Jump to content

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16ம் திகதிக்குள் - தேர்தல்கள் ஆணைக்குழு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16ம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் - தேர்தல்கள் ஆணைக்குழு

Published By: DIGITAL DESK 3

09 MAY, 2024 | 03:17 PM
image
 

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் இதனைத் தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/183061

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செப்டம்பர் 17 – ஒக்டோபர் 16 இடையே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்

தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் செப்டம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தலை நடத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அரசியலமைப்பு மற்றும் 1981ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஜனாதிபதி தெரிவு விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் வேட்புமனுக்கள் கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்னாயக்கவின் கையொப்பத்துடன் இந்த அறிக்கை வௌியாகியுள்ளது.

https://thinakkural.lk/article/301271

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பை வெளியிட்டது ஏன்?; அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பது என்ன?

Published By: RAJEEBAN   10 MAY, 2024 | 12:59 PM

image
 

பொதுத்தேர்தல் ஒன்றை நடத்துவது குறித்த அரசியல் கலந்துரையாடலை  முறியடிக்கும் ஒரு நடவடிக்கையாகவே தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி தேர்தல் குறித்து நேற்று அறிவிப்பை வெளியிட்டது என அரசியல் வட்டாரங்கள் கருதுவதாக  டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணயநிதியத்தின் அடுத்த கட்ட நிதி உதவி கிடைக்காத பட்சத்தில் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துவது குறித்து ஜனாதிபதி ஆராய்வார் என தகவல்கள் வெளியாகின்றன என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.

எனினும் நேற்யை அறிவிப்பில் தேர்தல்கள் ஆணையகம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான சட்டவிதிகளை அறிவித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ள டெய்லிமிரர் பொதுத்தேர்தல்கள் குறித்த  இரகசிய திட்டங்களை முறியடிக்கவே தேர்தல்கள் இடம்பெற வேண்டிய காலப்பகுதியை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் பொதுத்தேர்தல் இடம்பெற்றால் வளங்கள் அற்ற நிலைக்கு தள்ளப்படலாம் என தேர்தல் ஆணைக்குழு கருதுகின்ற அதேவேளை ஜனாதிபதியின் அறிவிப்பு எதனையும் நிராகரிக்க முடியாது சட்டத்தில் அதற்கு இடமில்லை என கருதுகின்றது எனவும்  டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/183144

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இலங்கை ஜனாதிபதி தேர்தல் செப்17-ஆக் 16 இடையே நடக்கும் என இலங்கை தேர்தல்கள் ஆணையம் அறிவித்துள்ளது.

இது சம்பந்தமாக இலங்கை ஆங்கில, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://www.thehindu.com/news/international/sri-lanka-to-hold-presidential-election-between-september-17-and-october-16-election-commission/article68156936.ece/amp/

டிஸ்கி

தமது பிடியை தளரவிட விரும்பாத இராஜபக்சேக்கள் பாராளுமன்ற தேர்தலை முதலாவதாக நடத்துமாறு ஜனாதிபதிக்கு அளுத்தம் கொடுத்த சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

Edited by goshan_che
தவறான தகவல் நீக்கம்
Link to comment
Share on other sites

  • goshan_che changed the title to இலங்கை ஜனாதிபதி தேர்தல் செப்17-ஆக் 16 இடையே நடக்கும் - தேர்தல் ஆணையம்


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.