Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன்முடிக்கும் மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொன்முடிக்கும் மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

image_aaa4a2e40c.jpg

  வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (டிச.21) தண்டனை விவரங்களை சென்னை உயர் நீதிமன்றம், அறிவித்துள்ளது.

தண்டனை விவரம்: அதன்படி, பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலட்சுமிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக இருவருக்குமான தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நீதிமன்றத்தில் இன்று பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அமைச்சர் பொன்முடி அவரது மனைவி விசாலாட்சியின் வயது, மருத்துவ நிலையைக் கருத்தில் கொண்டு தண்டனையை அறிவிக்க வேண்டும் என்று கோரியதாகத் தகவல்.

தமிழகத்தின் தற்போதைய உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி கடந்த 2006-11 திராவிட முன்னேற்ற கழக (திமுக) ஆட்சி காலத்தில் உயர்கல்வி, கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக  அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அதிமுக) ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கடந்த 2011-ம் ஆண்டுஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. பின்னர், விழுப்புரம்மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கு கடந்த 2015-ம் ஆண்டுமாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரமூர்த்தி, இந்த வழக்கில்பொன்முடி, விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றுகூறி இருவரையும் விடுதலை செய்து கடந்த 2016 ஏப்ரல் 18-ம் திகதி தீர்ப்பு அளித்தார்.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இலஞ்ச ஒழிப்பு துறை சார்பில்கடந்த 2017-ம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு விசாரணை, இறுதியாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நடந்து வந்தது.

அப்போது, பொன்முடி தரப்பில், ‘மனைவி விசாலாட்சிக்கு சொந்தமாக பல ஏக்கரில் விவசாய நிலமும், தனியாகவணிகமும் நடந்து வருவதால், அதில்கிடைத்த வருமானத்தையும், என் வருமானத்துடன் ஒன்றாக சேர்த்துள்ளனர். புலன்விசாரணை அதிகாரி இதைகவனத்தில் கொள்ளவில்லை. எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால்தான் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது’ என்று வாதிடப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், ‘பொன்முடி, விசாலாட்சிக்கு எதிரான வருமானவரி கணக்குகள், சொத்து விவரங்கள்,வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றுடன், மொத்தம் 39 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, குற்றப் பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது. ஆனால், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி இருவரையும் ஊழல் தடுப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. எனவேஅந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்’ என வாதிடப்பட்டது.
இந்நிலையில் அவர்களுக்கான தண்டனை விவரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.tamilmirror.lk/செய்திகள்/பனமடககம-மனவககம-3-ஆணடகள-சற/175-330183

  • கருத்துக்கள உறவுகள்

download-26.jpg?resize=290,174&ssl=1

அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க ஆட்சிக் காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தாா்.

அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1 கோடியே 75 இலட்சம் (இந்திய ரூபா) சொத்துகள் சோ்த்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு சாா்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இன்னிலையில் இன்று அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ. 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1363860

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ரெண்டு வழக்கு இவர் மேல இருக்குது.

ED raid கேஸ் இனித்தான்!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இன்னும் ரெண்டு வழக்கு இவர் மேல இருக்குது.

ED raid கேஸ் இனித்தான்!

ஆளை உள்ளுக்கு தள்ளாமல் உறங்கமாட்டீர்கள் போல.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆளை உள்ளுக்கு தள்ளாமல் உறங்கமாட்டீர்கள் போல.

ஆள் உள்ளுக்கு போனமாதிரிதான்.

ஆனா, அரசியல் ரீதியா ஸ்டாலினுக்கு பெரும் தோல்வி.

காங்கிரஸை, கழட்டி ஆவது விட்டிருக்கலாம். அதுக்கு, ஈரோடில காசை கொட்டொ, கொட்டு எண்டு கொட்ட, பிஜேபி அரண்டு போய் விட்டது.

அடுத்த முறை, பெருமளவு பெரும்பான்மை கிடைக்காது என்ற நிலையில், இவர்கள், இப்படி காசை எறிந்து, 40 (39+1) சீட்டுகளை வென்று, குடைச்சல் தர போகிறார்கள் என்று பிஜேபி அலெர்ட் ஆகி விட்டதால், வந்த வினை.

