Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3    24 NOV, 2023 | 03:50 PM

image

30 ஆண்டுகளாக கடல் அடிவாரத்தில் சிக்கி இருந்த  உலகின் மிகப் பெரிய பனிப்பாறை வேகமாக நகர ஆரம்பித்துள்ளது.

கடந்த 1986 ஆம் ஆண்டு அந்தாட்டிகா பகுதியில் இருந்து ஏ23 எனும் பனிப்பாறை உடைந்து பிரிந்து கடலுக்குள் நுழைந்தது தற்போது, உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான இது வெட்டெல் கடல் பகுதியில்  ஒரு பனித் தீவாக மாறியது.

4,000 சதுர கிலோ மீட்டர் நீளம் கொண்ட  லண்டனை விட இரண்டு மடங்கு பெரிய இப்பாறை சில காலமாகவே  ஆழமற்ற கடல் பகுதியில் சிக்கிக் கொண்டிருந்தது. 

சுமார் ஒரு ட்ரில்லியன் டன்கள் எடை கொண்ட இப்பனிப்பாறை, வேகமாக பயணிப்பது போல தெரிகிறதாக பேராசிரியர் ஏட்ரியன் லக்மேன் தெரிவித்துள்ளார்.

இந்த பனிப்பாறை  400மீ (1,312 அடி) தடிமன் கொண்டது. 310 மீ  உயரம் கொண்ட லண்டன் ஷார்ட், ஐரோப்பாவின் மிக உயரமான  கட்டிடங்களின் உயரத்தை விட உயரம் கூடுதலாக உள்ளது.

இது ஒரு பிரமாண்மான பனிப்பாறை என தெரிவிக்கப்படுகிறது.

பனிப்பாறை கடந்த ஆண்டு வேகமாக நகர தொடங்கியது. அண்டார்டிக் கடற்பரப்பிற்கு அப்பால் கசியவுள்ளது.

பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கண்டம் என்றழைக்கப்படும் வெள்ளைக் கண்டம் இக்கண்டத்தின் பனி அடுக்கில் இருந்து பெருமளவில் வெடித்த  பெரும் பாறைகளின் ஒரு பகுதியாகும்.

_131802211_a23a_iceberg_movement_2x640-n

_131802208_a23a_iceberg_sat_map_2x640-nc

https://www.virakesari.lk/article/170152

  • கருத்துக்கள உறவுகள்

அட .....இதை இழுத்துச்சென்று அரேபியாவுக்கு அருகில் விட்டால் சில வருடங்களுக்கு குடிநீர் பஞ்சம் தீர்ந்துடும்.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, suvy said:

அட .....இதை இழுத்துச்சென்று அரேபியாவுக்கு அருகில் விட்டால் சில வருடங்களுக்கு குடிநீர் பஞ்சம் தீர்ந்துடும்.......!  😂

அவ்வளவுதான் அல்லா தங்களுக்கு எல்லா அருளும் அருள் பாலித்து விட்டான் என்று ak 47 உடன் மற்றைய மதத்தவரை கொல்ல கிளம்பிடுவான்கள் .குதிரைக்கு கொம்பு முளைத்த கதையாகிடும் பாஸ் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, suvy said:

அட .....இதை இழுத்துச்சென்று அரேபியாவுக்கு அருகில் விட்டால் சில வருடங்களுக்கு குடிநீர் பஞ்சம் தீர்ந்துடும்.......!  😂

கருணையிலும் ஒரு நீதி நியாயம் வேண்டாமா?  சவூதியிட்ட இல்லாத காசா? அவிங்க கடல் நீரையே நன்னீராக மாற்றக்கூடிய வசதி இருக்கெல்லோ? 😂

அந்த பனிப்பாறையை  பஞ்சத்தால் துவழும் மழையே இல்லாத ஆபிரிக்காவுக்கு இழுத்து விடும் யோசினை ஏன் வரவில்லை?  🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை மிதக்கத் தொடங்கியுள்ளது

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து மிதக்கத் தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அண்டார்டிகாவைச் சேர்ந்த இந்த மிகப்பெரிய பனிப்பாறை A23a என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது 1,540 சதுர மைல் அளவு கொண்டது. பனிப்பாறையின் தடிமன் 1,312 அடி.

இந்த பனிப்பாறை கடந்த 30 ஆண்டுகளாக கடற்பரப்புடன் இணைந்திருந்ததாகவும், தற்போது புவி வெப்பமடைதல் மற்றும் பனி உருகுவதன் விளைவாக உடைந்து மிதந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் மேலும் விளக்கமளிக்கின்றனர்.

https://thinakkural.lk/article/282455

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

World Biggest Iceberg: 37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘பயணத்தை ’ தொடங்கியது A23a; இனி என்ன ஆகும்?

சென்னையை விட 4 மடங்கு பெரியதான உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று 37 ஆண்டுகளுக்கு பிறகு நகரத் தொடங்கியுள்ளது. A23a என்று அழைக்கப்படும் இந்தப் பனிப்பாறை, 1986-இல் அண்டார்டிக் கடற்கரையிலிருந்து பிரிந்தது. Weddell Sea-யில் தரைதட்டிய இந்த பனிப்பாறை பனித்தீவாக மாறியது. கடந்த ஆண்டு வேகமாக விலகத் தொடங்கிய இந்த பனிப்பாறை தற்போது அண்டார்டிக் கடற்பரப்பைக் கடக்கவிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/11/2023 at 10:53, suvy said:

அட .....இதை இழுத்துச்சென்று அரேபியாவுக்கு அருகில் விட்டால் சில வருடங்களுக்கு குடிநீர் பஞ்சம் தீர்ந்துடும்.......!  😂

 

On 25/11/2023 at 15:52, குமாரசாமி said:

கருணையிலும் ஒரு நீதி நியாயம் வேண்டாமா?  சவூதியிட்ட இல்லாத காசா? அவிங்க கடல் நீரையே நன்னீராக மாற்றக்கூடிய வசதி இருக்கெல்லோ? 😂

அந்த பனிப்பாறையை  பஞ்சத்தால் துவழும் மழையே இல்லாத ஆபிரிக்காவுக்கு இழுத்து விடும் யோசினை ஏன் வரவில்லை?  🤣

அய்யோ, அய்யோ!!

நீங்கள் சொல்லுற இடங்களுக்கு இழுத்து வர முன்னமே வெக்கைல உருகி, ஆவியா போயிடும்.

அதிலும் பார்க்க, ஆப்பிரிக்கா, அரேபியாவை இழுத்துக் கொண்டு போய் பக்கத்தில விடலாம்!!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

 

அய்யோ, அய்யோ!!

நீங்கள் சொல்லுற இடங்களுக்கு இழுத்து வர முன்னமே வெக்கைல உருகி, ஆவியா போயிடும்.

அதிலும் பார்க்க, ஆப்பிரிக்கா, அரேபியாவை இழுத்துக் கொண்டு போய் பக்கத்தில விடலாம்!!

எங்களுக்கு விண்ணாணம் கதைப்பது இருக்கட்டும்........திண்ணையில் உங்கள் நண்பன் வந்திருக்கிறார் போய் குசலம் விசாரியுங்கள்......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

எங்களுக்கு விண்ணாணம் கதைப்பது இருக்கட்டும்........திண்ணையில் உங்கள் நண்பன் வந்திருக்கிறார் போய் குசலம் விசாரியுங்கள்......!  😂

அவர் திண்ணையை விட வேறு இடத்துக்கு நகர மாட்டார் ஆக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

எங்களுக்கு விண்ணாணம் கதைப்பது இருக்கட்டும்........திண்ணையில் உங்கள் நண்பன் வந்திருக்கிறார் போய் குசலம் விசாரியுங்கள்......!  😂

 

1 hour ago, பெருமாள் said:

அவர் திண்ணையை விட வேறு இடத்துக்கு நகர மாட்டார் ஆக்கும் .

