Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

எப்போது வினாத் தொடுப்பீர்!
----------------------------------------------
எரிகின்ற காசாவிலிருந்து
என்னதான் கிடைக்கும்
எலும்புகளும் கிடைக்காது
ஏனென்றால் 
பார்வைக்குக் சிறுமீன்போல்
திமிங்கலமாய் நெளிகின்ற
இஸ்ரவேலே விழுங்கிவிடும்
அப்போ எதற்காக 
இந்தப் போருக்குள்
மேற்கு மேய்கிறது
அரபுலகை வெட்டுகின்ற 
தங்கக் கத்தியாக 
இஸ்ரவேல் இருக்கிறது
அதனால் இருக்குமோ!
எவளவு மக்கள் 
எவளவு பலஸ்தீனர்
எவளவு சிறுவர்கள்
எவளவு குழந்தைகள் 
எவளவு மழலைகள்
அழிந்தொழிந்து போனாலும்
அதைப்பற்றிக் கவலையேது!
எமக்குத் தேவை
எமது தேவைகள் நிறைவேற
எந்தடையும் இல்லாத
உலக வெளிதேவை
ஊடறுப்போர் யாரெனினும்
நாளையது 
இஸ்ரவேலேயானாலும்
பாலஸ்தீனத்தை வைத்தே
படை நடாத்தி அடக்கிடுவோம்
இனமென்ன நாடென்ன
எமக்கேதும் கவலையில்லை
கவலையெல்லாம் எம்மிருப்பே
காரணத்தை அறியாத 
உலகின் கடைநிலை மனிதனது
தலைமேலும் கவிறது
யுத்தவெறிச் செலவு!
கண்ணாடி மாளிகையில்
போர் நடக்கும் இடங்களிலே
விழுகின்ற தலைக் கணக்கு
எழுதுகின்ற ஐ நாவோ
வெற்றுக் கடதாசி
வெறும் பேச்சு நிறுவனமாய்
போனதினை அறியாமல்
மக்களது அங்கலாய்ப்பு!
உலக மக்களெல்லாம்
இனக்கொலைகளுக்கு எதிராகக்
குரல்கொடுக்கத் துணியாவிடில்
தம் நலன்களுக்காக 
இனங்களை அழிக்கத் 
துணிந்திடும் ஆதிக்க சக்திகளின்
தொடர்கதையாய் உலகழியும்
நிலைதோன்றும் முன்னாலே
உலகே விழித்தெழமாட்டாயா!
இனக் கொலைகளின் பின்னிற்கும்
ஆதிக்க உலகினது
முகத்திலே நீ அறைந்து
எப்போது வினாத் தொடுப்பாய்
அதுவரை இவர்களது 
ஆட்டங்கள் ஓயாது!
தம் தேவைகளை அடைவதற்கு
அரசுகளை அழித்தொழித்து
கைப்பாவை அரசுகளை 
நிறுவி ஆட்டுவிக்கும்
ஆதிக்க உலகினது
அடிமைகளாய் உலக மக்கள்
உள்ளவரை ஓயாது போர்முனைகள்
தணிவதும் மூள்வதுமாய்
உலகம் துயரத்துள் சிதைகிறது
சிதைவினிலே வாழ்கின்ற
சீர் மிகு நாடுகளோ
மனித உரிமையின்
காவலராய் வேடமிடும்
அற்பத்தனத்தாலே
அழிகின்ற உலகமதை
யார் வருவார் காத்திடவே!

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • Like 6
  • Thanks 2
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிக மிக அருமையான கவிதை .......அப்படியே யதார்த்தத்தை எடுத்தியம்புகிறது......!  👍

நன்றி நொச்சி ........!

Posted

ஆயுத்ததை வைத்து வயிறு வளர்ப்பவர்களுக்கு  போர் தன்நாட்டில் இல்லாமல் எங்கு நடந்தாலும் போரை எண்ணையை ஊற்றி வளர்ப்பார்கள்.
    யதார்த்த    கவிதைக்கு நன்றி , நொச்சி. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/11/2023 at 22:21, nochchi said:

எரிகின்ற காசாவிலிருந்து
என்னதான் கிடைக்கும்

பலஸ்தீனாவில்  மேற்குலக செய்தி ஊடகங்கள்  வெளியே சொல்ல முடியாத அளவிற்கு பல கொடூரங்கள் நடந்தேறுகின்றன. உண்மைகளை சொல்லும் ஊடங்களை தடை செய்து விட்டு பொதுமக்கள் மீதான அழிவுகளை செய்கின்றார்கள்.ஒரு இனத்தையே அழித்து முடிப்பார்கள் என பேசிக்கொள்கின்றார்கள்.

கவிதை பல கதைகளை சொல்லுகின்றது நொச்சி......🙏🏼

We wish you a Merry Christmas and a Happy New Year.

