Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Ist möglicherweise ein Bild von Tempel und Text „THE“

பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா?
தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய.
தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?
கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன.
இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான்.
இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்!
மத்திய தரைக்கடல், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான். பல நாடுகளையும் கைப்பற்றினான்.
கடலில் பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன் மட்டும்தான் பயன்படுத்தினான்.
பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர். உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர்.
கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார். சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில் பொருளே இல்லை.
சீனாவில் இருக்கும் கலைகள் அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான். போதிதர்மன் நினைவுக்கு வருகிறாரா?
அதுதான் உண்மை! கொலம்பஸ் கண்டறிந்தது எல்லாம் தமிழன் தொழில்நுட்பம் தான் . அதாவது, கொலம்பஸ் கண்டறிந்த வழித்தடமும், ஆமைகளின் நீரோட்ட வழித்தடமும் ஒன்றுதான்!
ஆமைகளின் உருவம் கோயிலில் அமைக்க இது மட்டுமா காரணம்? இல்லை. நம் பண்பாட்டுக்கும் ஆமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
ஆம் தமிழ் பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். விலங்குகளில் ஆமைக்கு மட்டுமே இந்த பழக்கம் உண்டு.
தான் பிறந்த இடத்துக்கு இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் செல்லும். தமிழகத்தில் மட்டுமே இந்த பண்பாடு உண்டு. தர்மம் காப்போம்
தேசம் காப்போம்.
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவ்வாறாக ஆமையில் ஏறி மட்டும் அல்ல, அயிரை மீனின் ஓட்டத்தை வைத்து தமிழர்கள் ஐரோப்பா போனதை பாடி நிற்கும் சங்க கால செய்யுள்தான் “அயிர, அயிர ஐரோப்பா” என்ற செய்யுள். இதைத்தான் பின்னாளில் வைரமுத்து கூட ஒரு பாடலில் எடுத்தாண்டிருப்பார்.  

இதே போல் தமிழர்கள் அமேரிக்கா போன போது,  அங்கே மனிதர் யாரும் இருக்கவில்லை.

தாம் ஆமையில் போய் அடைந்த கண்டம் என்பதை குறிக்கும் வகையில்,  இதை பண்டை தமிழர்கள் ஆமை- அருகா என்றே முதலில் அழைத்தனர். 

பின்னர் ஐரோப்பியர் வாயில் ஆமை-அருகா  அமெரிக்கா என மருவி விட்டது.

இதே போல ஊமல் கொட்டைகள் நிறைந்த ஒரு தீவை தமிழர்கள் ஆண்டனர்.  

இங்கே ஊமல் கொட்டை வாங்க வருவோர் “கொட்டை இருக்கா”? என கேட்டு, கேட்டு - அதுவே அந்த தீவின் பெயராகி, இப்போ கோஸ்டோரீக்கா என வழங்குகிறது. 

முன்னர் தமிழர்கள் அமேரிக்க கண்டத்தை ஆட்சி செய்த போது, அங்கே சேலம் Salem என்று ஒரு நகரை  எழுப்பினர்.  

அதே போல் நீர்வழ நாடு என்ற கருத்தில் நீர்யோகபுரம் என இருந்த நகர்தான் இன்றைய நியூயோர்க்.

இவ்வளவு ஏன் மத்திய கிழக்கில் உள்ள ஜெருசலம் கூட தமிழர் நகரமே.

எருமைகள் பல இருந்த சேலம் நகரை எரு-சேலம் என அழைத்தனர். அதுவே ரோமர் ஆட்சி காலத்தில் ஜெருசலேம் என்றாகிறது.

அதே போல் முகமது நபி கூட தமிழர்தான் -  முருகன் கந்தசாமி மகன் துரைச்சாமி என்பதே அவர் முழுப்பெயர். இதையே அவர் சுருக்கி மு.க.ம.து என ஆக்கி கொண்டார்.

இப்படி இன்னும் பல அரிய தகவல்கள் உள்ளன. நேரம் கிடைக்கும் போது பகிர்கிறேன்.

- உடான்ஸ் சாமி மூலிகை மயக்கத்தில் அருளியது-

காலம் 10/04/2024

இடம் முன்னர் இலந்தை நகர் என அழைக்கப்பட்டு, இப்போ இலண்டன் என மாறிய நகர்.

  • Like 1
  • Haha 11
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, goshan_che said:

அடப்பாவி 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய தொன்மக் கதைகளின்படி இப்புடவியை நான்கு ஆமைகள் தாங்கிக்கொண்டு இருப்பதால்தான் பூமி நிலைத்து நிற்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சால்மன் மீனும் மிகக் குறைந்த நிரோட்டங்கள் உள்ள உயரமான இடங்களில் இனப்பெருக்கம் செய்து கடலுக்கு வரும் பின் மீண்டும் அந்தப் பருவங்களில் நீர்விழ்ச்சிகளில் எல்லாம் எதிர்நீச்சலில் ஏறி  பழைய இடத்துக்கு சென்று இனபெருக்கம் செய்யும்.......! (சில இயற்கை வீடியோக்களில் பார்த்திருக்கிறேன்)......! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, கிருபன் said:

இந்திய தொன்மக் கதைகளின்படி இப்புடவியை நான்கு ஆமைகள் தாங்கிக்கொண்டு இருப்பதால்தான் பூமி நிலைத்து நிற்கின்றது.

பூமியையே தாங்கி நிற்கும் ஆமை, அந்த ஓட்டில் ஒரு படகு என சொன்னமைக்கா என்னா வாங்கு வாங்கினீங்க🤣

35 minutes ago, suvy said:

சால்மன் மீனும் மிகக் குறைந்த நிரோட்டங்கள் உள்ள உயரமான இடங்களில் இனப்பெருக்கம் செய்து கடலுக்கு வரும் பின் மீண்டும் அந்தப் பருவங்களில் நீர்விழ்ச்சிகளில் எல்லாம் எதிர்நீச்சலில் ஏறி  பழைய இடத்துக்கு சென்று இனபெருக்கம் செய்யும்.......! (சில இயற்கை வீடியோக்களில் பார்த்திருக்கிறேன்)......! 

