Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Published:Yesterday at 3 PMUpdated:Yesterday at 3 PM
நவீன் தாமஸ் - தேவி, ஆர்யா
 
நவீன் தாமஸ் - தேவி, ஆர்யா
Play_to_win.gif
6Comments
Share
 

கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூவர், அருணாசலப் பிரதேசத்தில் கொடூரமான முறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ‘பிளாக் மேஜிக்’ குறித்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு அருகேயுள்ள வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்தவர் அனில்குமார். இவரின் மகள் ஆர்யா (29), திருவனந்தபுரத்திலுள்ள தனியார் பள்ளியில் பிரெஞ்ச் மொழி ஆசிரியராகப் பணிபுரிந்துவந்தார். பள்ளிக்குச் செல்வதாகப் புறப்பட்ட ஆர்யா வீட்டுக்குத் திரும்பவில்லையென, கடந்த மாதம் 27-ம் தேதி வட்டியூர்காவு போலீஸில் புகாரளிக்கப்பட்டது.

போலீஸ் விசாரணையில் ஆர்யா, அவரின் நெருங்கிய தோழி தேவி, அவரின் கணவர் நவீன் தாமஸ் ஆகியோர் அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றில் இறந்துகிடப்பதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த மூவரின் மரணம் குறித்து அருணாச்சல் போலீஸார் கூறுகையில், “அருணாச்சலப் பிரதேசம், ஜீரோ வேலியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் 28-03-2024 அன்று மூவரும் அறை எடுத்துத் தங்கியிருக் கிறார்கள். ஏப்ரல் 1 முதல் 2-ம் தேதிவரை அவர்கள் அந்த அறையிலிருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் அறையின் கதவை அன்லாக் செய்து உள்ளே சென்று பார்த்தபோது, மூவரும் ரத்தவெள்ளத்தில் சடலமாகக் கிடந்திருக்கிறார்கள். இது குறித்துத் தகவலறிந்ததும் நாங்கள் அந்த அறையைச் சோதனையிட்டோம்.

 
 
அறையின் கட்டிலில் ஆர்யாவும், தரையில் தேவியும் பாத்ரூமில், நவீனும் கை நரம்புகளை அறுத்த நிலையில் இறந்து கிடந்தார்கள். தேவி, ஆர்யா இருவரின் முகங்களிலும், உடலின் வேறு பாகங்களிலும் பிளேடால் கீறப்பட்டிருந்தது. கறுப்பு நிற வளையல்கள், அறுக்கப்பட்ட தலைமுடி ஆகியவை ஒரு தட்டில் வைக்கப்பட்டிருந்தன. மேலும் ரத்தம் உறையாமல் இருப்பதற்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரையுடன் மூன்று பிளேடுகளும், ஒரு கடிதமும் அவர்களின் அறையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன.

அந்தக் கடிதத்தில், ‘சந்தோஷமாக வாழ்ந்தோம். இனி நாங்கள் போகிறோம்’ என எழுதப்பட்டிருந்தது.

 

இதையடுத்து, ஆர்யாவின் லேப்டாப்பையும், இரு செல்போன்களையும் கைப்பற்றி அவற்றை ஆய்வுசெய்தோம். அவற்றில், வேற்றுக்கிரகங்களில் வசிப்பவர்கள் குறித்து இணையதளத்தில் தேடியதோடு, அது சம்பந்தமான பி.டி.எஃப் ஃபைல்களையும் அவர்கள் டௌன்லோடு செய்திருப்பது தெரியவந்தது.