அதுக்குரிய பலனை அனுபவிக்கிறார்கள். பிஜேபியுடன் சேராவிடினும், காங்கிரசை கழட்டி விட்டால், இனி வரும் பிரச்சனைகளில் இருந்தாவது தப்பலாம். 🤪

பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதி, இடைத்தேர்தலில், பணம் கொட்டும் சான்ஸ் இல்லை.... 😰

இந்த மேதாவிகள், கடுமையான தீர்ப்பினை கொடுக்க கூடிய, கண்டிப்பான நீதிபதியிடம் இருந்து, லஞ்சம் வாங்கி, விடுதலை தரக்கூடிய நீதிபதி அமரும் வேறு ஒரு நீதிமன்றுக்கு வழக்கினை மாத்தி, வென்றது மட்டுமல்லாது, அதிமுக ஊழல் கட்சி என்று வேறு உருட்டிக்கொண்டு இருந்தார்கள். 

உயர் நீதிமன்று, சுஜமாக இதனை எடுத்து விசாரிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த பின்னணியில்,  இப்போது, உச்ச நீதிமன்றில், கருணை கிடைக்க சந்தர்ப்பம் குறைவு.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கேவலம் இவர்கள் பொன்முடியிடம் தான் தங்கள் வீரத்தை காட்ட முடியும். animiertes-gefuehl-smilies-bild-0029.gif
முடிந்தால்...  கே.என் நேரு,  துரைமுருகன், டி.ஆர்.பாலு போன்றவர்கள்
மேல் கை வைக்க துணிவு இருக்கா. பயந்தாங் கொள்ளிகள். animiertes-gefuehl-smilies-bild-0048.gif animiertes-gefuehl-smilies-bild-0013.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இன்னும் ரெண்டு வழக்கு இவர் மேல இருக்குது.

ED raid கேஸ் இனித்தான்!

இவர் மட்டும் இல்லை….இதே போல் தாமாகவே உயர் நீதிமன்றம் வழக்கை மீள திறந்த சொத்து குவிப்பு கேசுகள் இன்னும் 3 திமுக அமைச்சர்கள் மீது பெண்டிங்.

தங்கம் தென்னரசு, ஐ பெரியசாமி, கே.கே.எஸ்.ஆர். இராமச்சந்திரன் ஆகியோர்.

19 minutes ago, தமிழ் சிறி said:

கேவலம் இவர்கள் பொன்முடியிடம் தான் தங்கள் வீரத்தை காட்ட முடியும். animiertes-gefuehl-smilies-bild-0029.gif
முடிந்தால்...  கே.என் நேரு,  துரைமுருகன், டி.ஆர்.பாலு போன்றவர்கள்
மேல் கை வைக்க துணிவு இருக்கா. பயந்தாங் கொள்ளிகள். animiertes-gefuehl-smilies-bild-0048.gif animiertes-gefuehl-smilies-bild-0013.gif

அப்படி கைவைத்தால்…ஆந்திராவே….சை…தமிழ் நாடே போர்க்களமாகும்🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

தி. மு. க வின் அர்த்தம் புரிய தொடங்கி. விட்டது. 😝

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, தமிழ் சிறி said:

கேவலம் இவர்கள் பொன்முடியிடம் தான் தங்கள் வீரத்தை காட்ட முடியும். animiertes-gefuehl-smilies-bild-0029.gif
முடிந்தால்...  கே.என் நேரு,  துரைமுருகன், டி.ஆர்.பாலு போன்றவர்கள்
மேல் கை வைக்க துணிவு இருக்கா. பயந்தாங் கொள்ளிகள். animiertes-gefuehl-smilies-bild-0048.gif animiertes-gefuehl-smilies-bild-0013.gif

கதலி வாழைப்பழம் பொன்முடிக்கே மூண்டு வருசமெண்டால்.....?
பெரிய பிலாப்பழங்களுக்கு எத்தினை வருசமெண்டு நினைக்கிறியள்?🤣

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

இவர் மட்டும் இல்லை….இதே போல் தாமாகவே உயர் நீதிமன்றம் வழக்கை மீள திறந்த சொத்து குவிப்பு கேசுகள் இன்னும் 3 திமுக அமைச்சர்கள் மீது பெண்டிங்.

தங்கம் தென்னரசு, ஐ பெரியசாமி, கே.கே.எஸ்.ஆர். இராமச்சந்திரன் ஆகியோர்.

