Jump to content

டி20 உலகக் கோப்பைச் செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை வீழ்த்திய வங்கதேசத்தின் புது ஆயுதம் - த்ரில் ஆட்டத்தில் திருப்பம் தந்த சிக்ஸர்கள்

SL vs BAN

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சமீப காலமாக, இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு எந்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்குமோ அதற்கும் சற்று குறையாத ஆர்வம் வங்கதேசம்-இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துக்கும் இருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இலங்கை-வங்கதேசம் மோதிக்கொண்டாலே களத்தில் ஏதாவது ஸ்வாரஸ்ய சம்பவங்கள் நடக்கும். நாகி டான்ஸ், கேலிப் பேச்சுகள், போட்டியில் இரு அணி வீரர்களும் ஸ்லெட்ஜிங் முதல் கிண்டல் வரை ஆவேசமாக நடந்து கொள்வார்கள் என்பதாலேயே ரசிகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படும்.

அந்த வகையில் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடந்த டி20 உலகக் கோப்பையில் இலங்கை - வங்கதேசத்துக்கு இடையிலான ஆட்டத்திலும் கடைசி வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஆட்டம் நகர்ந்தது.

டல்லாஸ் நகரில் நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரின் டி பிரிவில் நடந்த 15-வது ஆட்டத்தில் இலங்கை அணியை வங்கதேசம் எதிர்கொண்டது.

முதலில் பேட் செய்த இலங்கை அணியை 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களில் சுருட்டியது வங்கதேசம். 125ரன்கள் எனும் எளிதான இலக்கை துரத்திய வங்கதேசம் 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணியை இதுவரை வங்கதேசம் வென்றதில்லை என்ற வரலாற்றை வங்கதேசம் மாற்றி எழுதி, இலங்கைக்கு எதிராக முதல் வெற்றியைப் பெற்றது.

பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘ஸ்லோ-பால்’ எனும் ஆயுதம்

வங்கதேசத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பந்துவீச்சாளர்கள்தான். குறிப்பாக முஸ்தபிசுர் ரஹ்மான், சுழற்பந்துவீச்சாளர் ரிசாத் ஹூசைன், தஸ்கின் அகமது ஆகியோர் சேர்ந்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு அடித்தளமிட்டனர்.

இதில் ரிசாத் ஹூசைன் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். முஸ்தபிசுர் ரஹ்மான் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டாலாஸ் ஆடுகளம் மெதுவானது என்பதைப் புரிந்து கொண்டு அதிகமான ஸ்லோவர் பந்துகளை முஸ்தபசுர் வீசி இலங்கை பேட்டர்களை திணறவிட்டார். அதேபோல ரிசாத் ஹூசைன் பந்துவீச்சில் பந்து மெதுவாக வந்தது இலங்கை பேட்டர்களுக்கு தலைவலியாக இருந்தது.

பேட்டிங்கில் வங்கதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பிய நிலையில் நடுவரிசை பேட்டர்கள் லிட்டன் தாஸ்(30) ஹிர்தாய்(40) அமைத்த பார்ட்னர்ஷிப்தான் வெற்றியை உறுதி செய்தது. திடீரென 3 விக்கெட்டுகளை இழந்து ஆட்டம் இலங்கை பக்கம் படிப்படியாக நகர்ந்த நிலையில் அனுபவ வீரர் மெகமதுல்லா அடித்த சிக்சரும் நிதான ஆட்டமும் வெற்றியை உறுதி செய்தன.

 
SL vs BAN

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கை ஏன் தோற்றது?

இலங்கை அணியைப் பொருத்தவரை 124 ரன்களை வைத்துக் கொண்டு அதற்குள் எதிரணியை கட்டுப்படுத்துவது என்பது கடினமானது. பேட்டிங்கில் நிசங்காவை(47) தவிர வேறு யாரும் சிறப்பாக ஆடவில்லை. 100 ரன்கள் வரை இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால் அடுத்த 25 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. வங்கதேச பந்துவீச்சாளர்கள் ஸ்லோவர் பால் எனும் ஆயுதத்தை கையில் எடுத்ததால் இலங்கை பேட்டர்களால் நினைத்த ஷாட்களை ஆடமுடியவில்லை. இதனால் ஒவ்வொரு பேட்டரும் கிராஸ்பேட் போட்டு அடிக்க முற்பட்டு தங்களின் இயலாமையை வெளிப்படுத்தி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

இலங்கை அணி 124 ரன்கள் சேர்த்ததில் பெரும்பங்கு தொடக்க ஆட்டக்காரர் நிசங்காதான். 28 பந்துகளில் நிசங்கா 47 ரன்கள் சேர்த்தார். இதில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 167 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும்கூட நிசாங்காதான் ஓரளவுக்கு பேட் செய்து இரட்டை இலக்க ரன் சேர்த்தார். இந்த ஆட்டத்தில் நிசாங்கா களத்தில் இருந்த வரை இலங்கையின் ரன்ரேட் 7 என்ற அளவில் நல்ல நிலையி்ல் இருந்தது. 9-வது ஓவரில் முஸ்தபிசுர் பந்துவீச்சில் நிசாங்கா ஆட்டமிழந்த பின்புதான் இலங்கையின் சரிவு தொடங்கியது.

அடுத்த 54 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இலங்கை அணி மளமளவென இழந்தது. தனஞ்செய டி சில்வா(21), சரித் அசலங்கா(19), மேத்யூஸ்(16), குஷால் மென்டிஸ்(10) ஆகியோர் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்றவகையில் பெரும்பாலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

17-வது ஓவரிலிருந்து 20 ஓவர் வரை ஒவருக்கு ஒரு விக்கெட் வீதம் இலங்கை அணி இழந்தது. இலங்கை பேட்டர்கள் இந்த ஆட்டத்தில் ஒட்டுமொத்தத்தில் 12 பவுண்டரிகள் மட்டுமே அடித்திருந்தனர். கடைசி 6 ஓவர்களில் ஒரு பவுண்டரி மட்டுமே இலங்கை பேட்டர்கள் அடித்திருந்தனர்.

அது மட்டுமல்லாமல் முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய பெரும்பாலான பந்துகள் ஸ்லோவர் பால், கட்டர்களை வீசியதால் அதை அடிக்க முற்பட்டு இலங்கை பேட்டர்கள் ஏமாந்தனர். ஒரு கட்டத்தில் வெறுப்பின் உச்சத்துக்கு சென்ற இலங்கை பேட்டர்கள் கிராஸ்போட்டு காட்டடிக்கு முயன்ற போது, விக்கெட்டை இழக்கத் தொடங்கினர்.

வங்கதேசத்தை காப்பாற்றிய ஹிர்தாய், தாஸ்

வங்கதேசம் அணி குறைந்த இலக்கை துரத்திய போது, இலங்கை பந்துவீச்சாளர்களும் அவர்களை ரன் சேர்க்க விடாமல் நெருக்கடி ஏற்படுத்தினர். முதல் ஓவரிலேயே சவுமியா சர்க்காரை டக்அவுட்டில் வெளியேற்றினார் டி சில்வா. பவர்ப்ளே ஓவர் முடிவதற்குள் தன்சித் ஹூசைன், கேப்டன் சான்டோவை ஆட்டமிழக்கச் செய்து துஷாரா நெருக்கடி ஏற்படுத்தினார்.

 
SL vs BAN

பட மூலாதாரம்,GETTY IMAGES

திருப்புமுனை சிக்ஸர்கள்

4வது விக்கெட்டுக்கு ஹிர்தாய், லிட்டன் தாஸ் கூட்டணி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். அதிலும் 12வது ஓவர் வரை ரன்ரேட் மந்தமாக இருந்தது. ஆனால், ஹசரங்கா வீசிய 12வது ஓவரில் ஹிர்தாய் அடித்த 3 சிக்ஸர்கள்தான் ஆட்டத்தை புரட்டிப்போட்டது. ஹிர்தாய் அடித்த 4 சிக்ஸர்களும் ஹசரங்கா பந்துவீச்சில் அடிக்கப்பட்டவை. இருவரும் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றனர். லிட்டன் தாஸ்(36), ஹிர்தாய்(40) ஆகிய இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.

கடைசி 5 ஓவர்களில் வங்கதேசம் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது. சகிப் அல் ஹசனும் 8 ரன்னில் ஆட்டமிழக்கவே வங்கதேசம் பதற்றமடைந்தது. துஷாரா வீசிய 18-வது ஓவரில் ரிசாத் ஹூசைன், தஸ்கின் அகமது அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்த போது ஆட்டம் திடீரென இலங்கை கரங்களுக்கு மாறியது.

2 ஓவர்களில் 11 ரன்கள் வங்கதேச வெற்றிக்குத் தேவைப்பட்டது. சனகா வீசிய 19-வது ஓவரில் அனுபவ வீரர் மெகமதுல்ல சிக்ஸர் விளாசவே பதற்றம் தணிந்தது. அதன்பின் 2 சிங்கிள்கள், ஒரு வைட் என 3 ரன்கள் கிடைத்தது. அந்த ஓவரிலேயே இலங்கை வீரர்களின் மோசமான பீல்டிங் காரணமாக, ஓவர்த்ரோவில் 2 ரன்களைப் பெற்று வங்கதேசம் எளிதாக வென்றது.

SL vs BAN

பட மூலாதாரம்,GETTY IMAGES

பேட்டர்களை சாடிய இலங்கை கேப்டன்

இலங்கை கேப்டன் ஹசரங்கா கூறுகையில் “ எங்களின் பேட்டர்கள் முதல் 10 ஓவர்கள் வரை சிறப்பாக பேட் செய்தனர். நடுப்பகுதி ஓவர்களில் நாங்கள் சிறப்பாக பேட் செய்யவில்லை. எங்களின் பந்துவீச்சுதான் எங்கள் பலம் என்பது எங்களுக்குத் தெரியும்.

150 ரன்களுக்கு மேல் குவித்திருந்தால் நிச்சயம் எங்கள் பந்துவீ்ச்சால் வென்றிருப்போம். கடந்த 2 போட்டிகளிலும் பேட்டர்கள் சிறப்பாகச் செயல்படவில்லை. முதல் இரு ஆட்டங்களிலும் தோல்விஅடைந்துவிட்டோம். பந்துவீச்சாளர்கள் பணியை சிறப்பாகச் செய்துவிட்டனர்” என்று தெரிவித்தார்.

 
SL vs BAN

பட மூலாதாரம்,GETTY IMAGES

"120 சதவீதம் பங்களித்தோம்"

வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹூசைன் சான்டோ கூறுகையில் “ ஒவ்வொருவரின் உடல்மொழியும் சிறப்பாக இருந்தது, 120 சதவீதம் பங்களிப்பு செய்தோம். கடந்த 15 நாட்களாக திட்டமிட்டோம்,அனைத்து வீரர்களும் தங்களின் பங்களிப்பு சிறப்பாகச் செய்தனர். இலங்கை அணியும் நன்றாக பந்துவீசியது, ஆனால் இந்த விக்கெட் எங்களுக்குச் சாதகமாக இருந்தது. லிட்டன் தாஸ் தடுமாறி வந்தாலும் இந்த ஆட்டத்தில் அவரின் பங்களிப்பு சிறப்பானது. ஹிர்தாய் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்”எ னத் தெரிவித்தார்.

இலங்கை வெளியேறுமா?

வங்கதேசம் அணி வெற்றியுடன் உலகக் கோப்பையை தொடங்கியுள்ளது. இலங்கையை வென்றதன் மூலம் 2 புள்ளிகள் பெற்று, நிகர ரன்ரேட்டில் 0.379 என்று 3-வது இடத்தில் இருக்கிறது.

இலங்கை அணிக்கு இது 2வது தோல்வியாகும். இதனால் அடுத்த இரு ஆட்டங்களிலும் இலங்கை வென்றாலும் கூட சூப்பர்-8 சுற்றுக்குச் செல்வது கடினமாகும். நேபாளத்தையும், நெதர்லாந்தை வென்றாலும், மற்ற அணிகளின் வெற்றி, தோல்விக்காக இலங்கை காத்திருக்க வேண்டும்.

https://www.bbc.com/tamil/articles/c1rr9qzr5wpo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதலில் ஐபிஎல் எஃபெக்ட்; ரன் குவிப்புக்கு உதவிய மைதான 'ரகசியம்'

AUS vs ENG

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்தியாவில் ஐபிஎல் டி20 போட்டியை பார்த்தபின் அதுபோன்று டி20 உலகக் கோப்பை இல்லையே என்று ரசிகர்களுக்கு இருந்த ஏக்கம் நேற்று மாறியது. பேட்டர்களின் ஆதிக்கம், சிக்ஸர்கள், பவுண்டரிகளை பறக்கவிடும் ஆட்டத்தைப் பார்த்த மனநிறைவு நேற்று ரசிகர்களுக்கு ஏற்பட்டது.

பர்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுன் நகரில் நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் பி பிரிவில் 17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆஸ்திரேலியா அணி.

AUS vs ENG

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வார்னர், ஹெட் அதிரடி தொடக்கம்

இங்கிலாந்து அணி தனது டி20 வரலாற்றில் முதல்முறையாக சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து பந்துவீச்சைத் தொடங்கியது. ஆனால், காய்ந்துபோன பர்படாஸ் விக்கெட்டில் இந்த பந்துவீச்சு எடுபடவில்லை. மொயின் அலி வீசிய முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட், வார்னர் ஜோடி 3 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். இருவருமே இடதுகை பேட்டர்கள் என்பதால், ஆப் ஸ்பின்னர் மொயின் அலியைப் பயன்படுத்தினர்.

ஆனால், 14 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே பந்துவீசிய அனுபவம் கொண்ட வில் ஜேக்ஸுக்கு பந்துவீச கேப்டன் பட்லர் வாய்ப்பளித்தார். ஆனால், ஜேக்ஸ் பந்துவீச்சை வெளுத்த வார்னர் 4 பந்துகளில் 3 பவுண்டரிகளை விளாசினார்.

அதன்பின் மார்க் உட் பந்துவீச வந்தபின், வார்னர், ஹெட் வெளுத்து வாங்கினர். குறிப்பாக குறைந்த தொலைவு கொண்ட ஸ்குயர் பவுண்டரி பகுதியில் 3 சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் வார்னர் வெளுத்தார். வார்னர் அதிரடியாக ஆடி வந்த நிலையில் மொயின் அலி பந்துவீச்சில் தாழ்வாக வந்த பந்தை அடிக்க முற்பட்டபோது போல்ட் ஆகி 39 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு வார்னர்-ஹெட் ஜோடி 4.6 ஓவர்களில் 70 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேயில் ஆஸ்திரேலிய அணி 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் சேர்த்தனர்.

காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் பழைய வேகம், ஸ்விங் காணப்படவில்லை. தோள்பட்டை வலி காரணமாக பந்துவீச்சு ஆக்ஸனை மாற்றியதால், ஆர்ச்சரின் பந்துவீச்சின் வேகம் குறைந்துவிட்டது. இருப்பினும் பர்படாஸ் மைதானத்தில் ஹெட்டை கிளீன் போல்டாக்கி முதல் விக்கெட்டை ஆர்ச்சர் எடுத்தார். டி20 உலகக் கோப்பையில் பவர்ப்ளேயில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி 74 ரன்களைச் சேர்த்தது.

அதன்பின் மிட்ஷெல் மார்ஷ்(35), மேக்ஸ்வெல்(28), ஸ்டாய்னிஷ்(30) என நடுவரிசை பேட்டர்கள் விரைவாக ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதனால் 15 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் ஸ்டாய்னிஷ், டிம் டேவிட்(11) மேத்யூ வேட்(17) ஆகியோரின் கேமியோ 200 ரன்களைக் கடக்க உதவியது.

 
AUS vs ENG

பட மூலாதாரம்,GETTY IMAGES

இங்கிலாந்து பந்துவீச்சு படுமோசம்

நடப்பு சாம்பியன் என்று சொல்லும் அளவுக்கு இங்கிலாந்து பந்துவீச்சு தரமானதாக இல்லை. 7 பந்துவீச்சாளர்களில் ஆர்ச்சர், லிவிங்ஸ்டன் தவிர மற்றவர்கள் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். அதிலும் மார்க் உட் பந்துவீச்சில் பந்து எந்தவிதமான ஸ்விங்கும் ஆகாமல் நேராக பேட்டரை நோக்கியே வந்தது அடித்து ஆட வசதியாக இருந்தது.

அதேபோல கிறிஸ் ஜோர்டன், அடில் ரஷித் இருவரும் ரன்களை வாரி வழங்கினர். கட்டுக்கோப்புடன், லைன் லென்த்தில் இங்கிலாந்து பந்துவீசியிருந்தால், ஆஸ்திரேலியாவை 170 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

AUS vs ENG

பட மூலாதாரம்,GETTY IMAGES

சால்ட், பட்லர் நம்பிக்கை

சவாலான இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பட்லர்(42), பில் சால்ட்(37) இருவரும் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். குறிப்பாக ஹேசல்வுட், ஸ்டார்க் இருவரின் பந்துவீச்சையும் சால்ட், பட்லர் வெளுத்துக் கட்டினர். ஸ்டார்க் பந்துவீச்சில் 106 மீட்டர் சிக்ஸரை சால்ட் அடித்தபோது, கொல்கத்தா அணியின் சக வீரரான சால்ட்டைப் பார்த்து ஸ்டார்க் சிரித்துக்கொண்டே சென்றார்.

வழக்கமாக இங்கிலாந்து-ஆஸ்திரேலிய வீரர்கள் முறைத்துக் கொள்ளும் சூழலில் ஐபிஎல் தொடர் இரு நாட்டுவீரர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டார்க் வீசிய 7வது ஓவரில் பட்லர், சால்ட் சேர்ந்து 19 ரன்கள் சேர்த்தனர். இருவரையும் பிரிக்க ஆடம் ஸம்பா கொண்டுவரப்பட்டார்.

AUS vs ENG

பட மூலாதாரம்,GETTY IMAGES

திருப்புமுனை ஓவர்கள்

ஸம்பா வீசிய முதல் ஓவரில் சால்ட் தாழ்வாக வந்த பந்தை அடிக்க முற்பட்டு போல்டாகி வெளியேறினார். ஸம்பாவின் 2வது ஓவரில் பட்லர் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முற்பட்டு கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆடம் ஸம்பா எடுத்த 2 விக்கெட்டுகள்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும். இந்த விக்கெட்டுகளுக்குப்பின் ஆட்டமே தலைகீழாக மாறியது.

விக்கெட் சரிவு

இருவரும் ஆட்டமிழந்தபின் இங்கிலாந்து பேட்டிங் வரிசையே ஆட்டம் கண்டது. பேர்ஸ்டோ 13 பந்துகளை வீணாக்கி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். மொயின் அலி 3 சிக்ஸர்களை மேக்ஸ்வெல் ஓவரில் வெளுத்து 25 ரன்களில் கேமியோவுடன் பெவிலியன் திரும்பினார்.

லிவிங்ஸ்டன்(15), ஜேக்ஸ்(10) இருவருமே நடுப்பகுதியில் நிலைத்து ஆட தவறிவிட்டனர். ஹாரி ப்ரூக்(20), ஜோர்டன்(1) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

AUS vs ENG

பட மூலாதாரம்,GETTY IMAGES

யாரும் அரைசதம் அடிக்கவில்லை

டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்கியதிலிருந்து 200 அதற்கு மேலான ரன்கள் சேர்க்கப்பட்ட முதல் போட்டி இதுதான். அது மட்டுமல்லாமல் பவர்ப்ளேயில் அதிகபட்சமாக வார்னர், ஹெட் சேர்ந்து 74 ரன்கள் சேர்த்த முதல் ஆட்டமும் இதுதான். ஆஸ்திரேலிய அணியில் எந்த பேட்டரும் அரைசதம் அடிக்கவில்லை.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோஸ் பட்லர், பில் சால்ட் கூட்டணியைப் பிரித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய சுழற்பந்துவீ்ச்சாளர் ஆடம் ஸம்பா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

ரன் குவிப்புக்கு உதவிய மைதான 'ரகசியம்'

கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தின் அமைப்பு ஆஸ்திரேலிய அணி 200 ரன்கள் சேர்க்க பெரிதும் உதவியது. மைதானத்தின் அமைப்பை தெரிந்து கொண்ட ஆஸ்திரேலிய பேட்டர்கள் அதை தங்களின் ரன் குவிப்புக்கு சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

அதாவது இந்த மைதானத்தின் ஒருபுறம் ஸ்குயர் பவுண்டரி அளவு மற்றொரு புற பவுண்டரி அளவைவிட 9 மீட்டர் குறைவாக 58 மீட்டர் அளவுடையது. இதனால் குறைந்த தொலைவுள்ள பக்கத்தில் பவுண்டரி, சிக்ஸர் அடிப்பது பேட்டர்களுக்கு எளிதாக இருக்கும் என்பதால், இரு அணியின் பேட்டர்களும் அந்தப்பகுதியை குறிவைத்தனர்.

இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் வில் ஜேக்ஸ் தொடக்கத்திலேயே பந்துவீச, அதை சரியாகப் பயன்படுத்தி வார்னர் 3 சிக்ஸர்களை சிறிய ஸ்குயர் பவுண்டரி பகுதியில் விளாசினார். மார்க் உட் வீசிய ஓவரையும் வார்னரும், டிராவிஸ் ஹெட்டும் இதே பகுதியில் 22 ரன்களைக் குவித்தனர்.

இதே பாணியைக் கடைபிடித்த இங்கிலாந்து வீரர்கள் ஜாஸ் பட்லர், பில் சால்ட் இருவரும் துவக்கத்தில் ஆஸ்திரேலியப் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். ஸ்டார்க் ஓவரில் 3 சிக்ஸர்களை பட்லரும், சால்ட்டும் பறக்கவிட்டு, மைதானத்தின் சூரிய ஒளித் தகட்டை உடைத்தனர். பவர்ப்ளேயில் 54 ரன்களை இங்கிலாந்து எட்டுவதற்கு மைதானத்தின் பவுண்டரி எல்லைக்கான தூரம் குறைவான பகுதியும் உதவியது.

