Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கடிதம்!

1765985448.jpeg

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கடிதம்!

யோகி.

மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு, 32 வருட சிறைத்தண்டனையின் பின் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பில் சாந்தனின் தாயாரால் தனக்கு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக் கடிதத்தை மேற்கோள் காட்டி அவரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

32 ஆண்டுகால சிறைத்தண்டனையின் பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், அவ்வழக்கிலிருந்து விடுதலையான இலங்கைப் பிரஜைகளான சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு வரவழைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சிகளும் பலனளிக்காததால் இன்றுவரை அவர்கள் நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தாங்கள் கரிசனையோடு அணுகுவீர்கள் என எதிர்பார்க்கிறேன். தனது இளமைக்காலம் முழுவதையும்; சிறையில் கழித்து, முதுமைக்காலத்தில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு என்பவற்றால் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சாந்தன், தற்போது சென்னை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கடந்த 33 ஆண்டுகளாகத் தனது மகனைக் காணாது பரிதவித்திருக்கும் சாந்தனின் தாயார், 77 வயது நிரம்பிய தனது முதுமை நிலையில் ஒருதடவையாவது தனது மகனை நேரில் பார்வையிட வேண்டும் எனவும், அவரை இலங்கைக்கு வரவழைக்க ஆவனசெய்யுமாறும் மிக உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து ஈழத்தமிழர்கள் விடயத்தில் அதீத கரிசனை கொண்டிருக்கும் தாங்கள், இவ்விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகி நோய்வாய்ப்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை கருதியும், அவரது குடும்பத்தினரின் உணர்வுநிலைப்பட்ட எதிர்பார்ப்பைக் கருத்திற்கொண்டும் சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க ஆவனசெய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். – என்றார். (ச)
 

 

https://newuthayan.com/article/ராஜீவ்_காந்தியின்_கொலைவழக்கில்_விடுதலை_செய்யப்பட்டோரை_இலங்கைக்கு_அனுப்பக்கோரி

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய, இந்திய அரசாங்கங்களை  அணுகுவதற் மூலமே இந்த பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும்.  இந்திய குடிவரவு சட்டத்தின் கீழ் தான் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.   இந்திய குடிவரவு சட்டத்தின்படி முறைப்படியான ஆவணங்கள் அற்றவர்கள் இவ்வாறான சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். இதுவும் ஒருவகையில் சிறை தான்.  

ஶ்ரீதரன் செய்ய வேண்டியது இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து இவர்களுக்கான பயண ஆவணங்களை இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகம் மூலம் இவர்களுக்கு  வழங்க ஏற்பாடு செய்வதே. பயண ஆவணங்களை இலங்கை அரசு வழங்குமானால் இந்திய அரசினால் இவர்களை தடுத்தது வைத்திருக்க முடியாது. 

 இந்த விடயத்தில் எந்த அதிகாரமும் அற்ற தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதுவது வெறும் பயன்ற்ற அரசிலாகத் தான் இருக்க முடியும்.  ஏதோ தான் முயற்சி எடுத்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்தால் சரி என்று  நினைக்கிறார் போல உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

Passport க்கு வழி பாருங்க அப்பு. மிகுதியை பின்னர் பார்க்கலாம். 

NEED தேர்வுகளை நீக்கும்படி தமிழ்நாடு மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் விளம்பர யுக்தியை இவர் தொட்டிருக்கிறார்? 

முன்னாள் தலைமை நீதிபதி விக்கியர், கொலைக்  குற்றவாளி பிறேமானந்தாவை விடுதலை செய்யும்படி மோடிக்குக் கடிதம் எழுதும்போது சிறீதரன் எம்மாத்திரம்? 