ஓம் நானும் ஒரு அட்டன்பரோ விபரணத்தில் பார்த்துள்ளேன்.

இதே போல் ஏதோ ஒரு வகை தென்கிழக்காசிய தீவில் உள்ள சிவப்பு கலர் நண்டுகளும், இனப்பெருக்கம் செய்ய  பல தடைகளை தாண்டி தீவின் மத்திய பகுதியில் இருந்து, கடல் மீளும்.

பிற்சேர்க்கை

இது அவுசின் கிறிஸ்மஸ் தீவிலாம்

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, goshan_che said:

இங்கே ஊமல் கொட்டை வாங்க வருவோர் “கொட்டை இருக்கா”? என கேட்டு, கேட்டு - அதுவே அந்த தீவின் பெயராகி, இப்போ கோஸ்டோரீக்கா என வழங்குகிறது. 

எல்லாம் நல்லாத் தான் இருக்கு, ஆனால் இது👆 யாரும் நினைத்தே பார்க்க முடியாத படைப்பு, வாய்ப்பேயில்லை! வேற மட்டம்!😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

எல்லாம் நல்லாத் தான் இருக்கு, ஆனால் இது👆 யாரும் நினைத்தே பார்க்க முடியாத படைப்பு, வாய்ப்பேயில்லை! வேற மட்டம்!😂

இந்த தீவில் மட்டகளப்பு பக்கம் இருந்த மக்கள்தான் குடி ஏறி இருக்கவேணும், அங்கேதான் “இருக்கா” என்பதை “இரிக்கா” என சொல்வது🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 10/4/2024 at 01:11, goshan_che said:

இவ்வாறாக ஆமையில் ஏறி மட்டும் அல்ல, அயிரை மீனின் ஓட்டத்தை வைத்து தமிழர்கள் ஐரோப்பா போனதை பாடி நிற்கும் சங்க கால செய்யுள்தான் “அயிர, அயிர ஐரோப்பா” என்ற செய்யுள். இதைத்தான் பின்னாளில் வைரமுத்து கூட ஒரு பாடலில் எடுத்தாண்டிருப்பார்.  

இதே போல் தமிழர்கள் அமேரிக்கா போன போது,  அங்கே மனிதர் யாரும் இருக்கவில்லை.

தாம் ஆமையில் போய் அடைந்த கண்டம் என்பதை குறிக்கும் வகையில்,  இதை பண்டை தமிழர்கள் ஆமை- அருகா என்றே முதலில் அழைத்தனர். 

பின்னர் ஐரோப்பியர் வாயில் ஆமை-அருகா  அமெரிக்கா என மருவி விட்டது.

இதே போல ஊமல் கொட்டைகள் நிறைந்த ஒரு தீவை தமிழர்கள் ஆண்டனர்.  

இங்கே ஊமல் கொட்டை வாங்க வருவோர் “கொட்டை இருக்கா”? என கேட்டு, கேட்டு - அதுவே அந்த தீவின் பெயராகி, இப்போ கோஸ்டோரீக்கா என வழங்குகிறது. 

முன்னர் தமிழர்கள் அமேரிக்க கண்டத்தை ஆட்சி செய்த போது, அங்கே சேலம் Salem என்று ஒரு நகரை  எழுப்பினர்.  

அதே போல் நீர்வழ நாடு என்ற கருத்தில் நீர்யோகபுரம் என இருந்த நகர்தான் இன்றைய நியூயோர்க்.

இவ்வளவு ஏன் மத்திய கிழக்கில் உள்ள ஜெருசலம் கூட தமிழர் நகரமே.

எருமைகள் பல இருந்த சேலம் நகரை எரு-சேலம் என அழைத்தனர். அதுவே ரோமர் ஆட்சி காலத்தில் ஜெருசலேம் என்றாகிறது.

அதே போல் முகமது நபி கூட தமிழர்தான் -  முருகன் கந்தசாமி மகன் துரைச்சாமி என்பதே அவர் முழுப்பெயர். இதையே அவர் சுருக்கி மு.க.ம.து என ஆக்கி கொண்டார்.

இப்படி இன்னும் பல அரிய தகவல்கள் உள்ளன. நேரம் கிடைக்கும் போது பகிர்கிறேன்.

- உடான்ஸ் சாமி மூலிகை மயக்கத்தில் அருளியது-

காலம் 10/04/2024

இடம் முன்னர் இலந்தை நகர் என அழைக்கப்பட்டு, இப்போ இலண்டன் என மாறிய நகர்.

பத்திரிகைச் செய்தி 1

தமிழர் பாசறைப் பத்திரிகை  10.04.4354 திங்கட்கிழமை. 

தமிழ் பெருங்குடிகளின் தொன்மை,  அவர்களின் வரலாற்றை அமெரிக்கா, இங்கிலாந்து  உட்பட மேற்கு நாடுகள் எப்படியெல்லாம்  மறைத்து வருகின்றனர். உலகை ஆண்ட தமிழர்கள் இன்று நாடு நாடற்ற இனமாக மாற்றப்பட்டுள்ளதென்றால் அதற்கு காரணம் இந்த மேற்குலக நாடுகளே.  அவர்கள் இந்திய சிறிலங்கா நாடுகளின் மூலம் தமிழரை அழித்ததோடு அவர்கள் தொன்மைகளை மறைக்கும் கைங்கரங்களில்  ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த மேற்கு நாடுகளை மட்டுமல்ல இந்த உலகையே செல்வ செழிப்பாக்கியவர்கள்  தமிழர்களே  என்ற உண்மையை  தமிழர் வரலாறு தொடர்பாக  ஆய்வுகளை மேற்கொண்டு வரும் உடாசா கோபாலு கண்டறிந்துள்ளார்.   இற்றைக்கு 23 நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,  கோஷான் சே என்ற எமது தமிழ் பெரும்பாட்டனின்  குறிப்புகளை ஆதாரங்களை மீட்டெடுத்த  உடாசா கோபாலு அதை நூலாக உருவாக்க,   அதை மக்கள்  தூய்மைவாதக் கட்சியின் தலைமைச் செயற்பாட்டாளர் சேரமான் மக்கள் முன் வெளியிட்டு   பலத்த கைதட்டல்கள் விசிலடிகள் மத்தியில் உரையாற்றினார்.  