அப்படி கைவைத்தால்…ஆந்திராவே….சை…தமிழ் நாடே போர்க்களமாகும்🤣

22 minutes ago, nunavilan said:

தி. மு. க வின் அர்த்தம் புரிய தொடங்கி. விட்டது. 😝

11 minutes ago, குமாரசாமி said:

கதலி வாழைப்பழம் பொன்முடிக்கே மூண்டு வருசமெண்டால்.....?
பெரிய பிலாப்பழங்களுக்கு எத்தினை வருசமெண்டு நினைக்கிறியள்?🤣

செந்தில் பாலாஜீக்கு புழல் சிறையில் பேச்சு துணைக்கு 
ஆட்கள் சேர்வது, மனதுக்கு ஆறுதலாக உள்ளது. animiertes-gefuehl-smilies-bild-0090.gif

ஸ்ராலின் ஐயா அவர்கள் அமைச்சரவையை... புழல் சிறைக்கு மாற்றுவதால்
நிர்வாகம் செய்யவும், கோப்புகள் தாமதிக்காமல் நகரவும் வசதியாக இருக்கும். animiertes-gefuehl-smilies-bild-0119.gif  

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கு ஒரு கோடி 60 லட்சத்திற்கு, தண்டனை 3 வருடம், 50 லட்சம்.

ஆனால், உதவி பேராசிரியராக தொடங்கிய இவர், 896 ஏக்கரில் 25 பெரிய கல்லூரிகளை வைத்திருக்கின்றார்.

அதன் மதிப்பு மட்டுமே 20,000 கோடி. 

5 கோடியை கடன் வாங்கி, இந்தோனேசிய சுரங்கம் ஒன்றில் முதலீடு செய்து, அடுத்த வருடமே, 100 கோடியாக திருப்பிக்கொண்டு வந்த வியாபார முதலை. 😤

ஒரு சில்லறை காசு அவரை பொறுத்த வரை பிச்சைக்காசு விசயத்தில் மாட்டிக்கிறாரு.

ஒரு தீபாவளிக்கு, வீட்டின் முன்னால் நிக்க, டீம்கா ஆட்கள் வரிசையாக வர, 2000 நோட்டு கொடுத்துக் கொண்டு இருக்கிறார். கையில் இருந்த காசு முடிய, உதவியாளர், இன்னோரு கட்டு கொடுக்கிறார். இவரும் தொடர்ந்து கொடுக்கிறார். அவ்வளவு பெரிய பொன் மனசு, பொன்முடிக்கு. 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன்முடி வழக்கின் தீர்ப்பு ஏற்படுத்தும் விளைவுகள்!

-சாவித்திரி கண்ணன்

1933408-hc1.jpg

திராவிட இயக்க சித்தாந்தத்தை கரைத்து குடித்தவர், சமூக நீதி குறித்த உரைவீச்சை மெய் சிலிர்க்க பேசுபவர்! மெத்த படித்தவர், ஒரு ஆசிரியரின் மகனாக எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்! ஆனால், ஆட்சி அதிகாரம் அவரை நிறைவடையவே இயலாத செல்வத் தேடலில் பொருளாதார குற்றவாளியாக்கியது;

செஞ்சி ராமச்சந்திரன் இவரை பட்டைதீட்டி இளம் தலைவராக கட்சித் தலைமைக்கு அடையாளம் காட்டினார்! ஆனால், கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் மாவட்ட திமுகவை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு புதிய இளம் தலைமுறையில் யாரும் மேலேழுந்து வர முடியாமல் குடும்ப அரசியல் செய்து கோலோச்சி வந்தவர் தான் பொன்முடி!

சூர்யா கல்வி குழுமம் என்ற பெயரில் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், பாலி டெக்குனிக்குகள்…என கல்வியை பெரு வணிகமாகக் கொண்டுள்ள ஒருவரை கல்வித் துறைக்கு அமைச்சராக நியமிப்பதே தார்மீக ரீதியில் மிகத் தவறான அணுகுமுறை!

kuzhumam.jpeg

2006 தொடங்கி 2011 வரையிலான பதவி காலத்திலேயே துணைவேந்தர் பதவி தொடங்கி பேராசிரியர்கள் பணியிடம் வரை அனைத்துக்கும் ‘ரேட்’ நிர்ணயித்து உயர்கல்வித் துறையை உயர்மட்ட லஞ்சத் துறையாக மாற்றிய பொன்முடியையே மீண்டும் அமைச்சராக்கி அழகு பார்த்தாரே ஸ்டாலின்…! கேட்பதற்கே நாதியில்லை என்ற எண்ணம் தானே!

