Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, island said:

எனது கேள்வி  உலகத்தமிழர் பேரவையின் திட்டத்தை புறம்தள்ளிவிட்டு  அவர்கள்  செய்தது போன்ற அரசியல் நகர்வுகளை இதை விட மேம்பட்ட ரீதியில்  மற்றய தமிழ்த்  தரப்புகள் ஏன் மேற் கொள்ள கூடாது என்பது தான். அதை செய்ய தடையாக உள்ள காரணிகள் என்ன என்பது தான் எனது கேள்வி.  

அருமையான கேள்வி.

காரணிகள் பலவாக இருக்கிறன. ஆனால் அதில் முதன்மையானது…இப்போ இருக்கும் எந்த தலைமைக்கும் இப்படி ஒரு நகர்வை செய்வதில் நாட்டம் இல்லை. நாட்டம் முழுவதும் சுயநலனிலேயே இருக்கிறது என்பதே.

இதை நாம் மாற்றி ஒரு நியாயமான தலைமையை உருவாக்க வேணுமா?

ஆம்.

எப்படி?

எனது சிற்றறிவுக்கு எட்டிய  ஐடியா நான் முன்பே சொன்ன கரி ஆனந்த சங்கரி போன்ற ஒருவர் தலைமையில் உலகளாவிய ஜனநாயக தேர்தலில் வென்ற ஈழத்தமிழர் சம்மேளனனம்.

இப்படி வேறு ஐடியாக்களும் இருக்கும்.

ஆனால் நாம் நல்லதாக செய்யவில்லை, செய்ய வேண்டும் என்பதால் - இன்னொரு அரைகுறை முயற்சியை ஏற்க வேண்டுமா?

  • Replies 148
  • Views 11.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் எனப்படுவோர் தமது பிள்ளைகளை தேடுவது என்ற கோரிக்கையை மட்டும் எழுப்புவதும் அதற்காக மட்டும் போராடுவதுமே  ஶ்ரீலங்கா அரசுக்கு காத்திரமான அழுத்தத்தைக் கொடுக்கும். அதை வ

  • பகிடி
    பகிடி

    இலங்கையில் உள்ள பல தமிழர்களுக்கு புலம் பெயர் தமிழர்களின் பலம் பற்றிய அதீத கற்பனை உண்டு. ஆனால் நடைமுறை உண்மையோ வேறு.இன்னும் பத்து ஆண்டுகளில் புலம் பெயர் தமிழர்களிடம் இருக்கும் குறைந்த பட்ச பலமும் முடிவ

  • வணக்கம், முதலில் இதில் என்ன இருக்கிறது என இந்த இமாலய பிரகடனத்துக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து, சமஸ்டி தீர்வின் முதல் படி என இதை கருத முடியும் என விளங்கப்படுத்த முடியுமா? இமாலய பிரகடனத்த

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

சொல்வது சுலபம் ஆனால்....?

சரி தற்போதைய நிலையில் நீங்கள் ஒருவரை பிரேரிக்க முடியுமா??

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய முன்னணி, விக்கினேஸ்வரன் தரப்பு, அதை விட டெலோ, ஈபிஆர்எல்எவ், ஆகியவை தனித்தனியாகவோ கூட்டிணைந்தோ செய்யலாம். 

புலம் பெயர் நாடுகளில் நாடு கடந்த அரசு, தமிழர் ஒருங்கிணைப்பு குழு, மக்களவைகள், மற்றும்முன்னள் புலிகளின் பெயரை பயன்படுத்தி அரசியல் செய்யும் அமைப்புக்கள் தனித்தனியாகவோ  சேர்ந்தோ செய்யலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, island said:

இரு பகுதி மக்களிடையே உள்ள விரிசலை குறைப்பதன் மூலம் நம்பிக்கையை வளர்த்து  இருபகுதியுனரினதும் விட்டுகொடுப்புடன் ஒரு அரசியல் தீர்வை அடைய அத்திவாரம் இடுவது சரணாகதி அரசியலா? 

பிக்குகள் எமது தரப்பு நியாயம் விளங்காமல்தான் இத்தனை காலம் கொடுமையின் ஊற்று கண்ணாய் இருந்தனர் என்றா நம்பச்சொல்கிறீர்கள்?

சிங்கள மகக்களுக்கு எமது நியாயத்தை எடுத்து சொல்லாம், ஆனால் மஹாசங்கம் என்பதே பிரச்சனையின் ஊற்று கண். அவர்களுக்கு நீங்கள் என்ன சொன்னாலும் ஏறாது. 

