Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழன்பன் said:

பெரிதாக ஒன்றையும் தரமாட்டார்கள் தான், ஆனால் தமிழர் விடயத்தில் பிக்குகள் இப்பவுமே மிதவாத போக்கில் இருக்கின்றார்கள் என்பதை வெளிக்காட்டி , அரசாங்கத்தை நெருக்கவேண்டும் அதாவது தமிழர் உரிமைக்கும் சிங்கள இனவாதத்துக்கும் என்ன சம்பந்தம் என்பதை உலகிற்கு வெளிக்கொணரலாம் .

உண்மையை சொல்லப்போனால் சரியான ராஜதந்திரம் என்பது எம்மிடம் இல்லை. இந்தியா கொண்டு வந்த 13 இணை கூட சிங்களம் மறுக்கின்றது. நாமும் இன்னொரு வழியில் இந்தியாவை இதுக்குள் கொண்டு வரவேண்டும் . சுரேனுக்கு அந்த திறமை இருக்குமா தெரியவில்லை . முயலலாமே 

சுரேனுக்கு அந்த தகுதி கிடையாது என்பதை அடித்துக் கூறமுடியும்...சுரேன்  அப்படியான் செல்வாக்கை தான் இருக்கும் நாட்டில்கூட நிரூபிக்க முடியாது...இது ஒரு வெளிவேசம் போட்டு தமிழர் இருப்பை புலம்பெயர் தேசத்தில் இல்லாமல் ஆக்கும் செயல்.....முதலில்  இவர் தாயகத்தில் உள்ள அமைப்புக்களுடன் பேசியபின்பே...இதில் ஈடுபட்டிருக்க வேண்டும்... பிக்குமார் இவரின் வீக்பாயிண்ட் அறிந்து காய் நர்த்துவது கண்கூடாகத் தெரிகிறது.... இதை முதலில் சரிசெய்யாமல்...இனத்தின் சார்பில் கைநாட்டுப்போட இவருக்கு யார் உரிமை கொடுத்தது..

  • Replies 148
  • Views 11.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் எனப்படுவோர் தமது பிள்ளைகளை தேடுவது என்ற கோரிக்கையை மட்டும் எழுப்புவதும் அதற்காக மட்டும் போராடுவதுமே  ஶ்ரீலங்கா அரசுக்கு காத்திரமான அழுத்தத்தைக் கொடுக்கும். அதை வ

  • பகிடி
    பகிடி

    இலங்கையில் உள்ள பல தமிழர்களுக்கு புலம் பெயர் தமிழர்களின் பலம் பற்றிய அதீத கற்பனை உண்டு. ஆனால் நடைமுறை உண்மையோ வேறு.இன்னும் பத்து ஆண்டுகளில் புலம் பெயர் தமிழர்களிடம் இருக்கும் குறைந்த பட்ச பலமும் முடிவ

  • வணக்கம், முதலில் இதில் என்ன இருக்கிறது என இந்த இமாலய பிரகடனத்துக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து, சமஸ்டி தீர்வின் முதல் படி என இதை கருத முடியும் என விளங்கப்படுத்த முடியுமா? இமாலய பிரகடனத்த

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இமாலய பிரகடனம் “13ஐ முழுமையாக அமல்படுத்துவோம்” என கூறி இருந்தால் நீங்கள் மேலே சொன்னது சரி.

ஆனால் தமிழர்களோடு கதைத்து விட்டார்கள் - கதைத்ததே பெரிய முன்னேற்றம் - ஆகா பார்த்தீர்களா பிக்குகள் மிதவாதிகள் ஆகி விட்டார்கள் என நாம் சொன்னால், அதை யாரும் நம்பபோவதில்லை. இலங்கை தமிழருக்கு நியாயமான தீர்வை தராது - என்பதற்கு எதுவுமே இல்லாத இமாலய பிரகடனமே அண்மைய சாட்சி.

பிக்குகளுடன் 2 வருடம் பேசினேன் - அவர்கள் 87இல் தருவதாக சொன்னதை கூட தரவில்லை. 

உண்மையில் சுரேன் இதைத்தான் வெளி நாடுகளுக்கு சொல்ல வேண்டும்.

நேரடியாக பிக்குகளுடன் பேசி எமக்கு ஒரு நியாயமான தீர்வை எடுக்கும் திறமை….

சுரேனுக்கு அல்ல….தலைவருக்கே இருந்ததில்லை.

ஏன் என்றால்….பிக்குகள் டிசைன் அப்படி.

அதனால்தான் தலைவர் பலமாக இருந்த போது கூட இதை முயலவில்லை.

முயற்சி திருவினையாக்கும் என்பதால்….வீட்டு முற்றத்தில் நிண்டு எம்பி, எம்பி குதித்தால் ஒருநாள் பறக்க ஆரம்பித்து விடுவோம் என வீணாக முயலக்கூடாது.

ஒரு முயற்சி எடுக்கும் போது அதில் ஒரு realistic prospect of success இருக்க வேண்டும்.

மன்னிக்கவும் கோசான்ஜி...இதை யழ்களத்தில் உள்ள.சுரேனின்...பேச்சாளருக்கு சமர்ப்பிக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, alvayan said:

சுரேனுக்கு அந்த தகுதி கிடையாது என்பதை அடித்துக் கூறமுடியும்...சுரேன்  அப்படியான் செல்வாக்கை தான் இருக்கும் நாட்டில்கூட நிரூபிக்க முடியாது...இது ஒரு வெளிவேசம் போட்டு தமிழர் இருப்பை புலம்பெயர் தேசத்தில் இல்லாமல் ஆக்கும் செயல்.....முதலில்  இவர் தாயகத்தில் உள்ள அமைப்புக்களுடன் பேசியபின்பே...இதில் ஈடுபட்டிருக்க வேண்டும்... பிக்குமார் இவரின் வீக்பாயிண்ட் அறிந்து காய் நர்த்துவது கண்கூடாகத் தெரிகிறது.... இதை முதலில் சரிசெய்யாமல்...இனத்தின் சார்பில் கைநாட்டுப்போட இவருக்கு யார் உரிமை கொடுத்தது..

ஆமாம் உங்கள்  கருத்தினை ஆமோதிக்கிறேன் , முதலில் இவர் யாழ் சென்று பல்கலைக்கழகம் மற்றும் சமூக அமைப்புகள் , தமிழ் அரசியல்வாதிகள் என எல்லாரையும் இணைத்து என்ன விடயங்களை நாம் வைக்க வேண்டும் எதனை மறுக்க வேண்டும் என ஒரு குழு முயற்ச்சியாக இதனை செய்திருக்க வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

அல்பிறட் துரையப்பா வுக்கு வெடி விழ முன்னரே நாட்டை விட்டு ஓடிய உங்களுக்கு உள்ள  உரிமைதான் சுரேன்  சுரேந்திரனுக்கு இருக்கிறது . 

