Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் முதன்மையான பொறியியல் நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) இந்த ஆண்டு கண்டியில் கிளை வளாகத்தைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை வெளிநாடுகளில் ஐஐடிகளின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும், அதே நேரத்தில் புதிய வளாகத்திற்கான முன்மொழிவு கடந்த நவம்பரில் 2024 வரவு -செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தனது அமைச்சினால் கல்வியாளர்கள் குழுவொன்றை மெட்ராஸ் ஐஐடிக்கு அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

வளாகத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலுக்காக அடுத்த மாதம் இலங்கைக்கு ஐஐடியில் இருந்து குழு வருவதற்கு முன்னதாக இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள்.

ஐஐடி மெட்ராஸ் குழு இலங்கையின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் அதன் பாடநெறிகள் மற்றும் கண்டி கிளை வளாகத்தை நிறுவுவதற்கான செயல்முறையைத் தொடங்கும் அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவிற்கு விஜயம் செய்து ஐஐடி-மெட்ராஸுடன் இலங்கையில் வளாகத்தை நிறுவுவது குறித்து கலந்துரையாடியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த விஜயத்தின் போது அமைச்சர் பிரேமஜயந்த ஐஐடி மெட்ராஸ் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://thinakkural.lk/article/289063

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் (இந்தியா) 
கோவில் கட்டுதல்(ஆத்மீக துறை_)
பழ்கலைகழகம் அமைத்தல்(கல்வித்துறை)
இசை நிகழ்ச்சி (கலைத்துறை)
இப்படி பழைய பஞ்சாங்கத்தின் படி ராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட ,சீனாக்காரன் வந்து நவீன ராஜந்திரங்களை பாவித்து உங்களை நாட்டை (சிறிலங்காவை) விட்டு துண்டை கானோம் துணியை கானோம் என ஒட வைப்பார்கள் ....

பிறகு யூ டியுப்பில் வந்து கோவில் கட்டி கொடுத்தேன்,பழ்கலைகழக்ம் கட்டி கொடுத்தேன் பாட்டு பாடினேன் ...ஐயோ என்னை அடிச்சு கலைத்து விட்டார்களே  என அழவேண்டி வரு

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இலங்கை தமிழருக்கு உருப்படியாக சில விடயங்களை செய்ய விரும்பி இருந்தால் இது போன்ற ஒன்றை திருகோணமலை, யாழ்ப்பாணம் அல்லது மட்டக்ககளப்பில் செய்து இருக்க வேண்டும் அல்லது செய்ய இலங்கை அரசை நிர்பந்தம் செய்து இருக்க வேண்டும்.

ஆனால் இந்தியா செய்வது எல்லாம் கலாசார மண்டபம் அமைப்பது, சைவர்கள் வாழும் திருகோணமலையில் பெருமாள் கோவிலைக் கட்டுவது, யாழ்ப்பாணத்துக்கு சம்பந்தம் இல்லா ஆஞ்சநேயர் கோவிலை நிறுவுவது என்று எது எல்லாம் எம்மை மூளைச் சலவை செய்யுமோ அதை செய்கிறது.

கேட்பார் யாரும் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, putthan said:

நீங்கள் (இந்தியா) 
கோவில் கட்டுதல்(ஆத்மீக துறை_)
பழ்கலைகழகம் அமைத்தல்(கல்வித்துறை)
இசை நிகழ்ச்சி (கலைத்துறை)
இப்படி பழைய பஞ்சாங்கத்தின் படி ராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட ,சீனாக்காரன் வந்து நவீன ராஜந்திரங்களை பாவித்து உங்களை நாட்டை (சிறிலங்காவை) விட்டு துண்டை கானோம் துணியை கானோம் என ஒட வைப்பார்கள் ....

