Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட இலங்கை அணி வீரர்கள்

ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அனைத்து இலங்கை அணி வீரர்களும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு நேற்று ( 10) முதல் தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையிலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் சபை கூட்டம் 

சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையில் அஹமதாபாத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில் சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் டின் தலைவராக சம்மி சில்வாவையே, அங்கீகரித்துள்ளதாக ‘கிரிக் இன்ஃபோ’ செய்தி வெளியிட்டுள்ளது.

 

ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட இலங்கை அணி வீரர்கள் | All Sri Lankan Players Removed From Ipl Auction

அத்துடன் நேற்று இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டத்தில் சம்மி சில்வா கலந்து கொண்டதாகவும், ‘கிரிக் இன்ஃபோ’ குறிப்பிட்டுள்ளது. 

https://tamilwin.com/article/all-sri-lankan-players-removed-from-ipl-auction-1699698789

 

  • Replies 257
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, ஏராளன் said:

ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட இலங்கை அணி வீரர்கள்

ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அனைத்து இலங்கை அணி வீரர்களும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு நேற்று ( 10) முதல் தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையிலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் சபை கூட்டம் 

சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையில் அஹமதாபாத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில் சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் டின் தலைவராக சம்மி சில்வாவையே, அங்கீகரித்துள்ளதாக ‘கிரிக் இன்ஃபோ’ செய்தி வெளியிட்டுள்ளது.

 

ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட இலங்கை அணி வீரர்கள் | All Sri Lankan Players Removed From Ipl Auction

அத்துடன் நேற்று இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டத்தில் சம்மி சில்வா கலந்து கொண்டதாகவும், ‘கிரிக் இன்ஃபோ’ குறிப்பிட்டுள்ளது. 

https://tamilwin.com/article/all-sri-lankan-players-removed-from-ipl-auction-1699698789

 

ப‌ண‌ ஆசையால் தான் ப‌ல‌ வீர‌ர்க‌ள் தாய் நாட்டுக்கு விளையாடாம‌ சீக்கிர‌ம் ஓய்வை அறிவிக்கிற‌வை

 

இல‌ங்கை வீர‌ர்க‌ள் ப‌ல‌ருக்கும் ஜ‌பிஎல்ல‌ விளையாடி ப‌ண‌ ம‌ழையில் மித‌க்க‌னும் என்ர‌ ஆசை

 

இல‌ங்கை வீர‌ர்க‌ளை ஏல‌த்தில் எடுத்தால் ஏல‌த்தில் எடுத்த‌ அணிக்கு தான் பாதிப்பு

 

நான் பார்த்த‌ ம‌ட்டில் ரெஸ் விளையாட்டில் விளையாடின‌ இள‌ம் வீர‌ர்க‌ள் சில‌ர் 

பின்னைய‌ கால‌ங்க‌ளில் த‌னிய‌ 20ஓவ‌ர் ம‌ற்றும் 50ஓவ‌ர் ம‌ச்சில் தான் விளையாடின‌ம்............ஏற்க‌ன‌வே ஒப்ப‌ந்த‌த்தில் இருந்த‌ சில‌ வீர‌ர்க‌ளை த‌விற‌ 

இல‌ங்கை அணியில் இருந்து புது புக‌ங்க‌ளை ஜ‌பிஎல் ஏல‌த்தில் இனி ஒரு போதும் எடுக்க‌ மாட்டின‌ம்

 

இந்த‌ த‌டை நீங்கினாலும் அதே நிலை தான்..............இல‌ங்கை வீர‌ர்க‌ளை விட‌ அப்கானிஸ்தான் அணியில் திற‌மையான‌ ஒரு சில‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் அவ‌ர்க‌ளுக்கு வாய்ப்பு கொடுக்க‌லாம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
LIVE
1st Semi-Final (D/N), Wankhede, November 15, 2023, ICC Cricket World Cup
 
397/4
(10.4/50 ov, T:398) 50/2

New Zealand need 348 runs from 39.2 overs.

நியூஸிலாந்தும் கைவிட்டிட்டான், இனி ஆஸ்திரேலியாதான் ஒரே ஒரு நம்பிக்கை!😭

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Eppothum Thamizhan said:
LIVE
1st Semi-Final (D/N), Wankhede, November 15, 2023, ICC Cricket World Cup
 
397/4
(10.4/50 ov, T:398) 50/2

New Zealand need 348 runs from 39.2 overs.

நியூஸிலாந்தும் கைவிட்டிட்டான், இனி ஆஸ்திரேலியாதான் ஒரே ஒரு நம்பிக்கை!😭

 

ஓவ‌ருக்கு 10ர‌ன்ஸ் ப‌டி அடிக்க‌னும் ந‌ண்பா

 

21ஓவ‌ருக்கி 210ர‌ன்ஸ் அடிக்க‌னும்

ஆனால் சிர‌ம‌ம் விக்கேட்ட‌ இழ‌ந்தால் அடுத்து வ‌ருப‌வ‌ர் அடிச்சு ஆட‌ நேர‌ம் எடுக்கும் பிற‌க்கு ஓவ‌ருக்கு 12ர‌ன்ஸ் ப‌டி அடிக்க‌னும்...........நியுசிலாந் க‌ப்ட‌ன் ம‌ற்றும் மிட்சேல் அவுட் ஆகாம‌ அதிர‌டியா விளையாடின‌ம்

Posted
1 hour ago, Eppothum Thamizhan said:
LIVE
1st Semi-Final (D/N), Wankhede, November 15, 2023, ICC Cricket World Cup
 
397/4
(10.4/50 ov, T:398) 50/2

New Zealand need 348 runs from 39.2 overs.

நியூஸிலாந்தும் கைவிட்டிட்டான், இனி ஆஸ்திரேலியாதான் ஒரே ஒரு நம்பிக்கை!😭

 

 

1 minute ago, பையன்26 said:

ஓவ‌ருக்கு 10ர‌ன்ஸ் ப‌டி அடிக்க‌னும் ந‌ண்பா

 

21ஓவ‌ருக்கி 210ர‌ன்ஸ் அடிக்க‌னும்

ஆனால் சிர‌ம‌ம் விக்கேட்ட‌ இழ‌ந்தால் அடுத்து வ‌ருப‌வ‌ர் அடிச்சு ஆட‌ நேர‌ம் எடுக்கும் பிற‌க்கு ஓவ‌ருக்கு 12ர‌ன்ஸ் ப‌டி அடிக்க‌னும்...........நியுசிலாந் க‌ப்ட‌ன் ம‌ற்றும் மிட்சேல் அவுட் ஆகாம‌ அதிர‌டியா விளையாடின‌ம்

இது ஐ.பி.எல் 2024 திரி அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நிழலி said:

 

இது ஐ.பி.எல் 2024 திரி அல்லவா?

கிரிக்கேட் ப‌ற்றிய‌ மூன்று திரி தொட‌ர்ந்து இருப்ப‌தால் மாறி
எழுதி விட்டோம் முடிந்தால் உல‌க‌ கோப்பை திரிக்கு மாத்தி விடுங்கோ 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ந‌ன்றி ஏராள‌ன் அண்ணா............இந்த‌ திரியில் பாண்டியா மும்பாய் அணிக்கு மீண்டும் போவ‌தை எழுதி இருக்க‌னும்.............

 

குஜ‌ராத் அணிய‌ பான்டியா ந‌ல்லா தானே வ‌ழி ந‌ட‌த்தினார்.................. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகும் பிரபல கிரிக்கெட் வீரர்

17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வரும் இந்த கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதாக காணப்படுகின்றது.

17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ஆம் திகதி டுபாயில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஐபிஎல் போட்டியில் இருந்து இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட் விலகியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக ஜோ ரூட் விளையாடி வந்தார்.
ஜோ ரூட்டின் இந்த தீர்மானத்தினை ஏற்றுக்கொள்வதாக ராஜஸ்தோன் ரோயல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/282464

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜோ ரூட் 

20ஓவ‌ர் விளையாட்டுக்கு ச‌ரி ப‌ட்டு வ‌ர‌ மாட்டார்..........50ஓவ‌ர் ம‌ற்றும் ஜ‌ந்து நாள் விளையாட்டுக்கு தான் ஜோ ரூட் ச‌ரி வ‌ருவார்..................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

RCB வ‌ண்டு ஹ‌ச‌ர‌ங்காவை க‌ல‌ட்டி விட்டுட்டின‌ம்...........

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் ஹர்திக் பாண்டியா - பின்னணியில் நடந்தது என்ன?

ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

குஜராத் டைட்டன்ஸ்அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பியுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் யார்? மும்பை இந்தியன்ஸ் அணி அன்று 10 லட்ச ரூபாய்க்கு வாங்கி ஹர்திக் பாண்டியாவை திரும்பப் பெற தற்போது எவ்வளவு பணம் கொடுத்துள்ளது? பின்னணியில் நடந்தது என்ன?

ஐபிஎல் 2024ம் ஆண்டு சீசனுக்காக வரும் டிசம்பர் 19-ம் தேதி மினி ஏலம் துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, ஒவ்வொரு அணியிலிருந்து வீரர்களை விடுவித்தல், வீரர்களை பரிமாற்றம் செய்தல் போன்றவை அணிக்குள்ளாகவே பரஸ்பரத்துடன் நடந்து வருகிறது.

ஐ.பி.எல். மினி ஏலம்

ஐபிஎல் ஏலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த பரஸ்பர பரமாற்றம் டிசம்பர் 12ம் தேதிவரை நடத்திக்கொள்ளலாம். அதன்பின் டிசம்பர் 19ம் தேதி நடக்கும் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்கள் வசம் இருக்கும் தொகைக்கு ஏற்ப வீரர்களை ஏலத்தில் விலைக்கு வாங்க முடியும்.

அந்த வகையில் நேற்று ஐபிஎல் அணிகளுக்கு இடையே வீரர்களைப் பரிமாற்றம் செய்தல், விடுவித்தல், விலைக்கு வாங்குதல் போன்றவை நடந்தன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விடுவித்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை மீண்டும் வாங்க குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் விருப்பம் தெரிவித்தது.

 

ஹர்திக் பாண்டியா - பின்னணியில் நடந்தது என்ன?

ஐபிஎல் ஏலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இது தொடர்பாக இரு அணிகளின் நிர்வாகிகளுக்கும் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தை முடிவில் எந்த உறுதியான முடிவும் எட்டாததையடுத்து, மாலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியே ஹர்திக் பாண்டியாவை தக்கவைப்பதாக அறிவித்தது. ஆனால், கடைசி கட்டப் பேச்சுவார்த்தையில் ஹர்திக் பாண்டியாவை வாங்கிய ரூ.15 கோடிக்கும் அதிகமாக விலை கொடுத்து வாங்க மும்பை இந்தியன்ஸ் முன்வந்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

ஆனால், ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்வது குறித்து மும்பை அணி நிர்வாகவோ, குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகமோ இன்று காலை வரை அதிகாரபூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.