உடான்ஸ் சுவாமிகள் வலு பிசி. என்னமோ அவசரமா சொல்லிட்டு போக வந்தேன் எண்டுட்டு போட்டார். கதைக்க நேரமில்லையாம்.

ஆறுதலா வரட்டுமன். நாலு சிஸ்சயலை கரைசேர்க்க மும்மரமா இருக்கிறார் போலை கிடக்குது. 😁🤣

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உருகும் பனிப்பாறையில் உருவாகும் அழகான வடிவங்கள்

தென் துருவம் முழுவதும் பனியால் சூழப்பட்ட, பனிப்பாறைகள் நிறைந்த கண்டம், அன்டார்க்டிகா.

இங்கு மனிதர்கள் வசிப்பது முடியாததால், ஆராய்ச்சியாளர்களும், சுற்றுலா பயணிகளும் மட்டுமே சென்று வருவது வழக்கம்.

இங்குள்ள பனிப்பாறைகளில் மிக பெரியது, ஏ23ஏ (A23a).

Capture-3-4.jpg

1986களிலேயே ஏ23ஏ அப்பிரதேசத்தின் கடல் பகுதியிலிருந்து உடைந்து நகர்ந்து செல்ல தொடங்கியது.

சுமார் 30 வருடங்களாக வெட்டல் கடல் (Weddell Sea) பகுதியின் ஆழத்தில் சிக்கி அங்கேயே நிலைநிறுத்தப்பட்டிருந்த ஏ23ஏ பனிப்பாறை, சுமார் 4 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.

அங்கு உள்ள பனி நீர் சுழற்சியால் தென் ஆர்க்னி தீவை (South Orkney Islands) நோக்கி இது மெதுவாக பயணிக்க தொடங்கி உள்ளது.

பனிப்பாறையின் நகர்வை டிரோன் கமரா மூலம் படம் பிடித்த நிபுணர் குழு ஒன்று அப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

Capture-4-3.jpg

தினம் தினம் சிறிதாக உருகும் ஏ23ஏ பனிப்பாறையில் மிக பெரிய வளைவுகளும், குகைகளும் இயற்கையாக உருவாகியுள்ளன.

எப்பொழுது என உறுதியிட்டு கூற முடியாவிட்டாலும் சில ஆண்டுகளில் ஏ23ஏ முழுவதும் உருகி விடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

https://thinakkural.lk/article/288262

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரை விட பெரிய ராட்சத பனிப்பாறையின் நகர்வை 'அழிவின் பாதை' என்று விஞ்ஞானிகள் கூறுவது ஏன்?

அழியும் நிலையில் சிங்கப்பூரைவிட 29 மடங்கு பெரிய ராட்சத பனிப்பாறை – விளைவு என்ன?

பட மூலாதாரம்,ROB SUISTED/REUTERS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜோனாதன் ஆமோஸ், எர்வோன் ரிவால்ட், கேட் கேனர்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 31 நிமிடங்களுக்கு முன்னர்

சிங்கப்பூர், பஹ்ரைன் போன்ற 29 நாடுகளைக் காட்டிலும் அதிக பரப்பளவு கொண்ட ராட்சத பனிப்பாறை அன்டார்டிகாவை விட்டு வெளியேறி கடலில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த பாறை நகர்வது ஏன்? இப்போது எங்கே இருக்கிறது? அது நகர்ந்து செல்வதன் விளைவு என்ன?

A23a என அந்த பனிப்பாறை அறியப்படும் 1986இல் அண்டார்டிக்கில் இருந்து பிரிந்தது. அப்போதிருந்து மிகச் சிறிய அளவில் நகர்ந்துகொண்டிருந்த இந்தப் பனிப்பாறை, சமீபத்தில் ஒரு பெரும் இடப்பெயர்வைத் தொடங்கியுள்ளது.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, நிலையான ‘பனித்தீவு’ போல வெட்டெல் கடலின் அடிமட்டத்தில் சிக்கியிருந்தது. சுமார் 350மீட்டர் ஆழமுள்ள அதன் அடிப்பாகம் அதை அந்த இடத்தில் நங்கூரமிட வைத்திருந்தது.

ஆனால், அந்த அடிப்பகுதி 2020ஆம் ஆண்டு வரை சிறிது சிறிதாக உருகியதன் விளைவாக, அந்த பனிப்பாறை மீண்டும் கடல்நீரில் மெல்ல மிதக்கத் தொடங்கியது. பின்னர் காற்றோட்டம், காற்று ஆகியவை அந்தப் பனிப்பாறையை வெப்பமான காற்று மற்றும் நீர் இருக்கும் வடக்கு நோக்கி நகர வைத்தது. இப்போது அண்டார்டிகாவின் மிதக்கும் பனியில் பெருமளவைச் சுமந்து செல்லும் A23a தற்போது அந்தப் பாதையைப் பின்பற்றிப் பயணித்து வருகிறது.

இது அழிவின் பாதை. இன்னும் சில மாதங்களில் இந்தப் பெரும் பனிப்பாறை துண்டுதுண்டாக உடைந்து உருகப் போகிறது.

 

ஈஃபிள் டவர் உயரத்தைவிட அதிக சுற்றளவு

அழியும் நிலையில் சிங்கப்பூரைவிட 29 மடங்கு பெரிய ராட்சத பனிப்பாறை – விளைவு என்ன?

இன்று, அண்டார்டிக் முனையிலிருந்து வடகிழக்கே சுமார் 700கி.மீ தொலைவில் தெற்கு ஓர்க்னி தீவுகளுக்கு அருகிலுள்ள 60வது பேரலல் என்ற பகுதியை ஒட்டிய பாதையில் நகர்ந்து செல்கிறது.

அது சிறிது சிறிதாக சிதைவதற்கான செயல்முறை ஏற்கெனவே தொடங்கிவிட்டதை, செயற்கைக்கோள் படங்களும் அதை நெருக்கமாகக் கண்காணிக்கும் கப்பல்களில் இருந்தும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. அதிலிருந்து தினமும் பெரியளவிலான பனித் துண்டுகள் கடலில் விழுகின்றன.

இப்போதே அப்படி உடைந்து விழுந்த கால்பந்து அளவிலான மற்றும் லாரி அளவிலான பனிக்கட்டிகள் A23a-ஐ சூழ்ந்துள்ளன.

காற்று, கடல்நீரோட்டம், சுழல் ஆகியவை வரவிருக்கும் வாரங்களில் A23a பனிப்பாறையின் போக்கைத் துல்லியமாகத் தீர்மானிக்கும். ஆனால், அதைச் சூழ்ந்திருக்கும் ராட்சத பனிப்பாறைகள், அது தற்போது இருக்கும் இடத்திலிருந்து தோராயமாக, 650கி.மீ தொலைவில் வடகிழக்கே தெற்கு ஜார்ஜியாவை கடக்கும்போதே உருகிவிடும். பிரிட்டிஷ் ஓவர்சீஸ் டெரிட்டரி என்ற பகுதி நிறைய பனிப்பாறைகள் இருக்கும் இடமாகத் தெரிகிறது.

