Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

உமாகரன் இராசையா, கவிதைகளால் புகழடைந்தவர்.

தீபாவளி பற்றிய கருத்து வைரலாகிறது.

அந்நியரை ஆளவிட்டேன், அடியிலே தடியை விட்டான்.....

சோழர்களின் காவேரி வெற்றியே ஜப்பசியில் கொண்டாடப்படுகிறது.

அதனை ஆரியம் நரகாசுர வத வெற்றியாக மாற்றி விட்டது என்கிறாரோ?

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
50 minutes ago, Nathamuni said:

உமாகரன் இராசையா, கவிதைகளால் புகழடைந்தவர்.

தீபாவளி பற்றிய கருத்து வைரலாகிறது.

அந்நியரை ஆளவிட்டேன், அடியிலே தடியை விட்டான்.....

சோழர்களின் காவேரி வெற்றியே ஜப்பசியில் கொண்டாடப்படுகிறது.

அதனை ஆரியம் நரகாசுர வத வெற்றியாக மாற்றி விட்டது என்கிறாரோ?

இவர் யரெனில் ஆட்டுக்குட்டி அண்ணாமலை முதன்முதல் யாழ்ப்பாணம் வந்தபோது இவரைச்சந்தித்து பேசியதைப் பெருமையாக தனது முகப்புத்தகத்தில் இணைத்திருந்தவர்.

அண்ணாமலையின் பேச்சுக்கள் எமக்கு மிகவும் நம்பிக்கையைத்தருகிறது என குறிப்பிட்டிருந்தார்.

ஓரிரு வருடங்களுக்கு முன்பு அண்ணாமலையைச் சந்தித்ததன் குறிக்கோள் நிறைவேறிவிட்டது. 

இவர் ஒரு விடையத்தை மறந்துவிட்டார் 

திராவிடக்கட்சிகள் எனச்சொல்லப்படுபவையில் தி மு க தான் தமிழர் இன அழிப்புக்கு எந்த எதிர்ப்பும் செய்யாது அவ்வேளை தெருவில் நின்று போராடியவர்களை சிறையில் அடைத்தது, தமிழின அழிப்பின் முக்கிய பங்காளியான காங்கிரசுடன் இப்போது தி மு க கூட்டு வைத்திருக்குது அதனுடன் வைகோவும் கூட்டு வைத்திருக்கிறார், வீரமணி பெரியார் பெயரில் உள்ள சொத்துக்குகளை எல்லாம் பதுக்கி வைத்திருப்பவர் இந்தத் திருட்டுக்கூட்டத்தைத் ´தான் இவர் வினவுகிறார்.

அண்ணாமலையின் குளிசை வேலை செய்யுது.

இப்பவும் சொல்லுறன் இந்தியா நினைத்தால் வெறும் எழுபத்தி இரண்டு மணிநேரம் போதும் தமிழர் பிரச்சனையைத் தீர்க்க. உதாரணம் காஸ்மீர் மக்களது அரசியலமைப்பின் எழுபத்தி இரண்டாம் சரத்தை நீக்கியதுபோல ஆனால் இந்தியதேசம் தமிழ்ர் விரோத தேசம் அதைச்செய்யாது.

இலங்கைத் தீவில் வடக்குக் கிழக்கில் ஆயிரமாயிரம் இந்திய உளவுத்துறையினர் நிலைகொண்டுள்ளார்கள் அதன் உதிரிகளில் ஒன்றுதான் உமாகரன் இராசையா.

மேலே இணைத்த காணொளி அப்பட்டமான பா ஜ க ஆதரவு ஊடகவியலாளர் ஒருவரதாகும்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 minutes ago, Elugnajiru said:

இவர் யரெனில் ஆட்டுக்குட்டி அண்ணாமலை முதன்முதல் யாழ்ப்பாணம் வந்தபோது இவரைச்சந்தித்து பேசியதைப் பெருமையாக தனது முகப்புத்தகத்தில் இணைத்திருந்தவர்.

அண்ணாமலையின் பேச்சுக்கள் எமக்கு மிகவும் நம்பிக்கையைத்தருகிறது என குறிப்பிட்டிருந்தார்.

ஓரிரு வருடங்களுக்கு முன்பு அண்ணாமலையைச் சந்தித்ததன் குறிக்கோள் நிறைவேறிவிட்டது. 

இவர் ஒரு விடையத்தை மறந்துவிட்டார் 

திராவிடக்கட்சிகள் எனச்சொல்லப்படுபவையில் தி மு க தான் தமிழர் இன அழிப்புக்கு எந்த எதிர்ப்பும் செய்யாது அவ்வேளை தெருவில் நின்று போராடியவர்களை சிறையில் அடைத்தது, தமிழின அழிப்பின் முக்கிய பங்காளியான காங்கிரசுடன் இப்போது தி மு க கூட்டு வைத்திருக்குது அதனுடன் வைகோவும் கூட்டு வைத்திருக்கிறார், வீரமணி பெரியார் பெயரில் உள்ள சொத்துக்குகளை எல்லாம் பதுக்கி வைத்திருப்பவர் இந்தத் திருட்டுக்கூட்டத்தைத் ´தான் இவர் வினவுகிறார்.

அண்ணாமலையின் குளிசை வேலை செய்யுது.

இப்பவும் சொல்லுறன் இந்தியா நினைத்தால் வெறும் எழுபத்தி இரண்டு மணிநேரம் போதும் தமிழர் பிரச்சனையைத் தீர்க்க. உதாரணம் காஸ்மீர் மக்களது அரசியலமைப்பின் எழுபத்தி இரண்டாம் சரத்தை நீக்கியதுபோல ஆனால் இந்தியதேசம் தமிழ்ர் விரோத தேசம் அதைச்செய்யாது.