பிறகு யூ டியுப்பில் வந்து கோவில் கட்டி கொடுத்தேன்,பழ்கலைகழக்ம் கட்டி கொடுத்தேன் பாட்டு பாடினேன் ...ஐயோ என்னை அடிச்சு கலைத்து விட்டார்களே  என அழவேண்டி வரு

தற்பொழுதைய உலக ஒழுங்கை மாற்றி சீனா,ரஸ்யா,இந்தியா போன்ற நாடுகள் கூட்டு தலமைத்துவத்தை எடுக்க முயற்சி செய்கின்றன ...இந்த சைக்கிள் கப்பில் இஸ்லாமிய நாடுகள் தங்களது மத அடிப்படை வாதத்தை உலகம் பூராவும் பரப்ப வேலை செய்கின்றனர் .இனிமேல் வரும் போரில் இஸ்லாமிய நாடுகள் ஒன்றாக நின்று இந்தியாவை பலம் இழக்க பண்ண முயல்வார்கள் ...இந்தியாவை வீழ்த்த சீனா இஸ்லாமிய நாடுகளுக்கு கை கொடுக்கும் ...
தொடரும் போர் தேசிய இனங்களுக்கு இடையே இல்லாமல் ...மதங்களுக்கு இடையேயான போர் ஆக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

இந்த சைக்கிள் கப்பில் இஸ்லாமிய நாடுகள் தங்களது மத அடிப்படை வாதத்தை உலகம் பூராவும் பரப்ப வேலை செய்கின்றனர் .

ஓம். மேற்குலகில் வசிக்கின்ற ஈழதமிழர்கள் சிலரும் ஈழதமிழ் அரசியல் ஆய்வாளர்கள்?ளும் அதற்க்கு கை கொடுப்பார்கள் ☹️

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

தொடரும் போர் தேசிய இனங்களுக்கு இடையே இல்லாமல் ...மதங்களுக்கு இடையேயான போர் ஆக இருக்கும்

ரஷ்யாவின் Ukraine மீதான போருக்கு பின் இருப்பது அங்குள்ள Orthodox church.

இந்தியாவை சீழ் படுத்திக்கொண்டு இருப்பது ஹிந்துத்துவா பைத்தியங்கள்

இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் பௌதம்

இங்கே வட அமெரிக்காவில் Trumb பின் திரள்பவர்கள் பெத்திக்கோஸ்ட் சபையை சேர்ந்தவர்கள்

தென் அமெரிக்க நாடுகளில் அரசியலை தீர்மானிப்பது கத்தோலிக்கம்

மத்திய கிழக்கில் யூதர் vs இஸ்லாம்.

உலகப் பொருளாதாரம் மிக வலுவிழந்த நிலையில் உலகம் முழுவதும் இந்த மத ஸ்தாபனங்கள் வைத்திருக்கும் சொத்துக்களின் மதிப்பு மதிப்பிட முடியாதது, இவர்கள் Tax கட்டுவதில்லை

உலகில் வலது சாரிக்களுக்கு அடி விழும் பொழுது இந்த மதங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு நாள் அடி வாங்கலாம்.

ஐ நா அதை நோக்கித் தான் போகின்றது 

  • கருத்துக்கள உறவுகள்+

ஆனரேனும் தெளிவாக்குங்கோ...

இந்த மாதிரி இன்னொரு நாட்டோடை பெயரிலை வேறொரு நாட்டிலை பல்கலைக்கழகம் அமைத்தால், இது அந்த Host நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் இல்லையோ? (மெய்யாவே தெரியாமல் தான் கேட்கிறேன்)

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நன்னிச் சோழன் said:

ஆனரேனும் தெளிவாக்குங்கோ...

இந்த மாதிரி இன்னொரு நாட்டோடை பெயரிலை வேறொரு நாட்டிலை பல்கலைக்கழகம் அமைத்தால், இது அந்த Host நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் இல்லையோ? (மெய்யாவே தெரியாமல் தான் கேட்கிறேன்)

அப்படி இல்லை என்றுதான் நினைக்கிறேன். அவர்கள் இலங்கை அரசின் சடட திட்ட்ங்களின் அடிப்படையில் அமைக்கும் பொது பிரச்சினை இருக்காது.