 

மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா

ஐபிஎல் ஏலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்நிலையில், ஐபிஎல் நிர்வாகம் இன்று காலை வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையின்படி “ குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த 2 சீசன்களாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, தான் முதன்முதலாக இருந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கே திரும்புகிறார்.

இது தொடர்பாக இரு அணி நிர்வாகிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முடிந்தது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 2 சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாகச் செயல்பட்டார். முதன் முதலில் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா அணிக்காக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து கடந்த சீசனில் பைனல்வரை அணியைஅழைத்துச் சென்றார்.

மற்றொரு தனி வர்த்தகத்தில் மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை ஆர்.சி.பி. அணி விலைக்கு வாங்கியுள்ளது. கடந்த டிசம்பரில் கேமரூன் கிரீன் ரூ.17.50 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டார்” என்று தெரிவித்துள்ளது.

 

மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்

ஐபிஎல் ஏலம்

பட மூலாதாரம்,EMPICS

மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீடா எம் அம்பானி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “ ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரவேற்கிறோம். மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தில் மீண்டும் அவரை இணைப்பது மகிழ்ச்சிக்குரிய தருணம். மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரமான ஹர்திக் இன்று இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம். அவரின் வருகை எங்களுக்கு உற்சாகமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஆகாஷ் அம்பானி ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் “ மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவை மீண்டும் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மகிழ்ச்சியான தாய்வீடு திரும்புதல், ஹர்திக் அணியில் இருந்தாலே அணிக்குள் சமநிலையான போக்கு எந்த அணிக்கும் ஏற்படும். மும்பை அணியில் ஹர்திக் இருந்த போது வெற்றிகரமாக இருந்தது, 2வது முறையாக அணிக்குத் திரும்பிய ஹர்திக் பெரிய வெற்றியைத் தருவார் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்

ஹர்திக் பாண்டியாவுக்கு 15 கோடி ரூபாய் தவிர , பரிமாற்றக் கட்டணத்தையும் சேர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கி இருப்பதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

அன்று ரூ.10 லட்சம் இன்று ரூ.15 கோடி

ஐபிஎல் ஏலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த இரு சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகச் செயல்பட்டு, 30 இன்னிங்ஸ்களில் 833 ரன்கள் சேர்த்துள்ளார். ஹர்திக் பாண்டியா சராசரி 41.65 ஆகவும், 133 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார், 11 விக்கெட்டுகளையும் ஹர்திக் வீழ்த்தியுள்ளார்.

2015ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.10 லட்சத்துக்கு ஹர்திக் பாண்டியா அன்கேப்டு வீரராக வாங்கப்பட்டார். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்ற 2015, 2017, 2019, 2020ம் ஆண்டுகளில் அணியில் முக்கியமான இடத்தை ஹர்திக் பாண்டியா பெற்றார்.

இதையடுத்து, 2021ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஹர்திக் பாண்டியாவை விடுவித்து அவரை ஏலத்தில் மும்பை அணி எடுத்து பின்னர் 2022ம் ஆண்டு விடுவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய அங்கமாக இருந்த ஹர்திக் பாண்டியாவை அந்த அணி நிர்வாகம் விடுவித்தது அனைவருக்குமே வியப்பாக இருந்தது. 2021 ம் ஆண்டு ஏலத்தில் மும்பை அணி நிர்வாகம் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், பும்ரா, சூர்யகுமார் யாதவ், பொலார்ட் ஆகியோரை மட்டும் தக்கவைத்து பெரும்பாலான வீரர்களை விடுவித்தது.

இதைத் தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.15 கோடிக்கு ஹர்திக் பாண்டியாவை ஏலத்தில் எடுத்து தங்கள் அணியின் கேப்டனாக நியமித்தது. கேப்டனாக செயல்பட்ட முதல் சீசனிலேயே ஹர்திக் பாண்டியா குஜராஜ் டைட்டன்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து அசத்தினார். கடந்த சீசனில், பைனல் வரை குஜராத் அணியை அழைத்துச் சென்ற பெருமை ஹர்திக் பாண்டியாவையே சாரும்.

கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி முக்கிய வீரர்கள் இல்லாமல் மிகவும் மோசமாகச் செயல்பட்டது. நாக்அவுட் சுற்றுக்குள்கூட முன்னேற முடியாமல் வெளியேறியது. இதைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 19 மினி ஏலத்துக்குள் ஏதேனும் பெரிய முடிவுடன் மும்பை இந்தியன்ஸ் வரும் என்று தகவல்கள் வெளியாகின. அதன்படி, ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி நிர்வாகம் மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியை மீண்டும் அணிக்குள் கொண்டுவருவதற்காக 11 வீரர்களை விடுவித்து ரூ.15.25 கோடியை பெற்றுள்ளது. இது தவிர கேமரூன் கிரீனை ரூ.17.50 கோடிக்கு ஆர்சிபி அணியிடம் விலைக்கு விற்பதால் கூடுதலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கையிருப்பு அதிகரிக்கும்.

 

குஜராத் அணிக்கு புதிய கேப்டன்

ஐபிஎல் ஏலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் ஹர்திக் பாண்டியா சென்றுவிட்டதையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 2024 சீசனில் யார் தலைமையில் களமிறங்கும் என்ற கேள் வி எழுந்தது.

இதனிடையே, 2024 ஐபிஎல் சீசனுக்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக சுப்மான் கில்லை குஜராத் அணிநிர்வாகம் நியமித்து அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக அவர் இருந்துள்ளார். சீனியர் கிரிக்கெட்டில் சுப்மான் கில் முதல்முறையாக கேப்டன் பதவியை ஏற்க உள்ளார்.

அணி கேப்டனாக குஜராத் அணி நிர்வாகம் நியமித்தது குறித்து சுப்மான் கில் கூறுகையில் “குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பு ஏற்பதில் பெருமை கொள்கிறேன். என்னை அணித் தலைவராக நியமித்த அணி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். இரு சீசன்கள் அற்புதமாக இருந்தது. எங்களின் அற்புதமான அணியை வழிநடத்திச் செல்ல அடுத்த சீசனை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுப்மான் கில்லின் கேப்டன் அனுபவம்

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மான் கில்லுக்கு ஏற்கெனவே கேப்டன் அனுபவம் இருந்துள்ளது. 2018ம் ஆண்டு நடந்த 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனாக சுப்மான் கில் செயல்பட்டுள்ளார். அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்தது பிரித்வி ஷா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த துலீப் டிராபி கோப்பைக்கான தொடரில் இந்தியா ப்ளூ அணிக்கு கேப்டனாகவும் சுப்மான் கில் செயல்பட்டுள்ளார். 2019ம் ஆண்டு நடந்த தியோதர் டிராபியிலும், இந்தியா –சி பிரிவு அணிக்கும் கேப்டனாக சுப்மான் கில் இருந்து அணியை வழிநடத்தியுள்ளார்.

இளம் வயதிலேயே இந்திய அணியை வழிநடத்திய பெருமை சுப்மான் கில்லுக்கு உண்டு. இதற்கு முன் விராட் கோலி 21 வயது 124 நாட்களில் 2009-10ம் ஆண்டு தியோதர் டிராபில் கேப்டனாக இருந்திருந்தார். அவரை முறியடித்த சுப்மான் கில் 20 வயது 57 நாட்களில் தியோதர் டிராபியில் இந்திய –சி அணிக்கு கில் கேப்டனாக செயல்பட்டார்.

https://www.bbc.com/tamil/articles/c4n02z16xypo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐபிஎல்: தோனிக்கு அடுத்து சிஎஸ்கேவுக்கு தலைமை தாங்கப் போவது யார்?

ஐ.பி.எல், டி20, சென்னை சூப்பர் கிங்க்ஸ், தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐ.பி.எல் டி20 தொடரில் 5 முறை சாம்பியன்ஷிப் பட்டம், 5 முறை பைனல் வரை சென்றது என ஒவ்வொரு லீக்கிலும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் (சி.எஸ்.கே) அணி கலக்கி வருகிறது.

எதிர்வரும் 2024 ஐ.பி.எல் சீசனில் சி.எஸ்.கே அணி என்ன செய்யப் போகிறது, எந்தெந்த வீரர்களை ஏலத்தில் வாங்க இருக்கிறது, என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இதற்கு முக்கியக் காரணம் அந்த அணியின் கேப்டன் தோனி. அவரது வியூகம், களத்தில் எந்தெந்த வீரர்களை எப்படிப் பயன்படுத்தப் போகிறார், இந்த முறை கோப்பையை வெல்வாரா என்பதைக் காண ஒவ்வொரு லீக்கிலும் ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள்.

 

கேப்டனாத் தொடரும் தோனி

ஐ.பி.எல் டி20 தொடர்களின் ஒவ்வொரு போட்டியையும், சி.எஸ்.கே அணி தொடக்கம் முதல் நாக்-அவுட் சுற்றுக்குச் செல்லும்வரை திட்டமிட்டு அணுகும். சி.எஸ்.கே இல்லாத நாக்-அவுட் சுற்றுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு அணியைக் கட்டுக்கோப்பாக வழிநடத்தி, வியூகங்களை வகுத்து வெற்றியடைபவர் தோனி.

அதற்கு முக்கியக் காரணம் தோனியின் கேப்டன்ஷிப் மட்டுமல்ல, அணியில் இடம் பெறும் வீரர்களும்தான் என்று கூற வேண்டும். ஐ.பி.எல் ஏலத்தில் ஒவ்வொரு வீரரையும் சி.எஸ்.கே நிர்வாகம் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து அணிக்குள் கொண்டு வந்து சிறப்பாகச் செயல்படும்.

அந்தவகையில் 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான ஏலம் டிசம்பர் 19ம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு அணியும் தக்கவைத்துக் கொண்ட, விடுவித்த வீரர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ். தோனி தக்கவைக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல், டி20, சென்னை சூப்பர் கிங்க்ஸ், தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தற்போது சி.எஸ்.கே அணியின் கையிருப்பாக ரூ.31.40 கோடி இருக்கிறது

யாரெல்லாம் விடுவிக்கப்பட்டனர்?

கடந்த சீசனில் அதிகபட்சமாக ரூ.16.25 கோடிக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக ராயுடு அறிவித்ததையடுத்து, ரூ.6.75 கோடிக்கு வாங்கப்பட்ட அவரும் விடுவிக்கப்பட்டார். இது தவிர, தென் ஆப்பிரிக்காவின் டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரன்சு சேனாபதி, ஆகாஷ் சிங், நியூசிலாந்து வீரர் கெயில் ஜேமிசன், சிசான்டா மகாலா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

தற்போது சி.எஸ்.கே அணியின் கையிருப்பாக ரூ.31.40 கோடி இருக்கிறது. இந்தத் தொகையை வைத்து, எதிர்வரும் ஏலத்தில் எந்தெந்த வீரர்களை வாங்கப் போகிறது, எந்தெந்த வீரர்களை கைப்பற்றுவதற்கு சி.எஸ்.கே நிர்வாகம் முயற்சிக்கும் என்பது குறித்து அலசலாம்.