பட்லர், சால்ட் ஜோடி 73 ரன்கள் எடுத்தது. இருவரையும் தனது அடுத்தடுத்த ஓவர்களில் ஆடம் ஸம்பா வெளியேற்றியபின். இங்கிலாந்து பேட்டிங் வரிசையே ஆட்டம் கண்ட, அடுத்த 92 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது. குறிப்பாக நடுவரிசை பேட்டர்கள் யாரும் ஆஸ்திரேலியப் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

AUS vs ENG

பட மூலாதாரம்,GETTY IMAGES

"பாடங்களைக் கற்றுக்கொண்டோம்"

வெற்றிக்குப் பின் ஆஸ்திரேலிய கேப்டன் மிட்ஷெல் மார்ஷ் கூறுகையில் “ சிறந்த ஆட்டம், அனைத்து தரப்பிலும் சிறப்பாகச் செயல்பட்டோம். பவர்ப்ளேதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்தது. முதல் போட்டியில் பல பாடங்களைக் கற்றுக்கொண்டோம். பந்துவீச்சாளர்கள் தங்கள் பணியை சிறப்பாகச் செய்தனர், அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

கம்மின்ஸ் சிறப்பாகப் பந்துவீசினார். அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களிடம் இருந்து கட்டுக்கோப்பான பந்துவீச்சும், ஓவர்களும் தேவை என்பதை நிரூபித்தார். இந்த சூழலை, காலநிலையை, காற்று அடிக்கும் திசையை பார்த்துவிட்டோம். இனி அதற்கு ஏற்றாற்போல் எங்களை மாற்றுவோம். தொடர்ந்து வெற்றிகளைப் பெற முயல்வோம்” எனத் தெரிவித்தார்.

 

இங்கிலாந்துக்குச் சிக்கல்

ஆஸ்திரேலிய அணி தனது வெற்றி மூலம் சூப்பர்-8 சுற்றுக்குச் செல்வதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது. ஆனால், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை சிக்கலில் கோர்த்துவிட்டுள்ளது. தற்போது 2 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா வலுவாக முதலிடத்தில் இருக்கிறது.

ஆனால், இங்கிலாந்து அணிக்கு முதல் போட்டி மழையால் ரத்தானதால் ஒரு புள்ளி கிடைத்தது. இந்த ஆட்டத்தில் தோல்வியால் 2 போட்டிகளில் ஒரு புள்ளியுடன் இருக்கிறது. 2வது இடத்தில் 3 புள்ளிகளுடன் ஸ்காட்லாந்து இருக்கிறது. ஆதலால், இனிவரும் இரு ஆட்டங்களிலும் இங்கிலாந்து அணி கட்டாயம் வென்று நிகர ரன்ரேட்டை உயர்த்த வேண்டும். அதேசமயம், ஸ்காட்லாந்து அணி அடுத்துவரும் இரு போட்டிகளிலும் தோற்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால் இங்கிலாந்து அணி லீக் சுற்றோடு நடையைக் கட்ட வேண்டியதிருக்கும்.

https://www.bbc.com/tamil/articles/ce441vxgddwo

Link to comment
Share on other sites

 

இந்திய அணிக்கு எதிராக குற்றம் சுமத்திய சிஎஸ்கே வீரர் தீக்ஷனா.. டி20 உலகக்கோப்பையில் பாரபட்சம்?
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு மிக மோசமான போட்டி அட்டவணை மற்றும் பயணத்திட்டம் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும், அதேசமயம் வேறு சில அணிகள் ஒரே மைதானத்தில் தங்கள் பயிற்சி போட்டி உட்பட நான்கு போட்டிகளில் விளையாடுவதாகவும் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் மதீஸ் தீக்ஷனா குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அவர் வேறு அணி என குறிப்பிடுவது இந்திய அணியை தான்.
இந்திய அணி நியூயார்க் நகரின் நாசா கவுண்டி மைதானத்தில் தனது பயிற்சி போட்டி உட்பட குரூப் சுற்றின் முதல் மூன்று போட்டிகளையும் விளையாட உள்ளது. அதிலும் தொடர்ந்து மூன்று போட்டிகளும் அங்கேயே நடைபெற உள்ளது. அதனால் இந்திய அணி பயணம் செய்யத் தேவையில்லை. ஆனால், இலங்கை அணி தனது பயிற்சி போட்டியை ஒரு மைதானத்தில் ஆடிவிட்டு, அதன் பின் முதல் குரூப் சுற்றுப் போட்டிக்கு வேறொரு மைதானத்திற்கு செல்ல வேண்டும். அதன் பின் அடுத்த மூன்று குரூப் போட்டிகளுக்கும் வெவ்வேறு மைதானங்களுக்கு பயணம் செய்து விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அது மட்டும் இன்றி விமான நிலையத்தில் 8 மணி நேரம் அல்லது அதற்கு மேல் காத்திருக்க வேண்டி இருப்பதாகவும், அதனால் பயிற்சி செய்ய முடியவில்லை எனவும் அந்த அணியின் முன்னணி வீரர் தீக்ஷனா கூறி இருக்கிறார். இந்திய அணிக்கு மட்டும் சாதகமான போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும், எந்த பிட்ச்சில் ஆடுகிறோம், அதன் தன்மை என்ன என்பது தெரிந்து ஆடக் கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் மற்ற அணிகளுக்கு அது போன்ற வாய்ப்பு கிடைக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தி இருக்கிறார்.
இது குறித்து தீக்ஷனா பேசுகையில், "எங்களுக்கு நியாயமே இல்லாத வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஒவ்வொரு போட்டி முடிந்தவுடனும் அந்த மைதானத்தை விட்டு உடனடியாக வேறு மைதானம் இருக்கும் நகரத்துக்கு பயணம் செய்ய வேண்டி உள்ளது. ஏனெனில், நாங்கள் நான்கு வெவ்வேறு மைதானங்களில் ஆட உள்ளோம். இது நியாயமே இல்லை. நாங்கள் ஃப்ளோரிடாவில் இருந்து விமானத்தில் பயணம் செய்ய வேண்டும். அதன் பின் மியாமியில் இருந்து பயணம் செய்ய வேண்டும். நாங்கள் ஒவ்வொரு முறையும் விமானத்துக்காக எட்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியது உள்ளது. அதை நாங்கள் செய்கிறோம். நாங்கள் இரவு எட்டு மணிக்கு விமான நிலையத்துக்கு வந்தோம். ஆனால் காலை ஐந்து மணிக்கு தான் விமானம் கிடைத்தது. இது நியாயமே இல்லை. ஆனால் போட்டியில் ஆடுவதற்காக இதை நாங்கள் கண்டு கொள்ளாமல் இருக்கிறோம்." என்றார்.
மேலும், "தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டி முடிந்துள்ள நிலையில் அடுத்த விமானத்தை பிடிக்க போட்டி முடிந்த உடன் ஒரு மணி நேரம் 40 நிமிடத்தில் ஹோட்டல் அறையில் இருந்து கிளம்பி விமான நிலையம் செல்ல வேண்டும். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்பு கூட நாங்கள் விடியற்காலை 5 மணிக்கு எழுந்து மைதானத்திற்கு வந்து சேர்ந்தோம். எங்கள் பயணக் களைப்பின் காரணமாக பயிற்சியை கூட நாங்கள் ரத்து செய்தோம்" என்றார் தீக்ஷனா.
மேலும், "என்னால் சில அணிகளின் பெயரை சொல்ல முடியாது. அவர்கள் ஒரே மைதானத்தில் தங்கள் குரூப் சுற்று போட்டிகளை விளையாடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு அந்த மைதானத்தின் தன்மை என்ன என்பது தெரியும். அவர்கள் அதே மைதானத்தில் பயிற்சி போட்டியில் கூட விளையாடுகிறார்கள். வேறு யாருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காது. நாங்கள் எங்கள் பயிற்சி போட்டியை ஃப்ளோரிடாவில் விளையாடினோம். ஆனால் மீண்டும் மூன்றாவது போட்டியில் தான் ஃப்ளோரிடாவில் நாங்கள் விளையாட உள்ளோம். அதற்காக நாங்கள் மீண்டும் பயணம் செய்ய வேண்டும். அடுத்த ஆண்டாவது இது போன்ற விஷயங்களை மற்றவர்கள் சிந்திக்க வேண்டும். இந்த ஆண்டு எதுவுமே மாறாது என்பது எனக்கு தெரியும். எங்கள் நிர்வாகம் இன்றைய விமானத்தை சரியாக திட்டமிட முயன்று வருகிறது. ஏனெனில் நாங்கள் இன்று போட்டி முடிந்த உடன் எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு விமானத்தில் கிளம்ப வேண்டும்" இவ்வாறு தீக்ஷனா கூறினார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் இலங்கை அணி 77 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டிக்கு பின்பு தான் இலங்கை வீரர்கள் இவ்வாறு தங்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை தெரிவித்துள்ளனர். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டிக்கு பின் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தான் இதை அவர்கள் கூறினார்கள். இதில் சோகம் என்னவென்றால் அப்போது அடுத்த விமானத்துக்கான நேரம் நெருங்கியதால் அந்த பத்திரிகையாளர் சந்திப்பையும் அவர்கள் விரைவாக முடித்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
May be an image of 4 people and text that says '49000 B B MRF TYRES Em king.com RF VE Ine'
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெதர்லாந்தின் கடும் சவாலுக்கு மத்தியில் மில்லர், ஸ்டப்ஸ் ஆகியோர் தென் ஆபிரிக்காவை வெற்றிபெறச் செய்தனர்

Published By: DIGITAL DESK 7  09 JUN, 2024 | 09:51 AM

image

(நெவில் அன்தனி)

நசவ் கன்ட்றி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில்  (இலங்கை நேரப்படி சனிக்கிழமை) நடைபெற்ற டி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்திடம் கடும் சவாலை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 4 விக்கெட்களால் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.

துடுப்பாட்ட வீரர்களுக்கு பெரும் சிரமத்தைக் கொடுத்த நசவ் ஆடுகளத்தில் நெதர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 104 ஒட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 18.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஆனால், அந்த வெற்றி தென் ஆபிரிக்காவுக்கு இலகுவாக வந்துவிடவில்லை.

ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர ஆகியோரின் பொறுப்பணர்வுடன்கூடிய துடுப்பாட்டங்களே போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தி தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு வழிவகுத்தன.

தென் ஆபிரிக்காவின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது.

குவின்டன் டி கொக் (0) முதல் பந்திலேயே தவறான கணிப்பு காரணமாக ரன் அவுட் ஆனார்.

தொடர்ந்து ரீஸா ஹென்றிக்ஸ் (3), அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம் (0), ஹென்றிக் க்ளாசன் (4) ஆகியோர் ஆட்டம் இழக்க, தென் ஆபிரிக்கா 5ஆவது ஓவரில் 12 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

மிகவும் இக்காட்டான வேளையில் ஜோடி சேர்ந்த ட்ரைஸ்டன்  ஸ்டப்ஸ், டேவிட் மில்லர் ஆகிய இருவரும் பொறுமையுடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்து அணிக்கு தெம்பூட்டினர். ஸ்டப்ஸ் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (77 - 5 விக்.

0806_davil_miller_action_sa_vs_ned.png

கடைசி 3 ஓவர்களில் தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு மேலும் 25 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

18ஆவது ஓவரில் டேவிட் மில்லரால் 9 ஓட்டங்கள் பெறப்பட்டதுடன் மாக்கோ ஜென்சன் (3) ஆட்டம் இழந்தார்.

அடுத்த ஓவரில் மில்லர் 18 ஓட்டங்களை விளாசி அரைச் சதம் குவித்ததுடன் தென் ஆபிரிக்காவுக்கு மிகவும் அவசியமான வெற்றியையும் ஈட்டிக்கொடுத்தார்.

கடைசிக் கட்டத்தில் அதிரடியில் இறங்கிய டேவிட் மில்லர் 3 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 59 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

0806_david_miller_sa_va_ned.jpg

பந்துவீச்சில் விவியன் கிங்மா ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லோகன் வென் பீக் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நெதர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றது.

12ஆவது ஓவரில் நெதர்லாந்தின் 6ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டபோது அதன் மொத்த எண்ணிக்கை 48 ஓட்டங்களாக இருந்தது.

மத்திய வரிசை வீரர்களான சைப்ராண்ட் எங்க்ள்ப்ரெச் (40), லோகன் வென் பீக் (23) ஆகிய இருவரும்  திறமையாகத் துடுப்பெடுத்தாடி 7ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கை 100 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.

அவர்களைவிட விக்ரம்ஜித் சிங் (12), அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ஒட்நீல் பாட்மன் 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அன்றிச் நோக்கியா 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: டேவிட் மில்லர்.

https://www.virakesari.lk/article/185628

அக்கீல் ஹொசெய்ன் அற்புதமான பந்துவீச்சு; மேற்கிந்தியத் தீவுகளுக்கு மிகப் பெரிய வெற்றி

09 JUN, 2024 | 11:13 AM
image

(நெவில் அன்தனி)

உகண்டாவுக்கு எதிராக கயானா ப்ரொவிடன்ஸ் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (9) (இலங்கை நேரப்படி) காலை நடைபெற்ற சி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சகலதுறைகளிலம் அற்புதமாக பிரகாசித்த மேற்கிந்தியத் தீவுகள் 134 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் ஈட்டிய மிகப் பெரிய வெற்றி இதுவாகும். 

இதற்கு முன்னர் பாகிஸ்தானுக்கு எதிராக 84 ஓட்டங்களால் ஈட்டப்பட்ட வெற்றியே  மேற்கிந்தியத் தீவுகளின் மிகப் பெரிய வெற்றியாக இருந்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக துடுப்பெடுத்தாடிய அனைவரும் திறமையை வெளிப்படுத்தினர்.

ஜோன்ஸ்டன் சார்ள்ஸ் (44), அண்ட்றே ரசல் (17 பந்துகளில் 30 ஆ.இ.), அணித் தலைவர் ரோவ்மன் பவல் (23), நிக்கலஸ் பூரண் (22), ஷேர்ஃபேன் ரதஃபோர்ட் (22) ஆகியோர் துடுப்பாட்டத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கினர்.

பந்துவீச்சில் ப்றயன் மசாபா 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உகண்டா 12 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 39 ஓட்டங்களுக்கு சுருண்டது.

துடுப்பாட்டத்தில் ஜுமா மியாகி (13 ஆ.இ.) மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்.

பந்துவீச்சில் அக்கீல் ஹொசெய்ன் 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் இது அவரது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும்.

இதுவே ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக பதிவான அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதி ஆகும்.

அவரைவிட அல்ஸாரி ஜோசப் 3 ஓவர்களில் 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: அக்கீல் ஹொசெய்ன்

https://www.virakesari.lk/article/185646

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி வரை திக் திக்: 119 ரன் மட்டுமே எடுத்த இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி?

IND vs PAK

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 9 ஜூன் 2024
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே கடைசிப் பந்து வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதை நேற்றைய ஆட்டமும் நிரூபித்தது. நியூயார்க்கில் நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பரபரப்பாக ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது.

ரிஷப் பந்த் - அக்ஸர் படேல் ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 119 ரன் என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது. 120 ரன்னை பாகிஸ்தானுக்கு இலக்காக நிர்ணயித்த இந்திய அணி, அதற்கும் குறைவாக பாகிஸ்தான் அணியை கட்டுப்படுத்தியது எப்படி?

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கோலி, ரோகித் அவுட்

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. ரோஹித் சர்மா, விராட் கோலி ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் ஓவரில் ரோஹித் சர்மா சிக்ஸர் அடிக்கவே இந்திய அணி 8 ரன்களுடன் தொடங்கியது. நசீம் ஷா வீசிய 2வது ஓவரில் கோலி பவுண்டரி அடித்த நிலையில் 3வது பந்தில் கவர் திசையில் அடிக்கமுற்பட்டு உஸ்மான் கானிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ரிஷப் பந்த் களமிறங்கினார்.

3வது ஓவரை ஷாகின்ஷா அப்ரிதி வீசினார். 4வது பந்தில் ரோஹித் சர்மா டீப் ஸ்குயர் லெக் திசையில் அடித்த ஷாட்டை ஹேரிஸ் ராப் கேட்ச்பிடிக்கவே 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இரு முக்கிய, பெரிய விக்கெட்டுகளை வீழ்த்திய உற்சாகத்தில் பாகிஸ்தான் அணியினர் இருந்தனர்.

IND vs PAK

பட மூலாதாரம்,GETTY IMAGES

அக்ஸர் படேல் சிறப்பான கேமியோ

சூர்யகுமாருக்குப் பதிலாக, யாரும் எதிர்பாரா வகையில் அக்ஸர் படேல் களமிறங்கி, ரிஷப் பந்த்திடம் இணைந்தார். நிதானமாக ஆடத் தொடங்கிய அக்ஸர் படேல், அதிரடிக்கு மாறினார். அப்ரிதி வீசிய 5வது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என 14 ரன்கள் சேர்த்தார்.

6-வது ஓவரை முகமதுஅமிர் வீசினார். முதல் பந்தில் ரிஷப் பந்த் தேர்டுமேன் திசையில் பவுண்டரி அடித்தார். ஆனால், ஸ்லிப்பில் நின்றிருந்த இப்திகார் கேட்ச்சை தவறவிட்டதால் பவுண்டரி சென்றது. 2வது பந்தையும் ரிஷப் பந்த் தூக்கி அடிக்கவே அந்த கேட்சையும் பாகிஸ்தான் தவறவிட்டது. 5வது பந்தில் ரிஷப் பந்த் மீண்டும் ஒரு பவுண்டரி விளாசினார். பவர்ப்ளே ஓவரில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் சேர்த்தது.

நசீம் ஷா வீசிய 8-வது ஓவரில் அக்ஸர் படேல் இறங்கி அடிக்க முற்பட்டு க்ளீன் போல்டாகி 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.

 
IND vs PAK

பட மூலாதாரம்,EPA

ஸ்கை, துபே ஏமாற்றம்

அடுத்துவந்த சூர்யகுமார் வந்தவுடன் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார்.

இமாத் வாசிம் வீசிய 8-வது ஓவரில் ரிஷப் பந்த் தூக்கி அடிக்கவே இந்த ஷாட்டிலும் கிடைத்த கேட்சை பிடிக்க பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட்டனர். ரிஷப் பந்துக்கு மட்டும் கடைசி 14 பந்துகளில் 4 கேட்சு வாய்ப்புகளை பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட்டனர்.

ஹாரிஸ் ராப் வீசிய 10-வது ஓவரில் ரிஷப் பந்த் எஸ்ட்ரா கவர், ஃபைன் லெக், ஆகிய திசைகளில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். 10ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்தது.

இமாத் வாசிம் வீசிய 11வது ஓவரில் ரிஷப் பந்த் ரிவர்ஸ் ஸீவீப் முறையில் பவுண்டரி விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார். ஹாரிஸ் ராப் வீசிய 12-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் 7 ரன்னில் அமீரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 148 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட பந்தை எதிர்த்து அடிக்க முடியாமல் சூர்யகுமார் மிட்ஆப் திசையில் அடிக்கவே கேட்சானது.

அடுத்து, ஷிவம் துபே களமிறங்கி, ரிஷப் பந்துடன் சேர்ந்தார். 13-வது ஓவரை இமாத் வாசிம் வீசினார். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட துபே, வாசிம் பந்துவீ்ச்சுக்கு திணறினார்.

14-வது ஓவரை நசீம் ஷா வீசினார்.களத்துக்கு வந்தது முதல் பேட்டிங்கில் திணறிய ஷிவம் துபே, நசீம் ஷாவிடமே கேட்ச் கொடுத்து3 ரன்னில் வெளியேறினார். டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்டர்கள் என்று நம்பப்பட்ட சூர்யகுமார், துபே இருவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். அடுத்து துணைக் கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கி, ரிஷப் பந்துடன் சேர்ந்தார்.

IND vs PAK

பட மூலாதாரம்,GETTY IMAGES

எகிறிய பந்துகள்... சிதறிய விக்கெட்டுகள்...

முகமது அமீர் வீசிய 15-வது ஓவரின் முதல் பந்தில் ரிஷப் பந்த் தூக்கி அடிக்கவே, பாபர் ஆஸம் இந்த முறை சரியாக கேட்ச்பிடிக்கவே 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஜடேஜா வந்த வேகத்தில் மிட்ஆப் திசையில் வாசிமிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார். 89 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வலிமையாக இருந்த இந்திய அணி அடுத்த 7 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. அர்ஷ்தீப் களமிறங்கி, ஹர்திக்குடன் சேர்ந்தார்.

இந்திய அணியின் எந்த பேட்டரும் இந்த ஆடுகளத்தில் சிறப்பாக ஆடமுடியவில்லை. ஆடுகளத்தில் பந்து நினைத்துப்பார்க்க முடியாத வகையில் எகிறியது, சில நேரங்களில் பந்து நின்று பேட்டரை நோக்கி வந்ததால் ஷாட்களை அடிக்க சிரமப்பட்டனர்.

 
IND vs PAK

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா 119 ரன்னுக்கு ஆல்அவுட்

அமீர் வீசிய 17-வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் பவுண்டரி விளாசினார். 2வது பந்தை அர்ஷ்தீப் தோள்பட்டையில் வாங்கி வலியால் துடித்தார். 3வது பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் தொடர்ந்து பெரிய ஷாட்டுக்கு முயன்றும் முடியவில்லை.

ஹாரிஸ் ராப் 18-வது ஓவரை வீசினார். முதல் பந்தில் பாண்டியா தேர்டுமேன் திசையில் பவுண்டரி விளாசினார், 3வது பந்தையும் தேர்டுமேன் திசையில் பவுண்டரிக்கு விரட்ட தடுக்கப்பட்டது. 4வது பந்தை லெக்திசையில் பாண்டியா தூக்கி அடிக்கவே அது இப்திகாரிடம் கேட்சானது. ஹர்திக் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த பும்ரா வந்தவேகத்தில் இமாத்வாசிமிடம் தூக்கி அடித்து கேட்ச் பயிற்சி அளிப்பதுபோல் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

19-வது ஓவரை அப்ரிதி வீசினார். முகமது சிராஜ் 3 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தார். கடைசிப்பந்தில் ரன் எடுக்க முயற்சிக்கவே, அர்ஷ்தீப் சிங்9 ரன்னில் ரன்அவுட் செய்யப்பட்டார்.

