Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அநாகரிகமாக நடக்கின்றனர் –கருணா அம்மான்

Vhg ஜனவரி 18, 2024
Photo_1705578562946.jpg

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அநாகரிமாக நடந்துகொள்வதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் அணிதிரள்வதன் மூலமே எமது பலத்தினை வெளிப்படுத்தமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக்காரியாலயம் இன்று(18-01-2024) மட்டக்களப்பு கல்லடியில் திறந்துவைக்கப்பட்டது.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர், கட்சியின் உபதலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவருமான ஜெய சரவணா உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டு கட்சி தலைமையகம் திறக்கப்பட்டதுடன் அதனை தொடர்ந்து கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்துகள் வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கட்சி முக்கியஸ்தர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் பிரதியமைச்சர்,

எங்களுடைய கட்சி இன்று ஆரம்பித்து ஏழு வருடங்கள் முடிவடைந்து இருக்கின்றது 2017 ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் 11-ம் தேதி எங்களுடைய கட்சியை நாங்கள் ஆரம்பித்தோம் அன்று அதற்கு பெரிய வரவேற்பை பெற்றிருந்தோம் முதல் முதலாக சுயேட்சையாக போட்டியிட்டு பிரதேச சபை தேர்தலில் 7 வட்டாரங்களை எமது கட்சி கைப்பற்றி இருந்தது அதனை நாங்கள் பாடிய வெற்றியாக பார்க்கின்றோம்.

இரண்டாவதாக வந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு இன்று 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை இந்த மக்கள் நமக்கு அள்ளி வழங்கியிருந்தார்கள் உண்மையிலேயே அவர்களின் நன்றியை ஒருபோதுமே மறக்கப் போவதில்லை இருப்பினும் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் என்னால் அன்று பாராளுமன்றம் செல்ல முடியாமல் போய்விட்டது அன்று இருந்தால் அம்பாறை மாவட்டத்தில் பாரிய மாற்றங்களை செய்து இருக்கலாம் அதனை அந்த மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.

அம்பாறை மாவட்ட மக்கள் எமது கட்சிக்கு பாரிய அத்திவாரம் இட்ட மக்கள் என்பதனை நாங்கள் மறந்து விடக்கூடாது இன்று 72 வருட வரலாற்றிலே முதன் முதலாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடித்தவன் என்று பெருமையை நாங்கள் அம்பாறை மாவட்டத்திலேயே நிருபித்து காட்டினோம் அந்த அளவிற்கு அந்த மக்கள் நமக்கு ஒத்துழைத்தார்கள்.

பொதுவாக உங்களுக்கு தெரியும் பழமொழி ஒன்று இருக்கின்றது நிறைவாகும் வரை மறைவாக இரு என்று நாங்கள் கடந்த காலங்களில் எம்மை தயார் படுத்துவதற்காக உண்மையிலே மறைவாக இருந்தது உண்மையான விடயம் தற்போது எங்களின் தேவையை மக்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள் அது உங்களுக்கு தெரிந்த விடயம் இன்று அந்த வகையில் மீண்டும் நமது தலைமைச் செயலகத்தை ஆரம்பித்திருக்கின்றோம் இதில் அரசியல் பணிகளை தீவிரமாக விஸ்தரிப்பதற்கு நாங்கள் திட்டமிட்டு இருக்கின்றோம்.

கடந்த வரலாற்றிலே எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இருக்கின்றார்கள் அவர்களுடைய செயற்பாடுகள் உங்களுக்கு நன்றாக தெரியும் அனைவரையும் குறிப்பிடவில்லை பாராளுமன்றம் என்பது தனிப்பட்ட குரோதங்களை விவாதிப்பதற்கான களமாக தான் அவர்கள் பாராளுமன்றத்தை பயன்படுத்துகிறார்களே தவிர பாராளுமன்றத்தின் வளங்களை கொண்டு வருவதற்காக அல்லது அங்குள்ள எம்முடைய மக்களின் தேவைகளை பூர்த்தியாவதற்குரிய செயல்பாடுகளை பாராளுமன்றத்தில் ஏற்படுத்தி அந்த வளங்களை கொண்டு வருவதற்காக அவர்கள் முயற்சிப்பதாக இல்லை.