எமது பெரும்பாட்டன் கோஷானின்  குறிப்புகளை  இணையங்களில் இருந்து அழித்து விட அமெரிக்க ஏகாதிபத்திய   சிஐஏ  முயன்று வருவதாகவும்,  அதற்காகவே மைக்ரோசொவ்ற் நிறுவனத்துக்கு பெரும் தொகைப்பணம் கைமாறியுள்ளதான  தகவல்களை,  “தமிழ் நீ குழாய்ச் சங்கம்” என்ற   செய்தி இணையம் வெளியிட்ட வீடியோவை  மேற்கோள் காட்டி உரையாற்றிய அவர்,  கோஷானின் குறிப்புகளைப்  பாதுகாக்க அதனை PDF ஆக  பிரதியெடுத்து  தமது வரவேற்பறையில் தொங்க விட்டு,  தமிழர் பெருமையை நிலைநிறுத்த வேண்டும் என்றும்  மக்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்ததோடு அதை செய்யாமல் விட்டால் நீ தமிழனே அல்ல என்று நரம்பு புடைக்க கூறினார்.  

அத்துடன் 45 நூற்றாண்டுகளுக்கு முன்பு  புறாக்களில் மூலம் தகவல்களை பரிமாறிக்கொண்ட தமிழன்  தகவல்களை அனுப்ப புதிய முறைகளைப் பற்றி  ஆராய்ந்தான். அந்த வகையில் தகவல்களை அனுப்ப புதிய முறையை  கண்டு பிடித்த ஒரு  தமிழ் பெருமகுடிமகன் அதை சோதனை செய்வதற்காக தனது தந்தைக்கு “என்னப்பா” என்று கேட்டு தகவலை அனுப்ப,  அவரை ஏமாற்றிய அமெரிக்க நிறுவனம் அந்த தொழில்நுட்பத்தை திருடி,  என்னப்பா என்ற அழகு தமிழ் வார்ததையை திருடி WhatsApp என்று தனதாக்கி கொண்ட வரலாற்றையும் “ஏமாற்றப்பட்ட தமிழா” என்ற தலைப்பில் விடியோ வெளியிட்ட  நீ குழாய் சங்க தலைவர் சேட்டை செம்மொழியான் தெரிவித்தார்.  உடாசா கோபாலு கண்டறிந்த, எமது பெரும்பாட்டன் கோசான் சே யின் கலவெட்டுகளை ஒத்த குறிப்புக களை மறைக்க அமெரிக்க சிஐஏ யுடன் சேர்ந்து சதி செய்த பேராசிரியர் அறிவுமதியின்  முயற்சி தமிழர் வீரப்படையின் துரிதமான செயற்பாட்டால் முறியடிக்கப்பட்டது.  

பத்திரிகை 2 

 அறிவுச்சுடர் பத்திரிகை  14.04.4354 வெள்ளிக்கிழமை 

“தமிழர் பாசறை” பத்திரிகை கடந்த திங்கட்கிழமை 10.04.4354 ல்  வெளியிட்ட தகவல்களை சரிபார்தத  தமிழ் அறிவுப் பல்கலைகழக பேராசியர் அறிவுமதி   21 ம் நூற்றண்டில் வாழ்ந்த  கோஷான் சே யாழ் இணையம் என்ற இணைய இதழில்  நகைச்சுவையாக “சிரிப்போம் சிறப்போம்” என்ற தலைப்பில் வெளியிட்ட தகவல்களே அவை  என்று, தனது ஆய்வில் கண்டறியப்பட்டிருப்பதாக ஆதாரங்களுடன் தெரிவித்தார்.  அந்தப் பல்கலைக்கழக பேராசிரியர் அறிவுமதி     இலுமினாட்டி அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்பதை போளிசீலன் தனது  நீ குழாய் விடியோவில் கூறியதைத் தொடர்ந்து அந்த பேராசியர்  வீட்டுக்கு முன்னால் திரண்ட  தமிழர் வீரப்படை என்ற அமைப்பினர் ஆர்பாட்டங்களை மேற்கொண்டு அவரைத்தாக்கி  தமது இனப்பற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.  அவர ஒரு வந்தேறி என்பதையும்  வட்சப் தகவல்களை ஆதாரம் காட்டி அவர்களின் தலைவர் தெரிவித்தார்.  வீரத்தமிழர் அமைப்பின் இந்த வீரச்செயலை பல முகநூல்ப் போராளிகள்  பாராட்டி லைக்குகளை அள்ளி வழங்கியுள்ளதுடன் தூய்மைவாதக் கட்சியில் உள்ளீர் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். 

