Jump to content

பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

 

உச்ச அளவாம்

வெப்ப உயர்வு..

1.5 பாகை செல்சியஸ் தொட்டாச்சு

2040 இல் வர வேண்டியது

2023 இல் வந்தாச்சு..

பூமித் தாய்க்கும்

அடிக்குது குலப்பன்..

யாருக்கென்ன கவலை..!!

 

விண்ணில கொஞ்சம் வி(வீ)ணாகுது

நிலவில கொஞ்சம் குப்பையாகுது

உக்ரைனில் கொஞ்சம் உருகிப் போகுது

காசாவில் கொஞ்சம் கரி(ரு)கிப் போகுது

இப்படி யாகுது டொலர் கணக்கு

யாருக்கென்ன கவலை..!!

 

கார் ஓட்டமும் குறையல்ல

காற்றில கலந்த அந்த

சுவட்டுக் காபனும் குறையல்ல..

கக்கும் புகைக்கு வரிதான் வருகுது

கரியமிலையின் அளவுக்கோ வீழ்ச்சியில்லை

யாருக்கென்ன கவலை...!!

 

மின்சாரத்தில் இயக்கினால்

வரி விலக்கு என்டாங்கள்

மின்சாரத்தை பெற

இப்ப பாட்டரி கெமிக்கலுக்கு

பற்றாக்குறையாம்...

புதுக்கதையாய்

கிண்டக் கிண்ட

பாட்டரி கெமிக்கலால் பாழாகுதாம் பூமி

யாருக்கென்ன கவலை..!!

 

எங்கும் ஒரு கூட்டம்

எதிலும் வியாபாரம்

தனக்கு மட்டும் வேண்டும் இலாபம்

இதையே சிந்தனையாக்கி இருப்பதால்

பூமி தாய்க்கும் அடிக்குது குலப்பன்

யாருக்கென்ன கவலை..!!

 

எதிர்கால சந்ததியோ

தொடுதிரையில் மயங்கிக் கிடக்குது

'ரீல்' விட்டே பழகிப் போனதால்..

தொடும் தூர 

ஆபத்துப் புரியவில்லை..

யாருக்கென்ன கவலை..!!

 

இப்படியே போனால்..

பூமிக்கு அடிக்கும்

அனல் குலப்பனில்

அழியப் போவது

மொத்த உயிர்களொடு

தாமும் தான்

மனிதப் பதர்களுக்கு

புரியும் வேளை

ஆபத்து வெள்ளம்

 அணை தாண்டி ஓடி இருக்கும்..!

--------------------------------------

நெடுக்ஸ் (யாழுக்காக.. பூமி தாய் சார்ப்பாக) மாசி/2024. 

Line graph showing rolling 365 day average of global air temperatures. For the first time on record, this has passed 1.5C for the year to date. Temperatures have increased since the 1940s, where warming was around 0.2C.

 

 

  • Like 12
  • Thanks 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

விண்ணில கொஞ்சம் விணாகுது

நிலவில கொஞ்சம் குப்பையாகுது

உக்ரைனில் கொஞ்சம் உருகிப் போகுது

காசாவில் கொஞ்சம் கரிகிப் போகுது

இப்படி யாகுது டொலர் கணக்கு

யாருக்கென்ன கவலை..!!

பவுண்ஸ்சுக்கு என்னானது தம்பி?

கவிதை அருமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

பவுண்ஸ்சுக்கு என்னானது தம்பி?

கவிதை அருமை.

டொலர் தானே அண்ணா.. முந்திரிக்கொட்டை கணக்கா.. தான் தான் முதல்ல என்று நிற்குது. அதுதான். 😄

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன 1.5 பாகை செல்சியஸ் அதிகரிப்பு..?