இலங்கைத் தீவில் வடக்குக் கிழக்கில் ஆயிரமாயிரம் இந்திய உளவுத்துறையினர் நிலைகொண்டுள்ளார்கள் அதன் உதிரிகளில் ஒன்றுதான் உமாகரன் இராசையா.

மேலே இணைத்த காணொளி அப்பட்டமான பா ஜ க ஆதரவு ஊடகவியலாளர் ஒருவரதாகும்

அதை. அரசியலை, ஒருபுறமாக வைத்து விட்டு, அவர் சொல்லும் கருத்தினை கவனியுங்கள்.

நான் சொல்வது, சோழர்களின் காவேரி வெற்றி.... அதுவே தீபாவளி...

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Nathamuni said:

அதை. அரசியலை, ஒருபுறமாக வைத்து விட்டு, அவர் சொல்லும் கருத்தினை கவனியுங்கள்.

நான் சொல்வது, சோழர்களின் காவேரி வெற்றி.... அதுவே தீபாவளி...

அப்ப வட இந்தியர்களும் சோழர்களின் கவிரி வெற்றியை கொண்டாடுகின்றார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
51 minutes ago, வாலி said:

அப்ப வட இந்தியர்களும் சோழர்களின் கவிரி வெற்றியை கொண்டாடுகின்றார்களா?

நான் மேலே எழுதியதை வாசிக்கவில்லை போல....

சோழர்களின் காவேரி வெற்றிக்கு ஈழ அரசன் அனுப்பிய வீரர்களின் பங்களிப்பு இருந்துள்ளது. அதை கும்பகோணத்துக்கு பக்கத்தில் உள்ள கோவிலின் கல்வெட்டு குறிக்கிறது என்று சொல்கிறார்.

இந்த வெற்றியே ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. அதனை, நரகாசுர வதை  செய்யப்பட்ட தீபாவளி வெற்றி விழாவாக ஆரியம் மாத்தி விட்டது என்பது போல அல்லவா சொல்கிறார்.

அது குறித்து, விடயம் தெரிந்தவர்கள் விளக்கம் அளிக்கவும்.  

அனேகமாக கவிதை வடிவில் சொல்வதால், புரிதலில் சிக்கல் தான். 

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தந்திரமாக ஆரோ இவருக்குப் புதுக்கதை சொல்லி உருவேற்றியுள்ளனர்.

