Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சித்தங்கேணி இளைஞர் உயிரிழப்பு - வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலா காரணம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19 NOV, 2023 | 05:41 PM
image

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற களவு சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளார். 

சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்ற 23 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து இளைஞனின் உறவினர் ஒருவர் கூறுகையில்,

அலெக்ஸிடம் லான்ட் மாஸ்டர் வாகனம் ஒன்றுள்ளது. கடந்த 8ஆம் திகதி மரம் கடத்தல் சம்பந்தமான விசாரணை ஒன்று உள்ளதாக தெரிவித்த வட்டுக்கோட்டை பொலிஸார் அலெக்ஸை கைது செய்தனர். 

அவ்வேளை, அலெக்ஸ் பொலிஸ் நிலையம் செல்ல மறுக்க, அவருக்கு துணையாக அவரது நண்பனையும் பொலிஸார் அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், நாங்கள் இரவு பொலிஸ் நிலையம் சென்றவேளை அலெக்ஸின் கதறல் சத்தம் பொலிஸ் நிலையத்திலிருந்து கேட்டது. 

நாங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்தோம்.

8ஆம் திகதி கைது செய்யப்பட்ட அலெக்ஸ் 12ஆம் திகதி நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். 

இதன்போது அவர் மீது நகை திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். இதன்போது அலெக்ஸின் உடல்நிலை சீரின்றி காணப்பட்டது.

அவர் சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்தார் என்றார்.

நேற்றைய தினமும் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன்னாலை பகுதியில் உள்ள புதர் ஒன்றில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.

குறித்த நபர் கடந்த 14ஆம் திகதி பொன்னாலை சனசமூக நிலையத்துக்கு சேதம் விளைவிக்கும் விதத்தில் செயற்பட்டது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, அவரை பொலிஸார் அழைத்துச் சென்றதாக அப்பகுதி கிராம சேவகர் குறிப்பிட்டார். 

இந்நிலையில் அவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவங்கள் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து சந்தேகத்தை எழுப்புவதாக கூறப்படுகிறது. 

வட்டுக்கோட்டை பொலிஸாரின் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/169712

  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸார் சித்திரவதை செய்ததாக இறக்க முன்னர் இளைஞன் வாக்குமூலம்!

யாழ் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நகை திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நாகராசா அலெக்ஸ் என்பவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனை கைது செய்து சென்ற வட்டுக்கோட்டை பொலிஸார் பல சித்திரவதைகளை பொலிஸ் நிலையத்தில் வைத்து செய்துள்ளதாக இளைஞன் உயிரிழக்க முன்னர் கூறியுள்ளததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“வட்டுக்கோட்டை பொலிஸார் களவு சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில் கொண்டு சென்று கட்டித் தூக்கி விட்டு அடித்தார்கள். தண்ணி போட்டுவிட்டு, முகத்திற்கு துணியை கட்டி விட்டு தண்ணீர் ஊற்றி ஊற்றி அடித்தார்கள். தொண்டையால் சாப்பாடு இறங்குதில்லை. கொஞ்சமாக தான் சாப்பிட முடிகிறது. சாப்பாட்டிற்கு மனமே இல்லாமல் உள்ளது. பின்னர் நிலத்தில் இருந்து இரண்டு முழம் உயரத்தில் தலைகீழாக கட்டித் தூக்கிவிட்டு, கையை பின்பக்கமாக கட்டிவிட்டு கேட்டு கேட்டு கொடூரமாக தாங்கினார்கள்” என்று அந்த இளைஞன் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

”நான் களவு எடுக்கவில்லை என்று கூறினேன். பின்னர் பெற்றோல் பையினுள் போட்டுவிட்டு தாக்கினார்கள். நான் மயங்கிவிட்டேன். இரண்டு கைகளும் தூக்க முடியாமல் உள்ளது. பொலிஸ் நிலையத்தில் முதல் இரண்டு நாட்களும் சாப்பாடு தரவில்லை. அவர்களது அறைக்குள் அழைத்துச் சென்று, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு போடக்கூடாது, யாருக்கும் சொல்லக்கூடாது என்று மிரட்டினார்கள். பின்னர் அடுத்த நாளும் பயமுறுத்தினார்கள். சாராயம் தந்து குடிக்குமாறு கூறினார்கள்” என்று தனது வாக்குமூலத்தை அவர் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

http://www.samakalam.com/பொலிஸார்-சித்திரவதை-செய்/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையில் இளைஞன் உயிரிழப்பு

Published By: DIGITAL DESK 3   20 NOV, 2023 | 10:26 AM

image

கைகள் இரண்டையும் பின்புறமாக கட்டி தூக்கி அடித்து, சித்திரவதை புரிந்ததுடன், பெற்றோல் ஊற்றிய பொலித்தீன் பையொன்றினால் முகத்தை மூடி சித்திரவதை புரிந்தனர் என, பொலிஸாரினால் சித்திரவதையால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் இளைஞன் வைத்தியசாலையில் கூறிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சித்தன்கேணி பகுதியைச் சேர்ந்த  நாகராசா அலெக்ஸ் (வயது 25) எனும் இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். 

