Jump to content

தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மணி நேரங்களுக்கு முன்னர்

அரசியல் கட்சிகளுக்கு பெயர் குறிப்பிடாமல் நிதி வழங்கும் தேர்தல் பத்திர நடைமுறை சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் ஒருமித்த முறையில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாக இருப்பதற்கு தேர்தல் நிதி தொடர்பான தகவல்கள் அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

அரசியல் சட்டப் பிரிவு 19(1)(a)-இன் கீழ் தகவல் பெறும் உரிமைக்கு எதிரானதாக தேர்தல் பத்திர திட்டம் இருப்பதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைகள் முழுக்க முழுக்க "பதில் உதவியை எதிர்பார்க்கும்" நோக்கங்களுக்காக மட்டுமே இருப்பதால், தேர்தல் பத்திரங்கள் மூலம் கார்ப்பரேட் நன்கொடைகள் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது.

தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வெளியிட உத்தரவு

தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏப்ரல் 12, 2019 முதல் இன்று வரை வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இந்த தகவலை மார்ச் 13, 2024க்குள் தனது இணையதளத்தில் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

15 நாட்களுக்குள் செல்லுபடியாகும், அரசியல் கட்சிகளால் எடுக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் வாங்குபவரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பொதுமக்கள் எதை வேண்டுமானாலும் தெரிந்துகொள்ள முடியும் என்ற நிலை இருக்கக்கூடாது என மத்திய அரசு வாதிட்டது

தேர்தல் பத்திரம் என்றால் என்ன?

தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு நிதி வழிமுறையாகும். உறுதிமொழிப் பத்திரம் போன்ற இந்த தேர்தல் பத்திரத்தை இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் இருந்து வாங்கலாம். அவர்கள் விரும்பும் எந்த அரசியல் கட்சிக்கும் தங்களது அடையாளத்தை வெளியிடாமல் இதன்மூலம் நன்கொடை அளிக்கலாம்.

இந்திய அரசு 2017ல் தேர்தல் பத்திர திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் 29 ஜனவரி 2018 அன்று அரசாங்கத்தால் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கான பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி வெளியிடும்.

KYC விவரங்கள் உள்ள வங்கிக் கணக்கு வைத்திருக்கும் எந்த நன்கொடையாளரும் இவற்றை வாங்கலாம். தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துபவரின் பெயர் இடம்பெறத் தேவையில்லை.

இத்திட்டத்தின் கீழ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் இருந்து ரூ.1,000 முதல் ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி வரை எந்த மதிப்பிலான தேர்தல் பத்திரங்களையும் வாங்கலாம்.

தேர்தல் பத்திரங்களின் ஆயுள் 15 நாட்கள் மட்டுமே. அவற்றை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க மட்டுமே பயன்படுத்த முடியும்.

மக்களவை அல்லது சட்டப் பேரவைக்கு கடந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் குறைந்தபட்சம் ஒரு சதவீத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்க முடியும்.

இத்திட்டத்தின் கீழ் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் 10 நாட்களுக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். லோக்சபா தேர்தல் நடக்கக்கூடிய ஆண்டில் கூடுதலாக 30 நாட்களுக்கும் இவை வெளியிடப்படலாம்.

தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தேர்தல் பத்திர திட்டம் 29 ஜனவரி 2018 அன்று அரசாங்கத்தால் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது

தேர்தல் பத்திரத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள் என்ன?

இந்தத் திட்டத்தைத் தொடங்கும் போது, தேர்தல் பத்திரங்கள் நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்கும் முறையை முறைப்படுத்தும் என்று இந்திய அரசு கூறியது.

ஆனால் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிப்பவர் யார் என்பது ரகசியமாக வைக்கப்படுவதாகவும் இது கருப்பு பணத்தை ஊக்குவிக்கும் என்றும் கடந்த சில ஆண்டுகளாக, மீண்டும் மீண்டும் கேள்வியெழுப்பப்படுகிறது.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பணத்தை நன்கொடையாக வழங்குவதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது என்ற விமர்சனமும் உள்ளது.

இந்தத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முதல் மனுவை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்பான Common Cause இணைந்து 2017ல் தாக்கல் செய்தன. இரண்டாவது மனுவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 2018 இல் தாக்கல் செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், தேர்தல் பத்திரத்தில் நன்கொடையாளரின் பெயர் மறைக்கப்படுவது அரசியலமைப்பின் 19(1)(a)பிரிவின் கீழ் ஒரு குடிமகனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் அறியும் உரிமையை மீறுவதாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தன.

தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தேர்தல் பத்திரத்தில் நன்கொடையாளரின் பெயர் மறைக்கப்படுவது அரசியலமைப்பின் 19(1)(a)பிரிவை மீறுவதாக வாதிடப்பட்டது

உச்ச நீதிமன்றத்தின் முன் எழுப்பப்பட்ட ஒரு பிரச்னை என்னவென்றால், இந்தியாவில் துணை நிறுவனங்களைக் கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க அனுமதிக்கும் வகையில் FCRA சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சர்வதேச அளவில் லாபி செய்பவர்களுக்கு தங்களது சொந்த நோக்கத்தை இந்திய அரசியலிலும் ஜனநாயகத்திலும் திணிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

நிறுவனங்கள் தாங்கள் எந்த அரசியல் கட்சிக்கு நிதி அளித்திருக்கிறோம் என்பதை தங்களது ஆண்டு லாப நஷ்ட கணக்குகளில் தெரிவிக்க தேவையில்லை என நிறுவனச் சட்டம் 2013-இல் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் குறித்து இந்த மனு கேள்வியெழுப்பியிருக்கிறது. இது அரசியல் நிதியில் வெளிப்படைத்தன்மையைக் குறைக்கும் என்றும் இதுபோன்ற நிறுவனங்களுக்கு தேவையற்ற சலுகைகளை வழங்க அரசியல் கட்சிகளை ஊக்குவிக்கும் என்றும் மனுதாரர்கள் கூறுகின்றனர்.

தேர்தல் பத்திரத் திட்டம் பட்ஜெட்டில் உள்ளது. பட்ஜெட் என்பது ஒரு பண மசோதா என்பதால் மாநிலங்களவை அந்த திட்டத்தில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

மாநிலங்களவையில் அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், எளிதாக நிறைவேற்றும் வகையில், பண மசோதாவில் தேர்தல் பத்திரத் திட்டம் சேர்க்கப்பட்டது என மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது.

தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

எதிர்க்கட்சிகள் தேர்தல் பத்திரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன

இந்தத் திட்டத்தில் எந்தக் கட்சி அதிகம் பயன்பெற்றிருக்கிறது?

2016-17 மற்றும் 2021-22 க்கு இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ஏழு தேசியக் கட்சிகளும் 24 பிராந்தியக் கட்சிகளும் மொத்தம் ரூ.9,188 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளன.

இந்த ரூ.9,188 கோடியில் பாரதிய ஜனதா கட்சியின் பங்கு மட்டும் தோராயமாக ரூ.5272 கோடி. அதாவது தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கப்பட்ட மொத்த நன்கொடையில் 58 சதவீதத்தை பாஜக பெற்றுள்ளது.

அதே காலகட்டத்தில், தேர்தல் பத்திரங்கள் மூலம் காங்கிரஸ் தோராயமாக ரூ.952 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.767 கோடியும் பெற்றுள்ளது.

Association for Democratic Reforms (ADR) அமைப்பின் அறிக்கையின்படி, 2017-18 நிதியாண்டுக்கும் 2021-22 நிதியாண்டுக்கும் இடையே தேர்தல் பத்திரங்கள் மூலம் தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடைகள் 743 சதவீதம் அதிகரித்துள்ளது. மறுபுறம், இதே காலகட்டத்தில் தேசிய கட்சிகளுக்கு கார்ப்பரேட் நன்கொடைகள் 48 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளன.

இந்த ஐந்தாண்டுகளில், 2019-20 ஆம் ஆண்டில் (இது மக்களவைத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு), தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகபட்சமாக ரூ.3,439 கோடி நன்கொடையாக வந்துள்ளதாக ADR தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது. இதேபோல், 2021-22 ஆம் ஆண்டில் (11 சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன), அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் சுமார் 2,664 கோடி ரூபாய் நன்கொடை பெற்றன.

தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கப்பட்ட மொத்த நன்கொடையில் 58 சதவீதத்தை பாஜக பெற்றுள்ளது

தேர்தல் ஆணையம் மற்றும் ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது?

2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், தேர்தல் பத்திரங்கள் அரசியல் நிதியில் வெளிப்படைத் தன்மையை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் அவை இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்த வெளிநாட்டு கார்ப்பரேட் சக்திகளை அழைப்பதற்கு சமம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

இதன்மூலம், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்படும் ஷெல் நிறுவனங்களை திறக்க வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

ADRன் மனுவின்படி, கறுப்புப் பணப் புழக்கத்தை அதிகரிக்க, பணமதிப்பழிப்பு மற்றும் எல்லை தாண்டிய மோசடியை அதிகரிக்க தேர்தல் பத்திரங்கள் பயன்படுத்தப்படலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பலமுறை எச்சரித்துள்ளது.

தேர்தல் பத்திரங்களை 'நிதி வழங்குவது குறித்த தெளிவில்லாத முறை' என்று குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி, இந்த பத்திரங்கள் நாணயம் போன்று பலமுறை கை மாறுவதாலும் அது யார் பெயரில் வழங்கப்படுகிறது என்பது தெரியாததாலும் இந்த பத்திரங்கள் மூலம் பண மோசடி நடக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

https://www.bbc.com/tamil/articles/cn0ng6q06lno

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறுவன்ம்கள் வைத்திருக்கும் கறுப்பு பணத்தை தேர்தல் பத்திரமாக கொடுக்கலாமாம் அதற்கு GSD வரி விதிப்பு  கூட கிடையாதாம் என்ன ஜனநாயகம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிகளின் ஆட்சியில் இப்படியான கருப்பு பணங்களை வெள்ளையாக்கும்  சட்ட்ங்கள்தான் இருக்கும். எப்படி இருந்தாலும் மோடி அரசுக்கு விழுந்த பலத்த அடி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Cruso said:

சங்கிகளின் ஆட்சியில் இப்படியான கருப்பு பணங்களை வெள்ளையாக்கும்  சட்ட்ங்கள்தான் இருக்கும். எப்படி இருந்தாலும் மோடி அரசுக்கு விழுந்த பலத்த அடி. 

இப்படியொரு லூப்  ஹோல்  193௦களில் இருந்தே இருக்கிறது இதில்  அதிக லாபம் பார்த்தவர்கள் காங்கிரஸ் கூட்டம் ஏன் தீம்கா கூட கடந்த தேர்தலுக்கு 6௦௦கோடிக்கு மேல் கடன் பத்திரங்களை பெற்றுள்ளது எல்லா கட்சியும் இப்படித்தான் தேர்தல் நிதியை சட்ட ரீதியாக சேர்த்து தேர்தலுக்கு சிலவளிப்பது  உண்டு இதில் கட்சிக்கு எவ்வளவு சேந்து அந்த காசை எவ்வளவு சிலவளித்தார்கள் என்ற விபரம் தேர்தல் ஆணையகத்துக்கு முழுமையாக காட்ட தேவையில்லை ஏன் நீதி மன்றத்துக்கு கூட உரிமையில்லை என்கிறார்கள் .இதை சீமான் போன்றவர்கள் சுட்டிக்காட்ட அல்ல உபயோக தொடங்க தேசிய மாநில டைனசோர்கள் விழித்து கொண்டு அலறுகின்றனர் விடயம் அவ்வளவுதான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியில் இருப்பதை வாசித்தாலே தேர்தல் கடன் பத்திர முறை 2018 இல் இருந்து தான் நடைமுறையில் இருக்கிறதென விளங்கும்.

மேலதிக தகவல் பி.பி.சி யில்: இது வரை 160 பில்லியன் இந்திய ரூபாய்களுக்கு கடன் பத்திரங்கள் மூலம் பரிமாற்றம் நடந்திருக்கிறது. இதில் 57% பி.ஜே.பிக்கு, வெறும் 10% தான் எதிர் கட்சியான காங்கிரசுக்கு போயிருக்கிறது.

பிடிக்காத காங்கிரசையும், திமுகவையும் தாக்க வேண்டுமென்பதற்காக பிழையான தரவுகள் மூலம் மிக முயற்சி செய்து மிளகாய் அரைக்கிறார் பெருமாள்😂!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

இப்படியொரு லூப்  ஹோல்  193௦களில் இருந்தே இருக்கிறது இதில்  அதிக லாபம் பார்த்தவர்கள் காங்கிரஸ் கூட்டம் ஏன் தீம்கா கூட கடந்த தேர்தலுக்கு 6௦௦கோடிக்கு மேல் கடன் பத்திரங்களை பெற்றுள்ளது எல்லா கட்சியும் இப்படித்தான் தேர்தல் நிதியை சட்ட ரீதியாக சேர்த்து தேர்தலுக்கு சிலவளிப்பது  உண்டு இதில் கட்சிக்கு எவ்வளவு சேந்து அந்த காசை எவ்வளவு சிலவளித்தார்கள் என்ற விபரம் தேர்தல் ஆணையகத்துக்கு முழுமையாக காட்ட தேவையில்லை ஏன் நீதி மன்றத்துக்கு கூட உரிமையில்லை என்கிறார்கள் .இதை சீமான் போன்றவர்கள் சுட்டிக்காட்ட அல்ல உபயோக தொடங்க தேசிய மாநில டைனசோர்கள் விழித்து கொண்டு அலறுகின்றனர் விடயம் அவ்வளவுதான் .

செய்தியில் எப்போது சடடமாக்கப்பட்ட்து என்று தெளிவாக கூறி இருக்கிறார்கள். அதனை கருத்தில் கொண்டுதான் நானும் எழுதினேன். மேலதிக விளக்கம் தேவைப்படாது என்று நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Justin said:

செய்தியில் இருப்பதை வாசித்தாலே தேர்தல் கடன் பத்திர முறை 2018 இல் இருந்து தான் நடைமுறையில் இருக்கிறதென விளங்கும்.

உங்களுக்கு ஆதரவான அல்லது மற்றவரை மொட்டையடிக்க என்றால் bbc செய்திகள் நம்பகத்தன்மையான செய்தி இணையம் Electoral Bond சமமான பெயருடன்  அப்போது தொடங்கப்பட்ட காங்கிரசுக்கு ஆதரவாக 193௦ களிலே பாரிய நிருவன்ம்கள் நன்கொடை அளித்து உள்ளன .