https://www.facebook.com/maunaguru.sinniah

 
இது ஓர் தீபாவளிக் கதை
பாவம் நரகாசுரன்
----------------------------------------------------------------------
இன்று தீபாவளி.அடிக்கடி நண்பர்களும்,மாணவர்களும் தொலைபேசியில் வாழ்த்துக்களைத் தெரிவிக் கிறா ர்கள்.
அனைவரும் மகிழ்ச்சிகரமாக இருகிறார்கள் போலத் தெரிகிறது
கொண்டாட்டம் என்பது மகிழ்ச்சிதானே?
ம்கிழ்ச்சியாக எல்லோரும் இருப்பதைத்தானே நாம் விரும்புகின்றோம்
மட்டக்களப்பில் நான் பிறந்த காலங்களில் 1940 களில் இற்றைக்கு 80 வருடங்களுக்கு முன்னர் தீபாவளியை யாரும் கொண்டாடவில்லை
நாங்களும் வீட்டில் இதனைக் கொண்டாடியதாக ஞாபகம் இல்லை
எமக்கு அன்று கொண்டாட்டம்,சித்திரைமாதப் புது வருடம்தான்.
அன்றுதான் எங்கள் வீட்டில் பலகாரம் சுடுவார்கள்
/முதல் நாளிரவு நான்கைந்து குடும்பங்கள் சேர்ந்து பலகாரம் சுட்டு அதனைத் தமக்குள் பகிர்ந்து கொள்வார்கள்
குடும்பங்களின் விழா அது. கிராமங்களின் விழா அது
புது உடுப்புகளை காலையில் முதலில் தென்னம் பிள்ளைகளுக்கு உடுத்திவிடச் சொல்லுவார் அம்மா
தென்னம்பிள்ளைகள் அணிந்த உடுப்பைத்தான் நாம் பின்னர் அணிவோம்
இயற்கையை நேசித்த மனிதர்கள் அன்று
சித்திரை நாள் எஙக்ளுக்குப் பெரும் கொண்டாட்ட நாள்
தைப் பொங்கலும் கொண்டாட்ட நாள்தான்
.
அதனை விவசாயிகள் கொண்டாடுவர்.ஏனையோரும் வீட்டில் பொங்கி மகிழ்வர்
ஆனால் சித்திரை வருடமளவு அது அன்று பெரும் கொண்டாட்டமில்லை
சின்ன வயதில் தமிழ் நாட்டிலிருந்து
கல்கி தீபாவளி ஆண்டுமலர்,
ஆனந்த விகடன் தீபாவளி ஆண்டுமலர்
கலைமகள் தீபாவளி ஆண்டுமலர்
அமுதசுரபி தீபாவளி ஆண்டுமலர்
எனச் சில தீபாவளி மலர்கள் பள பளப்பான தாளில் கவர்ச்சிகரமான வர்ணப்படங்களுடன் பெரிய பெரிய அளவில் ஆண்டு தோறும் தீபாவளி நாளில் வெளிவரும்
அவற்றின்மூலம்தான் தமிழகத் தீபாவளி எமக்கு அறிமுகமாகியதாக ஞாபகம்
அதன்மூலம்தான்
தலைதீபாவளி,என்ற சொற்றொடரை அறிந்தோம்
கங்காஸ்னானம்.
அத்திம்பேர்.
தீபாவளிச் சீடை,முறுக்கு
.விசிறியச் சுழட்டும் குடும்பிவைத்த பூணூல் போட்ட தத்தாமார்
,மடிசார்வைத்த பெண்கள்
எனப் பல தீபாவளி சார்ந்த பிராமணச்சமாசாரங்கள் சிறுவயது மனதில் படிய ஆரம்பித்தன
தீபாவளிச் சிறு கதைகள் வேறு அவற்றை மனதில் அழுத்தின
இன்னொரு பண்பாடு எமக்குள் ஊடகங்கள் வாயிலாகப் புக ஆரம்பித்தன
எம்மை ஆக்கிரமித்தும் கொண்டன நாம் மாறலாயினோம்
நரகாசுரனை சத்தியபாமா துணையுடன் கிருஸ்ண பகவான் அழித்த கதையை திரும்பத் திரும்பச் சொன்னார்கள் அக்கதை எம்மனதில் ஆழமாக வேரூன்றியது
நரகாசுரன் பூமியை மீட்க விஸ்ணு வராக அவதாரம் அதாவது பன்றி அவதாரம் எடுத்து பூமியை மீட்டகதையும்,
தன்னைமீட்ட வராக அவதாரத்தின் மீது பூமாதேவி காதல் கொள்ள விஸ்ணுவு க்கும்,பூமாதே விக்கும் பிறந்தவனே நரகாசுரன் எனும் கதையும்
அவன் கொடுமை பொறுக்க முடியாமல் தந்தையே பிள்ளை யைக்கொல்லும் நிலை உருவானது
எனும் கதையும் உருவானது
சற்று வளர்ந்த பின் எனது 15 ஆவது வயதில் திராவிடக் கழகக் கருத்துக்களுக்கு அறிமுகமானபோது நரகாசுரன் என்ற திராவிட குலத் தலைவனை ஆரியனாகிய கண்ணன் அழித்த கதை எமக்கு அறிமுகமானது.
நரகாசுரன் என்பவன் நரன்
அதாவது மனிதன்
அசுரன என்பதன் அர்த்தம் சுரன் அல்லாதவன்.
சுரர் என்றால் தேவர்
தேவர்கள் என அழைக்கப்பட்ட ஆரியர்கள்.அவர்கள் சுரபானம் எனும் மதுவை அருந்தியதால் சுரர் என அழைகப்பட்டனர்.
திராவிடர்கள் ஒழுக்க சீலர்கள்
,மது அருந்தாதோர். ஆகவே அசுரர் என்றால் சுரம் அருந்ததோர் என்பது அர்த்தம் என்ற கருத்துகள் கூறப்பட்டன
(அ+ சுரம்) என்ற விளக்கங்களைத் திராவிடக் கழக நூல்கள் தந்தபோது இளைஞரான நாம் அதனால் ஈர்க்கப்பட்டோம்
தீபாவளிக்கு அது ஓர் புது விளக்கமாக இருந்தது
இந்தப் புதிய கதை எங்களுக்குள் புகுந்து கொண்டது
இது தமிழர் விழாவல்ல என எங்களுக்குள் பேசிக் கொண்டோம்
இவற்றையெல்லாம் தாண்டி மெல்ல மெல்ல தமிழகத் தீபாவளி மட்டக்களப்புத் தமிழ்ப்பண்பாட்டினுள் புகத் தொடங்கி சித்திரை வருடத்திற்கு அடுத்த பெரும் கொண்டாட்டமாக இடம் பெறலாயிற்று
1960 களில் பேரதனைப் பல்கலைக்க்ழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எமக்கு
சமணத் தமிழ் இலக்கியங்கள்,
சமணர் எழுதிய இலக்கணங்கள்,
சமணப்புலவர்களின் தனிப்பாடல்கள்
என்பன அறிமுகமாகின.
அவர்கள் பிராமண மதத்திற்கு,வைதீக மதத்திற்கு எதிரானவர்கள்
.நால்வகை வருணப்பகுபாட்டை விரும்பாதவர்கள்.
அற ஒழுக்கக் கருத்துகளை மிக அதிகமாக வற்புறுத்தியவர்கள்
சாதாரண
மக்கள் பால் நின்றவர்கள்.
தமிழ் நாட்டின் பெரும் தாக்கத்தை அன்று எற்படுத்தியவர்கள்
என்ற விபரங்களும்
சமண தலைவரான மஹாவீரர்,என்பதும்
அவர் ஸ்தபித்த சம்ணமதம் என்பதும்,அதன் தத்துவங்கள் என்பனவும்
அறிமுகமாகின
இவற்றை எமக்கு அறிமுகம் செய்தவர்கள்
பேராசிரியர்களான கணபதிப்பிள்ளை,
வித்தியானந்தன்,
கைலாசபதி ,
வேலுப்பிள்ளை
ஆகியோராவர்
கைலாசபதி வகுப்பில் தொடர்ச்சியாகச் சமண தத்துவத்தை எமக்கு விளக்கினார்