😏

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

முன்னாள் தலைமை நீதிபதி விக்கியர், கொலைக்  குற்றவாளி பிறேமானந்தாவை விடுதலை செய்யும்படி மோடிக்குக் கடிதம் எழுதும்போது

விக்கினேஸ்வரன் தவறான செயலை செசய்யும் படி கடிதம் எழுதினார். ஆனால் அதை செய்ய அதிகாரம் உள்ள இந்திய பிரதமருக்கு.
சிறீதரன்  கடிதம் எழுதியது இலங்கையில் தமிழர்களுக்கு முக்கியமானவர் தான் என்பதை  ஸ்டாலினுக்கு காட்டுவதற்கும், பத்திரிகைகளில் செய்தி வருவதற்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

1) விக்கினேஸ்வரன் தவறான செயலை செசய்யும் படி கடிதம் எழுதினார். ஆனால் அதை செய்ய அதிகாரம் உள்ள இந்திய பிரதமருக்கு.


2) சிறீதரன்  கடிதம் எழுதியது இலங்கையில் தமிழர்களுக்கு முக்கியமானவர் தான் என்பதை  ஸ்டாலினுக்கு காட்டுவதற்கும், பத்திரிகைகளில் செய்தி வருவதற்கும்.

1)

2) ஆனாலும் இது அவருடைய தலைமைத்துவத்திற்கு தகுதியற்ற செயல். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

விக்கினேஸ்வரன் தவறான செயலை செசய்யும் படி கடிதம் எழுதினார். ஆனால் அதை செய்ய அதிகாரம் உள்ள இந்திய பிரதமருக்கு.
சிறீதரன்  கடிதம் எழுதியது இலங்கையில் தமிழர்களுக்கு முக்கியமானவர் தான் என்பதை  ஸ்டாலினுக்கு காட்டுவதற்கும், பத்திரிகைகளில் செய்தி வருவதற்கும்.

இதில் இருந்து விக்கி ஐயா எப்படியானவர், அவரின் குணநலன்கள் என்ன  என்று விளங்கி கொள்ளலாம். சரியோ, பிழையோ யாருக்கு எதை எழுத வேண்டுமென்று தெரியுது. 

ஸ்ரீதரனுக்கு இந்திய அரசுக்கும் , தமிழ் நாடு மாநில அரசுக்கும் என்ன வித்தியாசம் என்றே தெரியவில்லை. முதட் கோணல் முற்றும் கோணல். தமிழர்களின்  தலை  எழுத்து. எப்படியோ கிராம சபை அரசியலுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனை இலங்கைக்கு அழைக்க அமைச்சர் உறுதியளிப்பு!

adminJanuary 31, 2024
Santhan.png?fit=754%2C423&ssl=1

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, விடுதலையாகிய சாந்தனை இலங்கைக்கு அழைப்பது வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

குறித்த வழக்கின் தீர்ப்பில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ள நிலையில், அவரின் தாய் மற்றும் சகோதர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (31.01.24)  சந்தித்தனர். மேலும், சாந்தன் நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறும் கேட்டுக் கொண்டனர்.

இதன்போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானநந்தாவினால் குறித்த உறுதிமொழி வழங்கப்பட்டது.

 