A23aஇன் அளவை முழுமையாகப் புரிந்துகொள்வது மிகவும் கடினம். ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் கிரையோசாட்-2 (துருவப் பனிக்கட்டிகளின் அடர்த்தி மற்றும் அவற்றில் நிகழும் மாற்றங்களைக் கண்காணிப்பதற்கான ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் திட்டம்) திட்டத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் இந்தப் பெரும் பனிப்பாறையின் சுற்றளவை மதிப்பிடுவதற்கு விண்கலத்தில் ரேடார் அல்டிமீட்டரை பயன்படுத்தினர்.

அப்போது அதன் சுற்றளவு சராசரியாக 280மீட்டர் தடிமன் இருப்பதைக் கண்டறிந்தனர். ஒப்பீட்டளவில் பார்த்தால், இது பிரான்சில் உள்ள ஈஃபில் டவரின் (330மீட்டர்) உயரத்தைவிட இதன் சுற்றளவு அதிகம்.

 
அழியும் நிலையில் சிங்கப்பூரைவிட 29 மடங்கு பெரிய ராட்சத பனிப்பாறை – விளைவு என்ன?

பட மூலாதாரம்,ROB SUISTED/REUTERS

பிரமிக்க வைக்கும் ராட்சத அளவு

இந்த பிரமாண்ட பனிப்பாறையின் 30மீ உயரமான குன்றின் செங்குத்தான பகுதிக்கு அருகே பயணம் செய்தாலும்கூட அதன் மொத்த அளவைப் புரிந்துகொள்வது மிகக் கடினம். அப்படிச் செய்வது பக்கிங்ஹாம் அரண்மனையின் முகப்பில் நின்று லண்டனின் மொத்த பரப்பளவை அளவிடுவதைப் போல் இருக்கும்.

அதன் அளவு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வந்தாலும், லக்சம்பர்க், பஹ்ரைன், சிங்கப்பூர் உட்பட இவற்றைப் போன்ற சுமார் 29 நாடுகளின் அளவைவிட அது மிகப் பெரியது.

ஆற்றல் மிக்க அலைகள் பெரும் மலையாகத் திகழும் இந்த பனிப்பாறையின் சுவர்களில் மோதுகின்றன. அதன் மகத்தான் குகைகள் மற்றும் வளைவுகளைச் செதுக்குகின்றன.

அழியும் நிலையில் சிங்கப்பூரைவிட 29 மடங்கு பெரிய ராட்சத பனிப்பாறை – விளைவு என்ன?

அந்தப் பனிப்பாறையில் நீரில் மூழ்கியிருக்கும் பகுதியான பரந்த சம தளத்தை, பாறையை அரிப்பதன் மூலம் மேற்புறத்திற்கு அழுத்துகின்றன. இதன் விளைவாக பனிப்பாறையின் அந்தப் பகுதிகள் இடிந்து கடலில் விழுகின்றன.

இந்தச் செயல்முறையில், கடலில் மிதந்து செல்லும் பனிப்பாறையின் சமதளம் மேற்பரப்புக்கு அலைகளால் வலிய மேற்பரப்புக்கு வரவைக்கப்படுகின்றன. இந்தச் செயல்பாட்டில் பாறையின் மேற்பரப்பு விளிம்புகள் உடைந்து விழுகின்றன. இது மட்டுமின்றி வெப்பமான காற்றும் அதன் பங்குக்கு பனிப்பாறையைப் பாதிக்கின்றது.

 

உருகும் பனியால் விழும் விரிசல்கள் ஏற்படுத்தும் அபாயம்

அழியும் நிலையில் சிங்கப்பூரைவிட 29 மடங்கு பெரிய ராட்சத பனிப்பாறை – விளைவு என்ன?

காற்றிலுள்ள வெப்பத்தின் காரணமாக பனி உருகுதலால் உருவாகும் நீர், பாறையின் மேற்பரப்பில் சேகரிக்கப்பட்டு, விரிசல்களில் வடிந்து அந்தப் பிளவுகளை இன்னும் ஆழமாகக் கீழே வரை கொண்டு செல்கிறது. இதனாலும் பாறையில் உடைப்பு ஏற்படுகிறது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில், இந்தப் பேரழிவுக்கான பாதையில் A23aஇல் எஞ்சியிருப்பது வேறு எதுவுமே இல்லை என்ற நிலை வரலாம். A23a பனிப்பாறை, அனைத்து பெரிய பாறைகளையும் போலவே, அது உருகும்போது அந்தப் பனியில் சிக்கியிருக்கும் கனிம தூசுகளைச் சிதறடிக்கும்.

கடல்பரப்பில், இந்தத் தூசு கடல் உணவுச் சங்கிலிக்கான அடித்தளத்தை உருவாக்கும் உயிரினங்களுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துகளின் ஆதாரமாக உள்ளது. பிளாங்டன் முதல் பெரிய திமிங்கிலங்கள் வரை, அனைத்தும் இந்தப் பெரும் பனிப்பாறையின் அழிவிலிருந்து பயனடையும்.

இந்தப் பெரும் பனிப்பாறை குறித்து மக்கள் கேட்கும்போதெல்லாம், இதற்குக் காரணம் காலநிலை மாற்றமாகத்தான் இருக்க வேண்டும், இது வெப்பமயமாதலின் விளைவு என்று நினைக்கிறார்கள். ஆனால், உண்மை மிகவும் சிக்கலானது.

அழியும் நிலையில் சிங்கப்பூரைவிட 29 மடங்கு பெரிய ராட்சத பனிப்பாறை – விளைவு என்ன?

A23a அண்டார்டிகாவின் ஒரு பகுதியிலிருந்து வந்தது. அங்கு நிலைமை இன்னும் குளிராக உள்ளது. அந்த தோற்றப்புள்ளியான, ஃபில்ஷ்னர் பனிப்படலம், பனிப்பாறைகளால் உருவாக்கப்பட்ட மிதக்கும் பனிக்கட்டி ஆகும். அவை அந்த கண்டத்த்திலிருந்த வெட்டல் கடலுக்குள் பாய்ந்தன. அங்கு நீருக்குள் நுழையும்போது பனிப்பாறைகளின் மிதக்கும் பரப்பு மேலே உயர்ந்து ஒன்றாக இணைகின்றன.

இந்தப் பனிப்படலத்தின் முன் விளிம்பில் பெரிய அளவிலான பனிக்கட்டிகள் உதிர்வது ஓர் இயற்கையான செயல்முறை. விஞ்ஞானிகள் இதை “கன்று ஈன்ற” எனக் குறிப்பிடுகிறார்கள். அதாவது ஒரு பசு தனது குட்டிகளைப் பெற்றெடுப்பதைப் போல, பனிப்பாறை பனிக்கட்டிகளை உதிர்க்கிறது.

பனிப்பொழிவு மற்றும் பனிப்பாறையைப் பின்னால் இருந்து உருவாக்கும் பனிக்கட்டிகளின் வெளியேற்றம் சமநிலையில் இருந்தால் பனிப்படலம் சமநிலையில் இருக்கும். பனிப்படலத்தின் முன்புறம் வெதுவெதுப்பான நீரால் தாக்கப்பட்டால், அது சமநிலையை இழக்கக்கூடும். ஆனால், இது ஃபில்ஷ்னரில் நடப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

 

கடந்த காலத்தைப் பற்றிய புரிதல்

அழியும் நிலையில் சிங்கப்பூரைவிட 29 மடங்கு பெரிய ராட்சத பனிப்பாறை – விளைவு என்ன?