ஏறாது - என்பதற்கான வாழும் உதாரணம்தான் எதுவுமே இல்லாத பிரகடனம்.

ஒரு பந்தி, ஒரு வசனம், ஒரு சொல் கூட மகாவம்ச பெளத்தசிங்கள மனநிலை கோணுமாறு இல்லாத ஒரு பிரகடனம்.

எனக்கு சில மாறா அடிப்படைகளில் நம்பிக்கை உண்டு. அவற்றில் ஒண்டு இலங்கை மஹா சங்கத்தின் பேரினவாத மனோநிலை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, island said:

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய முன்னணி, விக்கினேஸ்வரன் தரப்பு, அதை விட டெலோ, ஈபிஆர்எல்எவ், ஆகியவை தனித்தனியாகவோ கூட்டிணைந்தோ செய்யலாம். 

புலம் பெயர் நாடுகளில் நாடு கடந்த அரசு, தமிழர் ஒருங்கிணைப்பு குழு, மக்களவைகள், மற்றும்முன்னள் புலிகளின் பெயரை பயன்படுத்தி அரசியல் செய்யும் அமைப்புக்கள் தனித்தனியாகவோ  சேர்ந்தோ செய்யலாம். 

அப்படியானால் ஏன் இவர்கள் இதுவரை செய்யவில்லை??

இனியும் செய்வார்களா? அதை நீங்கள் நம்புகிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

இரண்டவது உங்கள் வகைப்படுத்தலின் 2. வதில் இருந்து 3 வதுக்கு தமிழ் அரசியல் வந்து நிற்கும் நிலைக்கு எமது கடந்த கால அரசியல் தவறு காரணம் இல்லையா?  அதை பிரேரித்தது நானல்ல.  அதற்கு காரணிகள் யார் என்பது உங்களுக்கு தெரியாததல்ல

ஆம் எமது இன்றைய நிலைக்கு 1931-2023 வரையான எல்லோரும் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

அருமையான கேள்வி.

காரணிகள் பலவாக இருக்கிறன. ஆனால் அதில் முதன்மையானது…இப்போ இருக்கும் எந்த தலைமைக்கும் இப்படி ஒரு நகர்வை செய்வதில் நாட்டம் இல்லை. நாட்டம் முழுவதும் சுயநலனிலேயே இருக்கிறது என்பதே.

இதை நாம் மாற்றி ஒரு நியாயமான தலைமையை உருவாக்க வேணுமா?

ஆம்.

எப்படி?

எனது சிற்றறிவுக்கு எட்டிய  ஐடியா நான் முன்பே சொன்ன கரி ஆனந்த சங்கரி போன்ற ஒருவர் தலைமையில் உலகளாவிய ஜனநாயக தேர்தலில் வென்ற ஈழத்தமிழர் சம்மேளனனம்.

இப்படி வேறு ஐடியாக்களும் இருக்கும்.

ஆனால் நாம் நல்லதாக செய்யவில்லை, செய்ய வேண்டும் என்பதால் - இன்னொரு அரைகுறை முயற்சியை ஏற்க வேண்டுமா?

உங்கள் ஐடியா வெற்றி பெற்றால்  மகிழ்ச்சி. இதுவரையான தோல்வி அடைந்த  அரசியலை மறந்து புதிய தலைமையின் கீழ் புதிய  இரத்தம் பாய்ச்சப்பட்ட  புதியஅரசியலை  “ இன்று புதிதாய் பிறந்தோம்” என்ற ரீதியில்  செய்தால் அது நிச்சயமாக எமக்கு பலம் சேர் க்கும். பலனளிக்கும். 

நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kapithan said:

எனது எழுத்துக்களை  கவனமாக பார்ப்பீர்களானால்  தனிப்பட்ட ரீதியில் தாக்குவதை இயன்ற அளவிலும் தவிர்க்க முனைந்தே கருத்துரைத்து வந்திருக்கிறேன்….  ஆனால் தொடர்ச்சியாக , முட்டாள்தனமாக தனிப்பட்ட ரீதியில்  தாக்கப்படும்போது பொறுமை இழக்க நேரிடுகிறது. தனிநபர் தாக்குதலை ஊக்குவிக்கவும் ஒரு சில கரப்பான்கள் இருக்கின்றன என்பதையும் கவனியுங்கள். 

