Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது!

adminJanuary 29, 2024
sitharthan.jpg?fit=650%2C433&ssl=1

இலங்கை தமிழரசுக்கட்சி இரண்டாக உடைந்து இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்   தெரிவித்துள்ளார்.

நேற்று (28.01.24) யாழில் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தமிழ் கட்சிகள் தேசிய அரசாங்கத்துடன் இணைந்து அரசாங்கமாக செயற்பட மாட்டார்கள். தம்மை  பொறுத்த வரையில் தாம்  இணையப்போவதில்லை அது வேறு விடயம், ஆனால் மற்றைய கட்சிகள் இணைய வாய்ப்புக்கள் இருக்கலாம்.

தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதிலும் சிக்கல் ஒன்று காணப்படுகிறது. அதன் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதை விட முக்கியமான விடயம் தமிழரசுக்கட்சி இரண்டாக உடைந்து இருக்கிறது. அது இரண்டா, மூன்றாகவா என்று தெரியவில்லை ஆனால் உடைந்து இருக்கிறது என சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.
 
https://globaltamilnews.net/2024/200207/

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு மீண்டும் ஒற்றுமையாக வேண்டுமானால் தமிழரசுக்கட்சி வீட்டுச் சின்னத்தை விட்டுக் கொடுக்கலாம் – சித்தார்த்தன் யோசனை

Published By: VISHNU  29 JAN, 2024 | 12:37 PM

image

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒற்றுமையாக வேண்டுமானால் அது பதிவு செய்யப்பட்ட கட்சியாக வேண்டும் என தெரிவித்த புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் அரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு விட்டுக்கொடுக்கலாம் என்றார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி இரண்டு மூன்று பிளவாக உடைந்து இருக்கிறது என்றும் அவர்கள் ஒற்றுமையாகிய பின்னரே கூட்டமைப்பு ஒற்றுமை பற்றி பார்க்கலாம் என்றார்.

கந்தரோடையில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவர் இன்னும் பதவியேற்கவில்லை. அதிலும் சிக்கல் ஒன்று காணப்படுகிறது. அதன் தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதை விட முக்கியமான விடயம் தமிழரசுக்கட்சிகள் இரண்டாக உடைந்து இருக்கிறது. அது இரண்டா, மூன்றாகவா என்று தெரியவில்லை ஆனால் உடைந்து இருக்கிறது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் எடுக்கும் முடிவை மற்றொரு குழு எதிர்க்கும். ஆகவே தமிழ் அரசுக் கட்சி ஒற்றுமையாக வேண்டும். அதன் பின்னரே ஏனைய தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை பற்றி பார்க்கலாம்.

கடந்த காலத்தில் சம்பந்தனின் தலைமையின் கீழ் நாம் இணைந்திருந்தாலும் பல கசப்பான சம்பவங்கள் இடம்பெற்றன. இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பதியப்பட்ட வேண்டும் என வலியுறுத்தினோம். இதனால் சிலர் கூட்டமைப்பை விட்டுச் சென்றனர்.

இப்போது கூட்டமைப்பு மீண்டும் ஒற்றுமையாக வேண்டுமானால் அது பதிவு செய்யப்பட்ட கட்சியாக வேண்டும். 

பொதுவான சின்னம் இருக்கலாம். அது வீடாகவும் இருக்கலாம். தமிழ் அரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு விட்டுக்கொடுக்கலாம். 

இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டாலே கூட்டமைப்பு அர்த்தபுஷ்டியானதாக இருக்கும். 

நான் மட்டுமல்ல ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் உள்ள பங்காளிக் கட்சித் தலைவர்களும் இதே நிலைப்பாட்டிலேயே இருக்கிறோம். என்றார்.

https://www.virakesari.lk/article/175046

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஓநாய் ஏன் கண்ணீர் விடுகிறது??

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

இந்த ஓநாய் ஏன் கண்ணீர் விடுகிறது??