இந்திய அணி 19 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ராப், நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி்னர். முகமது அமீர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

IND vs PAK

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாகிஸ்தான் தரமான பந்துவீச்சு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங்கில் ஒட்டுமொத்தமாக சொதப்பியது. பாகிஸ்தான் அணியின் பீல்டிங்தான் மோசமாக இருந்ததேத் தவிர பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. தொடக்கத்தில் இருந்தே பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் இந்திய பேட்டர்களை கட்டம் கட்டி தூக்கினர். குறிப்பாக ரோஹித் சர்மா, விராட் கோலியை விரைவாக ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என்ற திட்டத்தோடு செயல்பட்டு அதை செயல்படுத்தினர்.

ரிஷப் பந்த்-அக்ஸர் படேல் மட்டுமே 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மற்ற எந்த பேட்டரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. அதிகபட்சமாக ரிஷப் பந்த் 42, அக்ஸர் படேல் 20 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சம். மற்றவகையில் நடுவரிசையில் எந்த பேட்டரும் சிறப்பாக பேட் செய்யவில்லை.

பாகிஸ்தான் பீல்டர்களுக்கு கேட்ச் பயிற்சி அளித்ததுபோன்று துபே, ஹர்திக் பாண்டியா, பும்ரா, ஜடேஜா ஆகியோர் ஆட்டமிழந்தனர். ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொள்ளாமல் இந்திய பேட்டர்கள் தவறான ஷாட்களை தேர்ந்தெடுத்து ஆடியதே விரைவாக விக்கெட்டுகளை இழக்க காரணமாகும்.

IND vs PAK

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதைவிட முக்கியமனது, பாகிஸ்தானின் தரமான பந்துவீச்சு. முகமது அமீர், ஹாரிஸ் ராப், நசீம் ஷா ஆகியோர் லைன் லென்த்தில் கச்சிதமாக பந்துவீசியதால் பெரிய ஷாட்களுக்கு இந்திய பேட்டர்களால் முயற்சிக்க முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி தவறான ஷாட்களுக்கு முயன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

ஒரு கட்டத்தில் இந்திய அணி 89 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்தது. 180 ரன்கள் வரை சேர்க்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது. ஆனால், நடுவரிசை பேட்டர்களின் மோசமான செயல்பாடு, பொறுப்பற்ற பேட்டிங்கால் 60 ரன்கள் குறைவாக சேர்த்துள்ளது.

பந்து பட்டு வலியால் துடித்த ரிஸ்வான்

120 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. புதிய பந்தில் பும்ராவுக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அர்ஸ்தீப் சிங் வீசினார். முதல் ஓவரில் எந்த விக்கெட் வீழ்ச்சியும், திருப்பமும் ஏற்படவில்லை.

2வது ஓவரை சிராஜ் வீசினார். முதல் பந்திலேயே பாபர் ஆஸம் பவுண்டரி விளாசினார். அடுத்தடுத்த பந்துகளை சிராஜ் கட்டுக்கோப்பாக வீசினார். கடைசிப்பந்தை ரிஸ்வான் அடிக்கவே சிராஜ் பீல்டிங் செய்து ஸ்டெம்பை நோக்கி எறிந்தார். ஆனால், ரிஸ்வான் வலது முழங்கையில் பந்து படவே வலியால் துடித்தார்.

கேட்சை கோட்டை விட்ட துபே

3வது ஓவரை பும்ரா வீசினார் பவுண்டரி அடிக்க ரிஸ்வான், பாபர் ஆஸம் முயன்றும் முடியவில்லை. ரிஸ்வான் அடித்த ஷாட்டை தேர்டுமேன் திசையில் நின்றிருந்த ஷிவம் துபே கேட்சை கோட்டைவிட்டார்.

பும்ரா வீசிய 5வது ஓவரில் பாபர் ஆசம் பவுண்டரி அடித்து ரன்களைச் சேர்த்தார். அடுத்த பந்தில் ஸ்லிப்பில் நின்றிருந்த சூர்யகுமாரிடம் கேட்ச் கொடுத்து பாபர் ஆஸம் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.அடுத்து உஸ்மான் கான் களமிறங்கி, ரிஸ்வானுடன் சேர்ந்தார்.

IND vs PAK

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாகிஸ்தான் 9வது ஓவரில் 50 ரன்

6-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். பவர்ப்ளே ஓவரை பயன்படுத்திய ரிஸ்வான் சிக்ஸர் விளாசி ரன்களைச் சேர்த்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் ஒருவிக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் சேர்த்தது. சிராஜ் வீசிய 7-வது ஓவரில் ரன் சேர்க்கத் திணறிய பாகிஸ்தான் அணி 3 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

8-வது ஓவரை ஜடேஜா வீசினார். ரிஸ்வான், உஸ்மான் இருவரும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து சிங்கிள் ரன்னாக சேர்த்தனர். பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி கொடுக்க இந்திய அணி விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியி நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.

9-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். உஸ்மான் கவர் திசையில் பவுண்டரி அடித்து ரன்களைச் சேர்த்து 9 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 50 ரன்களைக் கடந்தது.

IND vs PAK

பட மூலாதாரம்,GETTY IMAGES

திருப்பம் தந்த அக்ஸர் படேல்

10-வது ஓவரை ரவீந்திர ஜடேஜா வீசினார். முதல் 4 பந்துகளில் தடுமாறிய ரிஸ்வான் 5வது பந்தில் பவுண்டரி அடித்து ரன்களைச் சேர்த்தார். 11வது ஓவரை அக்ஸர் படேல் வீசவந்தார். முதல் பந்திலேயே உஸ்மான் விக்கெட்டை கால்காப்பில் வாங்கவைத்து 13 ரன்களில் வெளியேற்றினார். அடுத்து ஃபக்கர் ஜமான் களமிறங்கினார். 4வது பந்தில் ஜமான் சிக்ஸர் விளாசினார்.

12-வது ஓவரை அர்ஷ்தீப் வீசினார். முதல் பந்திலேயே ஜமான் தேர்டுமேன் திசையில் பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் பாகிஸ்தானுக்கு 6 ரன் கிடைத்தது.

13-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். ஹர்திக் வீசிய பவுன்ஸரில் தேவையின்றி ஷாட் அடிக்க முற்பட்டு ஜமான் 13 ரன்னில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து இமாத் வாசிம் களமிறங்கினார். இந்த ஓவரில் ஒரு ரன் மட்டு்மே பாகிஸ்தான் அணி எடுத்து ஒரு விக்கெட்டையும் இழந்தது.

14-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இமாத் வாசிம், பேட்டில் பட்டு அவுட்சைட் எட்ஜில் பட்டு பவுண்டரி சென்றது. இந்த ஓவரில் பாகிஸ்தான் அணி 7 ரன்கள் சேர்த்தது.

IND vs PAK

பட மூலாதாரம்,GETTY IMAGES

திருப்புமுனை பும்ரா ஓவர்

பாகிஸ்தான் வெற்றிக்கு கடைசி 6 ஓவர்களில் 40 ரன்கள் தேவைப்பட்டது. விக்கெட் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது. 15-வது ஓவரை பும்ரா வீசினார். முதல் பந்திலேயே ரிஸ்வானை க்ளீன் போல்டாக்கி வெளியேற்றினார் பும்ரா. களத்தில் செட்டில் ஆன ரிஸ்வானை 31 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து சதாப் கான் களமிறங்கினார்.இந்த ஓவரில் பும்ரா 3 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி நெருக்கடி அளி்த்தார்.

16-வது ஓவரை அக்ஸர் படேல் வீசினார். இமாத் வாசிமிற்கு படம் காட்டிய அக்ஸர் படேல், 2 ரன்கள் மட்டுமே கொடுத்து நெருக்கடியளித்தார். பாகிஸ்தான் வெற்றிக்குத் தேவையான ரன்ரேட் 9ஆக அதிகரி்த்து நெருக்கடி அதிகரித்தது.

17-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். ஹர்திக் 3வது பந்தை ஷார்ட் பாலாக வீசவே, சதாப் கான் தூக்கி அடிக்கவே ரிஷப் பந்த் கேட்ச் பிடித்தார். சதாப்கான் 4 ரன்னில் ஆட்டமிழந்து பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்படுத்தினார். அடுத்து இப்திகார் அகமது களமிறங்கினார். இந்த ஓவரில் பாகிஸ்தான் ஒரு விக்கெட்டை இழந்து 5 ரன்கள் சேர்த்தது.

பாகிஸ்தான் வெற்றிக்கு 18 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டது. சிராஜ் வீசிய 18-வது ஓவரில் பாகிஸ்தான் அணி 8 ரன்களைச் சேர்த்தது. கடைசி 12 பந்துகளில் பாகிஸ்தான் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது.

 
IND vs PAK

பட மூலாதாரம்,GETTY IMAGES

துருப்புச்சீட்டு பும்ரா

19-வது ஓவரை பும்ரா வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் விட்டுக்கொடுத்த பும்ரா, அடுத்த 2பந்துகளை டாட் பந்துகளாக வீசினார். 4-வது பந்தில் இப்திகார் ஒருரன்னும், 5வது வந்தில் வாசிம் ஒரு ரன்னும் எடுத்தார். கடைசிப்பந்தை பும்ரா ஃபுல்டாஸாக வீச இப்திகார் தூக்கி அடிக்கவே அர்ஷ்தீப் சிங் கேட்ச் பிடித்தார். இப்திகார் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். பும்ரா இந்த ஓவரில் 3 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் இமாத் வாசிம் 15 ரன்னில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த 5 பந்துகளில் பாகிஸ்தான் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது.

IND vs PAK

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்து நசீம் ஷா களமிறங்கினார். 2வது பந்தில் நசீம் ஷா ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தில் அப்ரிதி ஒரு ரன் எடுத்தார். 4வது பந்தில் நசீம் ஷா பவுண்டரி அடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். கடைசி 2 பந்துகளில் பாகிஸ்தான் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. 5வது பந்தில் நசீம் ஷா பவுண்டரி அடித்தார். கடைசிப்பந்தில் பாகிஸ்தான் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. கடைசிப்பந்தில் நசீம் ஷா ஒரு ரன் அடிக்கவே பாகிஸ்தான் 6 ரன்னில் தோல்வி அடைந்தது.

இந்தியத் தரப்பில் பும்ரா 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அக்ஸர் படேல் 2 ஓவர்கள் வீசி 11 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் சாய்த்தார்.

https://www.bbc.com/tamil/articles/cn0018pj3pgo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமான் அணியுடனான போட்டியில் 7 விக்கெட்களால் இலகுவாக வென்றது ஸ்கொட்லாந்து

10 JUN, 2024 | 10:44 AM
image

(நெவில் அன்தனி)

அன்டிகுவா நோர்த் சவுண்ட் சேர் விவியன் றிச்சர்ட்ஸ் விளையாட்டரங்கில் நேற்று (9) இரவு நடைபெற்ற பி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஓமான் அணியை 7 விக்கெட்களால் ஸ்கொட்லாந்து அணி மிக இலகுவாக வெற்றிகொண்டது.

ப்றெண்டன் மெக்முலனின் அதிரடி அரைச் சதம், ஜோர்ஜ் முன்சேயின் திறமையான துடுப்பாட்டம் என்பன ஸ்கொட்லாந்தின் வெற்றியை இலகுவாக்கின.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஓமான் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் ப்ராதிக் ஆதவேல் 54 ஓட்டங்களையும் அயான் கான் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துதுவீச்சில் சபியான் ஷெரிப் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் 13.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்று மிக இலகுவாக வெற்றிபெற்றது.

ஆரம்ப வீரர் ஜோர்ஜ் முன்சே, 3ஆம் இலக்க வீரர் ப்றெண்டன் மெக்முலன் ஆகிய இருவரும் திறைமையாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்துக்கொடுத்தனர்.

முன்சே 41 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மெக்முலன் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் மெத்யூ க்ரொஸுடன் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

மெக்முலன் 31 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 61 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

க்ரொஸ் ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆட்டநாயகன்: ப்றெண்டன் மெக்முலன்.

v-nb.gif

bn.gif

https://www.virakesari.lk/article/185715

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட்: இந்தியாவிடம் தோற்றதால் கொந்தளிக்கும் பாகிஸ்தான் ஜாம்பவான்கள்

அக்தர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

10 ஜூன் 2024, 08:39 GMT
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. பாகிஸ்தான் அணி அவர்களின் சொந்த நாட்டிலேயே கோபமான எதிர்வினைகளை சந்தித்து வருகிறது.

இந்த தோல்வியால் பாகிஸ்தான் அணியின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். சமூக வலைதளங்களில் அவர்கள் பாகிஸ்தான் வீரர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தோல்விக்குப் பிறகு பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடமிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 10) நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஒரு சமயத்தில் போட்டி பாகிஸ்தானின் கைவசம் இருப்பதுபோல தோன்றியது. ஆனால் போட்டியின் திசையை திருப்பி இந்தியா வெற்றிக்கனியை எட்டிப்பிடித்தது.

மழையால் பாதிக்கப்பட்ட இந்தப்போட்டியில் இந்தியா 19 ஓவர்களில் 119 ரன்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தானால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது.

 
அக்தர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஷோயப் அக்தர் மற்றும் இன்சமாம் உல்-ஹக் சொல்வது என்ன?

கடைசி நேரத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான் அணியின் திறமை குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

அணித் தேர்வு மற்றும் வீரர்களின் செயல்பாடு குறித்து பலரும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தனது யூடியூப் சேனலில், “இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி மூளையைப் பயன்படுத்தவில்லை. ஒரே பந்து போட்டியின் திசையை மாற்றியது. பாகிஸ்தான் அணியின் மன உறுதி மற்றும் அதை ஆடுகளத்தில் பயன்படுத்திக்கொள்ளும் எண்ணம் ஆகிய எல்லாமே கேள்விக்குறியாகியுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

"இது மிகவும் வருத்தத்தை அளிப்பதாக உள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். வெற்றிபெறும் வாய்ப்பும் இருந்தது. 46 பந்துகளில் 46 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அணியிடம் ஏழு பேட்ஸ்மேன்களும் அவுட் ஆகாமல் இருந்தனர். ஆனால் அணியால் போட்டியில் வெற்றிபெற முடியவில்லை. வருத்தமாகவும், ஏமாற்றமாகவும் இருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

முன்னாள் பேட்ஸ்மேன் இன்சமாம் உல்-ஹக் தனது யூடியூப் சேனலான 'மேட்ச் வின்னர்' இல், ”பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது, ஆனால் இந்திய அணி அதைக்காட்டிலும் சிறப்பாக விளையாடியது,” என்று குறிப்பிட்டார்.

 

“பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி இந்தியாவை 119 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். ஆனால் இந்திய பந்துவீச்சாளர்களின் செயல்பாடு அதை விட சிறப்பாக இருந்தது. குறைந்த ஸ்கோர் எடுத்தாலும் இந்திய அணி தன் தைரியத்தை இழக்கவே இல்லை,” என்றார் அவர்.

”பேட்டிங் செய்யும்போது ’எடுக்கவேண்டிய ரன்களின் சராசரி’ ஏழு ரன்களுக்கு மேல் செல்ல பாகிஸ்தான் அனுமதித்திருக்கக் கூடாது. ஆனால் இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. பாகிஸ்தானின் கையில் விக்கெட்டுகள் இருந்தன, இருந்தபோதிலும் அணி அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை,” என்று இன்சமாம் உல் ஹக் குறிப்பிட்டார்.

‘‘பாகிஸ்தானின் பேட்டிங் மோசமாக இருந்தது. இமாத் வாசிம் மோசமாக பேட்டிங் செய்தார். அவர் இரண்டு மூன்று முறை ரன் அவுட் ஆவதில் இருந்து தப்பித்தார். 23 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. அவர் அவுட்டும் ஆகவில்லை, ஸ்கோரும் செய்யவில்லை. ரிஸ்வான் நிறைய நேரம் விளையாடினார். ஆனால் போட்டியை முடிக்க முடியவில்லை. இந்த போட்டியை வைத்து அணியின் நிலை என்ன என்பதை பாகிஸ்தான் ஆழமாக சிந்திக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

முன்னாள் பாகிஸ்தான் வீரர்களின் விமர்சனம்

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட்

பட மூலாதாரம்,X.COM SCREENGRAB

"என்னிடம் வார்த்தைகள் இல்லை. வருத்தத்தை மட்டுமே தெரிவிக்க முடியும். பாகிஸ்தான் 120 ரன்களை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அடிக்க முடியவில்லை. இந்த ஆடுகளத்தில் இந்தியா 35 முதல் 40 ரன்கள் குறைவாகவே எடுத்திருந்தது. ஆனால் அவர்களது பந்துவீச்சாளர்களின் திட்டமிட்ட பந்துவீச்சால் நம்மால் 120 ரன்கள் கூட எடுக்க முடியவில்லை. நீங்கள் அதிக ரன் கொடுக்கிறீர்கள் என்று பந்துவீச்சாளர்களிடம் எப்போதுமே சொல்கிறோம். ஏனென்றால், இது பேட்ஸ்மென்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது,” என்று ஷாஹித் அஃப்ரீதி தெரிவித்தார்.

“இன்றைய தோல்வியால் பாகிஸ்தான் உலகக் கோப்பையில் இருந்து வெளியே தள்ளப்பட்டுவிட்டது. மோசமான அணித் தேர்வு, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் விளையாடுவதற்காக அமெரிக்காவில் பயிற்சிப் போட்டிகளைத் தவிர்த்தது போன்றவை பாகிஸ்தானை இந்த நிலைக்கு தள்ளியுள்ளன. இனி பாகிஸ்தான் தீவிரமாக சிந்திக்க வேண்டும்,” என்று டேனிஷ் கனேரியா தனது எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜாவை சிலர் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். போட்டிக்கு முன் ராஜா எக்ஸில்," இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான கடந்த ஏழு டி20 போட்டிகளில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த அணி ஒவ்வொரு முறையும் வென்றது," என்று எழுதியிருந்தார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், இந்தியாவின் மட்டைவீச்சுக்கு பிறகு செய்த ட்வீட்டும் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது.

பாகிஸ்தானின் பந்துவீச்சுக்குப் பிறகு அவர் எக்ஸ் தளத்தில், "நியூயார்க்கில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி அற்புதமாக பந்து வீசியது. இந்தப் போட்டியில் அபாரமான ஆட்டம் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். பாகிஸ்தான் அணி சிறப்பாக சேஸ் செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என்று பதிவிட்டிருந்தார்.

ஆனால் இந்திய அணியின் ஸ்கோரை பாகிஸ்தான் அணியால் அடிக்க முடியவில்லை. இதனால் வெற்றி கைநழுவியது.

 

டெல்லி காவல்துறையின் டிவீட்

பாகிஸ்தானின் தோல்வியை கிண்டல் செய்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட டெல்லி போலீசார், "எங்களுக்கு இரண்டு சத்தம் கேட்டது. ஒன்று 'இந்தியா... இந்தியா என்ற கோஷம்'. மற்றொன்று டிவி உடையும் சத்தமாக இருக்கலாம். இதை உறுதிப்படுத்த முடியுமா," என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட்

பட மூலாதாரம்,X.COM SCREENGRAB

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியை 119 ரன்கள் மட்டுமே எடுக்க பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அனுமதித்தனர். இந்திய அணி 19 ஓவர்களில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் எடுத்தது. டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த மிக்குறைவான ஸ்கோர் இது.

பின்னர் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய வந்தபோது போட்டியில் வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதிபோல இருந்தது. ஆனால் ஒரு பந்து போட்டியை மாற்றியது.

120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பாபர் ஆசம் ஆரம்பத்திலேயே வெளியேறினார். ஆனால் இரண்டாவது தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் விக்கெட்டில் தொடர்ந்து இருந்தார், அவர் விளையாடும் வரை பாகிஸ்தான் அணி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது.

ஆனால் 15வது ஓவரில் பந்து வீச வந்த ஜஸ்பிரித் பும்ரா முதல் பந்திலேயே ரிஸ்வானின் ஸ்டம்புகளை எகிற வைத்தார். இங்கிருந்து பாகிஸ்தான் அணி பலவீனமானது.

19வது ஓவரில் பும்ரா மூன்று ரன்கள் மட்டுமே கொடுத்து இஃப்திகார் அகமதின் விக்கெட்டை வீழ்த்தினார். பும்ரா 4 ஓவர்களில் 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்தார். ஆட்ட நாயகனாகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார்.

https://www.bbc.com/tamil/articles/czkkpd9kk84o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வங்கதேசம் தோற்கக் காரணமான ஒரு பந்து - எல்லைக் கோட்டை கடந்தபோதும் 4 ரன் வழங்கப்படாதது ஏன் தெரியுமா?

வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

உலகக் கோப்பை டி20 தொடரின் நேற்றைய ஆட்டத்தில் வங்கதேசம் வெற்றிக்காகக் கடினமாகப் போராடியும் ஒரேயொரு பந்து சாதகமாக அமையாததால் வெற்றிவாய்ப்பை நழுவவிட்டது. அதேசமயம், தென் ஆப்ரிக்காவுக்கு அதுவே நல்வாய்ப்பாக அமைந்துபோனது.

போட்டியின் முடிவைத் தீர்மானிப்பதில் அந்தப் பந்து முக்கியத்துவம் பெற்றுவிட்டது. அது வங்கதேசத்துக்கு சாதகமாக அமைந்திருந்தால் சூப்பர் ஓவராக அமைந்திருக்கும். அது தவறியதால், தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றது.

நியூயார்க்கில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் டி பிரிவில் 20-வது லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது தென் ஆப்ரிக்க அணி.

முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் சேர்த்தது. 114 ரன்கள் எனும் குறைந்த இலக்கைத் துரத்திய வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் சேர்த்து 4 ரன்களில் தோல்வி அடைந்தது.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சூப்பர்-8 சுற்றில் தென் ஆப்ரிக்கா

இந்த வெற்றி மூலம் தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளுடன் டி பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெற்றாலும் கணித ரீதியாக நேபாளம், நெதர்லாந்து அணிகளுக்கும் வாய்ப்பு இருப்பதால், இன்னும் ஒரு வெற்றிக்காக காத்திருக்க வேண்டும். அமெரிக்காவில் 3 ஆட்டங்களையும் முடித்துவிட்ட தென் ஆப்ரிக்கா அடுத்ததாக 4-ஆவது ஆட்டத்துக்காக செயின்ட் லூசியாவுக்கு புறப்படுகிறது.