பத்திரிகைச்செய்தி 3 

பிபிசி 16.04.4354 ஞாயிற்றுக்கிழமை 

பேராசியர் அறிவுமதி தாக்கப்பட்டது தொடர்பாவும் கோஷன் சே என்ற 21 ம் நூற்றாண்டு அறிஞர் தொடர்பாகவும் ஆய்வுச்  செய்திகளை வெளியிட்ட அறிவுச்சுடர் பத்திரிகை  செய்தி ஆசிரியர் தாகப்பட்டு பத்திரிகை பிரதிகள் தெருவில் எரிக்கப்பட்டதாக காவல்துறையினிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக விசாரித்த போது  இதை செய்தவர்கள் உணர்சிவசப்பட்ட தமிழ் காவலர்கள் என்று முகநூல் போராளி ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.  இது தொடர்பாக விபரங்களை அறிய தூய்மைவாதக் கட்சி அலுவலகத்துடன் தொடர்பு பிபிசி தொடர்பு கொண்ட போதிலும் தொடர்பு கிடைக்கவில்லை.  விசாரணைகளை மேற்கொள்ள தூய்மைவாதக் கட்சி அலுவலகத்துக்கு காவல்துறை இன்பெக்டர் வந்த போது அவர்களிடம் வாக்குமூலம் அளித்த  கட்சித் தலைவர்  இதற்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும்  இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும்   அரசியலமைப்பு சட்டத்தை தான் மதிப்பதாகவும் தெரிவித்ததை தொடர்ந்து பொலிசார் அங்கிருந்து திரும்பினர் என காவல்துறை ஆணையாளர் பிபிசிக்கு தெரிவித்தார். 

(பல ஆண்டு யாழ் இணைய வாசிப்பின் Inspiration காரணமாக எழுந்த கற்பனை)

Edited by island
  • Like 1
  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, island said:

பத்திரிகைச் செய்தி 1

தமிழர் பாசறைப் பத்திரிகை  10.04.2254 திங்கட்கிழமை. 

தமிழ் பெருங்குடிகளின் தொன்மை,  அவர்களின் வரலாற்றை அமெரிக்கா, இங்கிலாந்து  உட்பட மேற்கு நாடுகள் எப்படியெல்லாம்  மறைத்து வருகின்றனர். உலகை ஆண்ட தமிழர்கள் இன்று நாடு நாடற்ற இனமாக மாற்றப்பட்டுள்ளதென்றால் அதற்கு காரணம் இந்த மேற்குலக நாடுகளே.  அவர்கள் இந்திய சிறிலங்கா நாடுகளின் மூலம் தமிழரை அழித்ததோடு அவர்கள் தொன்மைகளை மறைக்கும் கைங்கரங்களில்  ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த மேற்கு நாடுகளை மட்டுமல்ல இந்த உலகையே செல்வ செழிப்பாக்கியவர்கள்  தமிழர்களே  என்ற உண்மையை  தமிழர் வரலாறு தொடர்பாக  ஆய்வுகளை மேற்கொண்டு வரும் உடாசா கோபாலு கண்டறிந்துள்ளார்.   இற்றைக்கு 230 நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,  கோஷான் சே என்ற எமது தமிழ் பெரும்பாட்டனின்  குறிப்புகளை ஆதாரங்களை மீட்டெடுத்த  உடாசா கோபாலு அதை நூலாக உருவாக்க,   அதை மக்கள்  தூய்மைவாதக் கட்சியின் தலைமைச் செயற்பாட்டாளர் சேரமான் மக்கள் முன் வெளியிட்டு   பலத்த கைதட்டல்கள் விசிலடிகள் மத்தியில் உரையாற்றினார்.  

எமது பெரும்பாட்டன் கோஷானின்  குறிப்புகளை  இணையங்களில் இருந்து அழித்து விட அமெரிக்க ஏகாதிபத்திய   சிஐஏ  முயன்று வருவதாகவும்,  அதற்காகவே மைக்ரோசொவ்ற் நிறுவனத்துக்கு பெரும் தொகைப்பணம் கைமாறியுள்ளதான  தகவல்களை,  “தமிழ் நீ குழாய்ச் சங்கம்” என்ற   செய்தி இணையம் வெளியிட்ட வீடியோவை  மேற்கோள் காட்டி உரையாற்றிய அவர்,  கோஷானின் குறிப்புகளைப்  பாதுகாக்க அதனை PDF ஆக  பிரதியெடுத்து  தமது வரவேற்பறையில் தொங்க விட்டு,  தமிழர் பெருமையை நிலைநிறுத்த வேண்டும் என்றும்  மக்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்ததோடு அதை செய்யாமல் விட்டால் நீ தமிழனே அல்ல என்று நரம்பு புடைக்க கூறினார்.  

அத்துடன் 250 நூற்றாண்டுகளுக்கு முன்பு  புறாக்களில் மூலம் தகவல்களை பரிமாறிக்கொண்ட தமிழன்  தகவல்களை அனுப்ப புதிய முறைகளைப் பற்றி  ஆராய்ந்தான். அந்த வகையில் தகவல்களை அனுப்ப புதிய முறையை  கண்டு பிடித்த ஒரு  தமிழ் பெருமகுடிமகன் அதை சோதனை செய்வதற்காக தனது தந்தைக்கு “என்னப்பா” என்று கேட்டு தகவலை அனுப்ப,  அவரை ஏமாற்றிய அமெரிக்க நிறுவனம் அந்த தொழில்நுட்பத்தை திருடி,  என்னப்பா என்ற அழகு தமிழ் வார்ததையை திருடி WhatsApp என்று தனதாக்கி கொண்ட வரலாற்றையும் “ஏமாற்றப்பட்ட தமிழா” என்ற தலைப்பில் விடியோ வெளியிட்ட  நீ குழாய் சங்க தலைவர் சேட்டை செம்மொழியான் தெரிவித்தார்.  உடாசா கோபாலு கண்டறிந்த, எமது பெரும்பாட்டன் கோசான் சே யின் கலவெட்டுகளை ஒத்த குறிப்புக களை மறைக்க அமெரிக்க சிஐஏ யுடன் சேர்ந்து சதி செய்த பேராசிரியர் அறிவுமதியின்  முயற்சி தமிழர் வீரப்படையின் துரிதமான செயற்பாட்டால் முறியடிக்கப்பட்டது.  

