Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நானும் என் ஈழமும் - பகுதி 6

Featured Replies

naanumeneelamum6hu9.jpg

முன் குறிப்பு: கீழிருக்கும் பாடலை கேட்டுக்கொண்டு தொடரை படித்துப்பாருங்கள்.

http://www.ijigg.com/songs/V2AC4A0EP0

சிறு வயது முதல் ஈழத்தை விட்டு பிரிந்திருக்கும் என் தந்தை, தன் பிள்ளைகள் ஈழத்தையும்,தமிழையும் நேசிக்க வேண்டும் என்பதே தன் ஆசை என அடிக்கடி சொல்வார். அதற்காகத்தான் ஒவ்வொரு வருடமும் மாவீரர்தின மாதத்தில் இருந்து தை வரை ஈழத்திற்கு அழைத்து சென்றுவிடுவார். மூன்று அண்ணன்களுடன் இங்கு வசிக்கும் எனக்கு, அங்கு சென்றால் எண்ணிலடங்கா அண்ணன்கள் கிடைப்பார்கள். அப்படியான என் ஈழத்தை நோக்கிய பயணத்தில் அழுகைகளும், சோகங்களும், வீரமரணங்களும், அவலச்சாவுகளும், வெடிகளும், இரத்தமும், இடம்பெயர்வுகளும் சற்றும் குறைவில்லாமலே இருந்தது. ஆனாலும் அத்தனை இழப்புக்களையும் தாங்கும் சக்தி அங்கு கிடைக்கும் அன்பிற்குண்டு. போராளிகளாகட்டும், பொது மக்களாக்கட்டும் அவர்களிற்கிருக்கும் நகைச்சுவையுணர்வு எங்களிற்கு இல்லை என்பதே நிஜம்.

ஊரில் இருக்கும் எங்கள் வீட்டிற்கு முன்னாலே எம் காவல் தெய்வங்களின் ஒரு ஆலயம் இருந்தது. இக்காரணத்தால் எங்கள் வீட்டிற்கும் அவர்களுக்கும் உள்ள அன்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது எனலாம். மாவீரர் நாளாகட்டும், அன்னை பூபதி நினைவு நாளாகட்டும், வங்கக்கடலில் காவியமான புலிகள் நினைவாகட்டும்; எதிரிலிருக்கும் போராளிகளை விட எங்கள் வீட்டில் பெரிதாக நினைவு நாள் நடை பெறும். ஒவ்வொரு வருடமும் ஊருக்கு சென்றுவிடுவதால் இவற்றில் நானும் பங்கு கொண்டுள்ளேன். பேச்சுக்கு நிற்காமல் மாலை கட்ட பழகிக்கொண்டேன். பல பாடல்களை கற்று நினைவுநாளில் பாடியும் இருக்கின்றேன். [அதற்காக உடனே பாடி காட்டு என கேட்க கூடாது.]

ஒரு தடவை புரட்டாசி மாதத்தில் ஈழத்திற்கு சென்றிருந்தேன். அப்படி போன நேரத்தில் தான் திலீபன் அண்ணாவின் நினைவு நாள் வந்தது. வழமை போல் எங்கள் வீட்டில் சின்னதாக ஒரு கொட்டில் போட்டு திலீபன் அண்ணாவின் படம் வைத்து, அவர் உண்ணாவிரதம் இருந்த நாள் முதல், ஈழத்தாய் எங்கள் அண்ணனை இழந்த நாள் வரை சுடர் ஏற்றி மரியாதை செய்தார்கள். அந்த நேரத்தில் தாயகப்பாடல்களை போடுவார்கள் என் சகோதரர்கள். எப்படி எனில் பின்னால் ஒருவர் இருந்து துவிச்சக்கர வண்டியை தலைகீழாக வைத்து சுற்ற, அதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தில் கொட்டிலில் பாடல் ஒலிக்கும். நிற்காமல் பாடல் ஒலிக்க வேண்டும் என ஒருத்தர் மாற்றி ஒருவர் அந்த வேலையை செய்வார்கள். நினைவு நாளன்று பாடல்கள் பாடி, பேச்சு போட்டி வைத்து எங்கள் வீடு இருக்கும் வீதியில் செல்பவர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தாமல் செல்ல மாட்டார்காள். அந்த இடத்தை கடக்கும் போது வாகனத்தில் இருந்து இறங்கி தான் செல்வார்கள். மாலை தொடுத்து திலீபன் அண்ணா படத்திற்கு போட்டு, விளக்கேற்றி, வத்திகுச்சி வைத்தது இன்னமும் என் நினைவில் உள்ளது.