https://globaltamilnews.net/2024/200256/

சாந்தனின் விடுதலை விரைவில் சாத்தியம்

1455812788.jpg

அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோருடன் உரையாடிய பின்னர் சிறீதரன் தெரிவிப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய் யப்பட்டு, 32 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட
பின்னரும்கூட இன்னமும் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சாந்தனின் விடுதலை விரைவில்
சாத்தியம் என்றும், அதற்குரிய பேச்சுகள் இடம்பெற்றுள்ளன என்றும் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சிறீதரன் உதயனுக்குத் தெரிவித்தார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப் பட்டு 32 ஆண்டுகால சிறைவாசத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள சாந்தனை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவர வேண்டிய கட்டாய நிலைமை தொடர்பில் சாந்தனின் தாயார் தில்லையம்பலம். மகேஸ்வரி அண்மையில் வலியுறுத்தியிருந்தார். சாந்தனும், தானும் இது தொடர்பில் பல்வேறு பேச்சுகளையும் கோரிக்கைகளையும் விடுத்துள்ள போதிலும், அவற்றை உரியதரப்புகள் கண்டுகொள் ளவில்லை என்றும். தற்போது உயி ருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய சிறுநீரகப் பாதிப்பு. கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் சாந்தன் அவதி யுற்று வரும்நிலையில், அவரை இலங் கைக்கு அனுப்ப இலங்கை. இந்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே, சாந்தனின் விடு தலை தொடர்பில் இலங்கையின் வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட் டோருடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும், அவர் அடுத்த சில தினங்களுக்குள் விடுவிக்கப்படுவார் என்று தனக்குத் தெரி விக்கப்பட்டுள்ளதாக சி.சிறீதரன் உதய னுக்கு நேற்று இரவு தெரிவித்தார். சிறீதரன் எம்.பி. மேலும் தெரிவித்ததாவது:
சாந்தனின் விடுதலை தொடர்பில் பல் வேறு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப் பட்டுள்ளது. இலங்கையின் வெளிவிவ கார அமைச்சர் அலி சப்ரியுடன் இது தொடர்பில் நாங்கள் பேச்சு நடத்தியுள்ளோம். அவர் அடுத்த சில தினங்களுக் குள் சாந்தனின் விடுதலை சாத்தியம் என்று எங்களுக்குத் தெரிவித்துள்ளார். சென்னைத் துணைத்தூதரகத்தினருடனும் அலி சப்ரி பேச்சு நடத்தியுள்ளார். சாந்தனின் பயண ஆவணங்கள் அனைத்தும் முழு மைப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், இந் திய பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதலை யும் சில கோப்புகளையும் பெற வேண்டி யுள்ளதாலேயே சாந்தன் இலங்கையை நோக்கிய பயணப்படுவது தாமதமாகின்றது. அடுத்த சில தினங்களில் இந்த ஆவணங்கள் கைக்கு கிடைத்ததும் சாந்தன் இலங்கைக்கு அனுப்பிவைக் கப்படுவார்- என்றார். (ஏ)

 

https://newuthayan.com/article/சாந்தனின்_விடுதலை_விரைவில்_சாத்தியம்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Cruso said:

ஸ்ரீதரனுக்கு இந்திய அரசுக்கும் , தமிழ் நாடு மாநில அரசுக்கும் என்ன வித்தியாசம் என்றே தெரியவில்லை. முதட் கோணல் முற்றும் கோணல். தமிழர்களின்  தலை  எழுத்து.

இப்படி எல்லாம் வித்தியாசம் தெரியாம அரசியல் செய்வது  அங்கே உள்ள மக்களை மாயையில் எதிர்பார்ப்புகளுடன் வைத்திருந்து காலத்தை கொண்டு செல்வது  இவற்றை  தான் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் சிலரும் விரும்புகிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விளங்க நினைப்பவன் said:

இப்படி எல்லாம் வித்தியாசம் தெரியாம அரசியல் செய்வது  அங்கே உள்ள மக்களை மாயையில் எதிர்பார்ப்புகளுடன் வைத்திருந்து காலத்தை கொண்டு செல்வது  இவற்றை  தான் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் சிலரும் விரும்புகிறார்கள் .

இதனை ஆர்வ கோளாறு என்று சாதாரண வழக்கில் சொல்லப்படுவதுண்டு.

ஒரு விடயம் அல்லது ஒரு பொருள் எதுவாக இருப்பினும் குறிப்பிட்ட காலத்தில் திடீரென அதற்கான கேள்வி அதிகரித்த போது மக்கள் அதனை தவறவிடக்கூடாது எனும் எண்ணத்தில் அவசரப்பட்டு சரியாக ஆராயமல் செய்யும் விடயங்கள், இதனை Cognitive bias (FOMO - Fear Of Missing Out என்பதன் சுருக்கம்)  என அழைக்கிறார்கள்.

https://www.convertize.com/psychology-black-friday/

சிறீதரனுக்கு திட்டமிடெல்லாம் சிந்தித்து மக்களை மாயையில் வைத்திருக்கும் நோக்கம் இல்லை என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவே இந்த தமிழ் அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர் ஒருவர் இவ்வாறு ஒரு சிக்கலில் மாட்டியிருந்தால் நிதானமாக யாரைத் தொடர்பு கொண்டால் விஷயம் விரைவில் நடக்கும் என்பதை முறைப்படி  விசாரித்து  இலங்கை வெளிவிவகார அமைச்சை தொடர்பு கொண்டு தமது அரசியல் செல்வாக்கு,  தனிப்பட்ட நட்புகள் ஆகியவற்றை பிரயோகித்து  காதும் காதும் வைத்தமாதிரி விஷயத்தை கெட்டித்தனமாக முடித்திருப்பார்கள். 