ஆல்ரவுண்டர்கள் மீது தீராக் காதல்

சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ஆல்-ரவுண்டர்கள் மீது தீராக் காதல் கொண்டது. சி.எஸ்.கே அணி உருனதில் இருந்து அல்பி மோர்கல், ஸ்காட் ஸ்டைரிஸ், ஜேக்கப் ஓரம், டுவைன் பிராவோ என ஆல்-ரவுண்டர்கள் மீதான காதல் தொடர்ந்து வருகிறது. ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேன் மீதான நம்பிக்கை வைப்பதைவிட, ஆல்ரவுண்டர்கள் மீதுதான் கேப்டன் தோனியும், நிர்வாகமும் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் என்று ஐ.பி.எல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சி.எஸ்.கே கேப்டன் தோனி ஒருமுறை அளித்த பேட்டியில்கூட “இனிவரும் காலங்களில் லீக் போட்டிகளில் ஸ்பெசலிஸ்ட் பேட்டர், பந்துவீச்சாளர்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படாது. மாறாக ஆல்ரவுண்டர்கள் மீதே அதிக ஈர்ப்பு இருக்கும்,” எனத் தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு ஐ.பி.எல் சீசனில்கூட ஆல்ரவுண்டர்களைத்தான் சிஎஸ்கே நிர்வாகம் அதிகளவில் விலைக்கு வாங்கி, அணியில் தக்கவைத்தது.

தற்போதைய நிலவரப்படி அம்பதி ராயுடு விடுவிக்கப்பட்ட நிலையில் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் என்ற வகையில், ரஹானே, கெய்க்வாட், கான்வே, ஷேக் ரஷீத் ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

ஆனால், ஆல்ரவுண்டர்களைப் பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜா, ராஜ்வர்தன் ஹங்கேர்கர், மொயின் அலி, அஜெய் மண்டல், ஷிவம் துபே, நிசாந்த் சிந்து, சான்ட்னர், பகத் வர்மா ஆகியோர் உள்ளனர்.

கடந்த சீசனில் ரூ.16 கோடிக்கு வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் பெரிதாக எந்தப் பங்களிப்பும் அணிக்குச் செய்யவில்லை. அவரது தேசிய அணிக்கான பணியும் அவருக்கு அதிகம் என்பதாலும், உடற்தகுதிப் பிரச்சினை இருப்பதாலும் அவரை சி.எஸ்.கே நிர்வாகம் விடுவித்துள்ளது. மற்றவகையில் எப்போதுமே சி.எஸ்.கே அணியில் ஆல்ரவுண்டர்களுக்கு இடம் அதிகமாகவே இருக்கும்.

பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ் போன்ற ஆல்ரவுண்டர்கள் விடுவிக்கப்பட்டதால், ஏலத்தில் சிறந்த ஆல்ரவுண்டர்களை ஃபார்மில் இருக்கும் வீரர்களை விலைக்கு வாங்க சி.எஸ்.கே நிர்வாகம் அதிக ஆர்வம் காட்டும் என்று கூறப்படுகிறது.

ஐ.பி.எல், டி20, சென்னை சூப்பர் கிங்க்ஸ், தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சி.எஸ்.கே அணியிலிருந்து அம்பதி ராயுடு விடுவிக்கப்பட்டிருக்கிறார்

நடுவரிசைக்கு வலுவான பேட்டர் யார்?

அணியிலிருந்து அம்பதி ராயுடு விடுவிக்கப்பட்டதால், நடுவரிசைக்கு பலமான பேட்டர் அவசியம் என்பதை சி.எஸ்.கே நிர்வாகம் நன்கு அறிந்துள்ளது. ராயுடு ஒரு ‘மேட்ச் வின்னர்’ என்பதை சி.எஸ்.கே நிர்வாகம் நன்கு அறியும். களத்தில் நங்கூரமிட்டுவிட்டால், ராயுடு ஆட்டத்தை வென்று கொடுக்கும் திறமை கொண்டவர். அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டது சி.எஸ்.கே அணிக்குச் சிறிய பலவீனம் என்றாலும் அதை வேறு ஒரு சரியான பேட்டர் மூலம் ஈடுகட்ட முயற்சிக்கும்.

அதேபோல வேகப்பந்துவீச்சாளர்கள் வரிசையில் சிசாண்டா மகாலா, ஆகாஷ் சிங், பிரிட்டோரியஸ், கெயில் ஜேமிஸன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்களுக்குப் பதிலாக அடுத்ததாகஏலத்தில் எந்தெந்த வீரர்களை தேர்ந்தெடுக்க பயிற்சியாளர் பிளெம்மிங்கும், கேப்டன் தோனியும், நிர்வாகமும் முடிவெடுப்பார்கள் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

சி.எஸ்.கே அணியிலிருந்து கடந்த இரு சீசன்களுக்கு முன் விடுவிக்கப்பட்ட ஷர்துல் தாக்கூர் மீண்டும் சிஎஸ்கே அணிக்குள் ஏலத்தில் எடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கொல்கத்தா அணியிலிருந்து வேகப்பந்துவீச்சாளர்களான பெர்குஷன், டிம் சவுதி, கார்த்திக் தியாகி, உனத் கட், முஸ்தபிசுர் ரஹ்மான், ரச்சின் ரவீந்திரா, ஹசரங்கா, ஷாருக்கான் ஆகியோரை ஏலத்தில் எடுக்க சி.எஸ்.கே நிர்வாகம் போட்டிபோடலாம்.

ஐ.பி.எல், டி20, சென்னை சூப்பர் கிங்க்ஸ், தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஐ.பி.எல் டி20 தொடர்களின் ஒவ்வொரு போட்டியையும், சி.எஸ்.கே அணி தொடக்கம் முதல் நாக்-அவுட் சுற்றுக்குச் செல்லும்வரை திட்டமிட்டு அணுகும்

ராயுடுவுக்குப் பதிலாக யார்?

சி.எஸ்.கே அணியிலிருந்து வலுவான நடுவரிசை பேட்டர் அம்பதி ராயுடு விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஐ.பி.எல் ஏலத்தில் மணிஷ் பாண்டேவை சி.எஸ்.கே நிர்வாகம் விலைக்கு வாங்க முயற்சிக்கும் என்று கூறப்படுகிறது.

டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்த மணிஷ் பாண்டேவை டெல்லி நிர்வாகம் அவரை விடுவித்துள்ளது. மணிஷ் பாண்டே என்றாலே ஐ.பி.எல் வரலாற்றில் முதன்முதலில் சதம் அடித்த வீரர் என்பதுதான் நினைவுக்கு வரும். திறமையான பேட்டரான மணிஷ் பாண்டேவுக்கு தொடக்கத்தில் இருந்தே எந்த அணியிலும் நீண்டகாலமாக நீடிக்கவில்லை, அதற்கு அவரிடம் நிலைத்தன்மையான பேட்டிங் இல்லாததே காரணமாகக் கூறப்படுகிறது.

2008-ஆம் ஆண்டு தொடக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்ட மணிஷ் பாண்டே, பின்னர் ஆர்.சி.பி, புனே வாரியர்ஸ், கே.கே.ஆர், சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ, டெல்லி கேபிடல்ஸ் என அடுத்தடுத்து மாறிவருகிறார். இதுவரை 302 டி20 போட்டிகளில் விளையாடிய மணிஷ் பாண்டே, 3 சதங்கள், 39 அரைசதங்கள் உள்பட 6,849 ரன்களைக் குவித்துள்ளார். திறமையான வீரர்களை தோனி தட்டிக்கொடுத்து தயார் செய்யக்கூடியவர் என்பதால், இந்த முறை சி.எஸ்.கே நிர்வாகம் ராயுடுவுக்குப் பதிலாக மணிஷ் பாண்டேவை வாங்க முயற்சிக்கும்.

ஏலத்தில் சி.எஸ்.கே-வின் கவனம் யார்மீது?

இது தவிர, உலகக் கோப்பையில் கலக்கிய ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவின் பெயர் ஏலத்தில் சேர்க்கப்பட்டால், அவரை வாங்குவதற்கு சி.எஸ்.கே முயலும் என்று கூறப்படுகிறது.

மேலும் பிக்ஹிட்டர் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் பஞ்சாப் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். தமிழக வீரரான ஷாருக்கானை தோனி நிச்சயம் பயன்படுத்த முயல்வார் என்பதால் அவருக்கும் சி.எஸ்.கே அணிக்குள் வர வாய்ப்புள்ளது.

ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹசரங்கா, ஜேஸன் ஹோல்டர், ஷர்துல் தாக்கூர், டிம் சவுதி ஆகியோரை வாங்குவதற்கு சி.எஸ்.கே அதிகமாக முயற்சிக்கலாம் எனத் தெரிகிறது.

ஐ.பி.எல், டி20, சென்னை சூப்பர் கிங்க்ஸ், தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சி.எஸ்.கே அணியும் சரி, தோனியும் சரி தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள்

சி.எஸ்.கே-வின் அடுத்த கேப்டன் யார்?

இந்த சீசனுக்கும் தோனியே கேப்டன் பொறுப்பை ஏற்று இருப்பதால், வழக்கமான உற்சாகத்துடனும், துடிப்புடனும் ஒவ்வொரு போட்டியையும் அந்த அணி அணுகும்.

ஆனால், தற்போது தோனிக்கு 42 வயதாகிறது என்பதால், 2025-ஆம் ஆண்டின் சீசனிலும் தோனி கேப்டன் பொறுப்பேற்று விளையாடுவாரா என்ற கேள்வி உள்ளது. ஒருவேளை இந்த சீசனே தோனியின் கடைசி சீசனாகவும் இருக்கலாம் எனவும் பேசப்படுகிறது.

அப்படி ஒருவேளை 2025-ஆம் ஆண்டின் சீசனுக்கு தோனி சி.எஸ்.கே அணியில் இல்லாவிட்டால் யார் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்பது பெரிய எதிர்பார்ப்பாகும். ஏற்கெனவே ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக நியமித்ததால் சி.எஸ்.கே அணி பல்வேறு குழப்பங்களைச் சந்தித்து, பின்னர் மீண்டும் தோனியே கேப்டன் பதவியே தொடர்ந்தார். அப்படியென்றால் அடுத்த கேப்டனாக யார் சி.எஸ்.கே அணிக்கு வரலாம் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

சி.எஸ்.கே அணியும் சரி, தோனியும் சரி தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள், தங்களின் முடிவும், தேர்ந்தெடுக்கும் வீரர்களும் நீண்டகாலத்துக்கு நிலைத்திருக்க வேண்டும் என விரும்புவர்கள். ஆதலால் அணியின் எதிர்காலம் கருதியே அடுத்த கேப்டன் நியமிக்கப்படலாம்.

