Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மற்றுமொரு மோசடி அம்பலம் - வெளிநாட்டவர்களை ஏமாற்றிய கடைக்காரர்

 இலங்கை வரும் வெளிநாட்டவர்களை ஏமாற்றும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.

ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவரை உணவக உரிமையாளர் ஏமாற்றிய நிலையில், நீதிமன்றம் வரை அபராதம் செலுத்தியிருந்தார்.

இந்நிலையில் புறக்கோட்டையில் ஒருவர் காலில் அணியும் சாதாரண பாதணிக்கு 9800 ரூபாவை வெளிநாட்டு பெண்ணிடம் அறவிட முயற்சித்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

காலணி கொள்வனவு

வெளிநாட்டை சேர்ந்த ஆண் மற்றும் பெண் இருவர் பாதணிகளை கொள்வனவு செய்வதற்காக புறக்கோட்டைக்கு அவர்கள் கடைக்காரரிடம் கழிவு விலையில் காலணியை கொள்வனவு செய்ய முடியுமா என்று கேட்ட பின் பாதணிகளை பார்வை இட்டுள்ளனர்.

இலங்கையில் மற்றுமொரு மோசடி அம்பலம் - வெளிநாட்டவர்களை ஏமாற்றிய கடைக்காரர் | Sri Lanka Tourists Issue Colombo Scammer Shop

குறித்த பெண் ஒரு சாதாரண பாதணியின் விலையை கேட்ட பொழுது கடைக்காரர் 9800 ரூபா என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த பாதணியில் விலை மிக அதிகம் என தெரிவித்ததுடன் குறித்த வெளிநாட்டவர்கள் அதனை வாங்க மறுத்து கடையை விட்டு வெளியேற முயற்சித்துள்ளனர்.

இதன்போது வெளிநாட்டவர்கள் பதிவு செய்த காணொளியை அழிக்குமாறு கடைக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் பல மோசடியாளர்கள் உள்ளதாகவும், இங்கு வரும் வெளிநாட்டவர்கள் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் என அவர்கள் தமது சமூக வலைத்தளம் ஊடாக தெரிவித்துள்ளனர். 

https://tamilwin.com/article/sri-lanka-tourists-issue-colombo-scammer-shop-1714828235

  • Replies 138
  • Views 10.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து,

  • நிழலி
    நிழலி

    நான் இவ்வாறான, வெளி நாட்டவர்களின் காணொளிகளுக்கு வழக்கமாக இடும் பின்னூட்டம், "ஒரு பெரும் இனப்படுகொலையை, தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளை பாவித்து போர் நடாத்திய ஒரு அரசிடம் இருந்து, சிங்கள இனத்திலும்

  • ஏராளன்
    ஏராளன்

    இடத்தை தனிமடலில் போடுங்கோ, தெரிஞ்ச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் காதில போட்டுவிடுவம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களைத் (கடைக்காரர்களை) திருத்த முடியாது..வெளி நாட்வர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லி புரிய வைக்கலாம்.உங்களுக்கு மட்டும் இந்த விலைகள் அல்ல.யார் எல்லாம் வெளியிலிருந்து வருகிறோமோ அவர்கள் எல்லோருக்குமே இந்த நிலை என்பதை சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, யாயினி said:

இவர்களைத் (கடைக்காரர்களை) திருத்த முடியாது

உண்மைதான்.. உள்ளூர்வாசிகளையே ஏமாற்றும் பொழுது வெளிநாட்டவர்களை விடுவார்களா?

யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான பேக்கரி ஆனால் திகதி காலாவதியான bun கூட விற்கிறார்கள். வாங்கும் பொழுது Packetல் திகதியை பார்த்து வாங்கினால் பிரச்சனையில்லை. 

இரண்டு தரம் இப்படி நடந்த பொழுது ஏன் இந்த மாதிரி செய்கிறீர்கள்? யாரும் புகார் கொடுக்கவில்லையா எனக் கேட்ட பொழுது உங்களைப் போல இப்படி பார்ப்பதில்லை என்றார்கள்.. 

இவர்களை நம்பித்தான் சனம் வாங்கிக் கொண்டு போகிறார்கள். சனத்தை இப்படி ஏமாற்றுவது பிழை என யோசிக்கவில்லை. 

அதே போலதான் எங்கட புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கே போகும்பொழுது நடக்கும் விதத்திலும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, P.S.பிரபா said:

யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான பேக்கரி

ஆணின் பெயர் கொண்ட பேக்கரியா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, P.S.பிரபா said:

யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான பேக்கரி ஆனால் திகதி காலாவதியான bun கூட விற்கிறார்கள். வாங்கும் பொழுது Packetல் திகதியை பார்த்து வாங்கினால் பிரச்சனையில்லை. 

