Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image_28068188bd.jpg

வி.ரி.சகாதேவராஜா

கொழும்பு, கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வளாகத்தில் நிறுவப் பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.

 கடந்த ஒரு தசாப்த காலமாக அங்கிருந்த சுவாமி விவேகானந்தர் சிலை இவ்வாறு திடீரென அகற்றப்பட்டுள்ளது.

உலகம் போற்றும் வகையில் இந்து மதத்தை அமெரிக்காவில் முழங்கிய பின் 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி சுவாமி விவேகானந்தர் கொழும்பில் வந்து இறங்கினார். அப்பொழுது அங்கிருந்த பெரிய தனவான்களும்  இன்னும் பலரும்  பொன்னம்பலம் ராமநாதனின்  தலைமையில்  தம்பையாவின் உதவிகளுடன் சுவாமி விவேகானந்தரின் வருகையை இலங்கை முழுவதும் மாபெரும் வகையில் கொண்டாடினர். 

சுவாமி விவேகானந்தருடைய வருகையை ஒட்டி பல இடங்களில் வரவேற்கும் தோரணங்களும் பூரண கும்பங்களும் வைக்கப்பட்டு சகல மரியாதைகளுடன் அருள்மிகு பொன்னம்பலவானேஸ்வரர் திருக்கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். 

 சுவாமி விவேகானந்தரை, இந்த உலகத்திற்கு வழிகாட்டுவதற்காக வந்த திருஞானசம்பந்தரின் அவதாரமாகவே இலங்கை மக்கள் கருதியதாக அன்றைய செய்தித்தாள்கள் செய்தியை வெளியிட்டிருந்தன. 

 

இத்தகைய மாபெரும் சிறப்பு வாய்ந்த  சுவாமி விவேகானந்தரின் வருகை பொன்னம்பல வாணேஸ்வரர் திருக்கோவிலில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டிருந்தது.

 2013 ஆம் ஆண்டில்  அந்த கல்வெட்டு கோவிலில் இருந்து அகற்றப்பட்டது.  இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தை  இந்து அமைப்புகளும் பொதுமக்களும் ராமகிருஷ்ண மிஷன் உட்பட செயல் அலுவலர்களும் தொடர்பு கொண்ட போது கல்வெட்டுக்கு பதிலாக சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலையை வைப்பதாக அன்றைய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவித்தனர். 

அதற்கமைய கடந்த 2014 மேமாதம் முதலாம் திகதி வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு இந்த சிலை ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கமைய கொழும்பு ராமகிருஷ்ண மிஷனால் வழங்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 

சிலை அகற்றப்பட்டமை தொடர்பாக ராமகிருஷ்ண மிஷன் மற்றும் இந்திய அரசு சார்ந்த உயர்மட்டக் குழுக்கள், இந்து ஸ்வயம் சேவக அமைப்பு இன்னும் பல இந்து அமைப்புகள் கோயில் நிர்வாகத்திடம் கவலையையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளன.

 அதற்கு 'மனிதர்களின் சிலையை நாம் ஆலயத்தில் வைப்பதில்லை' என்று ஆலய நிர்வாகம் எழுத்து மூலம் பதிலளித்திருப்பதாக கூறப்படுகிறது.

 எவ்வாறாயினும், இந்தியா காசி வாரணாசி ராமகிருஷ்ண மிஷன் கிளையில் இருந்து முன்னாள் கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் தலைவர் அவர்கள் சிலை அகற்றியமையை ஒட்டி இரண்டு பக்க கடிதத்தை நிர்வாகிக்கு அனுப்பியிருந்தார். அவருக்கும் அதே பதில் வழங்கப்பட்டிருக்கின்றது . இது தொடர்பாக இந்து அமைப்புகள் கவலை தெரிவித்து இருக்கின்றன. 

ஆலயத்திற்கு வெளியே வளாகத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் ஒரு மனிதர் என்றால் ஆலயத்திற்கு உள்ளே உள்ள  64 நாயன்மார்களும் மனிதர்கள் தானே. அப்படியானால் அவர்களது சிலைகளும் அங்கிருந்து அகற்றப்படுமா? என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.

 இதனை சுமுகமாக தீர்த்து வைப்பதற்கு பலரும் முயற்சி எடுத்து வருகின்ற பொழுதும் ஆலய நிர்வாகம் விடாப்படியாக இருப்பதாக கூறப்படுகிறது.

image_e8354bc1a5.jpg

Tamilmirror Online || கொழும்பில் சுவாமி விவேகானந்தர் சிலை மாயம்

  • கருத்துக்கள உறவுகள்

நான் அண்மையில் கோயிலை தரிசிக்க சென்றபோது சிலையை பார்த்தேன். யார் சிலையோ என நினைத்தேன். கோயிலின் உள்ளே நால்வரின் சிலைகள் உள்ளன. வெளியில் சுவாமி விவேகானந்தர் சிலையை வைத்தால் கோயிலுக்கு இழுக்கா. இவ்வளவு காலமும் சிலையை ஏன் விட்டு வைத்தார்கள். புதிய நிர்வாகம் பதவி ஏற்று உள்ளதோ அல்லது புதிய தலைமுறை புதுசாய் சிந்திக்கின்றதோ!