ஐ.பி.எல், டி20, சென்னை சூப்பர் கிங்க்ஸ், தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹசரங்கா, ஜேஸன் ஹோல்டர், ஷர்துல் தாக்கூர், டிம் சவுதி ஆகியோரை வாங்குவதற்கு சி.எஸ்.கே அதிகமாக முயற்சிக்கலாம் எனத் தெரிகிறது

இவர்கள் இருவருக்கும் வாய்ப்புள்ளதா?

சி.எஸ்.கே அணியின் வியூகம், அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து விளையாட்டுத்துறை மூத்த பத்திரிகையாளர் முத்துக்குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது.

“சி.எஸ்.கே அணி எப்போதுமே தொலைநோக்கு சிந்தனையுடையது. நீண்டகால நலன் கருதித்தான் எந்த முடிவும் எடுக்கும். ஏற்கெனவே ஜடேஜாவை கேப்டனாக நியமித்து, அது தவறான முடிவு என்பதை உணர்ந்துவிட்டது. ஆதலால் அவர் பின்னால் கேப்டன் பதவியுடன் செல்லமாட்டார்கள்,” என்றார்.

“உள்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் ஒருவர் அல்லது வெளிநாட்டு வீரர் ஒருவரைத்தான் கேப்டனாக சி.எஸ்.கே நிர்வாகம் நியமிக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில் என்னைப் பொறுத்தவரை சி.எஸ்.கே அணிக்கு அடுத்த கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அல்லது டேவன் கான்வே நியமிக்கப்பட வாய்ப்புள்ளது,” என்றார் அவர்.

“ஏனென்றால், ஆசியவிளையாட்டுப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக கேப்டன் பணியைச் செய்து தனக்குரிய பங்களிப்பை நிரூபித்துவிட்டார். சி.எஸ்.கே நிர்வாகம் இதைக் கணக்கில் எடுக்கலாம். நீண்டகாலநோக்கிலும் கெய்க்வாட்டுக்கு கேப்டன் பதவி தரப்படலாம். அதேபோல வெளிநாட்டு வீரர்களில் கான்வேக்கு அதிக வாய்ப்புள்ளது,” எனத் தெரிவித்தார்.

 

யார் யார் அணிக்குள் வரலாம்?

2024 ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணி எந்தெந்த வீரர்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஏலத்தில் எடுக்கும் என்று முத்துக் குமார் பேசுகையில், “சி.எஸ்.கே நிர்வாகம் ஸ்பெசலிஸ்ட் பேட்டர், பந்துவீச்சாளர்களைவிட ஆல்ரவுண்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும். அதைத்தான் கேப்டன் தோனி விரும்புவார் என்று கேட்டிருக்கிறேன். அது மட்டுமல்லாமல், கடந்த முறை பென் ஸ்டோக்ஸிற்கு ரூ.16 கோடிக்கும் அதிகமாக செலவிட்டது சி.எஸ்.கே. ஆதலால் இந்த முறை ஏலத்தில் பெரிதாக ஆல்ரவுண்டர்களுக்கு செலவிடமாட்டார்கள், அதேநேரம் சிறந்த வீரர்களை நல்ல விலைக்கு வாங்கவும் தயங்கமாட்டார்கள், என்றார்.

மேலும் பேசிய அவர், “என்னைப் பொறுத்தவரை ஆல்ரவுண்டர்களில் ரச்சின் ரவீந்திரா, ஜேஸன் ஹோல்டர், ஹசரங்கா, டிம் சவுதி, முஸ்தபிசுர் ரஹ்மான், முருகன் அஸ்வின் ஆகியோரை விலைக்குவாங்க சிஎஸ்கே முயலும். இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் சிஎஸ்கே அணி நீண்டகாலமாக பயணித்து வருகிறது,” என்றார்.

“ஆதலால், இந்த முறை உனத்கத் அல்லது முஸ்தபிசுர் ரஹ்மான் அணிக்குள் வரலாம். டுவைன் பிராவோவுக்கு அடுத்தார்போல் மேற்கிந்தியத்தீவுகள் ஆல்ரவுண்டர் யாரையும் சி.எஸ்.கே தேர்ந்தெடுக்கவில்லை. இந்த முறை ஹோல்டர் விலை மலிவாக இருந்தால் அவரையும் சி.எஸ்.கே விலைக்கு வாங்கவும் வாய்ப்புள்ளது. தோனி இதுபோன்ற வீரர்களை சிறப்பாகப் பயன்படுத்தக்கூடியவர்,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cyj21vd1lw2o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சென்னை போன‌ சிச‌னில் விளையாடின‌ ப‌ல‌ வீர‌ர்க‌ளை த‌க்க‌ வைச்சு இருக்கு.............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்கானிஸ்தான் வீர‌ர்  Azmatullah Omarzai  சென்னை அணி வேண்ட‌ போவ‌தாக‌ செய்தியில் வாசித்தேன்........இவ‌ர் சென்னை அணிக்கு விளையாட‌ த‌குதியான‌வ‌ர்...........அடிச்சு ஆட‌த் தொட‌ங்கினால் ந‌ல்லா அடிப்பார்..........

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

2024 ஐபிஎல்: வெளியிடப்பட்டுள்ள ஏலத்திற்கான வீரர்கள் பட்டியல்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024ன்  ஏலத்திற்கான வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2024ஆம் ஆண்டிற்கான ஏலம் டிசம்பர் 19, 2023 அன்று, துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் ஏலத்தில் 333 கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

333 கிரிக்கெட் வீரர்கள்

214 பேர் இந்தியர்கள் மற்றும் 119 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.

2024 ஐபிஎல்: வெளியிடப்பட்டுள்ள ஏலத்திற்கான வீரர்கள் பட்டியல் | Ipl 2024 Auction Players List With Price India

அதிகபட்சமாக 10 அணிகளிலும் 77 இடங்கள் காணப்படுகின்றன.

77 இடங்களில் வெளிநாட்டு வீரர்களுக்கு 30 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

குஜராத் டைட்டன்ஸ் அணி

1.5 கோடி ரூபாய் அடிப்படை விலையுடன் 13 வீரர்கள் ஏலப் பட்டியலில் உள்ளனர்.

2024 ஐபிஎல்: வெளியிடப்பட்டுள்ள ஏலத்திற்கான வீரர்கள் பட்டியல் | Ipl 2024 Auction Players List With Price India

குஜராத் டைட்டன்ஸ் அணி 38.15 கோடி ரூபாவுடன் அதிக ஏல பணத்தொகையை கொண்டுள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 13.15 கோடி ரூபாவுடன் குறைந்த ஏல பணத்தொகையை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/ipl-2024-auction-players-list-with-price-india-1702327818?itm_source=article

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் மீதான பாசத்தால் ஹர்திக் கேப்டன்சியை எதிர்க்கும் ரசிகர்கள்

ரோஹித் ஷர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

மே 30, 2023. நள்ளிரவைத் தாண்டி நடந்து கொண்டிருந்த ஐபிஎல் போட்டியில் மோஹித் ஷர்மாவின் அந்தக் கடைசி பந்தை, ஷார்ட் ஃபைன் லெக்கில் நாசூக்காக தட்டிவிட்டு ஜடேஜா அந்த பௌண்டரியை அடிப்பதற்கு முந்தைய நொடி வரை, ஐபிஎல்-இல் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக இருந்தது மும்பை இந்தியன்ஸ்தான்.

ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது. ஆனால், ஐபிஎல் கிரிக்கெட் தொடங்கிய 2008ஆம் ஆண்டிலிருந்து முதல் ஐந்து சீசன்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பை என்பது கனவாகத்தான் இருந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி 2013ஆம் ஆண்டுதான் முதல்முறையாக கோப்பையை வென்றது. அந்த சீசனில் தான் ரோகித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல்முறையாக கேப்டன் பொறுப்பேற்றார்.

சச்சினுக்கு ஐபிஎல் கோப்பைக் கனவு கானல் நீராகிவிடுமோ என்ற சூழல் இருந்தபோது, அவரது கடைசி சீசனில் கோப்பையோடு வழியனுப்பி வைத்தார் ரோகித் ஷர்மா.

அங்கே தொடங்கிய ரோஹித்தின் வெற்றிப் பயணம், இதோ இன்று முடிவுக்கு வந்திருக்கிறது. ஆம், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார் ரோகித் ஷர்மா.

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்ட அதிகாரபூர்வ செய்திக் குறிப்பில் ரோகித் ஷர்மாவிடம் இருந்து கேப்டன் பொறுப்பு ஹர்திக் பாண்ட்யாவுக்கு சென்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 11 சீசன்களில் தொடர்ச்சியாக கேப்டன் பொறுப்பில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வந்த ரோகித் ஷர்மா தற்போது ஐபிஎல்-இல் தனது கேப்டன் பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

 

மூன்று ஆண்டுகளாக சறுக்கலில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி

ரோஹித் ஷர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த 11 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏழு முறை பிளே ஆஃபுக்கு தகுதி பெற்றது. அதிலும் குறிப்பாக 2013 முதல் 2020 வரையிலான சீசன்களில் மட்டும் ஐந்து முறை கோப்பையை வென்று அசத்தியது.

இந்தக் காலகட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல்-இல் அபார வலிமைமிக்க அணியாக விளங்கியது. எனினும் கடந்த மூன்று சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்லவில்லை. குறிப்பாக 2021, 2022 சீசன்களில் லீக் சுற்றிலேயே வெளியேறியது.

ரோகித் ஷர்மா தலைமையில் 158 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 67 போட்டிகளில் வென்றுள்ளது. மேலும் ரோகித் தலைமையில் இறுதிப்போட்டிக்குச் சென்ற போதெல்லாம் ஒருமுறைகூட கோப்பையைத் தவறவிடவில்லை.

கடந்த 2015ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.10 லட்சத்துக்கு ஹர்திக் பாண்ட்யாவை ஏலத்தில் வாங்கியது. அங்கிருந்துதான் ஹர்திக் பாண்ட்யா என்ற பெயரே வெளியே தெரியத் துவங்கியது.

மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்ற 2015, 2017, 2019, 2020ம் ஆண்டுகளில் அணியில் முக்கியமான இடத்தை பாண்ட்யா பெற்றார்.

எனினும், ஹர்திக் பாண்ட்யவை 2022 மெகா சீசனுக்கான ஏலத்தையொட்டி அணியில் இருந்து விடுவித்தது மும்பை இந்தியன்ஸ்.

இதன் பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணியால் சுமார் 15 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் ஹர்திக் பாண்ட்யா. அந்த அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் 2022 சீசனில் கோப்பையை வென்றது குஜராத். 2023 சீசனில் இறுதிப் போட்டியில் சென்னையிடம் தோல்வியடைந்தது.