வேலுப்பிள்ளையும் தமிழ்ச்சமணம்,த்மிழ்ப்பௌத்தம் பற்றி ஆராய்ந்து எமக்குக் கூறினார்
சமண தீர்தங்கரரும் மஹா ஞானியுமான மகாவீரர் மீது ஓர் மதிப்பும் உண்டாயிற்று
மூத்த பேராசிரியரான கணபதிப்பிளையின் வகுப்புகள் வெகு சுவராஸ்யமானவை.
சிரித்துக்கொண்டு கதையோடு கதையாகப் பல ஆழமான விடயங்களை மிக எளிமையாகக் கூறிசெல்வார்
ஒரு நாள் அவர் எங்களுக்குப் படிப்பித்துக்கொண்டிருக்கையில்
"உந்தத் தீபாவளி எப்படி வந்தது என்று தெரியுமோடா'
என்று கேட்டார் யாழ்ப்பாணத்தில் அன்றைய பேச்சு வழக்கில் இந்த என்பதை உந்த எனக் கூறுவர்)
நாங்கள் நரகாசுரன் கதையைக் கூறினோம்
"அதுவெல்ல்லாம் புழுகடா.சமண மதத்தின் தலைவரான மஹாவீரர் சமாதி அடைந்த நாளை நினைவுகூர பல தீபங்களை ஏற்றிவைத்து சமணர் கொண்டாடிய சமண விழாவை சைவர்கள் தம் வசப்படுத்திக் கொண்ட கதைதாண்டா தீபாவளி.அதற்காக உருவாக்கப்பட்ட கதைதானடா நரகாசுரன் கதை”
என்றார்
சைவம், சமண மததிலிருந்து பல விடயங்களைத் த்ம்வயப்படுத்திச் சைவமாக்கிக் கொண்டது என்பதற்கு நிறைய உதாரணங்கள் கூறினார்
சமணரை அருகதர் என்பர் யாழப்பாணத்தில் இன்றும் சைவச்சாப்பாட்டை அருகதக் கறி என்பர் என்றெல்லாம் கூறி
"இதுவும் அதில் ஒன்றடா"
என்றார்
எங்களுக்கு வியப்பு அதிகமாயிற்று
தீபாவளின் மூலம் பற்றி பேராசிரியர் வேலுப்பிள்ளைகூட தனது நூலில் ஒரு கட்டுரை எழுதியமை ஞாபகம் வருகிறது
ஆனால் வாமைபோல சனாதனிகளால் அது கண்டுகொள்ளப்படவில்லை
காலங்கள் பல கடந்து விட்டன
இன்று 2023 ஆம் ஆண்டு
இன்று மட்டக்களப்பில் தீபாவளி பெரும் கொண்டாட்டம்
காலையிலிருந்து அரசியல் தலைவர்கள தொடக்கம் சமயத் தலைவர்கள் சமயசொற்பொழிவார்ளூடாக சினிமாபிரபலங்கள் வரை
இருளிலிருந்து ஒளிக்கு வரும் கதையையும்
அக்கிரமக்காரன் அழிந்த கதையையும்
திருப்பித் திருப்பிக் கூறி அலுப்பூட்டிக் கொண்டிருக்கிறார்கள்
அறிவு பூர்வமாக எந்தக் கதையும் இல்லை
அறிவு பூர்வமாகச் சிந்திக்கும் திறனை தமிழ்சமூகம் இழந்துவிடட்தோ என்று எண்ணத் தோன்றுகிறது
ஆர்ப்பாட்டமான இன்றைய எலக்ரோனிக் உலகு தீபாவளியையும் ஆர்ப்பாட்டமாக்கி விட்டது
.நரகாசுரனை அழித்த கதை பாடசாலகளிலும்,சமயச் சொற்பொழிவுகளிலும் சர்வசாதரணமாக சொல்லப்படுவதாயிற்று
அரசியல் வாதிகளும்,
ஆட்சியதிகாரத்தில் உள்ள பெரும்தலைவர்களும்
சமயத் தலைவர்களும்
இது நரகாசுரன் ஒழிந்த நாள் என்றே மக்களுக்கு வாழ்த்துத் தெரிவிகின்றனர்
நரகாசுரன் அழிவு மக்கள் மனதில் ஆழமாகப் பதிக்கப்பட்டு விட்டது
நரகாசுரனுடன் தீபாவளி இணைக்கப்பட்டுவிட்டது
பெரும் சமயக் கொண்டாட்டமுமாகிவிட்டது
இக்கொண்டாட்டத்தை இனி மக்களிடமிருந்து பிரிக்கமுடையாது
காரணங்கள் பல
ஒன்று
இது ஓர் பெரும் சமய விழாவாகிவிட்டது
இரண்டு
இதுஓர்பெரும்கொண்டாடமாகிவிட்டது. கொண் டா ட்டமானமையினால் மக்கள் கூடுதல், அதனால் கிடை க்கும் பெரு மகிழ்ச்ச்சி ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி தெரிவித்தல் என்ற மனித குலம் விரும்பும் அடிமன நல் இயல்புகள் இதில் உள்ளன
மூன்று
பெரும் வணிக நிறுவனங்களின் லாபம் இக் கொண் டாட்டத்தில் அடங்கியுள்ளது,சேலை உடுப்பு, பட்டாசு ,பலகர வகைகளுக்கான மூலப்பொருள் வியாபாரம் என்பன இதில் அடங்கும்
.நான்கு
கோயில் வருமானம், பூசகர் வருமானம் என்பன இன்னொருபுறம் உள்ளது
ஐந்து
பத்திரிகளைன் தீபாவளி மலர் வருமானம், மற்றொரு புறம் உள்ளது
ஆறு
தொலைக்காட்சி ,போன்ற ஊடகங்களின் இடைவிடாத கருத்தேற்றமும் அவை அவற்றால் அவை அடையும் பெரு வருமானமும் இன்னொருபுறம் உள்ளது
ஏழு
இவ்வூடகங்களின் அழைப்பை விரும்பி ஏற்றுக் காசிகளில் தோன்றிப் புகழ் பெறச்செல்லும் நமது கலைஞர்களும் அறிஞர்களும் இன்னொருபுறம் பெருவாரியாகக் காணப்படுகிறர்கள்
எட்டு
இது குழந்தைகலள மத்தாப்புக் கொழுத்தி விளையாடும் ஒரு பெரு விழாவாகவும்,அவர்கள் புத்துடை அணியும் விழாவாகவும் கட்டமைக்கப்பட்டு விட்டது.குழந்தைகளின் மகிழ்ச்சிக்காப் பெற்றோர் எதனையும் செய்வர்
எனவே தீபாவளியைக் கொண்டாட வேண்டாம் என எப்படி சொன்னாலும் அக்கொண்டாட்டத்தை இலகுவில் போக்கிவிட முடியாது
அது இந்து மக்கள் கொண்டாட்டமாகிவிட்டது
கொண்டாட்டங்களை மிகவும் வரவேற்கும் பின் நவீன சிந்தனையாளர்களை நாம் காண்கிறோம்
மக்கள் இணைகிறார்கள்
மகிழ்கிறார்கள்
என அவர்கள் கொண்டாட்டங்களுக்கு ஓர் புது வியாக்கியானம் அளிக்கிறார்கள்
ஆனால் கொண்டாட்டங்களுக்குப் பின்னால் மறைந்து கிடக்கும்
சுரண்டலையும்
பேதங்களை மறக்க வைக்கும் போதை நிலையையும் அவர்கள் தோலுரித்துக்காட்டுவதில்லை
தீபாவளியைக் கட்டுடைத்துப் பார்ர்க்கலாம்
அதன் அதிகாரம் எங்கிருக்கிறது என்றுபார்க்கலாம்
தீபாவளிக் கதை கூறும் நரகாசுரன் கதைப் பிரதியை கட்டுடைத்துப் பார்க்கலாம்
இவையாவும் ஒரு புலமைத்துவ இன்பப் பயிற்சியுமாகும் (Intellectual pleasure exercise)
தீபாவளி அன்றையபோல் இன்றில்லை
.
நிறைய மாறிவிட்டிருக்கிறது.
இன்னும் மாறும்
இடையில் வந்து மாட்டிக்கொண்டான் நரகாசுரன்
பாவம் நரகாசுரன்
அவனுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
 
