Jump to content

மாதகல் விகாரைக்கு அருகில் மீன்பிடிக்க தடை; நூற்றுக்கணக்கான கடற்தொழிலாளர்கள் பாதிப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   27 FEB, 2024 | 12:38 PM

image

யாழ்ப்பாணம் - மாதகல் சம்பில்துறை (ஜம்புகோள பட்டினம்) விகாரைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்படையினர் தடை விதித்துள்ளதாக அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

சம்பில்துறை பகுதியில் அமைந்துள்ள சங்கமித்த விகாரையின் பின்புறமாக உள்ள கடற்பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட வேண்டாம் என கடந்த 2013ஆம் ஆண்டு கடற்தொழிலாளர்களுக்கு கடற்படையினர் தடை விதித்த நிலையில், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, அப்பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட கடற்படையினர் அனுமதித்தனர். 

இந்நிலையில் தற்போது அப்பகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரி, விகாரையின் பின் பகுதிகளில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என அறிவித்துள்ளார். 

அத்துடன் அப்பகுதிக்கு அருகில் கடற்தொழிலாளர்கள் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டால் கடற்படையினர் அவர்களை அவ்விடத்தில் இருந்து துரத்தி வருகின்றனர் என அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

https://www.virakesari.lk/article/177414

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா கடற்படை அதிகாரிகள் இனி அதிகம் அங்கு வருவார்கள் அதனால் பூர்வீக குடிகள் ஒதுங்கியிருக்க வேணும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஏராளன் said:

Published By: DIGITAL DESK 3   27 FEB, 2024 | 12:38 PM

image

யாழ்ப்பாணம் - மாதகல் சம்பில்துறை (ஜம்புகோள பட்டினம்) விகாரைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்படையினர் தடை விதித்துள்ளதாக அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

சம்பில்துறை பகுதியில் அமைந்துள்ள சங்கமித்த விகாரையின் பின்புறமாக உள்ள கடற்பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட வேண்டாம் என கடந்த 2013ஆம் ஆண்டு கடற்தொழிலாளர்களுக்கு கடற்படையினர் தடை விதித்த நிலையில், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, அப்பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட கடற்படையினர் அனுமதித்தனர். 

இந்நிலையில் தற்போது அப்பகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரி, விகாரையின் பின் பகுதிகளில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என அறிவித்துள்ளார். 

அத்துடன் அப்பகுதிக்கு அருகில் கடற்தொழிலாளர்கள் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டால் கடற்படையினர் அவர்களை அவ்விடத்தில் இருந்து துரத்தி வருகின்றனர் என அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

https://www.virakesari.lk/article/177414

இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கலாம். இப்படி வடக்கில் நாலு விகாரைகளை கட்டி விடடால் மீன்பிடி தொழிலையே நிறுத்தி விடலாம். இந்திய இலங்கை மீனவர் பிரச்சினையும் இருக்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிவால்கள் இதை எப்படி தடுக்கப் போகிறார்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, putthan said:

புலிவால்கள் இதை எப்படி தடுக்கப் போகிறார்கள்...

நீங்கள்தான் சொல்ல வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு தடை: குற்றச்சாட்டை மறுக்கும் கடற்படை

Published By: VISHNU    29 FEB, 2024 | 01:29 AM

image

வடக்கு கடலில் தமிழ் கடற்றொழிலாளர்களின் மீன்பிடி நடவடிக்கைககளுக்கு கடற்படையினரால் தடை விதிக்கப்பட்டுகின்றமைக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என, வடபகுதி மீனவர்கள், கடற்படையினர் மீது தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டுகின்ற நிலையில், உள்ளூர் தமிழ் மீனவர்களின் தொழிலுக்கு இடையூறு விளைவிப்பதாக கடற்படை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

யாழ்ப்பாணம் - மாதகல் சம்பில்துறை (ஜம்புகோள பட்டினம்) விகாரைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்படையினர் தடை விதித்துள்ளதாக அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவிப்பதாக யாழ்ப்பாண மாவட்ட ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு தடைகளை ஏற்படுத்த கடற்படைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினரான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவிக்கின்றார்.