 

மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஹர்திக் பாண்ட்யாவின் பயணம்

ஹர்திக் பாண்ட்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்நிலையில்தான் ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்புவதாக ஐபிஎல் நிர்வாகம் கடந்த நவம்பர் 27ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீடா எம் அம்பானி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “ஹர்திக் பாண்ட்யாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரவேற்கிறோம். மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தில் மீண்டும் அவரை இணைப்பது மகிழ்ச்சிக்குரிய தருணம்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரமான ஹர்திக் இன்று இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம். அவரது வருகை எங்களுக்கு உற்சாகமளிக்கிறது,” எனத் தெரிவித்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக அந்த அணியின் உலகளாவிய செயல்திறன் தலைவர் மகிளா ஜெயவர்தனே, சச்சின் முதல் ஹர்பஜன் வரை, ரிக்கி பாண்டிங் முதல் ரோஹித் வரை சிறந்த தலைமைகளால் மும்பை இந்தியன்ஸ் அணி ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

"இவர்கள் உடனடி வெற்றிக்குப் பங்களிக்கும் அதே வேளையில் எதிர்காலத்திற்கான அணியை வலுப்படுத்துவதில் எப்போதும் கவனமாக இருந்தனர். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்," என்றார்.

முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பங்களிப்பையும் வெகுவாகப் பாராட்டிய அவர், "ரோஹித் ஷர்மாவின் சிறந்த தலைமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 2013ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக அவரது பதவிக்காலம் அசாதாரணமானது அல்ல.

அவரது தலைமை அணிக்கு இணையற்ற வெற்றியைத் தந்தது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக அவரது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது," என்றார்.

மேலும், ரோஹித் அளித்த வழிகாட்டுதலின் கீழ், மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதும் மிகவும் வெற்றிகரமான மற்றும் விரும்பப்படும் அணிகளில் ஒன்றாக மாறியது. மும்பை இந்தியன்ஸ் அணியை மேலும் வலுபடுத்த களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவரது அனுபவத்தையும் வழிகாட்டுதல்களையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டி வரை எந்த அணியாலும் வீழ்த்த முடியாத அணியாக விளங்கி வந்தது இந்தியா. அதிரடி பேட்டிங், அபார கேப்டன்சி என ரோகித் ஷர்மா நாயகனாக ஜொலித்தார்.

இறுதிப்போட்டியில் தனது அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்த அவர் தவறவில்லை. எனினும் ஆஸ்திரேலியா எந்தவித சிரமுமின்றி எளிதாக இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

சமீபத்தில் தோல்வி குறித்து மனம் திறந்த ரோகித் ஷர்மா, "உலகக்கோப்பை தோல்வியில் இருந்து எப்படி வெளியே வருவது என முதல் சில நாட்கள் எனக்குத் தெரியவில்லை. எனது குடும்பத்தினர், நண்பர்கள்தான் மிகவும் உதவினர். இது எளிதாக ஜீரணயிக்கக்கூடியது அல்ல. உண்மையில் இதைக் கடந்து செல்வது அவ்வளவு எளிதாக இல்லை," என்றார்.

 
மும்பை இந்தியன்ஸ் அணி

பட மூலாதாரம்,TANISH SINGH/X

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்ஸ்டாகிராமில் குறையும் 'ஃபாலோவர்ஸ்'

சூர்யகுமார் யாதவ் இன்ஸ்டாகிராம் பக்கம்

பட மூலாதாரம்,SURYAKUMAR YADHAV/INSTAGRAM

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ராேகித் ஷர்மா மாற்றப்பட்டதன் அதிருப்தியின் வெளிப்பாடாக, அணியின் அனைத்து சமூக ஊடக பக்கங்களிலும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதில் குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே நாளில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதற்கிடையே, சூர்யா குமார் யாதவ், தனது சமூக ஊடக பக்கங்களில், ஹார்ட் ப்ரேக்கிங் எமோஜியை பதிவிட்டுள்ளார். ஆனால், அவர் அதற்கான காரணத்தைப் பதிவிடவில்லை. இதற்கும் அணியின் கேப்டன் மாற்றப்பட்டதே காரணம் என சமூக ஊடகத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

அதேபோல, கேப்டனை மாற்றியதால் அதிருப்தியில் உள்ள ரசிகர்கள், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சியை தீயிட்டுக் கொளுத்தி, அந்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c4nyxv4km4lo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐ.பி.எல் ஏலம் நாளை

mallika-sagar-instagram-1701770704.jpg

2024 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலம் நாளை டுபாயில் இடம்பெறவுள்ளது.

குறித்த ஏலத்தை மல்லிகா சாகர் தொகுத்து வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மல்லிகா சாகர் பெண்களுக்கான பிரிமீயர் லீக் ஏலத்தை தொகுத்து வழங்கியிருந்தார்.

இம்முறை ஐ.பி.எல் ஏலத்திற்காக 333 வீரர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர்களில் 77 வீரர்கள் மாத்திரமே ஐ.பி.எல் அணிகளுக்காக ஏலத்தில் வாங்கப்படவுள்ளனர்.

https://thinakkural.lk/article/285105

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர்ந்து ஆடுவாரா?

ஐபிஎல்-2024, ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், விதான்ஷு குமார்
  • பதவி, விளையாட்டு பத்திரிகையாளர், பிபிசி ஹிந்திக்காக
  • 19 டிசம்பர் 2023, 07:11 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியக் கிரிக்கெட்டில் சமீபத்தில் எழுந்துள்ள புயல் இந்திய அணியுடன் தொடர்புடையது அல்ல. ஐ.பி.எல்.லின் வெற்றிகரமான அணியான மும்பை இந்தியன்ஸுடன் தொடர்புடையது.

சர்ச்சையின் மையத்தில் இருப்பவர் - ரோகித் சர்மா.

அடுத்த சீசனில் ரோகித் சர்மாவுக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக வருவார் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தவுடன், இணையத்தில் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியின் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஏமாற்றமடந்துள்ளனர்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி தனது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகப் பக்கங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களை இழந்தது. அறிவிப்பு வந்த முதல் நாளில் மட்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பக்கத்தை நான்கு லட்சம் பேர் ‘அன்ஃபாலோ’ செய்திருக்கிறார்கள்.

ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சி மற்றும் தொப்பிகளுக்கு தீ வைக்கும் படங்கள் இணையத்தில் வைரலானது.

ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படையாகக் காட்டினர். அதேசமயம் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இந்த நடவடிக்கையைப் பற்றித் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.

 
ஐபிஎல்-2024, ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

சுனில் கவாஸ்கர், ரோகித் சர்மா சோர்வாக இருப்பதாகவும், அணிக்கு புதிய சிந்தனை தேவை என்றும் கூறினார்

முன்னாள் இந்திய வீரர்கள் கூறுவது என்ன?

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவின் இடம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனியின் இடத்துக்கு இணையானதுதான் என்றார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அவர் அளித்த பேட்டியில், “ரோகித் சர்மா அணியில் மிக உயர்ந்த பதவியில் இருக்கிறார். என்னுடைய பார்வையில் இது தோனி சென்னை அணியில் வகிக்கும் அதே இடம்தான். ரோகித் சர்மா தனது ரத்தம் மற்றும் வியர்வையால் மும்பை அணியை கட்டமைத்துள்ளார். மேலும் ஒரு கேப்டனாக அவர் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளார்,” என்றார்.

இதற்கிடையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரும் தற்போதைய இந்திய டி20 கேப்டனுமான சூர்யகுமார் யாதவ், ‘உடைந்த இதயம்’ எமோஜியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார், அதுவும் வைரலாகியிருக்கிறது.

ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த முடிவை ஆதரித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ரோகித் சர்மா சோர்வாக இருப்பதாகவும், அணிக்கு புதிய சிந்தனை தேவை என்றும் கூறினார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் அவர் கூறுகையில், “இதில் எது சரி, எது தவறு என்று பார்க்காமல், அணியின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பேட்டிங்கில் ரோகித்தின் பங்களிப்பும் சரிந்திருக்கிறது,” என்றார்.

 
ஐபிஎல்-2024, ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

ரோகித்தின் சிறப்பான பேட்டிங் பாணியும், கேப்டன்ஷிப்பில் நிபுணத்துவமும் அவரை அணிக்கு மாற்று இல்லாத வீரராக்குகிறது

மும்பை அணிக்கு 5 முறை வெற்றியைத் தேடித்தந்தவர்

இந்த முறை ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் நீக்குவது குறித்து உண்மையில் யாருக்கும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஐ.பி.எல் தொடரின் மிக வெற்றிகரமான கேப்டனான ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளார்.

அவரது சிறப்பான பேட்டிங் பாணியும், கேப்டன்ஷிப்பில் நிபுணத்துவமும் அவரை அணிக்கு மாற்று இல்லாத வீரராக்குகிறது.

அவர் 2011-இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கினார். முதல் வருடத்தில் அவர் 33.81 சராசரியில் 372 ரன்கள் எடுத்தார். ஒட்டுமொத்தமாக, அவர் மும்பை அணிக்காக 31 சராசரியில் 5,230 ரன்கள் எடுத்தார், இதில் 40 அரை சதம் மற்றும் 1 சதம் அடங்கும்.

இந்த காலகட்டத்தில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 130 ஆக இருந்தது. இது அவரது அணிக்கு வலுவான தொடக்கத்தைப் பெற அடிக்கடி உதவியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அவரது பேட் சற்று அமைதியாகிவிட்டாலும், இந்த ஃபார்ம் விரைவில் மேம்படக்கூடும். மேலும் பல வருட டி20 கிரிக்கெட்டை அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

2013-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை ரிக்கி பாண்டிங் பாதியிலேயே விட்டுச் சென்றபோது ரோகித் சர்மா கேப்டனாக இருந்தார்.

இவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் ஐ.பி.எல் கோப்பையை வென்றது. கேப்டனாக இருந்த ஏறக்குறைய 10 ஆண்டுகளில், ரோகித் சர்மா 158 போட்டிகளில் அணிக்குத் தலைமை தாங்கினார். இவற்றில் 87 போட்டிகளில் வெற்றி பெற்றார், அவர் 67 இல் தோல்வியடைந்தார்.

ஐபிஎல்-2024, ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

கடந்த இரண்டு ஆண்டுகளில் ரோகித் சர்மாவின் குறைவான ரன்களையே எடுத்தார்

இந்த முடிவுக்கு என்ன காரணம்?

அணியின் இந்த முடிவுக்கு ரோகித்தின் ஃபார்ம் தான் காரணம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் குஜராத் அணிக்குக் கொடுத்தது. ஹர்திக் புதிய அணியை முதல் சீசனிலேயே சாம்பியனாக்கினார். அதே சமயம் கடந்த ஆண்டு குஜராத் இரண்டாவது இடத்தில் இருந்தது.

