Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

அமெரிக்க குடிமகனான இளவரசர் ஹாரி

20 Apr, 2024 | 03:40 PM
image

பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அரியணையில் ஐந்தாவது இடத்தில் உள்ள இளவரசர் ஹாரி தன்னை ஒரு அமெரிக்க குடிமகன் எனக் கூறியுள்ளார்.

பிரித்தானிய மன்னரான சார்ல்ஸின் மகனான ஹாரி, 2020 ஆம் ஆண்டு இங்கிலாந்திருலிருந்து தனது குடும்பத்துடன் வெளியேறினார். 

தற்போது, அமெரிக்காவில்  கலிபோர்னியாவில் மனைவி மேகன் மார்க்கல், குழந்தைகள் ஆர்ச்சி, லில்லிபெட் ஆகியோருடன் வசித்து வருகிறார். 

2019 இல் அமெரிக்காவில், `Travalyst' என்றொரு பயணம் சார்ந்த நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார்.  அந்தச் சமயத்தில், ஹாரி அந்த நிறுவனத்தின் ஆவணங்களில் தனது வசிப்பிடமாகவும், சொந்த நாடாகவும் பிரிட்டனைக் குறிப்பிட்டிருந்தார்

ஹரி தற்போது அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையில், தனது புது நாடாக அமெரிக்காவைக் குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பான ஆவணங்கள் வெளியாகியிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

 

 

https://www.virakesari.lk/article/181521

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனுபவிக்க தெரியாதவர்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, விசுகு said:

அனுபவிக்க தெரியாதவர்?

கரி.  திருமணமத்துக்கு  முன்பே நன்றாக அனுபவித்து விட்டார் ....அவரது பிறப்பு பற்றியும்  அது காரணமாக  அரச குடும்பஸ்தரின் புறக்கணிப்புகளும். அதனால் ஏற்படும் மனவேதனையும் அனுபவித்தால் தான்  புரியும்  அவர் அரச குடும்பத்தில் திருமணம் செய்து இருந்தாலும்  இது தொடரும்  இப்போது தெரிவு செய்த  மனைவி  பிள்ளைகள் பெற  சிறந்தவர் தான் அரச குடும்பத்தினர் தான்  அவரை வெளியேற்றியுள்ளார்கள். கரி அரச குடும்பத்னினனாகா மனழுத்தாத்துடன். வழ்வதை விட அமெரிக்கனாக. மகிழ்ச்சியாக வாழ்வது  சிறந்தது  😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விசுகு said:

அனுபவிக்க தெரியாதவர்?

எலி வளையானாலும், தனி வளை வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, விசுகு said:

அனுபவிக்க தெரியாதவர்?

டயானா இறப்பிற்கு பின் இவர் சொந்த உறவுகளாலேயே புறக்கணிக்கப்பட்டார் என நினைக்கின்றேன். மகாராணி  அவர்கள் அரச மரியாதையும்,தாயில்லா பிள்ளை எனும் நிலையை கடைப்பிடித்தாலும் வேற்று இனத்தவரை மணம் முடித்ததுடன் எல்லாம் கெட்டுவிட்டது என நினைக்கின்றேன். 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

எலி வளையானாலும், தனி வளை வேணும்.

இந்தியாவால் புகழபடும் கூட்டு வளை சிஸ்ரம் வேலையில்லை.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.