Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
06 MAY, 2024 | 11:35 AM
image

ரஃபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

எதிர்காலத்தில் ரஃபாவில் இஸ்ரேல் தனது  இராணுவநடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்த மறுநாள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உங்களின் பாதுகாப்பிற்காக  சோதனைசாவடிகளிற்கு அருகில் உள்ள மனிதாபிமான பகுதிக்கு உடனடியாக செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அல்ரபாவின் அல்சவ்கா மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மட்டுப்படுத்த அளவிலான நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இடம் பெயர்ந்த மில்லியன் கணக்காண மக்கள் எகிப்து எல்லையில் உள்ள ரபாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/182788

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் எச்சரிக்கையை தொடர்ந்து ரஃபாவிலிருந்து பெருமளவு மக்கள் வெளியேறுகின்றனர் - பெரும் குழப்பநிலை

Published By: RAJEEBAN   06 MAY, 2024 | 04:52 PM

image
 

ரஃபாவிலிருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என உத்தரவுபிறப்பித்துள்ளதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.

rafa_37.jpg

ரஃபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

எதிர்காலத்தில் ரஃபாவில் இஸ்ரேல் தனது  இராணுவநடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்த மறுநாள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உங்களின் பாதுகாப்பிற்காக  சோதனைசாவடிகளிற்கு அருகில் உள்ள மனிதாபிமான பகுதிக்கு உடனடியாக செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அல்ரபாவின் அல்சவ்கா மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

rafa_dis.jpg

மட்டுப்படுத்த அளவிலான நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இடம் பெயர்ந்த மில்லியன் கணக்காண மக்கள் எகிப்து எல்லையில் உள்ள ரபாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

அச்சமடைந்த மக்கள் கால்நடையாகவும் அல்லது கழுதைகளின் மீதும் அல்லது தங்களின் உடமைகளை வாகனங்களில் ஏற்றியபடி வாகனங்களிலும் ரபாவிலிருந்து வெளியேறுகின்றனர்.

நேற்றிரவு இஸ்ரேல் மேற்கொண்ட விமானக்குண்டுவீச்சுகள் மக்களின் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஃபாவிலிருந்து நகரத்தின் மேற்கு பகுதி உட்பட நகரத்தில் கடும் பதற்றநிலை காணப்படுகின்றது பலர் வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ளனர் பலர் ஏற்கனவே வெளியேற ஆரம்பித்துள்ளனர் என நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார் என கார்டியன் தெரிவித்துள்ளது.

மேலும் ரஃபா மனிதாபிமான நடவடிக்கைகளிற்கான பிரதான தளமாகவும் காணப்படுகின்றது.

rafa_dis_33.jpg

அவர்கள்ரஃபாவின் கிழக்கில் உள்ளவர்களை வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரஃபா எல்லையில் மேற்கில் உள்ளவர்களையும் வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர். எனக்கு என்ன செய்வது என தெரியவில்லை. நான் அறிவிக்கப்பட்ட இடத்தில் இல்லாவிட்டாலும் எனது குடும்பத்தை டெய்ர் எல் பலாவிற்கு கொண்டு செல்லப்போகின்றேன் என ரஃபாவின் வடக்கில் தனது குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ள அபுமுகே தெரிவித்துள்ளார்.

தற்போது கடும் மழை பெய்கின்றது எங்கு போவது என எங்களிற்கு தெரியவில்லை. இந்த நாள் வரும் என நான் கவலையுடன் இருந்தேன் எனது குடும்பத்தவர்களை எங்கு கொண்டு செல்வது என சிந்திக்கவேண்டும் என ரஃபாவில்  அகதியாக உள்ள அபுரயீட் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/182821

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையற்ற ஒரு இக்கூட்டத்திற்கு....???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஃபா எல்லை இஸ்ரேலிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் -மனிதாபிமா உதவிகளை காசாவிற்குள் கொண்டு செல்வது இடைநிறுத்தம்

07 MAY, 2024 | 03:44 PM
image
 

காசா பகுதியில் உள்ள ரஃபாஎல்லையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ரஃபா மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிஎன்பதுடன் எகிப்திலிருந்து காசாவிற்கான மனிதாபிமான உதவிகள் வருவதற்கான ஒரேயொரு பாதையாகவும் காணப்படுகின்றது.