“என்ன அதிகாரம் இருக்கிறது? எங்கள் வாழ்வாதாரத்தை சிதைத்துத்தான் நீங்கள் விகாரைகளில் வழிபாடு நடத்தவேண்டுமா? உங்கள் அதிகாரத் திமிர்த்தனங்களை எங்கள் மக்கள் எப்போதும் அமைதியுடன் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என் நினைக்காதீர்கள்.” என யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் எம்.பி கடற்படையை எச்சரித்துள்ளார்.

சம்பில்துறை பகுதியில் அமைந்துள்ள சங்கமித்த விகாரையின் பின்புறமாக உள்ள கடற்பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட வேண்டாம் என கடந்த 2013ஆம் ஆண்டு கடற்தொழிலாளர்களுக்கு கடற்படையினரால் தடை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கும் யாழ்ப்பாணம் மாவட்ட ஊடவியலாளர்கள், பின்னர் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலையீட்டுன் அந்தத் தடை நீக்கப்பட்டதாக குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் தற்போது அப்பகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரி , விகாரையின் பின்புறத்தோடு இணைந்த கடல் பிரதேசத்தில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவித்துள்ளதாக ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

குறித்த விகாரை அமைந்துள்ள பிரதேசத்தில் பொது மக்களின் காணிகளை அபகரித்துள்ள விடுதிகளை அமைத்துள்ள கடற்படை, கடலையும் ஆக்கிரமித்து விடுதிகளை அமைக்கப்போகிறதா என முன்னாள் எம்.பி சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“விகாரைக்கு அண்மையாக, எங்கள் மக்களின் காணிகளை அத்துமீறி பிடித்த கடற்படையினர் விடுதியை அமைத்து சிங்களவர்களைத்் தங்க வைக்கின்றனர். இப்போது எங்கள் கடலையும் கையகப்படுத்தி அதிலும் விடுதி அமைக்கப்போகின்றார்களா என்ற நியாயமான சந்தேகம் எழத்தான் செய்கின்றது.”

தேசிய பாதுகாப்புக் கருதி, சட்டத்திற்கு உட்பட சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு கடற்படையினருக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், எனினும் மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளை  தடுத்து நிறுத்துவதற்கு கடற்படைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், மாதகல் சம்பில்துறை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்படையினர் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படும் விடயம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

“கடற்படை அவர்கள் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் பேச முடியும். மதம் சார்ந்து பேசுவதற்கு எந்த அனுமதியும் இல்லை அவர்கள். கடற்படை அவர்கள், தங்களுடைய தேசிய பாதுகாப்புத் தொடர்பிலான அவர்களுடைய கருத்துக்களைச் சொல்லலாமேத் தவிர, அதுவும் சட்ட ரீதியாக, அவர்களுடன் அனுகுகின்ற தரப்பின் ஊடாகத்தான் இதனை தெரிவிக்க முடியுமேத் தவிர, நேரடியாக அந்த கடற்றொழிலில் ஈடுபட்டவர்களுக்கு தெரிவிக்கமுடியாது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு கடற்பைடை ஒரு போதும் இடையூறு ஏற்படுத்துவதில்லை என, கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணம் - மாதகல் பிரதேசத்தில் இறால் பிடியில் ஈடுபட்ட சிலருக்கு முறையான அனுமதிப்பத்திரம் காணப்படவில்லை எனவும், ஆகவே அவர்களின் தொழில் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

https://www.virakesari.lk/article/177557

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/2/2024 at 16:18, putthan said:

புலிவால்கள் இதை எப்படி தடுக்கப் போகிறார்கள்...

தொடர்ந்து கருத்து எழுதுவோம்...சுறாவழி பின்னுட்டம் விடுவோம்...😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, putthan said:

தொடர்ந்து கருத்து எழுதுவோம்...சுறாவழி பின்னுட்டம் விடுவோம்...😃

நிச்சயமாக. எனக்கு தமிழ் கொஞ்சம் மட்டு. கொஞ்சம் விளக்கமாக எழுதினால் நல்லது, இல்லாவிட்ட்தால் பண்டிதரிடம் கேட்டு எழுதுங்கள். சுறாவளி.......😂

Link to comment
Share on other sites

On 28/2/2024 at 00:18, putthan said:

புலிவால்கள் இதை எப்படி தடுக்கப் போகிறார்கள்...

