Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய இராணுவம்

large.Whiteflagpalasteniansshotdead.png.ae115bd63caf6cf22d06834f92f627a8.png

காசாவில் இஸ்ரேலியப் பயங்கரவாதிகள் நடத்திவரும் திட்டமிட்ட இனக்கொலையில் மிக அண்மையில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த , யுத்தத்தில் எவ்விதத்திலும் பங்கேற்றிருக்கத பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். 

தீவிரவாதக் குழுவான ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான போரில் அகப்பட்டு கடுமையான அவலங்களைச் சந்தித்துவரும் பாலஸ்த்தீன மக்கள் தமதுயிரைக் காத்துக்கொள்ள முடிந்தவகையில் இப்பகுதியிலிருந்து வெளியேற முயன்று வருகிறார்கள். அவ்வாறான ஒரு முயற்சியில் தனது பேரக்குழந்தையின் கைகளைப் பிடித்தவாறு சுமார் 15 முதல் 20 வரையான பெண்கள் சிறுவர்கள் கொண்ட மக்கள் கூட்டமொன்றை இஸ்ரேலின் முன்னரங்கு நோக்கி கைகளில் வெள்ளைக்கொடியினை ஏந்தியவாறு வந்த வயோதிபப் பெண்னொருவரை சுமார் 200 மீட்டர்கள் தூரத்தில் நின்ற இராணுவத் தாங்கியிலிருந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் சுட்டுக் கொன்றிருக்கின்றனர். 

இன்னொருவிடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமது சகோதரரைப் பார்வையிட இன்னும் மூவரை அழைத்துக்கொண்டு இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியொன்றினுள் வெள்ளைக்கொடியுடன் சென்ற நபரை வெகு அருகில் இருந்து இஸ்ரேலியத் தாங்கி சுட்டுக் கொல்கிறது. அவரது வெள்ளைக்கொடி அவரது குருதியில் முற்றாகத் தோய்ந்திருக்கிறது. 

இன்னொரு சம்பவத்தில் உங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெள்ளைக்கொடியுடன் வெளியே வாருங்கள் என்று இஸ்ரேலிய இராணுவத்தால் அழைக்கப்பட்டபோது, அதனை உண்மையென்று நம்பி வெள்ளைக்கொடியுடன் வெளியே வந்தவர்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்திக் கொல்கிறது. 

இத்தாக்குதல்களின் ஒளிப்படங்கள் சி.என்.என் தொலைக்காட்சியில் விலாவாரியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், கொல்லப்பட்ட மக்களுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருக்கும் இஸ்ரேலிய மிருகங்களின் தாங்கிகளும் தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இவற்றைப் பார்க்கும் போது 2009 இல் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தபோது கொல்லப்பட்ட பலநூற்றுக்கணக்கான புலிகளின் அரசியல்த் துறைப்போராளிகளும், பொதுமக்களும் நினைவிற்கு வருகின்றனர். அன்று நடந்தது அப்பட்டமான போர்க்குற்றமும் இனவழிப்பும் தான் என்பதில் சந்தேகம் இல்லை. இன்று இஸ்ரேலின் இனவழிப்பைச் சரியென்று வாதிடும் குரூரர்களுக்கு இது சமர்ப்பணம். 

https://edition.cnn.com/2024/01/26/middleeast/hala-khreis-white-flag-shooting-gaza-cmd-intl/index.html#:~:text=The IDF has repeatedly claimed,raising questions about those efforts.

  • கருத்துக்கள உறவுகள்

எச்சரிக்கை: வன்முறையும் மரணமும் கொண்ட ஒளிப்படம். 

  • கருத்துக்கள உறவுகள்

அங்குள்ள UNRAW ஆனா ஐக்கிய நாடுகள் சபையில் வேலை செய்யும் அப்பாவிகளும் அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பங்கு பற்றி இருந்தார்களாம். அந்த அப்பாவிகள் பற்றிய விசாரணையை ஐக்கிய நாடுகள்சபை தொடக்கி இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Cruso said:

அங்குள்ள UNRAW ஆனா ஐக்கிய நாடுகள் சபையில் வேலை செய்யும் அப்பாவிகளும் அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பங்கு பற்றி இருந்தார்களாம். அந்த அப்பாவிகள் பற்றிய விசாரணையை ஐக்கிய நாடுகள்சபை தொடக்கி இருக்கிறது. 

உங்கள் கூற்றுக்கு உசாத்துணை ஏதேனும்? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

உங்கள் கூற்றுக்கு உசாத்துணை ஏதேனும்? 

மேலுள்ள செய்தியையும் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஏராளன் said:

மேலுள்ள செய்தியையும் பாருங்கள்.

இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போராட்ட காலப்பகுதியில், வடக்கில்/புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த அரச அதிகாரிகள், பொதுமக்கள், மதப் பணியாளர்கள் என எல்லோரும் தமது பங்களிப்பை நல்கினர்.  

அவர்கள் எல்லோரும் புலிகளாகக் அல்லது பயங்கரவாதிகளாகக் கொள்ள முடியுமா? 

எமது பட்டறிவிலிருந்துதான் இதுபோன்ற சம்பவங்களை எடைபோட முடியும்.  பொதுமைப்படுத்துவதோ அல்லது மேலெழுந்தவாரியாகவோ கருத்துக் கூறுவது பொருத்தமாக இருக்குமா? 