ஆம்.. தொழில்புரட்சிக்கு முன்னைய காலத்தை விட அதன் பின் அமைந்த காலத்தில் பச்சைவீட்டு வாயுக்களின் வெளியேற்றத்தால்.. முக்கியமாக கரியமிலை வாயு எனப்படும் காபனீரொக்சைட்  (முக்கியமாக சுவட்டு எரிபொருள் பாவனையால் வெளியேறுவது) அளவு அதிகரிப்பால்.. பூமி வெப்பமடைதல் அதிகரித்து வருகிறது. இந்த அதிகரிப்பானது 1.5 பாசை செல்சியஸை தாண்டினால்.. அதன் விளைவு பூமியில் மீள முடியாத அளவுக்கு போகலாம் என்ற எச்சரிக்கைகளை விஞ்ஞானிகள் பன்னெடுங்காலமாகவே வலியுறுத்தி வருகின்றனர்.

அப்போ.. அந்த 1.5 பாகை செல்சியஸ் இப்ப அதிகரிச்சிட்டுதா..?

ஆம். 2023 இல் இது பதிவு செய்யப்பட்டிருக்குது. ஆனால்.. இந்த அதிகரிப்பு நிரந்தரமா இல்லையா என்பதை எனி வரும் கால கணிப்புக்கள் தான் சொல்ல வேண்டும். ஆனாலும் கடந்த.. 120,000 ஆண்டு கால பூமியின் வரலாற்றில் 2023இல் தான் ஓர் ஆண்டுக்கான சராசரி பூமியின் வெப்பநிலை இந்த அதிகரிப்பைக் கண்டுள்ளது. 

சரி இதனால் நமக்கென்ன..?!

நமக்கு பல பிரச்சனைகள் வரும்.

பூமியில் வரட்சி அளவு அதிகரிக்கும். உணவு பயிர்களின் உற்பத்தி குறையும். நுளம்பு போன்ற நோய் பரப்பு பூச்சிகளின் பரவல் எல்லை அதிகரிக்கும்.. புயல்களின் உருவாக்கம் அதிகரிக்கும்.. கடல் மட்டம் இருப்பை விட அதிகரிக்கும்.. துருவ பனியின் உருகும் வேகம் அதிகரிக்கும்.. பஞ்சம் பட்டினி..நோய் தாக்கங்கள் அதிகரிக்கும்.. கடல்வாழ் உயிரினங்கள் அழிவுகளை சந்திக்கும்.. தரைவாழ் உயிரினங்களிலும் பாதிப்புக்கள் அதிகரிக்கும்.. இந்த நிலை தொடர்ந்தால்.. பூமி தரிசாவது நிச்சயம் ஓர் நாள் விரைந்து நிகழும். அது மனிதனால்.. ஊக்குவிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும்.

அதேன்.. இவ்வளவு காலமும் இருக்க இப்பதான் இந்தப் பிரச்சனை வருகுது..?!

இது புதிய பிரச்சனை அல்ல. ஏலவே எச்சரிக்கப்பட்ட ஓர் விடயம் தான். வளர்ந்த நாடுகளும் வளர்முக நாடுகளும்.. தங்களின் பொருண்மிய ஆதாயங்களை முன்னிலைப்படுத்தினவே தவிர.. பூமியை பாதுகாப்பதற்கான வழிகளை ஆராய்வதில்.. ஆராய்ந்து செயற்படுவதில்.. கூடிய அக்கறை செய்யாமையே இந்த விளைவு இவ்வளவு துரிதமாக வரக் காரணம். ஏலவே 2100 இல் இந்த நிலை வரும் என்று கூறப்பட்டு.. பின் 2040 என்றான போதும்.. அது 2023 இலே அடையப்பட்டிருப்பது.. தொழில்புரட்சிக்குப் பின்னான நாடுகளின் செயற்பாடுகளில் பூமியை பற்றிய அக்கறையின்மை குறைந்ததே காரணம்.

அதுக்கு நாங்க என்ன பண்ணுறது..?!

இது நாடுகளின் பிரச்சனை என்று பொதுவாக பார்க்கப்பட்டாலும்.. வாழ்ந்த வாழும்..ஒவ்வொரு மனிதனதும் பங்களிப்போடு உருவான பிரச்சனை.