அப்படி சொல்ல வேண்டாம். அவரது இயக்கத்தில் உள்ள சிலரை அவரால் கட்டு படுத்த முடியாமல் போனது உண்மை. அதட்கு அவரும் பொறுப்பு கூற வேண்டும். இருந்தாலும் அவர் மேலே கூறியதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை. உண்மையைதான் கூறி இருக்கிறார்.

நான் பேசி பழகிய அரசியல்வாதிகளில் உண்மையாகவே சித்தார்த்தன் ஒரு நேர்மையான நம்பகத்தன்மை உள்ள அரசிஅயல்வாதி என்று சொல்லுவேன். மற்றவர்களை போல உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவராக தெரியவில்லை.

இங்குள்ள அநேகமான தமிழ் அரசியல் வாதிகள் சுயநல வாதிகள். படம், பதவி, பணத்துக்காக எதையுமே செய்வார்கள். எனவே ஒருவருடைய கட்சியில் சிலர் செய்த தவறுக்காக இவரை இப்படி சொல்வதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Cruso said:

அப்படி சொல்ல வேண்டாம். அவரது இயக்கத்தில் உள்ள சிலரை அவரால் கட்டு படுத்த முடியாமல் போனது உண்மை. அதட்கு அவரும் பொறுப்பு கூற வேண்டும். இருந்தாலும் அவர் மேலே கூறியதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

இந்த இயக்கத்தை பற்றி பயங்கரமான கதைகள் பலர் சொல்லிவிட்டனர். சிலர் தான் கொலை கொள்ளைகள் செய்யும் கெட்டவர்கள் அவர்களை இந்த நல்லவவரால்   கட்டுபடுத்த முடியாமல் போய்விட்டது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.அவர் தொடர்ந்தும் அங்கே இருந்தார்

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
On 29/1/2024 at 14:07, விசுகு said:

இந்த ஓநாய் ஏன் கண்ணீர் விடுகிறது??

அவர் கண்ணீர் விடவில்லை   தமிழரசு கட்சி  இரண்டு மூன்று பகுதிகளாக. உடைந்து விட்டது என்று சந்தோசமடைகிறார்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்த இயக்கத்தை பற்றி பயங்கரமான கதைகள் பலர் சொல்லிவிட்டனர். சிலர் தான் கொலை கொள்ளைகள் செய்யும் கெட்டவர்கள் அவர்களை இந்த நல்லவவரால்   கட்டுபடுத்த முடியாமல் போய்விட்டது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.அவர் தொடர்ந்தும் அங்கே இருந்தார்

சுரேஷ், செல்வம் அடைக்கலம், கோவிந்தம், வினோ, சிவசக்தி இன்னும் நிறைய பெயர்கள் எழுதலாம். இவர்கள் எல்லாம் செய்யாத கொலை குற்றங்களா? இன்று எப்படி இருக்கிறார்கள்.

அதே கட்சியில் இருந்து கொண்டுவெள்ளையும் சொள்ளையுமாக உடுத்திக்கொண்டு அரசியல் செய்கிறோம், மக்கள் சேவை செய்கிறோம் எண்டு திரியவில்லையா ?

நான் இவரை  ஒரேயடியாக நல்லவர் என்றோ சிறந்தவர் என்றோ கூறவில்லை. இந்த வெள்ளையும் சொள்ளையுமாக திரிகிற அரசியல் (?) வாதிகளுடன் ஒப்பிட்டுதான் கூறி இருந்தேன்.  

2 hours ago, Kandiah57 said:

அவர் கண்ணீர் விடவில்லை   தமிழரசு கட்சி  இரண்டு மூன்று பகுதிகளாக. உடைந்து விட்டது என்று சந்தோசமடைகிறார்.  

