சிறந்தது,கவிதைக்கு சம்பந்தம் இல்லாம கதைத்து விட்டேன் மிகவும் நல்லதொரு கவிதை வாழ்த்துகள்!! :(

மதியம் உனது

அகால மரணம் அறிந்ததிதில்

சிதறினேன்.

மாலை முழுவதும்

வெறுமையில் உழன்றேன்.

இரவு மனைவி தலை வலியா என

அணைந்த போது

ஒரு வழியாக தேறுதலடைந்தேன்.

னம் தெறித்தது

உன் பார்வையில் எனினும்

கனத்த உன் முலைகளும்

இன்ப வலியில் குனித்த புருவமும்

செப்பிய காமமும்

பேசிய மொழிகளும் வேறு.

சொல்லி வைத்தாற்போல்

இருவர் கண்ணிலும்

வியர்த்தது வென்நீர்.

நெடுங் காலமாயிற்று.

நீயும் உன் முதலிரவில்

எனை நினைத்தாயா.

ஆகா! :lol:

சினந்து முகம் திருப்பினாய்.

நானும் கள்வன் என்பதறியாது.

கண் இமைத்தலுட் கழிந்த

இரண்டு புயல் பாம்புகளின்

மூன்று பொழுதுகள்.

இந்த வரிகள்தான் விளங்கேல்ல எனக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இரவு மனைவி தலை வலியா என

அணைந்த போது

ஒரு வழியாக தேறுதலடைந்தேன்.

நல்ல கவிதை.

( எவ்வளவு இடி இடித்தாலும் இடிதாங்கிபோல் மனைவி என்றொரு ஜீவன் கூடவே இருக்கிறது. கோயில் மேளம்மாதிரி.)

கோயில் மேளம்: வேறு கச்சேரிகள் இல்லாவிட்டால் அன்று கச்சேரி கோயில் மேளம்தான்.

சினந்து முகம் திருப்பினாய்.

நானும் கள்வன் என்பதறியாது.

(கூடலின் பின்னர் தானே .....அந்தப் பெண்... சாதி... சமயம் என குறை பிடித்து விலகுகின்றாள் ..இருந்தாலும் இன்பம் அனுபவித்தாச்சு போனால் போ என்பதனைக்காட்ட தானும் கள்வனெனக் கூறியிருக்கலாம்....கள்ளக் காதல்தானே அதனால்தான்! இப்போது மணம் முடித்து மனைவியுடன் இருக்கின்றாரல்லவா... )

கண் இமைத்தலுட் கழிந்த

இரண்டு புயல் பாம்புகளின்

மூன்று பொழுதுகள்.

(மூன்று நாட்களில் அவர்களது கள்ளக்காதல் மிக விரைவாக முடிந்துவிட்டது! ....

பாம்புகள் இரண்டு கலவி கொள்ளும் போது ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து கயிறு மாதிரி குறிப்பிட்ட வினாடிகளில் முடித்துக்கொண்டு இரண்டும் ஒவ்வொருதிசையில் மாயமாய் மறைந்துவிடும் இதை காண்பது மிகவும் அரிது ஊரில் உள்ளபோது நான் ஒருமுறை பார்த்திருக்கேன்)

இந்த வரிகள்தான் விளங்கேல்ல எனக்கு.

இது எனது புரிதல் பின் வருபவர்கள் வேறு விதமான கோணத்திலும் நோக்கலாம்... கவிதையில் நாம கன்னுக்குட்டி கவிஞ்ஞர் வந்து சொல்லும் போதுதான் சரியாக புரியமுடியும் எமது எண்ணச் சிறகுகளை இன்னும் உயர உயர பறக்க வைக்க முடியும்.... வந்து சொல்வாரா...?? B)

நன்றி கௌரிபாலன்..நான் புரிந்துகொண்ட மாதிரித்தான் நீங்களும் புரிந்துகொண்டிருக்கிறீர்கள