என்ன,..  சுரேன்  குழுவினர் ஏதோ செய்ய முயல்கின்றனர். தாங்களோ ...... 🤨

17 minutes ago, தமிழன்பன் said:

ஆமாம் உங்கள்  கருத்தினை ஆமோதிக்கிறேன் , முதலில் இவர் யாழ் சென்று பல்கலைக்கழகம் மற்றும் சமூக அமைப்புகள் , தமிழ் அரசியல்வாதிகள் என எல்லாரையும் இணைத்து என்ன விடயங்களை நாம் வைக்க வேண்டும் எதனை மறுக்க வேண்டும் என ஒரு குழு முயற்ச்சியாக இதனை செய்திருக்க வேண்டும் .

தமிழர் தரப்பு வரலாற்றில் என்றுமே ஒன்றாக  இருந்ததில்லை. நிலைமை அப்படி  இருக்கையில் எல்லோரையும் இணைப்பது என்பது சாத்தியமா? 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, alvayan said:

மன்னிக்கவும் கோசான்ஜி...இதை யழ்களத்தில் உள்ள.சுரேனின்...பேச்சாளருக்கு சமர்ப்பிக்கலாமா?

தாங்கள் துடிக்கும்  துடிப்பைப் பார்த்தால்  தாங்கள் கனடாவில் விபு சார்பாக காசு சேர்த்த ஆளாக இருக்குமோ என்று எனக்கு ஒரு சந்தேகம்,.....

ஏனென்றால் தமிழருக்கு யார் யார் எல்லாம்   தலைமை தாங்கக் கூடாது என்பதில் அவ்வளவு தீவிரமாக இருக்கிறீர்கள்.  😀

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

அல்பிறட் துரையப்பா வுக்கு வெடி விழ முன்னரே நாட்டை விட்டு ஓடிய உங்களுக்கு உள்ள  உரிமைதான் சுரேன்  சுரேந்திரனுக்கு இருக்கிறது . 

தமிழர் தரப்பு வரலாற்றில் என்றுமே ஒன்றாக  இருந்ததில்லை. நிலைமை அப்படி  இருக்கையில் எல்லோரையும் இணைப்பது என்பது சாத்தியமா? 

ஓஓ வந்திட்டார்  அன்டன் பாலசிங்க... இவரிடம் நம்ம ஜாதகம்போனால்...காணும்....இப்ப துரையப்பா கணக்குகு வந்திட்டார்...வருசக் கடைசி ..போனசும் முடிஞ்சிருக்கும் ..அடுத்த வருச கோட்ட வரும்வரைக்கும் கூவத்தானே வேண்டும் ...எதுவோ கூவின்னல் வருசக்கடைசியில் சிவாஸ்றீகல் கொடுக்கிறவையாம்...போய் லைனில் நில்லுங்கோ...உங்கடை ஓலையும் எமக்கு தெரியும்

2 minutes ago, Kapithan said:

தாங்கள் துடிக்கும்  துடிப்பைப் பார்த்தால்  தாங்கள் கனடாவில் விபு சார்பாக காசு சேர்த்த ஆளாக இருக்குமோ என்று எனக்கு ஒரு சந்தேகம்,.....

ஏனென்றால் தமிழருக்கு யார் யார் எல்லாம்   தலைமை தாங்கக் கூடாது என்பதில் அவ்வளவு தீவிரமாக இருக்கிறீர்கள்.  😀

அது பரவாயில்லைய்யே..தமிழனை..தமிழினத்தை அழிக்கிற  துரோகியாக இருப்பதைவிட...இது எப்படியிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, alvayan said:

ஓஓ வந்திட்டார்  அன்டன் பாலசிங்க... இவரிடம் நம்ம ஜாதகம்போனால்...காணும்....இப்ப துரையப்பா கணக்குகு வந்திட்டார்...வருசக் கடைசி ..போனசும் முடிஞ்சிருக்கும் ..அடுத்த வருச கோட்ட வரும்வரைக்கும் கூவத்தானே வேண்டும் ...எதுவோ கூவின்னல் வருசக்கடைசியில் சிவாஸ்றீகல் கொடுக்கிறவையாம்...போய் லைனில் நில்லுங்கோ...உங்கடை ஓலையும் எமக்கு தெரியும்

தங்களிடம் இருந்து நியாயமான  பதிலை எதிர்பார்த்தால் அது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போலாகும். 

😉

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

தங்களிடம் இருந்து நியாயமான  பதிலை எதிர்பார்த்தால் அது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போலாகும். 

😉

ஓ ..அதுதான் அரசங்கத்தோடை சேர்ந்து இந்த நல்ல தொழில் செய்யிறீயளோ..  ..

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

இமாலய பிரகடனத்தில் இப்போ இலங்கயில் சட்டத்தில் இல்லாத எதுவும் இல்லை. இருக்கும் இலங்கை சட்டத்தை சரியாக நடைமுறைபடுத்தி, இலங்கையராக அனைவரும் ஒரு புதிய நாட்டை (ஒற்றையாட்சி) நிர்மாணிக்கவே அது அழைக்கிறது.

இங்கே ஒரு விடயம் மிக முக்கியமானது 

இருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், தமிழர்கள் இலங்கை நீதி துறையிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என்பதை மயிலத்தமடுவும், வெடுக்குநாறியும், கைதடியும், நாவற்குழியும், இன்னும் பலவும் காட்டி நிற்கும் போது - இந்த நிலையை ஒரு நொடியில் மாற்றும் அதிகாரம் இலங்கைக்கு இருந்தும், அரசும், நீதிமன்றும் எதுவும் செய்யாமல் இருக்கும் போது - சும்மா ஒரு பேப்பரில், ஒரு பிரகடனத்தை எழுதி அதை பிக்குகள் ஏற்பதால் என்ன முனேற்றம் வந்து விடப்போகிறது.

யோசிக்கவும் - ஒரு விடயத்தை எந்த எதிர்ப்பும் இன்றி ஒட்டு மொத்த இலங்கை பெளத்த சங்கமும் ஏற்கிறது எனில் - அதில் தமிழருக்கு ஒரு சொட்டு நல்லது கூட இல்லை, சிங்களவர் நலன் ஒரு அங்குலம் கூட விட்டு கொடுக்கப்படவில்லை 

உங்கள் நேரத்துக்கு நன்றி

…......…..................... ....................

இங்கே எழுதப்பட்ட எழுத்துக்களை பார்த்தபோது

சுரேன் செய்வது விசர் வேலை

அதை தடுக்க வேண்டும்

ஆனால் அதை யாரும் செய்யக்கூடாது. ( சம்பந்தர் சுமந்திரன் கஜேந்திரகுமார் காணாமல் போன பிள்ளைகளின் பெற்றார் உட்பட)

அப்படியானால் சுரேன் ஆடட்டும்? தடுக்கக்கூடாது?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழன்பன் said:

அந்த முயற்சியில் இறங்குவதில் என்ன தப்பை காண்கிறீர்கள் . இதை தான் சொல்வது தானும் படாது தள்ளியும் படாது என்று. 