இதில் ஒரு எனக்கு அண்ணன்கள் என்னை பற்றி சொன்ன ஒரு உண்மையை சொல்ல வேண்டும். சின்ன வயதில் வீட்டில் விளக்கேற்றி, வத்திகுச்சி வைத்தால் சாமிக்கு தேவாரம் பாட வேண்டும் என பெரியம்மா அடிக்கடி செல்லுவார்கள். இதை மனதில் வைத்து அனைவரும் அஞ்சலி செலுத்தும் நேரத்தில் நான் தேவாரம் பாடியிருக்கேனாம். இதை அடிக்கடி சொல்லி என்னை கிண்டல் பண்ணுவதை இன்று வரை என் அண்ணன்க்கள் விடவேயில்லை.

எதிரில் அண்ணன்கள் பேஸில் செய்வதை விட நாங்கள் நன்றாக செய்ய வேண்டும் என எங்கள் வீட்டில் அண்ணன்கள் மிகவும் நேரம் செலவழித்து செய்வார்கள். அன்றைய தினம் காலையில் இருந்து அந்த வீதியையே அமர்க்களப்படுத்தி கொண்டிருந்தோம். துக்கத்தைவிட அனைவர் மனதிலும் பெருமை தான் இருந்ததாக எனக்கு இப்பொழுது தோன்றுகின்றது.

மாலையில் பாட்டு, நடனம், பேச்சுகள் நடந்து கொண்டிருந்தது. இதனாலே எங்கள் வீட்டின் முன் ஒரு சிறு கூட்டம் வந்துவிட்டது. வீட்டில் அண்ணன்கள், அவர்கள் நண்பர்கள், சில அயலவர்கள் என அனைவரும் ஏதாவது ஒன்றில் பங்களிப்பு செய்தார்கள். என்னையும் பாட வேண்டும் என கேட்டதால், நானும் பாடலை மனப்பாடம் செய்து தயாராகி இருந்தேன். [நாங்கெல்லாம் பேச்சு போட்டிக்கா போக முடியும்!]

என் பெரியண்ணனிடம் ஒரு தடவை திலீபன் அண்ணாவின் படத்தை காட்டி "இந்த அண்ணா எப்பிடி சாமி ஆகிட்டார் பெரியண்ணா?". பதிலாக அண்ணன் "இந்தியன் ஆமி எங்கள அடிக்க வந்தவங்கள் தானே, எங்களை காப்பாற்ற திலீபன் அண்ணா போனர், அவங்கள் சாக்காட்டி போட்டாங்கள்". நான் திருப்பி கேட்கிறேன் "இந்தியன் ஆமியோ? ஏன் எங்கட ஒஸ்திரேலியாவில ஆமி நல்லம் தானே?".

அன்றிலிருந்து எனக்கு இந்தியன் ஆமி என்றால் ஒரு விரோதம். "இந்தியாவிற்கு மட்டும் நான் வரவே மாட்டேன் அப்பா, எங்களை சாக்காட்டிடுவாங்களாம் பெரியண்ணா சொன்னார்" என அப்பாவிடம் சின்னவயதில் சொல்லி இருக்கின்றேன். இதனாலேயே இந்தியாவில் வசிக்கும் என் மாமாவிடம் பல வருடங்களாக பேசவில்லை என்றால் பாருங்களேன். அது போல 2005 இல் தான் சென்னைக்கும் சென்றேன். அப்பொழுது, அந்த வயதில் எங்கட ஒரு அண்ணாவை இந்தியன் ஆமி சாகடித்துவிட்டார்கள் என்பது மட்டும் தான் மனதில் நின்றது.

