Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம்

நேற்று ஜோர்தான் சிரியா எல்லையில் நிலைகொண்டிருந்த அமெரிக்கத் இராணுவம் மீது அப்பகுதியில் இயங்கிவரும் ஈரானின் ஆதரவுபெற்ற தீவிரவாத அமைப்பொன்று நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் இன்னும் 30 பேர்வரையில் காயப்பட்டுள்ளனர்.

2016 ஆம் ஆண்டிலிருந்து இப்பகுதியில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க இராணுவத்தினர் ஐஸிஸ் பயங்கரவாத அமைப்பிற்கெதிராகவும், போதைவஸ்த்து நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரானினால் வழங்கப்பட்ட தற்கொலை ட்ரோன் வகையினைச் சேர்ந்த ட்ரோன் ஒன்று அமெரிக்கப் படையினரின் பிரதான தங்குமிடப் பகுதியில் தரையிறங்கி வெடித்துச் சிதறியதாகவும் இதனாலேயே இவ்விழப்புக்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஹமாஸ் தீவிரவாத அமைப்பு ஐப்பசி 7 ஆம் திகதி நடத்திய பயங்கவாதத் தாக்குதலுக்குப் பின்னர் நேரடியாக யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ள அமெரிக்க இராணுவத்தினர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்களை விடவும் மேலும் அமெரிக்க சீல் விசேட படைகளின் இரு உறுப்பினர்கள் மத்திய கிழக்கில் கடல் விபத்தொன்றில் அண்மையில் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. 

இஸ்ரேல் ஹமாஸ் யுத்தத்தினை காசாவிற்குள் மட்டுப்படுத்திவிட அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகளை இவ்வாறான தாக்குதல்கள் பரந்த மத்திய கிழக்குப் போராக மாற்றிவிடக் கூடியன என்று கருதப்படுகிறது. இத்தாக்குதலையடுத்து ஈரான் மீது நேரடியான தாக்குதல்களை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கைகள் அமெரிக்க செனட்டர்களால் முன்வைக்கப்படத் தொடங்கியிருக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.

அநேகமாக ஈரானிய ஆதரவு இராணுவக் குழுக்கள் மீதான அமெரிக்காவின் வான் தாக்குதல்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இணையவன் said:

அநேகமாக ஈரானிய ஆதரவு இராணுவக் குழுக்கள் மீதான அமெரிக்காவின் வான் தாக்குதல்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.

உண்மை. ஆனால், இனிமேல் ஈரானின் நிலைகள் மீது நேரடியான தாக்குதல்களை அமெரிக்கா நடத்துவதற்கும் சாத்தியம் இருக்கிறது. இது பரந்த மத்திய கிழக்குப் போராகத்தான் விரிவுபடுத்தப்படுகிறது என்று நினைக்கிறேன்.  

ஈரானின் சக்திவாய்ந்த நட்பு நாடுகளில் இந்தியா எந்தவித உதவியும் செய்ய மாட்டாது. சீனா இராணுவ உதவி செய்யாது. ரஸ்யா இராணுவ உதவி செய்யும் நிலையில் இல்லை. ரஸ்யாவே ஈரானின் ஆயுத உதவியை நாடி நிற்கிறது. எதை ஆதரவாக வைத்து அமெரிக்காவை ஈரான் சீண்டுகிறது என்று புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, இணையவன் said:

எதை ஆதரவாக வைத்து அமெரிக்காவை ஈரான் சீண்டுகிறது என்று புரியவில்லை.

முஸ்லிம் மதவாதம் தான் மதவாத ஈரானின் நம்பிக்கை.