என்ன தப்பா??? இலங்கையில் தமிழர்களின் பிரச்சனைகள் தீர்வுக்கு  இங்கே கருத்துகள் எழுதும் எவராலும் எந்தவொரு பாதிப்புமில்லை   ஏனெனில் அவர்கள் அதிகாரம் அற்றவர்கள்  பேச்சுவார்த்தையில் பங்குபற்றதாவர்கள்  பங்குபற்றப்போவதுமில்லை ...  அடுத்து  எந்தவொரு பேச்சுவார்த்தையிலும். ஈடுபடும் இருதரப்பாரும் அல்லது இரண்டுக்கு மேற்பட்ட தரப்புகளும்  ஒரே நோக்கத்துடன் பேச வேண்டும்  இங்கே சுரேன் நோக்கம் வேறு   பிக்குமாரின் நோக்கம் வேறு  இவ்வாறு வெவ்வேறு நோக்கம்கள் கொண்டவர்கள்  பேச எடுத்து கொண்ட விடயம்  தமிழர்கள் பிரச்சனை  அதில் முதல்படி வெற்றிகரமாக பேசி முடிந்து விட்டார்கள்   அதாவது  புலம்பெயர் தமிழர்கள்  என்பதில் உள்ள தமிழர்கள் என்பதை தூக்கி ஏறிந்துவிட்டு  புலம்பெயர் இலங்கையர்  என்று அழைப்பது. இது பூரணமாக  நடைமுறைப்படுத்தப்படுகின்றபோது  தமிழர்கள் பிரச்சனை தீர்ந்து விடும்   நாங்கள் தள்ளி படுத்துக்கொள்ளலாம் 🤣😂

3 hours ago, alvayan said:

சுரேனுக்கு அந்த தகுதி கிடையாது என்பதை அடித்துக் கூறமுடியும்...சுரேன்  அப்படியான் செல்வாக்கை தான் இருக்கும் நாட்டில்கூட நிரூபிக்க முடியாது...இது ஒரு வெளிவேசம் போட்டு தமிழர் இருப்பை புலம்பெயர் தேசத்தில் இல்லாமல் ஆக்கும் செயல்.....முதலில்  இவர் தாயகத்தில் உள்ள அமைப்புக்களுடன் பேசியபின்பே...இதில் ஈடுபட்டிருக்க வேண்டும்... பிக்குமார் இவரின் வீக்பாயிண்ட் அறிந்து காய் நர்த்துவது கண்கூடாகத் தெரிகிறது.... இதை முதலில் சரிசெய்யாமல்...இனத்தின் சார்பில் கைநாட்டுப்போட இவருக்கு யார் உரிமை கொடுத்தது..

ஆமாம் நிச்சயமாக ரொம்ப சரியான உறுதியான கருத்துகள்  

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழர் பேரவையின் இந்த முயற்சி ஒரு பேச்சுவார்ததையாகவோ இது தான் இறுதியானதாகவோ இருக்க போவதில்லை. பார்ரக்கும் எவருக்கும் தெளிவாக தெரியும் உண்மை இது.  இது ஒரு முன்னோடி நடவடிக்கையாகவே இருக்கும். ஆகவே  அவர்களை அங்குள்ள பலவேறு தமிழ்த் தரப்புகளும் கட்சிகளும் ஒரு நட்புறவான சந்திப்பை நிகழ்த்தி அவர்களின் பிரகடனத்தில் உள்ள பலவீனங்களை சுட்டிக்காட்டியிருக்கலாம். அவர்களை எமது விரோதிகள் துரோகிகள் என்ற ரேஞ்சுக்குக்கு  வெறுப்புப்பிரச்சாரம் செய்து ஏற்கனவே முந்திய தலைமுறை செய்த தவறை தொடர்ந்து செய்ய வேண்டியதில்லை. 

 எனது கருத்து தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் அரசியல் செய்வதாக கூறிக் கொள்ளும் எல்லாத் தமிழ் அமைப்புகளும் இவ்வாறாக சிங்கள மக்களிடையே உள்ள பல்வேறு பொது அமைப்புக்கள், சமூக அமைப்புக்கள், மத அமைப்புகள், பெண்கள் அமைப்புக்கள்  கட்சிகள் என  அடிக்கடி  சந்தித்து தொடர்சசியாக எமது பிரச்சனைகள் குறித்த விளக்கங்களையும் எமது தரப்பின் நியாயங்களையும், பேரினவாத அரசுகளின் நடவடிக்கைகள் குறித்த பட்டறிவுகள், எமது அச்சங்கள் குறித்து   எடுத்து கூறுவதும் அவர்களுடன் தொடர்புகளை பேணிக்கொள்வதும் இரு தரப்பு நல்லுறவை அதிகரித்து ஒருவரை ஒருவர் நம்பிக்கை கோள்ளும் நிலையை ஏற்படுத்தி,   எதிர்காலத்தில் (அது நாம் அனைவரும் இந்த உலகில் வாழாத காலமாகவும் இருக்கலாம்)  ஒரு நியாயமான அரசியல் தீர்வை அப்போது வாழப் போகும் இருதரப்பு மக்களும்  உருவாக்க உதவியாக இருக்கும்.

இது ஒன்றே அடுத்த தலைமுறை  மக்களுக்கு இப்போது வாழ்பவர்கள் செய்யக்கூடிய ஆகக் கூடிய உதவியாக இருக்கும்.   அதை கூட செய்யாமல் எமது தனிப்பட்ட பழைய  கோபங்கள் , ஈகோ,  சுயநலம், அரசியல் வியாபாரம் போன்ற காரணங்களுக்காக வெறுப்பையும் விரோதத்தையும் இலங்கையில் வாழும் இரு மொழி பேசும் மக்களிடமும் விதைப்பதையே செய்வோம் என்றால்  அந்த பக்கா அயோக்கியத்தனத்துக்கு பலியாகப் போவது இலங்கையில் வாழப் போகும்  குறிப்பாக தமிழ் மக்களே ஆகும். 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

உங்கள் நேரத்துக்கு நன்றி

…......…..................... ....................

இங்கே எழுதப்பட்ட எழுத்துக்களை பார்த்தபோது

சுரேன் செய்வது விசர் வேலை

அதை தடுக்க வேண்டும்

ஆனால் அதை யாரும் செய்யக்கூடாது. ( சம்பந்தர் சுமந்திரன் கஜேந்திரகுமார் காணாமல் போன பிள்ளைகளின் பெற்றார் உட்பட)

அப்படியானால் சுரேன் ஆடட்டும்? தடுக்கக்கூடாது?

எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் நாம் இருப்பதால் - எதையும் தின்றுவிடக்கூடாது.