உயிரிழப்புக்கு பொலிஸாரே காரணம். 

உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் தான் இளைஞன் உயிரிழந்துள்ளார் என குற்றம் சட்டி வருகின்றனர். 

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இளைஞனின் வாக்குமூலம்.

இந்நிலையில், உயிரிழந்த இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் போது , தனக்கு நடந்த சித்திரவதை தொடர்பில் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. 

அதில் " என்னை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கினர். கைகள் இரண்டையும் பின்புறமாக கட்டி தூக்கி தாக்கினார்கள். துணி ஒன்றினால் முகத்தினை மூடி கட்டி தண்ணீர் ஊற்றி தாக்கினார்கள். பெற்றோல் ஊற்றிய பொலித்தீன் பை ஒன்றினை முகத்தில் போட்டு சித்திரவதை புரிந்தார்கள். 

பின்னர் எனக்கு குடிக்க சாராயம் தந்தார்கள். தாக்குதல்கள் சித்திரவதைகள் தொடர்பில் வெளியில் சொல்ல கூடாது என கடுமையாக என்னை மிரட்டினார்கள். 

பொலிஸாரின் தாக்குதலுக்கு பிறகு என்னால் சாப்பிட முடியவில்லை. என தெரிவிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. 

துணைக்கு சென்ற நண்பனும் கைது

அதேவேளை , உயிரிழந்த இளைஞனை கடந்த 08ஆம் திகதி விசாரணை ஒன்றுக்காக வட்டுக்கோட்டை பொலிஸார் அழைத்தனர். அவர் தனியே செல்ல பயத்தில் நண்பர் ஒருவரையும் கூட அழைத்து சென்று இருந்தார். 

பொலிஸ் நிலையம் சென்ற இருவரும் வீடு திரும்பாததால் மறுநாள் 09ஆம் திகதி பொலிஸ் நிலையம் சென்று விசாரித்த போது , பொலிஸார் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை. 

பின்னர் 10ஆம் திகதியும் நாம் அவர்களை தேடி பொலிஸ் நிலையம் சென்ற போது உயிரிழந்த அலெக்ஸ்சின் கதறல் சத்தம் எமக்கு கேட்டது. நாம் அவரை காட்டுமாறு கோரிய போது , பொலிஸார் எம்மை மிரட்டி அனுப்பினார். 

மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு 

அதனையடுத்து நாம் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்தோம். 

இந்நிலையில் 10ஆம் திகதி உயிரிழந்த அலெக்ஸ் மற்றும் அவருக்கு உதவியாக சென்ற அவரது நண்பர் மீது , வழக்கம்பரை பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற களவு சம்பவத்ததுடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது, நீதிமன்றம் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது. 

நீதிமன்றில் அவர்களை முற்படுத்திய போது, அவர்கள் இருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலையே இருந்தனர் என உறவினர்கள் தெரிவித்தனர். 

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீதிமன்ற உத்தரவின் பேரில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் அவர்களை தடுத்து வைத்திருந்த போது, அலெக்ஸ்சின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டதால், சிறைச்சாலை நிர்வாகத்தால் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

விசாரணைக்கு பொலிஸ் குழு நியமிப்பு 

சந்தேக நபர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மீது உறவினர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என அறிய முடிகிறது.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே உயிழப்புக்கான காரணம் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/169733

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு விசேட அதிரடிப் படை பாதுகாப்பு!

Published By: DIGITAL DESK 3     20 NOV, 2023 | 04:49 PM

image

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்த நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) உயிரிழந்துள்ளார்.

அவர் உயிரிழக்க முன்னர் வழங்கிய மரண வாக்குமூலத்தில் பொலிஸார் செய்த பல சித்திரவதைகள் அம்பலமாகின.

இந்நிலையில், பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பு கருதி சுன்னாகம், மானிப்பாய், இளாவாலை, யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் விசேட அதிரடிப் படையினரும் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

உயிரிழந்த இளைஞனுக்கு நீதி வழங்காமல் கண்துடைப்பாக சம்பவத்துடன் தொடர்புபட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் வெறுமனே இடமாற்றம் வழங்கிவிட்டு பொலிஸார் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

IMG-20231120-WA0090.jpg

IMG-20231120-WA0098.jpg

IMG-20231120-WA0097.jpg

https://www.virakesari.lk/article/169800

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சித்தங்கேணி இளைஞன் உயிரிழந்த சம்பவம் : சம்பந்தப்பட்ட பொலிஸாரை கைது செய்ய வேண்டும் - சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவிப்பு!

