Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Starbucks, McDonald’s உணவகங்களை புறக்கணித்து... சத்தமில்லாமல் சம்பவம் செய்யும் அரேபிய இளைஞர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காஸா பகுதியில் இஸ்ரேல் நாட்டின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், மேற்கத்திய நாடுகளின் பொருட்கள் மற்றும் உணவகங்களை புறக்கணிக்கும் முடிவுக்கு அரேபிய நாடுகளின் இளைஞர்கள் வந்துள்ளனர்.

அரேபிய இளைஞர்கள் மத்தியில்

அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர், இந்த புறக்கணிப்பு முடிவு அரேபிய இளைஞர்கள் மத்தியில் தீயாக பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. எகிப்து மற்றும் ஜோர்டான் நாடுகளின் இளைஞர்களே இந்த விவகாரத்தில் தீவிரமாக உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

Starbucks, McDonald’s உணவகங்களை புறக்கணித்து... சத்தமில்லாமல் சம்பவம் செய்யும் அரேபிய இளைஞர்கள் | Boycott Campaigns Western Brands Arab Countries@reuters

மட்டுமின்றி, சமூக ஊடக தொடர்புகளால் தற்போது குவைத் மற்றும் மொராக்கோ உள்ளிட்ட பல்வேறு அரேபிய நாடுகளிலும் பரவி வருகிறது. சில நிறுவனங்கள் வெளிப்படையாக இஸ்ரேல் ஆதரவு நிலை எடுத்துள்ளதால், அந்த நிறுவனங்களின் பொருட்களை அரேபிய இளைஞர்கள் வெளிப்படையாகவே புறக்கணிக்க கோரி வருகின்ரனர்.

டசின் கணக்கான நிறுவனங்கள் மற்றும் பொருட்கள் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டு, தற்போது இவைகளை புறக்கணித்து பதிலுக்கு உள்ளூர் பொருட்களை மக்கள் நாடும் நிலைக்கு வந்துள்ளனர்.

எகிப்தில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இருப்பதால், தெருவில் இறங்கி போராட எவரும் முன்வராத நிலையில், மேற்கத்திய நாடுகளின் பொருட்களை, உணவகங்களை புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

கைகளில் ரத்தக்கறை இல்லை

இந்த புறக்கணிப்பு நடவடிக்கைகள் இஸ்ரேல் முன்னெடுக்கும் போரை எந்த வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தாது என குறிப்பிட்டுள்ள 31 வயது எகிப்து நாட்டவர் ஒருவர், மேற்கத்திய நாடுகளின் பொருட்கள் அல்லது நிறுவனங்களை புறக்கணிப்பதால், குறைந்தபட்சம் நமது கைகளில் ரத்தக்கறை இல்லை என்பதில் நிம்மதி கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Starbucks, McDonald’s உணவகங்களை புறக்கணித்து... சத்தமில்லாமல் சம்பவம் செய்யும் அரேபிய இளைஞர்கள் | Boycott Campaigns Western Brands Arab Countries@afp

இதனால் தாம் அமெரிக்க உணவகங்கள் மற்றும் தயாரிப்புகளை புறக்கணித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜோர்டானில் தற்போது McDonald’s மற்றும் Starbucks கிளைகள் பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுவதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி, பல்பொருள் அங்காடிகளில் மக்கள் உள்ளூர் பொருட்களை மட்டுமே தெரிவு செய்வதாகவும், மேற்கத்திய நாடுகளின் தயாரிப்புகளை தற்போது சீண்ட ஆளில்லை என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக மாலை நேரங்களில் Starbucks, McDonald’s மற்றும் KFC கிளைகளில் கூட்டம் அலை மோதும். ஆனால் செவ்வாய் மாலை குவைத் நகரத்தில் Starbucks, McDonald’s மற்றும் KFC உள்ளிட்ட உணவகங்களின் சுமார் 7 கிளைகளில் உள்ளூர் மக்கள் எவருமின்றி, வெறிச்சோடி காணப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

Coca-Cola மற்றும் Nestle தயாரிப்புகள்

இதே நிலை தான் மொராக்கோ தலைநகரிலும் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சுதாரித்துக் கொண்ட McDonald’s எகிப்து உரிமையாளர்கள் காஸா மக்களுக்காக 650,000 டொலர் மனிதாபிமான உதவிகள் மேற்கொள்ள உறுதி அளித்துள்ளனர்.