பத்திரிகை 2 

 அறிவுச்சுடர் பத்திரிகை  14.04.2254 வெள்ளிக்கிழமை 

“தமிழர் பாசறை” பத்திரிகை கடந்த திங்கட்கிழமை 10.04.2254 ல்  வெளியிட்ட தகவல்களை சரிபார்தத  தமிழ் அறிவுப் பல்கலைகழக பேராசியர் அறிவுமதி   21 ம் நூற்றண்டில் வாழ்ந்த  கோஷான் சே யாழ் இணையம் என்ற இணைய இதழில்  நகைச்சுவையாக “சிரிப்போம் சிறப்போம்” என்ற தலைப்பில் வெளியிட்ட தகவல்களே அவை  என்று, தனது ஆய்வில் கண்டறியப்பட்டிருப்பதாக ஆதாரங்களுடன் தெரிவித்தார்.  அந்தப் பல்கலைக்கழக பேராசிரியர் அறிவுமதி     இலுமினாட்டி அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்பதை போளிசீலன் தனது  நீ குழாய் விடியோவில் கூறியதைத் தொடர்ந்து அந்த பேராசியர்  வீட்டுக்கு முன்னால் திரண்ட  தமிழர் வீரப்படை என்ற அமைப்பினர் ஆர்பாட்டங்களை மேற்கொண்டு அவரைத்தாக்கி  தமது இனப்பற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.  அவர ஒரு வந்தேறி என்பதையும்  வட்சப் தகவல்களை ஆதாரம் காட்டி அவர்களின் தலைவர் தெரிவித்தார்.  வீரத்தமிழர் அமைப்பின் இந்த வீரச்செயலை பல முகநூல்ப் போராளிகள்  பாராட்டி லைக்குகளை அள்ளி வழங்கியுள்ளதுடன் தூய்மைவாதக் கட்சியில் உள்ளீர் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். 

பத்திரிகைச்செய்தி 3 

பிபிசி 16.04.2254 ஞாயிற்றுக்கிழமை 

பேராசியர் அறிவுமதி தாக்கப்பட்டது தொடர்பாவும் கோஷன் சே என்ற 21 ம் நூற்றாண்டு அறிஞர் தொடர்பாகவும் ஆய்வுச்  செய்திகளை வெளியிட்ட அறிவுச்சுடர் பத்திரிகை  செய்தி ஆசிரியர் தாகப்பட்டு பத்திரிகை பிரதிகள் தெருவில் எரிக்கப்பட்டதாக காவல்துறையினிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக விசாரித்த போது  இதை செய்தவர்கள் உணர்சிவசப்பட்ட தமிழ் காவலர்கள் என்று முகநூல் போராளி ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.  இது தொடர்பாக விபரங்களை அறிய தூய்மைவாதக் கட்சி அலுவலகத்துடன் தொடர்பு பிபிசி தொடர்பு கொண்ட போதிலும் தொடர்பு கிடைக்கவில்லை.  விசாரணைகளை மேற்கொள்ள தூய்மைவாதக் கட்சி அலுவலகத்துக்கு காவல்துறை இன்பெக்டர் வந்த போது அவர்களிடம் வாக்குமூலம் அளித்த  கட்சித் தலைவர்  இதற்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும்  இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும்   அரசியலமைப்பு சட்டத்தை தான் மதிப்பதாகவும் தெரிவித்ததை தொடர்ந்து பொலிசார் அங்கிருந்து திரும்பினர் என காவல்துறை ஆணையாளர் பிபிசிக்கு தெரிவித்தார். 

(பல ஆண்டு யாழ் இணைய வாசிப்பின் Inspiration காரணமாக எழுந்த கற்பனை)

அருமை அருமை, அதுவும் அந்த தூய்மைவாத கட்சி தலைவர் கடைசியில் அடித்த அந்தர் பல்டி. டிரேட் மார்க் 😀.

16 minutes ago, island said:

அறிவுமதி

இப்படி fact check பண்ணி குட்டை உடைக்கிறார் எண்டா…..

அது அவரேதான்…சந்தேகமில்லை😀

இந்த செய்திகளில் உள்ளவை உலகில் மிக நம்பகமான ஊடகமான “டிங் டொங்” இல் விரைவாக வீடியோவாய் வந்து லைக்குகளை அள்ளும் என நினைக்கிறேன்😃.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@goshan_che நீங்கள் எனக்கு அட்லிஸ் தாங்ஸ் ஆவது பண்ணியிருக்கணும்....🤣
அது சரி ஒரு முக்கியமான ஆள் ஏன் இன்னும் உங்களுக்கு லைக்/லொள் பண்ணேல்லை எண்டதிலை எனக்கு ஏதோ சம்திங் றோங் எண்டமாதிரி தெரியுது  😄

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திடீரென்று “ஆமையின் ரகசியம்” என்று ஒரே விசயத்தை பலர் பரப்பி வருவது வேடிக்கையாக இருக்கிறது. ஒரு ஆமை சிற்பத்தின் படத்தைப் போட்டு விட்டு, “தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா? தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய. கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான். இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்! மத்திய தரைக்கடல், தென்ப்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான்……………….,” என்று கதை விடப் பட்டுள்ளது.

எந்த ஆதாரமும் இங்கு கொடுக்கப் படவில்லை.

ஆனால், இணைதளங்களிலும் பரப்ப ஆரம்பித்துள்ளனர்.

அதில் ஒன்று தான் இந்த கட்டுரை 

தயவு செய்து ஏற்றுக்கொள்ளக் கூடிய ஆதாரங்களை காட்டுங்கள் / சமர்ப்பியுங்கள் 

"அயிரை மீனின் ஓட்டத்தை வைத்து தமிழர்கள் ஐரோப்பா போனதை பாடி நிற்கும் சங்க கால செய்யுள்தான் “அயிர, அயிர ஐரோப்பா” என்ற செய்யுள்."

இது என்ன புது புரளி, அந்த சங்க இலக்கிய கவிதையை பதிவிட முடியுமா ?? 