சுரேன் செய்வது = இப்போ இருக்கும் நிலையில் இருந்து 1 இஞ்சி கூட முன்நகராத நிலை மட்டும் அல்ல, 1987 இல் தந்ததை கூட பிடுங்கி கொள்ளும் நிலைக்கு இட்டு போகும் என்பதை மிகதெளிவாக உணர்ந்த பின் அதை எப்படி ஆதரிக்க முடியும்?

சுரேன் செய்வதை சம்பந்தர் செய்தாலும் தவறுதான். ஆனால் இப்போதும் பேச்சளவிலாவது சம்பந்தரும், சுமந்திரனும் 13+ என்கிரார்கள்.

சுரேன் அதை கூட கேட்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

உலகத் தமிழர் பேரவையின் இந்த முயற்சி ஒரு பேச்சுவார்ததையாகவோ இது தான் இறுதியானதாகவோ இருக்க போவதில்லை. பார்ரக்கும் எவருக்கும் தெளிவாக தெரியும் உண்மை இது.  இது ஒரு முன்னோடி நடவடிக்கையாகவே இருக்கும். ஆகவே  அவர்களை அங்குள்ள பலவேறு தமிழ்த் தரப்புகளும் கட்சிகளும் ஒரு நட்புறவான சந்திப்பை நிகழ்த்தி அவர்களின் பிரகடனத்தில் உள்ள பலவீனங்களை சுட்டிக்காட்டியிருக்கலாம். அவர்களை எமது விரோதிகள் துரோகிகள் என்ற ரேஞ்சுக்குக்கு  வெறுப்புப்பிரச்சாரம் செய்து ஏற்கனவே முந்திய தலைமுறை செய்த தவறை தொடர்ந்து செய்ய வேண்டியதில்லை. 

இவர்கள் என்ன அங்கே வாழும் மக்களின் ஆண்டான்களா?

தமிழருடனான நட்புறவான சந்திப்பை அல்லவா சகலதுக்கும் முன் இவர்கள் செய்திருக்க வேண்டும். 

அதை இவர்கள் செய்யாமல் - அத்தனை கெடுபிடிக்கும் மத்தியில் உறுதியாக போராடும் மக்களை ஒரு சொல் கேட்காமல், அவர்கள் தலைகளுக்கு மேலால் இவர்கள் பேரம் பேசினால் - கோவம் வரத்தான் செய்யும்.

அங்கே சிவில் சமூகம் உள்ளது. கட்சிகள் உள்ளன. போய் சந்திப்புகளை மேற்கொண்டு விட்டு, ஒருமித்த கருத்தோடு பிக்குகளை போய் சந்திதல்லவா இருக்க வேண்டும்.

2009 ற்கு பின்னும் பல தேர்தல்களில் மக்கள் தமது அபிலாசையை தெளிவாக புலப்படுத்திய பின்னும், அதை புறம்தள்ளி நடக்க இவர்களுக்கு என்ன தார்மீக உரிமை உள்ளது.

இவர்களுக்கு புலம்பெயர் தனிழர் மத்தியிலாவது ஆதரவு உள்ளதா? 2009 இல் யுத்த எதிர்ப்பை ஒருங்கிணைத்த போது இருந்தது - ஆனால் இப்போ?

யாரைய்யா இவர்கள், எமது மக்கள் சார்பாக பேச?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

எனது கருத்து தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் அரசியல் செய்வதாக கூறிக் கொள்ளும் எல்லாத் தமிழ் அமைப்புகளும் இவ்வாறாக சிங்கள மக்களிடையே உள்ள பல்வேறு பொது அமைப்புக்கள், சமூக அமைப்புக்கள், மத அமைப்புகள், பெண்கள் அமைப்புக்கள்  கட்சிகள் என  அடிக்கடி  சந்தித்து தொடர்சசியாக எமது பிரச்சனைகள் குறித்த விளக்கங்களையும் எமது தரப்பின் நியாயங்களையும், பேரினவாத அரசுகளின் நடவடிக்கைகள் குறித்த பட்டறிவுகள், எமது அச்சங்கள் குறித்து   எடுத்து கூறுவதும் அவர்களுடன் தொடர்புகளை பேணிக்கொள்வதும் இரு தரப்பு நல்லுறவை அதிகரித்து ஒருவரை ஒருவர் நம்பிக்கை கோள்ளும் நிலையை ஏற்படுத்தி,   எதிர்காலத்தில் (அது நாம் அனைவரும் இந்த உலகில் வாழாத காலமாகவும் இருக்கலாம்)  ஒரு நியாயமான அரசியல் தீர்வை அப்போது வாழப் போகும் இருதரப்பு மக்களும்  உருவாக்க உதவியாக இருக்கும்

நீங்கள் மேலே சொன்ன விடயத்தை அல்ல சுரேன் செய்கிறார்.

அவர்கள் சிங்கள சிவில் சமூகத்துக்கு எமது கோரிக்கைகள், அதன் நியாயப்பாடுகள் பற்றி எதையும் எடுத்து சொல்லவில்லை. மாறாக அவர்களின் அதிகார மையத்துடன் பேரம் பேசுகிறார்கள்.

இரெண்டும் ஒன்றல்ல.

1 hour ago, island said:

இது ஒன்றே அடுத்த தலைமுறை  மக்களுக்கு இப்போது வாழ்பவர்கள் செய்யக்கூடிய ஆகக் கூடிய உதவியாக இருக்கும்.   அதை கூட செய்யாமல் எமது தனிப்பட்ட பழைய  கோபங்கள் , ஈகோ,  சுயநலம், அரசியல் வியாபாரம் போன்ற காரணங்களுக்காக வெறுப்பையும் விரோதத்தையும் இலங்கையில் வாழும் இரு மொழி பேசும் மக்களிடமும் விதைப்பதையே செய்வோம் என்றால்  அந்த பக்கா அயோக்கியத்தனத்துக்கு பலியாகப் போவது இலங்கையில் வாழப் போகும்  குறிப்பாக தமிழ் மக்களே ஆகும். 

இங்கே யாரும் வெறுப்பை விதைக்கவில்லை.

ஆனால் எதையும் பெற்று கொள்ளாமல் - 87இல் தந்ததையும் இழந்து அதன் விலையாக ஒரு “அமைதியை” பெறுவதுதான் எமது இலக்கு என்றால் - அதை அடைய சுரேனும் தேவையில்லை, சுமனும் தேவையில்லை.

சும்மா இருந்தாலே போதும்.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

நீங்கள் மேலே சொன்ன விடயத்தை அல்ல சுரேன் செய்கிறார்.

அவர்கள் சிங்கள சிவில் சமூகத்துக்கு எமது கோரிக்கைகள், அதன் நியாயப்பாடுகள் பற்றி எதையும் எடுத்து சொல்லவில்லை. மாறாக அவர்களின் அதிகார மையத்துடன் பேரம் பேசுகிறார்கள்.