சமீப ஆண்டுகளில் மும்பையால் சிறப்பாக எதையும் செய்ய முடியவில்லை. இரண்டு முறையும் இறுதிப் போட்டிக்கு வரவில்லை. அந்த அணி கடைசியாக 2020-இல் சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ரோகித் சர்மாவின் குறைவான ரன்களையே எடுத்தார்.

2022-ஆம் ஆண்டில், அவர் 14 போட்டிகளில் 19 சராசரியுடன் 268 ரன்கள் எடுத்தார். அதே சமயம் 2023-இல் 16 போட்டிகளில் 20.75 சராசரியில் 332 ரன்கள் எடுத்தார். கடந்த இரண்டு சீசன்களில் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்த அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

T20-இல் கூட, ரோகித் சர்மா நவம்பர் 2022 முதல் இந்திய அணிக்காக விளையாடவில்லை, மேலும் அவரிடமிருந்து கேப்டன் பதவியை ஹர்திக் பாண்டியாவிடம் சென்றது. இருப்பினும், ஒருநாள் உலகக் கோப்பைக்கு தயாராவதற்கு ரோகித், விராட் மற்றும் ஜடேஜா போன்ற வீரர்களுக்கு டி20-யில் இருந்து ஓய்வு அளிக்க இந்திய நிர்வாகம் விரும்பியதாகவும், இது டி20-யில் அவர்களின் வாழ்க்கை முடிவடையும் என்பதற்கான அறிகுறி அல்ல என்றும் ஒரு வாதம் வைக்கப்படுகிறது.

 
ஐபிஎல்-2024, ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ரோகித் தனக்குப் பிடித்த அணியுடன் இன்னும் சில ஆண்டுகள் செலவழித்து அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பாரா?

ரோகித்தின் அடுத்த முடிவு என்ன?

தற்போது ரோகித் சர்மாவின் அடுத்த நகர்வில்தான் அனைவரது பார்வையும் பதிந்துள்ளது.

அவர் ஹர்திக்கின் கேப்டன்சியின் கீழ் விளையாடுவாரா அல்லது வேறு ஏதேனும் அணியில் கேப்டன் பதவியைப் பெற விரும்புவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரோகித்துக்கு வணக்கம் தெரிவித்து பதிவிட்டபோது, அதை ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகாவும் லைக் செய்திருந்தார்.

ஐ.பி.எல் ஏலம் இன்று (டிசம்பர் 19) நடைபெற உள்ளது. பரிமாற்றச் சாளரம் டிசம்பர் 20-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். அனைத்து அணிகளும் தங்கள் அணியை மேலும் வலுப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில அணிகள் ரோகித் சர்மாவின் பெயரைக் கருத்தில் கொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

2022 மெகா ஏலத்தில் ரோகித் சர்மாவை ரூ. 16 கோடிக்கு மும்பை தக்க வைத்துக் கொண்டது. எனவே அவரை வாங்க விரும்பும் அணியிடம் குறைந்தபட்சம் ரூ.16 கோடி இருக்க வேண்டும்.

ஆனால் ரோகித் சர்மா இதைச் செய்ய விரும்புவாரா அல்லது அவருக்குப் பிடித்த அணியுடன் இன்னும் சில ஆண்டுகள் செலவழித்து அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பாரா?

ஒன்று மட்டும் நிச்சயம், அவர் எங்கிருந்தாலும் பார்வையாளர்களிடமிருந்து அபரிமிதமான அன்பைப் பெறுவார்.

https://www.bbc.com/tamil/articles/cldr2re36l4o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரச்சின் ரவீந்திரா, மிட்செலை சென்னை அணி வாங்கியது ஏன்? தோனிக்கு பிறகு கேப்டன் யார்?

ஐ.பி.எல். , சி.எஸ்.கே, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

19 டிசம்பர் 2023
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

“எம்எஸ் தோனிக்கு மாற்றாக நாங்கள் 10 ஆண்டுகளாகத் திட்டம் வைத்திருக்கிறோம். அவரின் ஓய்வு பேசுபொருளாகத்தான் இருந்து வருகிறது. ஆனால், எப்போதுமே தோனி சுறுசுறுப்பாக இருக்கிறார், கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கிறாரே. அவரின் உற்சாகம், கிரிக்கெட் மீதான காதல், அணியின் மீதான பற்று அவரை தொடர்ந்து இயங்க வைக்கிறது”

சிஎஸ்கே அணி குறித்தும், எதிர்காலத் திட்டம் குறித்தும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்கிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் அளித்த பதில்.

இதன் மூலம் சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்தும், ஐபிஎல் தொடரிலிருந்தும் மகேந்திர சிங் தோனி இப்போதைக்கு ஓய்வு அறிவிக்க மாட்டார் என்பதையே அவர் சூசமாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தனக்கு ஈடான சிறந்த கேப்டனை கண்டுபிடிக்கும் வரை, உருவாக்கும் வரை தோனி கேப்டனாகத் தொடர்வார் என்று கூட வைத்துக்கொள்ளலாம் என்று பிளெம்மிங் பேச்சின் மூலம் தெரிகிறது.

தோனியும் வியூகமும்

தோனி தலைமையில் சிஎஸ்கே அணி களத்துக்கு வந்துவிட்டாலே, அவர் எவ்வாறு வீரர்களைக் கையாள்வார், எந்தெந்த வீரர்களுக்கு எப்போது பந்துவீச வாய்ப்பளிப்பார், பீல்டிங் வியூகம் என அனைத்துமே ரசிகர்களுக்கு மட்டுமின்றி, எதிர் அணியினரும் எதிர்பார்ப்புடன் பார்க்கக் காத்திருப்பார்கள்.

அந்த வகையில் ஐபிஎல் ஏலத்தில் வேண்டாம் என நிராகரிக்கப்பட்ட பல வீரர்களை சிஎஸ்கே அணி விலைக்கு வாங்கி அவர்களை சிறப்பாகப் பயன்படுத்தி அவர்களை வேறு கோணத்தில் காட்டியதுண்டு.

உதாரணமாக ரஹானே, ஷிவம் துபே, மொயின் அலி போன்றோர் நடுவரிசையில் நிதானமாக ஆடக்கூடிய பேட்டர்கள். ஆனால், சிஎஸ்கே அணிக்கு வந்தபின் அவர்களின் பேட்டிங் வியூகமும், ஸ்டைலும் மாறிவிட்டது. எந்த வீரர்களாக இருந்தாலும் சிஎஸ்கே அணிக்குள் வந்துவிட்டாலே அவர்களை தங்களுக்கு ஏற்றார் போல் மாற்றிக்கொள்ளும் திறமை தோனிக்கும், சிஎஸ்கே பயிற்சிக்கும் இருக்கிறது என்று அந்த அணியில் உள்ள பல வீரர்கள் பேட்டியிலேயே தெரிவித்துள்ளனர்.

ஐ.பி.எல். , சி.எஸ்.கே, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

இந்த ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணியிலிருந்து அம்பதி ராயுடு, பென் ஸ்டோக்ஸ், தென் ஆப்பிரிக்காவின் டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரன்சு சேனாபதி, ஆகாஷ் சிங், நியூசிலாந்து வீரர் கெயில் ஜேமிசன், சிசான்டா மகாலா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இவர்களின் இடத்தை நிரப்பும் வகையில் ஏலத்திலும் புதிய வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஆல்ரவுண்டர்களுக்கு வலை

சி.எஸ்.கே அணி ஏலத்துக்குள் நுழையும் போது அதன் கையிருப்பாக ரூ.31.40 கோடி இருந்தது. கிறது. இந்தத் தொகையை வைத்து, ஏலத்தைச் சந்தித்தது. முதலில் சிஎஸ்கே அணி நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா மீது குறி வைத்தது.

ஐபிஎல் ஏலத்தில் ரச்சின் ரவீந்திராவை சிஎஸ்கே வாங்க முயற்சிக்கும் என்று ஏற்கெனவே பிபிசி செய்திகள் செய்தி வெளியிட்டிருந்தநிலையில் அது உண்மையாகிது. உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியில் இடம் பெற்று சிறப்பாகச் செயல்பட்ட இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ரச்சின் ரவீந்திராவுக்கு அடிப்படை விலை ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்து. ஆனால், கடும் போட்டிக்குப்பின் அவரை ரூ.1.80 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விலைக்கு வாங்கியது.

ரச்சின் ரவீந்திரா அவசியம் ஏன்?

சிஎஸ்கே அணிக்கு கெய்க்வாட்டுடன் சேர்ந்து ஆட்டத்தைத் தொடங்க சிறந்த தொடக்க ஆட்டக்காரர் அவசியம் தேவை. அதனால்தான் தொடக்க ஆட்டகாரருக்காக இடதுகை பேட்டர் ரச்சின் ரவீந்திராவை வாங்கியுள்ளது சிஎஸ்கே. அது மட்டுமல்லாமல் ரவீந்திரா சிறந்த சுழற்பந்துவீச்சாளர் என்பதால், நடுப்பகுதி ஓவர்களிலும் ரவீந்திராவை தோனியால் சிறப்பாகப் பயன்படுத்த முடியும்.

இதுபோன்ற இளம் வீரர்களை தோனி சிறப்பாக பயன்படுத்தி அணியின் வெற்றிக்கு துருப்புச்சீட்டாக்குவார் என்பதில் சந்தேகமில்லை.

ஐ.பி.எல். , சி.எஸ்.கே, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ராயுடு இடத்தை நிரப்பும் மிட்செல்

அடுத்ததாக நியூசிலந்து ஆல்ரவுண்டர் டேரல் மிட்செல் ரூ.14 கோடிக்கு ஏலத்தில் விலைக்கு வாங்கியது சிஎஸ்கே அணி. ஆல்ரவுண்டர் டேரல் மிட்செல் கடந்த சீசனில் விலை போகவில்லை. ஆனால் இந்த முறை ஏலத்தில் அவரை அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாயிலிருந்து ரூ.13 கோடி அதிகமாக ரூ.14 கோடிக்கு வாங்கியது.

சிஎஸ்கே அணியில் ஆல்ரவுண்டர்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் வழங்கப்படும். அதனால்தான் ஆல்ரவுண்டர்கள் ஏலத்தில் வரும்போது அவர்களை தேர்ந்தெடுத்து விலைக்கு வாங்குவதை சிஎஸ்கே வியூகமாக வைத்துள்ளது. ஏற்கெனவே ரவீந்திராவை வாங்கியநிலையில் டேரல் மிட்செலை வாங்கியுள்ளது.

டி20 போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்துள்ள மிட்செலின் ஸ்ட்ரைக் ரேட் 137க்கும் மேல் வைத்திருக்கிறார். ஒன்டவுன் மற்றும் நடுவரிசையில் அம்பதி ராயுடுவுக்குப் பதிலாக களமிறக்க மிட்ஷெலை விலைக்கு வாங்கியுள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.