Published By: VISHNU   20 NOV, 2023 | 05:49 PM

image

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட  நாகராசா அலெக்ஸ் என்ற 23 வயது இளைஞன் உயிரிழந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும், சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் சிரேஸ்ட சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் அவர் திங்கட்கிழமை (20) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பொலிஸ் காவலில் வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டு, உடல்நிலை சீராக இல்லாத நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

அந்த இளைஞன் உயிரிழப்பதற்கு முன்னர் வெளியிட்ட காணொளியில், பொலிஸார் பெற்றோல் பையினுள் தன்னை நுழைத்து அடித்ததாகவும், தலைகீழாக கட்டித்தூக்கி முகத்தினை துணியினால் மூடிக் கட்டி, இரண்டு கைகளையும் பின் பக்கமாக கட்டி, தண்ணீர் ஊற்றி ஊற்றி அடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒருநாள் முழுவதும் சாப்பாடு வழங்காமல், சாராயத்தினை குடிக்குமாறு வழங்கி குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இது குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கோ அல்லது வேறு எங்குமோ சென்று முறையிட கூடாது என்றும் மிரட்டியதாக அந்த இளைஞன் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது எல்லாம் பொலிஸ் நிலையத்தில் நடக்கும்போது பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி எங்கே சென்றார்? அவர் ஏன் இதனை தடுக்கவில்லை. தாக்குதல் நடாத்தி பொலிஸாரை ஏன் தண்டிக்கவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாக அறிய முடிகிறது. உயிரிழந்த இளைஞனின் மரண வாக்குமூலம் சித்திரவதைகள் அம்பலமாகும் நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்ளுக்கு இடமாற்றம் வழங்குவதுடன் விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது என்பது வெறும் கண்துடைப்பாகும். உடனடியாக சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்த வேண்டும்.

வட்டுக்கோட்டை பொலிஸாரின் செயற்பாடுகள் அண்மைக் காலமாக அராஜகமான ரீதியில் செல்வதை ஊடகங்கள் மூலம் வெளியாகும் செய்திகள் எடுத்துக் காட்டுகின்றன. செய்தி சேகரிக்க செல்லும் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து அவர்களை செய்தி சேகரிக்க விடாது இடையூறுகளை விளைவிக்கின்றனர். தங்களது தரப்பில் உள்ள குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காகவா இவ்வாறு ஊடகவியலாளர்களை தடுக்கின்றார்கள் என்ற சந்தேகமும் எழுகின்றது.

எனவே பொலிஸார் தமது கடமைகளை சரிவர செய்யவேண்டும். சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த வேண்டியது தான் பொலிஸாரின் வேலை. அதை விடுத்து தாங்கள் சட்டத்தை கையில் எடுத்து சித்திரவதைகளில் ஈடுபட முடியாது - என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/169811

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது தரத்திலான துன்புறுத்தல் எனப்படுவது மிகவும் துல்லியமாக அதில் பயிற்சியும் அனுபவமும் நிறைந்தவர்களால் செய்யப்படல்வேண்டும் இல்லையேல் தவறுக்கு இடமுண்டு அவசரத்தில் போலிஸ் பயிற்சி கொடுத்து அனுப்பியிருப்பாங்கள் தவிர
தண்டனை இடமாற்றம் பெற்று வந்திருப்பார்கள். போட்டுத்தாகியிருக்கிறார்கள்.

பிட்டத்தில் அடிக்கும்போது மிகவும் அவதானமாக அடிக்கவேண்டும் கொஞ்சம் மேலே அடிபட்டால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுவிடும்.

த்தூதுக்குடியில் இப்படித்தான் அப்பனையும் அமகனையும் தண்ணியைப்போட்டுவிட்டு கண்டமேனிக்கு அடித்து சிறிநீரகம் மிகவும் சிதைவுக்குள்ளாகி அவர்களது மலவாசல் வளியாக நீர் வழிந்து இறுதியில் ஒரே நேரத்தில் இருவரும் சாவடைந்தார்கள். 

இதை கொஞ்சம் உடற்கூறியல் ரீதியாகக் கற்பனை செய்தால் ஈரக்குலை நடுங்கும். 

இதில் என்ன வேடிக்கை என்றால் கொலைகாரர்களுக்கும் கொலை நடந்த இடத்துக்கும் பாதுகாப்புக்கொடுக்கிறாங்கள்.

இதற்கான விதை எப்போதோ போடப்பட்டு விட்டது.

புலிகளது கட்டுப்பாட்டில் இருந்தபோது குற்றச்செயல்கள் இருந்தது ஆனால் அவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததன் காரணம் இப்படியான் மூன்றாம் தர சிகிச்சை இல்லை முழுமையான விசாரணை உனமையைச் சொல்லாமல் விட்டால் வெளியை வரமுடியாது, இராணுவ எல்லை வேலிகளுக்கு அண்மையான பகுதியில் பங்கர் வெட்டக் கொண்டுபோய் விடுவாங்கள் )இப்படி இறந்தவர்கள் கனபேர்) கொஞ்சம் என்ன அதிகமான மனித உரிமைச் சட்டங்களுக்குப் புறம்பான செயற்பாடுகளும் தவிர பிணையில் வெளியில வருவது என்பது நடக்காத விசையம் இவைகளால் அனைவரும் பொத்திக்கொண்டு இருந்தவையள் இப்போ என்ன தவறு செய்தாலும் வெளியில எடுத்துவிட பிரக்கிராசிமார் அலையினம் இவைகள் காரணமாக போலீஸ்காரனுக்கு மக்கள் மீதான வெறுப்பு என்னதான் உண்மையான குற்றவாளியைக் கைது செய்தாலும் நீதிமன்ற நடைமுறைமூலம் வெளியில வந்துவிடுவார்கள் சிறையில் இருக்கும் காலத்திலும் அங்கு எல்லாமே கிடைக்கும் இவகளது கடுப்பும் ஓலீசாரின் வன்முறைக்குக்காரணம்.

