Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்" 

உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .  

அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது: 

"பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை"

"Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap."

வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday
July 31, 2008] 

இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை. 

ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம். 

என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது. 

.........................................................

ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429.

கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது.

கேள்வி: 

எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்?

What animal walks on four feet in the morning, two at noon and three at evening?

பதில்: மனிதன். 

குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்."

............................................................

பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை.

ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,  

"ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்."

"Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'"

பின் ஒரு நேரம், 

"ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது,

சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !'
[ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]  

'Help, Nobody is attacking me!'

உதவிக்கு யாரும் போகவில்லை.

.......................................................

கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை

ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது.

அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம், 

"நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்" 

'I shall divorce you because you are said to be blind in one eye.'

என்று கூறினான். 

அவள் அவனுக்குப் பதிலளித்தாள்: 

"திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?"

'Have you just discovered that after 20 years of marriage?'"

தொகுத்தது

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

The oldest known joke is about farts. It's a 3,900-year-old Sumerian joke  that goes "Something which has never occurred since time immemorial - a  young woman did not fart in her husband's A statue of Sophocles in Hanover, northern Germany, Oct. 20, 2009.A view of the side of a clay vase found in an Etruscan tomb, painted with four black figures in profile pushing a spear into the eye of Polyphemus the Cyclops, illustrating the episode in the Odyssey. Hands of an elderly person, wearing a gold ring, holding another person's hand in warm sunlight over a cafe table.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நகைச்சுவைகள்.......தொடருங்கள் தில்லை.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்

அப்போது, ஆர்க்கிமிடிஸ்,  குளிக்கும் தொட்டியில் இருந்து அம்மணமாக எழும்பி கண்டுபிடித்து விட்டேன், கண்டுபிடித்து விட்டேன்  என்று ஓட, சனமும் கண்டோம் , கண்டோம் என்று ஆர்க்கிமிடிஸ் பின் ஓடியது எதனால்?  

சனங்கள்  உண்மையில் எதைக் கண்டது?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, kandiah Thillaivinayagalingam said:

இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை. 

வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது.

என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன்.

டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல.

16 hours ago, kandiah Thillaivinayagalingam said:

பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை.

ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,  

"ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்."

"Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'"

பின் ஒரு நேரம், 

"ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது,

சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !'
[ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]  

'Help, Nobody is attacking me!'

உதவிக்கு யாரும் போகவில்லை.

Nobody is perfect; I am nobody.

இதை நெப்போலியனின் கூற்று என்பார்கள். இதன் அர்த்தம் I am perfect என்பதாக வரும். இதுவும் வார்த்தை ஜாலம் wordplay யே ஒழிய சிரிப்பு வரும் விசயம் இல்லை.

16 hours ago, kandiah Thillaivinayagalingam said:

What animal walks on four feet in the morning, two at noon and three at evening?

பதில்: மனிதன். 

குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்."

தத்தக்க பித்தக்க நாலு கால்,

தாவி நடக்க இரெண்டு கால்,

ஒட்டி முறிந்தால் மூன்று கால்,

ஊருக்கு போக எட்டுக் கால்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது.

அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்:

அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா.

கலிபா:

உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்!

குற்றம் சாட்டபட்டவர்:

ஓ….கலிபா! நன்றே செய்தாய்…..

நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, kandiah Thillaivinayagalingam said:

கேள்வி: 

எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்?

What animal walks on four feet in the morning, two at noon and three at evening?

பதில்: மனிதன். 

குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்."

எனது பதிலும் மனிதன் தான்.

ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு.

இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு.

காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது.

மதியம் : நடை 

அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kadancha said:

இது பொருள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச 
 அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ".

ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்? 

 ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம் 
ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது? 

main-qimg-48d9ae7f39152c34f4fd42eb6545a140.webp

எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

2.-Sutta-pazham-sudadha-pazham.jpg

18 hours ago, kandiah Thillaivinayagalingam said:

"சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்" 

உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .  

உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை... 
எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம்,
சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? 
என்று கேட்டது தான். 😂

காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.