சிஎஸ்கே அணியில் அம்பதி ராயுடு தூண் போல் இருந்துவந்தார். ராயுடு ஒரு ‘மேட்ச் வின்னர்’. களத்தில் நங்கூரமிட்டுவிட்டால், ராயுடு ஆட்டத்தை வென்று கொடுக்கும் திறமை கொண்டவர். அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டது சி.எஸ்.கே அணிக்குச் சிறிய பலவீனம் என்றாலும் அதை வேறு ஒரு சரியான பேட்டர் மூலம் ஈடுகட்ட முயற்சித்து டேரல் மிட்ஷெலை வாங்கியுள்ளது. ராயுடு இடத்தை நிரப்புவது கடினம் என்றாலும், அவரின் இடத்துக்கு வலுவான ஒரு பேட்டர் தேவை என்பதால், டேரல் மிட்செல் வாங்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். , சி.எஸ்.கே, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிஎஸ்கே அணியில் மீண்டும் ஷர்துல்

வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஷர்துல் தாக்கூர் ரூ.4 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியில் ஷர்துல் தாக்கூர் நீண்டகாலமாக இருந்து வந்தார், கடந்த இரு சீசன்களுக்கு முன்பாகவே விடுவிக்கப்பட்டநிலையில் மீண்டும் வாங்கப்பட்டுள்ளார். தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூரை வைத்துக்கொண்டு பல போட்டிகளை தோனி வென்று காட்டியுள்ளார். தோனிக்கு ஏற்ற தளபதியாக இருவரும் பலநேரங்களில் பந்துவீசி விக்கெட்டுகளையும் வீழ்த்தி, அணியை வெல்ல வைத்துள்ளனர். ஆதலால், மீண்டும் ஷர்துலை சிஎஸ்கே அணி நிர்வாகம் வாங்கியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கடைசிவரை பேட்ஸ்மேன் வைத்திருக்கவேண்டிய நிர்பந்தம் இன்றைய அணிகளுக்கு இருக்கிறது. ஷர்துல் தாக்கூர் நன்றாகவே பேட்டிங் செய்யக்கூடியவர், பிஞ்ச் ஹிட்டராக செயல்படக்கூடியவர் என்பதால், அவரை ரூ.4 கோடிக்கு சிஎஸ்கே நிர்வாகம் வாங்கியது.

யார் இந்த சமீர் ரிஸ்வி?

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய அன்கேப்டு வீரரும், 20 வயதான சமீர் ரிஸ்வி என்ற வீரரை ரூ.8.40 கோடிக்கு வாங்கியுள்ளது சிஎஸ்கே நிர்வாகம். உத்தரப்பிரேதசத்தைச் சேர்ந்த பேட்டர் சமீர் ரிஸ்வி. இவரின் அடிப்படை விலையே ரூ.20 லட்சம்தான். ஆனால், இவரை வாங்குவதற்கு குஜராத் டைட்டன்ஸ் அணியும், சிஎஸ்கேவும் கடும்போட்டியிட்டன, இடையே டெல்லி கேபிடல்ஸ் அணியும் சேர்ந்து போட்டியிட்டது.

உத்தரப்பிரதேச டி20 லீக் தொடரில் 9 இன்னிங்ஸில் 2 சதங்கள் உள்பட 455 ரன்கள் சேர்த்தால் சமீர் ரிஸ்வி அனைவராலும் உற்றுநோக்கப்பட்டார். 20வயதான ரிஸ்வி பிக்ஹிட்டர், பெரிய ஷாட்களை அடிக்கும் வல்லமை படைத்தவர். சமீபத்தில் நடந்த முஸ்தாக் அலி தொடரில் 18 சிக்ஸர்களை ரிஸ்வி விளாசியுள்ளார். தான் சந்தித்த ஒவ்வொரு 11 பந்துகளிலும் ஒரு சிக்ஸரை ரிஸ்வி பறக்கவிட்டதால் சிஎஸ்கே அவரை கொத்திக் கொண்டது.

இதுவரை 11 டி20 போட்டிகளில் மட்டுமே ரிஸ்வி விளையாடி 295 ரன்கள் சேர்த்து 49 ரன்கள் சராசரி வைத்துள்ளார். வலதுகை பேட்டரான ரிஸ்வி ஆடவருக்கான மாநில அளவிலான 23வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் 2 சதங்கள், 2 அரைசதங்கள் அடித்து இறுதிப்போட்டியில் 84 ரன்கள் சேர்த்து உத்தரப்பிரதேசம் வெல்ல காரணமாக அமைந்தார். இந்தத் தொடரில் 37 சிக்ஸர்களை ரிஸ்வி விளாசி இருந்தார். இதனால், ரிஸ்வியை ரூ.8.40 கோடிக்கு விலைக்கு வாங்கியது சிஎஸ்கே அணி.

சிஎஸ்கே அணியில் கிரேட் ஃபினிஷராக தோனி இருந்தாலும் அவரின் பணிச் சுமையைக் குறைக்க மற்றொரு வீரரை உருவாக்குவதும் அவசியம். அதனால்தான் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே நிர்வாகம் விலைக்கு வாங்கி உருவாக்க இருக்கிறது. மேட்ச் பினிஷிங்கில் சிறப்பாகச் செயல்படும் ரிஸ்வியின் ஸ்ட்ரைக் ரேட் 130 மேல் வைத்துள்ளார். மேலும், டெத் ஓவர்களை விளாசி, பெரிய ஷாட்களை அடிக்கும் திறமை கொண்டவர் என்பதால், பெரிய ஸ்கோரை எடுப்பதற்கு இதுபோன்ற பேட்டர்கள் அவசியம் என்பதால் ரிஸ்வியை சிஎஸ்கே வாங்கியுள்ளது.

முதல் வங்கதேச வீரர்

சிஎஸ்கே அணியில் இடதுகை பேட்டர், வேகப்பந்துவீச்சாளர் பல நேரங்களில் துருப்புச் சீட்டாக இருந்துள்ளனர். ஆதலால்தான் கடந்த காலங்களில் இருந்தே இடதுகை பேட்டர்களுக்கும், ஸ்விங் பந்துவீச்சாளர்களுக்கும் முக்கியம் அளிக்கப்படும். இந்தமுறை ஏலத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபிசுர் ரஹ்மான் ரூ.2 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

சிஎஸ்கே அணியில் வங்கதேசத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் இடம் பெறுவது இதுதான் முதல்முறையாகும். இடதுகை வேகப்பந்துவீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்யக்கூடிய திறமை படைத்தவர். இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

டெத் ஓவர்களில் சிறப்பாகவும் பந்துவீசும் திறமை கொண்டவர் என்பதால் முஸ்தபிசுர் ரஹ்மானை சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. சிஎஸ்கே கேப்டன் தோனியிடம், இவர் போன்ற வீரர் கிடைக்கும்போது, சரியான தருணத்தில் பயன்படுத்தி, வெற்றியும் பெறுவார், அந்த வீரரையும் உலகறியச் செய்வார்.

புதிய பந்தில் பந்துவீச தீபக் சஹர், பதீரணாவுடன் அல்லது மாற்றாக ஒரு பந்துவீச்சாளர் தேவை என்பதால், முஸ்தபிசுர் ரஹ்மான் வாங்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணிக்கு வரும் சீசனில் தொடக்கப் பந்துவீச்சாளராகக் கூட முஸ்தபிசுர் மாறினாலும் ஆச்சயர்யப்படுவதற்கில்லை.

பேட்டிங்கில் நடுவரிசையில் அம்பதி ராயுடு இடத்தை நிரப்ப டேரல் மிட்ஷெலும், கெய்க்வாட்டுடன் ஆட்டத்தைத் தொடங்க ரச்சின் ரவீந்திராவும் வாங்கப்பட்டுள்ளனர். கடந்த சீசனில் டேவன் கான்வே ஆட்டத்தைத் தொடங்கினாலும், இந்த சீசனில் ரவீந்திரா அல்லது கான்வே என மாற்றி மாற்றி பயன்படுத்தப்படக்கூடும். இதில் கூடுதலாக ரவீந்திரா ஆல்ர்வுண்டர் என்பதால் அதிகமான வாய்ப்புக் கிடைக்கலாம்.

தோனிக்குப் பின் சிஎஸ்கே கேப்டன் யார்?

தோனி இல்லாத சிஎஸ்கே அணி, சிஎஸ்கே அணியையும் தோனியையும் பிரிக்க முடியாது. ஆனால், இதுபோன்ற வார்த்தைகளை கால மாற்றத்தால் ஏற்கத்தான் வேண்டும். ஆனால், தோனிக்குப்பின் அடுத்த கேப்டன் யார் என்பதை ரசிகர்களும், பல முன்னாள் வீரர்களும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை அதற்குரிய சரியான பதில் சிஎஸ்கே நிர்வாகத்திடம் இல்லை.

ஏற்கெனவே ஜடேஜாவிடம் கேப்டன்சியைக் கொடுத்து கையைச் சுட்டுக்கொண்டதால், அடுத்த கேப்டனாக இளம் வீரரிடம்தான் பொறுப்பு வழங்கப்படும். அந்த இளம் வீரருக்கு தோனி குறைந்தபட்சம் சில சீசன்களுக்கு பயி்ற்சி அளிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் வரலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில் ரச்சின் ரவீந்திராவை வாங்கியபின், அவரின் பெயரும் கேப்டனுக்கு பரிசீலிக்கப்படும் எனத் தெரிகிறது.

சி.எஸ்.கே அணியும் சரி, தோனியும் சரி தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள், தங்களின் முடிவும், தேர்ந்தெடுக்கும் வீரர்களும் நீண்டகாலத்துக்கு நிலைத்திருக்க வேண்டும் என விரும்புவர்கள். ஆதலால் அணியின் எதிர்காலம் கருதி இளம் வீரர் ஒருவர் கேப்டனாக வரலாம்.

ஐ.பி.எல். , சி.எஸ்.கே, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிஎஸ்கே அணி விவரம்

மகேந்திர சிங் தோனி(கேப்டன்), மொயின் அலி, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், டேவன் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா,

ரச்சின் ரவீந்திரா, அஜெய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பதீரணா, அஜின்கயே ரஹானே, ஷேக் ரஷீத், மிட்ஷெல் சான்ட்னர், மிட்ஷெல், சிமர்ஜித் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஸனா, சமீர் ரிஸ்வி, முஸ்தபிசுர் ரஹ்மான்.

https://www.bbc.com/tamil/articles/cv2jx2g073ro

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவ்வளவு ஏலத் தொகை கிடைக்குமென நான் எதிர்பார்க்கவில்லை! - மிட்செல் ஸ்டார்க் 

20 DEC, 2023 | 09:34 PM
image

ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்திய மதிப்பின்படி, 24 3/4 கோடி ரூபாய்க்கு விலை போயிருக்கிறார். 