இரெண்டும் ஒன்றல்ல.

வணக்கம்  கோஷான். நான் எழுதுயது சுரேன் போன்றவர்களுக்கு வக்காலத்து வாங்க அல்ல.  தாயகத்தில் ஆயுதப் போராட்டம் நடந்த காலத்தில் தாயக தலமையுடன் உரிமையுடன் தொடர்புகளை பேணிய இவர்கள்  உலக அரசியல் போக்குகள் குறித்த விடயங்கள், பலம் வாய்ந்த நாடுகளின் நிலைப்பாடுகள் போன்ற விடயங்களில் தாயக தலைமைக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி தாயக அரசியல் நிலைப்பாடுகள், தந்திரோங்களை நெறிப்படுத்தி தந்திரோபாய அரசியல் நகர்வுகளை தாயக தலைமை எடுக்க வைக்க  வேண்டிய கடப்பாடு  இருந்தும்   அதைச் செய்யாமல் ஆயுத போரை மட்டுமே நம்பி அதை ஊக்குவித்து   மெளனமாக இருந்து  இன்றய நிலைக்கு காரணமானதில்  இந்த அமைப்புக்கும் பங்கு உள்ளது  என்பது எனது கருத்து.  

ஆனால், இதுவரையான 14 வருடங்களில் தாயகத்தில் மற்றும் புலம் பெயர் நாடுகளில் அரசியல் செய்துவரும்,  நீங்கள் கூறியது போன்ற மக்கள் ஆதரவுடன் இருக்கும் அமைப்புக்கள்/ கட்சிகள்  இந்த பிரச்சனையையை முன்னகர்தத இதை போன்ற முன்மாதிரியை முன்னரே  உபயோகித்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் சுரேனின் நடவடிக்கைகளை  அரசியல் ரீதியில் தடுத்து நிறுத்தி இருக்கலாம்.  அதன் பெயர் பேச்சுவார்ததையோ அரசியல் தீர்வோ அல்ல. அது மிக எளிதாக விரைவாக நடக்கும் என்று நினைக்கும் அளவுக்கு எமது அரசியல் நிலை இப்போது இல்லை.   அரசியல் தீர்வை காணும் வலு இன்று இயங்கும் எந்த அமைப்புக்கு இல்லை என்பது வெள்ளிடை மலை.  இனவாதிகளை விடுங்கள். இரு பக்கதிலும் உள்ள மக்களுக்கு இடையிலான இடைவெளிகள், நம்பிக்கையீனங்களை களைந்து அரசியல் தீர்வு  நோக்கிய பயணத்தையாவது ஆரம்பித்து வைக்க தாயக, புலம் பெயர் அரசியல் அமைப்புகள்  இப்போதாவது  ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முன்னோடி யாக இந்த தந்திரோபயத்தை  நடைமுறை சாத்தியமாக மேம்படுத்தி உபயோகிக்கலாம்.   சிங்கள மக்கள் அமைப்புகளுடன் நல்லுறவை பேணி சந்திப்புக்களைஆரம்பிக்கலாம் என்பது எனது கருத்து.  வெளி நாடுகளில் என்னதான் அரசியல் செய்தாலும் எந்த நாடும் அதை செய்யுமாறே எம்மை வலியுறுத்தும்.  அவ்வாறான  நடவடிக்கைக்கே ஆதரவாக இருக்கும். 

எமது தமிழ் அரசியலில் நல்ல பிள்ளை பெயரெடுக்க வேண்டுமானால் யோகர் சுவாமி கூறியது போல் “சும்மா இரு” என்பதே உகந்தது.  அனால் ஒரு  சிறிய மாற்றம்,  வெற்று வீர வசன அறிக்கைகளை மட்டும் வெளியிடுவதுடன் கூடவே  தமிழ் அரசியல் முகநூல்,  இணையத்தள அரசியல்  தாதாகளுக்களுடன்  நல்லுறவையும்  பேணியபடி “சும்மா இரு”   என்ற கோட்பாடே  நல்ல பிள்ளை பெயரெடுக்க உகந்த கோட்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, island said:

“சும்மா இரு”   என்ற கோட்பாடே  நல்ல பிள்ளை பெயரெடுக்க உகந்த கோட்பாடு.

15 வருடங்கள் சும்மா இருந்ததால் ஒரு தலைமுறையை சும்மா இருக்க பழக்கி விட்டோம். இன்னும் ஒரு 15 வருடங்கள் சும்மா இருந்தால் 3 தலைமுறை சும்மா இருக்க பழகிய எந்த இனமும் மீண்டும் எழாது இயங்காது

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, alvayan said:

ஓ ..அதுதான் அரசங்கத்தோடை சேர்ந்து இந்த நல்ல தொழில் செய்யிறீயளோ..  ..

அல்வாயன், உங்கள் விருப்பம்போல என்னை அரசின் ஏவலாளாகவே வைத்துக்கொள்ளுங்கள். 

ஆனால், எடுக்கப்படும் எந்த முயற்சிக்கும் ஒன்று  நந்தி போல குறுக்கே நிற்கிறீர்கள் அல்லது வைக்கோல் பட்டடை ......போல தாங்களும் ஒன்றும் செய்வதில்லை ஏதாவது செய்ய விரும்பும் மற்றவர்களைய் விடுவதில்லை. அது ஏன்? 

7 hours ago, alvayan said:

1) ஓஓ வந்திட்டார்  அன்டன் பாலசிங்க... இவரிடம் நம்ம ஜாதகம்போனால்...காணும்....இப்ப துரையப்பா கணக்குகு வந்திட்டார்...வருசக் கடைசி ..போனசும் முடிஞ்சிருக்கும் ..அடுத்த வருச கோட்ட வரும்வரைக்கும் கூவத்தானே வேண்டும் ...எதுவோ கூவின்னல் வருசக்கடைசியில் சிவாஸ்றீகல் கொடுக்கிறவையாம்...போய் லைனில் நில்லுங்கோ...உங்கடை ஓலையும் எமக்கு தெரியும்

அது 2)பரவாயில்லைய்யே..தமிழனை.தமிழினத்தை அழிக்கிற  துரோகியாக இருப்பதைவிட...இது எப்படியிருக்கு

1) Anton Balasingam அவர்களுக்கு ஈடாக என்னை ஒப்பிடுவது கொஞ்சம்  ஓவர் பில்டப்.  உது  உங்கள் குருஜீக்கு கோபத்தை உண்டாக்கும் செயல்.  🤣

2)  விபு க்களுக்காகச் சேர்த்த காசு தன்னிடம் இருப்பதை எப்படி இலகுவாக  ஒத்துக்கொள்கிறார் பாருங்கள்,....🤣