இரண்டு தரம் இப்படி நடந்த பொழுது ஏன் இந்த மாதிரி செய்கிறீர்கள்? யாரும் புகார் கொடுக்கவில்லையா எனக் கேட்ட பொழுது உங்களைப் போல இப்படி பார்ப்பதில்லை என்றார்கள்.. 

இடத்தை தனிமடலில் போடுங்கோ, தெரிஞ்ச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் காதில போட்டுவிடுவம்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஏராளன் said:

இடத்தை தனிமடலில் போடுங்கோ, தெரிஞ்ச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் காதில போட்டுவிடுவம்.

நான் எள்ளென நினைத்தேன்….🤣

தம்பி போத்தில்லையே அடைச்சிட்டான்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, P.S.பிரபா said:

உண்மைதான்.. உள்ளூர்வாசிகளையே ஏமாற்றும் பொழுது வெளிநாட்டவர்களை விடுவார்களா?

யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான பேக்கரி ஆனால் திகதி காலாவதியான bun கூட விற்கிறார்கள். வாங்கும் பொழுது Packetல் திகதியை பார்த்து வாங்கினால் பிரச்சனையில்லை. 

இரண்டு தரம் இப்படி நடந்த பொழுது ஏன் இந்த மாதிரி செய்கிறீர்கள்? யாரும் புகார் கொடுக்கவில்லையா எனக் கேட்ட பொழுது உங்களைப் போல இப்படி பார்ப்பதில்லை என்றார்கள்.. 

இவர்களை நம்பித்தான் சனம் வாங்கிக் கொண்டு போகிறார்கள். சனத்தை இப்படி ஏமாற்றுவது பிழை என யோசிக்கவில்லை. 

அதே போலதான் எங்கட புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கே போகும்பொழுது நடக்கும் விதத்திலும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். 

காலாவதியான உலர் உணவுகள் பக்க விளைவுகள் இல்லை என கேள்விப்பட்டுள்ளேன். அதே போல் எந்த கலப்படமும் இல்லாத தாவர உணவுகளும் 2,3 நாட்கள் வைத்து உண்ணலாம் என்பது என் அனுபவம்.
உடன் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் மீன் வகைகளில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். அவற்றை நான் உண்பதே இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஏராளன் said:

இடத்தை தனிமடலில் போடுங்கோ, தெரிஞ்ச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் காதில போட்டுவிடுவம்.

இப்படியெல்லாம் பொதுவெளியில் எழுதினால் “பொது சுகாதார பரிசோதகர் நாளைக்கு வருவர்.. கவனமாக இருங்கோ” எனக் காட்டிக் கொடுக்கவும் ஆட்கள் இருப்பினம்.. தெரியும்தானே.. 

இதெல்லாம் இந்தக் கடைக்காரர்கள் மனம் வைத்து திருந்தாமல் மாற்றமுடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

காலாவதியான உலர் உணவுகள் பக்க விளைவுகள் இல்லை என கேள்விப்பட்டுள்ளேன். அதே போல் எந்த கலப்படமும் இல்லாத தாவர உணவுகளும் 2,3 நாட்கள் வைத்து உண்ணலாம் என்பது என் அனுபவம்.
உடன் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் மீன் வகைகளில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். அவற்றை நான் உண்பதே இல்லை. 

வர்த்தகத்தில் நம்பிக்கை முக்கியமான ஒன்றுதானே.. அதனை ஒழுங்காக செய்யாமல் இப்படி திகதி காலாவதியான பாணையோ bunனையோ விற்பது சரியான செயலாக இல்லை. அதுவும் வாடிக்கையாளர்கள் கவனிக்கமாட்டார்கள் என்ற துணிவில் செய்வது தவறு என நம்புகிறேன்.

இங்கே பொதுவாக விரைவில் திகதி காலாவதியாகப் போகிறது என்றால் குறைந்த விலைக்கு விற்பார்கள், அதிலும் இந்த மாதிரி பாண்/கேக் வகைகள் அடிக்கடி நடக்கும். வாடிக்கையாளரும் திகதி இன்றோ நாளையோ முடிந்துவிடும் என்று தெரிந்தே வேண்டிச் சொல்வார்கள். 

மற்றப்படி பக்கவிளைவுகள் வருமா வராதா எனக்குத் தெரியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, P.S.பிரபா said:

இப்படியெல்லாம் பொதுவெளியில் எழுதினால் “பொது சுகாதார பரிசோதகர் நாளைக்கு வருவர்.. கவனமாக இருங்கோ” எனக் காட்டிக் கொடுக்கவும் ஆட்கள் இருப்பினம்.. தெரியும்தானே.. 

அதனால தான் தனிமடலைச் சொன்னேன். முயற்சி தானே, வெற்றியானால் மகிழ்ச்சி. இல்லையென்றாலும் முயன்ற திருப்தி.