அப்படியான நிறைய கல்லூரிகள் இலங்கையில் எட்கேனவே நிறைய இருக்கின்றன. அந்த கல்லூரிகளின்  பாட திடடம் சர்வதேசத்தில் அங்கீகரிக்க படடதாக இருக்குமாகஇருந்தால் நாட்டுக்கு நல்லதுதானே.

சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் நிறைய கல்லூரிகள் அவ்வாறுதான் காணப்படுகின்றன. இதனால் அந்தந்த நாடுகள் அந்நிய செலாவணியை மிச்சப்படுத்துவதால் பொருளாதார ரீதியாக அபிவிருத்தியடைய சந்தர்ப்பமும் அதிகம். 

  • கருத்துக்கள உறவுகள்+
13 hours ago, Cruso said:

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நன்னிச் சோழன் said:

ஆனரேனும் தெளிவாக்குங்கோ...

இந்த மாதிரி இன்னொரு நாட்டோடை பெயரிலை வேறொரு நாட்டிலை பல்கலைக்கழகம் அமைத்தால், இது அந்த Host நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் இல்லையோ? (மெய்யாவே தெரியாமல் தான் கேட்கிறேன்)

மக்கள் உரிமைக்காக போராடினால் தான் இறையாண்மை மீறல் ...ஏனைய நாடுகள் அந்த நாட்டு அதிபருக்கு கொஞ்ச சில்லரையை கொடுத்து விட்டு இராணுவ முகாம் அமைத்தாலும் ..அதனால் இறையாண்மை பாதிப்பு வராது....

முட்டைக்கு அடுத்த நாட்டில் பிச்சை எடுக்கும் இவங்களுக்கு இறையாண்மை ஒர் கேடு...

அதுசரி உவங்கன்ட நாட்டில் எதோ புதிய சட்டம் கொண்டு வந்திருக்கிறாங்களாம் அவையளை பற்றி எழுதினால் தூக்கி போடுவாங்கள் என்று....நான் யாழில் கண்டபடி அவையளைப்பற்றி எழுதுகிறனான் கொஞ்சம் பயமா இருக்கு....சுற்றுலா விடுமுறையில் உவகன்ட நாட்டுக்கு போவக்கல்ல தூக்கி கிக்கி உள்ள வைச்சிடுவாங்களோ தெரியாது ..

இது பற்றி கள உறவுகள் அறிவுரை தந்தால் நான் அடக்கி வாசிப்பேன்...

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பகிடி said:

இந்தியாவை சீழ் படுத்திக்கொண்டு இருப்பது ஹிந்துத்துவா பைத்தியங்கள்   க்களுக்கு அடி விழும் பொழுது இந்த மதங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு நாள் அடி வாங்கலாம்.

ஐ நா அதை நோக்கித் தான் போகின்றது 

1)  மோடி பிராமணியத்தை வெட்டி ஒட முயல்கின்றார் ஆனால் அதை பிராமணியம் இப்ப புரிந்து விட்டது....ராமன் சத்திரியன் என்ற வகையில அவரை கடவுளாக காட்ட முயல்கின்றனர் ...ஆனால் ராமரின் சிலையை மோடி தொடமுடியாமல் பண்ணி விட்டனர் ....நாட்டின் பிரதமர் நினைத்தாலும் பிராமணியத்தின் சூழ்ச்சிக்கு தாக்கு பிடிக்க முடியாது....
2)வலதுசாரிகளும்  அதிகாரத்திற்கு வந்த பின்பு இப்ப இடதுசாரிகள் செய்வதைதான் செய்ய போகிறார்கள் ..
3)இரண்டாம் உலக போரின் முடிவில் ஆசியாவின் உள்ள நாடுகளை மத அடிபடையில் பிரித்து அங்கு உள்ள தேசிய இனங்களிடையே  இருந்த பூர்வீக மதங்களுக்கு இடையில் வேறு மதங்களை பரவ விட்டு  தேசிய இனங்களின் தனித்துவதை சிதைத்து தொடர்ந்து சிதைக்கும் வகையில் காய்களை நகர்த்தி சென்றுள்ளனர் /நகர்த்துகின்றனர்.
4)வட ஆபிரிக்கா முதல் இந்தோனேசியா வரை உள்ள இஸ்லாமிய நாடுகள் ஒர் அதிகார சக்தியாக வர முயல்கின்றனர் .....அவர்கள் இஸ்லாத்தை முன்னிறுத்தி  துடிக்கின்றனர் ....