இங்கே தான் எதிரி வெற்றியடைந்து கொண்டிருக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஒரே பாதையில் பயணிக்கும் நீங்கள் 

பாவம் அல்வாயன் மீது ஏன் இந்த அபாண்டம் 🤣

2 minutes ago, island said:

உங்கள் ஐடியா வெற்றி பெற்றால்  மகிழ்ச்சி. இதுவரையான தோல்வி அடைந்த  அரசியலை மறந்து புதிய தலைமையின் கீழ் புதிய  இரத்தம் பாய்ச்சப்பட்ட  புதியஅரசியலை  “ இன்று புதிதாய் பிறந்தோம்” என்ற ரீதியில்  செய்தால் அது நிச்சயமாக எமக்கு பலம் சேர் க்கும். பலனளிக்கும். 

நன்றி. 

இப்படி ஒரு முயற்சியை @விசுகு அண்ணா போன்ற ஒருவர் ஒருங்கிணைத்தால் (அவர் போல, அவரே அல்ல) சரிவரலாம்.

அல்லது அமைபுகளில் உள்ள ஏனையோரும் செய்யலாம். குறைந்த பட்சம் கரி போன்றோர் காதிலாவது போடலாம்.

நமக்கு மிக முக்கிய தேவை புற சக்திகளுக்கு விலை போகாத ஒரு தலைமை. இப்போதைக்கு ஒரு ஜனநாயக வழி தேர்தலில் மேற்கோ வென்ற கூட்டுத்தலைமையாலேயே இது சாத்தியப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

பிக்குகள் எமது தரப்பு நியாயம் விளங்காமல்தான் இத்தனை காலம் கொடுமையின் ஊற்று கண்ணாய் இருந்தனர் என்றா நம்பச்சொல்கிறீர்கள்?

சிங்கள மகக்களுக்கு எமது நியாயத்தை எடுத்து சொல்லாம், ஆனால் மஹாசங்கம் என்பதே பிரச்சனையின் ஊற்று கண். அவர்களுக்கு நீங்கள் என்ன சொன்னாலும் ஏறாது. 

ஏறாது - என்பதற்கான வாழும் உதாரணம்தான் எதுவுமே இல்லாத பிரகடனம்.

ஒரு பந்தி, ஒரு வசனம், ஒரு சொல் கூட மகாவம்ச பெளத்தசிங்கள மனநிலை கோணுமாறு இல்லாத ஒரு பிரகடனம்.

எனக்கு சில மாறா அடிப்படைகளில் நம்பிக்கை உண்டு. அவற்றில் ஒண்டு இலங்கை மஹா சங்கத்தின் பேரினவாத மனோநிலை.

நான் மீண்டும் சொல்கிறேன் நான் பிரகடனத்தை பற்றி சொல்லவில்லை இப்படியான அரசியல் நகர்வுகளை பற்றி தான் பேசுகிறேன். 

எனது அறிவுக்கு எட்டியபடி வரலாற்றில் அரசியல் நகர்வு என்றால் இப்படி தான் இருக்கும். சிங்களவன் எதுவும் எமக்கு தரப்போவதில்லை  பேசிப் பிரயோசனம் இல்லை என்ற  உறுதியான முன்முடிவு  இருந்தால் மீண்டும் யுத்தத்தை ஆரம்பிப்பது தான் உகந்தது.  வெளி நாடுகளிலும் தாயகத்திலும் கடும் தேசியம் பேசும் அன்பர்கள் இதனை செய்ய முன்வரவேண்டும். 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

விலை போகாத ஒரு தலைமை

“விலை போகாத தலைமை” என்ற நிலையை அடைவதானால் தற் போதைய நிலையில் பல உள்ளூர்/ புலம் பெயர் முகநூல், இணையத்தள, அரசியல்  தாதாக்களை திருப்தி செய்வது மட்டும் தான் ஒரே வழி என்பதே ground reality.  

அது மாறவேண்டும் என்றே நான் விரும்புகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

ஆம் எமது இன்றைய நிலைக்கு 1931-2023 வரையான எல்லோரும் காரணம்.

உண்மை கோஷான். 1931 ல் இருந்து  ஒவ்வொரு தலைமுறையும் தமது அரசியல் stupidness  ஐ மிகக்  கவனமாக வடிகட்டி  அடுத்த தலைமுறைக்கு கடத்தி அரசியல் அறிவூட்டுவதற்கு பதிலாக அரசியல் உசுப்பேற்றலை செய்து வெற்றிகரமாக  இன்றைய   நிலையை அடைந்தோம்.  இதை ஏற்றுகொள்ள எமக்குள் இருக்கும் ஈகோ இடம் தராது. 