பல தடவைகள் தோல்வியில் முடிந்த செய்மதி ஏவல் ஒன்றை ஈரான் சென்ற வெள்ளி வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. விண்ணில் செலுத்தப்பட்ட 3 செய்மதிகள் மூலம் வேறு நாடுகளின் உதவியின்றி ஈரான் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளைச் (intercontinental ballistic missile) செலுத்தும் திறனைப் பெறுகிறது. அணுகுண்டினைக் காவிச் செல்லக்கூடிய இந்த ஏவுகணை தொடர்பான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டாம் என்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை கேட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

அநேகமாக ஈரானிய ஆதரவு இராணுவக் குழுக்கள் மீதான அமெரிக்காவின் வான் தாக்குதல்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.

இப்போதைய செய்திகளின் படி இந்த தாக்குதல்கள் சிரியா, இராக் போன்ற நாடுகளில் இருக்கின்ற இரானிய குழுக்களால் நடத்தப்பட்டிருப்பதால் அங்குதான் தாக்குதல் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இது பைடேனின் அரசியல் பிரச்சினையாக மாறி இருப்பதால் பதில் தாக்குதல் கனதியாக  இருக்க போகின்றது. இருந்தாலும் ஈரானில் நேரடி தாக்குதலில் இப்போதைக்கு அமெரிக்கா இறங்க சந்தர்ப்பம் குறைவு. 

  • கருத்துக்கள உறவுகள்

ஜோர்டானில் ஆளில்லா விமான தாக்குதல் : 3 அமெரிக்க இராணுவ வீரர்கள் பலி

சிரியா ஜோர்தான் எல்லையிலுள்ள அமெரிக்க இராணுவதளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் மூன்று அமெரிக்க படையினர் கொல்லப்பட்டுள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர்.

ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் பிராந்தியத்தில் அமெரிக்க படையினர் கொல்லப்படுவது இதுவே முதல்தடவையாகும்.

ஈரான் ஆதரவு குழுக்களே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளன என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி நாங்க்ள பதிலடிகொடுப்போம் என தெரிவித்துள்ளார்.

ஜோர்டானில் ஆளில்லா விமான தாக்குதல் : 3 அமெரிக்க இராணுவ வீரர்கள் பலி | Drone Attack On Us Military Base Hree Were Killed

இந்த தாக்குதலிற்கு காரணமானவர்களை நாங்கள் தகுந்த தருணத்தில் உரிய விதத்தில் பொறுப்புக்கூறச்செய்வோம் என பைடன் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு நாங்கள் மத்தியகிழக்கில் மிகவும் சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டோம் மூன்று துணிச்சல் மிக்க ஆன்மாக்களை இழந்துள்ளோம் எனஅவர் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட அமெரிக்க படையினரின் பெயர் விபரங்களை இன்னமும் வெளியிடாத அதிகாரிகள் குடும்பத்தவர்களிற்கு தகவல்களை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மூளை காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் 34 படையினரை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும் காயமடைந்த சிலர் மேலதிக சிகிச்சைக்காக முகாமிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜோர்டானில் ஆளில்லா விமான தாக்குதல் : 3 அமெரிக்க இராணுவ வீரர்கள் பலி | Drone Attack On Us Military Base Hree Were Killed

படையினர் தங்கியிருக்கும் பகுதிகளை இலக்குவைத்தே ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதல்வடகிழக்கு ஜோர்தானிலேயே இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதியும் மத்தியகட்டளை பீடம் தெரிவித்துள்ள அதேவேளைசிரியாவிற்குள்ளேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

எங்கள் பகுதிக்குள் இந்த தாக்குதல் இடம்பெறவில்லை என ஜோர்தான் தெரிவித்துள்ளது.

டவர் 22 என்ற தளத்தின் மீதே தாக்குதல் இடம்பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

https://canadamirror.com/article/drone-attack-on-us-military-base-hree-were-killed-1706503268

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவதளம் மீது ஆளில்லா விமான தாக்குதல் - மூன்று படையினர் பலி

Published By: RAJEEBAN  29 JAN, 2024 | 07:47 AM

image

சிரியா ஜோர்தான் எல்லையிலுள்ள அமெரிக்க இராணுவதளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதலில் மூன்று அமெரிக்க படையினர் கொல்லப்பட்டுள்ளனர் பலர் காயமடைந்துள்ளனர்.

ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் பிராந்தியத்தில் அமெரிக்க படையினர் கொல்லப்படுவது இதுவே முதல்தடவையாகும்.

ஈரான் ஆதரவு குழுக்களே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளன என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி நாங்க்ள பதிலடிகொடுப்போம் என தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலிற்கு காரணமானவர்களை நாங்கள் தகுந்த தருணத்தில் உரிய விதத்தில் பொறுப்புக் கூறச்செய்வோம் என பைடன் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு நாங்கள் மத்தியகிழக்கில் மிகவும் சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டோம் மூன்று துணிச்சல் மிக்க ஆன்மாக்களை இழந்துள்ளோம் எனஅவர் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட அமெரிக்க படையினரின் பெயர் விபரங்களை இன்னமும் வெளியிடாத  அதிகாரிகள் குடும்பத்தவர்களிற்கு தகவல்களை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மூளை காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் 34 படையினரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும் காயமடைந்த சிலர் மேலதிக சிகிச்சைக்காக முகாமிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படையினர் தங்கியிருக்கும் பகுதிகளை இலக்குவைத்தே ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதல் வடகிழக்கு ஜோர்தானிலேயே இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதியும் மத்தியகட்டளை பீடம் தெரிவித்துள்ள அதேவேளை சிரியாவிற்குள்ளேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. எங்கள் பகுதிக்குள் இந்த தாக்குதல் இடம்பெறவில்லை என ஜோர்தான் தெரிவித்துள்ளது.

டவர் 22 என்ற தளத்தின் மீதே தாக்குதல் இடம்பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

https://www.virakesari.lk/article/175023

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் இத்தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, இணையவன் said:

அநேகமாக ஈரானிய ஆதரவு இராணுவக் குழுக்கள் மீதான அமெரிக்காவின் வான் தாக்குதல்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.

அமெரிக்கா முந்தினைய மாதிரி நினைச்ச இடமெல்லாம் சோட்டிக்கொண்டு திரியுறதுக்கு இனி வரும் காலங்கள் இடம் கொடுக்காது கண்டியளோ. 😎

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க படைத்தளம் மீது ட்ரோன் தாக்குதல் - பாதுகாப்பை மீறி தந்திரமாக தாக்கியது எப்படி?

அமெரிக்க ராணுவ முகாம் மீது தாக்குதல்

பட மூலாதாரம்,PLANET LABS/AP

படக்குறிப்பு,

தாக்குதலுக்குள்ளான அமெரிக்க படைத்தளம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், எமிலி மெக்கார்வே
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 29 ஜனவரி 2024

சிரியாவுடனான ஜோர்டான் எல்லையில் அமெரிக்க ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் தாங்கள் ஈடுபடவில்லை என இரான் மறுத்துள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்க படையை சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.

பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்த இந்த தாக்குதலுக்கு, “இரானிய ஆதரவு பெற்ற தீவிர ஆயுதக் குழுக்கள்” மீது அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது.

“நாங்கள் இதற்கு பதிலடி கொடுப்போம்” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, காஸாவில் போர் தொடங்கியதிலிருந்து இந்த பிராந்தியத்தில் அமெரிக்க துருப்புகள் தாக்குதலில் கொல்லப்படுவது இதுவே முதன்முறை.