12 hours ago, Cruso said:

செய்தியில் எப்போது சடடமாக்கப்பட்ட்து என்று தெளிவாக கூறி இருக்கிறார்கள். அதனை கருத்தில் கொண்டுதான் நானும் எழுதினேன். மேலதிக விளக்கம் தேவைப்படாது என்று நினைக்கிறேன். 

@Justin @Cruso உங்க இருவருக்கும் ஆங்கிலத்தில் தேடுவது பிடிக்காத விடயம் என்பது விளங்குது அதனால் இணைக்கிறேன் .

தேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி.

நாடாளுமன்றத்துக்கும் ஆந்திரம், அருணாசலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேர வைகளுக்கும், தமிழ்நாட்டில் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 2019 ஏப்பிரல் 11 முதல் மே 19 முடிய ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடந்து கொண்டிருக் கிறது.

இதற்குமுன் நடைபெற்ற தேர்தல்களைவிட இந்தத் தேர்தலில் பணம் கோடி கோடியாய்ச் செலவிடப்படுகிறது. ஆந்திரத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வரும் தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்தவருமான ஜெ.சி. திவாகர் ரெட்டி வெளியிட்ட அறிக்கை “தி இந்து” ஆங்கில நாளேட்டில் 23.4.2019 அன்று வெளியாகியுள்ளது. அதில், “ஆந்திரத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் கிட்டத்தட்ட 25 கோடி உருபா செலவிட்டனர். ஆந்திரத்தில் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைக்கும் சேர்த்து தேர்தல் செலவு ரூ.10,000 கோடியைத் தாண்டியுள்ளது. வாக் காளர்கள் ரூ.2000-க்குக் குறைவான தொகையைப் பெற மறுக்கின்றனர். சில இடங்களில் வேளாண் தொழிலாளர்களும் பிற கூலி வேலை செய்வோரும் ரூ.5000 கேட்டனர்” என்று திவாகர் ரெட்டி கூறியுள்ளார்.

/images/stories/people/delhi_electioncommision-office_600.jpgஊடகவியல் ஆய்வு நடுவம் மேற்கொண்ட ஆய்வில், 2010 முதல் 2014 வரை இந்தியாவில் நடந்த தேர்தல் களில் ரூ.1,50,000 கோடி செலவிடப்பட்டதாகவும், இதில் பாதித் தொகை கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணம் என்றும் கூறியுள்ளது. பா.ச.க.வும், காங்கிரசும் 2019 ஏப்பிரல்-மே மாதங்களில் நடைபெறும் தேர் தலில் தனித்தனியே ரூ.50,000 கோடி செலவிடத் திட்டமிட்டிருப்பதாக 14.4.2019 நாளிட்ட ‘டெக்கான் கிரானிக்கிள்’ ஆங்கில நாளேட்டின் ஆசிரியவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக்குக் கோடி கோடியாகப் பணம் கொடுப்பது யார்? பெருமுதலாளிகள், பெரும் வணிகர்கள், பெரிய ஒப்பந்தக்காரர்கள் முதலானோர் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கின்றனர். 1930-கள் முதலே காங்கிரசுக் கட்சிக்கு பிர்லா, டாடா போன்ற முதலாளிகள் பெருந்தொகையை நன்கொடையாக அளித்து வந்தனர். அதனால், இவர்களின் பொருளியல் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் காங்கிரசுக் கட்சியில் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன.

1937-இல் பெரும்பாலான மாகாணங்களில் காங்கிரசுக் கட்சியின் தலைமையிலான ஆட்சி அமைந்த போது, ஆட்சியதி காரத்தில் முதலாளிகளின் செல்வாக்கு வளர்ந்தது. இம்முதலாளிகள் பார்ப்பன - பனியா - மார்வாரி உள்ளிட்ட மேல்சாதியினராகவே இருந்தனர். இன்றளவும் இந்தியாவில் உள்ள பெருமுதலாளிய நிறுவனங்களும் வணிகக் குழுமங்களும் இந்த மேல்சாதியினரின் ஆதிக்கதிலேயே இருக்கின்றன.

இந்தியா குடியரசானபின் 1952இல் நடந்த முதலாவது பொதுத் தேர்தலின்போதே வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது என்பது ஏற்பட்டுவிட்டது. தேர்தலில் அதிக அளவில் செலவு செய்ய வாய்ப்புள்ள கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெறக் கூடிய நிலை உண்டாயிற்று. மக்கள் நாயக ஆட்சியாக வளர வேண்டியது பணநாயகத்தின் ஆட்சியாக மாறியது. தொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்குப் பெருந்தொகையை நன்கொடையாக அளிப்பது, சனநாயக நெறிமுறைகளுக்கும் மக்களாட்சிக் கோட்பாட்டுக்கும் எதிரானதாகும் என்று எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.

இது தொடர்பாக, 1957-இல் மும்பை உயர்நீதிமன்றத் தில் வழக்குத் தொடரப்பட்டது. தலைமை நீதிபதி யாக இருந்த எம்.சி. சாக்ளா, “இது மிகப் பெரிய ஆபத்து; வேகமாக வளர்ந்து வரும் சனநாயகத்தின் குரல்வளையைக் கூட நெரித்து விடும், தொழில் நிறுவனத்தின் பங்குதாரர்கள் மட்டுமின்றி, வாக்களிக்கும் வாக்காளர்கள் கூட தொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு அளித்த நன்கொடை குறித்து அறிவது முதன்மையாகும்” என்று தீர்ப்பளித்தார், இதே போன்றதோர் தீர்ப்பை கொல்கத்தா நீதிமன்றமும் 1957-இல் வழங்கியது,

அதன் பிறகும் தொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு அளித்துவந்த நன்கொடை குறித்த விவரம் பொது மக்கள் அறிய முடியாதவாறு இரகசியமாக வைக்கப்பட்டது. இந்த நன்கொடையில் பெரும்பகுதி கருப்புப்பணம் என்பதால் அரசியல் கட்சிகளும் தொழில் நிறுவனங்களும் கூட்டுக் களவாணிகளாகச் செயல்படு கின்றனர்.

1991-இல் தாராள மயம் - தனியார் மயம் என்கிற கொள்கையை அரசுகள் நடைமுறைப்படுத்தத் தொடங்கிய பின், நிலம், காடுகள், கனிம வளங்கள், மணல், பெட்ரோலிய எண்ணெய் வயல்கள் முதலானவை பெருமுதலாளிய நிறுவனங்களின் கொள்ளைக்குத் திறந்துவிடப்பட்டன. இந்த இயற்கை வளங்களை மலிவு விலையில் பெறவும், அப்பகுதிகளில் வாழும் மக்களை வெளியேற்றவும் முதலாளிய நிறுவனங்கள் ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிக்கும், எதிர்க் கட்சி களுக்கும் பெருந்தொகையைக் கையூட்டாகவும், நன் கொடையாகவும் அளிப்பது வேகமாகப் பெருகியது. சனநாயகம் என்பது பணம் குவிக்கும் வணிகமாக மாறிவிட்டது. தேர்தல் நன்கொடை என்பது அரசியல் கட்சிகளின் அச்சாணி போலாகிவிட்டது. சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் போன்ற பதவிகளுக்குச் செல்வது குறுகிய காலத்தில் கோடிகளில் பணத்தைக் கொள்ளையடிப்பதற்கே என்ற நிலை ஏற்பட்டுவிட்டது,

அரசியல் கட்சி, நன்கொடை என்கிற பெயரில் இவ்வளவு தொகைதான் பெறவேண்டும் என்கிற வரம்பு ஏதும் இல்லை. அதேபோல் தேர்தலில் செலவு செய்வதற்கும் வரம்பு இல்லை, தற்போது நாடாளுமன்றத் திற்குப் போட்டியிடும் வேட்பாளர் எழுபது இலட்சம் உருபா வரையில் செலவு செய்யலாம் என்று விதிக்கப் பட்டுள்ளது, அரசியல் கட்சிகளின் வரவு-செலவு எந்த வொரு தணிக்கைக்கும் உட்படுத்தப்படுவதில்லை, அதனால் அதில் ஊழலும் கருப்புப் பணமும் தாராள மாகப் புழங்குகின்றன. அரசியல் கட்சிகளின் வரவு-செலவை இந்திய அரசின் தலைமைத் தணிக்கைக் கணக்காயரின் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசியல் கட்சிகள் செவிமடுப்ப தில்லை.

சனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு என்கிற தன்னார்வ அமைப்பின் தகவல்படி, அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடையில் 69 விழுக்காடு இன்னாரிட மிருந்து பெறப்பட்டவை என்பதே தெரியாதவை; மீத முள்ள 31 விழுக்காடு வருமான வரித்துறைக்கு அரசியல் கட்சிகள் அளிக்கும் அறிக்கையிலிருந்து வெளியில் தெரிய வருபவை ஆகும். அரசியல் கட்சிகளின் உண் மையான வருவாய் அவற்றின் அறிக்கையில் வெளி யிடுவதைவிட இரண்டு மடங்கு இருக்கும், இவற்றின் உண்மையான வருவாய் குறித்து வருமானவரித் துறையிடமோ, தேர்தல் ஆணையத்திடமோ அதிகாரப் பூர்வ ஆவணம் கிடையாது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை கள் குறித்து சில தகவல்களைப் பெறமுடிந்தது. இந்த நிலையைத் தேர்தல் பத்திரத் திட்டம் ஒழித்துவிட்டது.

தேர்தல் ஆணையமும், சட்ட ஆணையமும் அரசியல் கட்சிகளுக்குத் தொழில் நிறுவனங்கள் அளிக்கும் தேர்தல் நன்கொடையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதைப் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளன. சனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு 2002-இல் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், வேட்பாளரின் கல்வித் தகுதி, சொத்து விவரம், குற்ற வழக்குகள் குறித்த விவரங்களை வேட்பாளர் விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும்; வாக்காளர்கள் இந்த விவரங்களை அறிவதற்கான உரிமை உடைய வர்கள் என்று தீர்ப்பளித்தது. இது நடைமுறையில் பின்பற்றப்படுகிறது. வேட்பாளர்கள் விண்ணப்பத்தில் அளித்த விவரத்தின்படி, 2009இல் நாடாளுமன்றத்தில் 543 உறுப்பினர்களில் 300 பேர் (58ரூ) கோடீசுரவர்கள், 2014-இல் 100 விழுக்காட்டினரும் கோடீசுவரர் கள். எனவே கோடிகளில் செலவிடக்கூடிய பணவசதி படைத்தவர்களையே எல்லாக் கட்சிகளும் வேட்பாளர் களாக நிறுத்துகின்றன.

2017ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை நாடாளு மன்றத்தில் முன்மொழிந்த போது, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, அரசியல் கட்சிகளுக்குப் பணமாக நன்கொடை தரும் முறையில் கருப்புப் பணத்தின் புழக்கத்தைத் தடுத்திட, தேர்தல் பத்திரத் திட்டம் என்பதை நடுவண் அரசு அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்தார். இதற்காக 1951-ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச்சட்டம், 1934-ஆம் ஆண்டின் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 2013-ஆம் ஆண்டின் தொழில் நிறுவ னங்கள் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப் பட்டன.

நடுவண் அரசு 2018 சனவரி 2 அன்று தேர்தல் பத்திரத் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின்படி, ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 இலட்சம், ரூ.10 இலட்சம், ரூ.1 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் ஒவ்வொரு ஆண்டும் சனவரி, ஏப்பிரல், சூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் பத்து நாள்களுக்கு வழங்கப்படும். நாடாளு மன்றத்துக்குத் தேர்தல் நடக்கும் ஆண்டுகளில் கூடுதலாக முப்பது நாள்களுக்குத் தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படும். இதன்படி 2019 பிப்பிரவரி 28 அன்று நடுவண் அரசு வெளியிட்ட அறிவிப்பில் 2019 மார்ச்சு, ஏப்பிரல், மே மாதங்களில் முப்பது நாள்களுக்குத் தேர்தல் பத்திரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மே 15 வரை தேர்தல் பத்திரங்கள் கிடைக்கும். மே 19 அன்று இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

தனி நபரோ, இந்துக் கூட்டுக் குடும்பமோ, சிலர் ஒன்று சேர்ந்தோ, தொழில் நிறுவனமோ தேர்தல் பத்திரத்தை வங்கியில் வாங்கி, தனக்கு விருப்பமான கட்சிக்கு நன்கொடையாக அளிக்கலாம். அந்தக் கட்சி தன் வங்கிக் கணக்கில் தேர்தல் பத்திரத்தைச் செலுத்திப் பணமாக மாற்றிக் கொள்ளும். தேர்தல் பத்திரம் வழங்கிய வரின் பெயர் வெளியிடப்படாமல் இரகசியமாக வைக்கப் படும். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதில் இருந்த கருப்புப் பணப் புழக்கத்தைத் தேர்தல் பத்திரத் திட்டத்தின் மூலம் தடுத்துவிட்டதாக மோடி அரசு பெருமை கொள்கிறது. ஆனால் இது உண்மை அன்று.