பொது விஷயம் என்றால் பொங்குவதும் தங்கள் தனிப்பட்ட விடயம் என்றால் பம்முவதும் குழைந்து குழைந்து பேசி தமது அலுவலை முடிப்பதும் தமிழ் தேசிய அரசியலாளர்களுக்கு கைவந்த கலை.  

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kapithan said:

இது அவருடைய தலைமைத்துவத்திற்கு தகுதியற்ற செயல். 

நிச்சயமாக.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கருணாநிதி.இந்திய அரசு இலஙகைக்கு  அனுப்பா விட்டால் இந்திய அரசுடனான உறவைத்  துண்டிப்பாரா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

சிறீதரனுக்கு திட்டமிடெல்லாம் சிந்தித்து மக்களை மாயையில் வைத்திருக்கும் நோக்கம் இல்லை என கருதுகிறேன்.

தலைமத்துவத்தில் தான் சுமந்திரனுக்கு இணையானவர் அல்லது அவரிலும் மேலானவர் என்று நிரூபிக்க வேண்டிய தேவை சிறீதரனுக்கு இருக்கிறது. நிரூபிக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

தலைமத்துவத்தில் தான் சுமந்திரனுக்கு இணையானவர் அல்லது அவரிலும் மேலானவர் என்று நிரூபிக்க வேண்டிய தேவை சிறீதரனுக்கு இருக்கிறது. நிரூபிக்க வேண்டும். 

அதிகாரங்களின் மூலம் தனிப்பட்ட  ரீதியில் பலனடைவதுதான் அவரது குறிக்கோளாக இருக்கலாம், இது அவரது கடந்த கால செயற்பாடு தொடர்பான கருத்தாக உள்ளது, இது தவறானதாக இருக்கலாம், ஆனால் காலம் அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தினை வழங்கியுள்ளது தன்னை நிரூபிப்பதற்கு, அவர்தான் தனது பாதையினை தெரிவு செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, vasee said:

அதிகாரங்களின் மூலம் தனிப்பட்ட  ரீதியில் பலனடைவதுதான் அவரது குறிக்கோளாக இருக்கலாம், இது அவரது கடந்த கால செயற்பாடு தொடர்பான கருத்தாக உள்ளது, இது தவறானதாக இருக்கலாம், ஆனால் காலம் அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தினை வழங்கியுள்ளது தன்னை நிரூபிப்பதற்கு, அவர்தான் தனது பாதையினை தெரிவு செய்யவேண்டும்.

குடாநாட்டிற்கான குடிநீர் வினியோகத் திட்டத்தில் இரணைமடுக் குளம் தொடர்பான இவரது  நிலைப்பாடு இவர் மீது  பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

குடாநாட்டிற்கான குடிநீர் வினியோகத் திட்டத்தில் இரணைமடுக் குளம் தொடர்பான இவரது  நிலைப்பாடு இவர் மீது  பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

அந்த திடடத்தை நாசமாகியவர்கள் இவரும், மாவையும், விக்கியரும்தான். ஸ்ரீதரன் கிளிநொச்சியில் குடியேறிய பின்னர் அங்கு நிறைய நெட்காணிகளுக்கும் , வயல்களுக்கு  சொந்தக்காரராக மாறி விடடார் என்பதை மறக்க வேண்டாம். அதனால்தான் அந்த திடடத்தை இவர் எதிர்த்தார். எல்லாம் சுயநல அரசியல்வாதிகள்தான். இனி சிங்கள குடியேற்றம் எண்டு கூச்சல்போடுவார்கள். அவ்வளவுதான். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.