ஆனால்,  இந்த தலைமுறையோடாவது  இது ஒழிய வேண்டும் என்பதே எனது அவா. 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கே தான் எதிரி வெற்றியடைந்து கொண்டிருக்கிறான்.

தனிப்பட்ட ரீதியில் என்னைத் தாக்காதவரை நான் ஒருவரையும் தனிநபர் தாக்குதலைச் செய்யப்போவதில்லை. 

மேலே ஒருவர் ஏற்கனவே சிண்டு முடியும்  வேலையை செய்திருக்கிறார் கவனியுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

பாவம் அல்வாயன் மீது ஏன் இந்த அபாண்டம் 🤣

இப்படி ஒரு முயற்சியை @விசுகு அண்ணா போன்ற ஒருவர் ஒருங்கிணைத்தால் (அவர் போல, அவரே அல்ல) சரிவரலாம்.

அல்லது அமைபுகளில் உள்ள ஏனையோரும் செய்யலாம். குறைந்த பட்சம் கரி போன்றோர் காதிலாவது போடலாம்.

நமக்கு மிக முக்கிய தேவை புற சக்திகளுக்கு விலை போகாத ஒரு தலைமை. இப்போதைக்கு ஒரு ஜனநாயக வழி தேர்தலில் மேற்கோ வென்ற கூட்டுத்தலைமையாலேயே இது சாத்தியப்படும்.

என்னை உதாரணம் காட்டியதால்.....

என் சொல்லுக்கு இருக்கும் பெறுமதியை நான் இயங்குநிலையில் உள்ளபோது அந்த மக்களுக்காக பாவிக்க வேண்டும் என்ற பெருவிருப்பம் உண்டு. அந்த வகையின் கடைசி எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் மாவீரர் நாளில் முடிவுக்கு வந்தது. 😭

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

என்னை உதாரணம் காட்டியதால்.....

என் சொல்லுக்கு இருக்கும் பெறுமதியை நான் இயங்குநிலையில் உள்ளபோது அந்த மக்களுக்காக பாவிக்க வேண்டும் என்ற பெருவிருப்பம் உண்டு. அந்த வகையின் கடைசி எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் மாவீரர் நாளில் முடிவுக்கு வந்தது. 😭

எல்லாமே மாறும். 🙏

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kapithan said:

தனிப்பட்ட ரீதியில் என்னைத் தாக்காதவரை நான் ஒருவரையும் தனிநபர் தாக்குதலைச் செய்யப்போவதில்லை. 

மேலே ஒருவர் ஏற்கனவே சிண்டு முடியும்  வேலையை செய்திருக்கிறார் கவனியுங்கள். 

நாய் குரைக்கும் போது நாங்களும் வேலையை விட்டுட்டு நின்று குரைத்துக் கொண்டா இருக்கிறோம்.

அதே மாதிரி கடந்து போக வேண்டியது தானே.

47 minutes ago, விசுகு said:

என் சொல்லுக்கு இருக்கும் பெறுமதியை நான் இயங்குநிலையில் உள்ளபோது அந்த மக்களுக்காக பாவிக்க வேண்டும் என்ற பெருவிருப்பம் உண்டு. அந்த வகையின் கடைசி எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் மாவீரர் நாளில் முடிவுக்கு வந்தது. 😭

அப்பவே இதை எதிர்பார்த்து தான் அப்போது எதுவுமே எழுதவில்லை.

உங்களைப் போலவே நானும் ஏதும் மந்திரம் தந்திரம் மாஜா ஜாலங்கள் நடக்காதா?

எமது இனத்துக்கு ஒரு விடிவு வராதா? என்று ஏங்குகிறேன்.

2023 இல் இதெல்லாம் சாத்தியமா என்று எண்ணினாலும் திரும்பதிரும்ப இதையே யோசிக்க தோன்றுகின்றது.

எட்டுத் திக்கிலுமிருந்து கரை எதையும் காணவில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஈழப்பிரியன் said:

நாய் குரைக்கும் போது நாங்களும் வேலையை விட்டுட்டு நின்று குரைத்துக் கொண்டா இருக்கிறோம்.

அதே மாதிரி கடந்து போக வேண்டியது தானே. 

நிச்சயம் முயற்சி செய்கிறேன். 

👍

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

எனது அறிவுக்கு எட்டியபடி வரலாற்றில் அரசியல் நகர்வு என்றால் இப்படி தான் இருக்கும்

உண்மையில் பலதை தெளிவாக எழுதும் நீங்கள் இதில் என்ன அரசியலை கண்டீர்கள். என்ன நகர்வை கண்டீர்கள் என்பதுதான் எனக்கு விளங்கவே இல்லை.