😏

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

அவ்வாறு செய்திருந்தால் சுரேனின் நடவடிக்கைகளை  அரசியல் ரீதியில் தடுத்து நிறுத்தி இருக்கலாம்.  அதன் பெயர் பேச்சுவார்ததையோ அரசியல் தீர்வோ அல்ல. அது மிக எளிதாக விரைவாக நடக்கும் என்று நினைக்கும் அளவுக்கு எமது அரசியல் நிலை இப்போது இல்லை.   அரசியல் தீர்வை காணும் வலு இன்று இயங்கும் எந்த அமைப்புக்கு இல்லை என்பது வெள்ளிடை மலை.  இனவாதிகளை விடுங்கள். இரு பக்கதிலும் உள்ள மக்களுக்கு இடையிலான இடைவெளிகள், நம்பிக்கையீனங்களை களைந்து அரசியல் தீர்வு  நோக்கிய பயணத்தையாவது ஆரம்பித்து வைக்க தாயக, புலம் பெயர் அரசியல் அமைப்புகள்  இப்போதாவது  ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முன்னோடி யாக இந்த தந்திரோபயத்தை  நடைமுறை சாத்தியமாக மேம்படுத்தி உபயோகிக்கலாம்.   சிங்கள மக்கள் அமைப்புகளுடன் நல்லுறவை பேணி சந்திப்புக்களைஆரம்பிக்கலாம் என்பது எனது கருத்து.  வெளி நாடுகளில் என்னதான் அரசியல் செய்தாலும் எந்த நாடும் அதை செய்யுமாறே எம்மை வலியுறுத்தும்.  அவ்வாறான  நடவடிக்கைக்கே ஆதரவாக இருக்கும். 

உங்கள் வெளிப்படையான எழுத்துக்கு நன்றி.

இலங்கையில் 48 க்கு பின் 3 பெரும் அரசியல் போக்குகள் உள்ளன.

1. பெளத்த பேரினவாத அரசியல்

2. அதை மூர்க்கமாக எதிர்த்த தமிழ் தேசிய அரசியல்

3. பேரினவாதத்துக்கு சலாம் போட்டு அதன் கோபத்தில் இருந்து முடிந்தளவு தப்பும் சோனக-அடையாள அரசியல்

நீங்கள் மிக வெளிப்படையாக மேலே பிரேரித்து இருப்பது. போக்கு 2 இல் இருந்து போக்கு 3 க்கு தமிழ் அரசியலை நகர்த்தும் நகர்வு.

இதை முன் மொழிவதில் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால்,

1. இதை தீர்வு பொதி என சொல்லமுடியாது.  இதுவரை எம் மக்கள் கொண்டிருந்த அபிலாசைக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை.

இது நல்லிணக்கம் இல்லை.  இது விட்டுக்கொடுப்பு அல்லது சரணாகதி அரசியல்.

இது வழமையாக டக்லஸ், கருணா, பிள்ளையான் அங்கயன் செய்யும் அரசியலின் இன்னொரு வடிவம். அவர்களாவது குறித்த வீத வாக்காளரை பிரதிநிதிதுவம் செய்கிறார்கள்.

நீங்கள் மேலே சொன்னதைதான் மக்கள் பெரும்பான்மையாக விரும்பின், சுரேன் அல்லது அவரின் proxy கள், தேர்தலில் ஆணையை பெற்று இந்த அரசியலை தொடரலாம். 

ஆனால் உங்கள் அளவுக்கு சுரேன் குழு வெளிப்படையாக இப்படி சொல்லவில்லை. 

இமாலய பிரகடனம் ஒரு வெற்றுப்பேப்பர் - அதில் இருந்து இனி வரப்போவது - பொலிஸ், காணி அதிகாரம் அற்ற, டம்மி பீசு அதிகாரப்பகிர்வு.

இப்போ இருக்கும் நிலைக்கும், இந்த டம்மி பீசு நிலைக்கும் ஒரு வேறுபாடும் இருக்கப்போவதில்லை. நில அபகரிப்பு தொடரும், சிவில் நிர்வாகம் முழுக்க முழுக்க கொழும்பில் இருந்து இயக்கப்படும், ஆளுனர் முடிசூடா மன்னராக இருப்பார். சிவியை போல் ஒரு நிதியத்தை கூட அமைக்க முடியாத ஒரு முதலமைச்சர் இருப்பார்.

 சுருங்க சொல்லின் - no change.

இந்த அபிலாசை அற்ற நிலைதான் உங்களதும் சுரேனினதும் நிலைப்பாடு எனில் - அந்த நிலையை எடுப்பது உங்கள் உரிமை. ஆனால் - இதை மக்களிடம் “தீர்வு” என பாசாங்கு செய்து திணிக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை.

மக்களிடம் உங்களை போல் உண்மையை சொல்லி சுரேன் ஆதரவை திரட்டடும். மக்கள் ஆதரித்தால் என் போன்றோரின் எதிர்ப்புகள், சூரியன் எதிர் பனியாக கரையும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

எமது தமிழ் அரசியலில் நல்ல பிள்ளை பெயரெடுக்க வேண்டுமானால் யோகர் சுவாமி கூறியது போல் “சும்மா இரு” என்பதே உகந்தது.  அனால் ஒரு  சிறிய மாற்றம்,  வெற்று வீர வசன அறிக்கைகளை மட்டும் வெளியிடுவதுடன் கூடவே  தமிழ் அரசியல் முகநூல்,  இணையத்தள அரசியல்  தாதாகளுக்களுடன்  நல்லுறவையும்  பேணியபடி “சும்மா இரு”   என்ற கோட்பாடே  நல்ல பிள்ளை பெயரெடுக்க உகந்த கோட்பாடு.

சும்மா இருப்பது பிழை என்பதை ஏற்கிறேன்.

ஆனால் அவர்கள் சும்மா இருக்கிறார்கள் என்பதால் ஏஜென்டுகள் எமது தலையை கொண்டு போய் தண்டவாளத்தில் வைப்பதை - எதோ செய்கிறார்களே - ஆகவே வரவேற்ப்போம் என்று சொல்ல முடியுமா?

2 hours ago, விசுகு said:

15 வருடங்கள் சும்மா இருந்ததால் ஒரு தலைமுறையை சும்மா இருக்க பழக்கி விட்டோம். இன்னும் ஒரு 15 வருடங்கள் சும்மா இருந்தால் 3 தலைமுறை சும்மா இருக்க பழகிய எந்த இனமும் மீண்டும் எழாது இயங்காது

இப்போ தீர்வு திட்டம் என நாம், காணி, பொலிஸ் அதிகாரம் அற்ற டம்மி அதிகாரபகிர்வை ஏற்போமாயின் - இலங்கைக்கு அது out of jail card. 
தமிழருக்கு தீர்வு கொடுத்து விட்டோம், நல்லிணக்கம் ஆகி விட்டது. என எல்லாரும் கேசை மூடி விடுவார்கள்.