பட மூலாதாரம்,ASHLEY BENNISON/BAS

எப்படியிருப்பினும், கண்டத்தின் பிற பகுதிகளில் வெப்பமான நிலைமைகள் முழு பனிப்படலத்தின் சரிவைத் தூண்டுவதையும், பெருங்கடல்களின் மட்டத்தை உயர்த்துவதையும் நாம் கண்டுள்ளோம் என்பது வியக்கத்தக்க வகையில் உண்மை.

மேலும், இத்தகைய பனி ராட்சதர்கள் எங்கு, எவ்வளவு அதிகமாக கன்று ஈன்றார்கள் (பனிப்பாறைகளை வெளியேற்றின) என்பதை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து, சமநிலை மாறுகிறதா என்பதற்கான ஏதேனுமொரு மாற்றத்தைக் கண்டறிய முயல்கின்றனர்.

அவர்கள் ஆழமான வரலாற்று சூழலையும் புரிந்துகொள்ள முயல்கிறார்கள். செயற்கைக்கோள்கள் சுமார் 50 ஆண்டுக்கால அவதானிப்புகளை மட்டுமே அளித்துள்ளன. இதுவொரு ஒரு சிறிய பதிவு மட்டுமே.

நீண்ட முன்னோக்கைப் பெற, ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் பனிப்பாறை ஆலியில் உள்ள கடல் தளத்தில் துளையிட்டனர். அவர்களால் அந்த மண் பகுதியின் கால அளவைக் கணக்கிட்டு, அதில் இருந்த டெட்ரிடஸ் எனப்படும் பனிப்பாறைகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் கடலில் கொட்டப்பட்ட கற்களை ஆய்வு செய்ய முடிந்தது.

இந்த ஆய்வு கடந்த கால நிகழ்வுகளைப் பற்றிய புரிதலை உருவாக்கியது. எடுத்துக்காட்டாக, அந்தப் பகுதி சுமார் 12 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பாறைகளின் பெரும் பாய்ச்சலைக் கண்டதாக ஆய்வு முடிவுகள் பரிந்துரைத்தன.

மேற்கு அண்டார்டிகாவின் பல பனிப் படலங்களை உடைத்த, முன்பு நிகழ்ந்த அங்கீகரிக்கப்படாத வெப்பமயமாதல் கட்டத்தின் ஆதாரமாக இது இருந்ததாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

 
அழியும் நிலையில் சிங்கப்பூரைவிட 29 மடங்கு பெரிய ராட்சத பனிப்பாறை – விளைவு என்ன?

பட மூலாதாரம்,CHRIS WALTON/BAS

பூமியில் பனிப்பாறைகளின் கடந்த காலச் செயல்பாடுகளை நேரடியாக நிகழ் காலத்தில் தொட்டுணரக்கூடிய பகுதிகள் உள்ளன. உதாரணமாக, தென்னாப்பிரிக்காவில், 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அந்த நிலப்பகுதி நீருக்கு அடியில், தென் துருவத்திற்கு மிக நெருக்கமாக இருந்த போது, அவை கடல்தரையில் இழுத்துச் செல்லப்பட்டபோது, பனிக்கட்டிகள் விட்டுச்சென்ற தடயங்களின் மீது இன்று நம்மால் நடக்க முடியும்.

அதோடு, வெட்டெல் கடலின் அடிப்பகுதியில், A23a இதேபோன்ற விஷயங்கள் இருக்கும். இவையும் ஆயிரக்கணக்கில், ஒருவேளை லட்சக்கணக்கான ஆண்டுகள் நீடித்திருக்க வாய்ப்புள்ளது.

இறுதியாக “A23a என்றொரு பனிப்பாறை இருந்தது” எனச் சொல்வதற்கான அடையாளமாக அது இருக்கக்கூடும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/crgyny2z4v2o

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்டார்டிகா: பெருங்கடலின் சுழலில் சிக்கியுள்ள உலகின் பிரமாண்ட பனிப்பாறை

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ஏ23ஏ

பட மூலாதாரம்,CHRIS WALTON/BAS

படக்குறிப்பு, உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ஏ23ஏ கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜோனதன் அமோஸ் & எர்வான் ரிவால்ட்
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 18 ஆகஸ்ட் 2024, 08:41 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஏ23ஏ (A23a) என்பது உலகின் மிகப்பெரிய பனிப்பாறை. அன்டார்டிக் பெருங்கடலில் நீண்டகாலமாக நகராமல் இருந்த இந்தப் பாறையில் தற்போது மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

உலகின் மிக வலிமையான கடல் நீரோட்டத்தோடு சேர்ந்து பயணிக்க வேண்டிய இந்தப் பனிப்பாறை, அன்டார்டிகாவின் வடக்குப் பகுதியில் கடந்த சில மாதங்களாகச் சுழலில் சிக்கிச் சுழன்ற வண்ணம் இருக்கிறது.

பெரிய நீர் சுழற்சியின் மையப் பகுதியில் லண்டனை காட்டிலும் இரண்டு மடங்கு பெரிய அளவில் உள்ள இந்தப் பனிப்பாறை சிக்கிக் கொண்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

டெயல்ர் காலம் (Taylor Column) என்று கடல்சார் ஆராய்ச்சியாளர்களால் அழைக்கப்படும் இந்தச் சுழலில் இருந்து ஏ23ஏ பனிப்பாறை அவ்வளவு விரைவில் வெளியேறாது என்றும் தெரிவிக்கின்றனர்.

 

"பொதுவாக மக்கள், பனிப்பாறை உருமாறிக் கொண்டே இருக்கும் என்று நினைப்பார்கள். அவை சிறிது சிறிதாக உடைந்து உருகிவிடும். ஆனால் இந்தப் பனிப்பாறையின் நிலைமை அப்படியல்ல," என்று கூறுகிறார் துருவப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளும் பேராசிரியர் மார்க் பிராண்டன்.

பிபிசி செய்தியிடம் பேசிய, அவர், "A23a பனிப்பாறை அழிய மறுப்பதாக," கூறினார்.

இந்தப் பனிப்பாறையின் பயணம் நீண்ட காலமாக ஆவணப் படுத்தப்பட்டுள்ளது. அன்டார்டிக் கடற்கரையில் இருந்து 1986ஆம் ஆண்டு பிரிந்த இந்தப் பனிப்பாறை உடனடியாக வேடெல் கடல்தரை மணலில் சிக்கிக் கொண்டது.

 
உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ஏ23ஏ
படக்குறிப்பு, கடந்த 30 ஆண்டுகளாக இதுவொரு நிலையான பனித் தீவாகச் செயல்பட்டது. துளியும்கூட அங்கிருந்து நகரவில்லை.

கடந்த 30 ஆண்டுகளாக இதுவொரு நிலையான பனித் தீவாக இருந்தது. துளியும்கூட அங்கிருந்து நகரவில்லை. ஆனால் 2020ஆம் ஆண்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகரத் துவங்கியது இந்தப் பனிப்பாறை. வெப்பமான காற்று மற்றும் நீர் உள்ள வடக்குப் பகுதியை நோக்கி நகர்வதற்கு முன் அது மிகவும் மெதுவாகவே நகர்ந்தது.

இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், A23a அன்டார்டிகாவின் துருவவட்ட நீரோட்டப் பகுதியில் நுழைந்தது. உலகிலுள்ள நதிகளில் இருக்கும் நீரைக் காட்டிலும் நூறு மடங்கு அதிக நீரைக் கொண்ட மிகவும் வலிமையான நீரோட்டம் இது.

இது பொதுவாக டிரில்லியன் டன் எடை கொண்டுள்ள பனிப்பாறையை அட்லான்டிக் பகுதியில் சேர்ப்பதற்கான ஊக்கியாகச் செயல்பட வேண்டும்.

 
உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ஏ23ஏ

பட மூலாதாரம்,DERREN FOX/BAS

படக்குறிப்பு, உலகின் மிக வலிமையான கடல் நீரோட்டத்தோடு போட்டியிட வேண்டிய இந்தப் பனிப்பாறை, அன்டார்டிகாவின் வடக்குப் பகுதியில் கடந்த சில மாதங்களாகச் சுழன்று கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த A23a பனிப்பாறையோ இந்த நீரோட்டத்தின் உதவியோடு எங்கும் செல்லவில்லை. மாறாக தெற்கு ஓர்க்னே தீவுகளுக்கு வடக்குப் பகுதியில் இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 15 டிகிரி கோணத்தில் எதிர்கடிகார திசையில் சுற்றி வருகிறது. இவ்வாறாக இது சுற்றிக் கொண்டிருக்கும் காலம் வரை இந்தப் பனிப்பாறைக்கு அழிவே இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

கடற்கரையில் இருந்து பிரிந்த பனிப்பாறை மீண்டும் கடலின் அடிப்பகுதியோடு இணையவில்லை. கடலின் தரைக்கும் பனிப்பாறையின் அடிப்பகுதிக்கும் இடையே குறைந்தது ஆயிரம் மீட்டர்கள் நீரால் நிறைந்துள்ளது.

கடந்த 1920ஆம் ஆண்டில் முதன்முதலாக சர் ஜி.ஐ.சர் ஜி.ஐ.(ஜியோஃபெரி இன்கிராம்) டெய்லர் இந்தச் சுழல் குறித்து விவரித்துள்ளார். இப்போது அந்தச் சுழலில் இந்தப் பனிப்பாறை சிக்கியுள்ளது.

 
உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ஏ23ஏ
படக்குறிப்பு, இந்தப் பனிப்பாறையைப் பொறுத்தவரை, தடையானது 100 கி.மீ. அகலம் கொண்ட, பிரீ கரை எனப்படும் கடல் முகடு. இந்த பிரீ கரையின் மேலே நீர்ச்சுழல் ஏற்பட்டுள்ளது.

கேம்பிரிட்ஜில் படித்த இவர் திரவ இயக்கவியல் துறையில் ஒரு முன்னோடியாகச் செயல்பட்டார். மேலும் உலகின் முதல் அணுகுண்டு சோதனையின் மாதிரியைக் காட்ட மன்ஹாட்டன் திட்டத்தில்கூட இவர் இணைக்கப்பட்டார்.

பேராசிரியர் டெய்லர், சரியான சூழலில், நீரோட்டத்தில் ஏற்படும் தடை எவ்வாறு இரு வித்தியாசமான நீரோட்டங்களை உருவாக்கும் என்பதையும் அவற்றுக்கு மத்தியில் எவ்வாறு ஆழமான நீர் சுழற்சியை உருவாக்கும் என்பதையும் விவரித்தார்.

இந்தப் பனிப்பாறையைப் பொறுத்தவரை, 100 கி.மீ வரை விரிந்துள்ள, பிரீ கரை எனப்படும் கடல் முகடு தடையாக உள்ளது. இந்த பிரீ கரையின் மேலேதான் நீர்ச்சுழல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சுழலில் தற்போது A23a வசமாக சிக்கிக் கொண்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ஏ23ஏ
படக்குறிப்பு, கடலின் தரைக்கும் பனிப்பாறையின் அடிப்பகுதிக்கும் இடையே குறைந்தது ஆயிரம் மீட்டர்கள் நீரால் நிறைந்துள்ளது.

கடல் ஆச்சரியங்களால் நிறைந்தது. இதன் டைனமிக் அம்சம் அதில் சிறப்பான ஒன்று என்கிறார் பிரிட்டிஷ் அன்டார்டிக் சர்வேயில் இருந்து பேசிய பேராசிரியர் மைக் மெரெடித்.

"இத்தகைய டெய்லர் (Taylor Columns) நிகழ்வானது காற்றிலும் ஏற்படும். மலைகளுக்கு மேலே நகரும் மேகங்களில் இத்தகைய நிகழ்வுகளை நீங்கள் காண இயலும்.

ஆய்வகத் தொட்டியின் மேல் இது ஒரு சில சென்டிமீட்டர்கள் மட்டுமே நீளம் கொண்டதாகவும் அது இருக்கலாம் அல்லது இந்தப் பனிப்பாறை போன்ற மிகப்பெரிய அளவிலும்கூட இருக்கலாம்," என்கிறார் மைக்.

ஆனால் எவ்வளவு காலத்திற்கு A23a இப்படி சுழலில் சிக்கி சுற்றிக் கொண்டிருக்கும்?

 
உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ஏ23ஏ
படக்குறிப்பு, இவ்வாறாக இது சுற்றிக் கொண்டிருக்கும் காலம் வரை இந்தப் பனிப்பாறைக்கு அழிவே இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

யாருக்குத் தெரியும். ஒரு மிதவை கருவியை பேராசிரியர் மெரெடித், பிரீ கரையின் மற்றொரு பகுதியில் ஆராய்ச்சிக்காக வைத்திருந்தார். நான்கு ஆண்டுகள் ஆன பிறகும்கூட அந்த இடத்தில் இந்த மிதக்கும் கருவியானது இன்றும் சுழன்று கொண்டிருக்கிறது.

கடல் தரையின் அமைப்பு பற்றித் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம் என்பதற்கு இந்தப் பனிப்பாறை ஒரு நல்ல உதாரணம்.

கடலில் உள்ள மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் முகடுகள், நீரின் ஓட்டம், நீர் கலப்பது, கடலில் உள்ள ஊட்டச்சத்துகள் கடல் உயிரினங்களுக்கு சரியாகச் சென்று சேர்வது உள்ளிட்ட அனைத்திலும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ஏ23ஏ

பட மூலாதாரம்,SEABED2030/NIPPON FOUNDATION

படக்குறிப்பு, கறுப்பு நிறத்தில் அமைந்திருக்கும் கடலின் தரைப்பகுதிகளில் இன்னும் அதிக அளவிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.

இது காலநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உலகம் முழுவதும் வெப்பத்தைப் பரப்புவதில் இந்த நீரின் போக்கானது உதவுகிறது.

இந்த செயல்பாட்டிற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், தெற்கு ஓர்க்னேவின் வடக்குப் பகுதியானது நன்கு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இதேநிலை உலகிலுள்ள மற்ற இடங்களுக்குப் பொருந்தாது. தற்போது வரை, உலகிலுள்ள கடல் தரைகளில் கால்பகுதி மட்டுமே நவீன தரத்திற்கு ஏற்ப வரைபடமாக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தாயைப் பிரிந்த சேய்போல உது பாட்டுக்கு நகர்ந்து எங்க போகுதாம் . ....... ஒரு வேலை உந்தப் பாறை வருவது தெரிந்துதான் இந்தோனேசியா தலைநகரத்தை காட்டுப்பகுதிக்கு  மாற்றுகிறார்கள் என்று நினைக்கின்றேன் . .......!  😂

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை போல 4 மடங்கு பெரிய பிரமாண்ட பனிப்பாறை ஒரு தீவின் மீது மோதும் அபாயம் - என்ன நடக்கும்?