முதலில முறையான் பூரணமான கல்வியறிவைப் பெறுங்கள் அவைதான் உங்களை சீரிய பாதையில் வழிநடாத்தும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸாரின் பாதுகாப்புடன் உயிரிழந்த வட்டுக்கோட்டை இளைஞனின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

21 NOV, 2023 | 10:01 AM
image

வட்டுக்கோட்டை பொலிஸாரின் பிடியில் இருந்த போது தாக்குதலுக்கு உள்ளான நிலையில் சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்ற இளைஞனின் மரணம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் குறித்த இளைஞனின் சடலமானது பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அவரது வீட்டுக்கு திங்கட்கிழமை (20) இரவு கொண்டுவரப்பட்டுள்ளது.

20231120_211630.jpg

பொலிஸார் 785 வழித்தட வீதியை முற்றாக வீதித்தடை மூலம் மூடி போக்குவரத்தை தடைப்படுத்தியிருந்தனர்.

20231120_211634.jpg

5 பொலிஸ் நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கடமையில் அமர்த்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

நிலையிலும் வீதியால் செல்பவர்கள் வட்டுக்கோட்டை பொலிஸாரை கேவலமாக திட்டி விட்டு, எச்சில் உமிழ்ந்து விட்டு சென்றுள்ளனர். 

20231120_210529.jpg

https://www.virakesari.lk/article/169819

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். வட்டுக்கோட்டையில் உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞனுக்கு பிணை

Published By: DIGITAL DESK 3    21 NOV, 2023 | 02:43 PM

image

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞனை கடந்த 08ஆம் திகதி விசாரணைக்காக வட்டுக்கோட்டை பொலிஸார் அழைத்த போது, தனது நண்பனுடன் பொலிஸ் நிலையம் சென்ற இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும், வழக்கம்பரை பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற களவு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை, அவர்களை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் அலெக்ஸ் எனும் இளைஞன் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

இளைஞனின் உயிரிழப்பை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில், உடலில் சித்தரவதை காயங்கள் காணப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.

அதேவேளை பொலிஸார் தன்னை எவ்வாறு சித்திரவதைக்கு உட்படுத்தினார்கள் என உயிரிழந்த இளைஞன், உயிரிழக்க ஓரிரு நாட்களுக்கு முன்னர் பேசிய காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உயிரிழந்த இளைஞன், இளைஞனின் நண்பன் மீதான களவு குற்றசாட்டு தொடர்பிலான வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விளக்கமறியலில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த இளைஞனின் நண்பர் முற்படுத்தப்பட்ட போது, அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மன்றில் செய்த சமர்ப்பணங்களை அடுத்து, இளைஞனை பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.

https://www.virakesari.lk/article/169869

  • கருத்துக்கள உறவுகள்

boy.jpg?resize=546,375&ssl=1

வட்டுக் கோட்டை இளைஞனின் மரணத்தில் வெளியான திடீர் திருப்பம்!

யாழ்- வட்டுக்கோட்டையில் பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளான இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ” பொலிஸார் தாக்கியதால் இளைஞன்  உயிரிழக்கவில்லை எனத் தெரிவித்து கடிதமொன்றைத் தருமாறு, இளைஞனின் உறவினர்களிடம் பொலிஸார் மிரட்டியுள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் நிலவரங்களை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” வட்டுக்கோட்டையில் காட்டுமிராண்டித்தனமான கொலை ஒன்று அரங்கேறியிருப்பதை என்னால் உணர முடிகிறது. உயிரிழந்த இளைஞனையும் அவரது நண்பரையும் பொலிஸார் காரணமில்லாமல் கைது செய்து சட்டத்திற்கு முரணாக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அவர்களுக்கு உரிய முறையில் வைத்திய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை. பின்னர் இந்த விடயங்களை வெளியே சொல்ல வேண்டாம் என அச்சுறுத்தி உள்ளார்கள்.

அது மாத்திரமில்லாமல் அந்த அச்சுறுத்தலின் விளைவாக தற்போது இளைஞனின் உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது. அவரோடு கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞரும் சிறைச்சாலையில் இருக்கின்றார். அவருக்கும் காயங்கள் காணப்படுகிறது. அவரது குடும்பத்திடம் சென்று பொலிஸார் தாங்கள் அவரை தாக்கவில்லை என கடிதம் தருமாறு அச்சுறுத்தியுள்ளனர். இந்த விடயங்களை நாங்கள் நாளைய தினம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவர இருக்கின்றோம்.