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் விவாதங்கள் மன நிறைவைத் தருகின்றது. எனக்கும் அவசியமான Feed Back கிடைக்கிறது. இததற்க்காக யாழ் இணையத்துக்கும் எனது நன்றிகள். கொரிபாலன், யமுனா, இளைஞன், சினேகிதி, எல்லோருக்கும் எனது அன்பும் நன்றிகளும். ஆணையும் பெண்ணையும் ஒப்ப உணர்ந்து நோக்குகிற பக்குவம் நமக்கு வாய்க்காதமைக்கு ஒழுக்கம் பற்றிய ஒருதலைப் பட்சமான அறக்கோட்பாடுகளும் காரணம். தனது தனிப்பட்ட உறவுகளை மனம்போல சுதந்திரமாக தெரிவுசெய்யவும் அனுபவிக்கவும் வேண்டாதபோது நிராகரிக்கவுமான சமூக அங்கீகாரம் ஒருதலைப் பட்சமானதாக இருப்பது அநீதியல்லவா. உறவுகள் வாழ்க்கை ஒப்பந்தம்தானே. ஒப்பந்தத்துக்கு இரண்டு பக்கபக்க சமத்துவமும் பொறுப்பும் காலமும் இருக்கும். நட்பும் காதலும் மட்டுமே வியாபாரதில் இருந்து ஆண் பெண் உறவுகளை மேம்படுத்துகிறது. மற்றப் படி ஆதரவும் இன்பங்களும் கூட்டு வியாபாரதின் லாபப் பங்கு அல்லது சுரண்டல்தானே. ஒருதலைப் பட்சமான அறக் கோட்பாடுகளை எப்பவும் உடைக்கவே விரும்புகிறேன்.

சிநேகிதி... திருமணத்துக்கு முன்னான ஒரு காதல் பற்றியதானதுதான் கவிதை. அதில் சித்தரிக்கப்படும் ஆண், பெண் கதாபாத்திரங்கள் (காதலர்கள்) கூடல் செய்வது பற்றி கவிதையில் சொல்லப்படவில்லை என்றே நினைக்கிறேன். பாம்பின் கலவியைக் கையாண்டது கூட விரைவாகச் சென்ற காலத்தைக் குறிப்பிடவே.

இதுபற்றி ஜெயபாலன் அண்ணா தான் தெளிவாக்கவேண்டும். :huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளைஞனுக்கு, புராண ங்களில் இருந்து நவீன உளையல் வரைக்கும் பாம்பு ஆண் மற்றும் கலவியின் குறியீடு என்றுதான் கருதுகிறேன். உளவியல் கற்றவர்களும் கருத்துச் சொல்லலாம். எல்லா உறவாடல்களிலும் ஜனநாயகமும் நட்பும் மட்டுமே அவை மட்டுமே பெரிய மகத்துவமானவை.

நன்றி அண்ணா.

கண் இமைத்தலுட் கழிந்த

இரண்டு புயல் பாம்புகளின்

மூன்று பொழுதுகள்.

இந்த வரிகளில் எதனை குறியீடு செய்கிறீர்கள்? வேகமாகச் சென்ற காலத்தையா? அல்லது காதலர்கள் கலவி செய்ததையா? :huh:

ஏளனம் தெறித்தது

உன் பார்வையில் எனினும்

கனத்த உன் முலைகளும்

இன்ப வலியில் குனித்த புருவமும்

செப்பிய காமமும்

பேசிய மொழிகளும் வேறு.

சொல்லி வைத்தாற்போல்

இருவர் கண்ணிலும்

வியர்த்தது வென்நீர்.

இந்த வரிகளில் சந்திப்பு பற்றி மட்டும் குறிப்பிடப்படுகிறதா?

அல்லது இதிலும் உடல் உறவு பற்றி குறிப்பிடப்படுகிறதா?

எனக்கு அந்த (முதல்) சந்திப்பின் போது தோன்றிய உணர்ச்சிப் பிளம்பு

பற்றி மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது போலவே தோன்றுகிறது. :lol:

நான் நினைக்கிறன் நேரம் கேட்ட போது கோபப்பட்ட பெண் பின்னர் கலவியின்போது பேசிய நடந்துகொண்ட விதம் முதல் கோபப்பட்டதற்று அப்படியே எதிர்மாறாக இருந்ததென்று குறிப்பிடுகின்றார் ..சரியா கவிஞர்??????????

இரவுகள் என்னடி இரவுகள். இதையும் சேர்த்துத்தான் வாசிக்க வேண்டும்

கண் இமைத்தலுட் கழிந்த

இரண்டு புயல் பாம்புகளின்

மூன்று பொழுதுகள்.

இதில் இரண்டுபாம்புகள் எனப்படுவது அந்த ஆணும் முன்னைய காதலியும் ....

அதாவது மிகக் குறுகிய இடைவெளிகளிற்குள் முற்றுப் பெற்ற உறவென்றாலும் அந்த குறுகிய கால இடைவெளிக்குள் அனுபவித்த இன்பம் பேல மற்ற இரவுகள் இல்லை என்பதாகும் .... இதில் இன்றைய இருப்பிலும் அன்றைய பொழுதின் ஆழத்தினை என்னால் உணரமுடிகின்றது இது எனது நோக்கு :huh:

ஏழனம் தெறித்தது

உன் பார்வையில் எனினும்

கனத்த உன் முலைகளும்

இன்ப வலியில் குனித்த புருவமும்

செப்பிய காமமும்

பேசிய மொழிகளும் வேறு.