Edited by நியாயம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

கோயிலின் உள்ளே நால்வரின் சிலைகள் உள்ளன

அதில ஒன்று என்னது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கேட்பது/சொல்வது புரியவில்லை. நால்வர் என சமய குரவர்களை கூறினேன். 

சரி கோயில் நிருவாகம் எடுத்த முடிவுக்கு நாம் என்ன செய்யமுடியும். வெளிவீதியிலும் சுவாமி விக்கிரகங்கள் உள்ளன. சுவாமி வெளிவீதி சுத்தும்போது விவேகானந்தரின் பார்வை ஐயர்/கோயில் நிருவாகிகளுக்கு நெருடலை ஏற்படுத்துகின்றதோ என்னமோ. 

பல கோயில்களில் சாய்பாபா சிலை/படம், அத்துடன் வேறு பல சாமியார்கள், அம்மாக்கள், ஐயாக்கள் படங்கள் கண்டுள்ளேன். சில இடங்களில் அவற்றுக்கு பூஜையும் நடக்கின்றது. அவரவர் நம்பிக்கைகள். ஆகம விதிமுறைகள் என்று பார்த்தால் பல கோணங்களில் பார்க்கலாம். பொன்னம்பலவாணேஸ்வரம் வெளிவீதியில் மண்டபம் உள்ளது. இது சிவாகம விதிகளுக்கு உட்பட்டதா?

சரி என்னவோ…

கோயில் தரிசனம் மன நிறைவை தருகின்றது. அது போதும். 

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் இருக்கும் காந்தி சிலையையும் தூக்கினால் நல்லம் ...எதற்கு சம்மந்தமில்லால் அந்த இடத்தில் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரதி said:

மட்டக்களப்பில் இருக்கும் காந்தி சிலையையும் தூக்கினால் நல்லம் ...எதற்கு சம்மந்தமில்லால் அந்த இடத்தில் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை 

உங்கள் அபிமான கருணவையும்  பிள்ளையானையும் கவனத்தில் எடுக்க சொல்லலாமே? 😎

  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2023 at 13:29, ரதி said:

மட்டக்களப்பில் இருக்கும் காந்தி சிலையையும் தூக்கினால் நல்லம் ...எதற்கு சம்மந்தமில்லால் அந்த இடத்தில் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை 

காந்தி சிலை மட்டக்களப்பில் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்திலும் இருக்கிறது. இந்தியாவை நினைவுபடுத்தும் எதுவும் இலங்கையில் இருக்கக்கூடாது என்பதே என் நிலைப்பாடு. இதற்குப்பதிலாக இந்திய எழுத்தறிவில்லாத இராணுவத்தின் படுகொலைகளை நினைவுபடுத்துவனவற்றை ஆங்காங்கே வைக்க வேண்டும். 

இராமர் பாலத்தின் இலங்கைக்கான பகுதியின் பெயரை மாற்றி இராவணன் தீவுக் கூட்டம்  எனப் பெயரை வைக்க வேண்டும். இந்து சமுத்திரம் என்பதையும் மாற்றும்படி UN ஐக் கோரலாம். அதற்கு  பாகிஸ்தான், பங்களாதேஷ், பங்களாதேஷ்  மாலைதீவு, இலங்கை மற்றும்  ஆபிரிக்க நாடுகள் ஆதரிக்கும். 

இந்தியத் தூதரகத்தையும் கடாசிவிட்டால் மெத்தச் சிறப்பு. 

😡

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, Kapithan said:

இராமர் பாலத்தின் இலங்கைக்கான பகுதியின் பெயரை மாற்றி இராவணன் தீவுக் கூட்டம்  எனப் பெயரை வைக்க வேண்டும். இந்து சமுத்திரம் என்பதையும் மாற்றும்படி UN ஐக் கோரலாம். அதற்கு  பாகிஸ்தான், பங்களாதேஷ், பங்களாதேஷ்  மாலைதீவு, இலங்கை மற்றும்  ஆபிரிக்க நாடுகள் ஆதரிக்கும்.

மூஞ்சூறு தான் போக காணேல்லையாம் இதுக்குள்ள விளக்குமாத்தையும் காவிக்கொண்டு போக நினைச்சுதாம்.....😂

மண்ணெண்ணெய் வேப்பெண்ணை விளக்கெண்ணெய் ,பாகிஸ்தான்  பங்களாதேஷ்  மாலைதீவு தோத்தா எனக்கென்ன.....🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2023 at 19:25, குமாரசாமி said:

மூஞ்சூறு தான் போக காணேல்லையாம் இதுக்குள்ள விளக்குமாத்தையும் காவிக்கொண்டு போக நினைச்சுதாம்.....😂

மண்ணெண்ணெய் வேப்பெண்ணை விளக்கெண்ணெய் ,பாகிஸ்தான்  பங்களாதேஷ்  மாலைதீவு தோத்தா எனக்கென்ன.....🤣

எனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை. எதிரிக்குச் சகுனப்பிழையானால் எனக்குப் போதும்.

(எங்களுக்கு ஏற்கனவே மூக்கு போயிற்று. இனியேன் அதப்பற்றிக் கவலைப்படுவான்? 😁)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.