மாறாக பார்க்க போனால் எல்லா மாவட்டங்களையும் விட எங்களுடைய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் அநாகரிமான முறையில் பாராளுமன்றத்தில் சண்டையிடுவதும் கூச்சிடுவதும் தனிப்பட்ட விரோதங்களை பாராளுமன்றத்தில் பகிர்ந்து கொள்வது மாத்திரமே இவர்களது வேலையாக இருக்கின்றது இதனை மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.

ஆகவே எதிர்காலத்தில் சிறந்த தகுதியான பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்க வேண்டும் பாராளுமன்றம் என்பது உங்களுக்கு தெரியும் மிக உயர்ந்த சபை ஒரு நாட்டிலே அந்த சபையின் ஊடாக மாறிய வேலை திட்டங்களை நாங்கள் முன் எடுக்க வேண்டும் அதனை நாங்கள் நிரூபித்து காட்டி இருக்கின்றோம் கடந்த காலங்களில்.

அவ்வாறான ஒரு நிலையை உருவாக்கி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் நமது நோக்கம் அதற்காக நாங்கள் பறந்து பட்ட அடிப்படையிலே வடக்கு கிழக்கு பிரதேசம் மாத்திரம் அல்ல இலங்கையில் இருக்கின்ற அனைத்து தமிழ் மக்களுக்குமான எங்களுடைய குரல் ஒலிக்கும் அதில் முக்கியமான ஒரு விடயத்தை இன்று உண்மையிலேயே எங்களுடைய துரதிஷ்டம் என்னவென்றால் கட்சிகள் அனைத்தும் பிரிந்து இருப்பதே உண்மையிலே ஒரு குடையின் கீழ் தமிழ் கட்சிகள் அனைத்தும் அனைத்து இரண்டு வருமாக இருந்தால் ஒரு பெரிய பலத்தை நாங்கள் ஏற்படுத்திக் காட்ட முடியும்.

ஆகவே எங்களுடைய பலவீனங்களை தான் எதிரிகள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் இன்னும் பிளவுகளை ஏற்படுத்துவதற்கு தான் இவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள் ஆகவே தமிழர்களாகிய நாங்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய காலம் இது பதவி பட்டங்களை தூக்கி எறிந்து விட்டு அனைத்து மக்களும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து எங்களுடைய தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் தமிழ் மக்களின் இருப்பை தக்க வைக்க முன் வர வேண்டும் என்பதனை இவ்விடத்தில் நான் அன்பாக வேண்டிக் கொள்ள விரும்புகிறேன்.

குறிப்பாக புலம்பெயர்ந்து வாழுகின்ற மக்களின் ஒத்துழைப்புக்கள் தேவை பலர் எங்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் ஆகவே வருகின்ற காலங்களில் எங்களுடைய மாவட்ட அமைப்பாளர்கள் இருக்கிறார்கள் அவர்களின் ஊடாக பல தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நாங்கள் திட்டமிட்டு இருக்கின்றோம்.

https://www.battinatham.com/2024/01/blog-post_767.html

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ஆகவே எங்களுடைய பலவீனங்களை தான் எதிரிகள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் இன்னும் பிளவுகளை ஏற்படுத்துவதற்கு தான் இவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்

இவன் யாரை தனது எதிரியென்று சொல்கிறான்? தமிழ் மக்களையோ?  

4 hours ago, கிருபன் said:

பதவி பட்டங்களை தூக்கி எறிந்து விட்டு அனைத்து மக்களும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து எங்களுடைய தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் தமிழ் மக்களின் இருப்பை தக்க வைக்க முன் வர வேண்டும்

தமிழினத்திற்குத் துரோகம் இழைத்து, எதிரியுடன் நின்று தமிழர்களையே ஆயிரக் கணக்கில் கொன்றாயே, அந்தத் தமிழர்களையா சொல்கிறாய்? இன்னுமாடா உன்னை தமிழ்ச் சனம் நம்பும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்?  

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அநாகரிகமாக நடக்கின்றனர்

IMG-5709.jpg

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

தமிழ் மக்களின் இருப்பை தக்க வைக்க முன் வர வேண்டும் என்பதனை இவ்விடத்தில் நான் அன்பாக வேண்டிக் கொள்ள விரும்புகிறேன்.

மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை,    போன்ற இடங்களில் இன்னும் 20%   தமிழர்கள் இருக்கிறார்கள் தானே !போதாதா??? 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அநாகரிமாக நடந்துகொள்வதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

சாத்தான் வேதம் ஓதுதோ?

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

குறிப்பாக புலம்பெயர்ந்து வாழுகின்ற மக்களின் ஒத்துழைப்புக்கள் தேவை பலர் எங்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் ஆகவே வருகின்ற காலங்களில் எங்களுடைய மாவட்ட அமைப்பாளர்கள் இருக்கிறார்கள் அவர்களின் ஊடாக பல தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நாங்கள் திட்டமிட்டு இருக்கின்றோம்.

https://www.battinatham.com/2024/01/blog-post_767.html

அண்ணாவை புலம் பெயர் அமைப்புக்கள் உதவியும் ஊக்கமும் அளித்து வருகிறார்களாம். இது எப்படி இருக்கு? இங்குள்ள அனபர்கள் எத்தனை பேர் ஊக்கமளிக்கிறீர்கள். அவர் சொன்னதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. நல்ல முன்னேற்றம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 19/1/2024 at 11:44, ரஞ்சித் said:

இவன் யாரை தனது எதிரியென்று சொல்கிறான்? தமிழ் மக்களையோ?  

தமிழினத்திற்குத் துரோகம் இழைத்து, எதிரியுடன் நின்று தமிழர்களையே ஆயிரக் கணக்கில் கொன்றாயே, அந்தத் தமிழர்களையா சொல்கிறாய்? இன்னுமாடா உன்னை தமிழ்ச் சனம் நம்பும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்?  

இப்பவெல்லாம் இப்படியான கருத்துக்களை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது 
பாடசாலையில் பிடிக்காத மாணவர்கள் இருந்தால் சரி வாசிக்காமல் முடடையை போட்டுட்டு போய்க் கொண்டு இருக்க வேண்டியது தான் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

இப்பவெல்லாம் இப்படியான கருத்துக்களை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது 
பாடசாலையில் பிடிக்காத மாணவர்கள் இருந்தால் சரி வாசிக்காமல் முடடையை போட்டுட்டு போய்க் கொண்டு இருக்க வேண்டியது தான் 

என்ன இருந்தாலும் சும்மா நெற்றியில் பெரிதாக படடை அடித்து திரிபவர்களை விட இவருக்கு ஒரு சந்தர்ப்பம்கொடுத்தாலும் பரவாயில்லை.

ஆயிரம் கதைகள் சொன்னாலும் பிள்ளையான் செய்த வேளைகளில் ஒரு வீத வேலையையும் மற்றைய தமிழர்கள் என்று பறை சாற்றி கொண்டு செல்பவர்கள் செய்யவில்லை.

தனிப்படட தவறான காரணங்கள் இருக்கலாம். அதட்காக எல்லாவற்றையும் குற்றம் சாட்டிக்கொண்டு இருக்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஒற்றுமையை  இந்தாள் கதைக்கிறரர் , 150000 மக்களின் மரணத்திற்கு காரணமாக இருந்த கொலையாளி . இவரை அம்மான் என்று தயவு செய்து எழுத வேண்டாம் . அந்த தகுதியை இழந்து ரொம்ப நாளாகிவிட்டது .

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Cruso said:

என்ன இருந்தாலும் சும்மா நெற்றியில் பெரிதாக படடை அடித்து திரிபவர்களை விட இவருக்கு ஒரு சந்தர்ப்பம்கொடுத்தாலும் பரவாயில்லை. 

இங்கும் உங்களுக்கு மதம் பிடித்துள்ளது….

கருணா நெற்றியில் பட்டை அடித்ததை பார்த்ததில்லையா நீங்கள்?

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, MEERA said:

இங்கும் உங்களுக்கு மதம் பிடித்துள்ளது….

கருணா நெற்றியில் பட்டை அடித்ததை பார்த்ததில்லையா நீங்கள்?