எந்தத் துறைக்கு அமைச்சராக இருந்தாலும், அந்தத் துறையில் உச்சபட்ச கொள்ளையை நிகழ்த்துவது பொன்முடியின் வாடிக்கையாக ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கிறது! போக்குவரத்து துறைக்கு அமைச்சராக இருந்தார். அதை மேன்மேலும் சுரண்டி வழித்தெடுத்து நஷ்டத்தில் ஆழ்த்தி தன்னை வளப்படுத்திக் கொண்டார். கனிம வள அமைச்சராக இருந்த போது கனிம வளத்தை காப்பாற்றி பாதுகாப்பதை விடுத்து கடைவிரித்து களவாடினார். கல்வித் துறை அமைச்சரான பிறகு அதை கடைத்தேற்ற இயலாத அளவுக்கு கரப்ஷன், கலெக்‌ஷன் துறையாக்கிவிட்டார்!

அதிகார துஷ்பிரயோகம் என்பதை தன் பிறப்புரிமை போல பாவிப்பார்!

அத்துமீறி பொதுச் சொத்தை சூறையாடுவதை குற்றவுணர்வின்றி செய்வார்.

வழக்குகள் எத்தனை வந்தாலும் அவற்றை தகர்த்து தூள் தூளாக்குவார்!

இது வரை அவர் பாதையில் இடையூறுகள் எதுவும் நிரந்தரமாக இருந்ததில்லை.

விழுப்புரம், திண்டிவனம், மதுராந்தகம்..என வட தமிழகமெங்கும் விரிந்து பரந்த சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பி உள்ளார்!

அவர் வாங்கி குவித்துள்ள சொத்துக்களின் எண்ணிக்கை அவருக்கே ஞாபகம் இருக்குமா? என்பது சந்தேகமே!

இது தவிர எண்ணற்ற வியாபார நிறுவனங்கள்..!

இப்படிப்பட்டவர்களுக்கு பொதுச் சேவை குறித்த எண்ணம் எப்படி வரும்? அதற்கு நேரமும் அனுமதிக்காதே!’அரசியல் அதிகாரம்  என்பது சொத்துக்களை வாங்கி குவிப்பதற்கான ‘லைசென்ஸ்’ என்ற புரிதல் தான் இன்றைய அரசியல்வாதிகளுக்கு உள்ளது போலும்!

mini-ponmudi.jpg

1990 களில் சைதை ஸ்ரீ நகர் வடக்கு காலனியில் அரசுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை மாமியார் பெயருக்கு மாற்றி, அபகரித்து செய்த விவகாரம் 16 ஆண்டுகளாக கோர்ட்டில் பல கட்ட முன்னேற்றமும், பின்னேற்றமுமாக நகர்ந்தது! ஐ.ஏ.எஸ் அதிகார ராஜரத்தினம் உள்ளிட்ட 90 பேர் வரை சாட்சியம் சொன்ன அந்த வழக்கில் கடைசியாக இதே சென்னை உயர்நீதிமன்றம் அவரை விடுவித்தது!  நீதிபதி ஜெயவேல், ஆவணங்கள், சாட்சிகள் எதையும் கவனத்தில் கொள்ளாமல், ”குற்றச்சாட்டை அரசு தர்ப்பில் சரியாக நிருபிக்கவில்லை” எனக் கூறி விடுவித்த அதிசயமும் நடந்தது. இன்று வரை சைதைவாசிகள், ”இந்த அக்கிரமத்துக்கு தண்டனை இல்லாம போச்சே..” என அங்கலாய்ப்பது வழக்கம்.

1917003-ponmu-1.jpg

2006 முதல் 2011 வரையிலான கால கட்டத்தில், திமுகவின் உயர்கல்வித்துறை அமைச்சராக  பொறுப்பு வகித்த பொன்முடி மீது 2011ஆம் ஆண்டு ஊழல் வழக்கு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை காவல்துறை கண்காணிப்பாளர் கன்னியப்பன் என்பவரால் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக  தொடர்ந்த வழக்கின் தொடர்ச்சி தான் தற்போது பொன்முடிக்கு சிறை தண்டனை பெற்றுத் தந்துள்ளது.