மறுபடி எங்கள் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு போகலாமா? மாலை நேரம் என்பதால் பேஸில் இருந்து சில பெரிய மாமாக்களும் வந்திருந்தார்கள். ஒலிவாங்கிக்கு முன்னால் போன பின்னால் தான் முன்னாலே இருக்கும் கூட்டம் என் கண்ணுக்கு தெரிந்தது. சொன்னா நம்ப மாட்டிங்க, மூச்சு மட்டும் வருது, பேச்சே வரலை. முன்னாடி இருந்தா என்னோட அப்பா "பாடும்மா பாடும்மா" என சொல்கிறார். பாட்டு எங்க வரும், நமக்கு தான் பேச்சே வரலையே! மனசில் சித்தப்பாவை நினைச்சிட்டு பாட ஆரம்பிச்சிட்டேன்........."பாடும் பறவைகள் வாருங்கள், புலி வீரன் திலீபனை பாடுங்கள்" நான் பாட பாட முன்னாலிருந்த சில பாட்டிகள் நெஞ்சில் அடித்து அழ ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களை பார்த்து என் கண்ணிலிருந்தும் நீர் கொட்டுகின்றது. நான் பாடுவது கண்ணீரால் தடை பட அண்ணன்கள் பாடலை தொடர்கின்றார்கள். இதை பார்த்து கூட்டத்திலும் பலரும் பாட, நானும் தொடர்ந்து பாடி முடித்துவிட்டேன். அந்த நேரத்தில் எனக்கு தோன்றிய உணர்வுகள் பற்றி சரியாக நினைவில் இல்லை. ஆனால் இப்பொழுது நடந்ததை நினைக்கும் போது, தட்டச்சு செய்யும் விரல்களில் இருந்து ஏதோ ஒன்று என் இதயம் வரை தாக்குகின்றது.

பேஸில் இருந்து வந்திருந்த மாமாக்கள் அனைவரும் என்னை நல்ல பிள்ளை, நன்றாக பாடினேன் என சொன்னார்கள். ஒருவர் மட்டும் என் தலை மேல் கை வைத்து என் அப்பாவை பார்த்து "இது போதுமண்ணை எங்கட போராட்டத்திற்கு" என சொன்னார்.

அந்த நேரத்தில் எனக்கு புரியவில்லை. பின்னாளில் அப்பாவுடன் பழைய நினைவுகளை மீட்ட நேரத்தில் பல விடயங்கள் எனக்கு புரிந்தது. அன்று அந்த மாமா வைத்த நம்பிக்கை என் ஒருத்தி மீதல்ல, அது எங்கள் தலைமுறை மீது அவர் வைத்த நம்பிக்கை!

இன்னொன்று சொல்ல மறந்திட்டனே, நாங்கள் அதுக்கடுத்த வருடம் ஊருக்கு போன போது அவரும் சாமி ஆகிட்டார் என அண்ணாக்கள் சொன்னார்கள். மாவீரர் நாளில் அவரின் படமும் எங்கள் நினைவு கொட்டிலில் இருந்தது!

-----------------------------------------------------------------------------

நல்லூரின் வீதியில் நடந்தது யாகம்

நாளு நாள் ஆனதும் சுருண்டது தேகம்

தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை

திலீபனை பாடிட வார்த்தைகள் இல்லை

பாடும் பறவைகள் வாருங்கள்

புலி வீரன் திலீபனை பாடுங்கள் *2

தியாகத்தில் ஆகுதி

ஆனவன் நாமத்தை

ஆயிரம் ஆயிரம் ஆயிரம்

காலங்கள் பாடுங்கள் *2

பாடும் பறவைகள் வாருங்கள்

புலி வீரன் திலீபனை பாடுங்கள் *2

இந்திய ஆதிக்க ராணுவம் வந்தது

நீதிக்கு சோதனை தந்தது

நாங்கள் சிந்திய இரத்தங்கள் காய்ந்திடும் முன்னரே

கால்களில் வீழ் என சொன்னது *2

வேங்கைகள் இதை தாங்குமா?

குண்டை ஏந்திய நெஞ்சுகள் தூங்குமா?