Starbucks, McDonald’s உணவகங்களை புறக்கணித்து... சத்தமில்லாமல் சம்பவம் செய்யும் அரேபிய இளைஞர்கள் | Boycott Campaigns Western Brands Arab Countries@reuters

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தும் ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். ஆனால் தற்போதைய அரேபிய இளைஞர்களின் ஒருமித்த முடிவுக்கு அந்த ஒப்பந்தங்கள் ஒரு பொருட்டாக இல்லை என்றே கூறப்படுகிரது.

இந்த மாத தொடக்கத்தில் துருக்கி பாராளுமன்ற வளாகத்தில் செயல்படும் உணவகங்களில் இருந்து Coca-Cola மற்றும் Nestle தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

https://news.lankasri.com/article/boycott-campaigns-western-brands-arab-countries-1700762717?itm_source=parsely-api

  • கருத்துக்கள உறவுகள்

2009 May மாதமளவில் கனடாவில் வர்த்தகர்கள் அனைவரும் சேர்த்து இலங்கையில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில்லை என முடிவெடுக்க கூட்டமொன்று கூட்டப்பட்டது. இதற்கு பெருமளவில் ஆதரவு கிடைக்கவில்லை. 

ஆனால் மாத  முடிவில் விடுதலைப் புலிகளின் முதலீட்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் வியாபார நிலையங்களே இலங்கையில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில் முன்னணியில் நின்றன. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன்னர் விடுமுறை முடிந்து வரும் வழியில் McDonald இல் ஒரு கோப்பி வாங்கி குடிப்போம் என்று எனது மக்களிடம் கேட்டபோது தாங்கள் McDonald க்கு போவதில்லை என்று மறுத்து விட்டார்கள். 

அதற்கு அவர்கள் சொன்ன காரணம் எனக்கு அதிசயமாக இருந்தது. 

McDonald நிர்வாகம் சூழல் மாசடைதல் பற்றி சிந்திப்பது இல்லை என்றும் அவர்களது பணியாளர்களுக்கு சரியான சம்பளத்தை வழங்காததுடன் பணி நேரம் சம்பந்தமான சட்டங்களை மதிப்பது இல்லை என்றும் சொன்னார்கள். 

உண்மையில் இவர்களுக்கும் McDonald பணியாளர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஆனால் இளைய சமுதாயம் புறக்கணிக்கணிப்பதால் தாமும் கலந்து கொள்வதற்காக சொன்னார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Kapithan said:

2009 May மாதமளவில் கனடாவில் வர்த்தகர்கள் அனைவரும் சேர்த்து இலங்கையில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில்லை என முடிவெடுக்க கூட்டமொன்று கூட்டப்பட்டது. இதற்கு பெருமளவில் ஆதரவு கிடைக்கவில்லை. 

ஆனால் மாத  முடிவில் விடுதலைப் புலிகளின் முதலீட்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் வியாபார நிலையங்களே இலங்கையில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில் முன்னணியில் நின்றன. 

☹️

இப்ப இருக்கிற எங்கடை அமைப்புகளை நம்பி குனிஞ்சு ஒரு தும்புகூட எடுக்கேலாது கண்டியளோ? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சில வருடங்களுக்கு முன்னர் விடுமுறை முடிந்து வரும் வழியில் McDonald இல் ஒரு கோப்பி வாங்கி குடிப்போம் என்று எனது மக்களிடம் கேட்டபோது தாங்கள் McDonald க்கு போவதில்லை என்று மறுத்து விட்டார்கள். 

அதற்கு அவர்கள் சொன்ன காரணம் எனக்கு அதிசயமாக இருந்தது. 