அதேசமயம் வங்கதேச அணி 2 போட்டிகளில் ஒரு தோல்வி, ஒரு வெற்றி என 2 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. இன்னும் 2 வெற்றிகளைப் பெற்றால், சூப்பர்-8 சுற்றுக்கு நல்ல ரன்ரேட் அடிப்படையில் தகுதி பெறவும் வாய்ப்புள்ளது. இதற்கு அடுத்த இரு ஆட்டங்களையும் நல்ல ரன்ரேட்டில் வெல்வது வங்கதேசத்துக்கு அவசியம். ஆதலால், குரூப் டி பிரிவில் சூப்பர்-8 சுற்றுக்கு செல்வதை தென் ஆப்ரிக்கா மட்டும் ஏறக்குறைய உறுதி செய்துவிட்டது. நேபாளத்துடன் கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதால் சூப்பர்-8 சுற்றுக்குச் செல்வதில் பெரிதாக தடையிருக்காது.

 
தென்னாப்பிரிக்கா - வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எதிர்பாராத முடிவுகளைத் தரும் நியூயார்க் மைதானம்

இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடந்த அதே நியூயார்க் மைதானத்தில் வேறு விக்கெட்டில் தென் ஆப்ரிக்கா-வங்கதேசம் ஆட்டம் நடந்தது. இந்த மைதானத்தில் பெரிதாக ரன்களை எதிர்பார்க்க முடியாது, குறைந்த ஸ்கோரை சேஸிங் செய்வதில் இரு அணிகளும் மல்லுக்கட்ட வேண்டிய நிலைதான் இருந்தது.

பாகிஸ்தான் அணியைக்கூட 119 ரன்களுக்குள் சுருட்டியது இந்திய அணி. ஆனால், நேற்றை ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி 113 ரன்களை அடித்தநிலையில் அந்த ரன்களுக்குள் எதிரணியை கட்டுப்படுத்த வேண்டிய நெருக்கடியான நிலை பந்துவீச்சாளர்களுக்கு இருந்தது.

ஒரு கட்டத்தில் பந்துவீச்சாளர்களும் தங்களுக்கான கடினமான பணியைச் செய்து, 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தனர். அதன்பின் ஹிர்தாய், மெகமதுல்லா ஆட்டத்தை திருப்பி வெற்றி நோக்கி நகர்த்தினர். ஆனால், நம்பிக்கையை கைவிடாத தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் கடைசி நேரத்தில் நெருக்கடியாகப் பந்துவீசி வங்கதேசத்தை முடக்கினர்.

தென் ஆப்ரிக்க அணி 113 ரன்களைக் கூட எடுத்ததற்கு கிளாசன்(46), மில்லர்(29) ஆகியோர்தான் காரணம். ஒரு கட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி 23 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 5-வது விக்கெட்டுக்கு இருவரும் 79 ரன்கள் சேர்த்ததுதான் முக்கியக் காரணம்.

இவர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்திருந்தால், தென் ஆப்ரிக்க அணி 100 ரன்களுக்குள் ஆட்டமிழந்திருக்கும். தென் ஆப்ரிக்க அணியின் மானம் காத்த கிளாசன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

வங்கதேச அணிக்கும் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. முதல் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்களை மட்டுமே சேர்த்தது. கடந்த ஆட்டத்தைப் போன்று இந்த ஆட்டத்திலும் ஹிர்தாய், மெகமதுல்லா அணியை தூக்கி நிறுத்தினர். ஆனால், கடைசி நேரத்தில் இருவரும் ஆட்டமிழந்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது.

 
தென்னாப்பிரிக்கா - வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எல்லைக் கோட்டைக் கடந்தும் 4 ரன்கள் வழங்கப்படாதது ஏன்?

இந்த ஆட்டம் உண்மையில் சூப்பர் ஓவரில் முடிந்திருக்க வேண்டியது. வங்கதேசம் தோற்ற 4 ரன்கள், பவுண்டரியாக வழங்கப்பட்டிருந்தால், டி20 உலகக் கோப்பைத் தொடரில் 3வது சூப்பர் ஓவர் ஆட்டமாக அமைந்திருக்கும். பார்ட்மேன் வீசிய 17-வது ஓவரை மெகமதுல்லா எதிர்கொண்டார். 2-ஆவது பந்தை மெகமதுல்லா ப்ளிக் ஷாட் மூலம் அடிக்க முயன்றபோது, கால்காப்பில் பந்துபட்டு லெக்பை மூலம் பவுண்டரி சென்றது.

ஆனால், கால்காப்பில் மெகமதுல்லா வாங்கியதைப் பார்த்த தென் ஆப்ரிக்க வீரர்கள் நடுவரிடம் அவுட் அப்பீல் செய்யவே, நடுவரும் அவுட் வழங்கினார். ஆனால், இதை எதிர்த்து மெகமதுல்லா 3வது நடுவரிடம் அப்பீல் செய்தார்.இதை ஆய்வு செய்த 3வது நடுவர், கால்காப்பில் வாங்கிய பந்து தவறான திசையில் சென்றதாகக் கூறி, அவுட் வழங்கியதை ரத்து செய்தார்.

ஆனால் லெக்பை மூலம் பவுண்டரி சென்றதற்கு பவுண்டரி வழங்கவில்லை. ஒருவேளை பவுண்டரி வழங்கியிருந்தால், ஆட்டம் டையில் முடிந்து சூப்பர் ஓவர் வந்திருக்கும்.

ஆனால் ஐசிசி விதி டிஆர்எஸ்(3.7.1.) விதிப்படி, “ நடுவரின் முடிவு அவுட்டாக இருக்கும்போது, பேட்டர் அப்பீல் செய்து அவுட் ரத்து செய்யப்பட்டால் அந்த பந்து “டெட்பால்” என அறிவிக்கப்படும். பேட்டிங் செய்யும் அணி விக்கெட்டை பாதுகாக்கலாம், ஆனால், அதனால் கிடைத்த ரன்கள் செல்லாததாக அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதியால் வங்கதேசத்துக்கு கிடைத்திருக்க வேண்டிய 4 ரன்கள் கிடைக்கவில்லை. ஒருவேளை களநடுவர் அவுட் வழங்காமல், லெக் பை என அறிவித்திருந்தால், சூப்பர் ஓவரில் ஆட்டம் முடிந்திருக்கும்.

தென்னாப்பிரிக்கா - வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தென் ஆப்ரிக்காவின் 3 தலைவலிகள்

தென் ஆப்ரி்க்க அணிக்கு அதன் முதல் 3 வரிசை ஆட்டக்காரர்களின் பேட்டிங் ஃபார்ம் பெரிய தலைவலியாக மாறியுள்ளது. கடந்த 3 ஆட்டங்களிலும் டீ காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்க்ரம் ஆகியோர் பெரிதாக எந்த ஸ்கோரும் செய்யவில்லை. இந்த 3 பேட்டர்களும் சேர்ந்து 9 இன்னிங்ஸ் ஆடி வெறும் 61 ரன்கள் சேர்த்துள்ளனர், சராசரியாக 6.77 ரன்கள் மட்டும்தான். உகாண்டா, பிஎன்ஜி அணி பேட்டர்களின் சராசரியைவிடக் குறைவாகும்.

இதில் பெரிய தலைவலியாக இருப்பது ஹென்ட்ரிக்ஸ் பேட்டிங்தான். கடந்த 3 போட்டிகளில் 4,3,0 என்று ஹென்ட்ரிக்ஸ் ஆட்டமிழந்தார். இவர்கள் 3 பேரும் 3 ஆட்டங்களிலும் ஆட்டமிழந்தவிதம் பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

இந்த ஆட்டத்தில் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் 5-வது ஓவரில்டக்அவுட்டில் வெளியேறினார். டி20 போட்டிகளில் தென் ஆப்ரிக்க அணி முதல் 5 ஓவர்களில் முதல் 4 விக்கெட்டுகளை இழப்பது இதுதான் முதல்முறை. ஆனால், கிளாசன், டேவிட் மில்லர் இருவரும் சேர்ந்துதான் அணிக்கு கவுரமான ஸ்கோரைக் கொண்டு வந்தனர். அதிலும் மில்லருக்கு நேற்று பிறந்தநாள். 13 ரன்களில் ஆட்டமிழந்திருக்க வேண்டிய மில்லருக்கு கேட்ச் வாய்ப்பை லிட்டன் தாஸ் தவறவிட்டதால் 29 ரன்கள் வரை சேர்க்க முடிந்தது.

 
தென்னாப்பிரிக்கா - வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தென் ஆப்ரிக்காவை இறுக்கிய வங்கதேசம்

வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் தமிம் ஹசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தென் ஆப்ரிக்க அணியின் பேட்டிங் முதுகெலும்பை நொறுக்கிவிட்டார். 4 ஓவர்கள் வீசிய தமிம் 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதைப் பயன்படுத்தி ரிஷாத் ஹூசைன், முஸ்தபிசுர் ரஹ்மானும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி தென் ஆப்ரிக்க அணியின் ரன் சேர்ப்புக்கு பெரிய தடைக்கற்களை போட்டனர். ரிசாத் ஹூசைன், முஸ்தபிசுர், தமிம் ஆகிய 3 பேரும் கடைசி 3 ஓவர்களை வீசி டெத் ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து தென் ஆப்ரிக்காவுக்கு சிக்கலை ஏற்படுத்தினர்.

அதிலும் கிளாசன், மில்லர் விக்கெட்டுகளை வீழ்த்தி பெரிய ஸ்கோர் வராமல் தடுத்தனர். தஸ்கின் அகமதுவும் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரிஷாத் ஹூசைன் தனது முதல் 3 ஓவர்களில் 28 ரன்களை வழங்கிய நிலையில் கடைசி ஓவரை கட்டுக்கோப்பாக வீசி 4 ரன்கள் மட்டுமே வழங்கினார். ஒட்டுமொத்தத்தில் வங்கதேசத்தின் பந்துவீச்சு தென் ஆப்ரிக்க பேட்டர்களுக்கு சிம்மசொப்னமாக இருந்தது.

 
தென்னாப்பிரிக்கா - வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

“வெற்றி பெற வேண்டிய ஆட்டம்”

தோல்வி அடைந்த வங்கதேச அணியின் கேப்டன் சாண்டோ கூறுகையில் “ஒவ்வொருவரும் பதற்றத்துடன் இருந்தோம். ஜேக்கர் களத்தில் இருந்தவரை ஆட்டத்தில் வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், நடக்கவில்லை. தன்சித் கடந்த இரு ஆட்டங்களாக தீவிரமாகப் பயிற்சி செய்தார். புதிய பந்தில் விக்கெட் எடுப்பது அவசியமாக இருந்ததை அவர் செய்து கொடுத்தார். இந்த ஆட்டத்தில் நாங்கள் வென்றிருக்க வேண்டும், வெற்றியை நெருங்கியபோதும், கடைசி இரு ஓவர்களை தென் ஆப்ரிக்க சிறப்பாகப் பந்துவீசியது. கிரிக்கெட்டில் இதுபோன்ற முடிவுகள் நடக்கும்.” எனத் தெரிவித்தார்.

கடைசி ஓவரில் என்ன நடந்தது?

114 ரன்கள் எனும் குறைவான ஸ்கோர், ஓவருக்கு 5 ரன்கள் சேர்த்தாலே வென்றுவிடலாம் என்ற நிலையில், தன்சித் ஹசன்(9), சான்டே(14), லிட்டன் தாஸ்(9), சஹிப்(3) என முதல் 4 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து அணியை சிக்கலில் தள்ளினர்.

ஹிர்தாய், மெகமதுல்லாவின் போராட்டம்தான் ஆட்டத்தை கடைசிவரை நகர்த்தி வந்தது. 18-வது ஓவரில் ரபாடா எடுத்த ஹிர்தாய்(37) விக்கெட் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. செட்டில் ஆன பேட்டர் ஆட்டமிழந்ததும் வங்கதேசத்துக்கு நெருக்கடி அதிகரித்தது.

கடைசி ஓவரில் வங்கதேச வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை கேசவ் மகராஜ் இதுவரை வீசியதே இல்லை. பரிசோதனை முயற்சியாக நேற்று பந்துவீசியபோது, முதல்2 பந்துகளில் 4 ரன்களை வங்கதேசம் சேர்த்தது. 3வது பந்தை ஜேக்கர் அலி தூக்கி அடிக்க லாங் ஆன் திசையில் கேட்சானது. 4-வது பந்தில் ஒரு ரன். 5-வது பந்தை கேசவ் ஃபுல்டாஸாக வீசவே மெகமதுல்லா சிக்ஸருக்கு தூக்கி அடிக்க பவுண்டரி எல்லையில் மார்க்ரம் கடினமான கேட்சைப் பிடித்தபோது வங்கதேசத்தின் தோல்வி உறுதியானது. கடைசிப்பந்தில் ஒரு ரன் சேர்க்கவே வங்கதேசம் போராட்டம் முடிவுக்கு வந்தது.

https://www.virakesari.lk/article/185784

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவை வென்றாலும், பாகிஸ்தான் செய்யத் தவறியது என்ன? சூப்பர் 8 செல்வதில் என்ன சிக்கல்?

பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் தொடர்ந்து 2 தோல்விகளுக்குப்பின் பாகிஸ்தான் அணி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. இருப்பினும் சூப்பர்-8 சுற்றுக்கு முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி செல்வது இன்னும் சந்தேகமாகவே இருக்கிறது.

நியூயார்க் நகரில் செவ்வாய்க்கிழமை நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் ஏ பிரிவில் 22வது லீக் ஆட்டத்தில் கனடா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி.

முதலில் பேட் செய்த கனடா அணி 7 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்தது. 107 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் கடும் போராட்டத்துக்குப்பின் 15 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சூப்பர்-8 செல்லுமா பாகிஸ்தான்?

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 3 போட்டிகளில் 2 தோல்விகள், ஒரு வெற்றி என 2 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டும் 0.191 என்ற ரீதியில் இருக்கிறது. பாகிஸ்தான் அணியைவிட அமெரிக்கா அணி கூடுதலாக 2 புள்ளிகள் பெற்று மொத்தம் 4 புள்ளிகளுடன், 0.626 நிகர ரன்ரேட்டுடன் வலுவாக இருக்கிறது.

பாகிஸ்தான் அணிக்கு வரும் 16-ஆம் தேதி அயர்லாந்து அணியுடன் கடைசி லீக் ஆட்டம் இருக்கிறது. இந்த ஆட்டம் ஃப்ளோரிடாவில் நடக்க இருக்கிறது. ப்ளோரிடாவில் வரும் 16-ஆம் தேதி நல்ல மழை பெய்வதற்கான சூழல் இருப்பதாக வானிலை அறிவிப்பு குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய சூழலில் போட்டி நடந்து பாகிஸ்தான் வென்றிருந்தாலும், அமெரிக்க அணியின் கடைசி 2 லீக் ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். ஒருவேளை அமெரிக்க அணி இந்தியாவிடம் தோற்று, 14-ஆம் தேதி நடக்கும் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வென்றுவிட்டாலே 6 புள்ளிகள் பெற்று சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும்.

அதன்பின் பாகிஸ்தான் அணி அயர்லாந்து அணியை வென்றாலும் 4 புள்ளிகளுடன் சூப்பர்-8 சுற்றுக்கு செல்லாமல் வெளியேற வேண்டியதுதான்.

பாகிஸ்தான் அணி சூப்பர்-8 சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால் அமெரிக்க அணி அடுத்த 2 லீக் ஆட்டங்களிலும் தோற்க வேண்டும், அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மழை வராமல் போட்டி நடந்து பாகிஸ்தான் வெல்ல வேண்டும். ஒருவேளை அமெரிக்கா தனது கடைசி இரு லீக் ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து, பாகிஸ்தான்-அயர்லாந்து ஆட்டம் மழையால் நடைபெறாமல் போகும் பட்சத்தில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.

அப்போது அமெரிக்கா 4 புள்ளிகளுடன் இயல்பாக சூப்பர்-8 சுற்றுக்கு சென்றுவிடும். பாகிஸ்தான் 3 புள்ளிகளுடன் வெளியேற வேண்டியதிருக்கும். ஆதலால் பாகிஸ்தான் சூப்பர்-8 சுற்றுக்கு செல்வது இன்னும் உறுதியாகவில்லை,

அதேசமயம், கனடா அணி 3 போட்டிகளில் 2 தோல்வி, ஒரு வெற்றி என 2 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. கனடா அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தின் முடிவும் சூப்பர்-8 இடங்களைத் தீர்மானிக்கும்.

 
பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கனடாவை பாகிஸ்தான் வீழ்த்தியது எப்படி?

பாகிஸ்தான் தரப்பில் நேற்று வேகப்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். குறிப்பாக முகமது அமிர் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால், இதில் 17 டாட் பந்துகள் அடங்கும். சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது அமிர் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாகிஸ்தானின் முழுமையாக வெற்றிக்கு காரணம் வேகப்பந்துவீச்சாளர்கள்தான். கனடா அணியை 106 ரன்களுக்குள் சுருட்டி வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தினர். ஆனால், பாகிஸ்தான் பேட்டர்கள் இந்த ரன்னை சேஸ் செய்வதற்குள் திணறிவிட்டனர். அதிலும் பவர்ப்ளே ஓவரில் பாகிஸ்தான் பேட்டர்களை ஷார்ட் பந்தாக வீசி கனடா பந்துவீச்சாளர்கள் திணறவைத்தனர்.

ஆனால், கேப்டன் பாபர் ஆஸம், அனுபவ வீரர் முகமது ரிஸ்வான் இருவரும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்து அணியின் வெற்றிக்கு உதவி செய்தனர். ரிஸ்வான் நிதானமாக பேட் செய்து அரைசதம் அடித்து 53 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பாபர் ஆஸம் 33 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். கனடா அணியின் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு பெரிதாக தொந்தரவு இல்லாத நிலையில் குறைந்த ஸ்கோரை விரைவாக சேஸ் செய்து நிகர ரன்ரேட்டை பாகிஸ்தான் உயர்த்தி இருக்கலாம். ஆனால், பாகிஸ்தான் பேட்டர்கள் மந்தமாக பேட் செய்தனர்.

 
பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கனடாவின் ஜான்சன் அதிரடி பேட்டிங்

கனடா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஜான்ஸன் 44 பந்துகளில் 52 ரன்களுடன் அதிரடியாக பேட் செய்தார். இவரின் குறிப்பிடத்தகுந்த பங்களிப்புதான் கனடா அணியால் 100 ரன்களைக் கடக்க முடிந்தது. கனடா அணியில் ஜான்சனைத் தவிர மற்ற 6 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

கனடா அணியின் ஜான்சன் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக பேட் செய்தார். அப்ரிதி வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே பிளிக் ஷாட்டில் பவுண்டரி அடித்தார், அடுத்த பந்திலும் பவுண்டரி் அடித்தார். இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் முதல் ஓவரின் இரு பந்துகளில் பவுண்டரி அடித்த முதல் பேட்டர் ஜான்சன்தான். 3-ஆவது பந்தும் பவுண்டரி சென்றிருக்கும் ஆனால், கடைசி நேரத்தில் பீல்டிங் செய்துவிட்டனர்.

பாகிஸ்தான் பேட்டர்கள் பேட்டிங் செய்ய திணறிய நிலையில் கனடாவின் ஆரோன் ஜான்சன் பாகிஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். நசீம்ஷா, இமாத் வாசிம், அப்ரிதி ஓவர்களில் சிக்ஸர் விளாசிய ஆரோன் ஜான்சன், 4 பவுண்டரிகளை விளாசி 118 ஸ்ட்ரேக் ரேட்டில் பேட் செய்தார். கத்துக்குட்டி அணியான கனடாவின் ஜான்சன் அதிரடியாக பேட் செய்தநிலையில், அனுபவமான பாகிஸ்தான் பேட்டர்களால் ஏன் பேட்டிங் செய்ய முடியவில்லை என்பது கேள்வியாக எழுகிறது.

பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கனடா அணியின் சிறந்த பேட்டர் என்று கூறப்படும் நிகோலஸ் கிர்டன் ரன் அவுட் செய்யப்பட்டது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. ஒருபுறம் கனடா அணி விக்கெட்டுகளை இழந்தாலும் ஜான்சன் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தார்.

கனடாவின் ஸ்ரேயாஸ் மோவாவின் விக்கெட்டை வீழ்த்தியபோது, டி20 வரலாற்றில் அதிவிரைவாக 100 விக்கெட்டுகளை எட்டிய வேகப்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஹேரிஸ் ராப் இணைந்தார்.

பாகிஸ்தான் பேட்டர்களுக்கு பாடம் எடுக்கும் வகையில் பேட் செய்த ஜான்சன் 39 பந்துகளில் அரைசதம்அடித்தார். எந்த பந்துவீச்சாளரையும் சளைக்காமல் எதிர்த்து பவுண்டரி சிக்ஸர், அடித்த ஜான்சன் 52 ரன்னில் இமாத் வாசிம் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். டெத் ஓவரில் பாகிஸ்தான் அணி 29 ரன்களை வழங்கியது.

டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே அதிகமான டாட் பந்துகளை சந்தித்த அணியாக கனடா அணி பெயர் பெற்று நேற்றைய ஆட்டத்தில் 76 டாட் பந்துகளைச் சந்தித்தது. அதாவது, 44 பந்துகளில் மட்டும்தான் கனடா பேட்டர்கள் ரன் சேர்த்துள்ளனர்.

பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

திணறிய பாகிஸ்தான் பேட்டர்கள்

107 ரன்கள் இலக்கை விரட்டிய பாகிஸ்தான் பேட்டர்கள் தொடக்கத்திலிருந்தே ரன் சேர்க்கத் திணறினர். நடுவரிசையில் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்காக கேப்டன் பாபர் ஆஸம் ஒன்டவுனில் களமிறங்கினார். தொடக்க வீரராக ரிஸ்வான், சயீம் அயுப் களமிறங்கினர். ஆனால், இளம் வீரர் சயூப் பெரிய ஷாட்டுக்கு முயன்று 6 ரன்னில் வெளியேறினார்.

ஆனால், பவர்ப்ளே ஓவர்களில் கனடா வேகப்பந்துவீச்சாளர்கள் கார்டன், ஹேலிகர், சனா ஆகியோர் லைன் லென்த்தில் பந்துவீசி பாகிஸ்தான் பேட்டர்களை திணறவைத்தனர். பவர்பளேயில் பாகிஸ்தான் ஒரு விக்கெட்டைஇழந்து 28 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கனடா அணி பவர்ப்ளேயில் 5 பவுண்டரிகள் அடித்த நிலையில், பாகிஸ்தான் அணி ஒரே பவுண்டரிதான் அடித்திருந்தது. பவர்ப்ளேயில் 36 பந்துகளில் 31 பந்துகளை கனடா அணி துல்லியமாக லென்த்தில் வீசி பாகிஸ்தான் பேட்டர்களை திணறவைத்தது. 9.1 ஓவர்களில்தான் பாகிஸ்தான் அணி 50 ரன்களை எட்டியது.