இரண்டாய் உடைந்தால் என்ன மூன்றாய் உடைந்தால் என்ன? இவர்கள் கட்சி ஆரம்பித்து மக்கள் எதாவது பலனை கண்டார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா? இனியும் ஏதாவது செய்வார்கள் என்று சொல்ல முடியுமா? என்னை பொறுத்த வரைக்கும் நாம் பின்னோக்கி சென்றோமே ஒழிய முன்னோக்கி செல்லவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Cruso said:

சுரேஷ், செல்வம் அடைக்கலம், கோவிந்தம், வினோ, சிவசக்தி இன்னும் நிறைய பெயர்கள் எழுதலாம். இவர்கள் எல்லாம் செய்யாத கொலை குற்றங்களா? இன்று எப்படி இருக்கிறார்கள்.

அதே கட்சியில் இருந்து கொண்டுவெள்ளையும் சொள்ளையுமாக உடுத்திக்கொண்டு அரசியல் செய்கிறோம், மக்கள் சேவை செய்கிறோம் எண்டு திரியவில்லையா ?

நான் இவரை  ஒரேயடியாக நல்லவர் என்றோ சிறந்தவர் என்றோ கூறவில்லை. இந்த வெள்ளையும் சொள்ளையுமாக திரிகிற அரசியல் (?) வாதிகளுடன் ஒப்பிட்டுதான் கூறி இருந்தேன்.  

இரண்டாய் உடைந்தால் என்ன மூன்றாய் உடைந்தால் என்ன? இவர்கள் கட்சி ஆரம்பித்து மக்கள் எதாவது பலனை கண்டார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா? இனியும் ஏதாவது செய்வார்கள் என்று சொல்ல முடியுமா? என்னை பொறுத்த வரைக்கும் நாம் பின்னோக்கி சென்றோமே ஒழிய முன்னோக்கி செல்லவில்லை. 

சம்பந்தன் சுமா செய்த நாச வேலைகளை   விட  இது பரவாயில்லை . ஒரு வித்தியாசம் ஒன்று ஆயுத கொலை , மற்றது யனநாயக கொலை . விளைவு ஒன்றுதான்.  இன்று தேசியம் பெரும் குழப்பத்தில் உள்ளது . 

  • கருத்துக்கள உறவுகள்+
On 29/1/2024 at 20:12, Cruso said:

அப்படி சொல்ல வேண்டாம். அவரது இயக்கத்தில் உள்ள சிலரை அவரால் கட்டு படுத்த முடியாமல் போனது உண்மை. அதட்கு அவரும் பொறுப்பு கூற வேண்டும். இருந்தாலும் அவர் மேலே கூறியதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை. உண்மையைதான் கூறி இருக்கிறார்.

நான் பேசி பழகிய அரசியல்வாதிகளில் உண்மையாகவே சித்தார்த்தன் ஒரு நேர்மையான நம்பகத்தன்மை உள்ள அரசிஅயல்வாதி என்று சொல்லுவேன். மற்றவர்களை போல உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவராக தெரியவில்லை.

இங்குள்ள அநேகமான தமிழ் அரசியல் வாதிகள் சுயநல வாதிகள். படம், பதவி, பணத்துக்காக எதையுமே செய்வார்கள். எனவே ஒருவருடைய கட்சியில் சிலர் செய்த தவறுக்காக இவரை இப்படி சொல்வதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. 

ரண்டுபேரும் தேசத்திற்கு துரோகமிழைத்தவர்களுக்கு வெள்ளை அடிக்கும் போது பார்த்து பக்குவமாய் அடியுங்கோ. பெயின்ற் கீழ ஊத்திடக் கூடாது.

1 hour ago, தமிழன்பன் said:

சம்பந்தன் சுமா செய்த நாச வேலைகளை   விட  இது பரவாயில்லை . ஒரு வித்தியாசம் ஒன்று ஆயுத கொலை , மற்றது யனநாயக கொலை . விளைவு ஒன்றுதான்.  இன்று தேசியம் பெரும் குழப்பத்தில் உள்ளது . 

Edited by நன்னிச் சோழன்
கூடுதல் பற்றியம் சேர்ப்பு

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நன்னிச் சோழன் said:

ரண்டுபேரும் தேசத்திற்கு துரோகமிழைத்தவர்களுக்கு வெள்ளை அடிக்கும் பார்த்து பக்குவமாய் அடியுங்கோ. பெயின்ற் கீழ ஊத்திடக் கூடாது.