A23a பனிப்பாறை: தெற்கு ஜார்ஜியா தீவு மீது மோதும் அபாயம் – இதன் விளைவுகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் & எர்வன் ரிவால்ட்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கிட்டத்தட்ட சென்னையைப் போல் நான்கு மடங்கு பெரிதாக இருக்கும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை, பிரிட்டனுக்குச் சொந்தமான தொலைதூரத்தில் இருக்கும் தீவு ஒன்றின் மீது மோதும் வகையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது அங்கு வாழும் பென்குயின்கள் மற்றும் சீல்களை ஆபத்தில் தள்ளக்கூடும்.

இந்தப் பெரும் பனிப்பாறை அன்டார்டிகாவில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்தப் பாதையில் அது தெற்கு ஜார்ஜியாவை நோக்கிச் சுழன்று நகர்கிறது.

அதுவொரு கரடுமுரடான நில அமைப்பைக் கொண்ட, பென்குயின் போன்ற பல விலங்குகள் வாழும் பிரிட்டிஷ் தீவு. அதன்மீது மோதுவதால், இந்தப் பனிப்பாறை பல துண்டுகளாக நொறுங்கக் கூடும். தெற்கு ஜார்ஜியா தீவில் இருந்து, பனிப்பாறை தற்போது 280 கி.மீ தொலைவில் இருக்கிறது. சென்னை போல 4 மடங்கு பெரிதான இந்த பனிப்பாறை தெற்கு ஜார்ஜியா தீவின் மீது மோதினால் என்ன நடக்கும்?

கடந்த காலங்களில் இத்தகைய பெரும் பனிப்பாறைகள் இந்தத் தீவு மீது மோதிய போது, தெற்கு ஜார்ஜியாவில் இருந்த எண்ணற்ற பென்குயின்களும் சீல்களும் நீர்நாய்களும் உணவு கிடைக்காமல் உயிரிழந்துள்ளன.

"இயல்பாகவே பனிப்பாறைகள் ஆபத்தானவை. தீவின் மீது மோதாமல் அந்த பனிப்பாறை பாதை மாறிச் சென்றால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்," என்று தெற்கு ஜார்ஜியாவின் அரசாங்க கப்பலான ஃபரோஸில் இருந்து பேசுகையில், அதன் கேப்டன் சைமன் வாலேஸ் பிபிசியிடம் கூறினார்.

 

உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மாலுமிகள், மீனவர்கள் அடங்கிய குழு இந்தப் பனிப்பாறையின் அன்றாட நகர்வைக் கண்காணிக்க செயற்கைக்கோள் படங்களை ஆர்வத்துடன் அவதானித்து வருகிறது.

பனிப்பாறைகளின் ராணியாகக் கருதப்படும், உலகின் பழமையான பனிப்பாறைகளில் ஒன்றான இது, A23a என்று அழைக்கப்படுகிறது.

இது 1986இல் அன்டார்டிகாவில் உள்ள ஃபில்ஷ்னர் பனி அடுக்கில் (Ice Shelf) இருந்து உடைந்து பிரிந்தது. நீண்ட காலத்திற்கு கடலடியில் சிக்கியிருந்த அந்த பனிப்பாறை பின்னர் கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நீரோட்டச் சுழலில் சிக்கிக்கொண்டது.

இறுதியாக கடந்த டிசம்பரில் அதிலிருந்து விடுபட்டு, தற்போது அதன் இறுதிப் பயணத்தில் வேகமெடுத்து நகர்ந்து கொண்டிருக்கிறது.

அன்டார்டிகாவின் வடக்கே இருக்கும் வெப்பம் மிகுந்த நீரோட்டம், 1,312 அடி வரை உயரமாக பனிப்பாறையின் பரந்த பக்கங்களை உருக்கி பலவீனப்படுத்துகிறது.

A23a பனிப்பாறை: தெற்கு ஜார்ஜியா தீவு மீது மோதும் அபாயம் – இதன் விளைவுகள் என்ன?

பட மூலாதாரம்,BFSAI

படக்குறிப்பு, ராயல் விமானப்படை சமீபத்தில் A23a பனிப்பாறை தெற்கு ஜார்ஜியாவை நெருங்கியபோது அதைப் பார்வையிட்டது.

இது ஒரு காலத்தில் 3,900 சதுர கி.மீ பரப்பளவுக்கு இருந்தது. ஆனால், சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் அது மெதுவாகச் சிதைந்து வருவதைக் காட்டுகின்றன. இப்போது இந்தப் பெரும் பனிப்பாறை சுமார் 3,500 சதுர கி.மீ அளவுக்கு இருக்கிறது. அதிலிருந்து பெரிய அளவில் பனிக்கட்டிகள் உடைந்து கடலில் மூழ்கி வருகின்றன.

A23a பனிப்பாறை எப்போது வேண்டுமானாலும் பல்வேறு பகுதிகளாக உடைந்து போகக் கூடும். பின்னர் அது தெற்கு ஜார்ஜியா தீவை சுற்றிக் கட்டுப்பாடின்றிச் சுழன்று, மிதக்கும் பனி நகரங்களைப் போல பல ஆண்டுகளுக்குச் சுற்றிக் கொண்டிருக்கக் கூடும். இது அந்தத் தீவு மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இது, தெற்கு ஜார்ஜியா மற்றும் சாண்ட்விச் தீவுகளை அச்சுறுத்தும் முதல் பிரமாண்ட பனிப்பாறை இல்லை.

கடந்த 2004ஆம் ஆண்டில், A38 என்ற ஒரு பனிப்பாறை கடலடியில் தரைதட்டியது. அதன் அளவு மிகப் பிரமாண்டமாக இருந்ததால், அதைக் கடந்து உணவு கிடைக்கும் இடத்தை அடைய முடியாமல் போனதால், பல பென்குயின் குஞ்சுகள், சீல் குட்டிகள் உயிரிழந்தன.

இந்தப் பிரதேசம், கிங் பென்குயின்களின் காலனிகள், லட்சக்கணக்கான சீல்கள், நீர்நாய்கள் வாழும் பகுதி.

A23a பனிப்பாறை: தெற்கு ஜார்ஜியா தீவு மீது மோதும் அபாயம் – இதன் விளைவுகள் என்ன?

பட மூலாதாரம்,SIMON WALLACE

படக்குறிப்பு, பனிப்பாறைகள் ஆபத்தானவை என்பதையும் அவற்றைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அனுபவம் வாய்ந்த மாலுமிகள் அறிந்திருப்பதாக சைமன் வாலஸ் கூறுகிறார்

"தெற்கு ஜார்ஜியாவின் மீன் வளம், இதர உயிரினங்கள் என இரண்டின் மீதும் இந்தப் பனிப்பாறையின் பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம்" என்று தெற்கு ஜார்ஜியா அரசுக்கு ஆலோசனை வழங்கும் கடல் சூழலியல் நிபுணர் மார்க் பெல்ச்சியர் கூறுகிறார்.