 
பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

“ரன்ரேட்டை உயர்த்தமுடியவில்லை”

வெற்றிக்குப்பின் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் கூறுகையில் “ எங்களுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. பந்துவீச்சில் சிறப்பாகத் தொடங்கி, பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை வீழ்த்தினோம். நிகர ரன்ரேட்டை உயர்த்த முயன்றோம், அதை நோக்கித்தான் விளையாடினோம். 14 ஓவர்களுக்குள் இலக்கை அடைவது இந்த ஆடுகளத்தில் கடினமாக இருந்தது. நான் எனக்கு பிடித்தமான ஷாட்டை ஆடியபோதுதான் ஆட்டமிழந்தது எனக்கு வேதனையாக இருந்தது. இந்திய அணிக்கு எதிராகவும் இதே ஷாட்டை ஆடியபோதுதான் ஆட்டமிழந்தேன். சில நேரங்களில் இதுபோன்ற ஷாட்களை ஆடும்போது வெற்றி தேவை”எ னத் தெரிவித்தார்

பாபர் ஆஸம், ரிஸ்வான் சேர்ந்தபின் ரன்சேர்ப்பில் ஓரளவு வேகம் காட்டியது பாகிஸ்தான் இதனால் 17வது ஓவரில் 100 ரன்களை எட்டியது. பாபர் ஆஸம் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 33 ரன்களில் ஹேலிகர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்த வெற்றியால் பாகிஸ்தான் நிகர ரன்ரேட் அமெரிக்காவின் நிகர ரன்ரேட்டைவிடக்கூட உயரவில்லை. இந்த குறைந்த இலக்கை 10 ஓவர்களில் சேஸ் செய்திருந்தால், அமெரிக்காவின் நிகர ரன்ரேட்டைவிட உயர்ந்திருக்கலாம். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை.

https://www.bbc.com/tamil/articles/czvv7e299yyo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடும் மழையினால் இலங்கையின் சுப்பர் 8 சுற்று கனவு பெரும்பாலும் கலைந்துவிட்டது

Published By: DIGITAL DESK 3

12 JUN, 2024 | 09:55 AM
image
 

(நெவில் அன்தனி)

புளோரிடா, லௌடர்ஹில் சென்ட்ரல் ப்ரோவார்ட் ரீஜினல் பார்க் விளையாட்டரங்கில் நடைபெறவிருந்த இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான டி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் கடும் மழையினால் முழுமையாக கைவிடப்பட்டது.

இப் போட்டி முடிவை அடுத்து  இலங்கையின் சுப்பர் 8 சுற்று கனவு பெரும்பாலும் கலைந்துவிட்டது கலைந்து போயுள்ளது.  

இதனை அடுத்து இலங்கைக்கும் நேபாளத்துக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது.

இந்தப் போட்டி கைவிடப்பட்டதால் தென் ஆபிரிக்கா முதலாவது அணியாக சுப்பர் 8 சுற்றில் விளையாடுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இலங்கையும் நேபாளமும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாய நிலையில் இப் போட்டியை எதிர்கொள்ள தயாராக இருந்தன. ஆனால், முழு நாளும் கடும் மழை பெய்ததால் சுமார் 3 மணித்தியாலங்களின் பின்னர் ஆட்டம் கைவிடப்பட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பங்களாதேஷுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான போட்டியில் ஏதேனும் ஒரு அணி வெற்றிபெற்றால் அல்லது நேபாளம் அதன் எஞ்சிய 2 போட்டிகளில் எதிர்பாராத விதமாத வெற்றிபெற்றால் இலங்கை முதல் சுற்றுடன் நாடு திரும்ப வேண்டிவரும்.

இப் போட்டியைக் கண்டுகளிக்க நேபாள இரசிகர்கள் பெருமளவில் அரங்குக்கு சென்றிருந்தபோதிலும் இறுதியில் மழையினால் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.

1206_nepal_fans.png

https://www.virakesari.lk/article/185880

நமிபியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா 2ஆவது அணியாக சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது

12 JUN, 2024 | 10:16 AM
image

(நெவில் அன்தனி)

அன்டிகுவா, நோர்த் சவுண்ட் சேர் விவியன் றிச்சர்ட்ஸ் விளையாட்டரங்கில் சிறிது நேரத்துக்கு முன்னர் நிறைவடைந்த பி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் நமிபியாவை 9 விக்கெட்களால் வெற்றி கொண்ட அவுஸ்திரேலியா, 2ஆவது அணியாக சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

இடைவேளை உட்பட சுமார் 2 மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்தப் போட்டி 22.4 ஓவர்களில் முடிவுக்கு வந்தது.

இந்தப் போட்டி முடிவுடன் பி குழுவுக்கான அணிகள் நிலையில் 6 புள்ளிகளுடன் அசைக்க முடியாத முதலிடத்தில் அவுஸ்திரேலியா இருக்கிறது.

அடம் ஸம்பாவின் 4 விக்கெட் குவியல், துடுப்பாட்ட வீரர்களின் அதிரடி என்பன அவுஸ்திரேலியாவின் வெற்றியை இலகுவாக்கின.

இப் போட்டியில் 4 விக்கெட்களைக் கைப்பற்றிய அடம் ஸம்ப்பா, ஆடவர்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்திய முதலாவது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

ஏற்கனவே மகளிர் ரி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட்களைப் பூர்த்தி செய்த தனது சக நாட்டு வீராங்கனைகள் மெகா ஷூட், எலிஸ் பெரி ஆகியோருடன் 3ஆவது அவுஸ்திரேலியராக ஸம்ப்பா இணைந்துகொண்டுள்ளார்.

நமீபியாவை 72 ஓட்டங்களுக்கு சுருட்டிய பின்னர் அவுஸ்திரேலியா 5.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 74 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றிபெற்றது.

ட்ரவிஸ் ஹெட் 34 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் மிச்செல் மார்ஷ் 18 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

டேவிட் வோர்னர் 20 ஓட்டங்களைப் பெற்றார்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய நமிபியா 17 ஓவர்களில் சகல விக்கெட்களையம் இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 36 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆரம்ப வீரர் மைக்கல் வென் லிங்கென் 10 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்கள் இருவரைவிட வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெறவில்லை.

பந்துவீச்சில் அடம் ஸம்ப்பா 4 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மாக்கஸ் ஸ்டொய்னிஸ் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன்: அடம் ஸம்ப்பா 

https://www.virakesari.lk/article/185883

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கத்துக்குட்டிகளிடம் தோற்றதால் நெருக்கடியில் 4 ஜாம்பவான் அணிகள் - சூப்பர் 8 வாய்ப்பு யாருக்கு?

டி20 உலகக்கோப்பை, இந்திய அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 12 ஜூன் 2024, 11:55 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

டி20 உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கியதில் இருந்தே இதுவரை இல்லாத வகையில் ஒவ்வொரு ஆட்டத்திலும் அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைக்கின்றன. ஜாம்பவான் அணிகளை கத்துக்குட்டி அணிகள் தோற்கடிக்கும் நிகழ்வு வாடிக்கையாகிவிட்டது. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவையும் தீர்மானிப்பதில் நட்சத்திர பேட்டர்கள், பந்துவீச்சாளர்களை விட, ஆடுகளங்கள்(விக்கெட்) முக்கியக் காரணியாக மாறிவிட்டன.

இதுவரை இருபதுக்குக்கும் மேற்பட்ட லீக் ஆட்டங்கள் முடிந்துவிட்ட நிலையில் எந்தெந்த அணிகள் சூப்பர்-8 சுற்றுக்குச் செல்லும் என்பதை கணிக்க முடியாத வகையில் அமைந்திருக்கிறது.

முன்னாள் சாம்பியன்கள், வலிமையான அணிகள்கூட சூப்பர்-8 சுற்றுக்கு செல்வதற்கு போராடிக் கொண்டிருக்கின்றன. அதேசமயம், கத்துக்குட்டி அணிகள், முதல் முறையாக டி20 உலகக் கோப்பையில் அறிமுகமான அணிகளும் கூட சூப்பர்-8 வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளன.

ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள 5 அணிகளில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெறும். எந்த குரூப்பில் எந்தெந்த அணிகள் முதலிரு இடங்களைப் பிடிக்கும் என்பது கடைசி லீக் ஆட்டம் வரை சஸ்பென்ஸாகவே இருக்கும் என்பது போலவே அடுத்தடுத்த போட்டிகளின் முடிவுகள் வந்துள்ளன.

டி20 உலகக்கோப்பை இந்திய அணி, ரோகித் - ஹர்திக்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

குரூப்- ஏ: பாகிஸ்தான் நிலைமை பரிதாபம்

குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகளுக்கு வாய்ப்புள்ளது. இதில் பாகிஸ்தானுக்கான வாய்ப்பு என்பது மதில் மேல் பூனையாக உள்ளது. எந்த நேரத்திலும் எப்படி வேண்டுமானாலும் முடிவுகள் மாறலாம். ஆதலால், பாகிஸ்தான் சூப்பர்-8 சுற்றுக்குள் செல்வது சந்தேகத்துக்குரிய ஒன்றுதான்.

பாகிஸ்தான் அணியை விட கூடுதலாக 2 புள்ளிகள் பெற்று மொத்தம் 4 புள்ளிகளுடன், 0.626 நிகர ரன்ரேட்டுடன் அமெரிக்கா அணி வலுவாக இருக்கிறது.

பாகிஸ்தான் அணிக்கு வரும் 16ம் தேதி ஃப்ளோரிடா நகரில் அயர்லாந்து அணியுடன் கடைசி லீக் ஆட்டம் இருக்கிறது. ப்ளோரிடா நகரில் அன்றைய தினம் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை போட்டி நடந்து பாகிஸ்தான் வென்றாலும், அமெரிக்கா அணியின் கடைசி 2 லீக் ஆட்டங்களின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். ஒருவேளை அமெரிக்க அணி இந்தியாவிடம் தோற்று, 14ம் தேதி நடக்கும் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வென்றுவிட்டாலே 6 புள்ளிகள் பெற்று சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும்.

அவ்வாறு நடந்தால், பாகிஸ்தான் அணி அயர்லாந்து அணியை வென்றாலும் 4 புள்ளிகள் மட்டுமே பெற்றிருக்கும் என்பதால் வெளியேற வேண்டியிருக்கும்.

 
டி20 உலகக்கோப்பை இந்திய அணி, ரோகித் - ஹர்திக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாகிஸ்தான் அணி சூப்பர்-8 சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால் அமெரிக்க அணி அடுத்த 2 லீக் ஆட்டங்களிலும் தோற்க வேண்டும், அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெல்ல வேண்டும். ஒருவேளை அமெரிக்கா தனது கடைசி இரு லீக் ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து, பாகிஸ்தான்-அயர்லாந்து ஆட்டம் மழையால் நடைபெறாமல் போகும் பட்சத்தில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.

அப்போது அமெரிக்கா 4 புள்ளிகளுடன் சூப்பர்-8 சுற்றுக்கு சென்றுவிடும். பாகிஸ்தான் 3 புள்ளிகளுடன் வெளியேற வேண்டியதிருக்கும். ஆதலால் பாகிஸ்தான் அணி இன்னும் திரிசங்கு நிலையில்தான் இருக்கிறது.

குரூப்-பி: இங்கிலாந்துக்கு சிக்கல்

டி20 உலகக்கோப்பை இந்திய அணி, ரோகித் - ஹர்திக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குரூப் பி பிரிவில் இங்கிலாந்து அணி தற்போது 2 போட்டிகளில் ஒரு தோல்வி, ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டதால் ஒரு புள்ளியுடன் இருக்கிறது. அடுத்து வரும் இரு லீக் ஆட்டங்களில் நமீபியா, ஓமன் அணிகளுடன் மோதுகிறது. இரு அணிகளுக்கு எதிராக இங்கிலாந்து வென்றால் 5 புள்ளிகளுடன் முடிக்கும்.

தற்போது ஸ்காட்லாந்து அணியும் 5 புள்ளிகளுடன் முடித்தால் நிகர ரன்ரேட் பார்க்கப்படும். அந்த வகையில் இ்ங்கிலாந்து அணி தனது அடுத்த 2 வெற்றிகளிலும் நிகர ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் பிரமாண்ட வெற்றியாக மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், நிகர ரன்ரேட்டில் ஸ்காட்லாந்து சூப்பர்-8 சென்றுவிடும்.

ஸ்காட்லாந்து அணி, தற்போது 3 போட்டிகளில் 5 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் 2.164 என வலுவாக இருக்கிறது. இந்த ரன் ரேட்டும், புள்ளிகளும் நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு சவாலாகத்தான் இருக்கும். இங்கிலாந்து அணி கட்டாயமாக அடுத்த இரு போட்டிகளிலும் மாபெரும் வெற்றி பெற்று ஸ்காட்லாந்து அணியின் நிகர ரன்ரேட்டைவிட உயர்வாக வைத்திருக்க வேண்டும்.

தற்போதுள்ள சூழலில் ஸ்காட்லாந்து அணி மிகமோசமாகத் ஆஸ்திரேலியாவிடம் தோற்றால்தான் அதன் நிகர ரன்ரேட் குறையும். ஒருவேளை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஸ்காட்லாந்து கடும் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இங்கிலாந்து அணியின் நிலை சிக்கலாகிவிடும்.

 
டி20 உலகக்கோப்பை இந்திய அணி, ரோகித் - ஹர்திக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சி பரிவில் நியூசிலாந்து பரிதாபம்

குரூப் சி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் இடையே சூப்பர்-8 சுற்றுக்குள் செல்வதற்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானிடம் தோற்றது நியூசிலாந்து அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது. தற்போது மைனஸ் 4.200 புள்ளிகளில் மோசமான நிலையில் நியூசிலாந்து இருக்கிறது.

இன்னும் 3 போட்டிகள் நியூசிலாந்து அணிக்கு இருக்கும் நிலையில் நாளை நடக்கும் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் நிச்சயம் இரு அணிகளுக்கும் சவாலானது.

ஒருவேளை நியூசிலாந்து அணி இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை வென்றுவிட்டால், அடுத்து வரும் இரு ஆட்டங்களில் பப்புவா நியூ கினி, உகாண்டா அணிகளை எளிதாக வென்று 6 புள்ளிகளுடன் சூப்பர்-8 சுற்றுக்கு கடும் போட்டியளிக்கும். ஆனால், அடுத்த 3 ஆட்டங்களையும் மாபெரும் வெற்றியுடன் முடித்து நிகர ரன்ரேட்டை ஆப்கானிஸ்தானைவிட அதிகமாக உயர்த்துவது அவசியம்.

கடைசி லீக்கில் ஆப்கானிஸ்தானிடம் வெஸ்ட் இண்டீஸ் தோற்றாலும், 4 புள்ளிகளோடு, நியூசிலாந்து போட்டியிட்டாலும் நிகர ரன் ரேட் அடிப்படையில் வெஸ்ட் இண்டீஸ் சூப்பர்-8 சுற்றுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது.

 
டி20 உலகக்கோப்பை இந்திய அணி, ரோகித் - ஹர்திக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குரூப்-டி: இலங்கை வெளியேறுவது உறுதி

குரூப் டி பிரிவில் இலங்கை அணி அடுத்தடுத்த தோல்விகள், ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டதால் ஒருபுள்ளியுடன் இருக்கிறது. அடுத்து வரும் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை வென்றாலும் 3 புள்ளிகள் மட்டுமே பெறும் என்பதால் இலங்கை வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

https://www.bbc.com/tamil/articles/cmll8x087ylo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பர் 8 சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள்; தர்மசங்கடமான நிலையில் நியூஸிலாந்து

13 JUN, 2024 | 11:11 AM
image

(நெவில் அன்தனி)

மேற்கிந்தியத்  தீவுகளுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் ட்ரினிடாட், டரூபா ப்றயன் லாரா விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று காலை நடைபெற்ற சி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 13 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் மேற்கிந்தியத் தீவுகள் 4ஆவது அணியாக சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

தென் ஆபிரிக்கா (டி குழு), அவுஸ்திரேலியா (பி குழு), இந்தியா (ஏ குழு) ஆகிய அணிகள் ஏற்கனவே சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றிருந்தன.

மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வி அடைந்த நியூஸிலாந்து பெரும்பாலும் சுப்பர் 8 சுற்று வாய்ப்பை இழக்கக்கூடிய தர்மசங்கடமான நிலையில் இருக்கிறது.

ஏனெனில், இக் குழுவில் இரண்டாம் இடத்திலுள்ள ஆப்கானிஸ்தான் 2 வெற்றிகளுடன்  கொண்டுள்ள   5.225 என்ற மிகச் சிறந்த நேர்மறை நிகர ஓட்ட வேகத்தை நியூஸிலாந்து கடப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும். அதேவேளை, ஆப்கானிஸ்தான் தனது எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடையும் என எதிர்பார்க்க முடியாது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள் 11 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்று பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது.

ஆனால், தனி ஒருவராக போராடிய ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பின்வரிசை வீரர்களுடன் இணைந்து கடைசி 9 ஓவர்களில் 91 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டார்.

8ஆவது விக்கெட்டில் ரோமாரியோ ஷெப்பர்டுடன் 27 ஓட்டங்களைப் பகிர்ந்த ரதர்ஃபர்ட், பிரிக்கப்படாத கடைசி விக்கெட்டில் குடாகேஷ் மோட்டியுடன் 37 ஓட்டங்களைப் பகிர்ந்தார். கடைசி 13 பந்துகளில் மோட்டி ஒரு பந்தை மாத்திரம் எதிர்கொண்டு ஓட்டம் பெறாமல் இருந்தார்.

ரதர்ஃபர்ட் 39 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் அடங்கலாக 68 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரைவிட நிக்கலஸ் பூரன் (17), அக்கீல் ஹொசெய்ன் (15), அண்ட்றே ரசல் (14), ரொமாரியோ ஷெப்பர்ட் (13) ஆகிய நால்வர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் டிம் சௌதீ 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லொக்கி பேர்கசன் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

150 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஆரம்பத்திலிருந்து ஓட்டங்களைப் பெறுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட நியூஸிலாந்து 11 ஓவர்கள்  நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 63 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

அதன் பின்னர் மேலும் 4  விக்கெட் கள் சரிந்ததுடன் மேலதிகமாக 76 ஓட்டங்களே பெறப்பட்டது.

துடுப்பாட்டத்தில் க்ளென் பிலிப்ஸ் (40), பின் அலன் (26), மிச்செல் சென்ட்னர் (21) ஆகிய மூவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் அல்ஸாரி ஜோசப் 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் குடாகேஷ் மோட்டி 4 ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன்: ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட்

bh.gif

6787878.gif

https://www.virakesari.lk/article/185977

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முற்றிலுமாக அகற்றப்படும் நியூயோர்க் கிரிக்கெட் மைதானம்

- 8 போட்டிகளுக்காக செலவிடப்பட்ட 200 கோடி ரூபாய்

 
46d6786e-dc67-4cb9-a8c0-f231ab4400af.jpg

அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீசில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறும் போட்டிகள் புறநகரில் உள்ள Nassau County International Cricket Stadium என்ற இடத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த அறிவிப்பு வெளியானபோது இங்கு தரமான மைதான கட்டமைப்பே இல்லாத நிலை இருந்தது. இதனால் போட்டி எப்படி நடைபெறும் என்ற கேள்வி எழுந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டே மாதங்களில் 34,000 இரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் பிரமாண்டமான மைதானம் அமைக்கப்பட்டது.

இந்த மைதானத்தில் கோல்ஃப் மற்றும் கால்பந்து மைதானத்தில் பயன்படுத்தப்படும் பெர்முடா வகை புற்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும், ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் பயன்படுத்தப்படும் ஆடுகளம் இங்கு கொண்டுவரப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மைதானத்தில் 8 போட்டிகள் நடைபெற்ற நிலையில், நேற்று (12) இந்த மைதானத்தில் நடைபெற்ற கடைசி போட்டியான இந்தியா – அமெரிக்கா அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த மைதானம் முற்றிலுமாக அகற்றப்பட உள்ளது.

இந்த மைதானத்தின் கட்டமைப்புக்காக சுமார் 200 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்ட நிலையில், தொடர்ந்து அந்த மைதானத்தில் நிறைந்த கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரம் இந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளால் அமெரிக்காவில் கிரிக்கெட் போட்டிகள் பிரபலமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.thinakaran.lk/2024/06/13/breaking-news/65683/முற்றிலுமாக-அகற்றப்படும/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷின் சுப்பர் 8 வாய்ப்பை ஷக்கிப் அல் ஹசன், ரிஷாத் ஹொசெய்ன் அதிகரிக்கச் செய்தனர்

Published By: VISHNU

14 JUN, 2024 | 01:42 AM
image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் சென் வின்சன்ட் கிங்ஸ்டவுன் ஆனோஸ் வேல் விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுக்கு வந்த டி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 25 ஓட்டங்களால் பங்களாதேஷ் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் 4 புள்ளிகளைப் பெற்றுள்ள பங்களாதேஷ் தனது சுப்பர் 8 சுற்ற வாய்ப்பை அதிகரித்துக்கொண்டது. சுப்பர் 8 சுற்றுக்கு செல்ல நேபாளத்துடனான போட்டியில் பங்களாதேஷுக்கு ஒரு புள்ளியே தெவைப்படுகிறது.

இதேவேளை இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த தெர்லாந்து சுப்பர் 8 சுற்றுக்கு செல்வது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

இந்தப் போட்டியில் நெதர்லாந்து  பதிலுக்கு    துடுப்பெடுத்தாடுகையில் 5 ஓவர்கள் பூர்த்திசெய்யப்பட்டபோது முதல் சுற்றுடன் இலங்கை வெளியேறுவது உறுதிசெய்யப்பட்டது.

ஷக்கிப் அல் ஹசன் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம், ரிஷாத் ஹொசெயனின் சிறந்த பந்துவீச்சு என்பன பங்களாதேஷின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.