சுரேன் - அல்லது அவரது குழு எமது நியாயத்தை எங்கும் எடுத்துரைக்கவே இல்லை. எமக்கு 48 இல் இருந்து இன்று வரை இழைக்கப்படும் அநீதி பற்றி அதற்கு என்ன தீர்வு என்பது பற்றி ஒரு வரியில்லை.

பண்டா, ஜே ஆர், சிறில் மத்யூ, வீரவன்ச, வீரசேகர வரை  சிங்கள பேரினவாததிகள் சொன்ன - இலங்கையராக ஒன்று பட்டால் எல்லா பிரச்சனையும் ஓவர் என்ற அதே விடயத்தை புல்லட் பாயிட்ண்ட் போட்டு ஒரு பேப்பரில் எழுதி கொடுத்துள்ளார்கள்.

திம்புவில் இருந்தே பேரினவாதத்தின் நிலை இதுதானே.

மன்னிக்கவேண்டும் இதில் அரசியல் நகர்வை நான் தேடி, தேடி பார்த்தேன்…கடல்லையே இல்லையாம்🤣

2 hours ago, island said:

“விலை போகாத தலைமை” என்ற நிலையை அடைவதானால் தற் போதைய நிலையில் பல உள்ளூர்/ புலம் பெயர் முகநூல், இணையத்தள, அரசியல்  தாதாக்களை திருப்தி செய்வது மட்டும் தான் ஒரே வழி என்பதே ground reality.  

அது மாறவேண்டும் என்றே நான் விரும்புகிறேன். 

இல்லை. இவர் எல்லருமே உதிரிகள். 

டயஸ்போரா தமிழரை எந்த தனிநபரோ, அமைப்போ பிரதிநிதிபடுத்தும் நிலை இனி வேண்டாம்.

இந்த டயஸ்போராவில் இருந்து, வாழும் நாடுகளில் அரசியல் செய்யும் தலைவர்கள் தலைமை ஏற்க வேண்டும், கூட்டாக.

2 hours ago, விசுகு said:

என்னை உதாரணம் காட்டியதால்.....

என் சொல்லுக்கு இருக்கும் பெறுமதியை நான் இயங்குநிலையில் உள்ளபோது அந்த மக்களுக்காக பாவிக்க வேண்டும் என்ற பெருவிருப்பம் உண்டு. அந்த வகையின் கடைசி எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் மாவீரர் நாளில் முடிவுக்கு வந்தது. 😭

ஏமாந்து விட்டோமா? ஏன் எம்மை ஏமாற்றினார்கள்? எம் இலக்கை தடுக்க அல்லவா? 

அப்போ ஏமாற்றியோருக்கு நாம் கொடுக்கும் பதில் என்ன?

முன்னையை விட வீரியமாக இலக்கை நோக்கி செயல்படுவது.

27/11/23 ஆல் நீங்கள் சோர்ந்து போனால் - அவர்கள் வென்றார்கள் என்றாகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

@ஈழப்பிரியன் - துருவை எவ்வளவுதான் தீயில் போட்டு வாட்டி, பட்டறையில் வைத்து அடித்தாலும் - அதை வைத்து நாம் வாள் செய்ய முடியாது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

டயஸ்போரா தமிழரை எந்த தனிநபரோ, அமைப்போ பிரதிநிதிபடுத்தும் நிலை இனி வேண்டாம்.

முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்க முயற்சிகள் நடந்தபோது அதில் நானும் அக்கறையுடன் இயங்கினேன். அந்த நேரம் தலைவருடன் பிரான்சில் செயற்பட்ட சில  நண்பர்களுடன் நடந்த சந்திப்பில் ஒருவரிடம் எமது தலையெழுத்தை ஒப்படைப்பது ஆபத்தானது என்ற கருத்து முன் வைக்கப்பட்டது. அது எனக்கும் சரியாகவே பட்டது. அன்றிலிருந்து அவ்வமைப்பு சார்ந்து சில உதவிகளை செய்வதோடு நிறுத்திக் கொண்டேன். இன்றைய உங்கள் கருத்து என் அன்றைய முடிவை இன்றும் மேலும் சரியாக்கிறது.  நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

எனது எழுத்துக்களை  கவனமாக பார்ப்பீர்களானால்  தனிப்பட்ட ரீதியில் தாக்குவதை இயன்ற அளவிலும் தவிர்க்க முனைந்தே கருத்துரைத்து வந்திருக்கிறேன்….  ஆனால் தொடர்ச்சியாக , முட்டாள்தனமாக தனிப்பட்ட ரீதியில்  தாக்கப்படும்போது பொறுமை இழக்க நேரிடுகிறது. தனிநபர் தாக்குதலை தடவிக் கொடுத்து, கொம்பு சீவிவிடவும்  ஒரு சில  இருக்கின்றன என்பதையும் கவனியுங்கள். 