ரஃபாவின் காசா பக்கத்தினை நாங்கள் தற்போது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளோம் எங்களது சிறப்பு படைகள் இந்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளன என இஸ்ரேலின் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை காசா எல்லை அதிகாரசபைக்கான பேச்சாளர் இஸ்ரேலிய டாங்கிகள் காணப்படுவதை உறுதிசெய்துள்ளார்.

அந்த பகுதி ஊடாக மனிதாபிமான உதவிகள் பயணிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/182896

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, விசுகு said:

ஒற்றுமையற்ற ஒரு இக்கூட்டத்திற்கு....???

நாங்களும் ஒற்றுமை இல்லாதவர்களே. 

அதுதான் எல்லோராலும் கைவிடப்பட்டவர்களானோம். 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

நாங்களும் ஒற்றுமை இல்லாதவர்களே. 

அதுதான் எல்லோராலும் கைவிடப்பட்டவர்களானோம். 

☹️

ஆம் 

யாழில் கூட. 😰

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உக்ரேனுக்கு குரல் கொடுத்தவர்கள் இஸ்ரேலின் பலஸ்தீன் மீதான அட்டூழியங்களை பூ மழைகள் என அனுபவிக்கின்றார்கள் போலும்....😢
அல்லது....மேற்குலக நன்றி விசுவாசன்களுக்கு இந்த செய்தி இடைச்சிக்கட்டை செருகின காதுகளுக்கும் கூலிங்கிளாஸ் கண்களுக்கும் தெரியவில்லை போலும்..😎

  • கருத்துக்கள உறவுகள்

எகிப்துடனான உதவிகள் வரும் ரபா எல்லையை கைப்பற்றியது இஸ்ரேல்

ஹமாஸ் இணங்கிய போர் நிறுத்தத்திலும் இழுபறி

maheshMay 8, 2024

May 8, 2024 6:00 am 0 comment

16-2-2.jpg

காசாவின் தெற்கு நகரான ரபா மீது இரவு முழுவதும் சரமாரித் தாக்குதல்களை நடத்திய இஸ்ரேலிய இராணுவம் அங்குள்ள எகிப்து மற்றும் காசாவுக்கு இடையிலான ரபா எல்லை கடவையை நேற்று (07) கைப்பற்றியதோடு இஸ்ரேலிய டாங்கிகள் ரபாவுக்குள் மேலும் முன்னேறி வருகின்றன.

காசா போர் நேற்றுடன் 8 ஆவது மாதத்தை எட்டியதோடு, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு மத்தியஸ்தர்கள் போராடி வரும் நிலையில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன.

போர் நிறுத்த முன்மொழிவு ஒன்றுக்கு இணங்குவதாக பலஸ்தீன போராட்ட அமைப்பான ஹமாஸ் கடந்த திங்களன்று அறிவித்தபோதும், அந்தப் போர் நிறுத்த விதிகள் தமது கோரிக்கையை பூர்த்தி செய்வதாக இல்லை என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் பொதுமக்கள் நிரம்பி வழியும் ரபா தொடர்பில் சர்வதேச அளவில் கவலை அதிகரித்திருக்கும் சூழலில், அங்கு பல இடங்கள் மற்றும் வீடுகள் மீது இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் போர் விமானங்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

நேற்று அதிகாலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட ரபாவில் 21 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது. குறிப்பாக அங்குள்ள வீடுகளை இலக்கு வைத்தே இஸ்ரேல் உக்கிர தாக்குதல்களை நடத்தியுள்ளது.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 54 பேர் கொல்லப்பட்டு மேலும் 96 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி வெடித்த இந்தப் போரில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34,789 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 78,204 பேர் காயமடைந்திருப்பதாக அந்த அமைச்சின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரபாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருப்பதோடு அவர்கள் கூடாரங்கள் மற்றும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களை வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டிருக்கும் நிலையில் பலரும் அங்கிருந்து வெளியேற முயன்று வருகின்றபோதும், காசாவின் பெரும்பகுதி இஸ்ரேலின் தாக்குதல்களில் ஏற்கனவே இடிபாடுகளாக மாறியுள்ளன. இதனால் செல்வதற்கு பாதுகாப்பான இடங்கள் இல்லை என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