அவர்களுக்கு நான் வெள்ளை அடிக்கவில்லை.
இரண்டு தரப்பும் செய்ததன் விளைவு கடைசியில் போராடடம் அழிக்கப்பட்டு தேசியமும் 

கதி கலங்கிவிட்டது . விளைவை மட்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத பயங்கர கொலைகளை செய்தவர்களை அரசியல் செய்பவர்களுடன் ஒப்பிட்டு ஆயுத பயங்கரவாதத்தை இது பரவாயில்லை என்ற வெள்ளை அடிக்கும் முயற்ச்சி அபாயகரமானது.

7 hours ago, Cruso said:

சுரேஷ், செல்வம் அடைக்கலம், கோவிந்தம், வினோ, சிவசக்தி இன்னும் நிறைய பெயர்கள் எழுதலாம்.

சுரேஷ் மண்டையில் போட்டு தமிழர்களை கொன்றவர் தானே ☹️

7 hours ago, Cruso said:

இவர்கள் கட்சி ஆரம்பித்து மக்கள் எதாவது பலனை கண்டார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா? இனியும் ஏதாவது செய்வார்கள் என்று சொல்ல முடியுமா? என்னை பொறுத்த வரைக்கும் நாம் பின்னோக்கி சென்றோமே ஒழிய முன்னோக்கி செல்லவில்லை. 

நூறு வீதம் உண்மை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ஆயுத பயங்கர கொலைகளை செய்தவர்களை அரசியல் செய்பவர்களுடன் ஒப்பிட்டு ஆயுத பயங்கரவாதத்தை இது பரவாயில்லை என்ற வெள்ளை அடிக்கும் முயற்ச்சி அபாயகரமானது.

சுரேஷ் மண்டையில் போட்டு தமிழர்களை கொன்றவர் தானே ☹️

நூறு வீதம் உண்மை

உண்மை வரலாற்றை நேர்மையுடன் பார்ககும் ஒருவருக்கு இங்கு எல்லோருமே   அவரவர் தத்தமது விசுவாசிகளுக்கு வெள்ளை அடிப்பதும் அடுத்தவர் மீது சேறுவாரி தூற்றி தனது விசுவாசிகளின் தவறுகளை/ அக்கிரமங்களை  மூடி மறைப்பது தெரியவரும்.  அது தான் தமிழர் அரசியல். அதன் விளைவை அனுபவித்தவர்களும் கடும் இழப்பை சந்தித்தவர்களும் இனி அனுபவிக்கப் போகின்றவர்களும்  தமிழர்கள் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நன்னிச் சோழன் said:

ரண்டுபேரும் தேசத்திற்கு துரோகமிழைத்தவர்களுக்கு வெள்ளை அடிக்கும் போது பார்த்து பக்குவமாய் அடியுங்கோ. பெயின்ற் கீழ ஊத்திடக் கூடாது.

இங்கு எந்த அரசியல்  வாதியோ , இயக்கங்களோ மக்களுக்கு நன்மை செய்ததாகவோ அல்லது முன்னோக்கி நகர்த்தியதாகவோ இல்லை.

எல்லோருமே தமிழ் மக்களை பின்னோக்கி கொண்டு சென்று தங்களை முன்னோக்கி வளர்த்து கொண்டவர்கள்தான்.