பூகோளம் அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட தொலைக் காட்சி நிகழ்ச்சியான [தேசிய புவியியல் ஒளியலை வரிசை / நேஷனல் ஜீயோகிராபிக் தொலைகாட்சி / National Geographic channel] "மனித இனத்தின் பயணம்"  என்ற தொடரையும் , மற்றும் சங்க இலக்கியத்தின் ஆதாரங்களையும் மற்றும் உலக வரலாற்றையும் கொஞ்சம் தயவு செய்து புரட்டுங்கள் 
 
"உண்மையை அறிதல், உண்மையை நேசித்தல், உண்மையுடன் வாழ்தல், மனிதனின் முழு கடமையாகும்"

நன்றி 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"சிற்றுவேஷன் சாங்" ஒன்று கேட்போம். animiertes-gefuehl-smilies-bild-0091.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, kandiah Thillaivinayagalingam said:

"அயிரை மீனின் ஓட்டத்தை வைத்து தமிழர்கள் ஐரோப்பா போனதை பாடி நிற்கும் சங்க கால செய்யுள்தான் “அயிர, அயிர ஐரோப்பா” என்ற செய்யுள்."

இது என்ன புது புரளி, அந்த சங்க இலக்கிய கவிதையை பதிவிட முடியுமா ?? 

நீங்கள் சீரியசாக எடுத்து விட்டீர்களென தெரிகிறது. நீங்கள் கடிந்து கொள்வது போல நீரோட்டம், ஆமை, ஓசோன் வெளிவிடும் துளசிச் செடி என்று கற்பனைக் கதைகள் பரப்பும் போக்குடைய ஒரு அரசியல் தரப்பு தமிழ்நாட்டில் இருக்கிறது, அதன் தீவிர விசிறிகள் யாழில் இருக்கிறார்கள். அவர்களைக் கலாய்க்கும் ஒரு நையாண்டிப் (sarcastic) பதிவு இது. நையாண்டி விளங்க வேண்டுமானால் சுற்றி நடக்கிற சமகால நிகழ்வுகள் பற்றியும்  புரிந்து கொள்ள வேண்டுமென நினைக்கிறேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 "அவர்களைக் கலாய்க்கும் ஒரு நையாண்டிப் (sarcastic) பதிவு இது. நையாண்டி விளங்க வேண்டுமானால் சுற்றி நடக்கிற சமகால நிகழ்வுகள் பற்றியும்  புரிந்து கொள்ள வேண்டுமென நினைக்கிறேன்."

முதலில் ஒரு நபரையோ நிகழ்வையோ கேலி செய்யும் நோக்குடன் நகைச் சுவை தொனிக்கப் பதியப்பட்ட பதிவுகள் அல்லது நாட்டார் பாடல்கள் நையாண்டிப் பாடல்கள் / பதிவுகள் அல்லது கேலிப்பாடல்கள் / பதிவுகள் எனப்படும்.

நையாண்டிப் பாடல்கள் அல்லது பதிவுகள் பொதுவாக சமூக சீரமைப்பு நோக்கிலும் வளர்ச்சி நோக்கிலும், அவை மீறப்படும் போது எழும் சீற்றம் காரணமாகப் பாடப்பட்டவைகளாகக் அல்லது பதியப்படவையாக கருதப்படுகின்றன.

உதாரணமாக 

காக்கொத்தரிசாம்
கண்ணுழுத்த செத்த மீனாம்
போக்கற்ற மீரானுக்குப்
பொண்ணுமாகா வேணுமாம்.
கச்சான் அடிச்ச பின்பு
காட்டில் மரம் நின்றது போல்
உச்சியில நால மயிர்
ஓரமெல்லாம் தான் வழுக்கை

இது  பொருத்தமில்லாத திருமண சம்பந்தம் ஒன்று பேசப்படும் போது பதியப்பட்ட கேலி பாடல் 

ஆமை பதிவில் எங்கே 
எதாவது ஒன்றை கேலி செய்கிறதா ?

அல்லது 

நீங்கள் கூறியவாறு 

சுற்றி நடக்கிற சமகால நிகழ்வுகள் ஒன்றை அல்லது பலதை
குறித்துக்காட்டி கேலி செய்கிறதா ?

தேடுகிறேன் 

இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன்!!!! 

அந்த ஆமை வலைதளத்தில் பரப்பப்பட்டு 
பலர் முட்டாள்தனமாக அதை நம்பி  மீள மீள பதிவு செய்த ஒன்று !!

நான் பிழை என்றால் மன்னிக்கவும் 

நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, kandiah Thillaivinayagalingam said:

வணக்கம்,

நீங்கள் யாழுக்கு புதிது என நினைக்கிறேன்.

இதில் முதலாவது பதிவு. சீரியசாக பதியப்பட்டது. இரெண்டாவதான எனது பதிவு, முதலாவதை முற்றிலும் நையாண்டி செய்து எழுதப்பட்டது. 

ஒரு விசயம் இது நையாண்டி என்று - எழுத்தில் அறிவிப்பு போட்டு எழுதுவதில்லை. அதன் சாரம்சம், சூழமைவு விளங்கி அதை நையாண்டி என வாசிப்போர் புரிந்து கொள்வார்கள்.

அப்படி விளங்கித்தான் 11 பேர் சிரிப்புகுறி போட்டுள்ளார்கள்.

அயிர, அயிர வைத்தான் விடுங்கள், ஆமை - அருகா, கொட்டை இரிக்கா, நீர்யோக நகரம், எரு-சலேம் இவற்றை வாசித்த பின்னுமா இது நையாண்டி என்பது உங்களுக்கு விளங்கவில்லை?

12 hours ago, kandiah Thillaivinayagalingam said:

இது என்ன புது புரளி, அந்த சங்க இலக்கிய கவிதையை பதிவிட முடியுமா ?? 