வங்கிகள் மூலம் தேர்தல் நன்கொடைப் பத்தி ரங்களை நடைமுறைப்படுத்துவதால் திரைமறைவு நன்கொடைகள் தடுக்கப்படும் என்று மோடி அரசு சொல்கிறது. நீண்டகாலமாக வங்கிகள் மூலமாகத்தான் கருப்புப் பணம் வெள்ளையாக் கப்பட்டு வருகிறது என்பது ஊரறிந்த உண்மை யாகும். ஹவாலா பணப் பரிமாற்றத்திற்கு வங்கிகள் துணைபோகின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, கருப்புப் பணத்தைப் புதிய பணத்தாள்களாக மாற்றிக் கொள்வதில் ரிசர்வ் வங்கி முதல் உள்ளூர் கிளை வங்கிகள் வரையில் துணைபோயின என்பது அம்பலப் பட்டுச் சந்தி சிரிக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்த லிலும் ஒரு விழுக்காட்டுக்குமேல் வாக்குகள் பெற்ற - தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் பத்திரம் வழங்க முடியும். 2017ஆம் ஆண்டு வரையில் ஒரு தொழில் நிறுவனம் அரசியல் கட்சிக்கு நன்கொடை வழங்க வேண்டுமானால் அது குறைந்தது மூன்று ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்திருக்க வேண்டும்; இலாபத்தில் இயங்கியிருக்க வேண்டும்; மூன்று ஆண்டுகளின் நிகர இலாபத்தில் 7.5 விழுக்காடு அளவுக்கு மட்டுமே நன்கொடை தர முடியும் என்கிற விதிகள் இருந்தன. தேர்தல் பத்திரத் திட்டம் இந்த விதிமுறைகளை நீக்கிவிட்டது. மேலும் தொழில் நிறுவனங்கள் சட்டம் 182(3)-இன்படி அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடை விவரத்தை ஆண்டு வரவு-செலவு அறிக்கையில் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று இருந்த விதியும் இப்போது நீக்கப் பட்டுவிட்டது. அதேபோன்று இந்தியாவில் இயங்கும் அயல்நாட்டு முதலாளிய நிறுவனங்கள் தேர்தல் நன் கொடை அளிப்பதற்கு இருந்த தடைகளும் அகற்றப்பட்டு விட்டன.

எனவே, தேர்தல் நேரத்தில் முளைக்கும் காளான் நிறுவனங்கள், போலி நிறுவனங்கள் பெயர்களில் கருப்புப் பணம் தேர்தல் பத்திரங்களாக மாற்றப்படும். இந்நிறுவனங்களின் பெயர்கள் இரகசியமாக வைக் கப்படும் என்பதால் எவ்வளவு பணம் எந்த அரசியல் கட்சிக்குத் தேர்தல் பத்திரமாக வழங்கப்பட்டது என்ப தெல்லாம் திரைமறைவு தில்லுமுல்லுகளாகவே இருக்கும். எனவேதான், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா, “தேர்தல் பத்திரம் அரசியல் கட்சி களுக்குத் தொழில் நிறுவனங்கள் தரும் கருப்புப் பணத்தை மூடி மறைப்பதற்கான ஒரு திட்டம்” என்று கூறியிருக் கிறார் (தி இந்து-ஆங்கிலம்-27.1.2019).

தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி, அரசு ஊழியர்கள் மக்களின் பொதுநலன் தொடர்பாக எடுக்கும் கொள்கை முடிவுகளைக் குடிமக்கள் அறிந்து கொள்ள உரிமை இருக்கிறது. அதுபோல் தேர்தலில் வெற்றி பெறும் ஒரு அரசியல் கட்சி எடுக்கும் முடிவுகளைத் தேர்தல் பத்திரங்கள் தீர்மானிக்க வாய்ப்பு இருப்பதால், வாக்காளர்கள் தேர்தல் நன்கொடைப் பத்திரங்ளை வாங்கி வழங்கியவர்களின் விவரத்தைத் தெரிந்து கொள்ளும் உரிமை இருக்க வேண்டும்.

சனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு 2019 மார்ச்சு மாதம் உச்சநீதிமன்றத்தில், “தேர்தல் பத்திரம் வழங்குவதைத் தடைசெய்ய வேண்டும். அல்லது தேர்தல் நடவடிக்கையில் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யும் வகையில் நன்கொடை வழங்கியவர்களின் விவரங்களை வெளியிட ஆணை பிறப்பிக்க வேண்டும்” என்று வழக்குத் தொடுத்தது. மார்க்சிஸ்ட் பொதுவுடைமைக் கட்சியும் இதேபோன்று ஒரு வழக்கைத் தொடுத்தது.

/images/stories/people/jeyadeep_prasanthpoosan_ramadoss_600.jpg2019 ஏப்பிரல்-மே மாதங்களில் நாடாளுமன்றத் துக்குப் பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை முதன்மை வழக்காகக் கருதி, உச்சநீதிமன்றம் 2018 திசம்பர் மாதத்திற்குள் விசாரித்து, தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும். இதற்கு மாறாக, முதல் கட்டத் தேர்தல் தொடங்குவதற்கு முதல் நாள் ஏப்பிரல் 10 அன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மூன்று நாள்கள் நடந்த இந்த வழக்கு விசாரணையின் போது, சனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பின் சார்பில், “தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத் தன் மையை மறுக்கின்றன; போலியான நிறுவனங்கள் பெயரில் கருப்புப் பணம் நுழைவதற்கான வாய்ப்பு உள்ளது. நன்கொடையாளர் யார் என்பதை அறியும் வாய்ப்பு ஆளும் கட்சிக்கு மட்டும் இருக்கிறது; அதனால் மற்ற கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதைத்தடுத்திட தன் அதிகாரத்தைப் பயன்படுத்தும்” என்று வாதிடப் பட்டது.

தேர்தல் பத்திரத் திட்டத்தை எதிர்த்து தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாதிட்ட வழக்குரைஞர் ராக்கேஷ் திவேதி, “வேட்பாளர் பற்றிய விவரத்தை அறிவது ஒரு பகுதி மட்டுமே ஆகும். வேட்பாளர் போட்டி யிடும் கட்சிக்கு நன்கொடை அளித்தது யார் என்பதை அறிவது அதைவிட முதன்மையாகும். அரசியல் கட்சிகள் யாரிடமிருந்து நன்கொடை பெற்றன என்கிற விவரத்தை அக்கட்சிகளின் வலைதளத்தில் வெளியிட வேண்டும்” என்று கூறினார்.

நடுவண் அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில், “தேர்தலில் கருப்புப் பணம் செலவழிக்கப் படுவதைத் தடுப்பதற்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது செயல்படுகிறதா? இல்லையா? என்பது பற்றி இந்தத் தேர்தல் நேரத்தில் உச்சநீதி மன்றம் தலையிடக்கூடாது. தேர்தல் முடிந்த பின்னர் இதனை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்திருந்தார். மேலும், “அரசியல் கட்சிக்கு யார் நன்கொடை அளித்தார் என்பதை அறியும் உரிமை வாக் காளர்களுக்கு இல்லை; நன்கொடை அளித்தவரின் பெயர் இரகசியத்தைக் காத்திட அரசமைப்புச் சட்டப்படி அரசுக்கு உரிமை உண்டு” என்று தலைமை வழக்கு ரைஞர் வாதிட்டார்.

இந்த வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வு ஏப்பிரல் 12 அன்று ஒரு இடைக்காலத் தீர்ப்பை அளித்தது. அதில், “நாட்டில் நியாயமான முறையில் தேர்தல் நடைமுறைகள் செயல்படுவது குறித்து தேர்தல் பத்திரத் திட்டம் அழுத்த மான சிக்கலை உண்டாக்கியிருக்கிறது. எனவே அரசியல் கட்சிகள் தாம்பெற்ற தேர்தல் பத்திரங்கள் எந்த நாளில் எந்த வங்கியின் கணக்கில் செலுத்தப்பட்டது, நன்கொடை வழங்கியவர்களின் பெயர்கள், அவர்களின் வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட விவரங்கள் கொண்ட அறிக்கையை முத்திரையிட்ட உறையில் தேர்தல் ஆணையத்திடம் மே 30-க்குள் அளிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், அந்த விவரங்களையும் வருமானவரிச் சட்டம், தேர்தல் சட்டம், வங்கிச் சட்டம் ஆகியவற்றில் செய்யப்பட்ட மாற்றங்களையும் ஒப்பிட்டு விரிவாக ஆராய்வோம் என்று கூறிய நீதிபதிகள், இறுதித் தீர்ப்புக் கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

நாடாளுமன்ற சனநாயகத்திற்கு அடிப்படையாக விளங்கும் தேர்தல் முறை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் தேர்தல் பத்திரத் திட்டம் குறித்து முன் கூட்டியே விசாரித்துத் தீர்ப்பு வழங்கி நியாயம் செய்திட உச்சநீதிமன்றம் தவறிவிட்டது. குறைந்த அளவில், தேர்தல் பத்திரத் திட்டத்துக்கு இடைக்காலத் தடைவிதித்து விட்டு, விசாரணையைத் தொடர்ந்து நடத்தியிருக்கலாம். இந்த இடைக்காலத் தீர்ப்பால் நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் பத்திரம் மூலம் கருப்புப் பணம் புழங்குவதைத் தடுக்க இயலாது.

2017-2018-ஆம் ஆண்டில் கடைசி மூன்று மாதங்களில் தேர்தல் பத்திர விற்பனை ரூ.220 கோடி ஆகும். இதில் பா.ச.க.வுக்கு ரூ.210 கோடி, காங்கிரசுக்கு ரூ.5 கோடி, மற்ற கட்சிகளுக்கு ரூ.6 கோடி அளிக்கப்பட்டுள்ளது. 2017-18-இல் பா.ச.க. பெற்ற தேர்தல் நன்கொடை ரூ.1,027 கோடி; காங்கிரசு பெற்ற நன்கொடை ரூ.197 கோடி. தேர்தல் பத்திரத் திட்டம் ஆளும் கட்சிக்கு அதிக அளவில் வெள்ளைப் பணமாகவும் கருப்புப் பணமாகவும் அளிப்பதற்கே உதவும்.

அமெரிக்காவில் தொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் நன்கொடைக்கு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தேர்தல் பத்திரம் மூலம் வரம்பின்றி எவ்வளவு தொகை வேண்டுமானாலும் தரலாம். இங்கிலாந்தில் குறிப்பிட்ட நிதி ஆதாரங்களிலிருந்து மட்டுமே அரசியல் கட்சி களுக்கு நன்கொடை வழங்க முடியும். ஒவ்வொரு காலாண்டிற்கும் அளிக்கப்பட்ட நன்கொடை விவரத் தை அரசியல் கட்சியின் பொருளாளர் வெளியிட வேண்டும். பிரான்சிலும் கனடாவிலும் தனிநபர் மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தர முடியும். அதற்கும் வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மை என்பது சனநாயகத் தின் ஆணிவேர் போன்றதாகும். வேட்பாளரின் விவரத்தை அறியும் உரிமை வாக்காளருக்கு இருப்பது போல், வேட்பாளரின் அரசியல் கட்சி பெறுகின்ற தேர்தல் நன்கொடை விவரத்தை அறியும் உரிமையும் இருக்க வேண்டும். தேர்தல் பத்திரத் திட்டம் இவற்றை மறுக்கிறது. இரகசியம் காத்தல் என்கிற பெயரால் கார்ப்பரேட்டு நிறுவனங்களின் கருப்புப் பணம் தேர்தல் நிதியாக அளிக்கப் பட்டு, தேர்தல் முடிவைத் தீர்மானிப்பதுடன், அமைக்கப்படும் ஆட்சியின் கொள்கை முடிவுகளை - செயல் திட்டங்களை ஆட்டிப் படைக்கும் ஆற்றல் வாய்ந்ததாகவும் விளங்கும். எனவே சனநாயகம் காக்கப்பட தேர்தல் பத்திரத் திட்டம் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும்.

https://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-may-19/37302-2019-05-24-06-33-21

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2024 at 11:05, ஏராளன் said:

2016-17 மற்றும் 2021-22 க்கு இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ஏழு தேசியக் கட்சிகளும் 24 பிராந்தியக் கட்சிகளும் மொத்தம் ரூ.9,188 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளன.

இந்த ரூ.9,188 கோடியில் பாரதிய ஜனதா கட்சியின் பங்கு மட்டும் தோராயமாக ரூ.5272 கோடி. அதாவது தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கப்பட்ட மொத்த நன்கொடையில் 58 சதவீதத்தை பாஜக பெற்றுள்ளது.

அதே காலகட்டத்தில், தேர்தல் பத்திரங்கள் மூலம் காங்கிரஸ் தோராயமாக ரூ.952 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.767 கோடியும் பெற்றுள்ளது.

மேலே bbc என்ன எழுதியுள்ளது என்பதை படிக்காமல் @Justinகருத்து கீழே

22 hours ago, Justin said:

பிடிக்காத காங்கிரசையும், திமுகவையும் தாக்க வேண்டுமென்பதற்காக பிழையான தரவுகள் மூலம் மிக முயற்சி செய்து மிளகாய் அரைக்கிறார் பெருமாள்😂!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

மேலே bbc என்ன எழுதியுள்ளது என்பதை படிக்காமல் @Justinகருத்து கீழே

என்ன பெரும்ஸ் பிரித்தல், பின்னக் கணக்கும் அப்படி இப்பிடியா😂? பிஜேபி 58%, காங்கிரஸ் 10% சரி தானே? தோராயமாக சரி தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Cruso said:

செய்தியில் எப்போது சடடமாக்கப்பட்ட்து என்று தெளிவாக கூறி இருக்கிறார்கள். அதனை கருத்தில் கொண்டுதான் நானும் எழுதினேன். மேலதிக விளக்கம் தேவைப்படாது என்று நினைக்கிறேன். 

@cruso பூனை கண்ணை மூடினால் ..........................மேலே 2௦19 கீற்று எழுதிய கட்டுரையை படித்து விட்டு சொல்லவும் bbc தமிழ் என்பது இங்கிலாந்து மக்களின் வரிபணத்தில் ஓசியில் டெல்லிக்கு மகிடி ஊதும் கூட்டம் தங்கள் நாட்டின் ஜனநாயக கேவலம்களை பிட்டுகேடுகளை மறைக்கவே செய்வார்கள் . தடை செய்தி வந்தபின் சர்வதேச ஊடகங்கள் எப்படி கிழித்து தொங்க விடுகிறார்கள் இந்தியாவை கொஞ்சமாவது எட்டி பாருங்க .தமிழ் bbc விட கூடிய தகவல்கள் உள்ளன .

https://www.reuters.com/world/india/what-were-indias-electoral-bonds-how-did-they-power-modis-party-2024-02-16/

https://www.aljazeera.com/news/2024/2/15/what-are-electoral-bonds-the-secret-donations-powering-modis-bjp

https://www.aljazeera.com/news/2024/2/16/check-on-quid-pro-quo-will-indias-electoral-bonds-ban-hurt-modi

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு ஆதரவான அல்லது மற்றவரை மொட்டையடிக்க என்றால் bbc செய்திகள் நம்பகத்தன்மையான செய்தி இணையம் Electoral Bond சமமான பெயருடன்  அப்போது தொடங்கப்பட்ட காங்கிரசுக்கு ஆதரவாக 193௦ களிலே பாரிய நிருவன்ம்கள் நன்கொடை அளித்து உள்ளன .