McDonald நிர்வாகம் சூழல் மாசடைதல் பற்றி சிந்திப்பது இல்லை என்றும் அவர்களது பணியாளர்களுக்கு சரியான சம்பளத்தை வழங்காததுடன் பணி நேரம் சம்பந்தமான சட்டங்களை மதிப்பது இல்லை என்றும் சொன்னார்கள். 

உண்மையில் இவர்களுக்கும் McDonald பணியாளர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஆனால் இளைய சமுதாயம் புறக்கணிக்கணிப்பதால் தாமும் கலந்து கொள்வதற்காக சொன்னார்கள். 

இந்த உணவகங்களுக்கு போகாமல் விடுவதால் எமது தேக ஆரோக்கியம் மேம்படும் அதிக கலோரி கொண்டவை . அரேபிய இளையோர் பிளைத்துகொண்டனர் எங்கடை புலம்பெயர் வருங்கால சந்ததி இவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த துரித உணவகங்கள் வருமுன் வந்த பின் .

F-u-E65e-WMAArs3y.jpg

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

2009 May மாதமளவில் கனடாவில் வர்த்தகர்கள் அனைவரும் சேர்த்து இலங்கையில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில்லை என முடிவெடுக்க கூட்டமொன்று கூட்டப்பட்டது. இதற்கு பெருமளவில் ஆதரவு கிடைக்கவில்லை. 

ஆனால் மாத  முடிவில் விடுதலைப் புலிகளின் முதலீட்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் வியாபார நிலையங்களே இலங்கையில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில் முன்னணியில் நின்றன. 

☹️

விடுதலை புலிகளின். பெயரில் இலங்கை தவிர உலகில் எந்த சொத்துகளும் இல்லையே??   புலிகள் பணத்தில்   தனிநபர்கள்  பெயரில் தான்  சொத்துக்கள் இருந்தது    வருமானம் 50க்கு 50 % என்ற உடன்பாட்டுடன்.  ஆனால் 2009 பிறகு   புலிகள் இல்லை என்பதால் அனேகர் 

1,.ஏமாத்திட்டீங்களே??? 

2,..சிலர்  மலிவாக.  பணத்தைக் கொடுத்து வேண்டி விட்டார்கள்   

3,. ஆகவே  2009 பிறகு  இலங்கையிலிருந்து பொருள்கள் இறக்குமதி செய்தாதற்க்கு    புலிகள் காரணம் இல்லை   

4,.உலகில் எங்கவாது  புலிகளிற்கு சொத்துக்கள் இருந்தால் அறியத்தரவும்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

கந்ஸ், 😩

விடயம் புலிகளின் சொத்துக்கள் பற்றியதல்ல. எமது வியாபாரிகளின் மனநிலை தொடர்பானது.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kapithan said:

2009 May மாதமளவில் கனடாவில் வர்த்தகர்கள் அனைவரும் சேர்த்து இலங்கையில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில்லை என முடிவெடுக்க கூட்டமொன்று கூட்டப்பட்டது. இதற்கு பெருமளவில் ஆதரவு கிடைக்கவில்லை. 

ஆனால் மாத  முடிவில் விடுதலைப் புலிகளின் முதலீட்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் வியாபார நிலையங்களே இலங்கையில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில் முன்னணியில் நின்றன. 

☹️

குளத்துடன் கோவித்து அடிக்கழுவாமல் இருக்க ஏலாது.

வடக்கு, கிழக்கு மலையகப் பொருட்கள் மட்டும் என்ற முடிவே சிறப்பானது.!

கிளிநொச்சி கீரை மிக்சர், சிவனடியாள் மிளகாய்தூள் சந்தை கிடைத்தால் பலருக்கு தொழில் கிடைக்குமே.

அதே வேளை மேற்கில் பிரபலமான கிங்ஸ் தூள், கொழும்பில் இருக்கும் பக்டறியின் சிறு பகுதியை கூட வடக்கே நகர்த்த மறுத்து விட்டது.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.