சொல்லி வைத்தாற்போல்

இருவர் கண்ணிலும்

வியர்த்தது வென்நீர்.

நெடுங் காலமாயிற்று.

நீயும் உன் முதலிரவில்

எனை நினைத்தாயா.

சந்திப்பின்போது வேண்டாமென்று ஒதுக்கியவன் திரும்பவும் வந்தானே என்ற ஏழனப் பார்வை இருந்தாலும் முன்னைய பொழுதுகளை மறக்க முடியுமா...? அதனால் அது இருவர் மனதிலும் நெருட அவர்களையும் அறியாமலே கண்ணீர் வர மானசீகமாக இன்றும் அன்றைய பொழுதை நினைவு கூர்வதாக அமைகின்றதென நினைக்கின்றேன்.... :huh: நீயும் உன் முதலிரவில் எனை நினைத்தாயா எனும் வரிகள் அவர்களின் அன்றைய கூடலை நினைவுகூறுவதாகவும் அமையலாம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி தோழ தோழியரே, நல்ல கவிதை முடிக்கப் படாத கவிதை. நல்ல ரசனை அதனை முடித்து வைப்பதற்க்கான வாசகரின் முயற்சியே. இப்படித்தான் நான் கருதுகிறேன். உங்கள் முயற்ச்சி கவிதையை மேலும் அழகாக எழுதி எழுதி மேற் செல்கிறது.

நன்றி ஜெயபாலன் அண்ணா நிறைய அர்த்தங்களை ஒவ்வொரு சொற்களிற்குள்ளும் பொதித்து வைத்திருக்கின்றீங்க ..... வாசித்தவுடன் புரிபவைமட்டும் கவிதைகள் அல்ல அது மற்றையவரின் சிந்தனையையும் தூண்ட வேண்டும் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கு

தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள் உங்கள் கவிதைகளை வாசிக்கும் ஆவலில் உள்ளோம்...!

உண்மைதான் கெளரிபாலன்... ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் புதிய வடிவம் தோன்றுகிறது. முதலில் காணாத அர்த்தங்கள் கிடைக்கிறது. இதான் கவிதையின் சிறப்பே.

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் கெளரிபாலன்... ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் புதிய வடிவம் தோன்றுகிறது. முதலில் காணாத அர்த்தங்கள் கிடைக்கிறது. இதான் கவிதையின் சிறப்பே.

இளைஞனுக்கும் கெள்ரிபாலனுக்கும் எனது அன்பும் நன்றிகளும்

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மீட்டிப்பார்க்கிற தூண்டுகிற கவிதை நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்

எந்தையும் உடையோம் எம்குன்றும் பிறர் கொள்ளார்

இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்

வென்று எறிமுரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே..

புறநானூறு பாடல் 112.

பாடியவர்: கபிலர்.

கவிஞர் ஜெயபாலின் கவிதையின் தலைப்பு இங்கிருந்தே பெறப்பட்டது.

இந்தக் கவிதை கூறும் கதையை புரிந்தால் சோகம் எவ்வகையானது என்பது புரியும்.

சங்ககால பாரி மன்னனின் மகளிர் அங்கவை, சங்கவை என்பவர்களின் துயரம்தான் இப்பாடலில் வெளிப்படுவது.

ஆனால் ஜெயபாலனின் கவிதை இதற்கு நேர் எதிராக செயற்படுவது. அதாவது பாலியல் ஈர்ப்பின் இடைவெளியை பேசுவது.

புறநானூற்று கவிதை பாரிமகளிர் தங்கள் குன்றையும் தந்தையையும் இழந்த சோகத்தை பாடுவது.

கவிதையின் தளங்கள் வேறுவேறானவை.

இப்படித்தான் கவிதையில் படிமங்கள் உருவாகின்றன.

இலக்கியம் படிப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்

எந்தையும் உடையோம் எம்குன்றும் பிறர் கொள்ளார்

இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்

வென்று எறிமுரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே..

புறநானூறு பாடல் 112.

பாடியவர்: கபிலர்.

சாஸ்திரிக்கும் தி. ஏப்பிரகாமுக்கும் நன்றிகள். சங்கத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் பாரி மகளிரின் பாடலும் அடங்கும். இரண்டு கவிதைகளுமே அற்றைத் திங்கள் வாழ்வையும் இற்ற்றைத் திங்கள் இழப்பையும் பேசுகிற கவிதைகள்தானே ஏப்பிரகாம்,

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.