இவ்விடயத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் நிலவுகின்றது. இங்கே குற்றம் இழைத்ததும் பொலிஸார்,அக்  குற்றத்தை விசாரிக்க போவதும் பொலிஸார். ஊடகங்கள் இந்த வழக்கிற்கு முழுமையான ஆதரவை தர வேண்டும். அல்லது இந்த வழக்கின் உண்மைகள் குழி தோண்டிப்  புதைக்கப்படலாம்” இவ்வாறு  கனகரத்தினம் சுகாஷ்  தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1359933

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை இளைஞனுக்கு நீதி கேட்டு சடலத்துடன் ஊரவர்கள் போராட்டம்

21 NOV, 2023 | 04:48 PM
image

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணியை சேர்ந்த நாகராசா அலெக்ஸின் சடலத்துடன் ஊரவர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

3__3_.png

உயிரிழந்த இளைஞனின் இறுதி கிரியைகள் சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகன கிரியைக்காக மயானத்திற்கு எடுத்து செல்லும் போது , சடலத்துடன் ஊரவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

3__1_.png

பொலிசாரின் சித்திரவதையால் அலெக்ஸ் இறந்து 48 மணி நேரம் கடந்தும் இது வரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. பொலிஸ் விசாரணைக்குழு 48 மணி நேரத்திற்கு மெளகா விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என கூறப்படும் நிலையிலும் எவரும் கைது செய்யப்படாதது பொலிசாரின் விசாரணை மீது எமக்கு திருப்தி ஏற்படவில்லை என்பதுடன் அவர்கள் மீதான சந்தேகமும் வலுத்து வருகின்றன என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/169884

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் ; சிறைச்சாலைக்கு சென்று விசாரணை செய்த யாழ்.நீதவான்

22 NOV, 2023 | 10:31 AM
image

வட்டுக்கோட்டை இளைஞன்  மரணம் தொடர்பில் யாழ். நீதிமன்ற நீதவான் சிறைச்சாலைக்கு நேரில் சென்று வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டுள்ளார். 

அதேவேளை உயிரிழந்த இளைஞனுடன் கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞனிடமும் வாக்கு மூலம் பெற்றுக்கொள்வதற்காக வெள்ளிக்கிழமை (24)  மன்றில் முன்னிலையாகுமாறு இளைஞனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. 

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் பொலிஸாரின் சித்தரவதை காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.  

இளைஞனின் உயிரிழப்பு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இடம்பெற்றமையால் , இளைஞனின் உயிரிழப்பு தொடர்பிலான விசாரணைகள் யாழ்.நீதிமன்ற நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்று வருகின்றன. 

இளைஞனின் உடற்கூற்று பரிசோதனைகள் திங்கட்கிழமை (20) மதியம் யாழ்.போதனா வைத்தியசாலையில், சட்ட வைத்திய அதிகாரி உ. மயூரதன் மேற்கொண்ட போது, நீதவான் வைத்தியசாலைக்கு நேரில் சென்று சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். 

தொடர்ந்து சிறைச்சாலைக்கு நேரில் சென்று சிறைச்சாலை அத்தியட்சகர் , உத்தியோகஸ்தர்கள் , உள்ளிட்டவர்களிடம் வாக்கு மூலங்களையும் பெற்றுக்கொண்டார். 

உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி வி.திருக்குமரன், சட்டத்தரணி ரிஷிகேஷவன், மற்றும் சட்டத்தரணி மயூரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் மல்லாகம் நீதவான் நீதிமன்றில்  செவ்வாய்க்கிழமை  (21) முற்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உயிரிழந்த இளைஞன் மற்றும் அவரது நண்பரான மற்றைய இளைஞன் ஆகியோர் மீது நகை திருட்டு குற்றச்சாட்டு சுமத்தி வட்டுக்கோட்டை பொலிஸாரினால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய போது இருவரையும் மன்று விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து இருவரும் , யாழ்ப்பாண சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலே அலெக்ஸ் எனும் இளைஞன் உயிரிழந்தார். மற்றைய இளைஞன் தொடர்ந்து சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நிலையிலேயே நேற்றைய தினம் நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல அனுமதித்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/169920

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டையில் உயிரிழந்த கைதியின் மரணம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு!

வட்டுக்கோட்டை பொலிசாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் இளைஞரின் மரணம் தொடர்பில், வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நீதவான், யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு நேரில் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

அதேநேரம் உயிரிழந்த இளைஞனுடன் கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞனிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக நாளை மறுதினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்ற 26 வயதுடைய இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை உயிரிழந்தார்.

இளைஞரின் சடலம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனைகள் நேற்று முன்தினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில், சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. அதன்போது, நீதவான் வைத்தியசாலைக்கு நேரில் சென்று சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து சிறைச்சாலைக்கு நேரில் சென்று சிறைச்சாலை அத்தியட்சகர், உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களிடமும் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டார். இதேவேளை உயிரிழந்த இளைஞருடன் கைதான மற்றைய இளைஞர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/282048

  • கருத்துக்கள உறவுகள்

Siri-Walt.jpg?resize=700,375&ssl=1

பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் உயிரிழப்பு : சுவிஸர்லாந்து கவலை.

யாழில் பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சுவிஸர்லாந்து கவலை வெளியிட்டுள்ளது.

இளைஞரின் இறப்பு குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக சுவிஸர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

காவலில் இருக்கும் போது தாக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டை இலங்கை அதிகாரிகள் பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

https://athavannews.com/2023/1360203

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் அரசியல்வாதிகள் யாரும் முன்நின்று நீதிக்காக போராடமல் மெளனமாக இருக்கிறார்களே?