அதன் பின் இலங்கை சோனகர் போல் நாமும் வாழ வேண்டியதே.

இதுதான் உங்கள் அபிலாசை என்றால் - நோ பிராப்ளம். ஆனால் இது இப்போ இருக்கு நிலையை விட மோசமானது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இவர்கள் என்ன அங்கே வாழும் மக்களின் ஆண்டான்களா?

தமிழருடனான நட்புறவான சந்திப்பை அல்லவா சகலதுக்கும் முன் இவர்கள் செய்திருக்க வேண்டும். 

அதை இவர்கள் செய்யாமல் - அத்தனை கெடுபிடிக்கும் மத்தியில் உறுதியாக போராடும் மக்களை ஒரு சொல் கேட்காமல், அவர்கள் தலைகளுக்கு மேலால் இவர்கள் பேரம் பேசினால் - கோவம் வரத்தான் செய்யும்.

அங்கே சிவில் சமூகம் உள்ளது. கட்சிகள் உள்ளன. போய் சந்திப்புகளை மேற்கொண்டு விட்டு, ஒருமித்த கருத்தோடு பிக்குகளை போய் சந்திதல்லவா இருக்க வேண்டும்.

2009 ற்கு பின்னும் பல தேர்தல்களில் மக்கள் தமது அபிலாசையை தெளிவாக புலப்படுத்திய பின்னும், அதை புறம்தள்ளி நடக்க இவர்களுக்கு என்ன தார்மீக உரிமை உள்ளது.

இவர்களுக்கு புலம்பெயர் தனிழர் மத்தியிலாவது ஆதரவு உள்ளதா? 2009 இல் யுத்த எதிர்ப்பை ஒருங்கிணைத்த போது இருந்தது - ஆனால் இப்போ?

யாரைய்யா இவர்கள், எமது மக்கள் சார்பாக பேச?

கடந்த சித்திரையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகி இந்த கார்த்திகை மாதம் திடீரென்று உள்ள சிங்கள தலைவர்கள் மகாசங்கத்தினர் எல்லோரையும் அடுத்தடுத்து சந்திக்க முடியுமென்றால்

எவ்வளவு வலைப்பின்னல் பின்னால் இருக்க வேண்டும்.

இந்த 6-8 மாதங்கள் ஏன் பொறுக்க வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

@alvayan @Kapithan

ஒரே பாதையில் பயணிக்கும் நீங்கள் 

பயணத்தை மறந்து ஆளுக்காள் கல்லெறிபடுவது வேதனையளிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

உங்கள் வெளிப்படையான எழுத்துக்கு நன்றி.

இலங்கையில் 48 க்கு பின் 3 பெரும் அரசியல் போக்குகள் உள்ளன.

1. பெளத்த பேரினவாத அரசியல்

2. அதை மூர்க்கமாக எதிர்த்த தமிழ் தேசிய அரசியல்

3. பேரினவாதத்துக்கு சலாம் போட்டு அதன் கோபத்தில் இருந்து முடிந்தளவு தப்பும் சோனக-அடையாள அரசியல்

நீங்கள் மிக வெளிப்படையாக மேலே பிரேரித்து இருப்பது. போக்கு 2 இல் இருந்து போக்கு 3 க்கு தமிழ் அரசியலை நகர்த்தும் நகர்வு.

இதை முன் மொழிவதில் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால்,

1. இதை தீர்வு பொதி என சொல்லமுடியாது.  இதுவரை எம் மக்கள் கொண்டிருந்த அபிலாசைக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை.

இது நல்லிணக்கம் இல்லை.  இது விட்டுக்கொடுப்பு அல்லது சரணாகதி அரசியல்.

இது வழமையாக டக்லஸ், கருணா, பிள்ளையான் அங்கயன் செய்யும் அரசியலின் இன்னொரு வடிவம். அவர்களாவது குறித்த வீத வாக்காளரை பிரதிநிதிதுவம் செய்கிறார்கள்.

நீங்கள் மேலே சொன்னதைதான் மக்கள் பெரும்பான்மையாக விரும்பின், சுரேன் அல்லது அவரின் proxy கள், தேர்தலில் ஆணையை பெற்று இந்த அரசியலை தொடரலாம். 

ஆனால் உங்கள் அளவுக்கு சுரேன் குழு வெளிப்படையாக இப்படி சொல்லவில்லை. 

இமாலய பிரகடனம் ஒரு வெற்றுப்பேப்பர் - அதில் இருந்து இனி வரப்போவது - பொலிஸ், காணி அதிகாரம் அற்ற, டம்மி பீசு அதிகாரப்பகிர்வு.

இப்போ இருக்கும் நிலைக்கும், இந்த டம்மி பீசு நிலைக்கும் ஒரு வேறுபாடும் இருக்கப்போவதில்லை. நில அபகரிப்பு தொடரும், சிவில் நிர்வாகம் முழுக்க முழுக்க கொழும்பில் இருந்து இயக்கப்படும், ஆளுனர் முடிசூடா மன்னராக இருப்பார். சிவியை போல் ஒரு நிதியத்தை கூட அமைக்க முடியாத ஒரு முதலமைச்சர் இருப்பார்.

 சுருங்க சொல்லின் - no change.

இந்த அபிலாசை அற்ற நிலைதான் உங்களதும் சுரேனினதும் நிலைப்பாடு எனில் - அந்த நிலையை எடுப்பது உங்கள் உரிமை. ஆனால் - இதை மக்களிடம் “தீர்வு” என பாசாங்கு செய்து திணிக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை.

மக்களிடம் உங்களை போல் உண்மையை சொல்லி சுரேன் ஆதரவை திரட்டடும். மக்கள் ஆதரித்தால் என் போன்றோரின் எதிர்ப்புகள், சூரியன் எதிர் பனியாக கரையும்.

கோஷான், 

நான் மீண்டும் மீண்டும் தெளிவாக எழுதியும் சுரேனின் திட்டத்தை முழுமையாக நான் ஏற்றுக்கொள்வது போன்ற தோற்றப்பாட்டுடன் பதிலளித்துள்ளீர்கள்.  எனது கேள்வி  உலகத்தமிழர் பேரவையின் திட்டத்தை புறம்தள்ளிவிட்டு  அவர்கள்  செய்தது போன்ற அரசியல் நகர்வுகளை இதை விட மேம்பட்ட ரீதியில்  மற்றய தமிழ்த்  தரப்புகள் ஏன் மேற் கொள்ள கூடாது என்பது தான். அதை செய்ய தடையாக உள்ள காரணிகள் என்ன என்பது தான் எனது கேள்வி.  

 இரு பகுதி மக்களிடையே உள்ள விரிசலை குறைப்பதன் மூலம் நம்பிக்கையை வளர்த்து  இருபகுதியுனரினதும் விட்டுகொடுப்புடன் ஒரு அரசியல் தீர்வை அடைய அத்திவாரம் இடுவது சரணாகதி அரசியலா? 