பனிப்பாறைகள், அதிகரித்து வரும் ஒரு பிரச்னையாக இருப்பதாக மாலுமிகளும் மீனவர்களும் கூறுகின்றனர். 2023ஆம் ஆண்டில், A76 எனப்படும் ஒரு பனிப்பாறை, தரை தட்டும் நேரத்தில் அவர்களை மிகவும் அச்சுறுத்தியதாகக் கூறுகின்றனர்.

"அந்த பனிப்பாறையின் துண்டுகள் சாய்ந்து கொண்டிருந்தன. அது பார்ப்பதற்கு நுனியில் ஒரு பெரிய பனி கோபுரம் போலவும், அடிப்பகுதியில் ஒரு பனி நகரத்தைப் போலவும் காட்சியளித்தது," என்று பனிப்பாறை கடலில் இருந்த போது பார்த்த பெல்ச்சியர் கூறுகிறார்.

அந்தப் பனிப்பாறையின் சிதைந்த பகுதிகள், இன்றும் தீவுகளைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றன.

"அளவில் பல விளையாட்டு மைதானங்களை ஒன்று சேர்த்தது போல் இருந்த அந்த பனிப்பாறை, மேசை அளவிலான துண்டுகளாக உடைந்து சுழன்று கொண்டிருக்கிறது" என்று தெற்கு ஜார்ஜியாவில் பணியாற்றும் ஆர்கோஸ் ஃப்ரோயன்ஸ் மீன்பிடி நிறுவனத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ நியூமன் கூறுகிறார்.

"அந்தத் துண்டுகள் அடிப்படையில் ஒரு தீவு அளவுக்கு விரவிக் கிடக்கின்றன. அவற்றுக்கு இடையே நாங்கள் போராடிக் கப்பலைச் செலுத்த வேண்டும்," என்று கேப்டன் வாலெஸ் கூறுகிறார்.

A23a பனிப்பாறை: தெற்கு ஜார்ஜியா தீவு மீது மோதும் அபாயம் – இதன் விளைவுகள் என்ன?

பட மூலாதாரம்,ROB SUISTED/REUTERS

நியூமனின் கூற்றுப்படி, A76 ஒரு "கேம்சேஞ்சர்". "அது எங்கள் ஆபரேஷன்களில், எங்களுடைய கப்பலையும் பணியாளர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது."

ஆண்டுதோறும் உருகிக் கொண்டிருக்கும் பனிப்பாறைகள், கடலிலுள்ள பனிப்பாறைகளின் நிலையற்ற தன்மை என இவர்கள் மூன்றும் பேருமே, வேகமாக மாறி வரும் சூழலை விவரிக்கிறார்கள்.

பனி உறைந்த அன்டார்டிகாவில் இருந்து உடைந்து, தனியே A23a பனிப்பாறை உருவாக, காலநிலை மாற்றம் காரணமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அது மிக நீண்ட காலத்திற்கு முன்பே உடைந்து, பிரிந்துவிட்டது. இப்போது நாம் எதிர்கொள்ளும் வெப்பநிலை உயர்வின் தாக்கங்களுக்கு முன்பே அது உருவாகிவிட்டது.

ஆனால், இத்தகைய ராட்சத பனிப்பாறைகள் நமது எதிர்காலத்தின் ஒரு பகுதியாக மாறி வருகின்றன. கடல் மற்றும் காற்றின் வெப்ப நிலை அதிகரித்து, அன்டார்டிகா மேலும் நிலையற்றதாக மாறும் போது, பிரமாண்ட பனிப் படலங்கள் இப்படியான பனிப்பாறைகளாக உடைந்துவிடும்.

A23a பனிப்பாறை: தெற்கு ஜார்ஜியா தீவு மீது மோதும் அபாயம் – இதன் விளைவுகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

A23a பனிப்பாறை, அதன் காலம் முடிவதற்குள்ளாக, விஞ்ஞானிகளுக்கு ஒரு பரிசை விட்டுச் சென்றுள்ளது.

சர் டேவிட் அட்டன்பரோ ஆராய்ச்சிக் கப்பலில் இருந்த பிரிட்டிஷ் ஆய்வுக் குழுவுக்கு, 2023இல் இந்த பிரமாண்ட பனிப்பாறைக்கு அருகில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த அரிய வாய்ப்பை, இத்தகைய ராட்சத பனிப்பாறைகள் சுற்றுச்சூழல் மீது எத்தகைய தாக்கத்தைச் செலுத்துகின்றன என்பதை ஆராய்வதற்காகப் பயன்படுத்த விஞ்ஞானிகள் விரும்பினர்.

அந்தக் கப்பல், A23a பனிப்பாறையில் இருந்த ஒரு விரிசலுக்குள் நுழைந்தது. உள்ளே 400 மீட்டர் தொலைவில், ஆராய்ச்சியாளர் லாரா டெய்லர் பனிப்பாறைகளில் இருந்த நீர் மாதிரிகளைச் சேகரித்தார்.

"என் கண்களுக்கு எட்டிய வரை உயர்ந்திருந்த மிகப்பெரிய பனிச் சுவரைக் கண்டேன். அது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டிருந்தது. ஆங்காங்கே பனித் துண்டுகளாக உதிர்ந்து கொண்டிருந்தன. அது பார்க்க மிகவும் அற்புதமாக இருந்தது," என்று அவர் கேம்பிரிட்ஜில் உள்ள தனது ஆய்வகத்தில் இருந்து விளக்கினார். அங்கு அவர் சேகரித்து வந்த மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்து வருகிறார்.

A23a பனிப்பாறை: தெற்கு ஜார்ஜியா தீவு மீது மோதும் அபாயம் – இதன் விளைவுகள் என்ன?

பட மூலாதாரம்,TONY JOLLIFFE/BBC

படக்குறிப்பு, A23a-இல் இருந்து லாரா டெய்லர் எடுத்த நீர் மாதிரிகள், பனிப்பாறைகள் கரிம சுழற்சியை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆராய உதவுகின்றன

பனிப்பாறையில் இருந்து உருகும் நீர், தெற்கு கடலில் கரிம சுழற்சியில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அவர் ஆய்வு செய்கிறார்.

"இது நாம் குடிப்பதைப் போன்ற தண்ணீர் மட்டுமில்லை. இது ஊட்டச்சத்துகளும் ரசாயனங்களும் நிறைந்தது. இதனுள்ளே மிதவை நுண்ணுயிரிகளும் உறைந்திருக்கும்," என்று டெய்லர் கூறுகிறார்.

பனிப்பாறைகள் உருகும் போது நுண்துகள்களையும் கடலில் கலக்க விடுகின்றன. இந்தத் துகள்கள் கடலின் இயற்பியல் மற்றும் வேதியியல் தன்மைகளை மாற்றுகிறது.

அந்தத் துகள்கள் கடலில் மூழ்கினால், காலநிலை மாற்றத்தைத் துரிதப்படுத்தக் கூடிய கரிம வாயுவை காற்றில் இருந்து அவற்றால் கிரகிக்க உதவ முடியும். இந்தச் செயல்முறை, வளிமண்டலத்தில் இருக்கும் கரிமத்தை ஓரளவு கிரகித்து, ஆழ்கடலில் சேமிக்க உதவுகிறது.

பனிப் பாறைகளை யாராலும் கணிக்க முடியாது. ஆகவே, அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.