அது நெற்றியில் மட்டும்தான் படடை. ஐயோ அவருக்கு  உடம்பெல்லாம் படடை. 😂

மதமா? அது என்ன மதம்? பகிடி அவர்கள் இங்கு ஒரு கருத்தை உங்களுக்கு எழுதி இருந்தார். அதை நீங்கள் சரியாக வாசித்து விளங்கவில்லை என நினைக்கிறேன். மீண்டும் ஒரு முறை வாசியுங்கள். 😜 

நீங்கள் மட்டுமல்ல எல்லா இந்துக்களும் வாசிக்க வேண்டும். அப்பபோதுதான் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்குமா இல்லையா என்பதை புரிந்து  கொள்ளுவார்கள் .😗

Edited by Cruso

  • கருத்துக்கள உறவுகள்+
On 19/1/2024 at 02:00, கிருபன் said:

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அநாகரிகமாக நடக்கின்றனர் –கருணா அம்மான்

Vhg ஜனவரி 18, 2024
Photo_1705578562946.jpg

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அநாகரிமாக நடந்துகொள்வதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் அணிதிரள்வதன் மூலமே எமது பலத்தினை வெளிப்படுத்தமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக்காரியாலயம் இன்று(18-01-2024) மட்டக்களப்பு கல்லடியில் திறந்துவைக்கப்பட்டது.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர், கட்சியின் உபதலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவருமான ஜெய சரவணா உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டு கட்சி தலைமையகம் திறக்கப்பட்டதுடன் அதனை தொடர்ந்து கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்துகள் வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கட்சி முக்கியஸ்தர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் பிரதியமைச்சர்,

எங்களுடைய கட்சி இன்று ஆரம்பித்து ஏழு வருடங்கள் முடிவடைந்து இருக்கின்றது 2017 ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் 11-ம் தேதி எங்களுடைய கட்சியை நாங்கள் ஆரம்பித்தோம் அன்று அதற்கு பெரிய வரவேற்பை பெற்றிருந்தோம் முதல் முதலாக சுயேட்சையாக போட்டியிட்டு பிரதேச சபை தேர்தலில் 7 வட்டாரங்களை எமது கட்சி கைப்பற்றி இருந்தது அதனை நாங்கள் பாடிய வெற்றியாக பார்க்கின்றோம்.

இரண்டாவதாக வந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு இன்று 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை இந்த மக்கள் நமக்கு அள்ளி வழங்கியிருந்தார்கள் உண்மையிலேயே அவர்களின் நன்றியை ஒருபோதுமே மறக்கப் போவதில்லை இருப்பினும் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் என்னால் அன்று பாராளுமன்றம் செல்ல முடியாமல் போய்விட்டது அன்று இருந்தால் அம்பாறை மாவட்டத்தில் பாரிய மாற்றங்களை செய்து இருக்கலாம் அதனை அந்த மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.

அம்பாறை மாவட்ட மக்கள் எமது கட்சிக்கு பாரிய அத்திவாரம் இட்ட மக்கள் என்பதனை நாங்கள் மறந்து விடக்கூடாது இன்று 72 வருட வரலாற்றிலே முதன் முதலாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடித்தவன் என்று பெருமையை நாங்கள் அம்பாறை மாவட்டத்திலேயே நிருபித்து காட்டினோம் அந்த அளவிற்கு அந்த மக்கள் நமக்கு ஒத்துழைத்தார்கள்.

பொதுவாக உங்களுக்கு தெரியும் பழமொழி ஒன்று இருக்கின்றது நிறைவாகும் வரை மறைவாக இரு என்று நாங்கள் கடந்த காலங்களில் எம்மை தயார் படுத்துவதற்காக உண்மையிலே மறைவாக இருந்தது உண்மையான விடயம் தற்போது எங்களின் தேவையை மக்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள் அது உங்களுக்கு தெரிந்த விடயம் இன்று அந்த வகையில் மீண்டும் நமது தலைமைச் செயலகத்தை ஆரம்பித்திருக்கின்றோம் இதில் அரசியல் பணிகளை தீவிரமாக விஸ்தரிப்பதற்கு நாங்கள் திட்டமிட்டு இருக்கின்றோம்.

கடந்த வரலாற்றிலே எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இருக்கின்றார்கள் அவர்களுடைய செயற்பாடுகள் உங்களுக்கு நன்றாக தெரியும் அனைவரையும் குறிப்பிடவில்லை பாராளுமன்றம் என்பது தனிப்பட்ட குரோதங்களை விவாதிப்பதற்கான களமாக தான் அவர்கள் பாராளுமன்றத்தை பயன்படுத்துகிறார்களே தவிர பாராளுமன்றத்தின் வளங்களை கொண்டு வருவதற்காக அல்லது அங்குள்ள எம்முடைய மக்களின் தேவைகளை பூர்த்தியாவதற்குரிய செயல்பாடுகளை பாராளுமன்றத்தில் ஏற்படுத்தி அந்த வளங்களை கொண்டு வருவதற்காக அவர்கள் முயற்சிப்பதாக இல்லை.