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை படுகொலை வழக்கு – யாழ்.நீதிமன்ற பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!

adminNovember 24, 2023
IMG-20231124-WA0013.jpg?fit=1170%2C658&s

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தை சூழ பெருமளவான காவற்துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை காவற்துறையினரால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18.11.23) உயிரிழந்துள்ளார்

இளைஞனின் உயிரிழப்பு தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் யாழ்ப்பாண நீதிமன்றில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞன் உயிரிழந்தது , யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் என்பதனால், கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

கடந்த திங்கட்கிழமை இளைஞனின் உடற்கூற்று பரிசோத்னை யாழ்.போதனா வைத்திசாலையில் மேற்கொள்ளப்பட்ட போது , நீதவான் நேரில் என்று சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனை தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

தொடர்ந்து யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு சென்று , சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் உத்தியோகஸ்தர்களிடமும் வாக்கு மூலங்களை பெற்று இருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மன்றில் எடுத்து கொள்ளப்படவுள்ள நிலையில், சிறைச்சாலை அத்த்தியட்சகர், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் கொலையான இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் ஆகியோர் மன்றில் தோன்றி தமது சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளனர்.

அதேவேளை சட்ட வைத்திய அதிகாரி, உடற்கூற்று பரிசோதனை அறிக்கையையும் மன்றில் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுக்காக பெருமளவான சட்டத்தரணிகள் முன்னிலையாக தீர்மானித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

IMG-20231124-WA0017.jpg?resize=800%2C450

 

https://globaltamilnews.net/2023/197708/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அலெக்ஸின் மரணம் ஓர் கொலை!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

அலெக்ஸ் மரணத்தின் பின்னணி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்கி இளைஞன் மரணம் : நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

Published By: DIGITAL DESK 3    24 NOV, 2023 | 05:02 PM

image

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்தங்கேணி இளைஞன் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் 31 சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான மற்றைய இளைஞன் அடையாளம் காட்டும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்யுமாறு நீதிவான் ஆனந்தராஜா உத்தரவிட்டார்.

https://www.virakesari.lk/article/170180

  • கருத்துக்கள உறவுகள்

நீதிவான் ஆனந்தராஜாவை உடனடியாக இடமாற்றம் செய்ய தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

இந்நிலையில், கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான மற்றைய இளைஞன் அடையாளம் காட்டும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்யுமாறு நீதிவான் ஆனந்தராஜா உத்தரவிட்டார்.

இருவர் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்ததே?

30 minutes ago, putthan said:

நீதிவான் ஆனந்தராஜாவை உடனடியாக இடமாற்றம் செய்ய தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும் 

அப்ப இன்னொரு நீதவான் நாட்டைவிட்டு தப்பியோடப் போகிறாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

 

அப்ப இன்னொரு நீதவான் நாட்டைவிட்டு தப்பியோடப் போகிறாரோ?

நடக்கலாம்,
தூர நோக்கில் வேறு ஒர் நடவடிக்கையும் எடுத்துள்ளனர் யாழ் பல்கலைகழகத்தில் சட்ட நெறி கற்கைக்கு சிங்கள மாணவர்களை அதிக உள்வாங்கியுள்ளனர், கொழும்பு பல்கலைகழகத்தில் சட்டத்தை தமிழில் படிக்கலாம் ஆனால் யாழில் ஆங்கிலம் அல்லது சிங்களத்தில் கற்கவேண்டிய நிலையை ஏற்படுத்தி ...தமிழ் மொழி சட்ட வல்லுனர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை சம்பவம்; பொலிஸ் அதிகாரிகள் அதிரடி கைது

சித்தங்கேணி இளைஞன் விவகாரத்துடன் தொடர்புடைய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இளைஞனின் உயிரிழப்பு மனித உயிர் போக்கல் அல்லது ஆட்கொலை என்ற நிலைப்பாட்டுக்கு நீதிமன்றம் வந்திருந்தது.

இதனையடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்ட நிலையில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் கடந்த 11 ஆம் திகதி வட்டுக்கோட்டை பொலிஸாரினால் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரில் ஒருவரான நாகராஜா அலெக்ஸ் என்பவர் திடீரென சுகவீனமடைந்த நிலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வட்டுக்கோட்டை-சம்பவம்-பொலிஸ்-அதிகாரிகள்-அதிரடி-கைது/71-328637

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

வட்டுக்கோட்டை சம்பவம்; பொலிஸ் அதிகாரிகள் அதிரடி கைது

மிருசுவிலில்... இரண்டு சிறுவர் உட்பட  12 பேரை கொலை செய்த ராணுவத்தை  கூட 
பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை  செய்த நாட்டில், 
இந்த காவல் துறைக்கு... பெரிதாக எந்தத் தண்டனையும் கிடைக்கப் போவதில்லை.
திருகோணமலையில்... ஐந்து மாணவர்களை கொலை  செய்த கடற்படையினருக்கு 
கூட தண்டனை வழங்காத நாடு இது. 
இப்படி பல கொலைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
தமிழர் மரணம்.. தொடர் கதையாக இருக்கப் போகின்றது என்பது மட்டும் கசப்பான உண்மை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சித்தங்கேணி இளைஞனுக்கு நடந்தது என்ன? : சகோதரன், தந்தை, பெரிய தாயார் கண்ணீர் மல்க தெரிவிப்பு