22 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஓம். மேற்குலகில் வசிக்கின்ற ஈழதமிழர்கள் சிலரும் ஈழதமிழ் அரசியல் ஆய்வாளர்கள்?ளும் அதற்க்கு கை கொடுப்பார்கள் ☹️

 வரலாறு நம்ம வழிகாட்டி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

அதுசரி உவங்கன்ட நாட்டில் எதோ புதிய சட்டம் கொண்டு வந்திருக்கிறாங்களாம் அவையளை பற்றி எழுதினால் தூக்கி போடுவாங்கள் என்று....நான் யாழில் கண்டபடி அவையளைப்பற்றி எழுதுகிறனான் கொஞ்சம் பயமா இருக்கு....சுற்றுலா விடுமுறையில் உவகன்ட நாட்டுக்கு போவக்கல்ல தூக்கி கிக்கி உள்ள வைச்சிடுவாங்களோ தெரியாது ..

இது பற்றி கள உறவுகள் அறிவுரை தந்தால் நான் அடக்கி வாசிப்பேன்...

முடடையை பற்றி எழுதி இருந்தீர்கள். மீண்டும் ஒரு முறை எழுதாதீர்கள். எனக்கு பொல்லாத கோபம் வரும். 

அந்த சடடம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளுது. ஆனாலும் எவருக்குமே சரியாக தெரியாது. சுமந்திரன் மட்டும் சடடபடி அது உச்சநீதி மன்றத்தின் திருத்தங்களுடன் நிறைவேற்றப்படவில்லை என்று பேசினார். எப்படி இருந்தாலும் சபாநாயகர் இன்னும் அதில் கையெழுத்து போடவில்லை. அப்படி போடடாள் அது சடடமாகும்.

இருந்தாலும் உச்ச நீதி மன்றம் கூறிய திருத்தங்கள் உள்ளடக்கப்பட விடடாள் அது மீண்டும் பிரச்சினையை உருவாக்கும். அதாவது உச்ச நீதி மன்றம் இப்படி கூறி இருக்கிறது பாராளுமன்ற சடடம் அப்படி இருக்கின்றது என்ற பிரச்சினை உருவாகும்.

நீங்கள் இனிமேல் எதுவாக இருந்தாலும் சரி பிழை பார்த்துதான் மாட்றவர்களுக்கு அனுப்ப வேண்டும். விசாரணை என்று வரும்போது நிரூபிக்க வேண்டும். மாட்றவர்கள் அனுப்பிய செய்திகளை உடனே Forward பண்ண முடியாது. விசாரித்து சரி பிழை பார்த்துதான் அனுப்ப வேண்டும்.

இப்படி நிறைய இருந்தாலும் இன்னும்சரியாக வெளிப்படுத்தவில்லை. இதில் நிறைய அரசியல் சூழ்ச்சிகளும் உண்டு.

எப்படி இருந்தாலும் நீங்கள் பயமில்லாமல் எழுதுங்கள். அப்படி எல்லாம் தேடி பிடித்து கண்டு பிடிக்கும் அளவில் அவர்கள் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Cruso said:

நன்றி Bro

  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2024 at 16:15, விளங்க நினைப்பவன் said:

ஓம். மேற்குலகில் வசிக்கின்ற ஈழதமிழர்கள் சிலரும் ஈழதமிழ் அரசியல் ஆய்வாளர்கள்?ளும் அதற்க்கு கை கொடுப்பார்கள் ☹️

சிறிலங்காவில் உள்ள முஸ்லிம்களையும் பலஸ்தீனியர்களையும்(பெரும்பாலானோர் முஸ்லிம்கள்) ஓரே தாச்சியில் போட்டு  வறுக்கும் ஈழ டமில்ஸ்சும் உள்ளார்கள்.🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.