இந்த பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஏற்கனவே தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தாலும் கடந்த ஞாயிற்றுக்கிழமைக்கு (ஜன. 28) முந்தைய தாக்குதல்கள் வரை உயிரிழப்புகள் ஏதும் நிகழ்ந்ததில்லை என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

இராக்கை சேர்ந்த அமைப்பு பொறுப்பேற்பு

இராக்கில் செயல்பட்டு வரும் இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் எனும் இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

இராக்கில் செயல்பட்டு வரும் சில இரானிய ஆயுதக்குழுக்களை உள்ளடக்கிய இந்த கூட்டமைப்பு, 2023-ம் ஆண்டின் இறுதியில் உருவானது. சமீப வாரங்களாக அமெரிக்க படைகளின் மீது நடத்தப்பட்ட மற்ற தாக்குதல்களுக்கும் இந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், சிரியாவில் உள்ள மூன்று அமெரிக்க ராணுவ முகாம்களை தாங்கள் குறி வைத்ததாக தெரிவித்துள்ளது. அவை, ஷடாடி, டன்ஃப், ரக்பன் ஆகியவை ஆகும். ரக்பன் சிரியாவின் எல்லையில் ஜோர்டான் பகுதியில் உள்ளது. மத்திய தரைக்கடலில் இஸ்ரேலிய எண்ணெய் நிறுவனத்தையும் தாங்கள் குறி வைத்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பை மீறி தந்திரமாக தாக்கியது எப்படி?

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சிபிஎஸ் ஊடகம், அமெரிக்க முகாமின் டவர் 22-ல் காலை வேளையில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட போது, அமெரிக்க படையினர் உறங்குவதற்கான குடியிருப்புப் பகுதியில் இருந்ததாக தெரிவித்துள்ளது.

அமெரிக்க ட்ரோன் ஒன்று ராணுவ முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்த அதே நேரத்தில், "மிகவும் தாழ்வாகவும் மிக மெதுவாகவும்" அந்த ட்ரோன் வந்ததாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.

அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தாமல் இருக்க வான் பாதுகாப்பு அமைப்பின் தானாக எச்சரிக்கும் சாதனங்கள் அணைக்கப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார். இதனால், அந்த ராணுவ முகாமில் ட்ரோன் தாக்குதல் குறித்து துருப்புகளுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை.

அமெரிக்க ராணுவ முகாம் மீது தாக்குதல்

இந்த தாக்குதலைக் கண்டித்துள்ள இராக் அரசாங்கம், மத்திய கிழக்கில் இத்தகைய "வன்முறை சுழற்சியை நிறுத்த" அழைப்பு விடுத்துள்ளது.

இராக் அரசாங்க செய்தித் தொடர்பாளர் பாஸ்ஸெம் அல்-அவாடி, "பிராந்தியத்தில் மேலும் பின்விளைவுகளைத் தடுக்கவும் மோதல் அதிகரிப்பதைத் தடுக்கவும் அடிப்படை விதிகளை நிறுவுவதில் ஒத்துழைக்க" தயாராக இருப்பதாகக் கூறினார்.

”இந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் பொறுப்பேற்க வேண்டும்” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

திங்களன்று (ஜன. 29) வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, இத்தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்க விரும்பினாலும், ஆனால் இரான் அல்லது பிராந்தியத்துடன் ஒரு பரந்த போரை விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

ஜோர்டானில் அமெரிக்க துருப்புகளை குறிவைக்க ட்ரோன் பயன்படுத்தப்பட்டதாக தங்கள் நிர்வாகம் நம்புவதாக கிர்பி கூறினார்.

தாக்குதலுக்குக் காரணமான ஆயுதக் குழுக்களை ஆதரிப்பதாக, அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் குற்றச்சாட்டுகளை இரான் மறுத்தது.

இரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி, "பாலத்தீனர்களையோ அல்லது அவர்களின் சொந்த நாடுகளையோ பாதுகாக்க எதிர்ப்பு குழுக்கள் முடிவெடுப்பதில் தாங்கள் பங்கேற்கவில்லை" என்றார்.