ரபாவில் முன்னெடுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை ஒன்றில் காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸ் அமைப்பு பயன்படுத்தும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டு போராளிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டது.

பிரசல்ஸில் நேற்று பேசிய ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கைகளுக்கான தலைவர் ஜோசப் பொரல், ‘ரபா மீதான தாக்குதல் பொதுமக்களுக்கு உயிராபத்துக் கொண்டது’ என்று எச்சரித்தார்.

‘அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், அனைவரும் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று (இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்) நெதன்யாகுவை கேட்டுக்கொண்டபோதும், சர்வதேச சமூகத்தின் அனைத்துக் கோரிக்கைகளையும் மீறி ரபா தாக்குதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படும் என்று நான் அஞ்சுகிறேன். காசாவில் பாதுகாப்பான இடம் எதுவும் இல்லை’ என்று பொரல் குறிப்பிட்டுள்ளார்.

ரபா மீது தாக்குதல் நடத்துவது தொடர்பில் இஸ்ரேல் பல வாரங்களாக எச்சரித்து வந்தது. அங்கு ஆயிரக்கணக்காக ஹமாஸ் போராளிகள் நிலைகொண்டிருப்பதாகவும் பல டஜன் பணயக்கைதிகள் இருக்கக் கூடும் என்றும் இஸ்ரேல் குறிப்பிட்டது. ரபாவை கைப்பற்றாது ஹமாஸுக்கு எதிரான வெற்றி சாத்தியமில்லை என்றும் அது குறிப்பிட்டிருந்தது.

ரபா எல்லைக் கடவை மூடல்

இந்நிலையில் இஸ்ரேலிய டாங்கிகள் நிலைகொண்டிருப்பதால் காசாவுக்கு உதவிகள் வருவதற்கான பிரதான வழியாக இருக்கும் ரபா எல்லைக் கடலை மூடப்பட்டிருப்பதாக காசா எல்லை நிர்வாகத்தை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளிட்டுள்ளது.

படைகள் அங்கு நுழைந்திருப்பதாக இஸ்ரேல் இராணுவ வானொலி முன்னதாக குறிப்பிட்டிருந்தது.

ரபா மற்றும் இஸ்ரேல் கட்டுப்பாட்டு கெரம் ஷலோம் எல்லை கடவையில் காசாவுக்கான உதவிகள் முற்றாக நிறுத்தப்பட்டிருப்பதாக எகிப்தில் உள்ள செம்பிறை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ரபாவில் அடைக்கலம் பெற்றிருக்கும் பலஸ்தீனர்களுக்கான மனிதாபிமான திட்டம் ஒன்று வகுக்கப்படும் வரை ரபா படை நடவடிக்கையை ஆரம்பிக்கக் கூடாது என்று அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி வந்தன.

‘ரபா எல்லைக் கடவை மூடப்பட்டதை அடுத்து காசா குடிமக்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் மரண தண்டனையை விதித்துள்ளனர்’ என்று காசா எல்லைக் கடவை நிர்வாகத்திற்காக பேசவல்ல ஹிஷாம் எத்வான் தெரிவித்தார்.