எனவே காபன் வெளியீட்டு அளவை குறைப்பதன் மூலம்.. குறிப்பாக பச்சைவீட்டு வாயுங்கள்.. (கரியமிலை வாயு.. மீதேன் வாயு.. உட்பட்ட மேலும் சில வாயுங்கள்) வெளியேற்றத்தை குறைப்பதன் மூலம்.. பூமி இந்த பச்சை வீட்டு விளைவில் இருந்து மீள்கிறதா என்று நோக்கலாம்.

குறிப்பாக கோவிட் காலத்தில் நடைமுறையில் இருந்த நாட்டு முடக்கங்களால்.. சில முன்னேற்றங்கள் அவதானிக்கப்பட்டிருந்தாலும்.. கோவிட் முடக்க தளர்வின் பின்.. மீண்டும் நிலை மோசமாகியுள்ளது.

நான் இதை எப்படி குறைக்க உதவிறது..?!

பல வழிகளில் உதவலாம். குறிப்பாக சுவட்டு எரிபொருள் பாவனையை குறைப்பதன் மூலம்.. வெளியிடப்படும் மாசு வாயுங்கள் உள்ளடங்க.. கரியமிலை வாயுவின் அளவை குறைக்கலாம். இதற்கு சுவட்டு எரிபொருள் வாகனப் பாவனையை குறைக்க வேண்டும். பொதுப்போக்கு வரத்துப் பாவனையை கூட்டலாம். குறுகிய பயணங்களை நேரத்திட்டமிடலுடன் கால் நடையாகவோ.. துவிச்சக்கர வண்டி மூலமோ மேற்கொள்ளலாம். 

மீதேன் வெளியேற்றத்தைக் குறைக்கதக்க வழிமுறைகளை அல்லது காபன் மீள் கைப்பற்றல் பொறிமுறைகளை.. அல்லது காபன் சமநிலை செய்முறைகளை பின்பற்றலாம்.

அதென்ன காபன் மீள் கைப்பற்றல்.. காபன் சமநிலை..??!

சுவட்டு எரிபொருட்கள் பன்னெடுங்காலத்துக்கு முன் வளிமண்டல கரியமிலைவாயுவை கொண்டான.. காபன்பெறுதிகளால் உருவாகி.. பூமிக்குள் புதைந்து போன உக்கல்களால் உருவான ஒன்று. அதனால்  கரியமிலை வாயுவின் அளவு வளிமண்டலத்தில் படிப்படியாக குறைந்து.. . உயிரினங்கள் தொடர்ந்து.. வாழக் கூடிய வெப்பநிலையுடன் கூடிய சூழல் பூமியில் உருவானது. அதுபோக.. பூமியின் பெருமளவிலான கரியமிலைவாயு கடலோடு கலந்து கிடக்கிறது. மேலும்.. பூமி வாழ் தாவரங்களும்.. கரியமிலை வாயுவை உள்வாங்கி நமக்கு சுவாசிக்க அவசியமான பிராண வாயுவை (ஒக்சிசன்) தருகின்றன. ஆக..  வளிமண்டலத்துக்குள் மேலதிமாக விடப்பட்ட கரியமிலை வாயுவை மீள் கைப்பற்றுவதன் மூலம்.. குறிப்பாக தாவரங்களை பயன்படுத்தி.. அதன் தாக்கத்தைக் குறைக்கலாம். 

ஆனால் அதுவா நடக்குது. காடழிப்பு.. வேலி அழிப்பு.. காணிகளில் உள்ள தாவரங்கள் அழிப்பு.. என்று தாவரங்கள் வெட்டி அழிக்கப்படும் அளவுக்கு அவை மீள் உருவாக்கப்படுவதில்லை. 

அதுமட்டுமன்றி.. காபன் சமநிலை செயற்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். அதாவது எடுத்துக்காட்டாக..  நீங்கள் (ஒரு தனி மனிதன்) ஒரு நாளைக்கு பூமியில் சேர்க்கும் 400 கிராம் காபன்சார் வாயுக்களை குறிப்பாக கரியமிலை வாயு.. மீதேன்.. இதனை மீள அகத்துறிஞ்சக் கூடிய பயிர்களை வளர்த்து.. அந்தப் பயிர்களில் இருந்து உங்களுக்கு தேவையான உணவை பெறுவதும்.. மீண்டும்.. அந்த உணவின் வழி வெளியேறும் காபன் அளவை மீளக் கைப்பற்றி.. அதாவது பயிர்களை வளர்த்து.. அதனை மீண்டும் உணவாக்குவது.. இப்படி சுழற்சி முறையில் செய்துவரின்.. உங்களால்.. வளிமண்டலத்தில் சேர்க்கப்படும் நிகர காபன் சார் வாயுக்களின் அளவு பூச்சியமாக இருக்கப் பார்த்துக் கொள்ளலாம். 

