Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துவாரகா வருகிறார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துவாரகா வருகின்றார் என்று காசி ஆனந்தன் திரும்பத் திரும்ப சொன்ன அம்புலிமாமா கதையை யாழ் களத்தில் ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. இதைப் போலவேதான் புலம்பெயர் தமிழர்களும், தாயகத் தமிழர்களும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்கள். 

 நெடுமாறனும், காசி ஆனந்தனும் புலிகளின் தலைவர் பிரபாகரனையும், அவரது பெற்றோரையும், பிள்ளைகளையும் அரசபரம்பரை போலச் சித்தரிக்கின்றனர்.

ஆனால் தமிழர்கள் தலைவர் பிரபாகரனை ஏற்றுக்கொண்டது அவரது தன்னலமற்ற கொள்கைகளாலும், ஒழுக்கமும், கட்டுக்கோப்பும், வீரமும், ஈகமும் ஒருங்கே அமைந்த ஒரு விடுதலை அமைப்பை உருவாக்கி, தமிழீழம் என்ற தனிநாட்டுக்  கொள்கையை விட்டுக்கொடுக்காமல் இறுதிவரை தமிழீழக் கனவுடன் போராடியமையால்தான்.

மேலும் தமிழர்கள் கற்காலத்தில் வாழவில்லை என்பதை இவர்களும், இவர்களை நூல்கொண்டு ஆட்டுபவர்களும் புரிந்துகொள்ளவில்லை.

தலைவரும், மனைவியும்,  மகளும் தப்பித்தார்கள் என்ற கதையை இவர்கள் இப்போது பரப்புவது இந்த 14 ஆண்டுகளில் புலிகளின் சொத்துக்களையும், சேர்த்த நிதியையும் செலவழித்து, அவை வற்றிப்போக, புதிய வழிகளில் பணம்பார்க்க முயற்சிப்போருக்கு உதவத்தான் என்று தெரிகின்றது.

இவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கும் ஊடகங்களும் இந்த மோசடியாளர்களின் புறங்கையில் இருந்து ஒழுகுவதை நக்கும் நோக்கில்தான் கடினமான கேள்விகளைக் கேட்பதில்லை. சுயபுத்தி உள்ளவர்கள் கேள்விக்குட்படுத்தக்கூடிய பல வசனங்களை காசி ஆனந்தன் இந்தக் காணொளியில் உதிர்த்திருக்கின்றார். ஆனால் CMR பேட்டி எடுப்பவர் அப்படியே நகர்ந்துபோகின்றார்.

எந்த ஒரு நாடுகளையும் நம்பாது, சுயமாக தமிழ் மக்களை மாத்திரம் நம்பி அவர்களின் விடியலுக்காக ஆயுதப் போராட்டம் நடாத்தி, அதற்காகவே தன்னையும், முழுக்குடும்பத்தையும் ஆகுதியாக்கிய ஒரு தலைவன், எங்கோ தப்பி இருப்பதாகவும், வலிமைமிக்க நாடுகளின் பின்னணியுடன் (இந்தியா என்று எடுத்துக்கொள்க) ஆயுதமில்லாத ஒரு வலிமைமிக்க அரசியல் போராட்டத்தை நடாத்த மகள் துவாராகவை முன்னிறுத்தியிருப்பதாகவும், தலைவரும் எதிர்காலத்தில் தோன்றுவார் என்றும், 91 வயதில் உள்ள நெடுமாறன் உறுதியாக நம்புவதை,  காசி ஆனந்தன் இந்தக் காணொளியில் கடத்துகின்றார். காசி ஆனந்தன் தான் தலைவருடன் அல்லது அவர் மகள் துவாரகாவுடன் உரையாடியானார் என்று ஒரு சந்தர்ப்பத்திலும் சொல்லவில்லை. ஆனால் துவாரகா வருகின்றார் . இதை நம்புங்கள் என்று தமிழர்களைக் கேட்கின்றார்.

கேட்கின்றவன் கேணையனாக இருப்பான் என்பதில் தெளிவாகத்தான் இருக்கின்றார்!

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி பிரியன்.......வந்தால் மகிழ்ச்சி.....!  