மாறாக பார்க்க போனால் எல்லா மாவட்டங்களையும் விட எங்களுடைய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் அநாகரிமான முறையில் பாராளுமன்றத்தில் சண்டையிடுவதும் கூச்சிடுவதும் தனிப்பட்ட விரோதங்களை பாராளுமன்றத்தில் பகிர்ந்து கொள்வது மாத்திரமே இவர்களது வேலையாக இருக்கின்றது இதனை மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.

ஆகவே எதிர்காலத்தில் சிறந்த தகுதியான பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்க வேண்டும் பாராளுமன்றம் என்பது உங்களுக்கு தெரியும் மிக உயர்ந்த சபை ஒரு நாட்டிலே அந்த சபையின் ஊடாக மாறிய வேலை திட்டங்களை நாங்கள் முன் எடுக்க வேண்டும் அதனை நாங்கள் நிரூபித்து காட்டி இருக்கின்றோம் கடந்த காலங்களில்.

அவ்வாறான ஒரு நிலையை உருவாக்கி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் நமது நோக்கம் அதற்காக நாங்கள் பறந்து பட்ட அடிப்படையிலே வடக்கு கிழக்கு பிரதேசம் மாத்திரம் அல்ல இலங்கையில் இருக்கின்ற அனைத்து தமிழ் மக்களுக்குமான எங்களுடைய குரல் ஒலிக்கும் அதில் முக்கியமான ஒரு விடயத்தை இன்று உண்மையிலேயே எங்களுடைய துரதிஷ்டம் என்னவென்றால் கட்சிகள் அனைத்தும் பிரிந்து இருப்பதே உண்மையிலே ஒரு குடையின் கீழ் தமிழ் கட்சிகள் அனைத்தும் அனைத்து இரண்டு வருமாக இருந்தால் ஒரு பெரிய பலத்தை நாங்கள் ஏற்படுத்திக் காட்ட முடியும்.

ஆகவே எங்களுடைய பலவீனங்களை தான் எதிரிகள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் இன்னும் பிளவுகளை ஏற்படுத்துவதற்கு தான் இவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள் ஆகவே தமிழர்களாகிய நாங்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய காலம் இது பதவி பட்டங்களை தூக்கி எறிந்து விட்டு அனைத்து மக்களும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து எங்களுடைய தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் தமிழ் மக்களின் இருப்பை தக்க வைக்க முன் வர வேண்டும் என்பதனை இவ்விடத்தில் நான் அன்பாக வேண்டிக் கொள்ள விரும்புகிறேன்.

குறிப்பாக புலம்பெயர்ந்து வாழுகின்ற மக்களின் ஒத்துழைப்புக்கள் தேவை பலர் எங்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் ஆகவே வருகின்ற காலங்களில் எங்களுடைய மாவட்ட அமைப்பாளர்கள் இருக்கிறார்கள் அவர்களின் ஊடாக பல தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நாங்கள் திட்டமிட்டு இருக்கின்றோம்.

https://www.battinatham.com/2024/01/blog-post_767.html

தல, நீங்க ஜட்டியோட பொம்பிளைகள் கூட நின்ட காலத்தை மறந்திட்டீங்களோ?

நீங்கள் வெறியில அதை மறந்திருக்கலாம், ஆனால் நாங்கள் இன்னும் இல்லை...😉

Edited by நன்னிச் சோழன்
நீக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
On 23/1/2024 at 08:51, நன்னிச் சோழன் said:

தல, நீங்க ஜட்டியோட பொம்பிளைகள் கூட நின்ட காலத்தை மறந்திட்டீங்களோ?

நீங்கள் வெறியில அதை மறந்திருக்கலாம், ஆனால் நாங்கள் இன்னும் இல்லை...😉

அவர் அறியாத வயசில அப்படி செய்துவிடடார். அதை எல்லாம் மன்னித்து அவருக்கும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்தால் என்ன? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.