இதனை ஒவ்வொரு மனிதனும் செய்யும் போது..  தனிமனிதன் ஒருவன் வெளியிடும் காபன் சார் பச்சைவீட்டு வாயுக்களின் அளவை குறைக்கலாம்.

எப்ப பார்த்தாலும் கார் கார் என்று கொண்டு நிற்கிறாங்களே.. இப்ப மின்சாரக் கார் வந்திட்டு அப்பவும் இந்த பிரச்சனை இருக்கா..??

சுவட்டு எரிபொருளை பாவிக்கும் எல்லாப் பயண முறைகளும்.. பச்சைவீட்டு வாயுக்களின் அளவை அதிகரிக்கும். அது காராக இருக்கலாம்.. விமானமாக இருக்கலாம்.. கப்பலாக இருக்கலாம். எனவே அதனை கட்டுப்படுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவுக்கு பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்தின் அளவைக் குறைக்கலாம்.

ஆம்.. மின்சாரக் கார்கள் வந்துவிட்டன தான். அவற்றால்.. நேரடியாக பச்சைவீட்டு வாயு வெளியேற்றமில்லை. ஆனால்.. மின்சாரக் காரை உற்பத்தி செய்யும் வழிமுறைகளில்.. அதன் மூலப் பொருள் தொடங்கி முடிவுப் பொருள் வரையான பல செயல்முறைகளில் இன்னும் சுவட்டு எரிபொருள் மின்சக்தியே பயன்பாட்டில் இருக்குது. குறிப்பாக நிலக்கீழ் காபன் சார் வாயுக்களை (காஸ்) எரியூட்டி பெறும் மின்சக்தி. ஆக மின்சாரக் கார்கள்.. வீதியில் புகையை கக்கவில்லை என்றாலும்.. அவை உருவான வழியெங்கும் புகை. இவை எல்லாமே கட்டுப்பாட்டுக்குள் வரனும் என்றால்.. கார்களின் பாவனையை குறைத்து.. மின்சார பொதுப்போக்குவரத்தை அதிகம் பாவிக்க வேண்டும். குறுந்தூரப் பயணங்களை நடந்து சென்று செய்வதன் மூலம்.. இந்த பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தைக் குறைக்க உதவலாம். 

ரஷ்சியாவில் இருந்தான இந்த வாயு சப்பிளை குழாய்களை தான் மேற்கு நாடுகள் உக்ரைனை கொண்டு உடைத்தன. அதனால்.. கூடிய ஆதாயம் அடைந்தது அமெரிக்காவின் சுவட்டு எரிபொருள் கம்பனிகள். அவையே இப்போ.. ஐரோப்பாவுக்கான முக்கிய சப்பிளை முகவர்கள் ஆகிவிட்டனர். உக்ரைன் சனநாயகம்.. ஆக்கிரமிப்பு.. யுத்தம் என்பது வெறும் சாட்டு தான்.. அதன் பின்னணியில் இருப்பது.. அமெரிக்காவின் சுயநலம். இந்த யுத்தத்தை நன்கு திட்டமிட்டு ஆரம்பிச்சு வைச்சதே அமெரிக்கா தான். மேலும்.. கூடிய பச்சை வீட்டு வாயுக்களை வெளியேற்றும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா.. சீனா உள்ளிட்ட உலகின் முதன்மை பொருளாதார நாடுகளே முன்னிற்கின்றன. 

சுழற்சி முறை பயிர்செய்கை உதவுமா..??!