(இது தொடர்பான செய்திகளை நானும் வாசித்தேன்)

இஸ்ரேல் லெபனான் மீது விரைவில் தனது தாக்குதலை ஆரம்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kapithan said:

எப்படியான பங்களிப்பை வழங்கினார்கள் என்று எழுதினால் நல்லது. ஹமாஸ் UNRAW  பயங்கரவாதிகளை போல மக்களை கொலைசெய்து , கட்பளித்து, குழந்தைகளை வெட்டி கொன்று, கடத்தி கொண்டுபோன மாதிரியான பங்களிப்பை செய்தார்களா இல்லை வேறு விதமான பங்களிப்பை செய்தார்களா என்று குறிப்பிடடாள் நல்லது.

இப்போது அந்த பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு விட்டொம் , அவர்களை இடை நிறுத்தி உள்ளோம் என்று UN கூறுகின்றது. இது மட்டுமல்ல அங்குள்ள பாடசாலைகளிலும் சிறுவர் முதல் பெரியோர் வரைக்கும் பயங்கரவாத செயல்கள் பற்றியும் , இஸ்ரேலை அழிப்பது பற்றியும் பாடம்நடத்துகிறார்கள். இதெல்லாம் UNRAW நிதிப்பங்களிப்பில்தான் நடக்கின்றது.

இப்போது நிதி வழங்கும் நாடுகள் நிதி கொடுப்பதை நிறுத்தியவுடன் குய்யோ முய்யோ என்று சததம் போடுகின்றார்கள். UN இப்போது ஒரு வேடிக்கையான நிறுவனமாக மாறி விட்ட்து. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

எப்படியான பங்களிப்பை பயங்கரவாதம் என்றும் பயங்கரவாதம் அல்லாத பங்களிப்புகள் என்று வரையறை செய்வீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

எப்படியான பங்களிப்பை பயங்கரவாதம் என்றும் பயங்கரவாதம் அல்லாத பங்களிப்புகள் என்று வரையறை செய்வீர்கள்? 

நீங்கள் பங்களிப்பை எழுதி இருந்தீர்கள். அதட்குத்தான் என்ன விதமான பங்களிப்பு என்று கேட்டிருந்தேன். அத்துடன் சில பங்களிப்புக்கள் பற்றியும் கேட்டிருந்தேன். பயங்கரவாதத்திட்கு வரைவிலக்கணம் இல்லை என்று முதலில் எழுதி இருந்தேன்.

இங்கு பயங்கரவாத பங்களிப்பு பற்றி குறிப்பிட்டிருந்தேன். எனவே நீங்கள் மாட்றவற்றை தீர்மானிக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதாபிமானம் என்பது மருந்திற்கும் இல்லாமல் போய் விட்டது.
கலிகால உலகம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மனிதாபிமானம் என்பது மருந்திற்கும் இல்லாமல் போய் விட்டது.
கலிகால உலகம்.

2009 முள்ளிவாய்க்கால்

அதன் பின்னர் அது வராது எழாது திரும்பாது 😭

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத்துக்கு வரவிலக்கணம் இல்லாமல் பயங்கரவாதி, பயங்கரவாதம் என சகட்டுமேனிக்கு அழைக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

போர்  என வந்தால் அதில வாழும் நோயாளிகள்,சாதாரண மக்கள் மற்றும் ஏனைய அப்பாவிகளை சுட்டுக்கொல்லலாம் என்பது ஐ.நா வின் எழுதப்படாத சட்டம்....அதிலும் வலது சாரி நாடுகளில் நடந்தால் அவர்கள் மெளனமாக கடந்து  செல்வார்கள் ....இடது சாரி நாடுகளில் நடந்தால் இடது சாரி நாடுகள் மெளனமாக கட்ந்து செல்வார்கள்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
55 minutes ago, putthan said:

போர்  என வந்தால் அதில வாழும் நோயாளிகள்,சாதாரண மக்கள் மற்றும் ஏனைய அப்பாவிகளை சுட்டுக்கொல்லலாம் என்பது ஐ.நா வின் எழுதப்படாத சட்டம்....அதிலும் வலது சாரி நாடுகளில் நடந்தால் அவர்கள் மெளனமாக கடந்து  செல்வார்கள் ....இடது சாரி நாடுகளில் நடந்தால் இடது சாரி நாடுகள் மெளனமாக கட்ந்து செல்வார்கள்....

மனித உரிமைகள்,நீதி,நியாயம்,நேர்மை,யதார்த்தம் எதுவுமே இல்லாமல் உனக்கொரு நீதி எனக்கொரு நீதி எனும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

கொடுமை என்னவென்றால் இங்கும் அதே கொள்கை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

மனித உரிமைகள்,நீதி,நியாயம்,நேர்மை,யதார்த்தம் எதுவுமே இல்லாமல் உனக்கொரு நீதி எனக்கொரு நீதி எனும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

கொடுமை என்னவென்றால் இங்கும் அதே கொள்கை.

வாழு, வாழ விடு. வாழவும் மாட்டேன் , வாழ விடவும் மாட்டேன் என்றால் நிலைமை கொடூரமாகத்தான் இருக்கும். இது உலக நியதி. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.