சி.மௌனகுரு
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

அதை. அரசியலை, ஒருபுறமாக வைத்து விட்டு, அவர் சொல்லும் கருத்தினை கவனியுங்கள்.

நான் சொல்வது, சோழர்களின் காவேரி வெற்றி.... அதுவே தீபாவளி...

உவர் என்ன சொல்லுறார்?  எனக்கு விளங்கேல்ல. 

 

அண்ணாமலை உவர் தம்பிமலைக்குச் சொல்லியிருப்பார் / காசு கொடுத்திருப்பார் கூவச் சொல்லி.. 

அதுசரி திராவிட அரசியலுக்கும் உனக்கும் என்ன தொடர்பு? 

ஒரு ஈழத் தமிழனாக உனக்கு அங்கு வேல? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விரும்பிய எவரும் டிவாளியைக் கொண்டாடட்டும்.  யாழ்ப்பாணத்தில்  இந்து சமயிகள் தீபாவளியை கொண்டாடுகின்றார்கள். எங்களுக்கு ஆண்டாண்டு காலமாக கொடியவன் நரகாசுரனை கிருஶ்ண பரமாத்மா கொன்றதாகவும் சாகும் தருவாயில் நரன் தான் இறந்த இந்த நாளை உலக மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழவேண்டும் என கிருஶ்ண பரமாத்மாவிடம் வேண்டுகொண்டதாகவும் அந்நாளே தீபாவளி என படிப்பிக்கப்பட்டு வந்திருக்கின்றது. அதுதான் உண்மையும் கூட 😜.  இதை விட்டிட்டு புதுக்கதை சொல்லப்போனால் சிக்கல்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தீபாவளி என்பது நரகாசுரன் வதை என்றே எமக்கு சமய பாடத்தில் கற்பிக்கப்பட்டிருக்கிறது. கோவில்களில் காலம் காலமாக நடை பெறும் சமய பிரசங்கங்களும் அதையே கூறுகிறது.  அந்த புராணக்கதையில் உள்ள அறிவியலுக்கு  ஒவ்வாத கதைகளை விடுவோம். ஆனால் அதுவே எமது முன்னோர்களல் நம்பப்பட்டு எமக்கு  பரப்பப்பட்ட கதை. 

உணர்சசிவசப்பட்டு காட்டு கத்தல் கத்தினால் மக்களை ஏமாற்றலாம் எந்த பொய்யையும் மக்கள் நம்பிவிடுவர் என இந்திய கைக்கூலியான சிலர் நினைக்கிறார்கள். அதுவே இந்த அண்ணாமலையின் கூட்டாளி செய்யும் இந்த காட்டுக்கத்தல்.

 இலக்கிய நயமும் கேட்பவர்களை ரசிக்க வைப்பதுமே தமிழ் கவிதைகளின்  அழகு. அதுவே தமிழ் மொழியின் சிறப்பு.  மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் சிந்தனையை தூண்டும் செய்யுள்களே தமிழ் மொழியின் சிறப்பு. 