அவ்வழக்கு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பின்னர் விழுப்புரம் ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதில் 37 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டனர். அரசு தரப்பு வழக்கறிஞர் சண்முக வேலாயுதம் போதுமான ஆதாரங்களை எடுத்து வைக்காமல் சொதப்பினார். ஐந்தாண்டு விசாரணை முடிவில் விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுந்தரமூர்த்தி  ஏப்ரல் 18-2016  பிறப்பித்துள்ள உத்தரவில், ’’குற்றச்சாட்டுகளை உறுதி செய்யத் தேவையான ஆதாரங்கள் இல்லை’’ என்று தெரிவித்து, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரையும் விடுவித்தார். இதில் தண்டனை வழங்கப்பட்டிருந்தால், அவர் தேர்தலில் நிற்கும் தகுதியை அன்றே இழந்திருப்பார். அதைத் தான் தற்போது மீண்டும் எடுத்து விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

கனிம வளத்துறை மந்திரியாக இருந்த போது தன் மகனுக்கு செம்மண் குவாரியில் மணல் அள்ள அதிகார துஷ்பிரயோகம் செய்தார். இதில் அவரது மகன் அனுமதிக்கப்பட்ட அளவையும் மீறி, 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரி செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக மற்றொரு வழக்கு இழுவையில் உள்ளது.

இது தொடர்பான சொத்து குவிப்பு வழக்கில் பல்லாண்டுகள் ஆட்டம் காண்பித்து, அழகாக தன்னை விடுவித்துக் கொண்டவர் தான் பொன்முடி! அதைத் தான் ஆனந்த் வெங்கடேசன் மீண்டும் தூசு தட்டி எடுத்தார். அந்த வழக்கை எந்த நீதிபதி விசாரிப்பது என்பதில் இன்னும் உயர் நீதிமன்றம் முடிவுக்கு வராமல் உள்ளது. இந்த வழக்கு 2002 ஆம் ஆண்டு போடப்பட்டதாகும். ஒரு தலைமுறை கடந்து போகும் இவ்வழக்கை எப்படியெப்படி எல்லாம் இழுத்தடிப்பது, சாட்சிகளை பிறழ் சாட்சிகளாக்குவது என்பதில் எல்லாம் சர்வ வல்லமை காட்டி, நீதித் துறையையே நிலைகுலைய வைத்தார் பொன்முடி! ஆனபோதிலும் விழுப்புரம் மாவட்ட மாஜிஸ்திரேட் மிக நேர்மையாக சபலத்திற்கு ஆளாகாமல் வழக்கை கையாண்டார்.

172 சாட்சிகளை விசாரித்து  381 ஆவணங்கள், தரவுகள் எல்லாவற்றையும் சரிபார்த்து தீர்ப்புக்கான தேதியை முடிவெடுக்கும் தருணத்தில், ஆளும் கட்சி என்ற அதிகார பலத்தை முழுவீச்சில் பயன்படுத்தி உயர் நீதிமன்றத்திற்கே அழுத்தம் தந்து – அந்த வழக்கில் தனக்கு தண்டனை உறுதி என்ற சூழலில் – வழக்கை விழுப்புரம் கோர்ட்டில் இருந்து வேலூர் கோர்ட்டுக்கு மாற்ற வைத்து தனக்கு சாதகமான தீர்ப்பை வாங்கினார்.

இந்த சூழலில் எம்பி, எம்.எல்.ஏக்கள் தொடர்பான ஊழல்களை விசாரிக்கும்  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை தானே வலிந்து எடுத்து விசாரிக்கத் துணிந்தார்! நீதிபரிபாலன முறையிலேயே தவறு நடந்துள்ளது என பகிரங்கப்படுத்தி, இந்த வழக்கை கையில் எடுத்தார். அவரை ‘கேரக்டர் அசாசினேஷன்’ செய்ய ஆளும்தரப்பு என்னென்னவோ திட்டங்களை தீட்டிப் பார்த்தது! ஆனால், நேர்மைக்கு இலக்கணமான நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அசரவில்லை.

screenshot28030-down-1703062180.jpg

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யும் வரை பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைத்திருப்பது என்பது அதிகார மேல்மட்டத்தில் இருப்பதால் பொன்முடிக்கு கிடைத்த சலுகையாகத் தான் கொள்ள வேண்டியுள்ளது! 21 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு கடும் முயற்சிக்கு பிறகு தீர்ப்பை உறுதிபடுத்த முடிந்தாலும் கூட – காலதாமதமாக வேணும் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது என்றாலும் கூட – அவர் சிறை செல்லாமல் இருக்க முடிவது என்பது நம் நாட்டு நீதிபரிபாலன முறையில் உள்ள கோளாறாகவே பார்க்க வேண்டியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் நீதியை பாரபட்சமின்றி அணுகும் நீதிபதி இதை எடுத்து விசாரிக்கும்பட்சத்தில் பொன்முடி தண்டனை உறுதியாகும்! அங்கும் அதிகார அழுத்தங்கள் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் தான் இவரது தண்டனை உறுதிப்படும்.