ரபா எல்லையை இஸ்ரேல் கட்டுப்படுத்துவது குறித்து பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது. ‘கடந்த 24 முதல் 48 மணி நேரத்தில் எங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை, எல்லையை கடப்பதும், போதிய உதவி பொருட்கள் வராததும் ஆகும்’ என்று அந்த ஐ.நா. நிறுவனத்தின் பேச்சாளர் லுயிஸ் வட்ரிட்ஜ் பி.பி.சி. தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார். நிலைமை பெரும் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காசாவின் ரபா நகரில் இஸ்ரேலின் படை நடவடிக்கை மற்றும் ரபா எல்லைக் கடவையில் பலஸ்தீன பக்கத்தை இஸ்ரேல் கைப்பற்றியதை எகிப்து வெளியுறவு அமைச்சு கண்டித்துள்ளது. ரபா மீதான தாக்குதல் போர் நிறுத்த முயற்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கும் பகுதிகளில் உள்ள பெரும் எண்ணிக்கையான மக்கள் வெளியேற்றப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிடுகிறது. அந்த மக்களை 20 கிலோமீற்றருக்கு அப்பால் இருக்கும் ‘நீடிக்கப்பட்ட மனிதாபிமான வலயம்’ என்று அழைக்கும் பகுதிக்கு செல்வதற்கு இஸ்ரேல் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது.

சில பலஸ்தீன குடும்பங்கள் மீண்டும் ஒருமுறை கழுதை வண்டிகள் மற்றும் ட்ரக் வண்டிகளில் தமது குழந்தைகள் மற்றும் உடைமைகளை ஏற்றியபடி மீண்டும் ஒருமுறை வெளியேற ஆரம்பித்துள்ளனர்.

சிலர் சேறும் சகதியுமான வீதிகள் வழியே நடைபாதையாகவே வேளியேற ஆரம்பித்துள்ளனர்.

ஒக்டோபரில் போர் வெடித்தது தொடக்கம் வெளியேறிச் செல்வது இது நான்காவது முறை என்று அப்துல்லா அல் நஜர் என்ற பலஸ்தீனர் தெரிவித்துள்ளார். ‘எங்கே செல்வது என்று இறைவனுக்குத் தான் தெரியும். இன்னும் அது பற்றி நாம் தீர்மானிக்கவில்லை’ என்றார்.

கெய்ரோவில் போர் நிறுத்த பேச்சு

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் குழப்பம் நீடித்து வரும் சூழலில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையிலான மறைமுக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் பொருட்டு, தமது தூதுக்குழு நேற்று கெய்ரோ பயணித்ததாக மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் குறிப்பிட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பு கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், போர் நிறுத்தம் ஒன்றுக்கான முன்மொழிவை ஏற்பதாக தமது அமைப்பின் தலைவர் இஸ்மைல் ஹனியோ கட்டார் மற்றும் எகிப்திடம் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், இந்த முன்மொழிவு இஸ்ரேலிய கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும் ஆனால் உடன்பாடு ஒன்றை எட்டும் முயற்சியாக பேச்சுவார்த்தையாளர்களுடனான சந்திப்புக்கு இஸ்ரேல் தூதுக்குழு ஒன்றை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளது.

மறுபுறம் ரபாவில் தொடர்ந்து படை நடவடிக்கையை முன்னெடுக்க நெதயாகுவின் போர் கால அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அந்த அலுவலகம் கூறியது.

இதில் ஹமாஸ் ஏற்றுக்கொண்டிருக்கும் முன்மொழிவு எகிப்தினால் வழங்கப்பட்ட பலவீனமான ஒன்று என்றும் அதில் இஸ்ரேல் ஏற்காத கூறுகள் உள்ளடங்கி இருப்பதாகவும் இஸ்ரேலிய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

ஹமாஸ் அமைப்பு மூன்று கட்டங்களைக் கொண்ட போர் நிறுத்தம் ஒன்றுக்கே இணங்கி உள்ளது. ஒவ்வொன்று 42 நாட்களைக் கொண்டதான இந்த போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தில் 33 பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவதோடு இரண்டாவது கட்டத்தில் எஞ்சிய பணயக்கைதிகளுக்கு பகரமாக இஸ்ரேல் காசாவில் இருந்து முழுமையாக வெளியேறவுள்ளது. மூன்றாவது கட்டத்தில் காசாவில் மூன்று தொடக்கம் ஐந்து ஆண்டுகள் கொண்ட மீள்கட்டமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்படும்.

இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பில் பேசுவதற்கு ஹமாஸ் பிரதிநிதிகள் இன்றைக்குள் கெய்ரோ செல்லவிருந்ததாக பேச்சுவார்த்தையுடன் தொடர்புபட்ட பலஸ்தீனர் தரப்பை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எட்டப்படும் எந்த ஒரு உடன்படிக்கையும் கடந்த நவம்பரில் பாதி எண்ணிக்கையான பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்ட ஒரு வாரம் போர் நிறுத்தத்திற்கு பின்னரான முதலாவது போர் நிறுத்தமாக அமையும்.

ஆனால் அது தொடக்கம் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்று இன்றி பணயக்கைதிகளை விடுவிப்பதை ஹமாஸ் அமைப்பு மறுத்து வருவதோடு தற்காலிக போர் நிறுத்தம் ஒன்று தொடர்பில் மாத்திரமே பேச்சுவார்த்தை நடத்துவதாக இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது.

16-3-2.jpg

 

https://www.thinakaran.lk/2024/05/08/world/58850/எகிப்துடனான-உதவிகள்-வரும/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஃபாவின் மருத்துவமனையிலிருந்து தப்பியோடும் நோயாளிகள், மருத்துவர்கள்! - சிறுநீரக பாதிப்புக்குள்ளான 200 நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து

Published By: RAJEEBAN   08 MAY, 2024 | 11:10 AM

image

ரஃபாவின் பிரதான மருத்துவமனையிலிருந்து மருத்துவர்களும் நோயாளிகளும் தப்பியோடுகின்றனர் என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்சம் காரணமாக நோயாளிகளும் மருத்துவர்களும் தப்பியோடுகின்றனர் நோயாளிகளை ரஃபா எல்லை  ஊடாக எகிப்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கை இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரொய்ட்டர் மருத்துவர்கள் நோயாளிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

மோதல் பகுதி என இஸ்ரேல் அறிவித்துள்ள காசாவின் தென்பகுதியில் அபுயூசுவ்அல் நஜார் மருத்துவமனை காணப்படுகின்றது.

இந்த மருத்துவமனை முற்றாக இயங்க முடியாத நிலையில் காணப்படுகின்றது.

இஸ்ரேல் இந்த மருத்துவமனையை மோதல் களத்தின் மையத்திற்குள் சிக்கவைத்துள்ளதால் அந்த மருத்துவமனை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் காரணமாக நோயாளிகளும் மருத்துவர்களும் வெளியேறுகின்றனர் என வைத்தியர் மர்வான் அல் ஹம்ஸ் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.

சிறுநீரக நோயாளிகளிற்கான பகுதி மாத்திரமே செயற்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மருத்துவமனை மூடப்பட்டால் சிறுநீரக நோயாளிகள் 200 பேரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் மார்க்கிரட் ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

சிறுநீரகம் செயல் இழந்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்களை இந்த மருத்துவமனையே உயிருடன் வைத்திருக்கின்றது இந்த மருத்துவமனை செயல் இழந்தால் அவர்கள் உயிரிழக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/182947

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஃபாவில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது தாக்குதலை மேற்கொண்டால் இஸ்ரேலிற்கான ஆயுதங்கள் சிலவற்றை வழங்குவதை நிறுத்துவோம் - பைடன் எச்சரிக்கை

Published By: RAJEEBAN   09 MAY, 2024 | 11:21 AM

image
 

இஸ்ரேல்  காசா நகரமான ரஃபாமீது பாரிய தாக்குதலை மேற்கொண்டால்  இஸ்ரேலிற்கு சில ஆயுதங்களை வழங்குவதை நிறுத்துவோம்  எனஅமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் எச்சரித்துள்ளார்.