@Justin @Cruso உங்க இருவருக்கும் ஆங்கிலத்தில் தேடுவது பிடிக்காத விடயம் என்பது விளங்குது அதனால் இணைக்கிறேன் .

அரசியல் கட்சிகளுக்குக் கோடி கோடியாகப் பணம் கொடுப்பது யார்? பெருமுதலாளிகள், பெரும் வணிகர்கள், பெரிய ஒப்பந்தக்காரர்கள் முதலானோர் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கின்றனர். 1930-கள் முதலே காங்கிரசுக் கட்சிக்கு பிர்லா, டாடா போன்ற முதலாளிகள் பெருந்தொகையை நன்கொடையாக அளித்து வந்தனர். அதனால், இவர்களின் பொருளியல் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் காங்கிரசுக் கட்சியில் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன.

1937-இல் பெரும்பாலான மாகாணங்களில் காங்கிரசுக் கட்சியின் தலைமையிலான ஆட்சி அமைந்த போது, ஆட்சியதி காரத்தில் முதலாளிகளின் செல்வாக்கு வளர்ந்தது. இம்முதலாளிகள் பார்ப்பன - பனியா - மார்வாரி உள்ளிட்ட மேல்சாதியினராகவே இருந்தனர். இன்றளவும் இந்தியாவில் உள்ள பெருமுதலாளிய நிறுவனங்களும் வணிகக் குழுமங்களும் இந்த மேல்சாதியினரின் ஆதிக்கதிலேயே இருக்கின்றன.

இந்தியா குடியரசானபின் 1952இல் நடந்த முதலாவது பொதுத் தேர்தலின்போதே வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது என்பது ஏற்பட்டுவிட்டது. தேர்தலில் அதிக அளவில் செலவு செய்ய வாய்ப்புள்ள கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெறக் கூடிய நிலை உண்டாயிற்று. மக்கள் நாயக ஆட்சியாக வளர வேண்டியது பணநாயகத்தின் ஆட்சியாக மாறியது. தொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்குப் பெருந்தொகையை நன்கொடையாக அளிப்பது, சனநாயக நெறிமுறைகளுக்கும் மக்களாட்சிக் கோட்பாட்டுக்கும் எதிரானதாகும் என்று எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.

இது தொடர்பாக, 1957-இல் மும்பை உயர்நீதிமன்றத் தில் வழக்குத் தொடரப்பட்டது. தலைமை நீதிபதி யாக இருந்த எம்.சி. சாக்ளா, “இது மிகப் பெரிய ஆபத்து; வேகமாக வளர்ந்து வரும் சனநாயகத்தின் குரல்வளையைக் கூட நெரித்து விடும், தொழில் நிறுவனத்தின் பங்குதாரர்கள் மட்டுமின்றி, வாக்களிக்கும் வாக்காளர்கள் கூட தொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு அளித்த நன்கொடை குறித்து அறிவது முதன்மையாகும்” என்று தீர்ப்பளித்தார், இதே போன்றதோர் தீர்ப்பை கொல்கத்தா நீதிமன்றமும் 1957-இல் வழங்கியது,

https://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-may-19/37302-2019-05-24-06-33-21

இது லூப் ஹோலா?  நலனுக்காக அரசியல் நன்கொடை எல்லா இடத்திலும் இருப்பதல்லவா? அந்த நேரம் பிஜேபி இருந்திருந்தால் காங்கிரசை விட அதிகம் கறந்திருப்பர் கார்ப்பரேட்டுகளிடம் என்பதை ஊகிக்க முடியாத அப்பாவி கோவிந்தனாக இருக்கிறீர்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

இது லூப் ஹோலா?  நலனுக்காக அரசியல் நன்கொடை எல்லா இடத்திலும் இருப்பதல்லவா? அந்த நேரம் பிஜேபி இருந்திருந்தால் காங்கிரசை விட அதிகம் கறந்திருப்பர் கார்ப்பரேட்டுகளிடம் என்பதை ஊகிக்க முடியாத அப்பாவி கோவிந்தனாக இருக்கிறீர்களே?

இங்கு இணைத்த இணைப்புகளை கூர்ந்து படித்து விட்டு கருத்துக்களை வைப்பது நல்லது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

இங்கு இணைத்த இணைப்புகளை கூர்ந்து படித்து விட்டு கருத்துக்களை வைப்பது நல்லது .

கூர்ந்து படிக்க பிபிசியை விட அதிகமாகவோ வித்தியாசமாகவோ எதுவும் இல்லை.

1930 இல் இருந்த பெருநிறுவன நன்கொடையை மோடி ரீமின் வங்கி தேர்தல் பத்திரத்தோடு ஒப்பிட வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டதெனத் தெரியவில்லை. காங்கிரசை, பிஜேபியை விட மோசமாகக் காட்ட வேண்டிய அவசரம் என நினைக்கிறேன்.

இனியாவது கருத்துகளை சும்மா எழுதாமல், செய்தியையொட்டி எழுதுங்கள் - வாசகர்கள், பதிலிறுப்போரின் நேரம் மிச்சமாகும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Justin said:

என்ன இடம் விளங்கவில்லை என்று எழுதுங்கள் மற்றபடி எழுந்தமானமா திமுகாவை யும் காங்கிரசையும் எதிர்க்கிறேன் அர்த்தமற்ற கருத்துக்களை வைப்பதை தவிர்த்து ஆக்கபூர்வமாக கருத்துக்களை வையுங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

அந்த நேரம் பிஜேபி இருந்திருந்தால் காங்கிரசை விட அதிகம் கறந்திருப்பர் கார்ப்பரேட்டுகளிடம் என்பதை ஊகிக்க முடியாத அப்பாவி கோவிந்தனாக இருக்கிறீர்களே?

ஓம் நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரிதான் அதிகம் கறந்தார்கள்  பிஜேபி அதே பிஜேபி  எப்படி அப்பாவி இந்திய ஜனம்களை மடையர்களாக்கியது என்ற கதையையும் சொல்லவா ?

RKW Developers கதை 1993-ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர், ‘நிழலுலக தாதா’ என்று அழைக்கப்படும் தாவூத் இப்ராகிம். இவரின் நெருங்கிய உதவியாளர் இக்பால் மேமன் என்ற இக்பால் மிர்ச்சி.இவரிடமிருந்து அவரின் நிறுவனம்தான்  ஆர்கேடபிள்யு (RKW)எனும் நிறுவனத்திடம் இருந்து பிஜேபி 2014 - 2015ஆம் ஆண்டில்  10 கோடி ரூபாய் நன்கொடை யாக இதே தேர்தல் பத்திர முறை  மூலம் பெற்றுள்ளார்கள் எப்படி கதை இந்தியா எனும் நாட்டை தீவிரவாதம் மூலம் அழிக்கும் திவிரவாதிகளிடமே தேர்தலுக்குரிய நிதியை பெற்று ஆட்சி  அமைப்பவர்கள் நாட்டுக்கு எவ்வளவு விசுவாசமாக இருப்பார்கள் ?

மேல் உள்ள கதைகள் தமிழ் bbc ஏன் போடுவதில்லை என்பதில் இருந்தே தமிழ் bbc யாருக்கு ஊது குழல் என்பதை தெரிந்து கொள்ளனும் . இப்ப யார் அப்பாவி கோயிந்து ?😆

சமிபத்தில் தமிழ் நாட்டு அரசியல் சீமான் கட்சியினர் வீடுகளில் nia  சோதனை போட்டார்களே அவசர அவசரமாக என்னத்துக்கு >?😀😀

இன்னும் நான் காங்கிரஸ் கதைக்கு வரவில்லை நேரம் கிடைக்கும்போது 

மிக முக்கியமானது மேல் உள்ளவைகளை படித்து நான் யாருக்கும் ஆதரவானவன் என்ற முடிவை எடுக்கவேண்டாம் அவைகள் செய்திகள் அவ்வளவே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, பெருமாள் said:

தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை, 1930 இல் இருந்து 2014/2015 இற்கு முன்னேறியிருக்கிறியள், மகிழ்ச்சி😂! ஆனால், அதுவும் தவறு தான்.

நீங்களே இணைத்த றொய்ற்றர்ஸ் கட்டுரையின் வரைபை உங்களுக்கு வாசிக்கத் தெரியவில்லை, இந்த இலட்ணத்தில் மற்றவனுக்கு ஆங்கில மொழி புரியவில்லை என்ற நக்கல் வேற! இதைத் தான் சொல்வது: தெரியாதவனும் தேடாதவனும் தெனாவெட்டாகத் திரிய, விளங்கிக் கொண்டவன் வெட்கி நிற்க வேண்டிய கலிகாலமெண்டு😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Justin said:

நீங்களே இணைத்த றொய்ற்றர்ஸ் கட்டுரையின் வரைபை உங்களுக்கு வாசிக்கத் தெரியவில்லை, இந்த இலட்ணத்தில் மற்றவனுக்கு ஆங்கில மொழி புரியவில்லை என்ற நக்கல் வேற! இதைத் தான் சொல்வது: தெரியாதவனும் தேடாதவனும் தெனாவெட்டாகத் திரிய, விளங்கிக் கொண்டவன் வெட்கி நிற்க வேண்டிய கலிகாலமெண்டு😎

வாசிக்க தெரியவில்லை என்பதை உங்களுக்கு விளங்கியது போல் இங்கே விளக்கினால் நல்லது 

47 minutes ago, Justin said:

தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை, 1930 இல் இருந்து 2014/2015 இற்கு முன்னேறியிருக்கிறியள், மகிழ்ச்சி😂! ஆனால், அதுவும் தவறு தான்.

என்ன தவறு என்று விளக்கினால் நல்லது 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

@Justin @Cruso உங்க இருவருக்கும் ஆங்கிலத்தில் தேடுவது பிடிக்காத விடயம் என்பது விளங்குது அதனால் இணைக்கிறேன் .

3 hours ago, Justin said:

நீங்களே இணைத்த றொய்ற்றர்ஸ் கட்டுரையின் வரைபை உங்களுக்கு வாசிக்கத் தெரியவில்லை, இந்த இலட்ணத்தில் மற்றவனுக்கு ஆங்கில மொழி புரியவில்லை என்ற நக்கல் வேற! இதைத் தான் சொல்வது: தெரியாதவனும் தேடாதவனும் தெனாவெட்டாகத் திரிய, விளங்கிக் கொண்டவன் வெட்கி நிற்க வேண்டிய கலிகாலமெண்டு😎

உங்களுக்கு ஆங்கிலம்  வாசிக்க தெரியவில்லை என்று எங்கும் கூறவில்லை கவனியுங்கள் பிடிக்காத விடயம் என்று மட்டுமே எழுதி உள்ளேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

@Justin @Cruso உங்க இருவருக்கும் ஆங்கிலத்தில் தேடுவது பிடிக்காத விடயம் என்பது விளங்குது அதனால் இணைக்கிறேன் .

நான் தமிழ் ஈழத்தில் சீவிக்கிறேன். அதுக்கு ஆங்கிலத்தில் தேட வேண்டும்? நீங்கள் ஆங்கிலேயர் , ஆங்கிலேயர் நாட்டில் வசிக்கிறீர்க்ள் உங்களுக்கு ஆங்கிலம் விளங்கும். எனக்கு தேடவும் பிடிக்காது, ஆங்கிலமும் விளங்காது. நன்றி. 

10 hours ago, பெருமாள் said:

@cruso பூனை கண்ணை மூடினால் ..........................மேலே 2௦19 கீற்று எழுதிய கட்டுரையை படித்து விட்டு சொல்லவும் bbc தமிழ் என்பது இங்கிலாந்து மக்களின் வரிபணத்தில் ஓசியில் டெல்லிக்கு மகிடி ஊதும் கூட்டம் தங்கள் நாட்டின் ஜனநாயக கேவலம்களை பிட்டுகேடுகளை மறைக்கவே செய்வார்கள் . தடை செய்தி வந்தபின் சர்வதேச ஊடகங்கள் எப்படி கிழித்து தொங்க விடுகிறார்கள் இந்தியாவை கொஞ்சமாவது எட்டி பாருங்க .தமிழ் bbc விட கூடிய தகவல்கள் உள்ளன .

பூனை கண்ணை மூடினால் உலகமிருந்து விட்ட்டதென்று நினைக்குமாம். நாங்கள் ஒன்றும்  பூனைகள் இல்லை. புலிகள். விளங்கினாள் சரிதான்.

எனக்கு ஆங்கிலம் புரியாததினால் அதனை மொழி பெயர்த்து அனுப்புங்கள். அப்போதாவது விளங்குதா எண்டு பார்ப்பம். 

Edited by Cruso
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் பத்திரம்: அவகாசம் கேட்ட எஸ்.பி.ஐ - தேர்தலுக்கு முன் ஊழலை மறைக்கும் முயற்சி என குற்றச்சாட்டு

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்பிஐ, உச்சநீதிமன்றத்திடம் கூடுதல் கால அவகாசம் கேட்டது ஏன், அதற்குள் நடந்துவிடும் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 மார்ச் 2024
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் அளிக்குமாறு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா திங்கட்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது.

இந்தச் செயல்முறை 'மிகவும் நேரத்தை எடுத்துக்கொள்ளும்' பணி என்று கூறிய எஸ்பிஐ கால அவகாசத்தை நாடியது. ஆனால் ஜூன் 30ஆம் தேதிக்குள் நாட்டில் மக்களவை தேர்தல் முடிந்துவிடும்.

தேர்தல் பத்திரம் அரசமைப்பிற்கு விரோதமானது என்று கூறி உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட பிரிவு கடந்த மாதம் அதை ரத்து செய்தது. ஏப்ரல் 12, 2019 முதல் அன்று வரையில் விற்கப்பட்ட பத்திரங்களின் விவரத்தை 2024 மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்குமாறு தேர்தல் பத்திரங்களை விற்க அங்கீகரிக்கப்பட்ட ஒரே வங்கியான பாரத ஸ்டேட் வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேர்தல் பத்திரங்களைப் பெயர் குறிப்பிடாமல் வைத்திருப்பது தகவல் அறியும் உரிமை மற்றும் பிரிவு 19 (1) (ஏ) ஆகியவற்றை மீறுவதாகும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் வேறு சில ஏற்பாடுகளைச் செய்யும் முறையை ஊக்குவிக்க முடியும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அப்போது கூறியிருந்தார்.