வீரன் திலீபன் வாதாடினான்

பசி தீயில் குதித்து போராடினான் *2

பாடும் பறவைகள் வாருங்கள்

புலி வீரன் திலீபனை பாடுங்கள் *2

வாயில் ஒரு துளி நீரதுமின்றி

வாசலில் பிள்ளை கிடந்தான்

நேரு பேரன் ஏனென கேட்காமல்

ஆணவத்தோடு நடந்தான்

சாவினில் புலி போனது

தமிழீழமே சோகமாய் ஆனது

பார்த்து மகிழ்ந்தது ராணுவம்

புலி சாவுக்கு ஆதிக்கம் காரணம் *2

பாடும் பறவைகள் வாருங்கள்

புலி வீரன் திலீபனை பாடுங்கள்

அந்நிய நாடிது ஆயினும் நீ இங்கு

ஆதிக்கம் செய்திட வந்தாய்

எங்கள் மன்னன் திலீபனின் கோரிக்கை

யாவையும் ஏளனம் செய்துமே கொன்றாய் *2

தாகத்தோடு புலி போனது

தமிழ் சந்ததியே சூடு கண்டது

நெஞ்சினில் ரத்தம் வழிந்தது

உந்தன் ஒப்பந்தம் இங்கே கிழிந்தது

பாடும் பறவைகள் வாருங்கள்

புலி வீரன் திலீபனை பாடுங்கள் *2

-------------------------------------------------------------------------

திலீபன் அண்ணாவிற்கும், என் தலையில் கைவைத்து நம்பிக்கை வைத்த மாமாவிற்காகவும் இந்த தொடர் சமர்ப்பணம்.

தமிழீழ மக்களின் தாகம்

தமிழீழத்தாயகம்

Edited by தூயா

வாழ்த்துகள் தூயா நல்லா இருந்தது .ஊர் ஞாபகத்தை கொண்டுவந்து விட்டீர்கள் நாமும் ஊரில் திலீபன் அண்ணாவுக்கு கொட்டில் போட்டு அலங்கரித்து அஞ்சலி செலுத்தியதுன்டு எப்போதும் என்றும் நாம் என்ன எமது சந்ததிகளே மறக்கமுடியாத தியாகி அவர்

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் கிடைக்கும் போது எல்லோரையும் ஊருக்கு கூட்டிச் செல்வதற்கு வாழ்த்துக்கள்.

நல்லதொரு பாடலுடன் தொடரை ஆரம்பித்து இருந்தீர்கள்................எனக்கு ஈழத்தில் இருந்த அநுபவம் இல்லை எல்லாம் கொழும்பில போயிட்டு உங்கள் தொடர் மூலம் பலவற்றை அறிந்தேன்!!மிகவும் நன்றாக இருந்தது வாழ்த்துகள் தூயிஸ்!! :D

நல்ல ஒரு பதிவு தூயா....

நானும் நல்லூரில் சிறுவயதில் தியாகி திலீபனின் இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது. இதைவிட யாழ் மருத்துவபிடத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சியிலும் தியாகி திலீபனின் உயிரற்ற உடலை மீண்டும் ஒரு தடவை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.

நிறைய ஞாபகங்களை மீட்ட வச்சிட்டீங்கள் தூயா. நாங்கள் பள்ளிக்கூட விளையாட்;டு மைதானத்தில்தான் நிகழ்ச்சிகள் வைக்கிறனாங்கள். நீங்கள் வீட்டிலயே :-))

"திலீபன் அலைவது சாவையா இந்தச் சின்ன வயதில் அது தேவையா " இது எனக்குப் பிடிச்ச பாட்டு.

இதயும் பாருங்கோ.