அப்படி பொன்முடி தண்டிக்கப்படும் பட்சத்திலாவது இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள் கொஞ்சம் தங்கள் குற்றங்களை, கொள்ளைகளை குறைத்துக் கொள்ள முடிந்தால், அதுவே இந்த தீர்ப்பினால் பொது மக்களுக்கு விளைந்த உண்மையான நன்மையாக இருக்கும். இத்துடன் முன்னாள் அதிமுக அதிகார மையங்களின் வழக்கும் வேகம் பெற்று தீர்ப்புகள் வரட்டும். இந்த ஆட்சியிலேயே பொன்முடியை விஞ்சும் அளவுக்கு ஊழல் செய்பவர்கள் மீதும் வழக்குகள் பாயட்டும். இவை நடப்பதற்கு இது ஆரம்பமாக இருக்கட்டும்.

இந்த வழக்கின் மேல்முறையீட்டில் பொன்முடிக்கு தண்டனை உறுதியாகும் பட்சத்தில், 2024க்கு பிறகு திமுகவின் அரசியலே திசைமாறலாம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/16090/ponmudy-convicted-h-c/

  • கருத்துக்கள உறவுகள்

பணம் பாதாளம் வரை போகும்.

பேரம் பேசலுக்காக ஒரு மாத தவணை.

முடிவில் விடுதலையாகலாம்.

சுபம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/12/2023 at 09:03, கிருபன் said:

தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமன்.

திமுக ஆட்சிக்கு வந்ததும், எப்படி வழக்குகளை இடம் மாற்றி, அரச வக்கீலை கேனைத்தனமான வாதங்களை எடுத்து வைக்க செய்து, ஆதாரங்களை மழுங்கடித்து, சாட்சிகள் சாகும் வரை கூட இழுத்தடித்து தப்பி உள்ளார் என்பதை கட்டுரை அழகாக விபரிக்கிறது.

இதே போல் ஒரு கேவலத்தைதான் அண்மையில் சீமான்-திமுக டீலின் பின், விஜயலட்சுமி வழக்கிலும் செய்தார்கள்.

சீமான் விடயத்தில் எடப்பாடி, ஸ்டாலின் இரு அரசுகளும் மிக அப்பட்டமாக வழக்கை பொலிஸ், அரச வழக்கறிஞர்களை கொண்டு - வலுவற்ற, ஆதாரமற்ற வழக்காக மாற்றினார்கள்.

On 23/12/2023 at 14:24, ஈழப்பிரியன் said:

பணம் பாதாளம் வரை போகும்.

பேரம் பேசலுக்காக ஒரு மாத தவணை.

முடிவில் விடுதலையாகலாம்.

சுபம்.

நீதிபதி வெங்கடேசன் கொஞ்சம் நியாயமானவராக தெரிகிறார்.

ஆனால் பட்டையோடு இருக்கும் அவர் போட்டோ, அநேகமாக திமுகவின் ஊழலை மட்டும் நோண்டுவது (சீமான்-திமுக டீல் வழக்கை நூத்தவரும் இவரே என நினைக்கிறேன்) இவர் சங்கி ஏஜெண்டோ என நினைக்க வைப்பதும் உண்மை.

பிஜேபி யோடு கூட்டணி வைக்காவிடிலும், நிதிஷ் குமார் பிரச்சினை போன்றவற்றை வைத்து திமுக இந்தியா கூட்டணியில் இருந்து வெளிவரக்கூடும்.

அப்போ பொன்முடியும், பாலாஜியும் வெளி வரக்கூடும். நீதிபதியும் முன்னைபோல அமைதியாகி விடக்கூடும்.

அன்னா ஹசாரே ஊழலை எதிர்கிறேன் என ஆரம்பித்து, அப்படியே ஆர் எஸ் எஸ் சில் கொண்டு போய் முடித்தது நினைவுக்கு வருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.