இரானுடன் இணைந்த பிராந்திய ஆயுதக் குழுக்கள் தங்கள் சொந்த விருப்பப்படி அமெரிக்காவுக்கு பதிலளிப்பதாக இரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கூறினார்.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் பிற அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற தாக்குதல் குறித்து ஜோ பைடனுக்கு தெரிவிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

"இந்த வெறுக்கத்தக்க மற்றும் முற்றிலும் அநியாயமான தாக்குதலில் போர் வீரர்களை இழந்ததற்காக துக்கப்படுவதில், ஜில் பைடனும் (அமெரிக்காவின் முதல் பெண்மணி) நானும் நாடு முழுவதும் உள்ள அமெரிக்கர்களுடன் இணைந்து கொள்கிறோம்" என்று ஜோ பைடன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்

கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த படையினரின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சூனக், இந்த பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்கும் பணிகளை இரான் தொடர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

”பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியைக் கொண்டு வருவதற்கு நாங்கள் எங்கள் கூட்டாளிகளுடன் உறுதியாக நிற்கிறோம்," என்று அவர் கூறினார்.

"இந்த தாக்குதல் சிரியா மற்றும் இராக்கில் இயங்கும் தீவிர இரான் ஆதரவு ஆயுதக் குழுக்களால் நடத்தப்பட்டது" என்று நம்புவதாக பிரிட்டன் கூறியுள்ளது.

குறைந்தது 34 ராணுவ வீரர்கள் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும், காயமடைந்த சில வீரர்கள் மேல் சிகிச்சையில் உள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க படைத் தளம் மீது தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிரிய எல்லைக்கு அருகில் ஜோர்டானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ரக்பனில் உள்ள தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். அதற்கு அமெரிக்க அதிகாரிகள் சூட்டிய பெயர் டவர் 22 என்பதாகும்.

இராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்கள் அக்டோபர் 17 முதல் குறைந்தது 97 முறை தாக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்தனர்.

கடந்த மாதம், வடக்கு இராக்கில் இரானுடன் இணைந்த குழுக்களுக்கு எதிராக, அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

முன்னதாக ஜனவரியில், பாக்தாத்தில் அமெரிக்க பதிலடித் தாக்குதல் ஒன்றில், அமெரிக்க படையினர் மீதான தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட ஒரு ஆயுதக்குழு தலைவர் கொல்லப்பட்டார்.

ஏபிசி ஊடகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஒளிபரப்பப்பட்ட முன்பதிவு செய்யப்பட்ட நேர்காணலில், பாதுகாப்புப் படை உயரதிகாரி சி.க்யூ. பிரௌன் இப்பகுதியில் "மோதலை விரிவுபடுத்தக்கூடாது" என்பதே அமெரிக்காவின் நோக்கம் என்று கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cq579n1ynero

  • கருத்துக்கள உறவுகள்

ஜோர்தான் தாக்குதலிற்கு பின்னர் கடும் அழுத்தத்தில் பைடன் - பதில் தாக்குதல் மிகவும் உக்கிரமானதாக காணப்படும் - சிஎன்என்

Published By: RAJEEBAN   30 JAN, 2024 | 11:23 AM

image

ஜோர்தானில்  உள்ள அமெரிக்க தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதலிற்கான அமெரிக்காவின் பதிலடி முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு உக்கிரமானதாகயிருக்கலாம் என சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈராக் சிரியா மீது அமெரிக்கா முன்னர் மேற்கொண்ட தாக்குதலை விட  இம்முறை இடம்பெறவுள்ள தாக்குதல் உக்கிரமானதாகயிருக்கலாம் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பென்டகனும் வெள்ளை மாளிகையும் இதுவரை தங்கள் திட்டங்களை வெளிவிடவில்லை இது குறித்து எச்சரிக்கையுடன் உள்ளன எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.

ஜோபைடன்  மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்காக பதில் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்ற கடும் அழுத்தத்திற்குள்ளாகியுள்ளார் - ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் ஈராக் சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் சார்பு குழுக்கள் 160 தடவைகளிற்கு மேல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன  எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.