முதலிரண்டு விக்கெட்கள் 23 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட பின்னர் தன்ஸித் ஹசனும் ஷக்கிப் அல் ஹசனும் 3ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வீழ்ச்சியை சீர்செய்தனர்.

தன்ஸித் ஹசன் 35 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து தௌஹித் ரிதோய் 9 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

எனினும் முன்னாள் தலைவர்களான ஷக்கிப் அல் ஹசனும் மஹ்முதுல்லாவும் 5ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர்.

மஹ்முதுல்லா 25 ஓட்டங்களைப் பெற்றார்.

ஷக்கிப் அல் ஹசன் 64 ஓட்டங்களுடனும் ஜாக்கர் அலி 14 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் போல் வன் மீக்கரன் 4 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆரியன் டத் 4 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

நெதர்லாந்து வேகமாக ஓட்டங்களைப் பெற்ற போதிலும் 2 விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.

மைக்கல் லெவிட் (18), மெக்ஸ் ஓ'தௌத் (12) ஆகிய இருவரும் பவர் ப்ளேக்குள் ஆட்டம் இழந்தனர்.

விக்ரம்ஜித் சிங், சைப்ராண்ட் எங்க்ள்ப்ரெச் ஆகிய இருவரும் மொத்த எண்ணிக்கையை 10ஆவது ஓவரில் 69 ஓட்டங்களாக உயர்த்தியபோது விக்ரம்ஜித் சிங் 28 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்து எங்க்ள்ப்ரெச், அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்த முயற்சித்தனர்.

ஆனால், எங்கள்ப்ரெச் அரைகுறை மனதுடன் பந்தை அடித்து பிடிகொடுத்து 33 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். அடுத்த பந்திலேயே பாஸ் டி லீட் ஆட்டமிழந்தமை நெதர்லாந்துக்கு நெருக்கடியைக் கொடுத்தது.

மேலும் 6 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்தபோது ஸ்கொட் எட்வேர்ட்ஸ் கவனக்குறைவான அடி மூலம் பிடிகொடுத்து 25 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க அவரது அணி பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டது.

பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களால் எதையும் சாதிக்க முடியாமல் போக நெதர்லாந்து தோல்வியைத் தழுவியது.

பந்துவீச்சில் ரிஷாத் ஹொசெய்ன் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தஸ்கின் அஹ்மத் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 

ஆட்டநாயகன்: ஷக்கிப் அல் ஹசன்.

https://www.virakesari.lk/article/186033

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தன் உள்ளே! நியூஸிலாந்து வெளியே! இங்கிலாந்து ஊசலாடுகிறது!

14 JUN, 2024 | 01:52 PM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் கூட்டாக நடத்தப்பட்டுவரும் 9ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் சகலதுறைகளிலும் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்திவரும் ஆப்கானிஸ்தான் (சி குழு) சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

1406_fazalhaq_farooqui.png

இக் குழுவிலிருந்து மேற்கிந்தியத் தீவுகளும் ஆப்கானிஸ்தானும் சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றதால் நியூஸிலாந்து முதல் சுற்றுடன் வெளியேறவுள்ளது.

பப்புவா நியூ கினிக்கு எதிராக ட்ரினிடாட் டரூபா ப்றயன் லாரா விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் 7 விக்கெட்களால் வெற்றிபெற்றதன் மூலமே ஆப்கானிஸ்தான் சுப்பர் 8 சுற்றில் விளையாட 5ஆவது அணியாக தகதிபெற்றது.

1406_afghanistan_win.png

தென் ஆபிரிக்கா (டி குழு), இந்தியா (ஏ குழு), அவுஸ்திரேலியா (பி குழு), மேற்கிந்தியத் தீவுகள் (சி குழு) ஆகிய அணிகள் ஏற்கனவே சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ளன.

பஸால்ஹக் பாறூக்கியின் துல்லியமான பந்துவிச்சு,  குல்பாதின் நய்பின் சிறப்பான துடுப்பாட்டம் என்பன ஆப்கானிஸ்தானை இலகுவாக வெற்றிபெறச்செய்தன.

பஸால்ஹக் பாறூக்கி 3 போட்டிகளில் 12 விக்கெட்களுடனும் அவரது சக வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 3 போட்டிகளில் 167 ஓட்டங்களுடனும் முறையே பந்துவிச்சிலும் துடுப்பாட்டத்திலும் முதலிடங்களில் இருக்கின்றனர்.

எண்ணிக்கை சுருக்கம்

பப்புவா நியூ கினி 19.5 ஓவர்களில் சகலரும் ஆட்டம் இழந்து 95 (கிப்லின் டொரிகா 27, அலெய் நாஓ 13, பஸால்ஹக் பாறூக்கி 16 - 3 விக்., நவீன் உல் ஹக் 4 - 2 விக்.)

ஆப்கானிஸ்தான் 15.1 ஓவர்களில் 101 - 3 விக். (குல்பாதின் நய்ப் 49 ஆ.இ., மொஹமத் நபி 16 ஆ.இ.)

ஆட்டநாயகன்: பஸால்ஹக் பாறூக்கி

 

இங்கிலாந்து  ஊசலாடுகிறது

அன்டிகுவா, நொர்த் சவுண்ட் சேர் விவியன் றிச்சர்ட்ஸ் விளையாட்டரங்கில் 16.3 ஓவர்களில் நிறைவடைந்த சி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஓமானை 8 விக்கெட்களால் இங்கிலாந்து வெற்றிகொண்டது.

ஆதில் ராஷித், ஜொவ்ரா ஆச்சர், மார்க் வூட் ஆகியோர் 10 விக்கெட்களையும் பகிர்ந்து இங்கிலாந்தின் வெற்றிக்கு அடிகோலினர்.

1406_adhil_rashid_eng_vs_oman.png

ஆனால், இந்த வெற்றிக்கு மத்தியிலும் நடப்பு சம்பியன் இங்கிலாந்தின் சுப்பர் 8 சுற்று வாய்ப்பு தொடர்ந்தும் ஊசலாடிக்கொண்டிருக்கறது.

அவுஸ்திரேலியாவுக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையிலான போட்டியில் ஸ்கொட்லாந்து வெற்றிபெற்றால் அல்லது அப் போட்டியில் முடிவு கிடைக்காவிட்டால் ஸ்கொட்லாந்து சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெறும்.

அதேவேளை ஸ்கொட்லாந்து தோல்வி அடைந்து இங்கிலாந்து தனது கடைசிப் போட்டியில் நமிபியாவை வெற்றிகொண்டால் இங்கிலாந்து சுப்பர் 8 சுற்றுக்குள் நுழையும்.

இப் போட்டி கைவிடப்பட்டால் முதல் சுற்றுடன் இங்கிலாந்து வெளியேற நேரிடும்.

சி குழுவிலிருந்து சுப்பர் 8 சுற்றுக்கு அவுஸ்திரேலியா ஏற்கனவே தகுதிபெற்றுள்ள நிலையில் ஸ்கொட்லாந்து 5 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும் இங்கிலாந்து 3 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலும் இருக்கின்றன.

ஓமானை 80 பந்துகளில் 47 ஓட்டங்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து வெற்றி இலக்கை வெறும் 19  பந்துகளில்   கடந்து வெற்றியீட்டியது.

1406_england_score...png

இப் போட்டியில் இங்கிலாந்து பெற்ற 50 ஓட்டங்களில் 3 சிக்ஸ்களும் 7 பவுண்டறிகளும் அடங்கியிருந்தன.

எண்ணிக்கை சுருக்கம்

ஓமான்: 13.2 ஓவர்களில் சகலரும் ஆட்டம் இழந்து 47 (ஷொய்ப் கான் 11, ஆதில் ராஷித் 11 - 4 விக்., ஜொவ்ரா ஆச்சர் 12 - 3 விக்., மார்க் வூட் 12 - 3 விக்.)

இங்கிலாந்து 3.1 ஓவர்களில் 50 - 2 விக். (ஜொஸ் பட்லர் 24 ஆ.இ., பில் சொல்ட் 12)

ஆட்டநாயகன்: ஆதில் ராஷித்

https://www.virakesari.lk/article/186056

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க - அயர்லாந்து போட்டி மழையால் கைவிடல்! அமெரிக்கா உள்ளே! பாகிஸ்தான் வெளியே....

15 JUN, 2024 | 06:57 AM
image
 

அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டதை அடுத்து, இடம்பெற்றுவரும் இருபதுக்கு - 20 உலகக்கிண்ண சூப்பர் 8 ல் விளையாட அமெரிக்கா தகுதி பெற்றுள்ளது.

தென்னாபிரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்குப் பிறகு அமெரிக்கா 6 ஆவது அணியாக  சுப்பர் 8 இல் விளையாட தகுதிபெற்றுள்ளது.

 

ஏற்கனவே அமெரிக்கா இரு வெற்றிகளைப் பெற்று 5 புள்ளிகளைப் பெற்றிருந்த நிலையில், மழையால் போட்டி கைவிடப்பட்ட நிலையில் இந்தப் போட்டிக்கு ஒரு புள்ளிகள் கிடைத்த நிலையில், 5 புள்ளிகளைப் பெற்று குழு ஏ யில் 2 ஆம் இடத்திற்கு முன்னேறி சுப்பர் 8 க்கு தகுதி பெற்றுள்ளது.

 

குழு ஏ யில் பாகிஸ்தான் அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றிபெற்று 2 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில், சுப்பர் 8 க்கு முன்னேறுவதற்கு சாத்தியமில்லாத நிலையில், சுப்பர் 8 க்கு தகுதி பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

இருபதுக்கு - 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் 30-வது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டி புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நடைபெற இருந்த நிலையில், அங்கு மழை பெய்தமையால் நாணயச் சுழற்சிக்கு தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், மழை தொடர்ந்து பெய்தமையால் ஒரு பந்து கூட வீசாது போட்டி கைவிடப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டது.

 

இந்த போட்டி நடைபெறாமல் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கு தலா ஒவ்வொரு புள்ளிகள் கிடைத்த நிலையில், அமெரிக்க அணி 5 புள்ளிகளுடன் சுப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

அமெரிக்கா 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளில் இரண்டாவது இடத்தில் இருந்தது மழையால் போட்டி கைவிடப்பட்ட நிலையில் கிடைத்த ஒரு புள்ளியுடன் 5 புள்ளிகளைப் பெற்று சுப்பர் 8 சுற்றை உறுதிசெய்தது. 

பாகிஸ்தான் 3 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 3-வது இடத்தில் உள்ள நிலையில், பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/186105

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மழை இலங்கை அணியினை காப்பாற்றிவிட்டது இலங்கை, நேபாள போட்டியில், இல்லாவிட்டால் இலங்கை நேபாளத்திடம் மோசமாக தோற்றிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேபாளத்துக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை; தென் ஆபிரிக்காவுக்கு கடைசிப் பந்தில் ஒரு ஓட்ட வெற்றி

15 JUN, 2024 | 04:23 PM
image

(நெவில் அன்தனி)

சென் வின்சென்ட், கிங்ஸ்டவுன் ஆனோஸ் வேல் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற டி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்காவுக்கு கடைசிப் பந்துவரை கடும் சவால் விடுத்த நேபாளத்துக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போன கதையாகிப் போனது.

கடைசிவரை மிகவும் பரபரப்பாக நடைபெற்ற அப் போட்டியில் கடைசி ஓவரை புத்திசாலித்தனமாக வீசிய ஒட்நீல் பார்ட்மன் 6 ஓட்டங்களை மட்டும் கொடுத்து தென் ஆபிரிக்காவுக்கு ஒரு  ஓட்ட  வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

இந்தப் போட்டியில் நேபாளம் தோல்வி அடைந்த போதிலும் சகலதுறைகளிலும் தம்மைவிட பலசாலிகளான தென் ஆபரிக்காவை திக்பிரமிப்பில் ஆழ்த்தி பாராட்டைப் பெற்றது.

இக் குழுவில் நேபாளத்திடம் மாத்திரமே தென் ஆபிரிக்கா கடும் சவாலை எதிர்கொண்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய தென் ஆபிரிக்காவை நேபாள பந்துவீச்சாளர்களான குஷல் பேர்ட்டல், தீப்பேந்த்ரா சிங் அய்ரீ ஆகிய இருவரும் மிகத் துல்லியமாக பந்துவீசி 115 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தினர். அவர்கள் இருவரும் வீழ்ந்த 7 விக்கெட்களைப் பகிர்ந்துகொண்டனர்.

ரீஸா ஹெண்ட்றிக்ஸ், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் ஆகிய இருவரே தாக்குப் பிடித்து துடுப்பெடுத்தாடினர்.

116 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் கடைசிவரை போராடி கடைசிப் பந்தில் தோல்வியைத் தழுவியது.

தப்ரெய்ஸ் ஷம்ஸி துல்லியமாக பந்துவீசி 4 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து நேபாளத்துக்கு நெருக்கடியைக் கொடுத்தார்.

ஆனால் கடைசிவரை போராடிய நெபாளத்தின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

பார்ட்மன் வீசிய கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் குல்சான் ஜாவினால் ஓட்டம் எதுவும் பெறமுடியவில்லை. அடுத்த 2 பந்துகளில் 6 ஓட்டங்களைப் (4, 2) பெற்றார்.

கடைசி 2 பந்துகளில் நேபாளத்தின் வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 5ஆவது பந்தில் குல்சான் ஜாவினால் ஓட்டம் பெற முடியவில்லை. கடைசிப் பந்தை அடிக்க முடியாமல் போன குல்சான் ஜா, சுப்பர் ஓவருக்கு செல்லலாம் என்ற எண்ணத்தில் ஓட்டம் ஒன்றை எடுக்க முயற்சித்தார். ஆனால், அவர் ரன் அவுட் ஆக தென் ஆபிரிக்கா ஒரு ஓட்டத்தால் வெற்றிபெற்றது.

எண்ணிக்கை சுருக்கம்

தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 115 - 7 விக். (ரீஷா ஹெண்ட்றிக்ஸ் 43, ட்ரைஸ்டன் ஸ்டப்பஸ் 2 ஆ.இ., ஏய்டன் மார்க்ராம் 15, குஷால் பார்ட்டல் 19 - 4 விக்., தீப்பேந்த்ரா சிங் அய்ரீ 21 - 3 விக்.)

நேபாளம் 20 ஓவர்களில் 114 - 7 விக். 9 (ஆசிப் ஷெய்க் 42, அனில் ஷா 27, குஷாலி; பேர்ட்டல் 13, தப்ரெய்ஸ் ஷம்ஸி 19 - 4 விக்.)

ஆட்டநாயகன்: தப்ரெய்ஸ் ஷம்ஸி.

நியூஸிலாந்துக்கு ஆறுதல் வெற்றி

9ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் தனது முதல் 2 போட்டிகளில் தோல்வி அடைந்ததால் முதல் சுற்றுடன் வெளியேற நேரிட்டுள்ள நியூஸிலாந்து 3ஆவது போட்டியில் ஆறுதல் வெற்றியை ஈட்டியது.

சி குழுவில் இடம்பெறும் நியூஸிலாந்து இன்று நடைபெற்ற உகண்டாவுக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

ட்ரினிடாட், டரூபா ப்றயன் லாரா விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டி 24 ஓவர்களில் முடிவுக்கு வந்தது.

இப் போட்டியில் நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் அனைவரும் அற்புதமாக பந்துவீசி தமது அணி இலகுவாக வெற்றிபெற வழிவகுத்தனர்.

எண்ணிக்கை சுருக்கம்

உகண்டா 18.4 ஓவர்களில் சகலரும் ஆட்டம் இழந்து 40 (கெனெத் வைஸ்வா 11, டிம் சௌதீ 4 - 3 விக்., ட்ரென்ட் போல்ட் 7 - 2 விக்., மிச்செல் சென்ட்னர் 8 - 2 விக்., ரச்சின் ரவிந்த்ரா 9 - 2 விக்.)

நியூஸிலாந்து: 5.2 ஓவர்களில் 41 - 01 விக். (டெவன் கொன்வே 22 ஆ.இ.)

ஆட்டநாயகன்: டிம் சௌதீ

vnb.jpg

vbvnbvnbn.jpg

vbnmnbm.jpg

vbvnvbnbnmbm.jpg

https://www.virakesari.lk/article/186147

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக்கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள் எவை?

டி20 உலகக்கோப்பை இந்திய அணி, ரோகித் - ஹர்திக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

16 ஜூன் 2024, 04:08 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

நடப்பு உலகக்கோப்பை போட்டிகளில் அதிர்ச்சிகரமான முடிவுகள் என்பது இயல்பான ஒன்றாகி வருகின்றன. கத்துக்குட்டி அணிகளின் சவால் தரும் ஆட்டத்தால் முன்னணி அணிகள் பலவும் தொடரை விட்டே வெளியேறியுள்ளன.

ஏ பிரிவில் இந்தியா, அமெரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து ஆகிய 3 அணிகளும் வெளியேற்றப்பட்டு விட்டன.

பி பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளும், சி பிரிவில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், டி பிரிவில் இருந்து தென் ஆப்ரிக்காவும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன.

டி20 உலகக்கோப்பை இந்திய அணி, ரோகித் - ஹர்திக்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இங்கிலாந்து தகுதி

பி பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து 4 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அந்த அணியின் நிகர ரன் ரேட் 3.611 ஆக இருக்கிறது.

இங்கிலாந்துடன் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற போட்டியிட்ட ஸ்காட்லாந்து அணியும் 2 வெற்றிகளுடன் 5 புள்ளிகளை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து தோற்றுப் போனதால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது.

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதால், நிகர ரன் ரேட் அடிப்படையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

டி20 உலகக்கோப்பை இந்திய அணி, ரோகித் - ஹர்திக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வங்கதேசம், நெதர்லாந்து அணிகள் கடும் போட்டி

டி பிரிவில் தென் ஆப்ரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில், இரண்டாவது இடத்திற்கு வங்கதேசம் - நெதர்லாந்து அணிகள் போட்டியிடுகின்றன.

தற்போதைய நிலையில் வங்கதேசம் 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றாலோ, அல்லது ஆட்டம் தடைபட்டாலோ கூட வங்கதேசம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும்

மறுபுறம், நெதர்லாந்து அணியோ சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற தனது அடுத்த ஆட்டத்தில் இலங்கையை வெல்ல வேண்டும். அதேநேரத்தில், வங்கதேச அணி தனது கடைசி ஆட்டத்தில் நேபாளத்திடம் தோற்க வேண்டும். இவை இரண்டும் நடந்தால் மட்டுமே நெதர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.

 
டி20 உலகக்கோப்பை இந்திய அணி, ரோகித் - ஹர்திக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை வெளியேற்றம்

ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தானும், பி பிரிவில் இடம் பெற்றிருந்த நியூசிலாந்து அணியும், டி பிரிவில் இலங்கை அணியும் கத்துக்குட்டிகளின் சவாலை சமாளிக்க முடியாமல் டி20 உலகக்கோப்பை தொடரை விட்டே வெளியேற்றப்பட்டுள்ளன.

நிகர ரன் ரேட் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

ரன்-ரேட் என்பது ஒரு அணி தனது முழு இன்னிங்ஸிலும் ஒரு ஓவருக்கு அடித்த சராசரி ரன்களின் எண்ணிக்கை ஆகும். உதாரணமாக, 20 ஓவர்களில் 140 ரன்கள் என்பது ஒரு ஓவருக்கு ஏழு ரன்களுக்கு சமம்.

மற்ற அணியின் ரன் ரேட்டிலிருந்து எதிரணியின் ரன் ரேட்டைக் கழிப்பதன் மூலம் நிகர ரன் ரேட் கணக்கிடப்படுகிறது.

எனவே வெற்றி பெறும் அணி நேர்மறை நிகர ரன் ரேட்டையும், தோல்வியுற்ற அணி எதிர்மறை நிகர ரன் ரேட்டையும் கொண்டிருக்கும்.

ஒரு அணி 20 ஓவர்களையும் முழுமையாக ஆடாமல் முன்கூட்டியே ஆட்டமிழந்தால், அந்த அணியின் ரன் ரேட் 20 ஓவர் அடிப்படையிலேயே கணக்கிடப்படும்.

இவ்வாறு, ஒவ்வொரு ஆட்டத்திலும் கிடைக்கும் நிகர ரன்ரேட் அடிப்படையிலேயே லீக் சுற்றில் அந்த அணியின் ஒட்டுமொத்த ரன் ரேட் கணக்கிடப்படும்.

 
டி20 உலகக்கோப்பை இந்திய அணி, ரோகித் - ஹர்திக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா இரண்டாவது முறையாகப் பட்டம் வெல்லுமா?

இதுவரை, ஆறு அணிகள் முந்தைய டி20 போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.

இந்தியா இரண்டாவது முறையாகப் பட்டம் வெல்வதை இலக்காகக் கொண்டுள்ளது. 2007ஆம் ஆண்டு நடந்த முதல் போட்டியில் இந்திய அணி அற்புதமான வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றது மறக்க முடியாத நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த 2014இல் இந்தியா மீண்டும் பட்டத்தை வெல்லும் சூழலில் இருந்தது. ஆனால் இலங்கைக்கு எதிரான அந்தப் போட்டியில் இரண்டாம் இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.

பாகிஸ்தான் 2009இல் ஒருமுறை வெற்றி பெற்றது. அதன் பிறகு மூன்று முறை இறுதிப் போட்டி வரை வந்துள்ளது.

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, 2010 மற்றும் 2022இல் போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு, டி20 உலகக்கோப்பையில் மூன்றாவது பட்டத்தைப் பெற இலக்கு நிர்ணயித்துள்ளனர். போட்டிகளை நடத்தும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் 2012 மற்றும் 2016இல் இரண்டு பட்டங்களைப் பெற்றுள்ளது. 2021இல் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

https://www.bbc.com/tamil/articles/c4nn55n21rwo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கொட்லாந்தை வீழ்த்தியது அவுஸ்திரேலியா; சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது இங்கிலாந்து!

16 JUN, 2024 | 02:49 PM
image

(நெவில் அன்தனி)

க்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் கூட்டாக நடத்தப்பட்டுவந்த 9ஆவது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் நடப்பு சம்பியன் இங்கிலாந்து ஏழாவது அணியாக சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

பி குழுவில் இங்கிலாந்தின் சுப்பர் 8 சுற்று வாய்ப்பு ஊசலாடிக்கொண்டிருந்த நிலையில் ஸ்கொட்லாந்தை 5 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டதை அடுத்து இங்கிலாந்து சுப்பர் 8 சுற்றில் விளையாடுவது உறுதியானது.