அவர்கள்ரஃபாவிற்குள் நுழைந்தால் நான் ரஃபா விடயத்தில் வரலாற்றுரீதியாக பயன்படுத்தப்படும் சில ஆயுதங்களை வழங்க தயாரில்லை என பைடன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இஸ்ரேல் பாதுகாப்பாகயிருப்பதை தொடர்ந்தும் உறுதிசெய்வேன் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஆட்டிலறி எறிகணைகளையும் ஆயுதங்களையும் இஸ்ரேலிற்கு வழங்கமாட்டோம் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

தற்போது ரபாவில் காணப்படும் நிலையை  தரைநடவடிக்கை என அமெரிக்கா தெரிவிக்காது இஸ்ரேலிய படையினர் இன்னமும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிற்குள் செல்லவில்லை என  தெரிவித்துள்ள பைடன் இஸ்ரேலிய படையினர் எல்லையில்தான் உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்தால் நாங்கள் ஆதரிக்கமாட்டோம் என இஸ்ரேலிய பிரதமருக்கு தெளிவாக தெரிவித்துள்ளேன் எனவும் பைடன் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/183038

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 8/5/2024 at 13:19, ஏராளன் said:

ரஃபாவின் மருத்துவமனையிலிருந்து தப்பியோடும் நோயாளிகள், மருத்துவர்கள்! - சிறுநீரக பாதிப்புக்குள்ளான 200 நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து

கொடூரம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் விரல் நகங்களை பயன்படுத்தியும் போரிடுவோம், தனியாகவும் போரிடுவோம் - இஸ்ரேல் பிரதமர்

10 MAY, 2024 | 01:45 PM
image
 

இஸ்ரேல் தன்னிடம் உள்ள அனைத்துவளங்களையும் பயன்படுத்தி தனியாக போரிடும் என பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிற்கான ஆயுத விநியோகத்தினை இடைநிறுத்துவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கைக்கு பதில் அளித்துள்ள பெஞ்சமின் நெட்டயன்யாகு இதனை தெரிவித்துள்ளார்.

தனித்து நிற்கவேண்டிய நிலையேற்பட்டால் நாங்கள் தனித்து நிற்போம் தேவைப்பட்டால் எங்கள் விரல் நகங்களையும் பயன்படுத்தி போரிடுவோம் என பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தனது 76 வது சுதந்திரதினத்தை நெருங்குகின்றது என  தெரிவித்துள்ள அவர் 1948ம் ஆண்டு யுத்தத்தின்போது எங்களிடம் ஆயுதங்கள் இருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிற்கு எதிராக ஆயுததடை விதிக்கப்பட்டிருந்தது, எங்களிடையே உள்ள வலிமை வீரம் ஒற்றுமையுடன் நாங்கள் வெற்றிபெற்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் அனேகவிடயங்களில் நாங்கள் பொதுவான கருத்தை கொண்டிருந்தோம், சில விடயங்கள் குறித்து கருத்து முரண்பாடு காணப்பட்டது என தெரிவித்துள்ள அவர் கருத்து வேறுபாடுகளிற்கு தீர்வை காணமுடிந்தது என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/183126

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஃபாமீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டால் இது ஹமாசின் நிலையை வலுப்படுத்தும் - அமெரிக்கா

10 MAY, 2024 | 02:41 PM
image

காசாவின் ரஃபா மீது இஸ்ரேல் பாரிய நடவடிக்கையை மேற்கொண்டால் அது ஹமாஸ் அமைப்பிற்கான மூலோபாய  வெற்றியாக மாறும் என அமெரிக்கா  தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கேர்பி இதனை தெரிவித்துள்ளார்.

ரஃபா மீதான எந்த பாரிய நடவடிக்கையும் பேச்சுவார்த்தை மேசையில் ஹமாசின் நிலையை வலுப்படுத்தும் இஸ்ரேலின் நிலையை வலுப்படுத்தாது என்பதே எங்களின் நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலில் ரஃபா அதிகளவு பொதுமக்கள் உயிரிழந்தால் இஸ்ரேல் பற்றிய ஹமாசின் திரிபுபடுத்தப்பட்ட கதைகளிற்கு மேலும் பல விடயங்கள் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்  காசா நகரமான ரஃபாமீது பாரிய தாக்குதலை மேற்கொண்டால்  இஸ்ரேலிற்கு சில ஆயுதங்களை வழங்குவதை நிறுத்துவோம்  என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