ஆனால் தனது   பொய்யைக் கூறி   கவிதை என்ற  பெயரில்  காட்டுகத்தல் மூலம் மக்களை உசுப்பேற்றி ஏமாற்ற முனைவதோடு தமிழ் மொழியின்/ தமிழ் கவிதையின்  அழகையும் கெடுக்கிறது  இந்த  தாயகத்தில் செயற்படும் வட இந்திய  கைக்கூலிக் கும்பல். 

அண்மையில் யாழ்பபாணம் வந்த அண்ணாமலை இராமருக்கு பாலாபிஷேகம் செய்த இடம் தான் பலாலி என்று இந்திய ஆரிய கதை மூலம் எமது  வரலாற்றை திரித்த போது அவருக்கெதிராக பொங்கவில்லை இந்த கைக்கூலி. மாறாக அண்ணாமலையுடன் விருத்துண்டு  அண்ணாமலை கூறிய ஆரிய கட்டுகதையை அங்கீகரித்தவர் இந்த கைக்கூலி உமாகரன்.  இப்போது புது பொய்யுடன் மக்களை ஏமாற்ற இந்தக்  காட்டுக் கத்தல். 

  

Edited by island
  • Like 8
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, வாலி said:

விரும்பிய எவரும் டிவாளியைக் கொண்டாடட்டும்.  யாழ்ப்பாணத்தில்  இந்து சமயிகள் தீபாவளியை கொண்டாடுகின்றார்கள். எங்களுக்கு ஆண்டாண்டு காலமாக கொடியவன் நரகாசுரனை கிருஶ்ண பரமாத்மா கொன்றதாகவும் சாகும் தருவாயில் நரன் தான் இறந்த இந்த நாளை உலக மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழவேண்டும் என கிருஶ்ண பரமாத்மாவிடம் வேண்டுகொண்டதாகவும் அந்நாளே தீபாவளி என படிப்பிக்கப்பட்டு வந்திருக்கின்றது. அதுதான் உண்மையும் கூட 😜.  இதை விட்டிட்டு புதுக்கதை சொல்லப்போனால் சிக்கல்தான்.

உண்மையை நீங்கள் பக்கத்திலிருந்து கேட்டீர்கள் போல

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அவர் சொல்வது வேறு, இங்கே நடக்கும் அலம்பறை வேறு.

எமது பண்டிகைகள் என்றாலே, திராவிடம் அதுக்குள் மூக்கினை நுளைத்து, ஏதாவது சொல்கிறது என்கிறார். அதாவது சித்திரை வருடப்பிறப்பு அல்ல, தை தான், வருடப்பிறப்பு என்கிறது. 

இன்னும் ஆழமாக போய் பார்த்தால், தெலுங்கு சங்கராந்தி, கேரள ஓணம் என்று வேறு திகதிகள் நடப்பதால், திராவிடம் ஏன் குழப்புகிறது என்று தெரியவரும்.

அடுத்தது, தமிழர் கடவுள் முருகன். ஆரியம் வந்து, அவர் சிவபெருமானின் இரண்டாவது மகன். பிள்ளையார் தம்பி எண்டு சொல்ல அதை நம்பிக் கொண்டுதானே ஆயிரக்கணக்கான காலமாக வாழ்ந்தார்கள்.

பாடப்புத்தகத்தில் சொல்லி இருக்கு... அதுதான் சரி என்றால், உங்கள் பகுத்தறிவு எங்கே போனது?

சரியோ, தவறோ இராவணன் எங்கள் அரசன், தமிழ் அரசன். அனைத்துக்கும் மேல, இலங்கையின் மன்னன். அவனின் வதையினை ஆரியம் தீபாவளியாக கொண்டாடுவதை, பாடப்புத்தகம் சொல்வதால் அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், நமது புத்தி எங்கே போனது?

இராவணன், சீதையினை காமத்தினால் சிறை பிடித்து வரவில்லை, வந்திருந்தால், மன்னனான அவனுக்கு, அது பிரச்சனைக்குரிய ஒன்றல்ல. ஆனால் ராமன் மேல் மையல் கொண்ட, சூர்ப்பனகை எனும் தனது தங்கையினை, நல் புத்தி சொல்லி அனுப்பாமல், மூக்கினை வெட்டி அனுப்பிய கோபத்தினால், சகோதர பாசத்தினால், ராமரை தண்டிக்க அரசன் எடுத்த முடிவே, சீதையின் சிறைபிடிப்பு.

அதன் மூலம் ராமன் அடைந்தது பெரும் தண்டனை.

ஆகவே, ஆரியத்தின் வெள்ளையடிப்பு வேலையினை, இங்கே ஏதோ சொல்கிறோம் என்று அலம்பாமல், சிந்தித்து பார்த்து எழுதுங்கள்.

ஆரம்பித்திலேயே சொன்னேன், அவரது கருத்தினை அரசியலுக்கு அப்பால் நின்று எடுங்கள் என்று. அவர், அண்ணாமலையுடன் நின்றார், சாப்பிட்டார்.... புரியவில்லை.

அரசியலில், ஈழத்தமிழர்களுக்கு, பிஜேபி உதவி தேவை. யார் குத்தினாலும் அரசி ஆகட்டும்.

ஆனால் அதனையும் இலக்கிய | வரலாற்று விவாதத்தினையும், போட்டு குழப்பாதீர்கள்.

