Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

எண்ணெய் ஏற்றுமதி

பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம்: இலங்கையில் பெட்ரோல் நெருக்கடி ஏற்படும் அபாயம் | Israil Iran War Tension And Economy Crisis

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது.

இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது.

இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.

உலகப் போராக உருவாகும் அபாயம்

அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.

ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம்: இலங்கையில் பெட்ரோல் நெருக்கடி ஏற்படும் அபாயம் | Israil Iran War Tension And Economy Crisis

 

இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  

https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதுதான் ஈரான் சனாதிபதி வாறரே...வரும்போது  2 கலன் பெற்றோல் கையுடன் கொண்டு வந்திட்டால் போச்சு..

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரகலய -2 க்கு இப்போதே ஆயத்தம் செய்யலாம். 

😁

Posted
6 hours ago, பெருமாள் said:

ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது கடந்த ஒரு வார எண்ணை விலை விபரம்.
oil-price.png

இது தங்கம்
gold-price.png

😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, இணையவன் said:

இது கடந்த ஒரு வார எண்ணை விலை விபரம்.
oil-price.png

இது தங்கம்
gold-price.png

😂

நன்றி இணைப்புக்கு .

 

3 hours ago, Kapithan said:

அரகலய -2 க்கு இப்போதே ஆயத்தம் செய்யலாம். 

😁

பேராண்டி இஸ்ரேல் ஈரான் யுத்தம் தொரடத்தான் போகுது ரணில் பனையாழ் விழுந்து கிடக்குறார் ஒரு மாடல்ல மாட்டு கூட்டமே ஏறி மிதிக்க போகுது பேசாமல் புத்தர் சிலை விளயாட்ட நிறுத்தி விட்டு நடக்க வேண்டிய வேலையை பார்க்க சொல்லுங்க .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பெருமாள் said:

நன்றி இணைப்புக்கு .

 

பேராண்டி இஸ்ரேல் ஈரான் யுத்தம் தொரடத்தான் போகுது ரணில் பனையாழ் விழுந்து கிடக்குறார் ஒரு மாடல்ல மாட்டு கூட்டமே ஏறி மிதிக்க போகுது பேசாமல் புத்தர் சிலை விளயாட்ட நிறுத்தி விட்டு நடக்க வேண்டிய வேலையை பார்க்க சொல்லுங்க .

கனேடிய 1 டொலர்  = Rs. 450 ஆக வேண்டும் என்பதுதான் என் இலக்கு  😁

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈரானில் இருந்து ஹிந்தியா குழாய் வழியாக எண்ணை கொண்டு வருகுது. சொறீலங்கா எரிபொருள் விற்பனையில்.. ஹிந்தியாவை உள்ளிளுத்து விட்டாச்சு. பிறகேன்..விலை உயர்வு..??! 

ஈரான் - இஸ்ரேல் தகராறில் இழந்த அமெரிக்க டொலர்களை சரிக்கட்ட அமெரிக்க வளைகுடா கூட்டாளிகள்.. விலையை கூட்டி இருப்பாங்கள். 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.