எதற்கும் ஒரு அளவிருக்கிறதல்லவா? 

ஆமா ..இல்லாதது ஒன்றை ஊதிப்பெருப்பித்து...தமிழரை மூளைசலவை செய்து...கான்சர் வருத்தம்போல்..படிபடியாக ஊடுருவி..அவர்களை அழித்தொழிப்பதே..உங்கள்  தொழில்...அதாவது வேதனத்துக்குச்  செய்யும்வேலை...இந்த யாழில் தேடினால் உங்கள் பதிவுகளில் இருந்து 6 மாதக் குழந்தை கூட புரிந்து கொள்ளும்...அதாவத் நரித்தனமாய் ..நல்லவர்..போல் நடித்து வலுக்கட்டாய திணிப்புச் செய்வது...இதனை யாராலும் மறுக்க முடியாதே...இதுபோலத்தன் சுரேனின் விடையத்திலும் ...எத்தனையோபேர் அவரின் குணாதிசயத்தை இங்கு பதிவிட்டபோதும்...முயலுக்கு 3 கால் என்பதி குறியாக இருந்து... சூடு சொரணையற்ற ஜந்துகள்   போல திருப்பி திருப்பி ஒரே கேள்வியைப்போட்டு...அலப்பறை செய்து வருவது....இதி யார் சொல்லிக்கொடுத்த டியூசன்...போடுகின்ற பதிவுக்கு கிடைக்கும் அலவன்சா..அல்லதுஅதுக்கு மேலையும் கிடத்துவிட முயற்சியா...இதனை நான் இங்கு சொல்வதில் பயப்படப் போவதில்லை...எனெனில் ..இனத்துக்கு விசுவாசியாக அன்றிலிருந்து ..இன்றுவரை இருக்கின்றேன்....இனியும் இருப்பேன்..நானல்ல என் பரம்பரையும் அப்படித்தன் வளர்ந்து வருகின்றது..

புதிய நகர்வுகள் எதனையும் ஊக்குவிக்கக் கூடாது, மாறாக அவற்றை எப்பாடுபட்டாவது முடக்க வேண்டும்  என்பதில் சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்பது தெளிவாகப் பார்க்க முடிகிறது. 

யாரிங்கு புதிய நகர்வுகளை தடுத்தது...நகர்வு செய்பவர்..நல்லவராகவும் ,சுயநல னோக்கின்றி செயற்படுத்துபவ்ராகவும் இருக்க வேண் இந்த சுரேனைப் பொறுத்தவரை 2 வருசமாக பிக்குமாரிடம் கதைத்தவர் என்றல்...கடந்த 2 வருடத்தில் ..புது விகாரை..தையிட்டி ,குருந்தூர் மலையில் நடந்தது என்ன..மட்டக்கிளப்பில் நடந்தது என்ன...இப்படிப்பல.. காணாமல் ஆக்கப்ப்ட்டோர், பல்கலை மாணவர்கள்,சிவில் சமூகம்..நாட்டில் போராடுகிறார்களே...அவர்களிடம் ஒருகதை...கிடையாது...எத்தனையோ புலம்பெயர் நாடூகளில் எவ்வளவு காலத்தின்பின் சில சமிக்கைகள் கிடைத்திருக்கின்றன...இதைக்கண்ட பிக்குமார்..ஓடி விழித்து பிச்ச சுண்டெலந்தான்..சுரேன்...எடுத்த எடுப்பிலேயே..புலம்பெயர் தமிழரின் அடையாள்த்தயே விற்றுவிட்டது...இனி என்னவெல்லாமோ விற்குமோ தெரியாது... தெரியாமல்தான் கேட்கின்றென்...சுரேனால் தானிருக்கும் நாட்டில் ஒரு ஆர்ப்பாட்டத்தையோ நடத்தமுடியுமா...அல்லது ஒரு ஆதரவு  கூட்டத்தையாவது கூட்ட முடியுமா...அதுசரி சுரேனுக்கு கொடிபிடிக்கும் நீங்களாவது சில அட்வைஉ கொடுத்திரூகலாமல்லே..அதுகு உங்களுக்கு நேரம் வாராது..தேடித்தேடி..பதிவு போட்டல்தானே..வண்டியோடும்...கனகக்க எழுதிவிட்டேன் போல தெரியுது..  இன்னமும் இருக்கிறது அன்பரே...எதையும் எழுத பின்நிற்கமாட்டேன்....ஏனினில் என்மீது எந்தவித  முட்டையையும் அடிக்க முடியாது ..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