ஆனால் விரைவில், இந்த பிரமாண்ட பனிப்பாறை தெற்கு ஜார்ஜியா போன்ற தீவுகளில் இருந்தே பார்க்கும் அளவுக்கு நெருங்கி வரும். அப்போது, ஒரு பெருந்தீவு நெருங்கி வருவதைப் போல அது தோற்றமளிக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை தெற்கு ஜோர்ஜியாவில் கரை ஒதுங்கியது

Published By: Digital Desk 3

05 Mar, 2025 | 04:56 PM

image

2020 ஆம் ஆண்டு முதல் அந்தாட்டிக்காவில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து வந்த A23a என அறியப்படும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் ஒரு டிரில்லியன் மெற்றிக் தொன் (1.1 டிரில்லியன் டன்) எடையுள்ள A23a தெற்கு அத்திலாந்திக் பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ் வெளிநாட்டுப் பிரதேசமான தெற்கு ஜோர்ஜியா தீவில் கரை ஒதுங்கியுள்ளதாக செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஐக்கிய இராச்சியத்தின் தேசிய துருவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே (BAS) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்த பனிப் பாறையை  அளவிட்டப்போது 3,672 சதுர கிலோமீட்டர் (1,418 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டிருந்தது. இது ரோட் தீவை விட சற்று சிறியதும் லண்டனை விட இரண்டு மடங்கு பெரியதுமாக  காணப்பட்டுள்ளது.

1986ஆம் ஆண்டு அந்தாட்டிக்காவிலுள்ள  ஃபில்ச்னர் பனிக்கட்டியிலிருந்து உடைந்தது.  அன்றிலிருந்து, வெட்டெல் கடலில் தெற்கு ஓர்க்னி தீவுகளுக்கு அருகில் கடலின் அடிப்பகுதி சேற்றில் சிக்கிக் கொண்டது.

இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு இந்த பனிப்பாறை வடக்கு நோக்கி மெதுவாக நகர ஆரம்பித்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். 

ஆனால் 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அது கடலுக்கடியில் உள்ள ஒரு மலையைச் சுற்றி பல மாதங்களாக சிக்கிக் கொண்டது. இதனால் வடக்கு நோக்கி அதன் எதிர்பார்க்கப்பட்ட பயணத்தை தாமதப்படுத்தியது.

ஆனால் பனிப்பாறை கரையிலிருந்து 90 கிலோமீட்டர் (56 மைல்) தொலைவில் கண்டத் தகட்டில் தரையிறங்குவது போல் தோன்றுவதால் இந்தக் கவலைகள் குறைந்துவிட்டன.

"பனிப்பாறை அப்படியே இருந்தால், தெற்கு ஜோர்ஜியாவின் உள்ளூர் வனவிலங்குகளை குறிப்பிடத்தக்களவு பாதிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை," என பிரிட்டிஷ் அந்தாட்டிக் சர்வேவின் கடல்சார் ஆய்வாளர் ஆண்ட்ரூ மெய்ஜர்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மாறாக, அதன் வருகை வனவிலங்குகளுக்கு சில நன்மைகளை ஏற்படுத்தக்கூடும்.

"நிலத்தடிப்படுத்தல் மற்றும் அதன் உருகலால் தூண்டப்படும் ஊட்டச்சத்துக்கள், கவர்ச்சிகரமான பெங்குவின் மற்றும் சீல்கள் உட்பட முழு பிராந்திய சுற்றுச்சூழல் அமைப்பிற்கும் உணவு கிடைப்பதை அதிகரிக்கக்கூடும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

பனிப்பாறை தற்போது அதன் கட்டமைப்பைப் பராமரித்து வருவதாகத் தோன்றினாலும், சமீபத்திய தசாப்தங்களில் இந்தப் பாதையில் சென்ற பெரிய பனிப்பாறைகள் "விரைவில் உடைந்து, சிதறி, உருகும்" என்று மெய்ஜர்ஸ் தெரிவித்துள்ளார்.

"தற்போது அது தரைமட்டமாகிவிட்டது, அதிகரித்த அழுத்தங்கள் காரணமாக அது உடைந்து போகும் வாய்ப்பு அதிகம், ஆனால் இதை கணிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது," என்று அவர் அந்த அறிக்கையில் கூறினார்.

"பெரிய பனிப்பாறைகள் இதற்கு முன்பு வடக்கே வெகுதூரம் சென்றுள்ளன - ஒன்று பெர்த் அவுஸ்திரேலியாவிலிருந்து 1000 கிலோ மீற்றர் தொலைவில் ஒருமுறை வந்தது - ஆனால் அவை அனைத்தும் தவிர்க்க முடியாமல் உடைந்து பின்னர் விரைவாக உருகும்."

A23a இறுதியில் உடைந்து போகும்போது, அது உருவாக்கும் சிறிய பனிப்பாறைகள் மீன்பிடித்தல் மற்றும் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும், ஏனெனில் அவற்றைக் கண்டறிந்து கண்காணிப்பது ஒரு மெகாபர்க்கை விட கடினமாக இருக்கும் என்று மெய்ஜர்ஸ் கூறினார்.

“மீன்பிடியாளர்களுடன் கலந்துரையாடல்கள், கடந்த கால பெரிய பனிப்பாறைகள் சில பகுதிகளை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அதிக அல்லது குறைவான வரம்புகளை சில காலமாக விலக்கி வைத்திருக்கின்றன, ஏனெனில் சிறிய - ஆனால் பெரும்பாலும் மிகவும் ஆபத்தான பனிப்பாறை துண்டுகளின் எண்ணிக்கை காரணமாக,” என தெரிவித்துள்ளார்.

இந்த குறிப்பிட்ட பனிப்பாறை பனி அடுக்கின் இயற்கையான வளர்ச்சி சுழற்சியினால் உடைந்து போயிருக்கலாம், புதைபடிவ எரிபொருள் சார்ந்த காலநிலை நெருக்கடியால் அல்ல என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் புவி வெப்பமடைதல் அந்தாட்டிக்காவில் கவலைக்குரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது, இது உலகளாவிய கடல் மட்ட உயர்வுக்கு பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தும்.

https://www.virakesari.lk/article/208339

  • கருத்துக்கள உறவுகள்
On 25/11/2023 at 04:53, suvy said:

அட .....இதை இழுத்துச்சென்று அரேபியாவுக்கு அருகில் விட்டால் சில வருடங்களுக்கு குடிநீர் பஞ்சம் தீர்ந்துடும்.......!  😂

அந்தார்டிக்கா வில் இருந்து சவூதி ஒரு பனிப்பாறையை இழுத்து செல்வதற்கு முயற்சி செய்வதாக எங்கோ செய்தி வாசித்த ஞாபகம்

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

0eade-antarctica_christophermichelflickr

யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்!

கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிவேகமாக பனிப்பாறைகள் உருகிவருவதாக  யுனெஸ்கோ  அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது குறித்து யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ” பனிப்பாறைகள் உருகுவதன் காரணமாக கடல் மட்டம் அதிவேகமாக உயரும் என்றும் இதன் விளைவாக பலகோடி பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட நேரிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை  உலக வானிலை ஆய்வியல் அமைப்பின்  இயக்குநர் Stefan Uhlenbrook இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்”  ”அன்டார்ட்டிக் மற்றும் கிரீன்லாந்து உட்பட உலகம் முழுவதும் தற்போது 2 லட்சத்து 75 ஆயிரம் பனிப்பரப்புகள் மட்டுமே இருப்பதாகவும், பனிப்பாறைகளை பாதுகாப்பதன் மூலம்  உலக சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் எனவும்  தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1426156

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.