அவர்கள் ரஃபாவிற்குள் நுழைந்தால் நான் ரஃபா விடயத்தில் வரலாற்று ரீதியாக பயன்படுத்தப்படும் சில ஆயுதங்களை வழங்க தயாரில்லை என பைடன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இஸ்ரேல் பாதுகாப்பாகயிருப்பதை தொடர்ந்தும் உறுதிசெய்வேன் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஆட்டிலறி எறிகணைகளையும் ஆயுதங்களையும் இஸ்ரேலிற்கு வழங்கமாட்டோம் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/183160

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி தாக்குதலை தொடரும் முனைப்பில் இஸ்ரேல் - ரஃபாவில் என்ன நடக்கிறது?

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,காஸா எல்லை அருகே இஸ்ரேலின் டாங்குகளும், கவச வாகனங்களும் தென்பட்டன.
34 நிமிடங்களுக்கு முன்னர்

தெற்கு காஸாவில் ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், மேலும் பல்லாயிரக்கணக்கான பாலத்தீனர்களை ரஃபாவை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.

ரஃபாவின் கிழக்கு மாவட்டங்களில் வசிப்பவர்களை அல்-மவாசிக்கு செல்லுமாறு அறிவிப்புகள் விடப்படுகின்றன. சமூக ஊடக பதிவுகள் மூலமாகவும் தெரிவிக்கப்படுகின்றன. குறுகிய கடலோரப் பகுதியான அல்-மவாசியை "விரிவாக்கப்பட்ட மனிதாபிமான மண்டலம்" என இஸ்ரேல் அழைக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு உள்ளூர் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் நிரம்பியிருந்த ரஃபாவின் பகுதிகள், தற்போது பேய் நகரம் போல் காட்சியளிக்கின்றன.

தரைவழித் தாக்குதல் பாரிய பொதுமக்கள் உயிரிழப்பு மற்றும் மனிதாபிமான நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகள் எச்சரித்த போதிலும், ரஃபாவில் திட்டமிட்ட நடவடிக்கைகளைத் தொடரப் போவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

 

சனிக்கிழமையன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவித்தால் அடுத்த நாளே காஸாவில் போர் நிறுத்தம் சாத்தியமாகும் என்றார்.

போர் நிறுத்தம் ஹமாஸ் கையில் உள்ளது. அவர்கள் அதைச் செய்ய விரும்பினால், நாங்கள் அடுத்த நாளே போர் நிறுத்தம் செய்வோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.

அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸால் பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றவர்களில் 128 பேர் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதில், 36 பேர் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.

 
இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,இஸ்ரேல் ராணுவம் அறிவித்த பிறகு, வடக்கு காஸாவில் சில வெடிப்புகளை காண முடிந்தது.

ரஃபாவில் ஹமாசுடன் நேருக்கு நேர் சண்டை என இஸ்ரேல் தகவல்

சனிக்கிழமையன்று ரஃபாவில் புகை எழுந்ததைக் காண முடிந்தது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்களாக ஏ.எஃப்.பி. செய்தி முகமை மேற்கோள் காட்டியவர்கள் எகிப்துடனான எல்லை அருகே வான்வழித் தாக்குதல் நடந்ததாக தெரிவித்தனர்.

முன்னதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த இஸ்ரேல் பாதுகாப்புப் படை, ரஃபாவில் ஹமாஸ் குழுவினருடன் "நேருக்கு நேர் சண்டையில்" ஈடுபட்டதாகக் குறிப்பிட்டிருந்தது.

அந்தப் பகுதியில் பல சுரங்கங்களை கண்டறிந்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை, காஸா பகுதி முழுவதும் டஜன் கணக்கில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் நடந்துள்ளன, இஸ்ரேலிய ராணுவம் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் உள்கட்டமைப்புகளை குறிவைப்பதாகக் கூறியது.

சனிக்கிழமை மாலை இஸ்ரேல் ராணுவம், காஸா பகுதியின் வடக்கே ஜபாலியா பகுதியில் ஹமாஸ் பயங்கரவாத இலக்குகளைத் தாக்கி வருவதாக கூறியிருந்தது.