நினைவூட்டல்:

தமிழர்கள் சிங்களவரோடுதான் பேச வேண்டும். 

அதேபோல் இந்தியாவை நாம் விரும்பினாலும் புறம் தள்ள முடியாது.

இவை நான் அடிக்கடி எழுதுபவை.

அதேபோல் முன்னர் சம் சும், சுரேனின் சோனியா காந்தி சந்திப்பு உட்பட பல நகர்வுகளை நானும் வரவேற்றுள்ளேன்.

இவை எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை தனியே சிங்களவரோடு மட்டும் பேசுவதால் எமக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என நம்புவது ஏமாற்றத்தில் போய் முடியும் என்பதும்.

இன்னும் ஒரு 2 வருடத்தில் - எதுவும் நடந்திராது. நேரம் மட்டும் ஓடியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

உண்மையில் பலதை தெளிவாக எழுதும் நீங்கள் இதில் என்ன அரசியலை கண்டீர்கள். என்ன நகர்வை கண்டீர்கள் என்பதுதான் எனக்கு விளங்கவே இல்லை

ஐயோ ஐயோ  கோஷான் நான் அரசியல் நகர்வு என்று கூறியது தமிழ் மக்களின் அரசியல் தரப்புக்கள் சிங்கள மக்களின் பொது அமைப்புகள் பலவற்றுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு நல்லுறவை வளர்பபதன் மூலம் இரு பக்க மக்களுக்குள்  இருக்கும் இடைவெளியை குறைத்து   எதிர் காலத்தில் அரசியல் தீர்வு காண்பதற்கு இலகுவான நிலமையை ஏற்படுத்துவது பற்றியதே.

அரசியல் Negotiation என்பது  வெவ்வேறு அரசியல் கொள்கைகளுடன் பயணிக்கும் இரு தரப்புகள் படிப்படியாக தமக்குள் விட்டுக்கொடுப்புகளை செய்து ஒரு புள்ளியில் சந்திப்பது தானே.  இங்கு நான் சுரேனைப்பற்றி கூறவில்லை.  சுரேனை அடித்து விரட்டிவிட்டு தமிழ் தரப்புகள் சுரேனைப் போல் அதிகார தரப்புகளை மட்டும் சந்திக்காது அனைத்து அமைப்புகளையும் சந்திக்கலாம் தானே! 

20 minutes ago, goshan_che said:

இந்த டயஸ்போராவில் இருந்து, வாழும் நாடுகளில் அரசியல் செய்யும் தலைவர்கள் தலைமை ஏற்க வேண்டும், கூட்டாக.

இதனை நான் ஏற்கிறேன். ஆனால் இது நடைமுறை சாத்தியமா?  சட்ட சிக்கல் இல்லையா?

ஒரு நாட்டில் அரசியலில்,  பாராளுமன்ற பதவியில் அல்லது அமைச்சர் பதவியில் அல்லது அவர் சார்ந்த  கட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் வேறு ஒரு நாட்டில் அரசியல் பிரச்சனையில் தலையிடலாமா?   அந்த நாட்டின் அரசியல. அமைப்பின் தலைமை வகிக்கலாமா? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