பத்திரங்கள் பற்றிய தகவலைத் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் மார்ச் 31ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும். தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு நிதி வழிமுறை.

இது ஒரு உறுதிமொழிப் பத்திரம் போன்றது. இதை இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் இருந்து வாங்கலாம். தாங்கள் விரும்பும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தனது பெயரைக் குறிப்பிடாமல் நன்கொடை அளிக்கலாம்.

மோதி அரசு 2017இல் தேர்தல் பத்திர திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டம் 2018 ஜனவரி 29ஆம் தேதி அரசால் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்பிஐ, உச்சநீதிமன்றத்திடம் கூடுதல் கால அவகாசம் கேட்டது ஏன், அதற்குள் நடந்துவிடும் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எஸ்பிஐ என்ன சொன்னது?

’ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா’ இது தொடர்பாக திங்கள்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது.

நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாகக் கடைப்பிடிக்க விரும்புவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இருப்பினும் தரவுகளை டிகோடிங் செய்வது மற்றும் அதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் அதைப் பூர்த்தி செய்வதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. தேர்தல் பத்திரங்களை வாங்குபவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்கக் கடுமையான வழிகள் பின்பற்றப்பட்டுள்ளன. இப்போது நன்கொடையாளர்கள் பற்றிய தகவல்களையும் அவர்கள் எவ்வளவு தொகைக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கினார்கள் என்ற தகவலையும் பொருத்திப் பார்ப்பது ஒரு சிக்கலான செயல்முறை என்று அது குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிக்கை 2018 ஜனவரி 2ஆம் தேதி வெளியிடப்பட்டது என்று வங்கி தெரிவித்துள்ளது. இந்த அறிவிக்கை 2018ஆம் ஆண்டு மத்திய அரசால் தயாரிக்கப்பட்ட தேர்தல் பத்திரத் திட்டம் தொடர்பானது.

அங்கீகரிக்கப்பட்ட வங்கி, எல்லா சூழ்நிலைகளிலும் தேர்தல் பத்திரம் வாங்குபவரின் தகவல்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று அதன் விதி 7 (4)இல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றம் இந்தத் தகவலைக் கேட்டாலோ அல்லது குற்றவியல் வழக்கில் புலனாய்வு அமைப்புகள் இந்தத் தகவலைக் கேட்டாலோ மட்டுமே வாங்குபவரின் அடையாளத்தைப் பகிர முடியும்.

“தேர்தல் பத்திரம் வாங்குபவர்களின் அடையாளத்தை ரகசியமாக வைத்திருக்கும் வகையில் பத்திரங்களின் விற்பனை மற்றும் அதைப் பணமாக்குவது தொடர்பான விரிவான நடைமுறையை வங்கி தயாரித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகளில் இவை பின்பற்றப்படுகின்றன," என்று வங்கி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்பிஐ, உச்சநீதிமன்றத்திடம் கூடுதல் கால அவகாசம் கேட்டது ஏன், அதற்குள் நடந்துவிடும் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"எங்கள் எஸ்ஓபியின் பிரிவு 7.1.2இல் தேர்தல் பத்திரத்தை வாங்கும் நபரின் கேஒய்சி தகவல்களை சிபிஎஸ் (கோர் பேங்கிங் சிஸ்டம்) இல் உள்ளிடக்கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில் கிளையில் விற்கப்படும் தேர்தல் பத்திரங்களின் மைய தரவு ஒரே இடத்தில் இல்லை. அதாவது வாங்கியவரின் பெயர், பத்திரத்தை வாங்கிய தேதி, வழங்கப்பட்ட கிளை, பத்திரத்தின் விலை மற்றும் பத்திரத்தின் எண் போன்ற விவரங்கள். இந்தத் தரவு எந்த மைய அமைப்பிலும் இல்லை,” என்று வங்கி தெரிவித்தது.

"பத்திரம் வாங்குபவர்களின் அடையாளம் ரகசியமாக இருப்பதை உறுதி செய்வதற்காக, பத்திர வழங்கல் தரவு மற்றும் பத்திரத்தைப் பணமாக்கிய தரவு ஆகிய இரண்டும் தனித்தனி இடங்களில் பராமரிக்கப்படுகின்றன மற்றும் எந்த மைய தரவுத்தளமும் பராமரிக்கப்படவில்லை."

”தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்ட கிளைகளில் அதை வாங்கியவர்களின் தகவல்கள் சீல் செய்யப்பட்ட கவரில் வைக்கப்படும். பின்னர் இந்த சீல் செய்யப்பட்ட கவர்கள் மும்பையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் பிரதான கிளைக்குக் கொடுக்கப்படும்.”

மைய தரவு இல்லை

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்பிஐ, உச்சநீதிமன்றத்திடம் கூடுதல் கால அவகாசம் கேட்டது ஏன், அதற்குள் நடந்துவிடும் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

“ஒவ்வொரு அரசியல் கட்சியும் அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகளில் ஏதேனும் ஒன்றில் கணக்கு வைத்திருக்க வேண்டும். இந்தக் கணக்கில் மட்டுமே அந்தக் கட்சி பெற்ற தேர்தல் பத்திரங்களை டெபாசிட் செய்து பணமாக்க முடியும். பணமாக்கலின்போது, அசல் பத்திரம், பே-இன் ஸ்லிப் ஆகியவை சீல் செய்யப்பட்ட கவரில் மும்பையில் உள்ள எஸ்பிஐ கிளைக்கு அனுப்பப்படும்," என்று வங்கி குறிப்பிட்டது.

"அத்தகைய சூழ்நிலையில், இரண்டு தகவல் தொகுப்புகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்தனியாகச் சேமிக்கப்பட்டன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது அவற்றைப் பொருத்துவது, அதிக நேரம் தேவைப்படும் பணியாக இருக்கும். பத்திரங்களை யார் வாங்கினார்கள் என்பது பற்றிய தகவலை வழங்க ஒவ்வொரு பத்திரத்தின் வெளியீட்டு தேதியுடன் நன்கொடையாளர் வாங்கிய தேதியைப் பொருத்த வேண்டும்”.

''இது ஓரிடத்தின் தகவலாக இருக்கும். அதாவது பத்திரம் வழங்கப்பட்டதா, யார் வாங்கினார்கள் என்ற தகவல் இருக்கும். இரண்டாவது தகவல் தொகுப்பு பின்னர் வரும். அதாவது இந்தப் பத்திரங்களை அரசியல் கட்சி அதன் அங்கீகரிக்கப்பட்ட கணக்கில் பணமாக்கியிருப்பது தொடர்பான தகவல்கள். பின்னர் வாங்கப்பட்ட பத்திரங்கள் பற்றிய தகவலை பணமாக்கப்பட்ட பத்திரங்கள் பற்றிய தகவலுடன் நாங்கள் பொருத்த வேண்டும்."

கால அவகாசத்தை நீட்டிப்பதற்கு ஆதரவாக வாதிட்ட எஸ்பிஐ, “எல்லா இடங்களில் இருந்தும் தகவல்களைப் பெறுவது மற்றும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்தில் உள்ள தகவல்களைப் பொருத்துவது என்பது நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயலாக இருக்கும். தகவல்கள் வெவ்வேறு இடங்களில் சேமிக்கப்பட்டுள்ளன," என்று கூறியது.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்பிஐ, உச்சநீதிமன்றத்திடம் கூடுதல் கால அவகாசம் கேட்டது ஏன், அதற்குள் நடந்துவிடும் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கடந்த 2019ஆம் ஆண்டில், தேர்தல் பத்திரத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள்.

"பத்திர எண் போன்ற சில தகவல்கள் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வாங்குபவரின் பெயர், கேஒய்சி போன்ற பிற விவரங்கள் ஆவண வடிவில் சேமிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் பத்திரங்களை வாங்குபவர்களின் அடையாளம் எந்த வகையிலும் வெளிப்படுத்தப்படக்கூடாது என்பதே எங்கள் நோக்கம்.”

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. “ஒவ்வொரு கட்டத்தின் முடிவிலும், பணமாக்கப்பட்ட பத்திரங்கள் சீல் செய்யப்பட்ட உறைகளில் வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கிளைகளால் மும்பை பிரதான கிளையிடம் ஒப்படைக்கப்படும். இரண்டு வெவ்வேறு தரவுத் தொகுப்புகள் இருப்பதால் நாங்கள் 44,434 செட் தகவல்களை டிகோட் செய்ய வேண்டும், பொருத்திப் பார்த்து அவற்றை ஒப்பிட வேண்டும்," என்று வங்கி கூறியது.

"எனவே பிப்ரவரி 15ஆம் தேதி தீர்ப்பில் நிர்ணயம் செய்யப்பட்ட மூன்று வார கால அவகாசம், முழு செயல்முறையையும் முடிக்கப் போதுமானதாக இருக்காது. மேலும் உத்தரவைக் கடைப்பிடிக்க எங்களுக்குக் கூடுதல் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறோம்," என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் வரை கால அவகாசம் கேட்டு எஸ்பிஐ தாக்கல் செய்த மனுவை சிலர் விமர்சித்து வருகின்றனர். நாட்டில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலைக் கருத்தில் கொண்டு இவ்வாறு செய்யப்படுகிறது என்பது அவர்களது வாதம்.

'தேர்தலுக்கு முன் ஊழலை மறைக்க முயற்சி'

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்பிஐ, உச்சநீதிமன்றத்திடம் கூடுதல் கால அவகாசம் கேட்டது ஏன், அதற்குள் நடந்துவிடும் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"பத்திரங்கள் வாங்கப்பட்டது மற்றும் அதைப் பணமாக்கியது ஆகிய இரண்டு தகவ்ல்களுமே சீல் செய்யப்பட்ட உறைகளில் மும்பை கிளையில் உள்ளன. இந்த விவரம் வங்கி சமர்ப்பித்துள்ள வாக்குமூலத்தில் உள்ளது. எனவே வங்கி உடனே இந்தத் தகவல்களை ஏன் வெளியிட முடியாது?" என்று ஆர்டிஐ ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ், ’எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், "22,217 பத்திரங்களை வாங்கியவர்களின் விவரங்களை, பணமாக்கல் விவரங்களுடன் பொருத்த நான்கு மாத கால அவகாசம் தேவை என்று வங்கி கூறுவது முட்டாள்தனமானது,” என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நன்கொடையாளர்களின் தகவல்களைத் தெரிவிக்க எஸ்பிஐ, தேர்தலுக்குப் பிறகு வரை கால அவகாசம் கேட்பது, ’தேர்தலுக்கு முன்பு வரை மோதியின் உண்மையான முகத்தை மறைக்கும் கடைசி முயற்சி’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்பிஐ, உச்சநீதிமன்றத்திடம் கூடுதல் கால அவகாசம் கேட்டது ஏன், அதற்குள் நடந்துவிடும் தேர்தல்

பட மூலாதாரம்,SCREENGRAB

“நன்கொடை வியாபாரத்தை மறைக்க நரேந்திர மோதி தனது முழு பலத்தையும் பயன்படுத்தியுள்ளார். தேர்தல் பத்திரங்கள் குறித்த உண்மையைத் தெரிந்து கொள்வது நாட்டு மக்களின் உரிமை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில் இந்தத் தகவலை தேர்தலுக்கு முன் பகிரங்கப்படுத்தக் கூடாது என்று எஸ்பிஐ ஏன் விரும்புகிறது?” என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரே கிளிக்கில் பெறக்கூடிய தகவல்களுக்காக ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் கேட்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் இருக்கிறது. நாட்டின் ஒவ்வொரு சுதந்திர அமைப்பும் 'மோதானி குடும்பமாக' மாறி அவரது ஊழலை மறைக்க முயல்கின்றன. தேர்தலுக்கு முன் மோதியின் ’உண்மையான முகத்தை’ மறைக்க இது ‘கடைசி முயற்சி’ என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்பிஐயின் மனு குறித்து அதிருப்தி தெரிவித்த சிபிஐஎம் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி "இது நீதியைக் கேலி செய்வதாகும். மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வையும் மோதியையும் காப்பாற்றவே எஸ்.பி.ஐ கூடுதல் காலஅவகாசம் கேட்கிறதா?” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தேர்தல் பத்திரங்கள் குறித்துப் பல செய்தியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் எஸ்பிஐயின் இந்தத் தேர்தல் பத்திரங்களில் ஒரு ரகசிய எண் இருப்பதாகவும், அதன் மூலம் அவற்றை அடையாளம் காண முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்பிஐ, உச்சநீதிமன்றத்திடம் கூடுதல் கால அவகாசம் கேட்டது ஏன், அதற்குள் நடந்துவிடும் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த அறிக்கையின் இணைப்பைப் பகிர்ந்த சீதாராம் யெச்சூரி, “இப்படி இருக்கும் பட்சத்தில் எஸ்பிஐ ஏன் கூடுதல் அவகாசம் கோருகிறது. இது ஆளும் பாஜகவை பாதுகாப்பதற்கான தெளிவான முயற்சியாகத் தெரிகிறது," என்று எழுதியுள்ளார்.

“எதிர்பார்த்தபடியே மோதி அரசு எஸ்பிஐ மூலம் மனு தாக்கல் செய்து தேர்தல் பத்திரம் வாங்குவோர் குறித்த தகவல்களை வெளியிட தேர்தல் முடியும் வரை அவகாசம் கோரியுள்ளது. இந்தத் தகவல் இப்போது வெளிவந்தால் லஞ்சம் கொடுத்த பலர் பற்றியும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளின் விவரங்களும் அம்பலமாகும்” என்றார் உச்ச நீதிமன்றத்தின் பிரபல மற்றும் மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண்.

ஓய்வு பெற்ற கமடோர் லோகேஷ் பத்ரா ஒரு நன்கு அறியப்பட்ட ஆர்டிஐ ஆர்வலர். அவர் தேர்தல் பத்திரங்களின் வெளிப்படைத்தன்மைக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

“கடந்த 2017-2018ஆம் ஆண்டில், பத்திரங்களின் விற்பனை மற்றும் பணமாக்கல் நடவடிக்கையை நிர்வகிக்கத் தனிப்பயனாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை எஸ்பிஐ நிறுவியது. 2019 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரை மொத்தம் 22217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டன.