சென் லூசியா, க்ரொஸ் ஐலட் டெரன் சமி தேசிய கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று காலை நடைபெற்ற பி குழுவுக்கான கடைசிப் போட்டியில் ஸ்கொட்லாந்தின் சவாலுக்கு மத்தியில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது.

ஸ்கொட்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 181 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 19.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

எனினும், ஆரம்பத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்ட அவுஸ்திரேலியா 13 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 92 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

அதன் பின்னர் அதிரடியில் இறங்கிய மாக்கஸ் ஸ்டொய்னிஸ் 17ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கையை 155 ஓட்டங்களாக உயர்த்தி ஐந்தாவதாக ஆட்டம் இழந்தார்.

அதற்கு முன்னர் ஸ்டொய்னிஸுடன் 4ஆவது விக்கெட்டில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்த ட்ரவிஸ் ஹெட் அரைச் சதம் குவித்து அசத்தியிருந்தார்.

அதன் பின்னர் டிம் டேவிட், மெத்யூ வேட் ஆகிய இருவரும் வெற்றி இலக்கை அடைய உதவினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது.

ஜோர்ஜ் மன்சே, ப்றெண்டன் மெக்முலன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 89 ஓட்டங்களைப் பகிர்ந்து  அணியைப் பலப்படுத்தினர். தொடர்ந்து  அணித் தலைவர் ரிச்சி பெரிங்டன் ஆட்டம் இழக்காமல் அரைச் சதம் குவித்தார்.

எண்ணிக்கை சுருக்கம்

ஸ்கொட்லாந்து: 20 ஓவர்களில் 180 - 5 விக். (ப்றெண்டன் மெக்முலன் 60, ரிச்சி பெரிங்டன் 42 ஆ.இ., ஜோர்ஜ் மன்சே 35, க்ளென் மெக்ஸ்வெல் 44 - 2 விக்.)

அவுஸ்திரேலியா 19.4 ஓவர்களில் 181 - 5 விக். (ட்ரவிஸ் ஹெட் 68, மாக்கஸ் ஸ்டொய்னிஸ் 59, டிம் டேவிட் 24 ஆ.இ., மார்க் வொட் 34 - 2 விக்., சபியான் ஷரிப் 42 - 2 விக்.)

டக்வேர்த் லூயிஸ் முறைமையில் இங்கிலாந்து வெற்றி

அன்டிகுவா, நோர்த் சவுண்ட் சேர் விவியன் றிச்சர்ட்ஸ் விளையாட்டரங்கில் இன்று அதிகாலை சீரற்ற காலநிலை காரணமாக 10 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு  நடத்தப்பட்ட பி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நமிபியாவை டக்வேர்த் லூயிஸ் முறைமையில் இங்கிலாந்து 41 ஓட்டங்களால் வெற்றிகொண்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து, நான்கு துடுப்பாட்ட வீரர்களின் அதிரடி துடுப்பாட்ட உதவியுடன் 4 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்களைக் குவித்தது.

திருத்தப்பட்ட 126 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமிபியா 10 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 84 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

எண்ணிக்கை சுருக்கம்

இங்கிலாந்து 10 ஓவர்களில் 122 - 5 விக். (ஹெரி ப்றூக் 20 பந்துகளில் 47 ஆ.இ., ஜொனி பெயாஸ்டோவ் 18 பந்துகளில் 31, மொயீன் அலி 6 பந்துகளில் 16, லியாம் லிவிங்ஸ்டோன் 4 பந்துகளில் 13, ரூபன் ட்ரம்ப்ள்மன் 31 - 2 விக்.)

நமிபியா 10 ஓவர்களில் 84 - 3 விக். (மைக்கல் வன் லிங்கென் 33, டேவிட் வைஸ் 12 பந்துகளில் 27, நிக்கலஸ் டெவின் 18 சுய ஆட்டமிழப்பு)

இது இவ்வாறிருக்க, பாகிஸ்தானுக்கும் அயர்லாந்துக்கும் இடையில் ப்ளோரிடா, லௌடர்ஹில் விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெறவுள்ள  பாகிஸ்தானுக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான போட்டியுடன் அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நிறைவுக்கு வருகிறது.

எஞ்சிய முதல் சுற்று போட்டிகள், சுப்பர் 8 சுற்று, மற்றும் இறுதிச் சுற்று என்பன மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது.

இதுவரை இந்தியா, ஐக்கிய அமெரிக்கா (ஏ குழு), அவுஸ்திரேலியா, இங்கிலாந்து (பி குழு), ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் (சி குழு), தென் ஆபிரிக்கா (டி குழு) ஆகிய ஏழு அணிகள் சுப்பர் 8 றில் விளையாட தகுதிபெற்றுள்ளன.

கடைசி அணியாக பங்களாதேஷ் அல்லது நெதர்லாந்து டி குழுவிலிருந்து தெரிவாகும். 

https://www.virakesari.lk/article/186197

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெதர்லாந்துடனான போட்டியில் அதிகூடிய மொத்த எண்ணிக்கையை சமப்படுத்திய இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

17 JUN, 2024 | 11:23 AM
image

(நெவில் அன்தனி)

நெதர்லாந்துக்கு எதிராக சென். லூசியா, க்ரொஸ் ஐலட் டெரன் சமி விளையாட்டரங்கில் இன்று அதிகாலை நடைபெற்ற டி குழுவுக்கான கடைசி ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சகல துறைகளிலும் திறமையை வெளிப்படுத்திய இலங்கை 83 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டு பெரும் ஏமாற்றம் அடைந்த இலங்கை, தனது கடைசி முதல் சுற்றுப் போட்டியில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான அதிகூடிய மொத்த எண்ணிக்கையை சமப்படுத்தி ஆறுதல் அடைந்தது.

ஐக்கிய அமெரிக்காவில் தந்திரமான ஆடுகளங்களில் துடுப்பாட்டத்தில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு தென் ஆபிரிக்காவிடமும் பங்களாதேஷிடமும் தோல்வி அடைந்த இலங்கை, இந்த வெற்றியுடன் 3 புள்ளிகளைப் பெற்று டி குழுவில் 3ஆம் இடத்தைப் பெற்றது.

இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான போட்டி கடும் மழையினால் முழுமையாக கைவிடப்பட்டிருந்தது.

ஐக்கிய அமெரிக்க ஆடுகளங்களில் தடுமாறிய இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆடுகளத்தில் சகலதுறைகளிலும் பிரகாசித்து வெற்றிபெற்றது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க (0) இரண்டாவது பந்தில் ஆட்டம் இழந்ததும் இலங்கை மீண்டும் மோசமான நிலைக்கு தள்ளப்படும் என கருதப்பட்டது.

ஆனால், குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலன்க, ஏஞ்சலோ மெத்யூஸ், வனிந்து ஹசரங்க ஆகியோர் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணியை பலமான நிலையில் இட்டனர்.

குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ் (17) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களையும் சரித் அசலன்க, ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ், வனிந்து ஹசரங்க ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களையும் பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்துக்கொடுத்தனர்.

இவ்வாறான இணைப்பாட்டங்கள் தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ஏற்படுத்தப்படாததே இலங்கை தோல்வி அடைவதற்கு காரணமாக அமைந்தது.

இன்றைய போட்டியில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய  சரித் அசலன்க 21 பந்துகளில் ஒரு பவுண்டறி, 5 சிக்ஸ்களுடன் 46 ஓட்டங்களைக் குவித்தார்.

குசல் மெண்டிஸ் 29 பந்துகளில் 46 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 26 பந்துகளில் 34 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 15 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 30 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க 6 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

நெதர்லாந்து பந்துவீச்சில் லோகன் வன் பீக் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 16.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 118 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

எனினும் நெதர்லாந்தின் ஆரம்பம் இலங்கைக்கு அச்சத்தைக் கொடுப்பதாக இருந்தது.

மைக்கல் லெவிட், மெக்ஸ் ஓ'தௌத் ஆகிய இருவரும் 27 பந்களில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். 

ஆனால், அதன் பின்னர் 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 10 விக்கெட்களும் சரிந்தன.

மைக்கல் லெவிட், அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் ஆகிய இருவரே திறமையாகத் துடுப்பெடுத்தாடி தலா 31 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் நுவன் துஷார 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

மஹீஷ் தீக்ஷன, தசுன் ஷானக்க ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: சரித் அசலன்க

1606_charith_asalanka_sl_v_neth.jpg

https://www.virakesari.lk/article/186245

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேபாளத்தின் கடும் சவாலை முறியடியத்து சுப்பர் 8 சுற்றில் நுழைந்தது பங்களாதேஷ்

17 JUN, 2024 | 12:17 PM
image
 

(நெவில் அன்தனி)

நேபாளத்துக்கு எதிராக சென் வின்சன்ட், கிங்ஸ்டவுன் ஆனோஸ் வேல் விளையாட்டரங்கில் நேற்று (16) இரவு நடைபெற்ற டி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் 21 ஓட்டங்களால் வெற்றியீட்டிய பங்களாதேஷ், சுப்பர் 8 சுற்றில் விளையாடுவதை உறுதி செய்துகொண்டது.

இப் போட்டியில் நேபாளத்திடம் கடும் சவாலை எதிர்கொண்டே பங்களாதேஷ் வெற்றி பெற்றது.

பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் கடும் சிரமத்துக்கு மத்தியில் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஷக்கிப் அல் ஹசன் அதிகபட்சமாக 17 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

7 ஓவர்கள் நிறைவில் நேபாளம் 5 விக்கெட்களை இழந்து 26 ஓட்டங்களைப் பெற்று தடுமாறியதால் பங்களாதேஷ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் குஷால் மல்லா (27), தீப்பேந்த்ரா சிங் அய்ரீ (25) ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.

ஆனால், அவர்களது இணைப்பாட்டம் முடிவுக்கு வந்த பின்னர் விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தன.

நேபாளத்தின் மொத்த எண்ணிக்கை 85 ஓட்டங்களாக இருந்தபோது கடைசி 4 விக்கெட்களும் வீழ்த்தப்பட்டன.

பந்துவீச்சில் தன்ஸிம் ஹசன் சக்கிப் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 4 ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் முஸ்தாபிஸுர் ரஹ்மான் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷக்கிப் அல் ஹசன் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: தன்ஸிம் ஹசன் சக்கிப்

1506_tanzim_hasan_sakib_bang_v_nep.jpg

https://www.virakesari.lk/article/186257

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக்கோப்பை: பாபர் ஆசமை கேலி செய்யும் பாகிஸ்தான் ரசிகர்கள் - சேவாக் புதிய யோசனை

டி20 உலகக்கோப்பை, பாகிஸ்தான், பாபர் ஆசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 போட்டித் தொடரை போலவே, 2024 டி20 உலகக்கோப்பை போட்டிகளில் இருந்தும் பாகிஸ்தான் விரைவிலேயே வெளியேறிவிட்டது.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்துக்கு எதிரான வெற்றியுடன் பாகிஸ்தானின் பயணம் முடிந்தது. அயர்லாந்துக்கு எதிரான இந்த வெற்றி பாகிஸ்தானுக்கு எந்தவிதத்திலும் பலனளிக்கவில்லை. ஏனெனில் அந்த அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அயர்லாந்தை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது. ஆனால், அந்த அணியால் சூப்பர் 8-க்கு முன்னேற முடியவில்லை.

கேப்டன் பாபர் ஆசம் மீது பாகிஸ்தானின் அனைத்து தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. அவர் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அயர்லாந்து அணியுடனான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி 4 ஓவர்களில் 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன் பிறகு, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் மீண்டும் மிடில் ஆர்டர் ஏமாற்றம் அளித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பாபர் ஆசம் 2 பவுண்டரிகள் உட்பட 32 ரன்கள் எடுத்தார்.

பாபர் ஆசம் கேப்டன் பதவியில் இருந்து விலகுவாரா?

டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் : கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகுகிறாரா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டி20 குழுநிலை ஆட்டத்தில் அயர்லாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது

டி20 உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பாபர் ஆசம் செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, "அணியின் வீரர்கள், நிர்வாகம் என அனைவரும் சோகமாக உள்ளனர்" என்று பாபர் கூறினார்.

"எங்களால் திட்டமிட்டபடி செயல்பட முடியவில்லை. எங்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. எங்கள் கூட்டு செயல்திறன் குறைவாக இருந்தது. இந்த தோல்விக்கு தனிப்பட்ட முறையில் எந்த வீரரையும் காரணம் சொல்ல முடியாது. நாங்கள் சில சமயங்களில் நல்ல பேட்டர்களாகவும் மற்ற நேரங்களில் நல்ல பந்து வீச்சாளர்களாகவும் இருந்தோம். நீங்கள் இந்த இடத்தில் ஆடுகளத்தை பார்த்தீர்களானால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. ஆனால் எங்கள் பேட்டிங்கை கொண்டு அதனை எதிர்கொள்ள முடியவில்லை. ” என்றார்

கேப்டன் பதவி குறித்து பேசிய பாபர் ஆசம், "முன்பு இதுபோன்ற சூழலில், என்னால் முடியாது நினைத்தபோது நான் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தேன். அப்போது நானாக அறிவித்தேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதனை ஏற்றுக் கொண்டது. " என்று குறிப்பிட்டார்.

மீண்டும் இதே முடிவுடன் கிரிக்கெட் வாரியத்தை நான் அணுகினாலும் உட்கார்ந்து பேசி முடிவு அறிவிக்கப்படும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே இறுதி முடிவை எடுக்கும்" என்றார்.

 

பாகிஸ்தான் அணியின் டி20 பயணம் எப்படி இருந்தது?

டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் : கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகுகிறாரா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுகள் குறித்து பாகிஸ்தான் ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

டி20 உலகக் கோப்பை போட்டியின் லீக் கட்டத்தில், பாகிஸ்தான் முதல் இரண்டு முக்கியமான போட்டிகளில் தோல்வியை சந்தித்தது, அதன் பிறகு கடைசி இரண்டு போட்டிகளில் வென்றது. ஆனாலும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை.

முதல் போட்டியில், சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணி அமெரிக்கா அணியிடம் தோல்வியை சந்தித்தது.

அதன்பிறகு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 120 ரன் என்ற இலக்கைக் கூட துரத்திப் பிடிக்க முடியாமல் தோற்றுப் போனது.

இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், கனடா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய `குரூப் ஏ’ பிரிவில் பாகிஸ்தான் இருந்தது.

இந்த `குரூப் ஏ’ குழுவில் இருந்து இந்தியாவும் அமெரிக்காவும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று 7 புள்ளிகளுடன் குழுவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த போட்டி மழையால் ரத்தானது, இதன் மூலம் அமெரிக்கா ஒரு புள்ளி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

பாகிஸ்தான் ரசிகர்கள் அதிருப்தி

டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் : கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகுகிறாரா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் வெளியேறியதால் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்

பாகிஸ்தானின் பிரபல `டான்’ ஆங்கில நாளிதழின் விளையாட்டு செய்தியாளரான அப்துல் கஃபர் தனது எக்ஸ் தளத்தில், "2023 கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப் பிறகு பாபர் ஆசம் கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களின் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீண்டும் பாபர் ஆசமுக்கு கேப்டன் பதவியை வழங்கியது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுகள் குறித்து பாகிஸ்தான் ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் பல பெரிய ஐசிசி போட்டிகளில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளது.

2017-ம் ஆண்டு முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் தலைமையில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதன் பிறகு பாகிஸ்தான் அணி பெரிய வெற்றிகளை பெறவில்லை. கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டது.

2009 டி20 உலகக் கோப்பையில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியிருப்பது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். பாகிஸ்தான் அணி பற்றிய மீம்ஸ்களும் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. அணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும், பாபர் ஆசம் கேப்டன் பதவி குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

பாகிஸ்தான் அணி பற்றி சேவாக் கூறியது என்ன?

டி20 உலகக்கோப்பை, பாகிஸ்தான், பாபர் ஆசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக்கும் பாகிஸ்தான் பேட்டிங் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

சேவாக் கூறுகையில், "பாகிஸ்தான் அணி பேட்டிங்கை மேம்படுத்த வேண்டும். அதிக ஸ்டிரைக் ரேட்டுடன் பேட் செய்யக்கூடிய பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தானுக்கு தேவை.” என்று குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக், டென் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் பேசுகையில், "பாபர் ஆசம் இடத்தில் நான் இருந்திருந்தால், இப்போதே ராஜினாமா செய்துவிட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்தியிருப்பேன்” என்று கூறினார்.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கூறுகையில், "அயர்லாந்துக்கு எதிரான இன்னிங்ஸை பாபர் ஆசம் வழிநடத்திய போதிலும், மற்ற பேட்ஸ்மேன்கள் வீழ்ந்தனர், டெயில் எண்டர்களே (கீழ் வரிசை பேட்ஸ்மேன்களே) முப்பது சதவீத ரன்களை எடுத்தனர்” என்று கூறினார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், "பாகிஸ்தானின் உலகக் கோப்பை பயணம் முடிந்தது’’ என்று ட்வீட் செய்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cx99knn8v18o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடுகளங்களையோ, போட்டி அட்டவணையையோ குறைகூற - வனிந்து ஹசரங்க மறுக்கிறார்

Published By: VISHNU

17 JUN, 2024 | 08:47 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கையில் தோல்விகளுக்கு அமெரிக்க ஆடுகளங்களையோ போட்டி அட்டவணையையோ இலங்கை அணித் தலைவர் வனிந்து ஹசரங்க குறைகூற மறுத்துள்ளார்.

'நாங்கள் விளையாடிய அதே ஆடுகளங்களில்தான் மற்றைய அணிகளும் விளையாடின. எங்களது விளையாட்டு வியூகங்களை மாற்றிக்கொள்வது எமது கடமை' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரி20 உலகக் கிண்ண போட்டி ஆரம்பமாவதற்கு சுமார் 10 தினங்களுக்கு முன்னர் இலங்கை அணி அமெரிக்கா சென்றடைந்தது. அத்துடன் அங்கு நெதர்லாந்து, அயர்லாந்து ஆகிய அணிகளுடன் இரண்டு பயிற்சிப் போட்டிகளில்  இலங்கை விளையாடியிருந்தது.

ஆனால், அமெரிக்காவில் கொடுக்கப்பட்ட ஆடுகளங்களுக்கு ஏற்ப தங்களை விரைவாக மாற்றிக்கொள்ள முடியாமல் போனதாக வனிந்து ஹசரங்க உணர்கிறார்.

துடுப்பாட்டத்தில் திடீர் சரிவு கண்டதால் இலங்கையின் உலகக் கிண்ண முயற்சி சிதைக்கப்பட்டது.

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நியூயோர்க் நசவ் கவுன்டி விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் இலங்கை 77 ஓட்டங்களை மாத்தரமே பெற்றது.

அதனைத் தொடர்ந்து பங்களாதேஷுக்கு எதிராக டல்லாஸில் நடைபெற்ற போட்டியில் இலங்கை 9 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களை எடுத்தது. ஆனால், டெத் ஓவர்களை வீசுவதற்கு முன்னணி பந்துவீச்சாளர்கள் இல்லாமல் போனதால் இலங்கை தோல்வியைத் தழுவியது.

நேபாளத்துடனான ஆட்டம் மழையினால் முழுமையாகக் கைவிடப்பட்டதும் இலங்கையின் சுப்பர் 8 சுற்று கனவு சிதறிப்போனது.

ஒருவாறு நெதர்லாந்துடனான போட்டியில் 83 ஓட்டங்களால் வெற்றிபெற்று இலங்கை ஆறுதல் அடைந்தது. அல்லது வெறுங்கையுடன் நாடு திரும்ப நேரிட்டிருக்கும்.

இந்த உலகக் கிண்ண போட்டியின்போது நெடுந்தூரம் பயணம் செய்ய நேரிட்டமை, நான்கு மைதானங்களில் விளையாட நெரிட்டமை உட்பட இலங்கை எதிர்கொண்ட அசௌகரியங்கள் பற்றி கூறப்பட்டது. ஆனால், அவற்றை எல்லாம் புறந்தள்ளி வைத்த ஹசரங்க, அணியின் வெளியேற்றத்திற்கு அணிதான் பொறுப்பு என்றார்.

'ஒரு போட்டியில் தோல்வி அடையும்போது ஆடுகளங்கள் மற்றும் பிற விடயங்களைக் குறை கூறலாம், ஆனால் தொழில்முறை கிரிக்கெட் வீரர்களாக, அது சரியல்ல' என்றார் அவர்.

'மற்றைய அணிகளும் அதே ஆடுகளத்தில்தான் விளையாடின. நாங்கள் விளையாடும் முறையை மாற்றுவது எங்களது கடமையாகும்.. நாங்கள் ஒரு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும்போது அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். நாங்கள் தேவையான மாற்றங்களைக் கடைப்பிடிக்கவில்லை. சூழ்நிலைகளுக்கு ஏற்ப எங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை. அதுதான் எமது பிரதான குறைபாடு' என அவர் மேலும் தெரிவித்தார்.

பயிற்சிப் போட்டிகளுக்கு முன்னர் நொர்த் கரோலினாவில் சிறிய பயிற்சி முகாமில் இலங்கை ஈடபட்டது. ஆனால் அது போதுமானதாக அமையவில்லை என்பதே ஹசரங்காவின் கூற்றாகும்.

'எங்களை பத்து தினங்களுக்கு முன்னர் இங்கு அழைத்துவந்து பயிற்சிகளில் ஈடுபட ஏற்பாடு செய்த கிரிக்கெட் சபைக்கு நாங்கள் நன்றி கூற வேண்டும். அது ஒரு பெரிய விடயம். நிலைமைகள், காலநிலை, நேர மாற்றம் ஆகியவற்றுக்கு எங்களைப் பழக்கப்படுத்திக்கொள்வது முக்கியம்.

'என்றாலும், நாங்கள் அமெரிக்காவில் ஒரு பிராந்தியத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்றபோது, ஆடுகளங்கள் ஒரே தன்மையாக இருக்கவில்லை. சில நாடுகளில் ஆடுகளங்கள் இடத்திற்கு இடம் ஒரே மாதிரியாக இருக்கின்றபோதிலும் அமெரிக்காவில் அப்படி இல்லை.