  • கருத்துக்கள உறவுகள்

வந்தால் மகிழ்ச்சி.. வராவிட்டால் வீரவணக்கம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துவாரகா வந்து என்னத்தை சொல்லுறா எண்டு பார்ப்பம் 😂

  • கருத்துக்கள உறவுகள்

துவாராகாவுக்கு வீர வணக்கங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

துவாரகா வருகின்றார் என்று காசி ஆனந்தன் திரும்பத் திரும்ப சொன்ன அம்புலிமாமா கதையை யாழ் களத்தில் ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. இதைப் போலவேதான் புலம்பெயர் தமிழர்களும், தாயகத் தமிழர்களும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்கள். 

வணக்கம் கிருபன்

நீங்கள் சொல்வது சரி எல்லோரும் கண்டுகொள்ளவில்லை என்றால் என்ன தான் செய்யலாம்?

2009 க்குப் பின இப்படி எத்தனையைப் பார்த்துவிட்டோம்.

என்னைப் பொறுத்தவரை இந்தியா ஏதோ ஒரு அரசியலை நகர்த்த போகுது.அதற்கு எல்லோரையும் வாயடக்க வேண்டிய தேவை.அதற்கேற்ற ஆள் இவராக இருக்கலாம் என்று எண்ண தோன்றுகிறது.(இது எனது எண்ணம் மட்டுமே).

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து இதை பொறுமையாக முழுமையாக படித்து, விளங்கிக் கொண்டு உங்கள் கருத்தை எமக்கு தெரிவிக்கலாம்!

 

துவாரகா விடயத்தில் உண்மையை உரைப்பவர்களை விமர்சனம் செய்து, அவர்களிடமிருந்து உண்மைகள் வெளிவராமல் தடுக்கவென சமூகவலைத் தளங்களில் ஒரு கும்பல் இயங்கி வருகின்றது. 

கடந்த சூலை மாதம் தொடக்கம் செப்தெம்பர் வரை முன்னாள் போராளிகளை அணுகி, தான் துவாரகா என்று கூறி, WhatsApp ஊடாக தொடர்பை பேணிய நிலையில், துவாரகாவை, துவாரகாவின் விடயங்களை நன்கு தெரிந்த முன்னாள் போராளிகள், கேட்ட வினாக்கள் எவற்றுக்கும் சரியான பதில்கள் கிடைக்கவில்லை என்பதுடன், நீண்ட உரையாடல்களின் போதும், ஒரு கணம் கூட முகத்தை காட்டவில்லை. அத்துடன் ஆரம்பத்தில் போராளிகளை சந்திப்பதாக கூறியவர், அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை என சாக்கு போக்கு சொல்லி, சிறிலங்கா அரசாங்கள் பேச்சுவார்த்தை என கூறி, தமிழர் தரப்பை, இழுத்தடித்து எப்படி காலத்தை கடத்துமோ, அவ்வாறான ஒன்றே நிகழ்ந்து வந்தது.

 

இப்போது வாசகர்களான, உங்களிடம் ஒரு கேள்வி எழுந்திருக்கும், துவாரகா இல்லை என்று முன்னரே தெரியுமென்றால்; முன்னாள் போராளிகளான நீங்கள் ஏன் அவருடன் பேசுவதற்கு சென்று, இரண்டு மாத காலத்தை வீணடித்தீர்கள் என்பது தான் அந்த வினா.

இதற்கான காரணம், 

💥 நாங்கள் அவருடன் பேச செல்லவில்லையானால், அதனை காரணமாக காட்டியே உலகத் தமிழர்களை, தான் உண்மையாக தலைவரின் மகளான துவாரகா தான் என்பதை எளிதாக நம்ப வைத்திருக்க முடியுமல்லவா...!!

அத்துடன் 

💥 முன்னாள் போராளிகளான எமக்கும் ஒரு பாரிய பொறுப்பு/ கடமை இருக்கிறது, இவர் துவாரகா இல்லை என்பதை உறுதிப்படுத்தி எங்கள் மக்களுக்கு சொல்ல வேண்டியதுடன், இவர் யார், இதன் பின்னணி என்ன என்பதை கண்டறிந்து சொல்வதும்.

 

இந்த நிலையில் தான், இவரது ஏமாற்று நாடகத்தை நன்கு உறுதிப்படுத்திய நிலையில், செப்தெம்பர் இறுதிப் பகுதியில் எங்களது தொடர்புகளை நிறுத்திக் கொண்டோம்.

 

அத்துடன் அவர்கள் தங்கள் ஏமாற்று நாடகத்தை நிறுத்திக் கொள்வார்கள் என எண்ணினோம்.