விற்கப்பட்ட 22,217 பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்குவது எஸ்பிஐக்கு கடினமாக இருக்கக்கூடாது,” என்று வங்கியின் மனு குறித்து அவர் தனது ’எகஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/crg9zy7dwwno

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் பத்திரம்: எஸ்பிஐ மார்ச் 12-க்குள் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்பிஐ, உச்சநீதிமன்றத்திடம் கூடுதல் கால அவகாசம் கேட்டது ஏன், அதற்குள் நடந்துவிடும் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 மார்ச் 2024
புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் அளிக்குமாறு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா திங்கட்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது.

இந்தச் செயல்முறை 'மிகவும் நேரத்தை எடுத்துக்கொள்ளும்' பணி என்று கூறிய எஸ்பிஐ கால அவகாசத்தை நாடியது. ஆனால் ஜூன் 30ஆம் தேதிக்குள் நாட்டில் மக்களவை தேர்தல் முடிந்துவிடும்.

இந்நிலையில், கால நீட்டிப்பு கோரிய எஸ்பிஐ-இன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், மார்ச் 12ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திர விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. அதோடு இதை மீறினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

மேலும், பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பிக்கும் தகவல்களை வரும் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

என்ன நடந்தது?

தேர்தல் பத்திரங்களைப் பெயர் குறிப்பிடாமல் வைத்திருப்பது தகவல் அறியும் உரிமை மற்றும் பிரிவு 19 (1) (ஏ) ஆகியவற்றை மீறுவதாகும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

முன்னதாக, அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் வேறு சில ஏற்பாடுகளைச் செய்யும் முறையை ஊக்குவிக்க முடியும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியிருந்தார்.

பத்திரங்கள் பற்றிய தகவலைத் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் மார்ச் 13ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு நிதி வழிமுறை.

இது ஒரு உறுதிமொழிப் பத்திரம் போன்றது. இதை இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் இருந்து வாங்கலாம். தாங்கள் விரும்பும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தனது பெயரைக் குறிப்பிடாமல் நன்கொடை அளிக்கலாம்.

மோதி அரசு 2017இல் தேர்தல் பத்திர திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டம் 2018 ஜனவரி 29ஆம் தேதி அரசால் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்பிஐ, உச்சநீதிமன்றத்திடம் கூடுதல் கால அவகாசம் கேட்டது ஏன், அதற்குள் நடந்துவிடும் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எஸ்பிஐ என்ன சொன்னது?

’ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா’ இது தொடர்பாக திங்கள்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது.

நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாகக் கடைப்பிடிக்க விரும்புவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இருப்பினும் தரவுகளை டிகோடிங் செய்வது மற்றும் அதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் அதைப் பூர்த்தி செய்வதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. தேர்தல் பத்திரங்களை வாங்குபவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்கக் கடுமையான வழிகள் பின்பற்றப்பட்டுள்ளன. இப்போது நன்கொடையாளர்கள் பற்றிய தகவல்களையும் அவர்கள் எவ்வளவு தொகைக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கினார்கள் என்ற தகவலையும் பொருத்திப் பார்ப்பது ஒரு சிக்கலான செயல்முறை என்று அது குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிக்கை 2018 ஜனவரி 2ஆம் தேதி வெளியிடப்பட்டது என்று வங்கி தெரிவித்துள்ளது. இந்த அறிவிக்கை 2018ஆம் ஆண்டு மத்திய அரசால் தயாரிக்கப்பட்ட தேர்தல் பத்திரத் திட்டம் தொடர்பானது.

அங்கீகரிக்கப்பட்ட வங்கி, எல்லா சூழ்நிலைகளிலும் தேர்தல் பத்திரம் வாங்குபவரின் தகவல்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று அதன் விதி 7 (4)இல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றம் இந்தத் தகவலைக் கேட்டாலோ அல்லது குற்றவியல் வழக்கில் புலனாய்வு அமைப்புகள் இந்தத் தகவலைக் கேட்டாலோ மட்டுமே வாங்குபவரின் அடையாளத்தைப் பகிர முடியும்.

“தேர்தல் பத்திரம் வாங்குபவர்களின் அடையாளத்தை ரகசியமாக வைத்திருக்கும் வகையில் பத்திரங்களின் விற்பனை மற்றும் அதைப் பணமாக்குவது தொடர்பான விரிவான நடைமுறையை வங்கி தயாரித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகளில் இவை பின்பற்றப்படுகின்றன," என்று வங்கி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்பிஐ, உச்சநீதிமன்றத்திடம் கூடுதல் கால அவகாசம் கேட்டது ஏன், அதற்குள் நடந்துவிடும் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"எங்கள் எஸ்ஓபியின் பிரிவு 7.1.2இல் தேர்தல் பத்திரத்தை வாங்கும் நபரின் கேஒய்சி தகவல்களை சிபிஎஸ் (கோர் பேங்கிங் சிஸ்டம்) இல் உள்ளிடக்கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில் கிளையில் விற்கப்படும் தேர்தல் பத்திரங்களின் மைய தரவு ஒரே இடத்தில் இல்லை. அதாவது வாங்கியவரின் பெயர், பத்திரத்தை வாங்கிய தேதி, வழங்கப்பட்ட கிளை, பத்திரத்தின் விலை மற்றும் பத்திரத்தின் எண் போன்ற விவரங்கள். இந்தத் தரவு எந்த மைய அமைப்பிலும் இல்லை,” என்று வங்கி தெரிவித்தது.

"பத்திரம் வாங்குபவர்களின் அடையாளம் ரகசியமாக இருப்பதை உறுதி செய்வதற்காக, பத்திர வழங்கல் தரவு மற்றும் பத்திரத்தைப் பணமாக்கிய தரவு ஆகிய இரண்டும் தனித்தனி இடங்களில் பராமரிக்கப்படுகின்றன மற்றும் எந்த மைய தரவுத்தளமும் பராமரிக்கப்படவில்லை."

”தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்ட கிளைகளில் அதை வாங்கியவர்களின் தகவல்கள் சீல் செய்யப்பட்ட கவரில் வைக்கப்படும். பின்னர் இந்த சீல் செய்யப்பட்ட கவர்கள் மும்பையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் பிரதான கிளைக்குக் கொடுக்கப்படும்.”

மைய தரவு இல்லை

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்பிஐ, உச்சநீதிமன்றத்திடம் கூடுதல் கால அவகாசம் கேட்டது ஏன், அதற்குள் நடந்துவிடும் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

“ஒவ்வொரு அரசியல் கட்சியும் அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகளில் ஏதேனும் ஒன்றில் கணக்கு வைத்திருக்க வேண்டும். இந்தக் கணக்கில் மட்டுமே அந்தக் கட்சி பெற்ற தேர்தல் பத்திரங்களை டெபாசிட் செய்து பணமாக்க முடியும். பணமாக்கலின்போது, அசல் பத்திரம், பே-இன் ஸ்லிப் ஆகியவை சீல் செய்யப்பட்ட கவரில் மும்பையில் உள்ள எஸ்பிஐ கிளைக்கு அனுப்பப்படும்," என்று வங்கி குறிப்பிட்டது.

"அத்தகைய சூழ்நிலையில், இரண்டு தகவல் தொகுப்புகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்தனியாகச் சேமிக்கப்பட்டன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது அவற்றைப் பொருத்துவது, அதிக நேரம் தேவைப்படும் பணியாக இருக்கும். பத்திரங்களை யார் வாங்கினார்கள் என்பது பற்றிய தகவலை வழங்க ஒவ்வொரு பத்திரத்தின் வெளியீட்டு தேதியுடன் நன்கொடையாளர் வாங்கிய தேதியைப் பொருத்த வேண்டும்”.

''இது ஓரிடத்தின் தகவலாக இருக்கும். அதாவது பத்திரம் வழங்கப்பட்டதா, யார் வாங்கினார்கள் என்ற தகவல் இருக்கும். இரண்டாவது தகவல் தொகுப்பு பின்னர் வரும். அதாவது இந்தப் பத்திரங்களை அரசியல் கட்சி அதன் அங்கீகரிக்கப்பட்ட கணக்கில் பணமாக்கியிருப்பது தொடர்பான தகவல்கள். பின்னர் வாங்கப்பட்ட பத்திரங்கள் பற்றிய தகவலை பணமாக்கப்பட்ட பத்திரங்கள் பற்றிய தகவலுடன் நாங்கள் பொருத்த வேண்டும்."

கால அவகாசத்தை நீட்டிப்பதற்கு ஆதரவாக வாதிட்ட எஸ்பிஐ, “எல்லா இடங்களில் இருந்தும் தகவல்களைப் பெறுவது மற்றும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்தில் உள்ள தகவல்களைப் பொருத்துவது என்பது நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயலாக இருக்கும். தகவல்கள் வெவ்வேறு இடங்களில் சேமிக்கப்பட்டுள்ளன," என்று கூறியது.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்பிஐ, உச்சநீதிமன்றத்திடம் கூடுதல் கால அவகாசம் கேட்டது ஏன், அதற்குள் நடந்துவிடும் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கடந்த 2019ஆம் ஆண்டில், தேர்தல் பத்திரத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள்.

"பத்திர எண் போன்ற சில தகவல்கள் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வாங்குபவரின் பெயர், கேஒய்சி போன்ற பிற விவரங்கள் ஆவண வடிவில் சேமிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் பத்திரங்களை வாங்குபவர்களின் அடையாளம் எந்த வகையிலும் வெளிப்படுத்தப்படக்கூடாது என்பதே எங்கள் நோக்கம்.”

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. “ஒவ்வொரு கட்டத்தின் முடிவிலும், பணமாக்கப்பட்ட பத்திரங்கள் சீல் செய்யப்பட்ட உறைகளில் வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கிளைகளால் மும்பை பிரதான கிளையிடம் ஒப்படைக்கப்படும். இரண்டு வெவ்வேறு தரவுத் தொகுப்புகள் இருப்பதால் நாங்கள் 44,434 செட் தகவல்களை டிகோட் செய்ய வேண்டும், பொருத்திப் பார்த்து அவற்றை ஒப்பிட வேண்டும்," என்று வங்கி கூறியது.

"எனவே பிப்ரவரி 15ஆம் தேதி தீர்ப்பில் நிர்ணயம் செய்யப்பட்ட மூன்று வார கால அவகாசம், முழு செயல்முறையையும் முடிக்கப் போதுமானதாக இருக்காது. மேலும் உத்தரவைக் கடைப்பிடிக்க எங்களுக்குக் கூடுதல் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறோம்," என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் வரை கால அவகாசம் கேட்டு எஸ்பிஐ தாக்கல் செய்த மனுவை சிலர் விமர்சித்து வருகின்றனர். நாட்டில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலைக் கருத்தில் கொண்டு இவ்வாறு செய்யப்படுகிறது என்பது அவர்களது வாதம்.

'தேர்தலுக்கு முன் ஊழலை மறைக்க முயற்சி'

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்பிஐ, உச்சநீதிமன்றத்திடம் கூடுதல் கால அவகாசம் கேட்டது ஏன், அதற்குள் நடந்துவிடும் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"பத்திரங்கள் வாங்கப்பட்டது மற்றும் அதைப் பணமாக்கியது ஆகிய இரண்டு தகவ்ல்களுமே சீல் செய்யப்பட்ட உறைகளில் மும்பை கிளையில் உள்ளன. இந்த விவரம் வங்கி சமர்ப்பித்துள்ள வாக்குமூலத்தில் உள்ளது. எனவே வங்கி உடனே இந்தத் தகவல்களை ஏன் வெளியிட முடியாது?" என்று ஆர்டிஐ ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ், ’எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், "22,217 பத்திரங்களை வாங்கியவர்களின் விவரங்களை, பணமாக்கல் விவரங்களுடன் பொருத்த நான்கு மாத கால அவகாசம் தேவை என்று வங்கி கூறுவது முட்டாள்தனமானது,” என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நன்கொடையாளர்களின் தகவல்களைத் தெரிவிக்க எஸ்பிஐ, தேர்தலுக்குப் பிறகு வரை கால அவகாசம் கேட்பது, ’தேர்தலுக்கு முன்பு வரை மோதியின் உண்மையான முகத்தை மறைக்கும் கடைசி முயற்சி’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்பிஐ, உச்சநீதிமன்றத்திடம் கூடுதல் கால அவகாசம் கேட்டது ஏன், அதற்குள் நடந்துவிடும் தேர்தல்

பட மூலாதாரம்,SCREENGRAB

“நன்கொடை வியாபாரத்தை மறைக்க நரேந்திர மோதி தனது முழு பலத்தையும் பயன்படுத்தியுள்ளார். தேர்தல் பத்திரங்கள் குறித்த உண்மையைத் தெரிந்து கொள்வது நாட்டு மக்களின் உரிமை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில் இந்தத் தகவலை தேர்தலுக்கு முன் பகிரங்கப்படுத்தக் கூடாது என்று எஸ்பிஐ ஏன் விரும்புகிறது?” என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரே கிளிக்கில் பெறக்கூடிய தகவல்களுக்காக ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் கேட்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் இருக்கிறது. நாட்டின் ஒவ்வொரு சுதந்திர அமைப்பும் 'மோதானி குடும்பமாக' மாறி அவரது ஊழலை மறைக்க முயல்கின்றன. தேர்தலுக்கு முன் மோதியின் ’உண்மையான முகத்தை’ மறைக்க இது ‘கடைசி முயற்சி’ என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்பிஐயின் மனு குறித்து அதிருப்தி தெரிவித்த சிபிஐஎம் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி "இது நீதியைக் கேலி செய்வதாகும். மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வையும் மோதியையும் காப்பாற்றவே எஸ்.பி.ஐ கூடுதல் காலஅவகாசம் கேட்கிறதா?” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தேர்தல் பத்திரங்கள் குறித்துப் பல செய்தியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் எஸ்பிஐயின் இந்தத் தேர்தல் பத்திரங்களில் ஒரு ரகசிய எண் இருப்பதாகவும், அதன் மூலம் அவற்றை அடையாளம் காண முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்பிஐ, உச்சநீதிமன்றத்திடம் கூடுதல் கால அவகாசம் கேட்டது ஏன், அதற்குள் நடந்துவிடும் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த அறிக்கையின் இணைப்பைப் பகிர்ந்த சீதாராம் யெச்சூரி, “இப்படி இருக்கும் பட்சத்தில் எஸ்பிஐ ஏன் கூடுதல் அவகாசம் கோருகிறது. இது ஆளும் பாஜகவை பாதுகாப்பதற்கான தெளிவான முயற்சியாகத் தெரிகிறது," என்று எழுதியுள்ளார்.