ஆம்.. பயிர்களை உற்பத்தி செய்து விளை பொருட்களை ஈட்டிய பின்.. பயிர்க் கழிவுகளை அதே மண்ணில் இட்டு உக்க வைத்து உரமாக்கி மீள் பயிர்செய்கைக்கு அந்த உரமிட்ட வள மண்ணைப் பாவிப்பது.. கூடிய காபன் சமநிலைக்கு உதவும். இதே வீட்டில் பயன்படுத்தும் உணவுப் பொருள் கழிவுகளையும் உரமாக்கி தாவரங்களின் பயன்பாட்டிற்கு அளிப்பதன் மூலம்.. காபன் மீளக் கைப்பற்றலுக்கும்..காபன் சமநிலை செயற்பாட்டிற்கும்.. நாம் சிறுக என்றாலும் பங்களிக்காலம். இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் செய்யும் போது காபன் மீளக் கைப்பற்றல் என்பது பெருமளவில் நிகழ வாய்ப்புண்டு. இது தாவர மீதிகளை எரிப்பதனை விட கூடிய காபன் சமநிலையானது. 

இவ்வளவும் வாசிச்சாப் பிறகு உங்க மூளைக்கு ஒன்னுமே புரியாத மாதிரி இருக்கா..

அதற்கு சுருக்கமாக..

  • பூமியின் சராசரி வெப்ப அதிகரிப்பு எச்சரிக்கை எல்லை அளவான 1.5 பாகை செல்சியஸை கடந்த ஆண்டில் தாண்டி இருக்குது. இது எதிர்பார்க்கப்பட்டதை விட முன்னரே நிகழ்ந்துவிட்டது.
  • இது கரியமிலைவாயு போன்ற வாயுக்களின் அதிகரித்த வெளியேற்றத்தால் உருவாகும் பூமி வெப்பமுறுதல் என்ற பச்சைவீட்டு விளைவின் வெளிப்பாடாகும். இதில் மனித செயற்பாடுகளே முதன்மை. 
  • இதனை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.
  • அதனால்.. காபன் சார் வாயு வெளியேற்றச் செயற்பாடுகளை குறைப்போம். (சுவட்டு எரிபொருள் பாவனையை குறைக்கும் எல்லாச் செயற்பாடுகளும் இதற்கு உதவும்)
  • காபன் சார் வாயுக்களை மீள் கைப்பறல் செய்யும் செயற்பாடுகளை ஊக்குவிப்போம். (தாவரங்களை குறிப்பாக மீள் காடாகத்தை ஊக்குவிப்போம். மீள் பயிர்செய்கையை வளப்படுத்துவோம்.)
  • இது நமக்காக மட்டுமல்ல.. நம் எதிர்கால சந்ததிக்கும்.. பூமியின் வளமான எதிர்காலத்திற்குமாகும். 

உசாத்துணை:

https://www.bbc.co.uk/news/science-environment-68110310

https://www.bbc.com/future/article/20231130-climate-crisis-the-15c-global-warming-threshold-explained

https://www.ipcc.ch/sr15/

https://www.worldometers.info/co2-emissions/co2-emissions-by-country/

https://www.statista.com/chart/28725/cumulative-co2-emissions-per-country-since-1970/

மேலதிக விளக்கப் படங்கள்:

What is Greenhouse Effect & Its Gases, Causes, Solution? | Prana Air

Greenhouse effect - Energy Education

Visualizing Global Per Capita CO2 Emissions

Edited by nedukkalapoovan
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

CO2 emissions per-capita, illustration

Visualizing Global Per Capita CO2 Emissions

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது தொடருங்கள்.மற்றவர்களும் வந்து வாசிக்கட்டுமே,கருத்துக்களை பகிரட்டுமே என்பதற்காகவே சில ஆக்கங்களுக்கு அடிக்கோடு இடுவது போல் ஏதாவது எழுதுவது வழமை.✍️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பசுமையான எண்ணங்களை விதைத்திருக்கிறீங்கள்.......ஆனால் இவையெல்லாம் தனிமனித வாழ்வில் சாத்தியமா தெரியாது........அதுக்காக சும்மா வாளாவிருத்தல் கூடாது .........!  👍