ஆனால் அது முடிந்தபாடில்லை.

 

இருந்தும் உண்மையை வெளிப்படுத்தும் முன்னாள் போராளிகள் மீது விசமத்தனமான அவதூறு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். 

 

அது எப்படியென்றால், அவர்கள் முன்னாள் போராளி என்று வைத்துக் கொண்டால், அவர் இயக்கத்தில் இருக்கும்போது பெண்களுடன் தகாத உறவுகளை வைத்திருந்தார், ஒன்றிரண்டல்ல பல பெண்களுடன்...

அடுத்து முள்ளிவாய்க்காலில், பதுங்கு குழியில் பிறரின் மனைவியுடன் தவறான தொடர்பில் இருந்தார். இப்படியே தொடரும்....

 

விடுதலைப் புலிகள் என்பவர்கள் உலகிலேயே கட்டுப்பாடு, ஒழுக்கம் மிக்க ஒரு விடுதலை இராணுவம் என்பது யாவரும் அறிந்ததே! 

அதிலும் தவறான பாலியல்/ பெண் தொடர்புகள் என்ற விடயத்தில் அதியுச்ச தண்டனை வழங்கப்பெறுவதுடன், அவ்வாறான சிறிதளவு சம்பவம்/ சேட்டைகள் இடம்பெற்றாலே சம்பந்தப்பட்டவர்கள் அமைப்பிலிருந்து விலக்கப்பட்டு விடுவார்கள். இதில் மூத்த போராளி, புதிய போராளி என்ற எந்தவித தயவும் கிடையாது. அத்துடன் நிதி மோசடி என்ற விடயமும் இவ்வாறாகவே தண்டனைக்குள்ளாக்கப் பெறும். 

 

விடயம் என்னவென்றால், தூவாரகாவின் வருகை என்கின்ற போலி செயற்பாட்டை முன்னெடுக்கும் கும்பலினால், உண்மையை உரைக்கும் நபர்களுக்கு எதிராக வைக்கப்பெறும் அவதூறு பரப்புரை மேற்சொன்ன பெண், நிதி மோசடி என்பதாகவே அமையும். 

அதிலும் 2009 இறுதியுத்தம் வரை போராளிகளாக இருந்தவர்கள் மீதே இக்குற்றச்சாட்டுக்கள் இந்த கும்பலினால் கூறப்பெறுகின்றன. 

அப்படியாயின் இதன் பின்னணி என்ன?

எங்கள் தாயக மண்ணில் செயற்பட்ட போராளிகள், வாழ்ந்த பெண்கள் என்பவர்கள் யார்? அவர்கள் எங்கள் சகோதரர்கள். விடுதலை அமைப்பை, எங்கள் தனியரசை தலைமையேற்று வழிநடத்தியவர் யார்? அவரின் காலத்தில், அவரின் ஆட்சியில் போராளிகளும், எங்கள் பெண்களும் இவர்கள் விமர்சிப்பது போன்ற கலாச்சார சீரழிவையா கொண்டிருந்தனர்.

தங்களின் நாசகார திட்டத்தை நிறைவேற்ற எங்கள் தேசத்தின் காவலர்களையும், தன்மானத்துடன் வாழ்ந்த எம் பெண்கள் சமூகத்தையும் இழிவுபடுத்துகின்றார்கள்.

 

இவர்களின் இந்தச் செயற்பாடுகளினூடாக இவர்கள் அடைய நினைப்பவை...

 

♦️ விடுதலைப்புலிகள் போராளிகளின் கட்டுப்பாடுகள், ஒழுக்கம் தொடர்பாக அவதூறுகளை பரப்பி, ஒட்டுமொத்தமாக புலிகள் இயக்கத்தின் மீதும் சேறு பூசுதல்.

 

♦️ தலைமறைவாக வாழ்ந்துவரும் விடுதலைப் புலிகள் முன்னாள் போராளிகளின் புகைப்படங்கள், அவர்கள் பற்றிய விபரங்கள், செய்த பணிகளை பொதுவெளியில் வெளிப்படுத்தி, சிங்களத்திற்கு தகவல் கொடுத்து - இனி எக்காலத்திலும் அவர்களை விடுதலைக்கான பயணத்தில் தொடர முடியாது செய்தல்.