மிகத்தெளிவான செய்தியை தெரிவிப்பதற்காக ஈரானிற்குள் தாக்குதலை மேற்கொள்ளவேண்டும் என குடியரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் அதிகளவு அமெரிக்க படையினரை கொலை செய்த ஆளி;ல்லா விமானதாக்குதலிற்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதே ஜோ பைடன் எதிர்நோக்கியுள்ள பெரும் சவால் எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படையினர் வெளியேறும்வேளையில் அபேகேட்டில் இடம்பெற்ற தாக்குதலில் 13 அமெரிக்க படையினர் கொல்லப்பட்ட பின்னர் அதிக அமெரிக்கபடையினர் தற்போதைய தாக்குதலிலேயே கொல்லப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/175126

  • கருத்துக்கள உறவுகள்
On 29/1/2024 at 16:14, nunavilan said:

ஈரான் இத்தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளது.

இரான் அப்படி கூறி இருந்தாலும் எவருமே அதை நம்ப தயாரில்லை. இப்போது இராக் , சிரியா எல்லைகளில் உள்ள எல்லா ஈரான் ப்ரோக்ஸி ராணுவ கடடமைப்புக்களும் விரைவாக அகற்றப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் மேலதிக ராணுவ தளபாடங்களை கொண்டு வந்து சேர்த்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. இருந்தாலும் இரான் மீது இப்பபோதைக்கு நேரடி தாக்குதலுக்கு சந்தர்ப்பம் குறைவாகவே காணப்படுகின்றது.

ஆனாலும் எங்கோ ஒரு சில இடங்களில் மோசமான அழிவு இடம் பெற போகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Cruso said:

இரான் அப்படி கூறி இருந்தாலும் எவருமே அதை நம்ப தயாரில்லை. இப்போது இராக் , சிரியா எல்லைகளில் உள்ள எல்லா ஈரான் ப்ரோக்ஸி ராணுவ கடடமைப்புக்களும் விரைவாக அகற்றப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் மேலதிக ராணுவ தளபாடங்களை கொண்டு வந்து சேர்த்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. இருந்தாலும் இரான் மீது இப்பபோதைக்கு நேரடி தாக்குதலுக்கு சந்தர்ப்பம் குறைவாகவே காணப்படுகின்றது.

ஆனாலும் எங்கோ ஒரு சில இடங்களில் மோசமான அழிவு இடம் பெற போகின்றது. 

பைடன் ஈரானுடன் மோதலை அமெரிக்கா தேடவில்லை என கூறி உள்ளார்.

அமெரிக்க கப்பல்கள் தொடர்ந்து தாக்கப்படும் அபாயம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

பைடன் ஈரானுடன் மோதலை அமெரிக்கா தேடவில்லை என கூறி உள்ளார்.

அமெரிக்க கப்பல்கள் தொடர்ந்து தாக்கப்படும் அபாயம் உள்ளது.

உண்மை. 

அப்படி அமெரிக்கா அல்லது பிற நாட்டு கப்பல்கள் இனியும்  தாக்குதலுக்கு உள்ளானால் ஹுத்திக்களின் கட்டுப்பாட்டில் உள்ள எமனின் கதி அதோகதிதான். இனி NATO வும் நிலைமையை  பொறுத்து களத்தில் இறங்க சந்தர்ப்பம் அதிகமாகி கொண்டு  வருகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

நேட்டோ கிட்டவும் வராது. குறிப்பாக பிரான்ஸ். பிரிட்டன் அமெரிக்கா எங்கே போனாலும் பின்னால் போகும். அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், ஒரு சில ஐரோப்பிய நாடுகள் தான் மத்திய கிழக்கில் சண்டை பிடிக்க இருக்கும்  நாடுகள் (ஒரு  வேளை போர் மூண்டால்).
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க இராணுவம் மீது தாக்குதல் நடத்திய ஈரானின் ஆதரவுபெற்ற இஸ்லாமியக் குழு அமெரிக்காவுக்கெதிரான தாக்குதல்களை தாம் நிறுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஈராக் அரசுக்கு அவமானம் ஏற்படுவதைத் தடுக்கவே தாம் இதனைச் செய்வதாகவும் கூறியிருக்கிறது.