நல்ல சிந்தனை நன்றி நெடுக்ஸ்......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படைப்பிற்கு நன்றி

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Battery technology க்குத் தேவையான polymetallic  nodules ஆழ்கடற்படுகையில் இருந்து அகழ்ந்து எடுக்கவேண்டும் என்று சொல்கின்றார்கள். இது வெப்ப உயர்வைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு உதவுமாம்!

spacer.png

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Polling Division ANURA KUMARA DISSANAYAKE NPP   33,026 Votes 53.00% SAJITH PREMADASA SJB   17,453 Votes 28.01% RANIL WICKREMESINGHE IND16   7,428 Votes 11.92% NAMAL RAJAPAKSA SLPP   2,245 Votes Division Results 2024 (virakesari.lk) - Ambalangoda
    • கனநேரமா ஒன்றையும் காணோம். நரி விளையாட்டைக் காட்டுதோ?
    • முயற்சிப்பதில் தவறில்லைதானே? (இந்த மூஞ்சி பரவயில்லையா?) விசுகு! பொதுவான கருத்துக்களை ( வெறும் சாதாரண கருத்து) தனிப்பட்ட ரீதியில் எடுக்க வேண்டாம், இவ்வாறான கருத்துக்கள் உங்களை பற்றி ஒரு விம்பத்தினை உருவாக்கிவிடலாம்.
    • அம்பலாங்கொடவும் இப்படித்தான் வந்திருக்கின்றது........... இதுக்கு மேலயும் என்னத்தை எண்ணுறது... இங்கே சின்னப் பிள்ளைகள் விளையாடும் லீக்கில் ஒரு அணி இன்னொரு அணிக்கு ஐந்து கோல்கள் இடைவெளிக்கு கூட அடிக்கக் கூடாது என்ற ஒரு விதிமுறை இருக்குது (Mercy Rule).......... அநுர செய்யிறது கொஞ்சம் கூட சரியே இல்லை.............🤣.  
    • இந்த நுண் அரசியல் செய்தவர்கள் ஆங்கிலக்கல்வியினை கற்றவர்கள், சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆங்கிலக்கல்வியின் மூலம் பொருளாதார வளம் பெற்று சமூக மாற்றம் ஏற்படுவதனை விரும்பவில்லை இவ்வாறான செயலை கிப்பொகிரட் என ஆங்கிலத்திலும் தமிழில் முரண்நகை (நயவஞ்சகர்) என கூறுவார்கள். அது காலனித்துவ கால பிரச்சினை, தற்போது உங்கள் சந்தேகத்திற்கு வருவோம், பிரான்ஸில் பிறக்கும் உங்கள் பேரப்பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாமல் பிரென்ச் மொழி மட்டும் தெரியும் என வைத்துக்கொள்வோம்; அவர்கள் பிரன்சு பிரஜைகளாக இருந்தாலும் அவர்களை நீங்கள் பிரென்சு இனத்தவர் என அழைப்பீர்களா அல்லது தமிழர் என அழைப்பீர்களா? அவ்வாறே நீங்க்ளே விரும்பி பிரென்சு இனத்தவர் என அழைத்தாலும் பிரென்சு இனத்தவர்கள் அதனை ஏற்றுக்கொள்வார்களா? ஒற்றுமைக்கு தடையாக இருக்கும் வேற்றுமையினை களையவேண்டும் என்பதற்காக கூறினேன், சிங்கள பெரும்பான்மையினர் எவ்வாறு இலங்கையிலுள்ள மற்ற சிறுபான்மையினரை தமக்கு சமமாக கருதவேண்டும் என விரும்புகிறோமோ அதே போல் எம்க்குள்ளும் அதே நிலைப்பாடு இருக்க வேண்டும். உண்மையில் நீங்கள் நினைப்பது போல இதனை உரிந்து கொள்வது சிக்கலான விடயம் ஒன்றும் இல்லை, எல்லோரும் சாதாரண மனிதர்கள்தான் என்ற சாதாரண புரிதலிருந்தால் போதும்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.