GBqqILaW0AAjor3?format=jpg&name=small

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

படித்து விருப்புப் புன்னகைகளை வழங்கிய நிலாமதி,சுவி,நுணாவிலான்,தமிழ்சிறி,ஏராளன் மற்றும் குமரசாமி ஐயா ஆகியோருக்கும், நன்றியியம்பிய ஈழப்பிரியனவர்களுக்கும் நட்பார்ந்த நன்றிகள் உரித்தாகுக.

22 hours ago, suvy said:

மிக மிக அருமையான கவிதை .......அப்படியே யதார்த்தத்தை எடுத்தியம்புகிறது......!  👍

நன்றி நொச்சி ........!

சுவியவர்களே பாராட்டுக்கு நன்றி. 

21 hours ago, nunavilan said:

ஆயுத்ததை வைத்து வயிறு வளர்ப்பவர்களுக்கு  போர் தன்நாட்டில் இல்லாமல் எங்கு நடந்தாலும் போரை எண்ணையை ஊற்றி வளர்ப்பார்கள்.
    யதார்த்த    கவிதைக்கு நன்றி , நொச்சி. 

நுணாவிலானவர்களே பாராட்டுக்கு நன்றி. இந்த உலகு அமைதிபெற நாடுகள் நினைத்தாலும், ஆயுத வியாபாரிகளும், ஆதிக்க அரசுகளும் விடமாட்டார்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, குமாரசாமி said:

பலஸ்தீனாவில்  மேற்குலக செய்தி ஊடகங்கள்  வெளியே சொல்ல முடியாத அளவிற்கு பல கொடூரங்கள் நடந்தேறுகின்றன. உண்மைகளை சொல்லும் ஊடங்களை தடை செய்து விட்டு பொதுமக்கள் மீதான அழிவுகளை செய்கின்றார்கள்.ஒரு இனத்தையே அழித்து முடிப்பார்கள் என பேசிக்கொள்கின்றார்கள்.

கவிதை பல கதைகளை சொல்லுகின்றது நொச்சி......🙏🏼

We wish you a Merry Christmas and a Happy New Year.

GBqqILaW0AAjor3?format=jpg&name=small

குமரசாமிஐயா அவர்களே பாராட்டுக்கு நன்றி.பட இணைப்புக்கும் நன்றி. நகர வீதிகளில் தொங்கும் மின் ஒளித் தோரணங்களும், நகர மையத்தை அலங்கரிக்கும் உயரமான போன்றனவற்றைப் பார்க்கும்போது மனதில் மகிழ்வு வரவில்லை. அந்த மரம்கூட இன்னொரு மரத்தின் அழிப்பில் உருவான அடையாளம் தானே!

8 hours ago, ஈழப்பிரியன் said:

நெஞ்சைத் தொட்டு செல்லும் கவிதை.

நன்றி நொச்சி.

ஈழப்பிரியன் அவர்களே பாராட்டுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, குமாரசாமி said:

பலஸ்தீனாவில்  மேற்குலக செய்தி ஊடகங்கள்  வெளியே சொல்ல முடியாத அளவிற்கு பல கொடூரங்கள் நடந்தேறுகின்றன. உண்மைகளை சொல்லும் ஊடங்களை தடை செய்து விட்டு பொதுமக்கள் மீதான அழிவுகளை செய்கின்றார்கள்.ஒரு இனத்தையே அழித்து முடிப்பார்கள் என பேசிக்கொள்கின்றார்கள்.

கவிதை பல கதைகளை சொல்லுகின்றது நொச்சி......🙏🏼

We wish you a Merry Christmas and a Happy New Year.

GBqqILaW0AAjor3?format=jpg&name=small

மேற்கின் வரலாறு. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kapithan said:

மேற்கின் வரலாறு. 

☹️

மேற்குலகம் இன்னொரு இனத்தை அழிக்காமல் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, குமாரசாமி said:

மேற்குலகம் இன்னொரு இனத்தை அழிக்காமல் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.😎

வரலாறு முழுவதும் கழுத்தறுப்புக்கள்தான். ஆனால் மேற்கைப் போன்று,  கழுத்தை அறுத்துக்கொண்டே கொல்லாமை, மனித உரிமை பற்றி பிற இனங்கள் எதுவும் கொல்லப்படுபவனுக்கே வகுப்பெடுக்கவில்லை. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, Kapithan said:

வரலாறு முழுவதும் கழுத்தறுப்புக்கள்தான். ஆனால் மேற்கைப் போன்று,  கழுத்தை அறுத்துக்கொண்டே கொல்லாமை, மனித உரிமை பற்றி பிற இனங்கள் எதுவும் கொல்லப்படுபவனுக்கே வகுப்பெடுக்கவில்லை. 

☹️

அதுக்கு பெயர் நன்றிக்கடனாம் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிக மிக அருமையான கவிதை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, alvayan said:

மிக மிக அருமையான கவிதை

படித்துக் கருத்தைப் பதிவுசெய்த அல்வாயானவர்களுக்கும், நன்றியியம்பிய கப்பித்தனவர்களுக்கும் நட்பார்ந்த நன்றிகள் உரித்தாகுக.

  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.