“எதிர்பார்த்தபடியே மோதி அரசு எஸ்பிஐ மூலம் மனு தாக்கல் செய்து தேர்தல் பத்திரம் வாங்குவோர் குறித்த தகவல்களை வெளியிட தேர்தல் முடியும் வரை அவகாசம் கோரியுள்ளது. இந்தத் தகவல் இப்போது வெளிவந்தால் லஞ்சம் கொடுத்த பலர் பற்றியும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளின் விவரங்களும் அம்பலமாகும்” என்றார் உச்ச நீதிமன்றத்தின் பிரபல மற்றும் மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண்.

ஓய்வு பெற்ற கமடோர் லோகேஷ் பத்ரா ஒரு நன்கு அறியப்பட்ட ஆர்டிஐ ஆர்வலர். அவர் தேர்தல் பத்திரங்களின் வெளிப்படைத்தன்மைக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

“கடந்த 2017-2018ஆம் ஆண்டில், பத்திரங்களின் விற்பனை மற்றும் பணமாக்கல் நடவடிக்கையை நிர்வகிக்கத் தனிப்பயனாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை எஸ்பிஐ நிறுவியது. 2019 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரை மொத்தம் 22217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டன.

விற்கப்பட்ட 22,217 பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்குவது எஸ்பிஐக்கு கடினமாக இருக்கக்கூடாது,” என்று வங்கியின் மனு குறித்து அவர் தனது ’எகஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/crg9zy7dwwno

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடபாவிகளா

இந்த தேர்தலால ஒழுங்கா ஐபிஎல் லும் நடந்தபாடில்லை.

கடைசியில் தேர்தலும் நடக்காது போல இருக்கே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் பத்திர விவரங்களை வழங்கியது எஸ்பிஐ - இதனால் பாஜகவுக்கு என்ன சிக்கல் ஏற்படும்?

தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம்,ANI

கட்டுரை தகவல்
  • எழுதியவர், உமங் பொத்தார்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 12 மார்ச் 2024, 12:47 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை அளிக்க பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) கூடுதல் அவகாசம் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து இன்று (மார்ச் 12-ஆம் தேதி) மாலைக்குள் தேர்தல் பத்திரங்கள் வாங்குவது தொடர்பான தகவல்களை எஸ்பிஐ அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி எஸ்பிஐ தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை தங்களிடம் வழங்கியுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தனது அதிகாரப்பூர்வமான எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வெளிப்படைத்தன்மைக்கு ஆதரவான பலர் வரவேற்றுள்ளனர். தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல் வெளியான பிறகு, அரசியல் கட்சிகளின் நிதியுதவி குறித்து தெரியவரும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம்,X/SPOKESPERSONECI

பாஜகவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

தேர்தல் பத்திர விவரங்களை எஸ்பிஐ வெளியிட்டால் பாஜகவுக்கு என்ன சிக்கல் ஏற்படும்?

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

எஸ்பிஐ வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

தேர்தல் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மைக்கு ஆதரவாக இருக்கும் அஞ்சலி பரத்வாஜ், “எஸ்பிஐ உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பின்பற்றக் கூடாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை, ஏனெனில் அவர்களிடம் முழுமையான தரவு உள்ளது. தேர்தலுக்கு முன்பு இந்தத் தரவை வழங்க எஸ்பிஐ விரும்பவில்லை என்று தெரிகிறது,” என்றார்.

"இப்படிப்பட்ட சூழ்நிலையில், எஸ்பிஐ ஏன் தரவை கொடுக்க விரும்பவில்லை, யார் தடுக்கிறார்கள், எஸ்பிஐ எதை மறைக்கிறது, யாருக்காக மறைக்கிறது என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான்.

"தேர்தல் பத்திரங்களில் அரசியல் கட்சிகள், குறிப்பாக ஆளும் கட்சிகள் பெரும் பங்கைப் பெறும். தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகபட்சமாக பாஜக பணம் பெற்றுள்ளது என்பது உறுதி.

"தேர்தல் பத்திரங்கள் பாஜகவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, 2017-18 மற்றும் 2022-23-க்கு இடையில் பாஜக சுமார் ரூ.6,566 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களைப் பெற்றுள்ளது. இந்த காலகட்டத்தில், ரூ.9,200 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன,” என்றார்.

அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் நன்கொடை அளிக்கும் போது, நன்கொடைக்கு ஈடாக சில நன்மைக்காக அவ்வாறு செய்திருக்கலாம் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.

அஞ்சலி பரத்வாஜ் கூறும்போது, “ஆளும் கட்சிக்கு நன்கொடை வழங்கும்போது, ஏதோ ஒரு நம்பிக்கையை மனதில் வைத்துதான் கொடுக்கப்படுகிறது. நாம் பணத்தை நன்கொடையாக வழங்கினால், அரசாங்கத்தின் முடிவுகள் மற்றும் கொள்கைகளில் செல்வாக்கு செலுத்த முடியும் என்று நன்கொடையாளர் நினைக்கிறார்” என தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "இது நிறைய விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும். எந்த ஆதாயமும் பெறுவது ஊழலுக்கு மிகப்பெரிய காரணம், யாருடைய நிறுவனம் ஒப்பந்தத்தைப் பெறுகிறது? என்ன கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன? அந்தக் கொள்கைகள் சில நிறுவனங்களுக்குப் பலன் தருகிறதா? அந்த நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆளும் கட்சிக்கு பணம் கொடுத்துள்ளனவா? என்பதெல்லாம் தெரியவரும்" என்றார்.

அவர் கூறுகையில், "சில நிறுவனங்களுக்கு எதிராக ஏதேனும் ஒருசட்ட முகமையில் வழக்கு இருந்திருக்கிறதா? நன்கொடை வழங்கிய பிறகு அந்நிறுவனம் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனரா? இப்படி பல விஷயங்கள் வெளிவரும்” என்றார்.

தேர்தல் பத்திர விவகாரம் குறித்து பத்திரிகையாளர் நிதின் சேதி கூறுகையில், "நமக்கு ஏற்கனவே தெரிந்த தகவல்கள் இதன்மூலம் உறுதிப்படுத்தப்படும். அதாவது, இந்த திட்டத்தின் மிகப்பெரிய பயனாளிகள் பாஜக தான் என்பது உறுதியாகும்," என்றார்.

இந்த தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தவுடன், எதிர்க்கட்சிகளும் தங்கள் சொந்த நலனுக்காக அதைப் பயன்படுத்த முயற்சிக்கும் என்று நிதின் சேதி நம்புகிறார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைதளமான ‘எக்ஸ்’ பக்கத்தில், “இந்திய வரலாற்றில் தேர்தல் பத்திரங்கள் மிகப்பெரிய ஊழலாக இருக்கப் போகிறது, இதில் ஊழல் தொழிலதிபர்களின் தொடர்பை அம்பலப்படுத்துவதன் மூலம் நரேந்திர மோதி அரசின் உண்மையான முகத்தை நாட்டிற்கு வெளிப்படுத்தும்" என பதிவிட்டிருந்தார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, பாஜக தலைவர் பிருத்விராஜ் ஹரிசந்தன் பிடிஐ செய்தி முகமையிடம், "தேர்தல் பத்திரங்கள் அரசியல் ஊழலைக் குறைத்துள்ளதா அல்லது அதிகரித்ததா என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும். இதை நீதிமன்றமே மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது எனது தனிப்பட்ட வேண்டுகோள்," என்றார்.

நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

தேர்தல் பத்திர விவரங்களை எஸ்பிஐ வெளியிட்டால் பாஜகவுக்கு என்ன சிக்கல் ஏற்படும்?

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

எஸ்பிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே.

எஸ்பிஐ கடந்த மார்ச் 4-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவில், தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை அளிக்க ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் கோரியிருந்தது எஸ்பிஐ.

கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி அளித்த தீர்ப்பில், எஸ்பிஐ தேர்தல் பத்திரங்களை யார் வாங்கினார்கள், யார் பணமாக்கினார்கள் என்பது பற்றிய தகவல்களை மார்ச் 6-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

எஸ்பிஐ தனது மனுவில், தேர்தல் பத்திரங்களை வழங்குவது மற்றும் பணமாக்குவது தொடர்பான தரவு இரண்டு வெவ்வேறு இடங்களில் உள்ளன என்று கூறியிருந்தது.

இந்த தரவுகள், தனது மைய தரவுத்தளத்தில் இல்லை என்றும் எஸ்பிஐ கூறியிருந்தது. இந்த செயல்முறை 'அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால்' கால அவகாசம் கேட்டது எஸ்பிஐ.

ஒவ்வொரு பத்திரத்திலும் ஒரு தனிப்பட்ட எண் கொடுக்கப்பட்டுள்ளது, அதை புற ஊதா ஒளியில் படிக்க வேண்டும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

அதன் பின்னரே பத்திரம் குறித்து தெரியவரும். இதைத் தவிர, அதை வாங்கியவர் யார் என்பதை அறிய வேறு எந்த அடையாளமும் இல்லை என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

பத்திரங்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் டிஜிட்டல் வடிவில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை வாங்கியவர்கள் பற்றிய தகவல்கள் ஆவணங்கள் வடிவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இரண்டையும் இணைக்க அதிக நேரம் எடுக்கும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 2019 மற்றும் பிப்ரவரி 2024-க்கு இடையில் 22,217 பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன, அவற்றின் தகவல்கள் பொருந்த வேண்டும்.

நீதிமன்றம் என்ன கூறியுள்ளது?

தேர்தல் பத்திர விவரங்களை எஸ்பிஐ வெளியிட்டால் பாஜகவுக்கு என்ன சிக்கல் ஏற்படும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

எஸ்பிஐயின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இந்த இரண்டு தகவல்களையும் இணைக்க வேண்டும் என்று எஸ்பிஐயிடம் நீதிமன்றம் கூறவில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இரண்டு வகையான தகவல்களை மட்டுமே வழங்க வேண்டும் என்று எஸ்பிஐக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முதலாவதாக, பத்திரம் எப்போது வாங்கப்பட்டது, வாங்குபவரின் பெயர் மற்றும் வாங்கிய ஒவ்வொரு பத்திரத்தின் விலை என்ன என்பதையும் இரண்டாவதாக எந்தக் கட்சிக்கு எவ்வளவு பத்திரங்களை பெற்றன, பத்திரங்களை பெற்ற தேதி என்ன மற்றும் பத்திரங்களின் மதிப்பு என்ன ஆகிய தகவல்களை உச்ச நீதிமன்றம் கேட்டது.

இந்த தகவல் எஸ்பிஐயிடம் உள்ளது, எனவே தாமதமின்றி தேர்தல் ஆணையத்துடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நீதிமன்றம் கூறியது.

எஸ்பிஐயும் இதை ஏற்றுக்கொண்டது, ஆனால் தகவலை வழங்க இன்னும் மூன்று வாரங்கள் கோரியது. ஆனால் அந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

ஏப்ரல் 12, 2019 அன்று வழங்கப்பட்ட உத்தரவில், ஒவ்வொரு தேர்தல் பத்திரத்திற்கும் நன்கொடை அளிப்பவர் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், அந்த பத்திரத்தின் மதிப்பு என்ன, எந்த தேதியில் எந்த கணக்கில் திரும்பப் பெறப்பட்டது என்பதை தெரிவிக்கவும் செப்டம்பர் 2023-இல் உத்தரவிடப்பட்டது. இந்தத் தகவலைத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அளிக்குமாறு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இதுதவிர, மார்ச் 12-ஆம் தேதிக்குள் தகவல்களை சமர்ப்பிக்காவிட்டால், வேண்டுமென்றே உத்தரவை மீறுவதாகக் கருதி எஸ்பிஐ மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பிஐ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரிடம் நீதிமன்றம் கூறியது.

விசாரணையின் போது, இந்த தாமதத்திற்கு எஸ்பிஐ-யையும் நீதிமன்றம் கண்டித்தது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “கடந்த 26 நாட்களில் இந்த தகவல்களை இணைப்பது தொடர்பாக எவ்வளவு வேலை செய்தீர்கள்? இதை ஏன் உங்கள் மனுவில் குறிப்பிடவில்லை? இந்த தகவல் பிரமாண பத்திரத்தில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று கேட்டார்.

நீதிமன்றத்தின் இந்தக் கேள்விக்கு எஸ்பிஐ வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள் குறித்த தகவல்களை தகவல்களை வழங்குவதில் வங்கி தவறு செய்யாமல் இருக்க தான் கால அவகாசம் கேட்பதாக சால்வே வாதிட்டபோது, நீதிபதி சஞ்சீவ் கன்னா, "இது நாட்டின் நம்பர்-1 வங்கி, இதை எப்படி கையாள்வது என எஸ்பிஐ-க்கு தெரியும் என நம்புகிறோம்" என்றார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் விளைவு என்ன?

தேர்தல் பத்திர விவரங்களை எஸ்பிஐ வெளியிட்டால் பாஜகவுக்கு என்ன சிக்கல் ஏற்படும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெளிப்படைத்தன்மையை ஆதரிப்பவர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தீபக் குப்தா ஒருமுறை தேர்தல் பத்திர வழக்கை விசாரித்தார். முடிவு வந்த பிறகு, “மார்ச் 12-ஆம் தேதி மாலைக்குள் தகவல் கொடுக்க வேண்டும் என்று எஸ்பிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார்.

தகவல்களை இணைக்க வேண்டும் என்ற எஸ்பிஐயின் வாதம் முற்றிலும் அபத்தமானது என்றும், தகவல் தராமல் அதை மறைக்க நினைக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

ஜனநாயக உரிமைகளுக்கான அரசு சாரா அமைப்பின் (ADR) ஜக்தீப், இது ஒரு முக்கியமான உத்தரவு என்று கூறினார். தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் இந்த அமைப்பும் மனு தாக்கல் செய்திருந்தது.

"ஒன்று நன்கொடையாளர்கள் குறித்த தகவல்கள், மற்றொன்று பத்திரங்களிலிருந்து பெறப்பட்ட பணம் குறித்த தகவல்கள் என தனித்தனி பட்டியல்கள் இருக்கும். ஆனால் இது புதிய தகவல்களை வெளிப்படுத்தும்," என்று அவர் கூறினார்.