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மையை நீங்கள் பக்கத்திலிருந்து கேட்டீர்கள் போல

அப்ப எங்களுக்கு ஹிண்டுக் கொலிஜில சமயபாட வகுப்பில ஆசிரியர் சொல்லித்தந்ந்ததெல்லாம் “புல்டா போண்டா கஞ்சா கப்ஸா” கதை தானா அக்கா?! 🙄😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வாலி said:

அப்ப எங்களுக்கு ஹிண்டுக் கொலிஜில சமயபாட வகுப்பில ஆசிரியர் சொல்லித்தந்ந்ததெல்லாம் “புல்டா போண்டா கஞ்சா கப்ஸா” கதை தானா அக்கா?! 🙄😂

அதில என்ன சந்தேகம்?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சோழர் காலத்தில் தீபாவளி என்ற பண்டிகை ஒன்றும் தமிழர்களிடம் இல்லை. நாயக்கர்கள் தமிழ்நாட்டுக்குள் புகுந்தபோது தீபாவளி புகுந்ததாம்! ஒவ்வொருவரும் ஏதோவொரு ஒரு காரணத்திற்காக கொண்டாடுகின்றார்கள். வடக்கில் ராவணைக் கொன்ற நாள், தெற்கில் நரகாசுரனைக் கொன்ற நாள். எப்படிப் பார்த்தாலும் நால்வேதத்தைக் காக்க ஷத்திரியர்கள் எங்கள் மூதாதைகளான அசுரர்களையும், நிஷாதர்களையும் கொன்று கொண்டாடியிருக்கின்றனர்.

இவற்றின் அடிமுடி தேடி நேரத்தை விரயமாக்குவதை விட்டுவிட்டு சாமத்தியக் கொண்டாட்டம் போல தீபாவளியையும் கொண்டாடுவோம்! சந்தோஷம்தானே முக்கியம்!

காமசூத்ரா எழுதிய வாத்ஸ்யாயனர் ‘யட்ஷ ராத்திரி’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதை ‘சுகராத்திரி’ என்றும் சொல்வதுண்டு.    நாம் “சுகராத்திரி” என்று கொண்டாடுவோம்!😍

——

தீபாவளியை முதன்முதலில் கொண்டாடியது யார் தெரியுமா?

Vikatan Correspondent28 Oct 2016 12 PM
 

அறியாமை எனும் இருள் நீங்கி அறிவு எனும் ஒளி பிறக்க வேண்டும் எனும் தத்துவத்தை உணர்த்துவதே தீபாவளித் திருநாள்.  புத்தாடை, பட்சணங்கள், பட்டாசுகள் மட்டுமின்றி, நாம் அறிந்து கொண்டாடவேண்டிய இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள் உண்டு இந்த பண்டிகை நாள் குறித்து.

தீபாவளியை முதன்முதலாகக் கொண்டாடியவன், நரகாசுரனின் மகனான பகதத்தன் என்கின்றன புராணங்கள்.

தமிழகத்தில் சோழர் காலம் வரை தீபாவளி கொண்டாடப் படவில்லை. திருமலை நாயக்கர் காலத்தில்தான் முதன்முதலாக தீபாவளி கொண்டாடப்பட்டது.

தீபாவளிப் பண்டிகை மிகத் தொன்மையான பண்டிகையாகும். வாத்ஸ்யாயனர் எழுதிய நூலில் ‘யட்ஷ ராத்திரி’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதை ‘சுகராத்திரி’ என்றும் சொல்வதுண்டு.

கயிலாய பர்வதத்தில் தீபாவளி நாளில் சிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்களாம். அதை நினைவூட்டும் விதமாகவே குஜராத் மாநில மக்கள் தீபாவளி நாள் இரவில் சொக்கட்டான் ஆடும் பழக்கத்தை இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதில் இருந்து முதலில் தோன்றியவர் தன்வந்திரி. ஆயுர்வேத மருத்துவத்தைத் தோற்றுவித்தவர். அவர் தோன்றிய நாளே தீபாவளி.

சிவபெருமானின் உடலில் பாதியை அடைய திருக்கேதாரத்தில் தவம் செய்தாள் பார்வதி. சதுர்த்தசி நாளில் சக்திக்கு தன் உடலில் பாதியைத் தந்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார் சிவன். கணவனுடன் எந்நாளும் சேர்ந்தே இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு தீபாவளி நாளில் கேதார கௌரி விரதம் இருக்கின்றனர் பெண்கள். அப்போது அம்மியையும், குழவியையும் சிவசக்தியாக பாவித்து பூஜை செய்கின்றனர்.

விஷ்ணு புராணத்தில் தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து தீபங்களை வீட்டில் பல இடங்களில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

கி.பி.1117-ல் வாழ்ந்த சாளுக்கிய திருபுவன மன்னன் ஆண்டுதோறும் சாத்யாயர் என்ற அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கூறுகிறது.
கி.பி.1250-ல் எழுதப்பட்ட லீலாவதி என்ற மராத்தி நூலில் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து நீராடுவதைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

ரங்கத்தில் திருவரங்கநாதர் தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார். அன்று திருவரங்கனுக்கு விசேஷமாக `ஜாலி அலங்கார’ வைபவம் நடைபெறும். ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு கைலிகளில் மூட்டையாகக் கட்டி, மேளதாளங்கள் முழங்க, நாகஸ்வர இசை ஒலிக்க, வேத பாராயணத்துடன் பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பதே ஜாலி அலங்கார வைபவம் ஆகும்.
குஜராத் மாநிலத்தில் புதுக் கணக்கு துவங்கும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்று சிறுவர்கள் பட்டம் பறக்க விட்டு மகிழ்வர்.

 தீபாவளி திருநாளிலேயே ஆதிசங்கரர் தனது ஞான பீடத்தை ஏற்படுத்தினாராம்.