ஆனால், அமெரிக்கா தனது பதிலடி பற்றிய தீர்மானத்தை எடுத்திருப்பதாகவும், விரைவில் அது நடக்கும் என்றும், பல படி நிலைகளில் தாக்குதல் அமையும் என்றும் கூறியிருக்கிறது.

ஈரானின் ஆதரவு பெற்ற குழுக்கள், ஈரானின் விசேட படைகளின் தளபதிகள் போன்றோர் இலக்குவைக்கப்படலாம் என்று செய்திகள் கூறுகின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்

ஜோர்தான் தாக்குதலிற்கு எவ்வாறு பதிலடிகொடுப்பது என நான் தீர்மானித்துவிட்டேன் - ஜோபைடன்

Published By: RAJEEBAN  31 JAN, 2024 | 12:41 PM

image

ஜோர்தான்  ஆளில்லா விமானதாக்குதலிற்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து தான் தீர்மானித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவதளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதலில்  மூன்று அமெரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையிலேயே பைடன் இதனை தெரிவித்துள்ளார்.

ஜோர்தான் சிரிய எல்லையிலுள்ள அமெரிக்க தளத்தின் மீது இடம்பெற்ற தாக்குதலிற்கு ஈரானே காரணம் என தான் உறுதியாக கருதுவதாக ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

கட்டாய்ப் ஹெஸ்புல்லா என்ற அமைப்பிற்கு ஈரான் ஆயுதங்களை வி;ற்பனை செய்வதை அடிப்படையாக வைத்து இந்த முடிவிற்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்..

டவர் 22 தளத்தின் மீதான தாக்குதலிற்கும் ஈரானிற்கும் நேரடிதொடர்புள்ளதை உறுதி செய்துள்ளீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விகளிற்கு பதிலளித்துள்ள பைடன் அது குறித்து நாங்கள் ஆராய்வோம் அதேவேளை மத்தியகிழக்கில் ஒரு பரந்துபட்ட யுத்தம் அவசியம் என நான் கருதவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/175226

  • கருத்துக்கள உறவுகள்

சிரியா மற்றும் இராக்கில் இரானிய இலக்குகளை தாக்க அமெரிக்கா அனுமதி: காரணம் என்ன?

சிரியா மற்றும் இராக்கில் உள்ள இலக்குகளைத் தாக்க ஒப்புதல் அளித்த அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மேன் ஜூனியர்
  • பதவி, பிபிசி நியூஸ், வாஷிங்டன்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சிரியா மற்றும் இராக்கில் உள்ள இரானிய இலக்குகள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தும் திட்டங்களுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் செய்தியிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல்கள் பல நாட்களுக்கு நடைபெறும் என்றும், வானிலையைப் பொறுத்து இந்தத் தாக்குதல்களை எப்போது தொடங்க வேண்டும் என்ற ஆணை வரும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை சிரியா எல்லைக்கு அருகிலுள்ள ஜோர்டானில், டிரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இரானிய ஆதரவு போராளிக் குழுவே காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இரானின் புரட்சிகர காவலர் படையின் ஆதரவையும் நிதியுதவியையும் பெற்ற, இராக்கில் உள்ள இஸ்லாமிய தடுப்புப் படை இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பு ஏற்றுள்ளது. இந்தப் படையில் ஆயுதப் பயிற்சி பெற்ற பல போராளிகள் இருப்பதாக நம்பப்படுகிறது.

மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டது மட்டுமல்லாது, 41 அமெரிக்க வீரர்கள் காயமடைந்த இந்தத் தாக்குதலில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என இரான் அரசு மறுத்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c72gz7ljzmxo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.