யாருக்குமே வெள்ளயடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவன் திருந்த கூடாது அல்லது நல்லவனாக மாற கூடாது என்பது உங்கள் கொள்கையாக இருந்தால் பிரச்சினை இல்லை. இப்போது உள்ள நிலைமையில் அப்படி எழுதினேன். நிலைமை அப்படிதான்  இருக்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இவர்கள் செயலால் தமிழினத்திக்கு நடந்த நீண்டதூர விளைவை பார்க்கவேண்டும் .மற்ற 
ஆயுத இயக்கங்கள் மக்களை கொன்றார்கள். அது மிகப்பெரிய கொடுமையான செயல்தான். ஆனால் இவர்களை எல்லாம் தலைவர் மன்னித்து ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தவர் . உண்மையில் அது மிகப்பெரிய நீண்ட தூர ஆக்கபூர்வமான செயல். ஆனால் எல்லாம் புரிந்தும் உருவாக்கப்படட கூட்டமைப்பை உடைத்து துண்டு துண்டாகிய சாம் மற்றும் சுமா மட்டும் என்ன , இது சாதரணமான விடயமா ? எவ்வளவு பெரிய கேவலமான விடயம் . எங்கள் ஆயுத போராட்ட்த்தை இந்தியா அழித்தமாதிரி . இவர்கள் ரணிலுடன் சேர்ந்து அழித்த கயவர்கள் . அதனால் தான் இரண்டு பேரையும் ஒரே தராசில் போட்டு பார்க்கலாம்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 30/1/2024 at 22:34, விளங்க நினைப்பவன் said:

இந்த இயக்கத்தை பற்றி பயங்கரமான கதைகள் பலர் சொல்லிவிட்டனர்.

குருசோ,  இப்போது சித்தார்த்தன் அவர் இயக்கம் பற்றி ஜஸ்ரின் அண்ணா சொல்லியுள்ளார் பாருங்கள்.
----------------------------------------👇
சித்தார்த்தன் பா. உவை எப்படி மறப்பது😂?

புளொட்டின் வவுனியா பிசினஸ் பொறுப்பு மாணிக்கதாசும் , சின்ன தாஸ் (அல்லது அலவாங்கு தாஸ்) என்ற அடியாளும். இவர்கள் சேர்க்கும் கப்பக் காசின் பங்கை வாங்க சித்தார்த்தன் கொழும்பிலிருந்து இராணுவ உலங்கு வானூர்தியில் யோசப் முகாமிற்கு வருவார், முகாமை விட்டு வெளியே வரார். வாகனத் தொடரணியாக தாஸ் அணி யோசப் முகாமுக்கு வந்து சித்தார்த்தனிடம் பங்கைக் கொடுத்து விட்டு திரும்பிப் போகும். இந்தச் சடங்கு ஓரிரு மாதங்களுக்கொருமுறை நடக்கும்! இரு தாஸ்களையும் புலிகள் கொன்ற பின்னர், ஊத்தை பவான் உள்ளூர் புளொட் தலைவரானார், அதன் பின்னர் சித்தார்த்தன் கை நனைப்பது கொஞ்சம் குறைந்தது. புலிகள் இல்லாமல் போன பின்னர் வவுனியா வந்து வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்டு, தேர்தலில் வென்று இப்போது "என் வேட்டி வெள்ளை" எனத் திரிகிறார்😎!

சம்பந்தரிடம் அரசியல் சார்ந்து முறைப்பாடுகள் இருக்கலாம் . ஆனால், அவர் நிதி ரீதியில் ஊழல்கள் செய்ததாக சிங்களவர்களே சொல்ல மாட்டார்கள். நம் ஆட்கள் தான் காழ்ப்புணர்வினால் திட்டிக் கொண்டிருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

உவர் Just in அவிச்சு விடுவதை எல்லாம் நம்புகிறீர்களா? 
 
வவுனியா புகையிரத நிலைய வீதியில் பண்டாரிக்குளம் ஒழுங்கைக்கு அருகில் புளட்டின் அரசியல் பிரிவின் முகாம் இருந்தது. பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வேளையில் அங்கு சித்தர் பொது மக்களை சந்திப்பார் .

அலவாங்கு தாசின் முழுக் கட்டுப்பாட்டில் வவுனியா புளட். கோவில் குளம் பகுதியில் இராணுவ முகாம்.

மேலும் உலங்கு வானூர்தியில் முழு இராணுவ பாதுகாப்புடன் ஜோசப் முகாமிற்கு வருவது மாணிக்க தாஸ். அந்த நேரத்தில் வவுனியாவே கதிகலங்கும்  பாதுகாப்பு கெடுபிடிகளால்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.