வெண்நிற முன் நிரவில், அயிர மீந்தொடரில் புகுஅயிர் ஓப்பா மன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

"எந்தை அவள் ..........." [ எந்தை அவள் சிரித்து, சிந்தித்து  திருந்த ஒரு நையாண்டி பாடல்] 

காலை:

"கந்தப்பு வண்டியில் பால் விற்கிறான் 
முந்தைய கடனை பேசி வாங்கிறான்
சந்தானம் கிணற்றில் முகம் கழுவுறான் 
சிந்திய தண்ணீரை வாழைக்கு விடுறான்
செந்தணல் சூரியன் மேலே எழுகிறான் 
பந்தி பந்தியாய் பறவை பறக்குது
மந்த வெயில்  மெல்ல சுடுகுது  
எந்தன் கண்ணகி போர்வை விலத்துகிறாள்!"

நண்பகல் [மத்தியானம்]:

"சந்தியில் சத்தமிட்டு கந்தப்பு வாறான் 
கந்தை துணியுடன் சுந்தரி சமைக்கிறாள்  
சந்தனப் பொட்டு பள பளக்குது    
சந்தானம் நந்திக்கு தீபம் காட்டுறான்
செந்தாமரை கண்ணாடியில் அழகு தேடுறாள்  
வெந்திய குளம்பு  அடுப்பில் கொதிக்குது 
சிந்திய முத்துகள்  பொறுக்கி எடுத்து   
எந்தன் ஊர்வசி அரட்டை அடிக்கிறாள்!!" 

மாலை:

"தொந்தி பிள்ளையாரை விழுந்து கும்பிட்டு 
வந்தனம் கூறி வசந்தி போறாள் 
பிந்திய பகலில் சூரியன் மறைகிறான் 
சுந்தரி பிள்ளைக்கு நிலவு காட்டுறாள் 
பந்து பிடித்து செந்தாமரை துள்ளுறாள் 
சந்து பொந்துக்குள் குஞ்சுகள் போகினம் 
உந்தி ஊஞ்சலை விரைவா ஆட்டி  
எந்தன் சிந்து, பைரவி பாடுறாள்!!!" 

இரவு:

"சுந்தரி பிள்ளையை தொட்டிலில் ஆட்டுறாள் 
கந்தப்பு விராந்தையில்  பாய் விரிக்கிறான் 
வந்தோரை வசந்தி அன்பாய் கவனிக்கிறாள் 
சந்தானம் அவளுக்கு ஒத்தாசை புரிகிறான்  
செந்தாமரை மாடியில் சரித்திரம் படிக்கிறாள் 
அந்தபுரத்து ரகசியங்கள் அலசி பார்க்கிறாள்  
தந்தன தந்தன  தாளம் போட்டு 
எந்தன் மாதவி அபிநயம் பிடிக்கிறாள்!!!!"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]   

குறிப்பு: நான் விளங்கிக்கொண்ட நையாண்டி இதுதான்!! 

Edited by kandiah Thillaivinayagalingam
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, kandiah Thillaivinayagalingam said:

குறிப்பு: நான் விளங்கிக்கொண்ட நையாண்டி இதுதான்!! 

உங்களுக்கு விளங்கும் நையாண்டி இதுதான்.

நையாண்டிகள் பலவகைப்படும். 

ஆனால் ஒரு விடயம் நையாண்டியாக இருக்க,  உங்களுக்கு அது நையாண்டி என விளங்க வேண்டும் என்பது ஒரு முன் தகமை அல்லவே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

"அயிர, அயிர வைத்தான் விடுங்கள், ஆமை - அருகா, கொட்டை இரிக்கா, நீர்யோக நகரம், எரு-சலேம் இவற்றை வாசித்த பின்னுமா இது நையாண்டி என்பது உங்களுக்கு விளங்கவில்லை? "

இது முழு புளுகு என்பது புரிய யாழுக்கு புதிது , பழது தேவையில்லை 

ஆனால் 

"இவ்வாறாக ஆமையில் ஏறி மட்டும் அல்ல, அயிரை மீனின் ஓட்டத்தை வைத்து தமிழர்கள் ஐரோப்பா போனதை பாடி நிற்கும் சங்க கால செய்யுள்தான் “அயிர, அயிர ஐரோப்பா” என்ற செய்யுள். இதைத்தான் பின்னாளில் வைரமுத்து கூட ஒரு பாடலில் எடுத்தாண்டிருப்பார். "

என தொடங்கி அந்த பொய்யை எடுத்துக் காட்டி நயாண்டி செய்யத்  தவறி

அதன் தொடர்ச்சிபோல 

மேலும் மேலும் புளுகியது தான் 
அங்கு ஏற்பட்ட  தவறு என்று எண்ணுகிறேன் ?  

என்றாலும் 

"- உடான்ஸ் சாமி மூலிகை மயக்கத்தில் அருளியது-

காலம் 10/04/2024

இடம் முன்னர் இலந்தை நகர் என அழைக்கப்பட்டு, இப்போ இலண்டன் என மாறிய நகர்."

இதில் ஒரு நையாண்டி தெரிகிறது 

வாழ்த்துக்கள் !!

"ஆனால் ஒரு விடயம் நையாண்டியாக இருக்க,  உங்களுக்கு அது நையாண்டி என விளங்க வேண்டும் என்பது ஒரு முன் தகமை அல்லவே."

அதனால்தான் சொல்லுகிறேன்  

முட்டாள் கூட்டங்கள் 

அதை மேலும் 

முன்னதையின் தொடர்ச்சியாக 

பகிரத்தொடங்கும் என்று 

Edited by kandiah Thillaivinayagalingam
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, kandiah Thillaivinayagalingam said:

நீங்கள் சொல்வதிலும் ஒரு நியாயம் உண்டு. 

யாழில் பகிர்ந்த ஏப்ரல் பூல் செய்தியை இந்திய இலங்கை ஊடகங்கள் எல்லாம் காவி, இந்திய தூதரகம் மறுப்பறிக்கை விட்ட நிகழ்வு கூட முன்னர் நடந்துள்ளது.

எனக்கு ஒரே ஒரு மனக்குமுறல் மட்டுமே:

நையாண்டியாக எழுதிய என்னையே கேள்வி கேட்ட நீங்கள், முதலாம் பதிவை சீரியசாக இட்ட @குமாரசாமி அண்ணையை இன்னும் கொஞ்சம் கேட்டிருக்கலாம்😆.