33 வயதான இவர் சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் 16 விக்கெட்டுகளை (10 ஆட்டம்) கைப்பற்றியிருந்தார். 

இந்த ஏலம் தொடர்பில் அவர் கூறுகையில், 

உண்மையில் எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. இவ்வளவு தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது மனைவி அலிசா ஹீலி (அவுஸ்திரேலியா பெண்கள் அணியின் தலைவர்) தற்போது இந்தியாவில் விளையாடி வருகிறார். 

ஏலத்தில் எனது தொகை விபரத்தை நான் பார்ப்பதற்கு முன்பே எனக்கு சொல்லிவிட்டார். இனி கொஞ்சம் நெருக்கடி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நான் கடைசியாக விளையாடிய ஐ.பி.எல்லில் பெற்ற அனுபவம், அதை சமாளிக்க உதவும் என்று நம்புகிறேன். முடிந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பேன் என்றார்.

https://www.virakesari.lk/article/172173

  • கருத்துக்கள உறவுகள்
Posted

IPL 2024 தொடரில் களமிறங்கவுள்ள வீரர்களின் விபரம்

IPL-cup.jpg

2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் இறுதி வரை நடைபெறவுள்ளது.

அந்த தொடருக்கான வீரர்களின் ஏலம் நேற்று (19) துபாயில் நடைபெற்றது.

இலங்கை வீரர்களான டில்ஷான் மதுஷங்க மற்றும் நுவன் துஷாராவை மும்பை இந்தியன்ஸ் அணியும், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்காவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் வாங்கியது.

2024 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்காக விளையாடும் அணிகளின் விபரம் பின்வருமாறு,

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில்

MS Dhoni (C)
Devon Conway
Ajinkya Rahane
Aravelly Avanish
Ruturaj Gaikwad
Shaik Rasheed
Moeen Ali
Shivam Dube
Rajvardhan Hangargekar
Ajay Mandal
Daryl Mitchell
Nishant Sindhu
Rachin Ravindra
Mitchell Santner
Deepak Chahar
Tushar Deshpande
Mukesh Choudhary
Mustafizur Rahman
Matheesha Pathirana
Simarjeet Singh
Prashant Solanki
Shardul Thakur
Maheesh Theekshana
Sameer Rizvi

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியில்

David Warner (C)
Ricky Bhui
Yash Dhull
Prithvi Shaw
Rishabh Pant
Abishek Porel
Harry Brook
Shai Hope
Tristan Stubbs
Lalit Yadav
Axar Patel
Mitchell Marsh
Sumit Kumar
Khaleel Ahmed
Kuldeep Yadav
Lungi Ngidi
Vicky Ostwal
Jhye Richardson
Swastik Chikara
Praveen Dubey
Mukesh Kumar
Anrich Nortje
Rasikh Salam
Ishant Sharma
Kumar Kushagra

குஜராத் டைட்டன்ஸ் அணியில்

Shubman Gill (c)
David Miller
Robin Minz
Wriddhiman Saha
Sai Sudharsan
M Shahrukh Khan
Matthew Wade
Kane Williamson
Azmatullah Omarzai
Abhinav Manohar
Rashid Khan
Vijay Shankar
Rahul Tewatia
Spencer Johnson
Kartik Tyagi
Josh Little
Mohammed Shami
Darshan Nalkande
Noor Ahmad
Sai Kishore
Mohit Sharma
Jayant Yadav
Umesh Yadav
Sushant Mishra

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில்

Shreyas Iyer (c)
Srikar Bharat
Manish Pandey
Rahmanullah Gurbaz
Ramandeep Singh
Nitish Rana
Jason Roy
Sherfane Rutherford
Rinku Singh
Venkatesh Iyer
Sunil Narine
Anukul Roy
Andre Russell
Vaibhav Arora
Gus Atkinson
Harshit Rana
Mujeeb Ur Rahman
Chetan Sakariya
Mitchell Starc
Suyash Sharma
Varun Chakravarthy
Angkrish Raghuvanshi
Sakib Hussain

லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணியில்

KL Rahul (c)
Quinton de Kock
Nicholas Pooran
Ayush Badoni
Devdutt Padikkal
Ashton Turner
Krishnappa Gowtham
Deepak Hooda
Arshin Kulkarni
Kyle Mayers
Krunal Pandya
Marcus Stoinis
David Willey
Arshad Khan
Mohsin Khan
Ravi Bishnoi
Manimaran Siddharth
Mayank Yadav
Yudhvir Singh
Mohsin Khan
Amit Mishra
Naveen-ul-Haq
Shivam Mavi
Mark Wood
Yash Thakur

மும்பை இந்தியன்ஸ் அணியில்

Hardik Pandya (c)
Rohit Sharma
Ishan Kishan
Nehal Wadhera
Tim David
Vishnu Vinod
Suryakumar Yadav
Dewald Brevis
Shreyas Gopal
Mohammad Nabi
Tilak Varma
Piyush Chawla
Anshul Kamboj
Shams Mulani
Romario Shepherd
Jason Behrendorff
Jasprit Bumrah
Gerald Coetzee
Kumar Kartikeya
Akash Madhwal
Dilshan Madushanka
Arjun Tendulkar
Nuwan Thushara
Naman Dhir
Shivalik Sharma

பஞ்சாப் கிங்ஸ் அணியில்

Shikhar Dhawan (c)
Harpreet Singh
Rilee Rossouw
Jonny Bairstow
Prabhsimran Singh
Jitesh Sharma
Sam Curran
Liam Livingstone
Shivam Singh
Atharva Taide
Rishi Dhawan
Shashank Singh
Sikandar Raza
Chris Woakes
Arshdeep Singh
Nathan Ellis
Vidwath Kaverappa
Kagiso Rabada
Rahul Chahar
Harpreet Brar
Harshal Patel
Prince Choudhary
Ashutosh Sharma
Tanay Thyagarajan
Vishwanath Singh

ராஜஸ்தான் ரோயல் அணியில்

Sanju Samson (c)
Shubham Dubey
Yashasvi Jaiswal
Tom Kohler-Cadmore
Rovman Powell
Jos Buttler
Shimron Hetmyer
Dhruv Jurel
Riyan Parag
Kunal Singh Rathore
Ravichandran Ashwin
Donovan Ferreira
Nandre Burger
Avesh Khan
Yuzvendra Chahal
Navdeep Saini
Kuldeep Sen
Abid Mushtaq
Trent Boult
Prasidh Krishna
Sandeep Sharma
Adam Zampa

சன்ரைஸஸ் ஹைதராபாத்

Aiden Markram (c)
Mayank Agarwal
Fazalhaq Farooqi
Marco Jansen
Heinrich Klaasen
Bhuvneshwar Kumar
Umran Malik
Mayank Markande
T Natarajan
Glenn Phillips
Nitish Kumar Reddy
Abdul Samad
Abhishek Sharma
Anmolpreet Singh
Sanvir Singh
Upendra Yadav
Pat Cummins
Travis Head
Shahbaz Ahmed
Jaydev Unadkat
Wanindu Hasaranga
Akash Singh
Jhatavedh Subramanyan
Rahul Tripathi
Washington Sundar

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில்

Faf du Plessis (c)
Shahbaz Ahmed
Finn Allen
Manoj Bhandage
Michael Bracewell
Akash Deep
Josh Hazlewood
Kedar Jadhav
Dinesh Karthik
Siddarth Kaul
Virat Kohli
Rajan Kumar
Mahipal Lomror
Glenn Maxwell
Wayne Parnell
Harshal Patel
Suyash Prabhudessai
Anuj Rawat
Karn Sharma
Himanshu Sharma
Avinash Singh
Mohammed Siraj
Vijaykumar Vyshak
Sonu Yadav

https://thinakkural.lk/article/285384

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போட்டிகளை இப்போதிருந்தே தயார் படுத்துமாறு திரு  @கிருபன் அவர்களை யாழ் போட்டியாளர் சார்பாக வேண்டுகிறேன்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, ஈழப்பிரியன் said:

போட்டிகளை இப்போதிருந்தே தயார் படுத்துமாறு திரு  @கிருபன் அவர்களை யாழ் போட்டியாளர் சார்பாக வேண்டுகிறேன்.

@ஈழப்பிரியன் ஐயா,

போட்டிகளுக்கான அட்டவணை எப்போது வருகின்றதோ அப்போது பார்க்கலாம். குறைந்தது பத்துபேர் கலந்துகொண்டால்தான் நடத்தமுடியும்

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, கிருபன் said:

@ஈழப்பிரியன் ஐயா,

போட்டிகளுக்கான அட்டவணை எப்போது வருகின்றதோ அப்போது பார்க்கலாம். குறைந்தது பத்துபேர் கலந்துகொண்டால்தான் நடத்தமுடியும்

இப்பவே 4 பேர் தயார் தானே!


ஈழப்பிரியன் அண்ணை

சுவியண்ணை

கிருபனண்ணை

ஏராளன்

அப்பிடியே 15-20 பேர் வந்து குதிப்பினம் பாருங்கோ.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

கிருபனண்ணை

கிருபனைத் தவிர்த்து!😁

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை..இரண்டு வருடங்களுக்கு முன்பே சிலை வைத்து விட்டார்கள்  தற்போது அதை விகாரையாக்கினார்கள் என்று தான் .நான் கேள்வி பட்டேன்   
    • பகிர்வுக்கு நன்றி @ஏராளன். இதே போன்ற கட்டுரையை ஜெயராஜ் முன்னமும் 2,3 தரம் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். @ரசோதரன் கூறுவது போல் இவருடைய பாணி கதை போல இருந்தாலும், பத்தி எழுத்தாளர்களுக்கு இது பொதுவான தன்மை தான். ஜனரஞ்சக பத்திகள் தகவல்களை மட்டும் கொண்டு இருந்தால் பலருக்கு அலுப்புத் தட்டி விடும் என்பதால் அப்பிடி எழுதுகிறார்கள் போலும்.
    • தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு  நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு  சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை  போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும்  அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார்  அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்   
    • ஒலியின் வேகத்தை விட ஏறத்தாள  ஐந்து(5) மடங்கு அதிகமான வேகத்தில் பயணம் செய்தால் நியோர்க் நகரத்தில் இருந்து இலண்டன் நகரை ஒரு(1) மணி நேரத்தில் அடையலாம். மஸ்க்கின் SpaceX ராக்கட்டை சுரங்கத்துக்குள்ளால் செலுத்தினால்  மேற்குறிப்பிட்ட சுப்பர்சோனிக் வேகம் (Mach 5)  சாத்தியமாகலாம்.
    • சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரச்சனை என்று அவசர அவசரமாக வந்த சுகாதார அமைச்சர் யாழ் வைத்தியசாலையில் வைத்தே பேச்சுவார்த்தை முடித்து திருப்பி அனுப்பப்படுகிறார் என்றால் இரும்புக் கரங்கள் இருக்கின்றன.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.