முன்னதாக, வடக்கு காஸாவின் சில பகுதிகளை விட்டு வெளியேறுமாறு அங்கிருக்கும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அவர்கள் "தற்காலிகமாக மேற்கு காஸா நகரத்தில் உள்ள தங்குமிடங்களுக்குச் செல்லுமாறு இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

 
இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,REUTERS

அமெரிக்காவையும் மீறி தாக்குதலை தொடர இஸ்ரேல் உறுதி

லட்சக்கணக்கான பாலத்தீனர்கள் அடைக்கலமாகியுள்ள காஸா பகுதியின் தெற்கு முனை வரை தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தும் இஸ்ரேலின் திட்டம் சர்வதேச அளவில் கவலையைத் தூண்டியுள்ளது.

கடந்த வாரம், ரஃபா மீதான பெரிய தாக்குதலுக்கு பயன்படுத்தக் கூடிய கனரக ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்காது என்று அதிபர் பைடன் கூறினார்.

அதே போல இஸ்ரேலின் இந்தச் செயலை பிரிட்டனும் எதிர்க்கிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன், "ரஃபாவில் ராணுவ நடவடிக்கையை பிரிட்டன் எதிர்க்கிறது, ஆனால் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவது தொடர்பாக அமெரிக்காவை முடிவை பிரிட்டன் பின்பற்ற வாய்ப்பில்லை" என்றும் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை இந்த முரண்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ரஃபா மீதான இராணுவத் தாக்குதலைத் தொடர்வோம் என்றும் உறுதியாக தெரிவித்தார்.

மேலும், "தேவைப்பட்டால்.. நாங்கள் தனித்து நிற்போம்"என்றும் நெதன்யாகு கூறினார்.

அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதாகவும், 252 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.

இதற்கு பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் குறைந்தது 34,900 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

https://www.bbc.com/tamil/articles/c3gj7ze1kneo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரபா மீது பாரிய நடவடிக்கையை மேற்கொண்டால் மேலும் பல ஆயுதங்களை விநியோகிப்பதை நிறுத்த்வேண்டியிருக்கும் - இஸ்ரேலிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

13 MAY, 2024 | 10:44 AM
image
 

இஸ்ரேல் ரபாவின் மீது இராணுவநடவடிக்கையை முன்னெடுத்தால் அந்த நாட்டிற்கான மேலும் பல ஆயுத விநியோகத்தினை நிறுத்தவேண்டிய நிலையேற்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ரபாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் இராணுவநடவடிக்கை காரணமாக பாரிய உயிரிழப்புகள் ஏற்படலாம் என்ற கரிசனைகளை தொடர்ந்து குண்டுகள் அடங்கிய கப்பலொன்றை இஸ்ரேலிற்கு அனுப்புவதை நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில் அப்பாவி மக்களின் கொடுரமான உயிரிழப்புகளை அன்டனி பிளிங்கென் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேல் மேலும் இடங்களை கைப்பற்றினால் ஒரு வெற்றிடம் உருவாகும் அந்த வெற்றிடம் குழப்பம் அராஜகம் மற்றும் இறுதியில் ஹமாசினால் நிரப்பப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ரபாவிலிருந்து மக்களை பலவந்தமாக வெளியேற்றுவது என்ற இஸ்ரேலின் பிடிவாதத்தினால் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தன்னை பாதுகாப்பதற்கு உதவுவது குறித்து ஜனாதிபதி ஜோபைடன் உறுதியாகவுள்ளார் என என்பிசி சிபிசிக்கு தெரிவித்துள்ள  அன்டனி பிளிங்கென் குண்டுகளை விநியோகிப்பதை மாத்திரம் அமெரிக்கா தற்போது நிறுத்திவைத்துள்ளது  எனினும் இஸ்ரேல் ரபா மீது முழுமையான தாக்குதலை மேற்கொண்டால் இந்த நிலை மாறாலாம் என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/183380

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.