Published By: VISHNU     26 NOV, 2023 | 12:22 PM

image

"வீட்டுக்கு அண்ணாவை அழைத்து வந்தபோது, அண்ணா குடிக்க தண்ணீர் கேட்டார். செம்பில் தண்ணீர் கொடுத்த போது, அதனை அவரை குடிக்கவிடாமல், பொலிஸார் செம்பை பறித்து தண்ணீரை வெளியே ஊற்றிவிட்டார்கள்" என வட்டுக்கோட்டையில் உயிரிழந்த இளைஞனின் சகோதரன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். 

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்குள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது 26) எனும் இளைஞனின் சகோதரன் மேலும் கூறுகையில்,

கடந்த 08ஆம் திகதி மாலை 4 மணியளவில் மர கடத்தல் வழக்கு ஒன்று தொடர்பிலான விசாரணைக்கு என அண்ணாவை முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்றனர். அதன்போது, தாம் இளவாலை பொலிஸார் என்றே எமக்கு கூறியிருந்தனர். 

நான் இளவாலை பொலிஸ் நிலையம் சென்றபோது, தாங்கள் யாரையும் கைது செய்யவில்லை என மறுத்துவிட்டனர். பிறகு நான் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் சென்று விசாரித்தபோதும் தாமும் யாரையும் கைது செய்யவில்லை என்றும் இங்கே யாரையும் கூட்டி வரவில்லை என்றும் கூறினார்கள்.

ஆனாலும் நான் வீடு திரும்பாமல் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் முன்பாகவே காத்திருந்தேன். இரவு 7 மணி போல இங்கே தான் அண்ணா இருக்கிறார் என்றார்கள். அதனால் தொடர்ந்து பொலிஸ் நிலையம் முன்பாக காத்திருந்தேன். இரவு 10 மணி போல அண்ணாவின் அவலக் குரல் கேட்டது. அண்ணாவிற்கு அடிக்கிறார்கள் என தெரிந்து உள்ளே போய் கேட்டேன். 

களவு வழக்கொன்றில் சந்தேகத்தில் கைது செய்திருக்கிறோம். விசாரணை முடிய நாளை விடிய விடுவிப்போம் என கூறினார்கள். எங்களை வீட்ட போக சொல்ல நாம் வீட்ட வந்துவிட்டோம். 

இரவு 11 மணி போல அண்ணாவை பொலிஸார் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போதே அண்ணாவிற்கு கை ஏலாது. நடக்கவும் சிரமப்பட்டார். "குடிக்க தண்ணி தா" என கேட்டார். நான் செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தபோது, பொலிஸார் அதனை பறித்து நிலத்தில் ஊற்றிவிட்டார்கள். தண்ணீர் கொடுக்க வேண்டாம் என எம்மை மிரட்டினார்கள். 

பின்னர் சுமார் ஒரு மணிநேரம் எமது வீட்டை சோதனையிட்டனர். பின் மீண்டும் அண்ணாவை அழைத்துக்கொண்டு பொலிஸ் நிலையம் சென்றுவிட்டனர். 

மறுநாள் 09ஆம் திகதி நாம் பொலிஸ் நிலையம் சென்று கேட்டபோது, உரிய முறையில் பதில் சொல்லவில்லை. நாம் பொலிஸ் நிலையம் முன்பாக காத்திருந்தபோது, நீண்ட நேரத்தின் பின்னர் எம்மை பொலிஸ் நிலையத்துக்குள் அழைத்து, அவரை விசாரணைக்காக வெளியே அழைத்து சென்றுள்ளார்கள். நீங்கள் போட்டு பிறகு வாங்க என எம்மை அனுப்பி வைத்தார்கள்.

அதற்கு அடுத்த நாள் 10ஆம் திகதி போன போதும் அண்ணாவை விடவில்லை. அதனால் நாம் 10ஆம் திகதி மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்தோம். 

பிறகு 11ஆம் திகதி இரவு 07 மணி போல அண்ணாவை விடுகிறோம் என சொன்னார்கள். அப்ப நான் மாலை 4 மணியளவில் பொலிஸ் நிலையம் சென்றேன். அப்போது குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி என்னை அழைத்து ஏன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டாய் என மிரட்டும் தொனியில் விசாரணை செய்தார். அண்ணாவை இனி விடுவிக்க முடியாது எனவும் கூறினார். 

பின்னர் என்னை வெளியே அனுப்பி விட்டு, சிறிது நேரம் கழித்து என்னை மீள உள்ளே அழைத்து, அண்ணாவோடு போன் ஒன்றை தந்து அண்ணா அழைப்பில் உள்ளார் கதை என்றார். போனில் கதைத்த போது, "எப்ப என்னை விடுவார்கள் என கேள்" என அண்ணா சொன்னபோது போன் கட் ஆகிட்டு. அவர்கள் போனை பறித்தார்களா? அல்லது தானாக கட் ஆகிட்டா என தெரியவில்லை. 