 

♦️ துவாரகாவின் வருகையும், அதற்கான நிதி திரட்டலும் என்ற விடயத்தில், புலம்பெயர் தேசங்களிலுள்ள அமைப்புகள் மற்றும் செயற்பாட்டளர்களிடையே முரண்பாடுகள்/ பிளவுகளை தொடர்ந்து ஏற்படுத்தி, புலம்பெயர் தேசங்களிலுள்ள இயக்க கட்டமைப்புகளை சிதைத்தல்.

 

♦️ மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி, மக்களை எப்போதும் பரபரப்பு நிலையில் வைத்திருத்தல்.

 

இவ்வளவு பிரச்சினைகளை, சிக்கல்களை புலம்பெயர் தேசங்களில் ஏற்படுத்தி, உருவாக்கித் தான் இவர்கள் சொல்லும் துவாரகா வெளிவருவாரா?

 

ஒரு சொல்லில் #உண்மையான_எங்கள் #துவாரகா அழைப்பு விடுத்தால் முன்னாள் போராளிகள், புலம்பெயர் தேச செயற்பாட்டாளர்கள் அனைவரும் பின்செல்லமாட்டார்களா?

 

துவாரகா எங்கள் பிள்ளை!

துவாரகா எங்கள் தங்கை!!

துவாரகா எங்கள் இளவரசி!!!

 

துவாரகாவின் வாழ்நாளில் அவருடன் கூட இருந்தவர்கள் போராளிகள் தான். அதிலும் அவர் மாமாக்கள் என உரிமையுடன் அழைக்கும் ஆண் போராளிகள் தான்.

அந்தப் போராளி மாமாக்களின் மீது அளப்பரிய மதிப்பும், மரியாதையும், அதீத நம்பிக்கையும் கொண்டிருந்தவர் எங்கள் தங்கை. அதுபோலவே தளபதிகள், போராளிகள் ஆகியோர் அவரை, தங்கள் பிள்ளையாக, தங்கையாக, இளவரசியாக கொண்டாடினார்கள், #காத்து #நின்றார்கள்.

 

இப்படிப்பட்ட எங்கள் இளவரசி, தனது வருகைக்காக எங்கள் போராளிகளை, தனது தந்தை வழியில் நின்ற மாமாக்களை இப்படி இழிவுபடுத்த அனுமதிப்பாளா? 

அவள் ஒரு பெண். உண்மையான எங்கள் துவாரகா தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இவ்வாறான நாகரீகமற்ற, விசமத்தனமான, கீழ்த்தரமான பிரசாரங்களை #ஒருபோதும் #அனுமதிக்க_மாட்டாள்.

 

எங்கள் தலைவனின் பிள்ளை அவள்!

அப்பன் 8 அடி பாய்ந்தால், பிள்ளை 16 அடி பாயும் என்பார்கள்.

எம்மவர்கள் தடுத்து வைத்திருந்த ஒரு சிங்கள இராணுவ கைதியை சந்திக்க வந்த அவரின் மனைவி, அன்றைய நாளை தன் கணவனுடன் கழித்ததால் கர்ப்பமானாள். இந்த விடயம் அவள் ஊர் திரும்பி சில மாதத்தின் பின்னரே தெரியவந்தது. இப்போது அப்பெண்ணின் ஊரில் மக்கள் தவறாக கதைக்கும் நிலை உருவானது. தன் நிலையை அப்பெண் தலைவருக்கு கடிதமாக எழுதினாள். அந்த பெண்ணின் நடத்தை மீது தவறான பெயர் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதால். குறித்த கைதியை உடனடியாக விடுவிக்குமாறு கட்டளையிட்டவன் எங்கள் தலைவன். எதிரியாகவுள்ள சிங்கள படையாளின், மனைவியான பெண்ணிற்கே களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாதென நினைத்த தலைவனின் புதல்வியா இந்த, நாகரீகம் தெரியாத கும்பலை நம்பிக் கொண்டிருக்கின்றாள்...??

 

எங்கள் தங்கையின் குணவியல்புகள் எங்களுக்கோ, எம்மக்களுக்கோ தெரியாதது அல்ல! 

தமிழ்ப் பெண்களை நடத்தை கெட்டவர்களாக காண்பிக்கும், விமர்சிக்கும் இந்த கும்பல் தான், எங்கள் தேசத்தின் இளவரசியை பக்குவமாக உலகுக்கு மீண்டும் கொண்டுவரப் போகின்றதாம்!