On 28/2/2024 at 20:31, Cruso said:

நீங்கள்தான் சொல்ல வேண்டும். 

புலிக்கான அலர்ச்சி குளிசை போட வேண்டும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

புலிக்கான அலர்ச்சி குளிசை போட வேண்டும்.

உங்களிடம் இருந்தால் அனுப்பி விடுங்கள். இங்கு இப்போது அது கிடைப்பதில்லை. 

Link to comment
Share on other sites

Just now, Cruso said:

உங்களிடம் இருந்தால் அனுப்பி விடுங்கள். இங்கு இப்போது அது கிடைப்பதில்லை. 

எங்களுக்கு அலர்ச்சி இல்லை. தேவையும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

எங்களுக்கு அலர்ச்சி இல்லை. தேவையும் இல்லை. 

உங்களுக்கு இல்லை என்றால் எங்களுக்கும் இல்லை. மீண்டும் இந்த திரியை முதலில் இருந்து வாசியுங்கள். யாருக்கு அலர்ஜி என்று விளங்கும். நன்றி. 

Link to comment
Share on other sites

3 minutes ago, Cruso said:

உங்களுக்கு இல்லை என்றால் எங்களுக்கும் இல்லை. மீண்டும் இந்த திரியை முதலில் இருந்து வாசியுங்கள். யாருக்கு அலர்ஜி என்று விளங்கும். நன்றி. 

தொடக்கத்தில் என்ன  நீங்கள் கருத்து எழுதிய காலம் தொட்டே தொடர்கிறேன். நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

தொடக்கத்தில் என்ன  நீங்கள் கருத்து எழுதிய காலம் தொட்டே தொடர்கிறேன். நன்றி வணக்கம்.

அப்படியா? அப்படியே தொடருங்கள். நன்றி வணக்கம். 😜

  • Thanks 1
Link to comment
Share on other sites

1 minute ago, Cruso said:

அப்படியா? அப்படியே தொடருங்கள். நன்றி வணக்கம். 😜

நாளை வரும் போது புதிய சிந்தனைகளுடன் வரவும்.(தயவு செய்து)😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

நாளை வரும் போது புதிய சிந்தனைகளுடன் வரவும்.(தயவு செய்து)😝

இன்றைக்கு மாத்தின்முதலாம் திகதி. எல்லாமே இன்றிலிருந்து புதிதுதான். உண்மையையே அன்றி வேறெதுவும் எழுதுவதில்லை. 😂

Link to comment
Share on other sites

Just now, Cruso said:

இன்றைக்கு மாத்தின்முதலாம் திகதி. எல்லாமே இன்றிலிருந்து புதிதுதான். உண்மையையே அன்றி வேறெதுவும் எழுதுவதில்லை. 😂

பார்க்கலாம்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Cruso said:

நிச்சயமாக. எனக்கு தமிழ் கொஞ்சம் மட்டு. கொஞ்சம் விளக்கமாக எழுதினால் நல்லது, இல்லாவிட்ட்தால் பண்டிதரிடம் கேட்டு எழுதுங்கள். சுறாவளி.......😂

எனக்கு தமிழ் மட்டு மட்டு ....தயவு செய்து எனது தமிழை அஜஸ்ட் பண்ணி வாசியுங்கோ😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nunavilan said:

பார்க்கலாம்.:)

உங்கள் வேண்டுகோளை முன்னிறுத்தி கருத்துக்கள் எழுதுவதை மட்டுறுத்தி உள்ளேன். எனக்குஇங்கு யாருடனும் கோபமோ மனஸ்தாபமோ இல்லை. சில வேளைகளில் சில தனிப்படட கருத்துக்கள் எம்மையும் எழுத தூண்டுவதால் எழுதுவதுண்டு. எப்படி இருந்தாலும் இனியும் நேரம் கிடைக்கும்போது தேவையான பதிவுகளை இடுவேன். நன்றி வணக்கம். 

  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.