 
 
 
நவீன் தாமஸ் - தேவி
 
நவீன் தாமஸ் - தேவி

‘டைனோசர் இனம் அழியவில்லை. அவை வேறு கிரகங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன. பூமியிலுள்ள உயிர்கள் இரு வெவ்வேறு கிரகங்களுக்குச் சென்றிருக்கின்றன. 90 சதவிகித மனிதர்களும் அவ்வாறே வேறு கிரகங்களுக்குச் சென்றிருக்கின்றனர். பூமி தனது எனர்ஜியை இழந்து கொண்டிருக்கிறது. எனவே, எஞ்சியிருக்கும் மனிதர்கள் இனி வேறு கிரகத்துக்குச் சென்றுதான் வாழ முடியும்’ என்பது போன்ற கருத்துகள் விவரிக்கப்பட்டிருந்தன. இது போன்ற அறிவியலுக்குப் புறம்பான தகவல்களெல்லாம் ‘டான் போஸ்கோ’ என்ற ஐ.டி-யிலிருந்து ஆர்யாவுக்குப் பல இ-மெயில்களாக வந்திருக்கின்றன. அவற்றில் சொல்லப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, வேற்றுக்கிரகத்துக்குச் செல்லலாம் என்ற மூடநம்பிக்கையில், ரத்தம் உறையாமல் இருக்க மாத்திரை எடுத்துக்கொண்டு மூவரும் தங்களின் கை நரம்புகளை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்திருக்கிறார்கள்’’ என்கின்றனர்.

இது குறித்து திருவனந்தபுரம் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, “நவீனும் தேவியும் ஆயுர்வேத மருத்துவர்கள். காதலித்து 13 ஆண்டுகளுக்கு முன்பு சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர். பிளாக் மேஜிக், வேற்றுக்கிரக வாசிகள் குறித்து நவீன் தாமஸ், டெலகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேடியிருக்கிறார். உயிர் வெளியேறும் சமயத்தில் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும், மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும், உடலிலிருந்து ஆன்மாவை விடுவிப்பது எப்படி என நவீன் டெலகிராமில் விரிவாகத் தேடிப் படித்திருக்கிறார். ஈஸ்டர் சமயத்தில் இமயமலை அடிவாரத்திலுள்ள அருணாச்சல் ஜீரோ வேலிக்குச் சென்று கிரியைகள் செய்து உயிரைவிட்டால், எளிதில் வேற்றுக்கிரகங்களுக்குச் சென்றுவிடலாம் என்ற மூடநம்பிக்கை நவீனுக்கு ஏற்பட்டிருக்கலாம். அதை மனைவி தேவியையும் நம்பவைத்திருக்கிறார். தேவியின் மூலம் ஆர்யாவுக்கு இந்தச் சிந்தனை ஏற்பட்டிருக்கலாம்.

ஆர்யா
 
ஆர்யா

தேவியின் தந்தை பாலன் மாதவனிடம் நடத்திய விசாரணையில் தேவியும் நவீனும் மாந்திரீக விஷயங்களை நம்பிச் செயல்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார். துர் மந்திரவாதம் குறித்து ஆர்யா இணையதளத்தில் தேடியதை அவரின் தந்தை பார்த்திருக்கிறார். வரும் மே 7-ம் தேதி ஆர்யாவுக்குத் திருமணம் செய்ய அவரின் பெற்றோர் நிச்சயித்திருக்கிறார்கள். இதற்கிடையேதான் மூவரும் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டு, மார்ச் மாதமும் நவீனும் தேவியும் ஜீரோ வேலி பகுதிக்குச் சென்றிருக்கின்றனர். எனவே, ‘அங்கு வேற்றுக்கிரகங்கள் குறித்துப் பிரசாரம் செய்யும் குழு இருக்கிறதா?’ என்ற கோணத்திலும் விசாரித்துவருகிறோம். இவர்களைத் தவறாக வழிநடத்திய ‘டான் போஸ்கோ’ என்ற இ-மெயில் ஐ.டி குறித்தும் விசாரித்துவருகிறோம்” என்றனர்.

படிப்பறிவு வேறு... பகுத்தறிவு வேறு என்பதை தெள்ளத் தெளிவாக்கியிருக்கிறது இந்தச் சம்பவம்!

 
  • கருத்துக்கள உறவுகள்

10,000 ஆண்டுக்கு முன் லெமுரியாவில் துறைமுக கட்டிய தமிழர்கள், அதில் இருந்து ஆமை வழித்தடத்தில் அப்பால்-23 என்ற கிரகத்தில் போய் உள்ளார்கள். அது ஒரு முழுத்தமிழ் கிரகம். அங்கே போகலாம் என கிளப்பி விட்டால்…..