Edited by Snegethy

  • தொடங்கியவர்
வாழ்த்துகள் தூயா நல்லா இருந்தது .ஊர் ஞாபகத்தை கொண்டுவந்து விட்டீர்கள் நாமும் ஊரில் திலீபன் அண்ணாவுக்கு கொட்டில் போட்டு அலங்கரித்து அஞ்சலி செலுத்தியதுன்டு எப்போதும் என்றும் நாம் என்ன எமது சந்ததிகளே மறக்கமுடியாத தியாகி அவர்
பாட்டு பாடியதில்லையா?
நேரம் கிடைக்கும் போது எல்லோரையும் ஊருக்கு கூட்டிச் செல்வதற்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி ஈழப்பிரியேன் :)
நல்லதொரு பாடலுடன் தொடரை ஆரம்பித்து இருந்தீர்கள்................எனக்கு ஈழத்தில் இருந்த அநுபவம் இல்லை எல்லாம் கொழும்பில போயிட்டு உங்கள் தொடர் மூலம் பலவற்றை அறிந்தேன்!!மிகவும் நன்றாக இருந்தது வாழ்த்துகள் தூயிஸ்!! :D
ஓ அப்படியா? விடுமுறைக்கு கூட சென்றதில்லையா யம்மு??
நல்ல ஒரு பதிவு தூயா....நானும் நல்லூரில் சிறுவயதில் தியாகி திலீபனின் இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது. இதைவிட யாழ் மருத்துவபிடத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சியிலும் தியாகி திலீபனின் உயிரற்ற உடலை மீண்டும் ஒரு தடவை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.
உங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை..காரணம் அந்த நேரத்தில் என் வயது...உங்களுக்கு கிடைத்ததையிட்டு :(, காரணம் அனைவருக்கும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே..எத்தனை பெரிய மகாத்மா அவர்..
நிறைய ஞாபகங்களை மீட்ட வச்சிட்டீங்கள் தூயா. நாங்கள் பள்ளிக்கூட விளையாட்;டு மைதானத்தில்தான் நிகழ்ச்சிகள் வைக்கிறனாங்கள். நீங்கள் வீட்டிலயே :-)) "திலீபன் அலைவது சாவையா இந்தச் சின்ன வயதில் அது தேவையா " இது எனக்குப் பிடிச்ச பாட்டு.இதயும் பாருங்கோ.
பள்ளிக்கூடத்தில் எப்படி என எனக்கு தெரியவில்லை சகோதரி..அங்கு நான் படிக்கவில்லை...வீட்டில் வைப்பது நன்றாக நினைவில இருக்கு..நல்ல பாட்டு...இணைப்பிற்கு மிக்க நன்றி
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல இணைப்பு தூயா. நன்றி. மீண்டும் ஊர் ஞாபகம் வர வைத்து விட்டீர்கள்.

நானும் திலீபன் அண்ணாவை உண்ணாவிரதத்தில் சென்று பார்த்தேன் பிறகு கலைஞன் சொன்ன மாதிரி பல்கலைகழகத்தில் நடந்த கண்காட்சி ஒன்றிலும் அவரது உடலை பார்த்தேன்

  • தொடங்கியவர்

நல்ல இணைப்பு தூயா. நன்றி. மீண்டும் ஊர் ஞாபகம் வர வைத்து விட்டீர்கள்.

நானும் திலீபன் அண்ணாவை உண்ணாவிரதத்தில் சென்று பார்த்தேன் பிறகு கலைஞன் சொன்ன மாதிரி பல்கலைகழகத்தில் நடந்த கண்காட்சி ஒன்றிலும் அவரது உடலை பார்த்தேன்

நீங்களும் பார்த்திங்க்ளா? இப்போ கூட அங்கா உள்ளது?

யாழ் இடம்பெயர்வின் போது திலீபன் அண்ணாவின் புகழுடல் வன்னிக்கு கொன்டு செல்லப்பட்டதாக அறிந்தேன் நிச்சயம் அவரின் புகழுடல் பாதுகாக்கப்பட்டு வரப்படும்

  • தொடங்கியவர்

செய்தி உண்மையாக இருக்கணும்...நிச்சயமாக அவரை தனியே விட்டு சென்றிருக்க மாட்டார்கள்..

காலத்துக்கு ஏற்ப பதிவு தமிழர்களுக்கு அகிம்சை வழியும் தெரியும் என அகிம்சை நாட்டுக்கே பாடம் புகட்டியது அவரது வீரமரணம்

தூயா உங்கட அப்பா மாதிரி வெளிநாட்டில இருக்கிற எல்லா அப்பாமாரும் இருந்தா.. எவ்வளவ நல்லது. உங்களை நினைச்சா உண்மையில பெருமையா இருக்கு. வாழ்த்துக்கள். நிச்சயம் தமிழ்ஈழம் கிடைக்கும்.