பிறகும் நாம் தொடர்ந்தும் காத்திருந்தபோது, இரவு 08 மணியளவில் அண்ணாவை கூட்டி வந்து காட்டினார்கள். அப்போது அண்ணாவின் கைகளில் காயங்களும், வீக்கங்களும் இருந்தன.

கையில் என்ன காயம் என கேட்டபோது, பின்னுக்கு கையை இழுத்து விலங்கு போட்டு இழுத்ததால் ஏற்பட்ட காயம் என சொன்னார். 

அதற்கு பிறகு 12ஆம் திகதி விடிய 11 மணி போல நீதிமன்றுக்கு அழைத்து செல்வோம் அப்ப வாங்க என எம்மை அனுப்பி வைத்தனர்.

நாம் மறுநாள் 12ஆம் திகதி காலை 10 மணிக்கே பொலிஸ் நிலையம் சென்றுவிட்டோம். காலை 11 மணிக்கு பிறகு அண்ணாவையும் மற்றயவரையும் பொலிஸ் வாகனத்தில் ஏற்றி நீதிமன்றுக்கு அழைத்து செல்வதாக சென்றனர். 

நாம் அந்த வாகனத்தை பின் தொடர்ந்தோம். வட்டுக்கோட்டையில் இருந்து சங்கானை வந்து, அங்கிருந்து சித்தங்கேணி வந்து, சித்தங்கேணியால் மல்லாகம் போய், மல்லாகத்தால் சுன்னாகம், மருதனார் மடம் எல்லாம் போய் மருதனார் மடத்தில் இருந்து கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.. 

வைத்தியசாலையில் சுமார் ஒன்றரை மணி நேரம் வைத்திருந்த பின்னர் மீண்டும் அங்கிருந்து மருதனார் மடத்தில் உள்ள மல்லாகம் நீதவானின் இல்லத்திற்கு அழைத்து சென்றனர். 

நீதவான் இல்லத்திற்கு அருகில் எம்மை விடவில்லை. அண்ணாவின் சார்பில் சட்டத்தரணி ஒருவர் முன்னிலையாகி இருந்தவர். நீதவான் இருவரையும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 

சட்டத்தரணியின் விண்ணப்பத்தை அடுத்து, நீதவான் அண்ணாவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு கட்டளையிட்டார். 

அதை அடுத்து 12ஆம் திகதி மாலை 06 மணியளவில் சிறைச்சாலை உத்தியோகஸ்தர் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அண்ணாவை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்து உள்ளோம். அவரால் ஏலாது. நீங்கள் யாராவது அவருக்கு உதவியாக வந்து நில்லுங்கள் என கூறினார். 

அதனை அடுத்து, நான் வைத்தியசாலை சென்று அண்ணாவிற்கு உதவியாக நின்றேன் என்றார். 

அதேவேளை உயிரிழந்த இளைஞனின் பெரியம்மா தெரிவிக்கையில், 

வைத்தியசாலையில் இருந்தவனுக்கு சாப்பாடு கொண்டு போய் கொடுத்த போது, அவன் பெரியம்மா சாப்பிட விருப்பமா தான் இருக்குது. சாப்பிட்டா சத்தி வருகுது என்றான். றோல் ஒன்றை கொடுத்தேன் அதனை சாப்பிட்டு சத்தி எடுத்தான் . பிறகு கொண்டு போன ஆப்பிளில் இரண்டு துண்டை வெட்டி கொடுத்தான். அதை சாப்பிட்டான். நான் பார்க்கும் போது அவன் ஏலாது தான் இருந்தான். எப்படியாவது குணமாகி வந்துடுவான் என எதிர்பார்த்தேன். ஆனால் அவன் மீள வர முடியாத தூரத்திற்கு போய்விட்டார் என கண்ணீர் விட்டழுதபடி தெரிவித்தார். 

உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவிக்கையில், 

வைத்தியசாலையில் 28ஆம் இலக்க விடுதியில் தான் மகனை அனுமதித்து இருந்தார்கள். அவனை பார்த்தேன். கை கால்களை கூட அசைக்க முடியாத அளவுக்கு சுகவீனமாக இருந்தான். எழும்பி இருக்க கூட முடியாத அளவில் இருந்தான். நான் இரண்டு நாளாக அவனை தூக்கி இருத்தி பார்த்தேன். 

பின்னர் புதன்கிழமை அவன் குணமடைந்துவிட்டான் என கூறி சிறைச்சாலைக்கு அழைத்து சென்று விட்டார்கள். 

ஞாயிற்றுக்கிழமை மகன் உயிரிழந்த விடயம் எங்களுக்கு அறிவிக்கப்பட்டது. சிறைச்சாலையில் இருந்து கொண்டு வரும் போதே உயிரிழந்தார் என சொன்னார்கள். ஆனால் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. அவன் சிறைச்சாலையிலேயே உயிரிழந்துவிட்டான் என கூறினார்.

https://www.virakesari.lk/article/170278

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.