 புத்த பிரான் முக்தி அடைந்த நாளாக பௌத்தர்களும், மகாவீரர் முக்தி அடைந்த நாளாக ஜைனர்களும் தீபாவளி திருநாளை அனுஷ்டிக்கிறார்கள்.

 உஜ்ஜயினி அரசன் விக்கிரமாதித்தன், ‘சாகாஸ்’ என்பவர்களை வென்று, வாகை சூடிய நாள் தீபாவளி என்பர்.

 வாரணாசியில், ‘கார்த்திகை பூர்ணிமா’ என்ற பெயரில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

 பீகார் மாநிலத்தில் தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்னர் தன்வந்திரி பகவானுக்கு விழா எடுக்கின்றனர். இந்த விழாவுக்கு ‘தன்தெராஸ்’ என்று பெயர்.
 பீகாரில் ஒரு பிரிவினர், மௌரியப் பேரரசன் சாம்ராட் அசோகன் தனது திக் விஜயத்தை முடித்து, நாடு திரும்பிய நாளாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்.
 மத்தியப்பிரதேச மாநிலத்தில், தீபாவளியன்று குபேர பூஜை செய்வதை முக்கியமானதாகக் கருதுகின்றனர். அன்று செல்வத்தின் அதிபதியான குபேரனை வழிபட்டால், ஆண்டு முழுவதும் பணத் தட்டுப்பாடு ஏற்படாது என்பது நம்பிக்கை.

 உத்தரப்பிரதேசத்தில், சீதாதேவியை மீட்ட திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

 மேற்கு வங்காளத்தில் காளிதேவி வழிபாடாக... ‘மகாநிசா’ என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். அன்று புத்தாடை மற்றும் ஆபரணம் வாங்கும் வழக்கமில்லை.

 கொல்கத்தாவில் தீபாவளியையொட்டி, ‘பூவாணப் போட்டி’ நடைபெறுகிறது. பூச்சட்டி கொளுத்தும்போது, எவரது வாணம் அதிக உயரத்தில் சென்று பூக்களைக் கொட்டுகிறதோ அவரே வெற்றி பெற்றவர்!

 மகாராஷ்டிர மாநிலத்தில் தாம்பூலம் போடும் திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

 தீபாவளி அன்று நாம் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது போல், மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகாலையில் எழுந்து, ‘உடன்’ எனப்படும் நறுமண எண்ணெயைத் தேய்த்து குளிக்கின்றனர்.
 நேபாளத்தில், தீபாவளியை ‘தீஹார்’ திருவிழாவாக 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு நாளும் பிராணிகளுக்கு உணவு படைப்பார்கள்.

https://www.vikatan.com/spiritual/temples/70829-history-behind-diwali-festival



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அப்படியா…மாண்பு மிகு அனுர.. என்பது வரை எழுதப்பட்டது. அண்ணை அண்டைக்கு லீவு போல.
    • ஏன் இதுவரை இப்படியானவற்றிகு சாணக்கியன் போராடவில்லையா? யார் போராடினாலும் தடுத்து நிறுத்த ஒரு தமிழ் எம்பியால் முடியாது. தடுத்து நிறுத்த கூடிய இயலுமை ஆட்சியாளரிடம்தான் உண்டு. அனுர அரசு நீங்கள் சொல்வது போல் இனவாதமற்ற அரசு எனில் வந்தவுடனேயே இப்படி தமிழ் இடங்களில் பெளத்த சின்னங்களை நிறுவுவதை தடுத்திருக்க வேண்டும். செய்தார்களா? இல்லை. ஆகவே அனுரவும் அவர் அரசும் கூட முன்னையோர் போல் இனவாதிகளே என்பது தெளிவாகிறது. இதை மறைக்க, அனுர அனுதாபியான நீங்கள் சாணக்ஸ் மீது கையை காட்டுகிறீர்கள்.
    • ஓம்…அது பாருங்கோ…உங்களுக்கும் எனக்கும் கதியால் சண்டை…. அதுதான்…உங்களோடு பொருதுகிறேன்….🤣 என்னை பொறுத்தமட்டில் அனுரவை யாழில் தூக்கி பிடிப்பதில் முதன்மையானவர் நீங்கள். அந்த அரசியலினை விமர்சிக்கும் போது நீங்கள் collateral damage. அதுக்காககதானா யாழில் கிடந்து முக்குகிறீர்கள்.
    • சைக்கிள் கட்சியில் இப்படியான பொது சபை கூட்டங்கள் நடை பெறுகின்றனவா? தலைவர் தெரிவு நடை பெறுமா?  ஏன் கேட்கிறேன்  என்றால் தமிழரசு கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து  இங்கு அதிக அக்கறையுடன் பேசுபவர்கள் பேசுபவர்கள் சைக்கிள் கட்சியின் வாரிசு அரசியலை வரிந்து  கட்டிக்கொண்டு ஆதரிக்கும் அக்கட்சியின் ஆதரவாளர்கள்.    இது தனது வீட்டுக்குள் நடக்கும் கூத்துகளை விடுத்து  அடுத்தவன் வீட்டுக்குள்  என்ன நடக்கிறது என்று வேலிக்குள்ளால் விடுப்பு பார்ககும் கலாச்சாரம் தானே. 😂   இலங்கையில் மூன்று தலைமுறை குடும்ப கட்சியின்  தீவிர ஆதரவாளராக இருந்து கொண்டு தமிழ் நாட்டில் வாரிசு அரசியல் என்று பேசும் போலிகள் தான் இந்த தீவிர வரட்டு  தமிழ் தேசியம் பேசும் ஆசாமிகள்.   
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.