இரண்டவது உங்கள் வகைப்படுத்தலின் 2. வதில் இருந்து 3 வதுக்கு தமிழ் அரசியல் வந்து நிற்கும் நிலைக்கு எமது கடந்த கால அரசியல் தவறு காரணம் இல்லையா?  அதை பிரேரித்தது நானல்ல.  அதற்கு காரணிகள் யார் என்பது உங்களுக்கு தெரியாததல்ல.

அடுத்த தலைமுறையும் உணர்சசி  வசப்பட்டு அதன்பால் தமது அரசியல் முடிவுகளை எடுக்க வைக்கும் படியான  அரசியலையே தமிழ் தரப்பு தொடர்ந்து மேற்கொள்கிறது என்பது எனது கருத்து   

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

@alvayan @Kapithan

ஒரே பாதையில் பயணிக்கும் நீங்கள் 

பயணத்தை மறந்து ஆளுக்காள் கல்லெறிபடுவது வேதனையளிக்கிறது.

எனது எழுத்துக்களை  கவனமாக பார்ப்பீர்களானால்  தனிப்பட்ட ரீதியில் தாக்குவதை இயன்ற அளவிலும் தவிர்க்க முனைந்தே கருத்துரைத்து வந்திருக்கிறேன்….  ஆனால் தொடர்ச்சியாக , முட்டாள்தனமாக தனிப்பட்ட ரீதியில்  தாக்கப்படும்போது பொறுமை இழக்க நேரிடுகிறது. தனிநபர் தாக்குதலை தடவிக் கொடுத்து, கொம்பு சீவிவிடவும்  ஒரு சில  இருக்கின்றன என்பதையும் கவனியுங்கள். 

எதற்கும் ஒரு அளவிருக்கிறதல்லவா? 

58 minutes ago, island said:

கோஷான், 

நான் மீண்டும் மீண்டும் தெளிவாக எழுதியும் சுரேனின் திட்டத்தை முழுமையாக நான் ஏற்றுக்கொள்வது போன்ற தோற்றப்பாட்டுடன் பதிலளித்துள்ளீர்கள்.  எனது கேள்வி  உலகத்தமிழர் பேரவையின் திட்டத்தை புறம்தள்ளிவிட்டு  அவர்கள்  செய்தது போன்ற அரசியல் நகர்வுகளை இதை விட மேம்பட்ட ரீதியில்  மற்றய தமிழ்த்  தரப்புகள் ஏன் மேற் கொள்ள கூடாது என்பது தான். அதை செய்ய தடையாக உள்ள காரணிகள் என்ன என்பது தான் எனது கேள்வி.  

 இரு பகுதி மக்களிடையே உள்ள விரிசலை குறைப்பதன் மூலம் நம்பிக்கையை வளர்த்து  இருபகுதியுனரினதும் விட்டுகொடுப்புடன் ஒரு அரசியல் தீர்வை அடைய அத்திவாரம் இடுவது சரணாகதி அரசியலா? 

இரண்டவது உங்கள் வகைப்படுத்தலின் 2. வதில் இருந்து 3 வதுக்கு தமிழ் அரசியல் வந்து நிற்கும் நிலைக்கு எமது கடந்த கால அரசியல் தவறு காரணம் இல்லையா?  அதை பிரேரித்தது நானல்ல.  அதற்கு காரணிகள் யார் என்பது உங்களுக்கு தெரியாததல்ல.

அடுத்த தலைமுறையும் உணர்சசி  வசப்பட்டு அதன்பால் தமது அரசியல் முடிவுகளை எடுக்க வைக்கும் படியான  அரசியலையே தமிழ் தரப்பு தொடர்ந்து மேற்கொள்கிறது என்பது எனது கருத்து   

புதிய நகர்வுகள் எதனையும் ஊக்குவிக்கக் கூடாது, மாறாக அவற்றை எப்பாடுபட்டாவது முடக்க வேண்டும்  என்பதில் சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்பது தெளிவாகப் பார்க்க முடிகிறது. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, island said:

கோஷான், 

நான் மீண்டும் மீண்டும் தெளிவாக எழுதியும் சுரேனின் திட்டத்தை முழுமையாக நான் ஏற்றுக்கொள்வது போன்ற தோற்றப்பாட்டுடன் பதிலளித்துள்ளீர்கள்

இந்த தோற்றப்பாட்டுக்கு வருந்துகிறேன். உங்கள் தனிப்பட்ட நிலைப்பாடு, சுரேனின் நகர்வு என தனித்தனியாக quote பண்ணி எழுதியதால், இரெண்டையும் வேறுபடுத்தி உள்ளேன் என நினைக்கிறேன்.

இல்லை எனில் “மயக்கத்துக்கு” மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, island said:

கோஷான், 

நான் மீண்டும் மீண்டும் தெளிவாக எழுதியும் சுரேனின் திட்டத்தை முழுமையாக நான் ஏற்றுக்கொள்வது போன்ற தோற்றப்பாட்டுடன் பதிலளித்துள்ளீர்கள்.  எனது கேள்வி  உலகத்தமிழர் பேரவையின் திட்டத்தை புறம்தள்ளிவிட்டு  அவர்கள்  செய்தது போன்ற அரசியல் நகர்வுகளை இதை விட மேம்பட்ட ரீதியில்  மற்றய தமிழ்த்  தரப்புகள் ஏன் மேற் கொள்ள கூடாது என்பது தான். அதை செய்ய தடையாக உள்ள காரணிகள் என்ன என்பது தான் எனது கேள்வி.  

 இரு பகுதி மக்களிடையே உள்ள விரிசலை குறைப்பதன் மூலம் நம்பிக்கையை வளர்த்து  இருபகுதியுனரினதும் விட்டுகொடுப்புடன் ஒரு அரசியல் தீர்வை அடைய அத்திவாரம் இடுவது சரணாகதி அரசியலா? 

இரண்டவது உங்கள் வகைப்படுத்தலின் 2. வதில் இருந்து 3 வதுக்கு தமிழ் அரசியல் வந்து நிற்கும் நிலைக்கு எமது கடந்த கால அரசியல் தவறு காரணம் இல்லையா?  அதை பிரேரித்தது நானல்ல.  அதற்கு காரணிகள் யார் என்பது உங்களுக்கு தெரியாததல்ல.

அடுத்த தலைமுறையும் உணர்சசி  வசப்பட்டு அதன்பால் தமது அரசியல் முடிவுகளை எடுக்க வைக்கும் படியான  அரசியலையே தமிழ் தரப்பு தொடர்ந்து மேற்கொள்கிறது என்பது எனது கருத்து   

சொல்வது சுலபம் ஆனால்....?

சரி தற்போதைய நிலையில் நீங்கள் ஒருவரை பிரேரிக்க முடியுமா??

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.