இதெல்லாம் இந்தக் கடைக்காரர்கள் மனம் வைத்து திருந்தாமல் மாற்றமுடியாது. 

அக்கா கடைக்காறர் திருந்துவது சாத்தியமில்லை, அவர்கள் வியாபாரிகள் எல்லோ! சட்ட நடவடிக்கைகளிற்கு, தண்டப்பணத்திற்கு பயந்து கொஞ்சம் ஒழுங்காக இருப்பது போல் நடிப்பினம். எழுந்தமானமாக கடைகளை சென்று பார்வையிடும் பிஎச்ஐ களால் தான் ஓரளவு தப்பித்து வாழ்கிறோம். பிஸ்கற், சோடா போன்றவை கூட காலாவதி திகதியின் பின் கவனிக்காதது போல விற்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, P.S.பிரபா said:

வர்த்தகத்தில் நம்பிக்கை முக்கியமான ஒன்றுதானே.. அதனை ஒழுங்காக செய்யாமல் இப்படி திகதி காலாவதியான பாணையோ bunனையோ விற்பது சரியான செயலாக இல்லை. அதுவும் வாடிக்கையாளர்கள் கவனிக்கமாட்டார்கள் என்ற துணிவில் செய்வது தவறு என நம்புகிறேன்.

இங்கே பொதுவாக விரைவில் திகதி காலாவதியாகப் போகிறது என்றால் குறைந்த விலைக்கு விற்பார்கள், அதிலும் இந்த மாதிரி பாண்/கேக் வகைகள் அடிக்கடி நடக்கும். வாடிக்கையாளரும் திகதி இன்றோ நாளையோ முடிந்துவிடும் என்று தெரிந்தே வேண்டிச் சொல்வார்கள். 

மற்றப்படி பக்கவிளைவுகள் வருமா வராதா எனக்குத் தெரியாது. 

இது நிச்சயம் பிழைதான்.

காலாவதியான உணவை தெரிந்து கொண்டே நாம் உண்ணும் போது நாம் தெரிந்து ரிஸ்க் எடுக்கிறோம். அந்த bun இல் கண்ணுக்கு தெரியாத fungus இருந்து பேதி புடுங்கினால் அது எமது சாய்ஸ்.

ஆனால் முழு விலை கொடுத்து நம்பி வாங்கி, உண்ணும் போது இதுவே நடந்தால் அது நியாயம் இல்லை.

இங்கும் நீங்கள் சொன்னது போல் கடைகளில் திகதி முடியும் தறுவாயில் இருந்தால் குறைத்து போடுவார்கள். 

ஆனால் தமிழ் கடைகளில் கண்டும் காணாதது போல் விற்பார்கள். சிலர் ஸ்டிக்கரை மேலால் ஒட்டி வித்ததையும் கையும் களவுமாக பிடித்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

காலாவதியான உணவை தெரிந்து கொண்டே நாம் உண்ணும் போது நாம் தெரிந்து ரிஸ்க் எடுக்கிறோம். அந்த bun இல் கண்ணுக்கு தெரியாத fungus இருந்து பேதி புடுங்கினால் அது எமது சாய்ஸ்.

இங்கே இலங்கை அனுபவம் கொண்ட வெளிநாட்டு பெரியவர்கள் பலரே பருப்பு கடலை உழுந்து செத்தல் மிளகாயில் முடிவு திகதிகள் பார்க்க வேவையில்லை அது பழுதாகாது என்று எனக்கு சொல்லியுள்ளார்கள் அது தவறு என்று எனக்கு  தெரியும் ☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, P.S.பிரபா said:

வர்த்தகத்தில் நம்பிக்கை முக்கியமான ஒன்றுதானே.. அதனை ஒழுங்காக செய்யாமல் இப்படி திகதி காலாவதியான பாணையோ bunனையோ விற்பது சரியான செயலாக இல்லை. அதுவும் வாடிக்கையாளர்கள் கவனிக்கமாட்டார்கள் என்ற துணிவில் செய்வது தவறு என நம்புகிறேன்.

நான் கடைகளில்  வாங்கும்  பூஞ்சணம் பிடித்த பணிஸ் மற்றும் பாண், இடியப்பம்,புட்டு பற்றி விவாதிக்க வரவில்லை. ஏனெனில் அப்படியான உணவுகள் அன்றைய தினமே காலவதியாகி விடும். 😎

ஆனால் பழஞ்சோறு மட்டும்  போத்தல்களில் அடைத்து விற்கலாம் 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலைத்தேய விஞ்ஞான/ கெமிக்கல் கலந்த  பாரிய பின் விளைவுகளை உருவாக்கும் பத்து வருட உதரவாதத்துடன் திகதியிட்டு வரும் உணவுகளை  நம்புவர்கள்...... ஒரு போகத்திற்கு வைத்து உண்ணும் நம்மவர் உணவுகளை நம்ப மாட்டார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.