ஆமா ..இல்லாதது ஒன்றை ஊதிப்பெருப்பித்து...தமழ்ரை மூளைசலவை செய்து...கான்சர் வருத்தம்போல்..படிபடியாக ஊடுருவி..அவர்களை அழித்தொழிப்பதே..உங்கள்  தொழில்...அதாவது வேதனத்துக்குச்  செய்யும்வேலை...இந்த யாழில் தேடினால் உங்கள் பதிவுகளில் இருந்து 6 மாதக் குழந்தை கூட புரிந்து கொள்ளும்...அதாவத் நரித்தனமாய் ..நல்லவர்..போல் நடித்து வலுக்கட்டாய திணிப்புச் செய்வது...இதனை யாராலும் மறுக்க முடியாதே...இதுபோலத்தன் சுரேனின் விடையத்திலும் ...எத்தனையோபேர் அவ்ரின் குணாதிசயத்தை இங்கு பதிவிட்டபோதும்...முயலுக்கு 3 கால் என்பதி குறியாக இருந்து... சூடு சொரணையற்ற ஜந்துகள்   போல திருப்பி திருப்பி ஒரே கேள்வியைப்போட்டு...அலப்பறை செய்து வருவது....இதி யார் சொல்லிக்கொடுத்த டியூசன்...போடுகின்ற பதிவுக்கு கிடைக்கும் அல்வன்சா..அல்லதுஅதுக்கு மேலையும் கிடத்துவிட முயற்சியா...இதனை நான் இங்கு சொல்வதில் பயப்படப் போவதில்லை...எனெனில் ..இனத்துக்கு விசுவாசியாக அன்றிலிருந்து ..இன்றுவரை இருக்கின்றேன்....இனியும் இருப்பேன்..நானல்ல என் பரம்பரையும் அப்படித்தன் வளர்ந்து வருகின்றது..

புதிய நகர்வுகள் எதனையும் ஊக்குவிக்கக் கூடாது, மாறாக அவற்றை எப்பாடுபட்டாவது முடக்க வேண்டும்  என்பதில் சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்பது தெளிவாகப் பார்க்க முடிகிறது. 

யாரிங்கு புதிய நகர்வுகளை தடுத்தது...நகர்வு செய்பவர்..நல்லவராகவும் ,சுயநல னோக்கின்றி செயற்படுத்துபவ்ராகவும் இருக்க வேண் இந்த சுரேனைப் பொறுத்தவரை 2 வருசமாக பிக்குமாரிடம் கதைத்தவர் என்றல்...கடந்த 2 வருடத்தில் ..புது விகாரை..தையிட்டி ,குருந்தூர் மலையில் நடந்தது என்ன..மட்டக்கிளப்பில் நடந்தது என்ன...இப்படிப்பல.. காணாமல் ஆக்கப்ப்ட்டோர், பல்கலை மாணவர்கள்,சிவில் சமூகம்..நாட்டில் போராடுகிறார்களே...அவர்களிடம் ஒருகதை...கிடையாது...எத்தனையோ புலம்பெயர் நாடூகளில் எவ்வளவு காலத்தின்பின் சில சமிக்கைகள் கிடைத்திருக்கின்றன...இதைக்கண்ட பிக்குமார்..ஓடி விழித்து பிச்ச சுண்டெலந்தான்..சுரேன்...எடுத்த எடுப்பிலேயே..புலம்பெயர் தமிழரின் அடையாள்த்தயே விற்றுவிட்டது...இனி என்னவெல்லாமோ விற்குமோ தெரியாது... தெரியாமல்தான் கேட்கின்றென்...சுரேனால் தானிருக்கும் நாட்டில் ஒரு ஆர்ப்பாட்டத்தையோ நடத்தமுடியுமா...அல்லது ஒரு ஆதரவு  கூட்டத்தையாவது கூட்ட முடியுமா...அதுசரி சுரேனுக்கு கொடிபிடிக்கும் நீங்களாவது சில அட்வைஉ கொடுத்திரூகலாமல்லே..அதுகு உங்களுக்கு நேரம் வாராது..தேடித்தேடி..பதிவு போட்டல்தானே..வண்டியோடும்...கனகக்க எழுதிவிட்டேன் போல தெரியுது..  இன்னமும் இருக்கிறது அன்பரே...எதையும் எழுத பின்நிற்கமாட்டேன்....ஏனினில் என்மீது எந்தவித  முட்டையையும் அடிக்க முடியாது ..

@ஈழப்பிரியன் தங்களின் கவனத்திற்கு.

☹️

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

கடைசியில் சுரேன் மாதிரி ஆகிட்டிங்களே....வலிந்துபோய் ஆதரவு திரட்ட.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

சுரேனை அடித்து விரட்டிவிட்டு தமிழ் தரப்புகள் சுரேனைப் போல் அதிகார தரப்புகளை மட்டும் சந்திக்காது அனைத்து அமைப்புகளையும் சந்திக்கலாம் தானே! 

இப்போ சுரேனை அடித்து விரட்டும் வேலை தான் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றது . அதன் பின்பு  நல்ல  தமிழர்கள் தரப்புக்கள் அனைத்து அமைப்புகளையும் சந்திக்கும் சந்திப்பு இனிதே நடைபெறும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.