யாழிலும் சிலர் அறையை பூட்டி கொண்டு கையை அறுப்பார்கள் என நினைக்கிறேன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்யா (29), திருவனந்தபுரத்திலுள்ள தனியார் பள்ளியில் பிரெஞ்ச் மொழி ஆசிரியராகப் பணிபுரிந்துவந்தார்.

 “நவீனும் தேவியும் ஆயுர்வேத மருத்துவர்கள். 

 

 

அறப் படித்த முடடாள்கள். .

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

10,000 ஆண்டுக்கு முன் லெமுரியாவில் துறைமுக கட்டிய தமிழர்கள், அதில் இருந்து ஆமை வழித்தடத்தில் அப்பால்-23 என்ற கிரகத்தில் போய் உள்ளார்கள். அது ஒரு முழுத்தமிழ் கிரகம். அங்கே போகலாம் என கிளப்பி விட்டால்…..

யாழிலும் சிலர் அறையை பூட்டி கொண்டு கையை அறுப்பார்கள் என நினைக்கிறேன்🤣.

யாழில் உள்ள சிலர்........... மற்றாவர்களை நீங்கள் பார்ப்பது கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்ப்பதுபோலிருக்கு🤣

உள்ளக்கிடக்கை என்பது இதைதானோ

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

யாழில் உள்ள சிலர்........... மற்றாவர்களை நீங்கள் பார்ப்பது கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்ப்பதுபோலிருக்கு🤣

உள்ளக்கிடக்கை என்பது இதைதானோ

முதலாவது கை அறுப்பவர் ?

பிரெசெண்ட் சேர் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

முதலாவது கை அறுப்பவர் ?

பிரெசெண்ட் சேர் 🤣

நீங்கள் சாணக்கியன்👍

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, உடையார் said:

நீங்கள் சாணக்கியன்👍

நீங்கள் சுமந்திரன்😀

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

நீங்கள் சுமந்திரன்😀

அவரளவுக்கு எனக்கு தகுதியில்லை😇, அறிவின் உச்சம் தொட்டுவிட்டோம் என்று நாம் என்னும்போது எறும்பளவு ஏமாற்றம்கூட யானையைப் போல் நம்மை மிதித்து நசுக்கும்.........

 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, உடையார் said:

அவரளவுக்கு எனக்கு தகுதியில்லை😇, அறிவின் உச்சம் தொட்டுவிட்டோம் என்று நாம் என்னும்போது எறும்பளவு ஏமாற்றம்கூட யானையைப் போல் நம்மை மிதித்து நசுக்கும்.........

 

கொஞ்சம் முயன்றால் அவரை மிஞ்சியே விடலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய நாடுகளை பொறுத்தவரை படித்தவர்கள் தான் கூடுதலாக பகுத்தறிவுக்கு முரணாண பலவற்றை நம்புவர்களாக உள்ளனர். ஸ்ரிபன் ஹக்கின் தனது நூலில் எழுதியிருந்தார், தான் கீழ் திசை நடுகளுக்கு சொற்பொழிவாற்ற  சென்ற போது  அடுத்த 2000 கோடி வருடங்களில் பிரபஞ்ச சுருக்கம் ஏற்பட்டு கோள்கள் ஒன்றோடு ஒன்று மோதி அழியலாம் என்ற, “பிரபஞ்ச சுருக்க கோட்பாடு” என்பது பற்றி அங்கு குறிப்பிட வேண்டாம் என்றும் அது பங்கு சந்தையில் எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டாராம்.  அந்த அளவுக்கு 2000 கோடி வருடங்களுக்கு பின்பு நடக்கும் என  கூறப்படும்( அதுவும் இன்னமும் முழுமையாக நிரூபிக்கப்படாத ஆய்வில் இருக்கும் ஒரு கோட்பாடு)  விடயங்களை பற்றி கூட கவலைப்படும் அளவுக்கு அங்கு படித்தவர்கள் கூட இருகிறார்கள். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.