Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: DIGITAL DESK 3   05 JAN, 2024 | 12:00 PM

image

சுவீடனில் 24  மணித்தியாலத்திற்கு மேலாக பொழிந்த கடும் பனியினால் ஸ்கேன் பகுதியில் உள்ள E22 பிரதான வீதியில் 1000 வாகனங்கள் சிக்கியுள்ளன.

சுவீடனில் செவ்வாய்க்கிழமை கடும் குளிரினால் வெப்பநிலை -40 டிகிரி செல்சியஸிற்கும் கீழ் வெப்பநிலை குறைந்துள்ளது.

ஹார்பி மற்றும் கிறிஸ்டியான்ஸ்டாட் இடையே இரு திசைகளிலும் பனி சூழ்ந்ததால் புதன்கிழமை அந்நாட்டு உள்ளூர் நேரப்படி காலை 9.00 மணிக்கு E22 பிரதான வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது.

இந்நிலையில், E22 பிரதான வீதியில் காரில் சிக்கி இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், வியாழக்கிழமை காலை வரை லொறி சாரதிகள் மட்டுமே தங்கள் வாகனங்களில் இருந்ததாகவும்  அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்,  சுமார் 180 வாகனங்களை விடுவிக்க இன்னும் முயற்சி செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பாவில் கடும் பனி பொழிவால் நோர்டிக் நாடுகளில் வெப்பநிலை குறைந்துள்ளது.

இதன் காரணமாக சுவீடன், பின்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் கடுமையான குளிர் வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதன் கிழமை முதல் டென்மார்க்கில் பனிப்புயலால் ஆர்ஹஸ் அருகே உள்ள அதிவேக வீதியில் வாகனங்கள் சிக்கியுள்ளன.

-kyNlwpK.jpg

GC_tLpwacAATSWR.jpg

https://www.virakesari.lk/article/173177

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நோர்வேயிலும் அதிக பனிப்பொழிவு என்று சொன்னார்கள்.
சாதாரணமாகவே இந்த நாடுகளில் அதிக பனி வீழ்ச்சி இருக்கும்.
இம்முறை ஐரோப்பா எங்கும்  எதிர்பாராத அளவில் மிக அதிக குளிரும்,  
பனி வீழ்ச்சியம் இருக்கும் என்று சொல்கிறார்கள். 

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, தமிழ் சிறி said:

நோர்வேயிலும் அதிக பனிப்பொழிவு என்று சொன்னார்கள்.
சாதாரணமாகவே இந்த நாடுகளில் அதிக பனி வீழ்ச்சி இருக்கும்.
இம்முறை ஐரோப்பா எங்கும்  எதிர்பாராத அளவில் மிக அதிக குளிரும்,  
பனி வீழ்ச்சியம் இருக்கும் என்று சொல்கிறார்கள். 

டென்மார்க்கில் போக்குவரத்து முழுவதுமாக முடங்கி பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, விசுகு said:

டென்மார்க்கில் போக்குவரத்து முழுவதுமாக முடங்கி பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. 

கனடா இந்த முறை பனிப் பொழிவில் அடக்கி வாசிக்கின்றது போலுள்ளது.
பின்னடிக்கு... வெளுத்து வாங்கப் போகின்ற பிளானாகவும் இருக்கலாம். 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, தமிழ் சிறி said:

கனடா இந்த முறை பனிப் பொழிவில் அடக்கி வாசிக்கின்றது போலுள்ளது.
பின்னடிக்கு... வெளுத்து வாங்கப் போகின்ற பிளானாகவும் இருக்கலாம். 🤣

ஆமாம்

அங்கே இப்போ பிரான்ஸ் மாதிரி காலநிலை என்று நடைப்பயிற்சி எல்லாம் ஒழுங்காக நடக்குது. ஆனால் அது கனடா என்பதை விரைவில் காட்டும் 😂

-40 வராவிட்டால் அது கனடாவுக்கு எவ்வளவு அவமானம்?😛

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, விசுகு said:

ஆமாம்

அங்கே இப்போ பிரான்ஸ் மாதிரி காலநிலை என்று நடைப்பயிற்சி எல்லாம் ஒழுங்காக நடக்குது. ஆனால் அது கனடா என்பதை விரைவில் காட்டும் 😂

-40 வராவிட்டால் அது கனடாவுக்கு எவ்வளவு அவமானம்?😛

H%C3%A4user-sind-teilweise-ganz-unter-de

animiertes-schnee-bild-0098.gif    animiertes-schnee-bild-0018.gif    animiertes-schnee-bild-0033.gif   animiertes-schnee-bild-0090.gif  animiertes-schnee-bild-0050.gif

நமக்கு -5 மாதிரி... அவங்களுக்கு -40 வந்தால்தான் எமக்கு அல்ப சந்தோசம்.  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, விசுகு said:

ஆமாம்

அங்கே இப்போ பிரான்ஸ் மாதிரி காலநிலை என்று நடைப்பயிற்சி எல்லாம் ஒழுங்காக நடக்குது. ஆனால் அது கனடா என்பதை விரைவில் காட்டும் 😂

-40 வராவிட்டால் அது கனடாவுக்கு எவ்வளவு அவமானம்?😛

கொஞ்சம் குளிர் தொடங்கிட்டு ஆனாலும் பனி தான் இன்னும் சரியாக கொட்டவில்லை.அனேகமாக சித்திரைக்கு பின்னரும் வைத்து கொட்டித் தள்ளும் என்று எதிர் பார்க்கலாம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, விசுகு said:

-40 வராவிட்டால் அது கனடாவுக்கு எவ்வளவு அவமானம்?😛

அட நீங்கள் வேறை விசுகர்! - 40  கனடாவிலை   இல்லையெண்டால்  எங்களைப்போல மற்றவன்ரை நிலைமையை ஒருக்கால் யோசிச்சு பாருங்கோ..... அந்த - 40 தான் எங்கடை கனடாக்காரற்ரை எல்லாத்தையும் அடக்கி வைச்சிருக்குது 😋

  • Haha 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.