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் போது 11 நாட்களும் மக்கள் வெள்ளமாகச் சென்று திலிபன் அவர்களின் உண்ணாவிரதம் இருக்கும் நல்லூர் கந்தசுவாமி விதியில் திலிபன் அவர்களைப் பார்த்தார்கள். அவர்களோடு நானும் திலிபன் அவர்களைப் பார்த்தேன். அப்பொழுது மிகவும் களைப்படைந்த நிலையிலும் திலிபன் அவர்கள் அங்கு கூடி இருந்த பொதுமக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருந்தார். 85,86ல் பல இயக்கங்கள் யாழில் இருந்தினால் ஒவ்வொரு இயக்கத்துக்கும் ஒவ்வொரு ஆதாரவாளர்கள் இருந்தார்கள். ஆனால் 87ல் பெரும்பாலும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாக இருந்தார்கள். திலீபனின் உண்ணாவிரத்தின் பிறகு மற்றைய இயக்க ஆதரவாளர்களும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாக மாறினார்கள். திலிபனின் மறைவின் பின்பு பல வீடுகளில் திலிபனின் புகைப்படங்கள் வீடுகளில் இருந்தன. இந்திய இராணுவ சண்டை ஆரம்பித்ததும் பயத்தினால் அப்புகைப்படங்களை மக்கள் அகற்றினாலும் திலிபனின் மீது கொண்ட பற்றினையும், விடுதலைப்புலிகளின் மீது கொண்டுள்ள பற்றினையும் எந்தவொரு சக்தியினாலும் மக்களின் மனதில் இருந்து அகற்ற முடியவில்லை.திலிபனின் இறுதி ஊர்வலம் யாழ்ப்பாண வீதிகளில் வரும் போது மக்கள் பூக்களுடன் அம்மாவீரனைத் தரிசிக்க கண்களில் வழியும் நீருடன் நின்றதினைப் பார்த்த அனுபவம் இன்னும் என் கண்களில் இருக்கிறது.

"திலீபன் அலைவது சாவையா இந்தச் சின்ன வயதில் அது தேவையா " என்று அன்று ஒளிபரப்பான பாடல் கேட்டு அழுத மக்களை பாரத தேசம் சில நாட்களுக்குப் பிறகு மறுபடியும் அழ வைத்தது.

Edited by கந்தப்பு

தூயா.... அருமையான பதிவு.... தமிழ் மக்களுடைய விடுதலைப்போராட்டத்தை வீறுகொண்டெழவைத்த நிகழ்வை யாரால் தான் மறக்கமுடியும். ஆற்றல்மிக்க தளபதிகள், போராளிகள் பலர் இந்த போராட்டத்தில் மடிந்தார்கள். புதியவர்கள் வீச்சோடு எழுந்தார்கள். தமிழர்களை தலை நிமிர வைத்தார்கள்.

தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தூயா உங்களின் உணர்வுகளை பகிர்ந்து கொண்டமைக்கு. தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் நன்றி தூயா.

அந்த நிகழ்வுகளில் ஊரில் பங்குபெற்றிருக்கவில்லை ஆனால் உங்கள் பதிவுகளால் அந்த உணர்வைப் பெற்றோம்.

ஆக்கத்துக்கு பாராட்டுக்கள் தூயா.

திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் போது (1987ல்) நான் படித்த பாடசாலை மாணவர்கள் எல்லோரும் நல்லூர் வீதியிற்கு சென்று தீலிபன் அவர்களின் உரையினைக் கேட்டோம். அன்று தீலிபன் அவர்களின் 4ம் நாள் உண்ணாவிரதம் என நினைக்கிறேன். மீண்டும் ஒருநாள் அவரது உண்ணாவிரதத்தினை சென்று பார்த்தேன். அவர் மறைந்து ஒருவருடம் சென்றபின் முதலாவது ஆண்டு நினைவு நாள் (1988) அன்று நல்லூர் கந்தசாமி கோவில் வீதியில் பல பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் ஒன்று கூடினார்கள். அதில் எமது பாடசாலை மாணவர்களோடு கலந்து கொண்டேன். அப்பொழுது ஒரு கிழமை யுத்த நிறுத்தம் இருந்தது என நினைக்கிறேன். 1989ல் பாடசாலை ஆண் மாணவர்கள் வெளியே சென்றால் இந்தியப் ப்டை உதவியுடன் ஈபிஆர் எல் எவ், ஈ. என். டி.எல்.எவ் போன்ற துணை இராணுவக்குழுக்களினால் பிடிக்கப்படும் அபாயம் இருந்தது. அதனால் வெளியே செல்ல முடியாமல் வீட்டில் வாழ்ந்த காலமது. 1990ல் தீலிபன் அவர்கள் இறந்த நாள் அன்று அன்று தான் கோட்டை இராணுவமுகாம் தாக்கியழிக்கப்பட்டது.

  • தொடங்கியவர்

அனுபவங்கள் அனைத்தும் நெஞ்சில் அப்படியே இருக்கும்..இல்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.