'நாங்கள் எங்களால் முடிந்தவரை எங்களை மாற்றிக்கொள்ள முயற்சித்தோம். துரதிர்ஷ்டவசமாக நியூயோர்க்கில் எங்களது முதல் போட்டி அமைந்தது. அது எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. இரண்டாவது போட்டிக்காக நாங்கள் டலாஸுக்குச் சென்றோம், அந்த ஆடுகளத்துக்கு ஏற்ப எங்களை மாற்றிக்கொள்ளவில்லை. அணி என்ற வகையிலும் அணித் தலைவர் என்ற வகை யிலும்   அந்தப் பொறுப்பை நாங்கள் ஏற்கவேண்டும்' என வனிந்து ஹசரங்க மேலும் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/186313

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூரன் துடுப்பாட்டத்திலும் மெக்கோய் பந்துவீச்சிலும் அபாரம்; ஆப்கனை 104 ஓட்டங்களால் வென்றது மே. தீவுகள்

18 JUN, 2024 | 10:04 AM
image

(நெவில் அன்தனி)

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சென். லூசியா, க்ரொஸ் ஐலட் டெரன் சமி விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவு பெற்ற சி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அதிகூடிய மொத்த எண்ணிக்கையைக் குவித்த மேற்கிந்தியத் தீவுகள் 104 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.

இந்தப் போட்டியுடன் ரி20 உலகக் கிண்ணத்தில் குழுநிலைக்கான முதல் சுற்று நிறைவுக்கு வந்தது.

ஏற்கனவே சுப்பர் 8 சுற்றில் விளையாட சி குழுவிலிருந்து தகுதிபெற்றிருந்த இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டியில் நிக்கலஸ் பூரனின் அதிரடி அரைச் சதம், ஒபெட் மெக்கோயின் துல்லியமான பந்துவீச்சு என்பன மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

மேற்கிந்தியத் தீவுகளைக் கட்டுப்படுத்த 7 பந்துவீச்சாளர்களை ஆப்கானிஸ்தான் பயன்படுத்திய போதிலும் அது பலனளிக்கவில்லை.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 218 ஓட்டங்களைக் குவித்தது.

இந்த மொத்த எண்ணிக்கையானது இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.

இங்கிலாந்துக்கு எதிரான பி குழு போட்டியில் அவுஸ்திரேலியாவும் நெதர்லாந்துக்கு எதிரான டி குழு போட்டியில் இலங்கையும் பெற்ற 201 ஓட்டங்களே இதற்கு முன்னர் இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பெறப்பட்ட அதிகூடிய இணை மொத்த எண்ணிக்கையாக இருந்தது.

இன்றைய போட்டியில் மொத்த எண்ணிக்கை 22 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர் ப்ரெண்டன் கிங் (7) குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

ஆனால், அதன் பின்னர் நிக்கலஸ் பூரன், ஜோன்சன் சார்ள்ஸ் ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி ஓட்ட மழை பொழிந்தனர்.

2ஆவது விக்கெட்டில் ஜோன்ஸன் சார்ள்ஸுடன் 37 பந்துகளில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்த நிக்கலஸ் பூரன் 4ஆவது விக்கெட்டில் ரோவ்மன் பவலுடன் மேலும் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தார்.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நிக்கலஸ் பூரன் சதம் குவிக்க 3 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது இல்லாத இரண்டாவது ஓட்டத்தை பெற முயற்சித்து 98 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார்.

53 பந்துகளை எதிர்கொண்ட நிக்கலஸ் பூரன் 6 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களை விளாசியிருந்தார்.

நடப்பு ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் தனி நபருக்கான அதிகூடிய ஓட்டங்களை நிக்கலஸ் பூரன் பெற்றதுடன் ஒரு போட்டி யில்  அதிக சிக்ஸ்களை விளாசிய மைல்கல் சாதனையையும் நிலைநாட்டினார்.

அவரைவிட ஜோன்சன் சார்ள்ஸ் 27 பந்துகளில் 43 ஓட்டங்களையும் ஷாய் ஹோப் 17 பந்துகளில் 25 ஓட்டங்களையும் ரோவ்மன் பவல் 15 பந்துகளில் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் 7ஆவது பந்துவீச்சாளராகப் பயன்படுத்தப்பட்ட குல்பாதின் நய்ப் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

219 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 16.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 114 ஓட்டங்களை மட்டும் பெற்று தோல்வியைத் தழுவியது.

இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அடைந்த முதலாவது தோல்வி இதுவாகும்.

இப்ராஹிம் ஸத்ரான் (38), அஸ்மத்துல்லா ஸத்ரான் (23), அணித் தலைவர் ரஷித் கான் (18), கரிம் ஜனத் (14) ஆகிய நால்வரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் ஒபெட் மெக்கோய் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அக்கீல் ஹொசெய்ன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் குடாகேஷ் மோட்டி 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: நிக்கலஸ் பூரன். 

1806_festive_mode_in_st_lucia.png

1806_obed_mccoy_wi_vs_afghan.webp

1806_nicholas_pooran_wi_vs_afghan.jpg

1806_wi_bt_afghan.jpg

https://www.virakesari.lk/article/186328

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் சுண்டல், வாங்கோ, மீண்டும் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி👍
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • "திருந்தாத உள்ளம்"     "திருந்தாத முழுமூடர் இந்த நாட்டில் தீமைபல புரிகின்றார், எனவே அன்பே உருவான பெண்டிரெல்லாம்அடிமை யாகி உறைக் கிணறு செய்கின்றார் கண்ணீராலே!"   எங்கேயோ நான் கேட்ட வார்த்தை இது. என் முன்னைய உயர் வகுப்பு ஆசிரியையை தற்செயலாக நான் லண்டனில் கண்ட பொழுது என் மனதில் அது மீண்டும் எதிரொலித்தது. அவர் பெயர் நகுலா, படித்தவர், பட்டம் பெற்றவர், தமிழ் ஆசிரியை. சைவ சமயத்தில் முழு ஈடுபாடுடன், ஆலய வழிபாடு முதல் விரதங்கள் வரை, ஒவ்வொன்றுக்கும் விளக்கங்கள் கொடுத்து, அவ்வற்றை அந்ததந்த முறைகளின் படி ஒழுகுவதில் அவருக்கு அவளே நிகர்.   நான் சமயத்தில் பெரிய ஈடுபாடு இல்லாவிட்டாலும் என் ஆசிரியரின் ஒழுங்கு முறை கடைப்பிடிப்பதை கண்டு ஆச்சரியப் பட்டுள்ளேன். நான் பல்கலைக்கழகம் போனபின், ஒரு முறை என் நண்பனுடன் கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா ஒன்றுக்கு சென்ற பொழுது, என் ஆசிரியரை அங்கு தம்பதியர்களாக ஒரு பெண் குழந்தையுடன், கிருஸ்தவ மத கோலத்தில் கண்டு திடுக்கிட்டேன். அதை அவரும் உணர்ந்திருக்கவேண்டும். என்றாலும் அதை சமாளித்தபடி. ' என் கணவர் பிரான்சிஸ், மத்திய கிழக்கில் வேலைசெய்கிறார்' என அறிமுகப் படுத்தினார். நான் அதன் பின் என் கொழும்பு நண்பரிடம் விசாரித்ததில், பிரான்சிஸ் என்பவர் பெரிதாகப் படிக்கவில்லை என்றும், ஆனால் வசதியான குடும்பத்தில் கொஞ்சம் துடி துடிப்பான இளைஞராக, மும்மொழியும் தாராளமாக பேசுவதால், பெண்களுடன் இலகுவில் பழகக் கூடியவர் என்றும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், ஆசிரியைக்கும் இவருக்கும் எதிர்பாராதவிதமாக தொடர்பு வந்து, கிறிஸ்தவ முறைப்படி கல்யாணத்தில் முடிந்ததாக கேள்விப்பட்டேன். அதில் எந்த தவறும் இல்லை. தன் நிலைக்கு தக்கதாக, கணவருடன் விட்டுக்கொடுத்து வாழ்வதையிட்டு, நான் உண்மையில், என் ஆசிரியர் பற்றி பெருமை கொண்டேன்!   அதன் பின் பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் அவரை லண்டனில் இரண்டு வளர்ந்த பிள்ளைகளுடன், ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு பிள்ளையுமாக லண்டன் ஈலிங் துர்க்கை அம்மன் இந்து ஆலயத்தில் நெற்றியில் திருநீறுடன், சந்தனப் பொட்டு பளபளக்க கண்டேன். அப்பொழுது அங்கு கணவரைக் காணவில்லை. பிரான்ஸிஸை நான் ஒரு முறைதான் கண்டாலும், அவர் இலகுவில் மனதில் பதிந்துவிட்டார். கலகலப்பாய் அன்னியோன்னியமாக அந்த கொஞ்ச நேரத்துக்குள் கதைத்தது இன்னும் நினைவில் உண்டு. அவ்வளவு விரைவாக அடுத்தவர்களை கவர்ந்து விடுகிறார். ஆகவே ஆசிரியையை கவர்ந்தது அன்று எனக்கு அதிசயமாக இருக்கவில்லை.   பிள்ளைகள் இருவரும் தங்கள் மற்ற நண்பர்களுடன் ஆங்கில மொழியில் கதைத்த படி, வெளியில் ஒரு இடத்தில் போய் அமர்ந்து விட்டார்கள். ஆசிரியை இன்னும் அதே முன்னைய பார்வையிலேயே, அழகாக, அதே மற்றவர்களை கவரும் சிரிப்புடன் காணப்பட்டார். அவர் என்னை விட ஏழு, எட்டு வயது கூடவென்றாலும், தோற்றத்துக்கு அப்படி இல்லை! ஒருவேளை அவரை முன்பின் தெரியாது என்றால், நானே சிலவேளை பெண் நண்பி அழைப்பு கேட்டிருக்கலாம்?   ஆசிரியை ' நீங்க பிஸியா?' என்று கேட்டார். நான் இல்லை என்றதும், 'நான் இன்று 12 மணிக்குள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பாயாசம் வெண்பொங்கல் நைவேத்யம் படைக்க வேண்டும். இன்று வெள்ளிக்கு கிழமை தானே , அதுதான்!, கொஞ்சம் நில்லுங்கள், நான் வந்து கதைக்கிறேன்' என்று கூறிவிட்டு, ஆனால் இரு கண்களிலும் கண்ணீர் மெல்ல சுரக்க விடை பெற்று சென்றார்.   நான் உண்மையில் லண்டன் வந்தது இடம் சுற்றி பார்க்கவும், தமிழர்களின் வாழ்வு அங்கு எப்படி என பொதுவாக அறியவே. ஆகவே அவர் ஆலயம் சுற்றி கும்பிட்டு வரும் வரை, நான் ஆலயத்தின் முக்கிய இடங்களை படம் பிடிப்பதுடன், அங்கு வந்திருந்த சில அடியார்களுடன் கதைப்பதிலும் பொழுது போக்கினேன். அப்படி சந்தர்ப்பத்தில் நான் என்னுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாய் படித்த குமரநாயகம், அவரின் குடும்பம், அதே போல யாழ் மத்திய கல்லூரியில் என்னுடன் படித்த வாமதேவ அவரின் குடும்பம் இப்படி சில முன்னைய நண்பர்களையும் காணக் கூடியதாக இருந்தது. அங்கு மாலை கட்டி தொண்டுகள் செய்துகொண்டு இருந்த ஒரு அம்மாவுடன் கதைத்தபொழுது தான் எனக்கு புரிந்தது, தீர்க்க முடியாத துன்பங்கள் தீரவும் மற்றும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கவுமே இன்றைய காலை வழிபாடு முக்கியமாக கருதப் படுகிறது என்று. இது மற்றும் ஆசிரியரின் கண்ணீரும், அவர் திருமண உறவில் குழம்பி இருக்கிறார் என மேலோட்டமாக எனக்கு கூறியது!   'என்ன செய்கிறாயடா?, இப்ப எந்த நாடு?. தனியவா வந்தது ? மனைவி பிள்ளைகள்?' ஆசிரியை என்ற அதிகாரம் அப்படியே இருந்தது. அதில் மாற்றம் இல்லை. ஆனால் ... அந்தக் கண்ணீர் ? நான் ' பிரான்சிஸ் சார் எங்கே?, வரவில்லையா மேடம் ?' கதையை ஆரம்பித்தேன். அவர் கண்கள் மீண்டும் மழை பொழியத் தொடங்கியது. தன் கதையை ஒவ்வொன்றாக பிரான்ஸிஸை சந்தித்ததில் இருந்து சொல்லத் தொடங்கினார்.   தான் முதல் ஆசிரியர் உத்தியோகமாக யாழ் மத்திய கல்லூரியில் நகரில் ஆரம்பித்தாலும், ஓர் சில ஆண்டுகளின் பின் 4000 மாணவர்களும் 300 ஆசிரியர்களும் கொண்ட, ஒரு தேசியத் தமிழ்ப் பாடசாலையான. கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றதாகவும், அப்பொழுது தான் தற்காலிகமாக இருந்த வீட்டுக்காரியுடன், சிலவேளை காலிமுக திடலுக்கு அல்லது மவுண்ட் லாவினியா [கல்கிசை] கடற்கரைக்கு போவதாகவும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்திலேயே பிரான்ஸிஸை சந்தித்ததாக கூறினார்.   'அதைப்பற்றி இனி பேசிப் பிரயோசனம் இல்லை, உண்மையில் காதலோ காமமோ வரவில்லை. பிரான்சிஸ், எதிர்பாராத நேரத்தில் உடலை தீண்டியதால், அந்த வீட்டுக்கார அம்மா இவன் சரி இல்லாதவன் எனக் எடுத்துக்கூறியும், இவன் இனி என் கணவன் என்று - கண்ணகி. சீதை .... இப்படியான சரித்திர பாத்திரங்களை விரும்பியவள், நானும் என்னை அவர்களைப் போல் எண்ணியவள் என்பதால் - பட்டிக்காட்டாய் முடிவெடுத்தேன். இவனை, இவன் உள்ளத்தை என்னால், என் உண்மையான அன்பால், என் இளமை அழகால், கவர்ச்சியால் என்னுடனே அவன் வாழ்வு இனி தொடரத் செய்ய முடியும் என்று எண்ணினேன்' என்று கண்ணை துடைத்துக்கொண்டு கூறி ' கடுமையான சட்டங்கள் பிரான்ஸிஸால் போடப்பட்டு, கிருஸ்தவ முறைப்படி திருமணம் செய்தேன்' என்றார்.   'இலங்கையில் இருக்கும் மட்டும் சிற்சில சம்பவங்களில் வேறு பெண்களுடன் பிரான்சிஸ் தொடர்பு கொண்டாலும், எல்லை மீறினாலும் இரு பக்க பெற்றோர்களின் கவனிப்பால் அது பெரிதாக குடும்ப வாழ்வை பாதிக்கவில்லை, மற்றும் அவரின் தொடர்புகள் சிங்கள, பரங்கி பெண்களாக இருந்ததால், அது, அந்த செய்திகள் எம் சமூகத்துக்குள், பரவவும் இல்லை. நானும் இந்தக் காலத்தில் இவை கொஞ்சம் சகயம் தானே என கண்டும் காணாததாகவும் இருந்துவிட்டேன்' என்று தொடர்ந்தவர்,   'ஆனால் லண்டனுக்கு வந்தபின், தமிழ் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில், சமயம் பரப்புவதிலும் மற்றும் பொதுவாக. ஆண்கள் வேலைக்கு போவதால், பகல் நேரத்தில் பெண்களை தேவாலயத்துக்கு ஏற்றி இறக்கும் தொண்டு வேலையும் செய்யத் தொடங்கினார். இது அவருக்கு மீண்டும் பெண்களுடனான காதல் / காமம் தொடர்புகளுக்கு வழிவகுத்தது' என்று அழுது கொண்டு சொன்னார்.   'அவரை மட்டும் பிழை சொல்ல முடியாது - திருந்தாத உள்ளம் என்று எதுவும் இல்லை மாறாக திருந்தவிடாமல் அழுத்தும் அழுக்கு உள்ளங்களே அதிகம்' என்று தன் கதையை முடித்தார்.   'அவர் பிரிவதும் வேறு பெண்களுடன் வாழ்க்கை நடத்துவதும், நானும் விடாமல் அவரை துரத்தி வீடு கொண்டுவருவதும் ஒரு தொடர்கதையாக போய்விட்டது' பெருமூச்சுக்கு இடையில் தொடர்ந்தார். 'நான் இதற்கிடையில், மனநிலை பாதிப்பு அடைந்து ஒரு மனநல மருத்துவமனையில் நீண்ட பல பரிசோதனைகள் செய்து, இறுதியாக அங்கு மூன்று மாதம் தங்கி சிகிச்சையும் செய்தேன்.   அப்பொழுது, அதை கேள்விப்பட்டு பிரான்சிஸ் என்னைப் பார்க்க அங்கு வந்தார். தான் இனி பிரியமாடேன் என்று சபதமும் செய்தார். ஆனால் பிள்ளைகளுக்கு அவரின் போக்கு அறவே பிடிக்கவில்லை. எனவே மகனுக்கும் பிரான்ஸிஸுக்கும் நடந்த வாக்கு வாதத்தில் அவர் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினார். மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறிய கதைதான்.   யாரோ ஒரு பெண்ணுடன் குடும்ப வாழ்வு நடத்த தொடங்கினார். ஆனால் 2 வருடத்தில் பிரிந்து இருக்க இடம் இல்லாமல் அலைந்தார். அதைக் கேள்விப்பட்ட நான் திருந்துவார் என்று மீண்டும் சந்தர்ப்பம் கொடுத்து, பிள்ளைகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், என்னுடன் சேர்த்துக்கொண்டேன். எவ்வளவு நான் முட்டாள் என்பதை பின்பு தான் அறிந்தேன்' என்று ஆசிரியர் என் முகத்தை பார்க்க முடியாமல், ஆலயத்தின் மூலஸ்தானத்தில் அமர்ந்து இருந்த அம்மனை பார்த்து சொன்னார்.   இதற்கு மேல் அவரின் கதையை நான் கேட்கவில்லை.     "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்! கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா?"   நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • வடக்கு, கிழக்கிலுள்ள இந்து ஆலயங்களில் சைவமக்கள் சுதந்திரமாக வழிபாடு செய்வதை உறுதிப்படுத்துங்கள் - அமைச்சர் விதுரவிடம் நல்லை ஆதீனம் கோரிக்கை Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 04:01 PM (எம்.நியூட்டன்) நல்லை ஆதீனத்துக்கு வருகை தந்த புத்தசாசன மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்காவிடம் சைவமக்கள் சுதந்திரமாக குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறி சிவன் ஆலயங்களில் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என வேண்டுதல் விடப்பட்டதுடன், திருக்கோணேமலை திருக்கோணேஸ்வரம் ஆலயம் அருகே பாதை இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள பெட்டிக்கடைகளை அப்புறப்படுத்தி புனித தலத்தின் மேன்மையைப் பேண வழிசெய்ய வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. காங்கேசன்துறையில் தல்செவன ஹோட்டல் அமைந்துள்ள பகுதியானது சைவமக்களின் பாவனையில் உள்ள சத்திரம் இருந்த நிலம். அது இதுவரை ஒப்படைக்கப்படவில்லை. அதனை உடன் வழங்க ஏற்பாடு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இவற்றுக்கு பதில் கூறிய அமைச்சர் குருந்தூர்மலை வெடுக்கு நாறி பகுதியில் சுதந்திரமாக வழிபாடு செய்யலாம் என்றும் அப்பகுதி தொல்லியல் திணைகளத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது என்றும் திருக்கோணேஸ்வர பெட்டிக்கடை அகற்றுவது தொடர்பாக மாற்று ஏற்பாடு விரைவில் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், காங்கேசன்துறை தல்செவன ஹோட்டல் காணி விடயமாக நடவடிக்கை எடுப்பதாக  தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை (24) நடைபெற்ற இந்த  சந்திப்பில் ஆதீன சுவாமிகள், கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், இந்துகலாசார திணக்களப் பணிப்பாளர் அநுருத்தன்  கலந்து கொண்டார்கள். https://www.virakesari.lk/article/186825
    • கல்முனை பகுதியில் பதற்ற நிலை; போக்குவரத்து பாதிப்பு; 7 மணித்தியாலங்களாக போராட்டகாரர் வசமான நகரம் Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 03:54 PM   கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயங்களுக்கு உடனடி தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி இன்று திங்கட்கிழமை (24) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதுடன் பதற்ற நிலை தொடர்ந்தது. அத்துடன், பிரதேச செயலகத்தின் நுழைவாயிலையும் பூட்டிய நிலையில்  அதிகாரிகளை உள்நுழைய விடாமல் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெறும் நிர்வாக அடக்குமுறைகளை கண்டித்தும்  அதற்கான உரிய தீர்வு கோரியும்  தொடர்ச்சியாக 92 நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில்  இன்று பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மட்டக்களப்பு - கல்முனை வீதி தடைப்பட்டுள்ளதால்  வாகனங்களை மாற்று வீதிகளில் அனுப்புவதற்கு பொலிஸார்  நடவடிக்கை எடுத்திருந்தனர். இதே வேளை 7 மணித்தியாலங்களாக  கல்முனை நகர் போராட்டக்காரர் வசம் இருந்த நிலையில் கல்முனையில் வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு  மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 8.00 மணிமுதல் பி.ப 2 மணி வரை கல்முனை மாநகரம் ஸ்தம்பித்திருந்ததுடன், நகரில் இருந்து அனைத்து பொது போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்தது. மருத்துவ சேவை வாகனங்கள் மாத்திரம் மக்களால் அனுமதிக்கப்பட்டிருந்தன. அத்துடன், தமது நியாயமான கோரிக்கைக்கு பதில் என்ன?  என பல  கோஷத்துடன் வீதியில் அமர்ந்தும் போராட்டம் செய்தனர். பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர் பொலிஸாரின் மத்தியஸ்த்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கேட்டுக்கொண்டதற்கிணங்க  சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எட்டுப் பேர் மாவட்ட செயலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர்.  அதுவரை வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வழமை போன்று கல்முனை வடக்கு பிரதேச   செயலகம் முன்பாக சுழச்சிமுறை போராட்டம் தொடர்கிறமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை வழமைக்கு மாறாக இன்று பாரிய விமானம் ஒன்று பெரும் இரைச்சலுடன் ஆகாயத்தில் வட்டமடித்த வண்ணம் இருந்ததையும் காண முடிந்தது. https://www.virakesari.lk/article/186845
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.