"தனிப்பட்ட பட்டியல்களில் தேதி போன்ற பல அடையாளம் காணும் அம்சங்கள் இருக்கும், ஏனெனில் பத்திரங்கள் 15 நாட்களுக்குள் பணமாக்கப்பட வேண்டும்," என்று அவர் கூறினார். எனவே, எந்த ஒரு அரசியல் கட்சியும் குறிப்பிட்ட தொகைக்கான பத்திரத்தை மீட்டெடுத்திருந்தால், யார் எதை மீட்டெடுத்தார்கள் என்பது குறித்துத் தெரியவரும்.

இது நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இதுகுறித்த தகவல்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் என்றும் தெரிவித்தார். எல்லா அரசியல் கட்சிகளும் யாரிடம் நன்கொடை பெற்றோம், எதற்காக நன்கொடை பெற்றோம் என்பது குறித்து அக்கறை கொள்வார்கள் என அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/c72eze21vnno

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் பத்திரங்கள்: எந்தக் கட்சி எவ்வளவு பணம் பெற்றது? பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

தேர்தல் பத்திரங்கள்: எந்தக் கட்சிக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது? பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

25 நிமிடங்களுக்கு முன்னர்

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எஸ்பிஐ தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை தங்களிடம் வழங்கியுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தனது அதிகாரப்பூர்வமான எக்ஸ் பக்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் தற்போது அந்தப் பட்டியலைத் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து எந்தெந்த கட்சிகள் ரொக்கமாக மாற்றின என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக 300 பக்கத்திற்கும் மேற்பட்ட இரண்டு பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில்,

  • முதல் பட்டியலில் பத்திரத்தை வாங்கிய நிறுவனங்களின் பெயர்கள், எந்த தேதியில் அவை வாங்கப்பட்டன, பத்திரத்தின் தொகை ஆகிய விவரங்கள் உள்ளன.
  • இரண்டாவது பட்டியலில் அவை எந்தெந்த அரசியல் கட்சிகளுக்கு எந்தத் தேதியில், எவ்வளவு தொகை வழங்கப்பட்டன என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

ff105650-e217-11ee-8bf3-195418ba9285.jpg

இந்தப் பட்டியலில் அதிகம் நிதி பெற்ற கட்சியாக இருப்பது ஆளும் பாரதிய ஜனதா கட்சி, அதற்கடுத்த இடங்களில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற காட்சிகள் உள்ளன. இந்தப் பட்டியலில் வேதாந்தா போன்ற நிறுவனங்களும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியளித்துள்ளன.

https://www.bbc.com/tamil/articles/crgvwrkledwo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் பத்திரங்களின் ரகசியங்களை உடைக்கும் எண்களை வெளியிட எஸ்.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் கெடு

எஸ்பிஐ

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தக் கட்சிக்கு யார் எவ்வளவு நன்கொடைகளை அளித்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் வகையில், தொடர்புடைய தேர்தல் பத்திரங்களின் எண்களை (எண்ணும் எழுத்தும் கொண்டது - Alphanumeric) வரும் மார்ச் 17-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 763 பேர் கொண்ட இரண்டு பட்டியல்களில், ஒன்றில் பத்திரம் வாங்கியவர்கள் பற்றிய விவரங்களும், மற்றொன்றில் அரசியல் கட்சிகள் பெற்ற பத்திரங்களின் விவரங்களும் உள்ளன.

அரசியல் சார்ந்த நன்கொடைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டது. இதன் மூலம் தேர்தல் நிதி தொடர்பான தகவல்கள் மீது போடப்பட்டிருந்த பெரும் திரை நீக்கப்பட்டுள்ளது. ஆனால் யார் எந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை அளித்தார்கள் என்பது மட்டும் இன்னும் தெரியவில்லை.

யார் யார் எவ்வளவு பத்திரம் வாங்கினார்கள், எந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை கிடைத்தது உள்ளிட்ட தகவல்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ளது. ஆனால் வாங்கிய பத்திரத்தின் பிரத்யேக எண்ணோ, பத்திரங்களை யார் பணமாக்கினார்கள் என்ற விவரமோ கொடுக்கப்படவில்லை. இந்த பிரத்யேக எண்கள் இருந்தால் மட்டுமே, யார் எந்த அரசியல் கட்சிக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள முடியும்.

ஸ்டேட் பேங் ஆப் இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி அளித்த தரவுகளின்படி, 2019 ஏப்ரல் 1 முதல் 2024 பிப்ரவரி 15 வரை ரூ.12,156 கோடி அரசியல் நன்கொடைகளாக வழங்கப்பட்டுள்ளன. பத்திரங்களை வாங்கிய உயர்மட்ட நன்கொடையாளர்கள், ரூ.5830 கோடியை வழங்கியுள்ளனர், இது மொத்த அரசியல் நன்கொடையில் 48 சதவிகிதமாகும்.

தேர்தல் பத்திர திட்டம் 2018-இல் நரேந்திர மோதி அரசால் தொடங்கப்பட்டது. இது அரசியல் நிதி பற்றிய தகவல்களில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரும் என்று கூறப்பட்டது. ஆனால், பத்திரம் வாங்கியவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பெற்ற பணம் குறித்த விவரங்களில், யார் யாருக்கு பணம் கொடுத்தார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள முடியவில்லை. எனவே, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு நிதி அளிப்பதன் பின்னணியில் உள்ள நன்கொடையாளரின் உள்நோக்கம் என்ன என்பதை அறிந்துக் கொள்ள முடியாது.

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2017 பட்ஜெட் உரையில், தேர்தல் பத்திரங்கள் தேர்தல் நிதியில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்று கூறியிருந்தார். இந்த வெளிப்படைத்தன்மை இல்லாமல், சுதந்திரமான, நேர்மையான தேர்தல்கள் சாத்தியமில்லை. ஆனால், தேர்தல் நிதி குறித்து இன்னும் முழுமையான வெளிப்படைத்தன்மை எட்டப்படவில்லை என்பதே உண்மை.

தேர்தல் பத்திர விவகாரத்தில், மனுதாரர் ஏடிஆர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், 'எக்ஸ்' பக்கத்தில், "தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்திருக்கும் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களில், பத்திரங்களின் பிரத்யேக வரிசை எண்கள் குறிப்பிடவில்லை. அப்படி குறிப்பிட்டிருந்தால், யார் யாருக்காக பத்திரங்களை வாங்கினார்கள் என்ற தகவல் வெளிப்பட்டிருக்கும்.

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம்,ANI

இதற்கு பதிலளித்த ஸ்டேட் வங்கி தரப்பு, ``பிரமாணப் பத்திரத்தில் இந்த தகவல்கள் வெவ்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன’’ என்று விளக்கம் கொடுத்தது.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, இதுகுறித்து 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையில், ``எஸ்.பி.ஐ., தேர்தல் கமிஷனுக்கு அளித்துள்ள தரவுகளின் அடிப்படையில், பத்திரத்தை வாங்கியவர், எந்த கட்சிக்காக வாங்கினார் என்பதைக் கண்டுபிடிப்பது கடினம்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த தகவல்களை வழங்க ஜூன் 2024 வரை கால அவகாசம் கேட்டிருந்தது எஸ்பிஐ.

குரேஷி எழுதியிருந்த கட்டுரையில், "நாட்டு மக்கள் இந்த தகவல்களை அறிய விரும்புவதால், ஜூன் மாதத்திற்குள் முழுத் தகவல்களை வெளியிட வேண்டும் என்று எஸ்பிஐ-க்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்க வேண்டும். இது அரசாங்கத்திற்கும், இந்தியாவின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையில் ஏதேனும் தொடர்பு உள்ளதா இல்லையா என்பதை வெளிப்படுத்தும்.”

“2018 க்கு முன், இந்த விஷயத்தில் முழு ஒளிவுமறைவு இருந்தது என்பதே உண்மை. அரசியல் நிதிகள், 70 சதவீதம் பணமாக வழங்கப்பட்டது. ஆனால், 20,000 ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்தால், தேர்தல் கமிஷனில் தகவல் தெரிவிக்க வேண்டும், அந்த நிதிக்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்டது.”

“ஆனால் தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தேர்தல் நிதி பற்றிய தகவல்கள் மேலும் ரகசியமாக்கப்பட்டுள்ளது. யார் யாருக்கு நன்கொடை வழங்கினார்கள் என்று தெரியவில்லை, இங்குதான் அரசியல் கட்சிகளுக்கும், நன்கொடை வழங்கியவர்களுக்கும் தொடர்பு உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.’’ இவ்வாறு குரேஷி குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பத்திரங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அரசின் முன்னாள் நிதிச் செயலர் சுபாஷ் சந்திர கார்க், 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஊடகத்துக்கு கொடுத்தப் பேட்டியில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகள் குறித்து கேள்விகளை எழுப்பி, யார் எவ்வளவு பத்திரங்கள் வாங்கினார்கள் என்பதை மட்டுமே இது காட்டுகிறது, ஆனால் எந்த கட்சிக்காக வழங்கப்பட்டது, யாரிடம் இருந்து எவ்வளவு பணம் பெறப்பட்டது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

எஸ்பிஐயிலும் இது குறித்த தரவுகள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு தேர்தல் பத்திரத்துடன் அதனை பெற்றவர் யார் என்பதை பொருத்தி பார்ப்பது இயலாத காரியம். இவ்வாறு பொருத்தியிருக்கும் தகவல்கள் வேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறவில்லை என்றாலும், இதற்காக மூன்று மாத கால அவகாசம் கேட்டிருக்கிறது எஸ்பிஐ.

உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ பொய்யான சாக்குப்போக்கை முன்வைப்பதாக கார்க் தெரிவித்துள்ளார். கார்க் குறிப்பிடுகையில், “யார் எவ்வளவு தொகைக்கு பத்திரங்களை வாங்கினார்கள் என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. அனைத்து பத்திரங்களும் எஸ்பிஐ இடமிருந்து மட்டுமே வருவதால், யார் எந்த பத்திரத்தை வாங்கினார்கள் என்பது தெரியவில்லை. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அனைத்து பத்திரங்களையும் பார்க்க முடிந்தாலும், ஒரு குறிப்பிட்ட பத்திரத்தை யார் வாங்கினார்கள், யார் டெபாசிட் செய்தார்கள் என்பதை உங்களால் தெரிந்து கொள்ள முடியாது.” எனக் கூறியுள்ளார்.

“பத்திரம் வாங்கியவர்களையும் பணத்தை பெற்றவர்களையும் பொருத்தி தகவல் வெளியிட அதிக நேரம் தேவை என்று எஸ்பிஐ கூறுகிறது என்றால், எஸ்பிஐ அதை ஒருபோதும் செய்ய முடியாது. இது ஒரு பொய்யான சாக்கு. “

இந்த வழக்கில், மனுதாரர் ஏடிஆர் சார்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பூஷன், இந்தியன் எக்ஸ்பிரஸிடம், பத்திர எண் மற்றும் அதை வாங்கிய நபர் பற்றிய தகவல் குறித்து உச்ச நீதிமன்றத்தை அணுக முடியும் என்று கூறினார். இதன் மூலம், நன்கொடை வழங்கியவர், எந்தக் கட்சிக்காக குறிப்பிட்ட பத்திரத்தை வாங்கியுள்ளார் என்பதை அறிய முடியும்.

தேர்தல் பத்திரங்கள்

பட மூலாதாரம்,ANI

உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

தேர்தல் ஆணையம் மார்ச் 14 அன்று தனது இணையதளத்தில் தேர்தல் பத்திர விவரங்களை பொதுவில் வெளியிட்டது. 763 பக்கங்கள் கொண்ட இரண்டு பட்டியல்கள் பதிவேற்றப்பட்டன. ஒன்றில் பத்திரங்கள் வாங்கியவர்கள் பற்றிய தகவல்களும் மற்றொன்றில் அரசியல் கட்சிகள் பெற்ற பத்திரங்களின் விவரங்களும் உள்ளன.

12 ஏப்ரல் 2019 முதல் 11 ஜனவரி 2024 வரையிலான தரவுகள் வெளியிடப்பட்டன. சான்டியாகோ மார்ட்டினின் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சேவை நிறுவனம்தான் அதிகபட்சமாக தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. இந்த நிறுவனங்கள் மட்டும் ரூ. 1,368 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை வாங்கியுள்ளன. இந்த பத்திரங்கள் அக்டோபர் 21, 2020 மற்றும் ஜனவரி 24 க்கு இடையில் வாங்கப்பட்டுள்ளன.

கட்சிகளைப் பொறுத்த வரையில் பா.ஜ.க தான் அதிகபட்ச நன்கொடைகளைப் பெற்றுள்ளது. தரவுகளின்படி ரூ. 6,060 கோடி பெற்றுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது.

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, அ.தி.மு.க, பி.ஆர்.எஸ், சிவசேனா, டி.டி.பி, ஒய்.ஆர்.எஸ் காங்கிரஸ், தி.மு.க, ஜனதா தளம் எஸ், என்.சி.பி, ஜே.டி.யு மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தேர்தல் பத்திரங்களை பணமாக்கியுள்ளன.

மார்ச் 15-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் இந்த விவரங்களைப் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. அதனைத் தொடர்ந்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மார்ச் 12, 2024 அன்று உச்ச நீதிமன்றத்தில் தரவுகளைச் சமர்ப்பித்தது.

உச்ச நீதிமன்றத்தின் புதிய கெடு

தேர்தல் பத்திரங்களின் தனிப்பட்ட எண் இல்லாமல், நன்கொடைகள் யாருக்கு வழங்கப்பட்டன என்பதை இணைத்துப் பார்க்க முடியாது என்பதால், அந்தப் பத்திரங்களின் எண்களையும் சேர்த்து வரும் மார்ச் 17-ஆம் தேதிக்குள் வெளியிடுமாறு எஸ்.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறும்போது, " இந்த தகவலில் பத்திரங்களின் எண் இல்லை, எனவே முழு தகவலையும் வழங்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிமன்றம் எஸ்பிஐக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் திங்களன்று இந்த வழக்கை விசாரிக்க பட்டியலிட்டுள்ளது."

நோட்டீஸுக்கு வரும் திங்கள்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று எஸ்பிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய் கபூரிடம் நீதிமன்றம் கூறியது.

https://www.bbc.com/tamil/articles/cn0e6x0p9x4o

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.