பிகு

மிக குறுகிய காலத்தில் உங்கள் தமிழுக்கு நான் இரசிகனாகி விட்டேன். 

யாழில் கருத்தாளர்களை பொதுவாக இருவகை படுத்தலாம்.

1. தமிழ், தமிழன் வீரம், தொன்மை, மாண்பு என எதை சொன்னாலும் அதை உண்மை என நம்பி பகிர்ந்து, ஆதாரதோடு எடுத்து காட்டினாலும், காட்டுபவர்கள் தமிழை தரம் தாழ்த்துகிறார்கள் என முறையிடுவோர்.

2. இப்படியான பதிவுகளை நேரடியாகவும், நையாண்டியாகவும் கேள்வி கேட்போர்.

இதில் தமிழ், அதன் தொன்மை அறிந்த நீங்களும் 2ம் வகையே என்பதில் எனக்கு உண்மையில் மட்டற்ற மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, goshan_che said:

முதலாம் பதிவை சீரியசாக

சிரிப்போம் சிறப்போம் பகுதியில்தானே இருக்கின்றது. இது சீரியஸ் இல்லையே!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@goshan_che @kandiah Thillaivinayagalingam  இதில் குமாரசாமி இணைத்த முதலாவது பதிவும் முன்பு யாரோ ஒருவர் நையாண்டியாக பதிந்த பதிவாக இருக்கலாம். அது  கோஷான் கூறிய முதலாவது வகையை ஒத்த சிலரால் உண்மை என நம்பி முக நூல்களில் பகிரப்பட்டதாக இருக்கும். அது போல் கோஷானின் நையாண்டிப்பதிவும் அவ்வாறு உண்மை என நம்பி   பகிரப்படும் அளவுக்கும்  அதை நம்பும்  குறிப்பிட்ட தொகை ஆட்களும் உள்ளனர்.   

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, goshan_che said:

யாழில் பகிர்ந்த ஏப்ரல் பூல் செய்தியை இந்திய இலங்கை ஊடகங்கள் எல்லாம் காவி, இந்திய தூதரகம் மறுப்பறிக்கை விட்ட நிகழ்வு கூட முன்னர் நடந்துள்ளது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு அமைச்சுக்களும்... மறுப்பறிக்கை விட்டது. 😂

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

எல்லோருக்கும் என் நன்றிகளும் வாழ்த்துக்களும் 

வாதம் பிரதிவாதம் என்றும் உண்மையைக்  கண்டறிய நல்ல வழியே !

எனக்கு ஒரு ஆமை சம்பந்தமான தேவாரம் இப்ப ஞாபகம் வருகிறது. இது  கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவருமான திருநாவுக்கரசு நாயனாரால் பாடப்பட்டது 

"வளைத்துநின் றைவர் கள்வர் வந்தெனை நடுக்கஞ் செய்யத்
தளைத்துவைத் துலையை யேற்றித் தழலெரி மடுத்த நீரில்
திளைத்துநின் றாடு கின்ற வாமைபோற் றெளிவி லாதேன்
இளைத்துநின் றாடு கின்றே னென்செய்வான் றோன்றி னேனே."

ஐந்து கள்வர் போன்ற ஐம்பொறிகள் இவ்வுடம்பில் என் உள்ளத்தைச் சுற்றி நின்று கொண்டு என்னை நடுங்கச் செய்தலால், எங்கும் செல்லாதபடி பிணித்து வைத்துப் பாத்திரத்தில் நீரை நிரப்பி அப்பாத்திரத்தைத் தீயினால் சூடாக்க, அந்நீரிலே பிணியை அவிழ்த்து நீந்தவிட்ட அளவிலே மகிழ்வோடி நீந்தி விளையாடிக்கொண்டு சூட்டில் வெந்து உயிர் நீங்க இருக்கும் அவலத்தைப் பற்றிச் சிந்திக்க மாட்டாத ஆமையைப் போல உள்ளத்தெளிவு இல்லாதேனாய் வாழ்க்கையில் இளைத்து நின்று தடுமாறுகின்றேன். வேறு யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ?

என கேட்கிறார் . 

அது பொதுவாக இன்று எல்லோருக்கும் பொருந்தும். தலைக்கு மேல் போனபின்புதான் எங்கே பிழை / தவறு என்று தேடுகிறோம் . அதற்கு பல விளக்கங்களும் கொடுக்கிறோம்.

ஆனால் அதில் இருந்து பாடம் கற்றால் , என்னையும் சேர்த்து, அது நன்றே !! 

Edited by kandiah Thillaivinayagalingam
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, kandiah Thillaivinayagalingam said:

எல்லோருக்கும் என் நன்றிகளும் வாழ்த்துக்களும் 

வாதம் பிரதிவாதம் என்றும் உண்மையைக்  கண்டறிய நல்ல வழியே !

இவ்வளவு "நீண்ட" வாதப் பிரதி வாதம் ஒரு நகைச்சுவைப் பதிவை விளங்கிக் கொள்ள அவசியமாக இருந்திருக்கிறது என்பதைக் காணும் போது, உங்களிடம் இனி ஜோக்கே சொல்லக் கூடாதென பலர் இங்கே சுய குறிப்பெடுத்துக் கொண்டிருப்பர் என நம்புகிறேன்😂.

1 hour ago, கிருபன் said:

சிரிப்போம் சிறப்போம் பகுதியில்தானே இருக்கின்றது. இது சீரியஸ் இல்லையே!

"சிரிக்க சிறக்க "வில் இணைத்தால் இது போன்ற திரிகள் அகற்றப் படாதென அவர் அறிந்திருக்கிறார்😎. ஆனால், இணைத்ததன் நோக்கம் நகைச்சுவை தானா எனக் கண்டறிவது கடினம்!  

Edited by Justin
எழுத்துப் பிழை

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.