 

அவர்களைத் தான் எங்கள் இளவரசி நம்புகின்றாராம். எப்படி இருக்கின்றது நாடகம்.

 

துவாரகா மீது முன்னாள் போராளிகளுக்கு இல்லாத அன்பும், அக்கறையும் உங்களுக்கு எங்கிருந்து வந்தது. #எதற்காக வந்தது...?

துவாரகாவை ஒருமுறை தன்னும் பார்த்திராத, #கண்டிராத, #கதைத்திராத நீங்கள், அவரை எப்படி உறுதிப்படுத்துவீர்கள்...? 

 

தலைவனின் புதல்வியான துவாரகா, ஆளுமையற்ற கோழையா?

அவருக்கு எப்படி வெளியில் வர வேண்டுமென தெரியாதா? 

 

தலைவனின் புதல்வியை, எங்களின் தங்கையை பணத்திற்கு இரந்து திரியும் ஒரு பாவையாக காட்ட நினைக்கின்றீர்களா?

நேர்மையும், அஞ்சா வீரமும், தன்மானமும் நிறைந்த வீரமங்கை எங்கள் துவாரகா.

 

தன் விழி அசைவினாலும், சுட்டுவிரல் சுட்டலினாலும் ஒரு தேசத்தை கட்டியாண்ட மாமன்னனின் மகளவள்!

 

உங்களிடம் பிச்சைகேட்டுக் கொண்டு, வெளியில் வரும் வழி தெரியாமல் திக்கு முக்காடுவதற்கு அவள் யார்?

 

தமிழீழத்தின் தலைமகள், தமிழினத்தின் இளவரசி!

 

நேர்படப் பேசி, நேர்வழி நடந்த மானமாவீரனின் வாரிசு!

அவளை வெளியில் கொண்டுவர நீங்கள் யார்? அவளுக்கு வழி காட்ட நீங்களா?

வேடிக்கையாக இல்லை!

அப்படியாயின் அந்த தலைவனுக்கும், தமிழீழத்தின் முதற்பெண்மணி மதி மிகப் பெற்ற வதனிக்கும், அவர்கள் வழித்தோன்றலான இளவரசிக்கும் இல்லாத அறிவும், ஆளுமையும் உங்களுக்குத்தான் உள்ளதோ...!!

 

ஈழத்தில் இருந்தபடி தொழில்நுட்ப வசதிகள் குறைந்த/ அற்ற அந்தக் காலத்திலேயே உலகெங்கும் இயக்க கட்டமைப்புகளையும், தமிழர்களையும் வழிநடத்திய ஒப்பற்ற தலைவன், இப்போது தன் #ஒற்றைப்_புதல்வியை வழிநடத்த தெரியாமல் முடங்கி கிடக்கின்றான். ஆதலால் நீங்கள் புறப்பட்டு விட்டீர்கள்! 

துவாரகாவை தூக்கி வர...

அப்படித்தானே?

 

யாரை ஏமாற்றுகின்றீர்கள்...?

தூக்கி எறியுங்கள் உங்கள் புளுகு மூட்டைகளை. அவை புழுத்துப் போய்விட்டன.

 

மக்களே! 

      விழிப்படையுங்கள்!!

நன்றியுடன் Soori Sinnathurai

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

 

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

நான் இந்த‌க் காணொளி பார்க்க‌ வில்லை.........இதே போல் ப‌ல‌ காணொளிக‌ள் த‌மிழ் நாட்டு சோச‌ல் மீடியாக்க‌ளில் ப‌திவேற்ற‌ம் செய்ய‌ப் ப‌டுது..........அதில் க‌ல‌ந்து கொண்டு பேசுப‌வ‌ர்க‌ள் ச‌த்திய‌மாய் என‌க்கு யார் என்று கூட‌ தெரியாது..........இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ கால‌த்தில் ப‌ல‌ குள‌றுப‌டிக‌ள் செய்ய‌லாம் உண்மை போல்............அத‌ற்கு சீன‌ன் க‌ண்டு பிடிச்ச‌ சில‌ ஆப்புக‌ள் ந‌ல்ல‌ உதார‌ன‌ம்.................நெடுமாற‌னையோ காசி ஆன‌ந்த‌னையோ த‌மிழ் இன‌ம் ந‌ம்பும் நிலையில் இல்லை.............க‌ட‌ந்து செல்வ‌து சிற‌ப்பு.................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.